தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-3

img1101224019_2_1

மூன்றாவது சர்ச்சைக்கு வருவோம். இது கீழவெண்மணியில் பெரியார் ஆற்றிய எதிர்வினையைப் பற்றிய கேள்வி. கீழவெண்மணியில் பெரியாரின் அறிக்கை உப்புசப்பு இல்லாதது என்று பாண்டே கூறுகிறார். கீழவெண்மணி படுகொலை கண்டித்து பெரியார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று வீரமணி சொல்கிறார். திரு.பாண்டே விடுதலையிலிருந்து பெரியார் விடுத்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறார். அதை மறுத்து திராவிடர் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட மறுப்பு இது :

கீழ்வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டபொழுது சென்னை பொதுமருத்துவமனையில் இருந்த தந்தை பெரியார் வெகுண்டெழுந்து, இந்தக் கொடுமைகளையும், இதுபோன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை. இதற்காக அன்னியர் ஆண்டாலும் பரவாயில்லை. (விடுதலை 28-12-1968) என்று கூறிடும் அளவுக்கு தந்தை பெரியார் கோபம் கொண்டிருந்தாரே,

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை  கொண்டிருந்தார் என்பது விளங்கவில்லையா?

இதுதான் திராவிடர் கழகத்தினுடைய மறுப்பு அறிக்கை. இந்த மறுப்பு அறிக்கை திரிபுவாதத்தை தவிர வேறில்லை; அதையும் பார்ப்போம். பெரியார் கீழவெண்மணி படுகொலை சம்பந்தமாக மூன்று அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த மூன்று அறிக்கைகளிலும் பெரியாரின் அக்கறை எப்படியிருந்தது என்பதை பார்ப்போம்.

முதல் அறிக்கை இது.

“ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது!

சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள். ‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன´ மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்’ என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்:

1.காந்தியார் கொல்லப்பட்டார்.

2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3.போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42-பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42-பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90-பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக’ இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்ல´ என்கிறார்கள்.

மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

‘விடுதலை’, 28.12.1968

இரண்டாவது அறிக்கை இது.

“இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

 இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்!

 “பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

 இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்’ ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1.காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2.சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3.எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய – பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

 “Patriotism is the last refuge of a scoundrel. “

“தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்.” – [ஜான்சன்]

 ‘விடுதலை’, 28.12.1968]

இந்த இரண்டு அறிக்கையும் ஒரே நாளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

44 தலித் மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இதுதான் பெரியார் ஆற்றிய எதிர்வினை. மனசாட்சி உள்ளவர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் – இதுதான் தலித் மக்களின் படுகொலைமீது கொண்டுள்ள அக்கறை அறிக்கையா?

இது எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

இத்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற ஆதிக்கசாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தலித்துகளை மிகக் கொடூரமாக நடத்திவருவது ஆதிக்கசாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட ஆதிக்கசாதி இந்துக்களையும் பெரியார் எதிர்க்கவில்லையே ஏன்?

இனி மூன்றாவது அறிக்கைக்கு செல்வோம். இந்த மூன்றாவது அறிக்கைதான் பெரியாரின் தலித் மக்களின் மீதான போலி அக்கறையை வெளிக்கொண்டுவந்த அறிக்கை. பெரியார்  பேசிய பேச்சு ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது. அதிலும் இப்போது அந்த அறிக்கைகளை ஆதரித்து வீரமணி போன்றவர்கள் பேசுவது இன்னும் அயோக்கியத்தனம்தானே தவிர வேறில்லை.

இதோ அந்த அறிக்கை….

‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

விடுதலை 20-1-1969

கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை  கொண்டிருந்தார் என்பது விளங்கவில்லையா? என்று கேட்கும் திராவிடர் கழகத்திற்கு,

‘இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்’ என்று மூன்றாவது அறிக்கையிலேயே சொல்லிவிட்டாரே! இந்த அரசு ஒழிந்து வெளிநாட்டு அரசு வரவேண்டும் என்று மூன்றாவது அறிக்கையில் காணோமே!. முதலில் கூறியிருக்கிற இரண்டு அறிக்கைகளுக்கும் நேர்மாறாக அல்லவா அவரது மூன்றாவது அறிக்கை உள்ளது? பெரியாரின் அறிக்கைகளை திரிபுவாதம் செய்வது பாண்டே அல்ல வீரமணியும், திராவிடர் கழகமும்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எதற்கெடுத்தாலும் பிராமணர்களை கடுமையாக எதிர்க்கும் பெரியார் கீழவெண்மணி படுகொலை சம்பவத்தில் நாயுடுக்களை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அது ஒன்னுமில்லைங்க தோழர்,

பெரியார் 1920வரையிலும் 29 பொது நிலையங்களில் அங்கத்தினராயும், நிர்வாகஸ்தராயும், தலைவராயும் இருந்திருக்கிறார்.

அதில் ஒன்று நாயுடு சங்கம்.

இப்போது புரிகிறதா ஏன் பெரியார் கோபால கிருஷ்ண நாயுடுவை எதிர்க்கவில்லை என்று!

தொடரும்

பெரியாரின் அறிக்கைக்கான ஆதாரங்கள்

1. https://tamizachi.com/articles_detail.php?id=242

2.https://tamizachi.com/articles_detail.php?id=244

13 Replies to “தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-3”

 1. தமிழகத்தில் உள்ள வெகு ஜன ஊடகங்கள் இதுபோன்ற பச்சோந்தி தனங்களை தோலுரித்து காட்ட தவறுவது ஏனென்று இப்போது புரிகிறது. இவர்கள் திராவிடம் என்ற பெயரில் செய்துவரும் பம்மாத்து தனங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இனியும் இந்த போலி வேடம் எடுபடாது. ஜனநாயகம் வேண்டாம், சுதந்திரம் வேண்டாம், வெள்ளையன் கால்களை மட்டுமே நக்கி வாழ்வேன் என்று சொல்லும் இந்த தேச விரோத சக்திகளை அப்பட்டமாக தோலுரிக்க வேண்டும்.

 2. EVR was very clear on one point – divide the society into Brahmins & non Brahmins. He never spoke of the caste differences within the non Brahmin groups. He paid only lip sympathy to dalits. DK followers always quote the instance of EVR eating in a dalit’s house.

  But has he organized any demonstrations/rallies for dalits? Never.

  As a token, dalits were given the work of serving tea & coffee in his meetings, that too rarely. They were never members of his party. He also did not employ any dalit in his business activities.

  See EVR’s statements (below) on Dalit leaders of the then Madras Presidency who were asking for social equality:

  “Whoever your leaders be, they parade you – as lame, diseased, blind, leprous – for money; and even without buying milk to feed you, nor applying any balm on your wounds, they further emaciate you, and display your condition to others to earn more money.

  In another instance, he asked:

  “If Sahibs [Muslims] get proportionate representation and the Scheduled Castes get representation in jobs and education, and if the rest of the slots are monopolized by Brahmins, O Shudra, what will be your fate and future?

  His 1 point agenda was anti brahminism & anti hinduism – nothing else.

 3. கணேசன் என்

  திராவிடகலகத்தினருக்கு கேள்விகேக்கமட்டும் தான் தெரியும் மேலும் அவருகளுக்கு இந்து விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது . இனி நாம் அவர்களிடம் கேள்வி கேட்போமே , பதில் சொல்வார்களா /

 4. Brahmins constitute only less than 3% of the population. If it is the case, what harmful deeds can they do towards non- brahmins & dalits. The accused in the kilvenmani case is not at all a Brahmin.
  They why such hatred towards Brahmins?

 5. கருணாநிதி இறந்தவுடன் திராவிடம் தமிழ்நாட்டில் வீழும்.
  வைகோ போன்றவர்கள் மிகவும் வேதனையனா வாழ்நாள் தோல்விக்கான மரணத்தை எதிர்கொள்வர்.

 6. போர் என்ற ஒன்று ஏற்படாமல் ஆந்திரா, கர்நாடக, கேரளா என்ற 75% நிலத்thy
  இழந்த மன்னன் அண்ணா துரை ஆவர். மீதம் உள்ள தமிழ்நாட்டில் அடுக்கு மொழி பேசி தமிழர்க்கley எய்தவன் அண்ணா துரை.

 7. கீழவெண்மணியில் ஆண்,பெண், குழந்தைகள் உள்பட 44 பேரை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் எரியும் குடிசையிலிருந்து தப்பி ஒடி வந்த சிறுமியை மீண்டும் எரியும் குடிசைக்குள் தள்ளிக் கொன்ற கும்பலின் தலைவன் கோபால கிருஷ்ண நாயுடு.

  நாயுடுக்கள் தலித்துக்களைத் தீ வைத்துக் கொன்ற செய்தி வெளியானால் தமிழ் நாட்டில் ஈ.வெ.ரா. உள்ளிட்ட நாயுடுக்கள் நிம்மதியாக உயிர் வாழ முடியாது என்பதால், கொன்றது நாயுடு என்ற செய்தி வெளிவந்துவிடக் கூடாது அன்று அப்போதிய திமுக முதலமைச்சர் “ஜாதி ஹிந்து” என்ற சொல்லைச் செய்திகளில் பயன்படுத்த உத்தரவிட்டார். இன்று வரை அந்த சொல்லே தலித் மக்கள் மீதான கொடுமைகளைச் செய்யும் அனைத்து சம்பவங்களிலும் பயன் பட்டு வருகின்றது.

  தொடர்ந்து ஜாதி ஹிந்து என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவது தலித் மீதான எல்லா தீண்டாமைக் கொடுமைகளுக்கும் பார்ப்பனர்களையே பலிகடாவாக ஆக்கி வரத் திராவிடர் கழகத்துக்கும் திமுகவுக்கும் வசதியாக இருந்தது.

  சமீபத்திய தருமபுரி இளவரசன் தொடர்புடைய சம்பவங்களில் மட்டும் வன்னியர்கள் வெளிப்படையாக செயல்பட்டதால் அவர்கள் சாதி செய்த கொடுமைகள் தீவைப்புகள் “ஜாதி ஹிந்துக்களுக்குப் பெருமை” கிடைக்க முடியாமல் செய்துவிட்டது.

  கீழவெண்மணிச் சம்பவம் ஒரு நாயுடு செய்த ஜாதி வன்கொடுமை என்பது வெளி உலகுக்குக்த் தெரிய வராமல் இருக்க அண்ணாத்துரை அமைத்த “இரு அமைச்சர் கொண்ட அமைச்சரவைக் குழுவில்” இருந்தவர்கள் கருணா நிதியும் மாதவனும்.

  இவர்கள் இருவரும் இட்ட பணியையும் இடாத பணியையும் செவ்வனே செய்து, முன்னாள் நாயுடு சங்கத் தலைவரான ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு எந்தத் தர்ம சங்கடமும் வராமல் நாயுடு என்ற சொல்லே இந்த விஷயத்தில் பேசப்படாமல் பார்த்துக் கொண்டு எல்லாம் கம்யூனிஸ்டுகள்தான் காரணம் என்று இது வர்க்கப் போராட்டம் என்று அறிக்கை தந்தனர்.

  கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஈ.வெ.ராவின் அறிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சரவைக் குழு கீழவெண்மணி நிகழ்வை வர்க்கப் போராட்டம் என்று அறிவித்தது.

  கோபால கிருஷ்ண நாயுடு இதன் காரணம் என்ற உண்மை, வலைத்தளப் பயன்பாட்டால்தான் உலகுக்குத் தெரியவந்தது என்பது உணரப்படவேண்டும்.

  தி.க. தி.மு.க. அ.தி.மு.க போன்ற கட்சிகளின் கோயபல்ஸிய போய்ப் பிரசாரங்கள் வலை உலகின் காரணத்தால் இனி எடுபடாது என்பதுதான் ஆறுதல்.

 8. செந்தில் அவர்களே! தங்கள் கருத்துக்களை நாகரிகமாகத் தெரிவிக்கலாம் அல்லவா?

 9. பெரியார் சம்பாதித்த சொத்தை அனுபவித்து வரும் வீரமணி அவர்கள் தலித் சமுதாயதிற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை இதை கேட்க யாரும் முன் வரவில்லை காரணம் மீண்டும் கீழ்வெண்மணி போல் நிகழ்வுஏற்படக்கூடாது என்பதால்

 10. நாகரிகமான கருத்துப் பதிவுகளுக்குத் தமிழ் இந்துவில் இடம் கிடைப்பது அரிது.

 11. நம் ஞான குரு பாரதியார் அழுததைப்போல் ‘விதியே தமிழச்சாதியை என் செய நினைத்தாய் ‘
  20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே கிருஸ்தவ இயக்கங்கள் மூலம் அரசியலில் தலித்களை இந்திய சுதந்திரப்போரிலிருந்து பிரிக்க முயன்றனர்.
  1930 கள் தொடங்கி காந்தியடிகள் அதை முறியடித்தார்.
  பிராமணர் எதிர்ப்பு என்ற பெயரில் தலித்கள் , மற்ற சாதியினர் இடையே தொடர் விரோதத்தை வளர்ப்பதில் ஆதாயமும் அடைந்துள்ளனர்.
  திராவிட இயக்கத்தினர்.
  இந்த இழிதகை இயக்கத்தால் நஷ்டம் அடைந்தோர் ஒன்று சேரும் நாள் என் கண் எதிரே தெரியாததால் வேறு வழியில்லை .விதியே.

 12. //முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். //

  ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று என் தூரத்து உறவினர் ஒருவர் கூறினார். எங்கள் தாத்தா ராணிபேட்டையில் சரஸ்வதி லஞ்ச் ஹோம் என்று ஒரு ஹோட்டல் 1969 வரை நடத்தினார். பெரியார் எப்போது ராணிபேட்டையில் கூட்டம் போட்டாலும் – கண்டபடி வழக்கம் போல பிராமண தூஷணை செய்து விட்டு ‘ அய்யர் ஹோட்டலில் டிபன் வாங்கி வாங்க’ என்றுதான் சொல்வது வழக்கமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *