தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!

(21-4-2015) இமயம் தொலைக்காட்சியில் திராவிடர் கழகத்தை தடை செய்வது பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் நான், வே.மதிமாறன், பாஜகவைச் சார்ந்த வழக்கறிஞர் ராமநாதன், திராவிடர் கழகத்தைச் சார்ந்த மஞ்சை வசந்தன் ஆகியோர் கலந்துகொண்டோம்.

வழக்கறிஞர் ராமநாதன் பேசியவுடன் பேசிய வே.மதிமாறன் ராமநாதன் குறுக்கிட்டதற்காக அவரை சற்றும் அறிவில்லாதவர்,ரோட்டில் பேசிய பேச்சை எடுத்துக்கொண்டு வந்து இங்கு பேசுபவர் என்றெல்லாம் வசைமாறி பொழிந்தார். ஏதோ பெரியாரால்தான் பிராமணப் பெண்கள் சமூக விடுதலை அடைந்தார்கள் என்றெல்லாம் உளறினார். அவருடைய இப்பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக நான் பேசியது இதுதான்.

நான் பெரியார் ஜோதிடர்கள் பற்றி பேசியதை எடுத்துக்காட்டினேன். வே.மதிமாறன் பெரியார் அப்படி சொன்னதே இல்லை என்று சொன்னார். இதோ ஆதாரம் :

IMG_20150407_135125

அடுத்து ஆதாரத்தோடு பெரியார் பேசியதை நான் குறிப்பிட்டதற்கு மறுபடியும் ஆதாரம் கேட்ட நெறியாளர், வே.மதிமாறன் ஆகியோர் தசரதன் மனைவிகள் பற்றி கூறியபோது நான் ஆதாரம் கேட்டேன். அவர்கள் இருவரும் ஆதாரமே கொடுக்கவில்லை. நெறியாளர் ஒரு லட்சம் மனைவிகளை கொண்டிருந்தார் தசரதன் என்றார். வே.மதிமாறன் இல்லை அறுபதாயிரம் மனைவிகள் என்று சொன்னார். இந்த இரண்டுமே வால்மீகி இராமாயணத்தில் இருப்பதாக இவர்கள் சொன்னதுதான் இவர்களுடைய அறிதலின் எல்லையை காட்டுகிறது. இமயம் தொலைக்காட்சி நெறியாளர் எந்த இஸத்தை கொண்டிருக்கிறார் என்பது இதனால் வெட்டவெளிச்சமாகியது.

அடுத்து மஞ்சை வசந்தன் ஆதாரமே இல்லாமல் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரி இப்படி சொன்னார் என்று ஒருதகவல் சொன்னார். உடனே நான் நீங்கள் எப்படி திரிபுவாதம் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று சொல்லி அவர் எழுதிய புத்தகம், அவர் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். என்னை முழுவதும் பேசவிடவில்லை என்றாலும் மஞ்சை வசந்தன் கோபமானார். நான் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லவில்லை.

இதனால்தான் என்னவோ வே.மதிமாறன் தன்னுடைய மூஞ்சிப் புத்தகத்தில் என்னை பேசுவதற்கே லாயக்கற்றவன் என்று கூறினார் என்று நான் நினைக்கிறேன். அவருடைய அடிப்பொடிகள் என்னை படுமுட்டாள், வேசிமகனாகத்தான் இருக்கும் என்றெல்லாம் அர்ச்சனை செய்தார்கள்.

இதனால்வரை நாம் பதில்தான் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது தான் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறோம். இதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாம் தான் மற்றவர்களை அதிகாரத் தோரணையில் மிரட்டிக் கொண்டிருந்தோம். இப்போது புதிதாக ஒருவன் நம்மைவிட அராஜகவாதியாக பேசுகிறானே, அராஜகத்தில் நம்மை  மிஞ்சிவிட்டானே என்ற கோபம்தான் என்னை இவ்வளவு ஆதிக்கசாதி மனநிலையில் எப்படி பேசுவார்களோ அதை பேசியிருக்கிறார். நான் ஓர் அராஜகவாதிதான். நீங்கள் அராஜகவாதியாக இருக்கும்வரை. நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று என் எதிரியே தீர்மானிக்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல நான் ஆத்திரமாக பேசவேண்டுமா, நிதானத்தோடு பேசவேண்டுமா என்று என் எதிரிகள் தான் முடிவு செய்கிறார்கள். வே.மதிமாறன் ராமநாதனை அறிவில்லாதவர் என்று சொல்லியிருக்காவிட்டால் நானும் வே.மதிமாறனை முட்டாள் என்றெல்லாம் பேசியிருக்க மாட்டேன். ஆனால் நான் அப்படி பேசியதை பல நண்பர்கள் என்னிடம் இப்படி பேசியிருக்க வேண்டாமே என்று அக்கறையோடு சொன்னார்கள். இந்த பெருந்தன்மைதான் திராவிட இயக்க எழுத்தாளர்களை வெல்ல முடியாது என்ற மாயையை உருவாக்கிவிட்டது. பெருந்தன்மை இருக்க வேண்டும்தான். யாரிடம் என்பதுதான் கேள்வி.

32 Replies to “தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!”

 1. “இந்த பெருந்தன்மைதான் திராவிட இயக்க எழுத்தாளர்களை வெல்ல முடியாது என்ற மாயையை உருவாக்கிவிட்டது. பெருந்தன்மை இருக்க வேண்டும்தான். யாரிடம் என்பதுதான் கேள்வி”. – உண்மை தான்.

  பெருந்தன்மையே நம் தர்மத்தை அற்ப உயிரினங்களிலும் கீழான ஜந்துக்கள் பேசும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

  நாத்திக வாதம் பேசுகின்றவர்கள் அனைவருமே இப்படிப்பட்ட கேடிகளாகத்தான் இருக்கின்றார்கள்.

  கடந்த வியாழனன்று வெளிவந்த “ஆனந்த விகடன்” – வார இதழில் ஒரு ஜந்து ஏதேதோ பிதற்றியிருக்கிறது. தேவையில்லாமல், தான் ஒரு மேதாவி என்ற எண்ணத்தில் உளறியிருக்கிறது. அதன் வலைத்தளத்தின் எனது விமரிசனத்திற்கு 20% லைக்குகளும் 80% டிஸ்லைக்குகளும் விழுந்திருக்கின்றன. இதிலிருந்தே தெரிகின்றது, தமிழன் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து சினிமா மாயையிலும் அலங்கார பேச்சிற்கும் மயங்கி தரம் தாழ்ந்து போகின்றான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.

  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 2. அருமை. வாழ்த்துகள். வால்மீகி எங்கேயுமே தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்று சொல்லவில்லை. அவன் அந்தப்புரத்தில் அத்தனை பெண்கள் இருந்து வாழ்ந்து வந்தனர் என்பதே அவர் சொல்லி இருப்பது.

  //தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்ற ஒரு வழக்கு உண்டு. ஆனால் வால்மீகியின் ராமாயணத்தில் தசரதனுக்கு இந்த மூன்று மனைவியர் தவிர வேறு மனைவியர் இருப்பதாய் எங்குமே குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. தசரதனின் அந்தப் புரத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் இருந்து வந்தார்கள் என்று சொல்லப் பட்டாலும், அவர்கள் எல்லாருமே மனைவியர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. அந்தப் புரத்தின் வேலைகளைக் கவனிக்கும் பெண்கள், அந்தரங்கத் தாதிமார், மற்றும் தசரதனின் உறவின் முறைப் பெண்கள் என்ற அளவில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கின்றது. மற்றபடி கம்பராமாயணத்தில் இருக்கிறதானும் பார்த்தேன், எனக்குத் தெரிந்த வரையில் அதிலும் அவ்வாறு குறிப்பிடப் படவில்லை.//

  இது என்னுடைய கதை கதையாம் காரணமாம்–ராமாயணம் தொடரில் நான் குறிப்பிட்டவை. வால்மீகி, கம்பன் இரண்டிலும் இதற்கான ஆதாரங்கள் இல்லவே இல்லை.

 3. இப்படி பதிலடி கொடுக்க ஒரு இரண்டு தலைமுறை தவறியதால்தான் இந்த அரைகுறை முட்டாள்கள் வெறுப்பிலே பிறந்து வெறுப்பிலே வளர்ந்து இன்று
  இப்படி கூவித் திரிகிறார்கள். அடுத்தவரை வருத்தும் எந்த செயலும் தவறு என்பதை கூட அறியாத மூடர்கள்.

 4. Thanks to Idlyvadai….
  ‘இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.

  அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…

  ஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்…

  காலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.

  இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

  அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

  அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

  பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…

  அரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.

  ‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…

  கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் ?

  அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

  ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

  பண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் ?

  எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….

  என்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.

  (நன்றி: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 625 001)

 5. இங்கு இதை நான் பேஸ்ட் பண்ண காரணம் , ம வெங்கடேசன் போன்றவர்கள், ஜெயகாந்தனை போல இருக்க வேண்டும் , அடுத்தவன் பயம் அவர்களின் மூலதனம்

 6. உங்கள் தொண்டுக்கு நமஸ்காரங்கள் திரு. ம. வெங்கடேசன்.

  பதிவில் இருக்கும் புஸ்தகத்தின் போட்டோ என் சரியாக வரவில்லை என்று தெரியவில்லை.

 7. இந்த பெருந்தன்மைதான் திராவிட இயக்க எழுத்தாளர்களை வெல்ல முடியாது என்ற மாயையை உருவாக்கிவிட்டது. பெருந்தன்மை இருக்க வேண்டும்தான். யாரிடம் என்பதுதான் கேள்வி.
  இது தான் உண்மை. எந்த வித மக்கள் ஆதரவு இல்லாத 15 or 20 நபர்கள் கொண்ட ஒரு கும்பல் இந்த அளவு அராஜகம் செய்ய முடிகிறது எனில், அதற்கு காரணம் நமது இந்த பெரும்தன்மை தான். மூர்க்கனை மூர்க்கமாக அணுகினால் தான் அவனுக்கு உண்மை நிலவரம் தெரியும்.

 8. “பெருந்தன்மை இருக்க வேண்டும்தான். யாரிடம் என்துதான் கேள்வி.” – ஆகா அருமை.

 9. ஜெயகாந்தனின் பேச்சை பதிவு செய்த திரு பாண்டியன் அவர்களுக்கும், அவரது பதிவு மறுமொழியாக நமது தளத்தில் வருவதற்கு மூலகாரணம் ஆன திரு மவே அவர்களுக்கும் நமது நன்றிகளும் , வாழ்த்துக்களும் .என்றும் உண்டு . வையகம் வளமுடன் வாழ்க.

 10. கோடி நன்றிகள் ம வேங்கடேசன் உங்கள் பனி சிறக்க முருக பெருமானிடம் வேண்டுகிறேன்

 11. பெண்கள் விடுதலை என்று முழங்கிய பெரியார் ஏன் பெண்களை கொத்தடமைகளாக நடத்தி வரும் இஸ்லாமை அவ்வளவு புகழந்தார். காரணம் வாக்கு வங்கி

 12. நபி பிறந்த மற்றும் மக்கா என்ற புனித (?!?!) நகரம் உள்ள சௌதி அரேபியாவில் (1) பெண்களுக்கு கார் ஓட்ட உரிமை கிடையாது.(2) முனிசிபல் தேர்தலில் ஆண்கள் மட்டுமே ஒட்டு போடா முடியும். பெண்களுக்கு பெப்பே.(3) சௌதி diplomats அனைவரும் ஆண்களே.(4) உடன் ஒரு male relative இல்லாமல் ஒரு பெண் வெளியே போக கூடாது. (5) கொதிக்கும் வெயில் நகரமான சௌதியில் தங்கள் உடம்பு முழுவதையும் புர்கா போட்டு மூடித்தான் செல்லவேண்டும். ரொம்ப கொடுமை. இதெல்லாம் ஈ வே ராவிற்கு தெரியாதா? தெரிந்தும் எதற்கு புகழ்ந்தார் என்றால் சம்ஸ்கிருத ஆர்வலர் சொல்வது போல வாக்கு வங்கி அல்ல. ஏனென்றால் அவரது கட்சி (=திக) தேர்தலில் நிற்கும் கட்சி அல்ல. ஆனால் அவர் அவர்களை பற்றி பேசினால் அடுத்த நாள் அவர் உயிரோடு இருக்க மாட்டார். அதுதான் காரணம்

 13. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 14. அன்பின் ஸ்ரீ ம.வெங்கடேசன்

  ஆதிக்க ஜாதி வெறியில் அமிழ்ந்து போயுள்ள த்ராவிட இயக்கத்தவரின் பொய்ப்பரப்புரைகளை தரவுகள் சார்ந்து தாங்கள் பொதுதளத்தில் தோலுரித்தாலும்………….. பொய்யுரை பரப்புபவர்கள் சொல்லி வந்த பொய்யை திரும்பத் திரும்ப திறமையாகச் சொல்லியே வருவார்கள்.

  பொய்யை அவர்கள் எப்படி அலுக்காமல் சொல்லி வருகிறார்களோ அப்படியே உண்மையையும் அலுக்காமல் திரும்பத் திருமபச் சொல்லியே ஆக வேண்டும்.

  முதலில் மேடைகள் ஊடகங்கள் முதலானவை இந்த த்ராவிட இயக்கத்தவரால் ஏகபோக குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது ஒப்புக்காக மாற்றுக் கருத்தாளர்களை (யும்) ஊடகங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது போல் காண்பிக்கின்றன. இணையதளம் என்ற ஒரு ஆயுதம் இந்த பொய்யில் ஊறிய த்ராவிட இயக்கத்திற்கு ஒரு அருமருந்து.

  தங்களது அயராத முயற்சிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். ஆதிக்க ஜாதிவெறிக்காழ்ப்பில் ஊறிய த்ராவிட இயக்கத்தவரின் ஜாதி வெறி தூஷணைகளில் மனம் தளராதீர்கள். ஜாதிக்காழ்ப்பாளர்களின் ஜாதி தூஷணைகள் அந்த மனங்களில் உரைந்துள்ள மிருகங்களையே அடையாளம் காட்டுகின்றன.

  தங்களது உண்மை விளம்பும் பயணம் தொடரட்டும்.

 15. //பெண்கள் விடுதலை என்று முழங்கிய பெரியார் ஏன் பெண்களை கொத்தடமைகளாக நடத்தி வரும் இஸ்லாமை அவ்வளவு புகழந்தார். காரணம் வாக்கு வங்கி//

  PAYAM. read old Subbu articles from this site

 16. எதிர்காலத்தில் தனக்கு இவ்வித பெருமையெல்லாம் கிடைக்கும் என்று கொஞ்சமும் எதிர் பார்த்திருக்க மாட்டார் ,இவேரா .ஓர் எளிய அரசியல்வாதியான ,அந்த மளிகை மண்டி காரர் ,தன்னிடம் எடுபிடிகளாய் இருந்த கூலிகள் ,அரசியல் அவதாரங்களாய் மாறிய வேளையில் தங்கள் பிறவி மகாத்மியங்களை பேச வேண்டிய பொழுதில் வேறு வழி இன்றி அவரை மூல தலைவனாக்கி விட்டனர் ,நிறைய சொத்தும் எந்த வேலையும் இல்லாத அவர் ஓர் மைனராக,மல்லு வேட்டி ,மஸ்லின் சட்டை ,மாட்டுவண்டி ,மங்காத்தா (விளையாட்டுதான் )என்றெல்லாம் ,அனுபவிக்க விடாமல் ,இறைவன் ஒ சாரி ,இயற்கை சுழித்து விட்டது போல ,நாலு பேர் உற்று பார்க்க அவர் என்னென்ன காரியங்களை செய்துள்ளார் ,என்று பார்கையில் பரிதாபமாக உள்ளது .கடைசியாக ஐயர்களை விமர்சிக்கிறேன் என்று அவர்களின்’ அக மன அடிமையாகிப்போனார் !’அவரின் புகழ் கோடம்பாக்கத்து குருவி மூளைகளால் ,முக்கியமாக அந்த ‘லொள்ளு நடிகர்’ ,கண்ட இடங்களிலும் உளறப்பட்டது .

 17. திராவிட திருடர்கள்யை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு சரியான சான்று.

 18. “திராவிட மாயையினால்” மறைக்க பட்டிருக்கும் பலரின் அறிவுக்கண்ணை திறந்து வருவதற்கு மிக்க நன்றி திரு.ம.வெங்கடேசன் அவர்களே தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.

 19. நன்றி சொல்லி மாளாது… இப்படி திருப்பி தர ஒருத்தன் இல்லையே என்று எத்தனை நாள் எம் மூத்தவரும், முதியோரும், கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார்கள்..? நன்றி சொல்லி மாளாது நண்பரே…

 20. முதலில் இந்த இமயம் போன்ற தொலைக்காட்சியில் சென்று பேசுவதை நம்மவர்கள் நிறுத்த வேண்டும் .இந்த மாதிரி சில ஊடகங்கள் வெளிநாட்டு வரவால் இயங்கிக்கொண்டு அவர்களது மத வியாபாரத்தை செய்து வருபவை.இதை முதலில் இங்கு பேசப் போகும் நம்மவர்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.

 21. இந்த நிகழ்ச்சியை நடத்துபவன் ஒரு கோட்டுப்போட்ட வாத்து . இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் தயவு செய்து கலந்து கொள்ளாதீர்கள்.

 22. திராவிடக்கழகத்தின் இந்து சமயத்தை பற்றி மட்டும் விமர்சனங்கள் செய்வது ஏன் என்று சிந்தித்து பாருங்கள். வேறெந்த சமயத்திலாவுது இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதா? அச்சமயத்தை சேர்ந்த அனைவரையும் அதனுடைய வழிபாடு தளங்கள்குள் அனுமதிக்காத கொடுமை இந்து மதத்தில் மட்டுமேதான் உள்ளது. பின்னர் ஏன் மக்கள் மதம் மாறுகிறார்கள். கன்னியாகுமரியில் 800 தலித்துகள் இஸ்லாத்தை ஏன் ஏற்றார்கள்

 23. //////திராவிடக்கழகத்தின் இந்து சமயத்தை பற்றி மட்டும் விமர்சனங்கள் செய்வது ஏன் என்று சிந்தித்து பாருங்கள்./////
  மற்ற மதங்களை பற்றி விமர்சனம் செய்தால் அடுத்த நாள் விமர்சனம் செய்தவன் உயிரோடு இருக்க மாட்டான். நான் சொல்வது பொய் என்று நினைத்தால் திரு ராஜராஜன் மேடை போட்டு இஸ்லாம் பற்றி குரான் பற்றி விமர்சனம் செய்துதான் பார்க்கட்டுமே. இந்துக்கள் இளிச்சவாயர்கள் என்பதால் இஷ்டத்திற்கும் மேடையேறி பேசுகிறார்கள்.

 24. //வேறெந்த சமயத்திலாவுது இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதா?//

  நீங்களே உங்களை இந்த கேள்விக் கேட்டுப்பாருங்களேன். இல்லை என்று உங்களுக்கு பதில் வந்தால் நீங்கள் இன்னும் கிணற்றுக்குள் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

  // அச்சமயத்தை சேர்ந்த அனைவரையும் அதனுடைய வழிபாடு தளங்கள்குள் அனுமதிக்காத கொடுமை இந்து மதத்தில் மட்டுமேதான் உள்ளது.//

  அஹமதியாக்கள் என்று ஒரு பிரிவினர் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் இஸ்லாத்தை சேர்ந்தவர்களே இல்லை என்று இங்கு வஹாபீய ‘வல்லுனர்கள்’ கூறுகிறார்கள். இவர்கள் மசூதில் அவர்கள் நுழைய முடியாது. தர்காக்களை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கு உண்டு. சென்னை உஸ்மான் ரோட்டில் உள்ள மசூதிக்குப் போனால் சில முஸ்லிம் பெண்மணிகள் நமாஸ் நேரத்தில் வெளியில் நின்று கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அங்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. பிரபு பாணியில் சொல்லவேண்டுமென்றால் ‘ என்ன கொடுமை சார் இது ‘.

  //கன்னியாகுமரியில் 800 தலித்துகள் இஸ்லாத்தை ஏன் ஏற்றார்கள்//

  மேலே சொன்னதை எல்லாம் விவரமாக மதம் மாறுவதற்கு முன் விளக்கி இருப்பார்களா ?

 25. திரு ராஜராஜன் ஸார்! . கடந்த புதன்கிழமை (அதாவது 13ந் தேதி) கராச்சியில் (PAK ) பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 16 பெண்கள் உட்பட அப்பாவிகளான 45 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனரே! அது பற்றி ஏதாகிலும் உமக்கு தெரியுமா? அவர்களை கொன்றது இந்துக்கள் அல்ல. நபியை நம்பும் அதே இனத்தவர்கள்தான் என்ன காரணம்? அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் (=money dealings ) தகறாரா? இல்லையே? வேறு என்ன காரணம்? அவர்கள் முஸ்லிம்களே இல்லையாம்பா! இன்னும் தெளிவாக சொல்லபோனால் அவர்கள் kafir களாம்பா! இந்த தாக்குதல் புதுசு இல்ல. கடந்த ஜனவரி மாதத்தில் சிந்து மாவட்டத்தில் (அதுவும் பாகிஸ்தான் தான்) Shikarpur என்ற ஊரில் இருந்த ஷியாக்களின் மசூதியை உடைத்து தகர்த்து எறிந்தனறாம்பா! என்ன கொடுமை சார் இது! இவையெல்லாம் உமக்கு தெரிந்தும் தெரியாததுபோல (அதாவது திரு ரங்கன் சொல்வது போல கிணற்று தவளையாக) பேசுகிறீரா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே மறைத்து பேசுகிறீரா? நான் உங்களுக்கு என்ன சொல்லவருகின்றேன் என்றால் இந்து மதம்தான் மோசம் மற்ற மதமெல்லாம் உத்தம மதம் என்று மட்டும் இனிமேல் சொல்ல வேண்டாம் அதாவது comparison வேண்டாம் ஆனால் இந்து மதத்தில் தவறுகள் உள்ளன. அதை களைய மட்டும் உங்களால் ஆனதை மட்டும் செய்யுங்கள் அல்லது நல்ல கருத்துக்களை மட்டும் இங்கே எழுதுங்கள் .மீண்டும் சொல்கிறேன். Comparison வேண்டாம். முஸ்லிம் மதத்தை தோற்றுவித்த நபி தெரியவேண்டுமென் Hadith மற்றும் குர் ஆன் என்ற புனித (இல்லை இல்லை புருடா) நூலை படியும். அப்புறம் அந்த மதத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்வீர்கள். சரியா ஸார்? அது சர். நான் சொல்லியது போல பொது கூட்டம் ஒன்றை கூட்டி இஸ்லாம் பற்றியும் குரான் பற்றியும் விமர்சனம் செய்ய தயாரா? குரான் பற்றி எதுவும் ”’இப்போது” தெரியாது என்றால் சொல்லவும். நான் விலாவாரியாக இங்கே எழுத தயார். அதை படித்து விட்டு நீங்கள் மேடையில் பேசுங்கள். நான் ரெடி நீங்க ரெடியா?

 26. திரு ராஜராஜன் அவர்களே! சென்ற வருடம் டிசம்பரில் பெஷாவரில் (பாகிஸ்தான்) 153 பள்ளி குழந்தைகளை கொன்றார்கள். இந்த வருடம் ஜனவரியில் 62 ஷியா முஸ்லிம்களை மசூதியில் குண்டு வைத்து கொன்றார்கள். மே 13 அன்று 45 ஷியா முஸ்லிம்களை சுட்டு கொன்றார்கள். நேற்று BOKO Haram காரர்கள் நைஜீரியாவில் பலபேரை கொன்று இருகிறார்கள் . (அவர்கள் 327 பள்ளி மாணவிகளை (கிறிஸ்தவ) கடத்தி சென்று மத மாற்றம் செய்து தீவிரவாதிகளுக்கு “இரை” ஆக்கி இருக்கிறார்கள்.என்பது பழைய செய்தி) மேலும் 21 கிறிஸ்தவர்களை ISIS தீவிரவாதிகள் கடற்கரையில் கழுத்தை அறுத்து கொன்றார்கள் என்பதும் பழைய செய்தி (அவர்களை அப்படி அறுக்கும் வீடியோ வை பார்க்க வேண்டுமா? இதே இணையதளத்தில் திரு தாயுமானவன் அனுப்பியுள்ளார் பாருங்கள்) ஆகவே அவர்களையும் அவர்களின் மதத்தையும் ””’நல்ல””’ மதம் என்று எப்படி எதை வைத்து கூறுகிறீர்கள்.? இவையெல்லாம் இந்தியாவிலா நடந்தது? வெளிநாட்டில்தானே நடந்தது என்று நீங்கள் சால்சாப்பு கூறலாம். இங்கே இந்துக்கள் ஜனத்தொகை குறைந்து அவர்களின் ஜனத்தொகை அதிகரிக்கும்போது இங்கே செகிலரிசம் இருக்காது அவர்களின் காட்டு தர்பார்தான் இருக்கும். அப்போது அங்கே நடப்பவை இங்கேயும் நடக்கும். அப்போது நடக்கபோகும் அந்த சம்பவ பலிகடாவில் நீரும் நானும் கூட இருக்கலாம். யார் கண்டது? சரி, நான் மேலே நீண்ட பட்டியலிட்டது போல இந்துக்கள் இந்தியாவில் நடத்திய கொலைகளை பட்டியலிட உங்களால் முடியுமா?

 27. இங்கே கருத்து சொன்னவர்கள் பலர் காலத்தின் கொடுமைனால் நடந்த தவறுகளை ஒரு சமுதாயமே ஒன்று கூடி சதி செய்தது போல் புலம்புவது அவர்கள் சுய சிந்தனை அற்ற கிளிப்பிள்ளைகள். ஆங்கிலேயர் காலத்தின் முன் இந்த ஜாதியம் இவ்வளவு இருந்ததாக எந்த சான்றும் இல்லை. ஒரு அரசன் தெருவில் பார்த்த அய்யர், அருந்ததியர் யாரை விரும்பினாலும் அவனுக்கு அவள் சொந்தம். ஆனால் கல்வி, கோவில் வேலை, மந்திரி போன்ற தொழில்கள் மாட்டுமே தெரிந்த அய்யர்களை மெதுவாக தங்களுக்கு அடிமை ஆக்கின போதுதான் இந்த ஜாதி சண்டைகள் வந்தன. மேலும் ஏழ்மை, கல்வி சொல்லிக்கொடுப்பதே தொழில் என்று இருந்த அய்யர்களை ஆதரிக்க ராஜாக்கள், ஜமிந்தார்கள் இல்லாமல் போனதால் அவர்களும் ஆங்கிலேயனின் சதியில் மயங்க்கிவிட்டர்கள். தமிழ், வடமொழி இரண்டிலும் திறமை இருந்ததால் அய்யர்கள் சிறந்த தமிழ் ஆசிரியர்களாக இருந்தார்கள். ஆனால் தர்மம் பேசும் அய்யர்கள் இருந்தால் கோவில்களை கொள்ளை அடிக்க முடியாது என்று புரிந்தோ கொண்ட மஞ்சள் துண்டு அவர்களை எந்த பதவியிலும் இருக்க கூடாது என்று விரட்டி விட்டார். அதன் பயனால் இன்று அய்யர், முதலியார், பிள்ளைமார் போன்றவர்கள் தமிழ் பேசுவதில்லை, எழுதுவதில்லை. பொதுவாக பலம் பெயந்து விட்டார்கள். எனவே மற்றவர்களும் தமிழ் பேசுவதில்லை. சங்கம் முதல், ஆழ்வார்கள் வரை, உவேசா முதலாநோரே பொதுவாக தமிழ் வளர்த்தார்கள். ஆனால் இப்போதுள்ள திருடர்கள் கூட்டம் தமிழை அழித்துவிட்டார்கள். பழைய கதை பேசும் இந்த திருட்டு கூட்டம் முகலாயர்கள் செய்த அட்டகாசம் பற்றி பேசமாட்டார்கள். பாகிஸ்தான் துப்பாக்கி அவர்களை கொன்று விடும். முதுகு எலும்பில்லாத முட்டல் கூட்டம். ஊளை இடமுடியுமே தவிர தமிழையோ, தமிழ் நாட்டையோ இவர்களால் முன்னேற்ற முடியாது. அறிவாளிகள் சென்று விட்டார்கள். தமிழ் என்று மார் தட்டும் பிணங்களே இன்று தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். அந்தோ பரிதாபம். வேலை இல்லை, நீரில்லை, கல்வி இல்லை , இந்த அறிவு ஜீவிகள் எங்கே செல்வார்கள்?

 28. ”இங்கே இந்துக்கள் ஜனத் தொகை குறைந்து அவர்கள் ஜனதொகை அதிகரிக்கும்போது இங்கே செக்குலிரிசம் இருக்காது வர்களின் காட்டுதர்பார்தான் நடக்கும் அப்போது அங்கே நடப்பது இங்கேயும் நடக்கும்.” Honest Man சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *