ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்

சென்னை ஐஐடி(IIT)யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (Ambedkar Periyar Study Circle (APSC)) ஐஐடி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டது. தற்போது அதுவே இந்தியா முழுவதும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. ஐஐடி முன்பு (30-5-2015) போராட்டம், ஆர்ப்பாட்டம், கைது என்று ஒரே களேபரமாக நடந்து கொண்டிருந்தது. எல்லாத் தொலைக்காட்சிகளிலும்  இதுவே விவாதப் பொருளாகி இருக்கிறது. 20 அல்லது 30பேர் சேர்ந்து நடத்துகிற ஒரு சிறிய அமைப்புக்கு எப்படி இந்த அளவுக்கு பல கட்சிகள் ஆதரவும், பல ஊடகங்கள் ஆதரவும் பெறப்பட்டன? இந்த எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடர்ந்து இந்த அமைப்புக்கு ஆதரவாகக் கையாண்ட விதம்தான் என்னை யோசிக்க வைத்தது. ஒரு அமைப்புக்கு கண்மூடித்தனமாக புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆதரவுத் தெரிவிக்கிறது என்று சொன்னால் அந்த அமைப்பு கண்டிப்பாக இந்துமதத்திற்கு எதிராக வேலை செய்கிறது என்று அர்த்தம் என்று பலபேரிடம் பேசியபோது எனக்குத் தெளிவாகியது.

சில மாணவர்களால் ஒன்று சேர்ந்து 14-4-2014 அன்று இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஈவெராவுக்கு பெருமை சேர்க்கிற பெரியார் என்ற பெயரை தேர்ந்தெடுத்த இந்த அமைப்பு அண்ணல் அம்பேத்கரை மட்டும் வெறும் அம்பேத்கராகவே குறிப்பிட்டிருப்பதன் உள்அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கரை குறிப்பிடும் எவருமே – அவரை உள்வாங்கிக் கொண்ட எவருமே – அவரை மதிக்கிற எவருமே – அவரை கொண்டாடுகிற எவருமே – அவரை ஏற்றுக் கொண்ட எவருமே அவரை வெறும் அம்பேத்கர் என்ற பெயரோடு என்றுமே அழைத்ததில்லை. ஒரு அடைமொழியோடுதான் அழைப்பார்கள்; பெயர் வைப்பார்கள். அண்ணல் அம்பேத்கர் என்றோ, புரட்சியாளர் அம்பேத்கர் என்றோ, டாக்டர் அம்பேத்கர் என்றோ, பாபாசாகேப் அம்பேத்கர் என்றோதான் பெயரை வைப்பார்கள். ஆனால் இவர்கள் வெறும் அம்பேத்கர் என்று பெயர் வைத்ததன் மூலம் நாங்கள் அரசியல் செய்யவே அவரை பயன்படுத்தியிருக்கிறோமே தவிர கொண்டாடுவதற்காக அல்ல, அவரின் கொள்கைகளைப் பின்பற்றுவதற்காக அல்ல என்பதை புரிய வைத்திருக்கிறார்கள். ஒரு தற்காப்புக்காகவே அண்ணல் அம்பேத்கரின் பெயரை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த அமைப்பு ஒரு வருடகாலமாக சில நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே பாஜக தலைமையிலான மோடி அரசை விமர்சனம் செய்வதாக அமைந்திருப்பது தற்செயலாக நடந்தவை அல்ல. எல்லாம் திட்டமிட்டு நடந்தவையாகவே இருக்கின்றன.

பாஜக அரசு சமஸ்கிருத மொழியை ஒருவாரம் மத்திய அரசாங்கப் பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று சொல்லியபோது அதை விமர்சனம் செய்யும் விதமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

10614365_337605576419751_6240894058434624256_n

10689812_338444083002567_3662616789728130919_n

இந்த அமைப்பு வெளியிட்டிருக்கிற நோட்டீசைப் படித்துப் பார்த்தாலே இவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளை எந்தக் காரணத்திற்காக இவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை அவர்களே தெளிவாக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி அரசின் கொள்கைகளை விமர்சிப்பது தவறாகாது. உண்மையில் அது உரிமையும்கூட. ஆனால் அண்ணல் அம்பேத்கரின் படம் போட்டு, அவரின் பெயரில் அமைப்பு வைத்துக்கொண்டு இருக்கின்ற இவர்கள் சமஸ்கிருதம், இந்தி மொழிகளைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மறைத்துவிட்டார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதம் தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்திலேயே குரல் கொடுத்தார். சமஸ்கிருத த்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களே என்று பிடிஐ நிருபர் கேட்கும்போது அண்ணல் அம்பேத்கர், அதில் என்ன தவறு என்று திருப்பிக் கேட்டார். இதுபற்றிய செய்தி அன்று பலப் பத்திரிகைகளிலும் வந்துள்ளது.

संस्कृत-संभाषण (जून-2003 ) 1

அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருத த்தை ஆதரித்தது மட்டுமல்ல, அவர் சொல்கிறார் : ‘சமஸ்கிருதம் காவியங்களின் புதையல்; அரசியலுக்கு, த த்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில்; நாடகங்களுக்கு, தர்க்க இயலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று சமஸ்கிருதத்தை புகழ்கிறார். (நூல் : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பக். 25, ஆங்கில மூலம் : தனஞ்செய்கீர், தமிழாக்கம் : க.முகிலன், வெளியீடு : மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)

10599608_274706169398983_1585683943610595759_n

இதுமட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தி மொழியைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார்? அதையும் பார்த்துவிடுவோம்.

அண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார் :

..பிராந்திய மொழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்க கூடாது. இதற்கு அரசியல் சட்டத்திலேயே வகை செய்ய வேண்டும். இதுவே இந்த அபாயத்தைச் சமாளிப்பதற்கான ஒரே மார்க்கம் என்பது என் கருத்து. இந்தியே மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக இந்தியா தயாராகும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம். இந்தியர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மொழிவாரி மாநிலங்கள் ஓர் அபாயமாக மாறுவது எளிதாகிவிடும்.

ஒரே மொழி இருந்தால் அது மக்களை ஒன்றுபடுத்தும். இரண்டு மொழிகள் மக்களை நிச்சயம் பிளவுபடுத்தவே செய்யும். இது அசைக்க முடியாத விதி. நாட்டின் கலாச்சாரம் மொழியால்தான் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவும் ஒரு பொதுக் கலாச்சாரத்தை வளர்த்து வளப்படுத்தவும் விரும்புவதால் இந்தியை தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களாலும் மறுக்க முடியாத கடமையாகும்.

மொழிவாரி மாநில அமைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இந்த யோசனையை ஏற்காத எந்த இந்தியனும் ஓர் இந்தியனாக இருக்க அருகதையற்றவன். அதற்கு உரிமை இல்லாதவன். அவன் நூற்றுக்கு நூறு மகாராஷ்டிரனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு தமிழனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு அவன் குஜராத்தியாக இருக்கலாம். ஆனால் பூகோள அர்த்தத்தில் தவிர, இந்தியன் என்ற சொல்லின் உண்மையான அர்த்த த்தில் அவர் ஓர் இந்தியனாக இருக்க முடியாது. என் யோசனை ஏற்கப்படாவிட்டால் பின்னர் இந்தியா இந்தியாவாக இருக்காது. அதற்கு மாறாக ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்வதிலும் சிண்டுபிடித்துக் கொள்வதிலும் ஏச்சுபேச்சுகளிலும் போட்டி பூசல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடிய பலதரப்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கதம்பக் கூட்டாகத்தான் அது இருக்கும்.

‘ஓ இந்தியர்களே! நீங்கள் எப்போதும் பிளவுபட்டே இருப்பீர்கள். நீங்கள் எந்நாளும் அடிமைகளாகவே உழல்வீர்கள்’ என்று ஆண்டவன் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் மிகப்பெரிய சாபத்தை தந்திருப்பார் போலும்.!

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்ததை நான் வரவேற்றேன். அதற்காக மகிழ்ச்சியும் அடைகிறேன். பிரிவினையை நான் ஆதரித்தேன். பிரிவினையின் மூலம்தான் இந்துக்கள் சுதந்திரமானவர்களாகவும் சுயேச்சையானவர்களாகவும் இருக்க முடியும் என்று நான் நம்பியதே இதற்குக் காரணம். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருந்தால் இந்துக்கள் சுதந்திரமுடையவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களின் தயவைப் பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில்தான் இருந்திருப்பார்கள். அரசியல் ரீதியில் சுதந்திரம் பெற்ற இந்தியா இந்துக்களின் கண்ணோட்டத்தில் ஒரு சுதந்திர இந்தியாவாக இருந்திருக்காது. அப்போதைய அரசாங்கம் இரண்டு தேசங்கள் கொண்ட ஒரு நாட்டின் அரசாங்கமாகத்தான் இருந்திருக்கும். இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவை இருந்தாலும் முஸ்லீம்கள் எத்தகைய தடங்கலும் இன்றி ஆளும் வர்க்கத்தினராக இருந்திருப்பார்கள். நாடு பிரிவினை செய்யப்பட்டபோது, ஆண்டவன் தமது சாபத்தை விலக்கிக் கொண்டு இந்தியா சுபிட்சமும் வளமும் அமைதியும் கோலோச்சும் ஒன்றுபட்ட ஒரு மாபெரும் நாடாகத் திகழத்திருவுளங் கொண்டுள்ளார் என்றே எனக்குத் தோன்றிற்று. ஆனால் அந்தச் சாபம் மீண்டும் நம் மீது விழுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் மொரிவாரி மாநிலங்கள் வேண்டுமென்று கோருபவர்கள் பிராந்திய மொழியைத் தங்களது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற குறிக்கோளைத் தங்கள் உள்ளத்தின் அடித்தளத்தில் வைத்திருப்பதைக் காண்கிறேன்.

ஐக்கிய இந்தியா என்னும் லட்சியத்திற்கு இது சாவு மணி அடிப்பதாகவே இருக்கும். பிராந்திய மொழிகள் ஆட்சி மொழிகளாகும்போது இந்தியாவை ஓர் ஒன்றுபட்ட வலிமைமிக்க வளமான நாடாக ஆக்க வேண்டும் என்ற மகோன்னதமான லட்சியம் மறைந்து போகும். இந்தியர்களை முழுக்க முழுக்க இந்தியர்களாக ஆக்க வேண்டும். அவர்களது ஊனிலும் உதிரத்திலும் பேச்சிலும் மூச்சிலும் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி நிற்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளும் மண்ணோடு மண்ணாகிவிடும். இந்த இக்கட்டிலிருந்து, சிக்கலிலிருந்து மீள்வதற்கு ஓர் உபாயத்தை, பரிகாரத்தைக் கூறுவதற்கு மேல் என்னால் வேறு என்ன செய்ய முடியும்? என் யோசனையைப் பரிசீலிப்பது இந்தியர்களின் பொறுப்பு.
டாக்டர் அம்பேத்கர், நூல் : மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள், பக்: 212-214

அண்ணல் அம்பேத்கருடைய சமஸ்கிருதம், இந்தி பற்றிய மொழிக்கருத்துக்களைப் பார்க்கும்போது அண்ணல் அம்பேத்கருடைய ஆசையைத்தான், எண்ணத்தைத்தான் தற்போது பாஜக செயல்படுத்துகிறதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

சமஸ்கிருதம் தேசிய மொழியாக வரவேண்டும்; ஐக்கிய இந்தியாவுக்கு இந்தியே தீர்வு என்று அண்ணல் அம்பேத்கர் கூறியிருப்பதற்கு மாறாக, அண்ணல் அம்பேத்கர் படத்தை போட்டு, அவர் பெயரை வைத்து அவருக்கே துரோகம் செய்திருக்கின்றன மேற்கண்ட மாணவர் அமைப்பு.

இவர்கள் உண்மையிலேயே அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றவர்கள் என்றால் அண்ணல் அம்பேத்கரின் மொழிக்கொள்கை ஏற்றிருப்பார்கள். ஆனால் இவர்கள் ஏற்கவில்லை என்பதை அவர்கள் நடத்திய நிகழ்ச்சி மூலம் தெளிவாகியிருக்கிறது. அண்ணல் அம்பேத்கரின் இந்த மொழிக்கொள்கைக்காக அவரை இந்துத்துவவாதி என்று சொல்லப் போகிறார்களா? சொல்வார்களா?

இதன்மூலம் இந்த அமைப்பு அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை மாணவர்களிடம் பரப்புவதற்கோ, அவருடைய கொள்கைகளை செயல்படுத்துவதற்கோ அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைக்கவில்லை, அவருடைய படத்தையும் அதற்காக போடவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம். அவர் படத்தை வைத்து, அவரின் பெயரை வைத்து பாஜக அரசிற்கு கெட்டப் பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இதெல்லாம் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்த அமைப்பு பாஜகவை மட்டுமே, இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து தாக்கி வருவதை அவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளே சான்று. இந்த அமைப்பு நடத்திய பகத்சிங்கை பற்றி நிகழ்ச்சி என்றாலும்கூட அங்கு இந்துமதம், பாஜக தாக்கப்படுகிறது. தற்போது சர்ச்சைக்கு வித்திட்ட நிகழ்ச்சிகூட பாஜக மற்றும் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்துதான் நடத்தப்பட்டது.

APC

இப்படி நேரடியாக சொல்ல முடியாது என்ற காரணத்தால் அண்ணல் அம்பேத்கர் இன்றையப் பொருத்தப்பாடு என்ற தலைப்பில் தங்களுடைய கருத்துக்களைப் பேசியுள்ளனர். தங்கள் கருத்துக்களைப் பேச, பரப்ப அண்ணல் அம்பேத்கரை இவர்கள் பயன்படுத்துகிறார்.  ஆனால் இதில் அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை பேசுவதைவிட்டுவிட்டு பாஜக, இந்துமதம் பற்றிய விமர்சனமே முழுவதும் இருந்திருக்கிறது.

பாஜக கொண்டுவருகிற குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள் இந்த அமைப்பும் இதனுடன் கூட்டுவைத்திருக்கிற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும். மேற்கண்ட நிகழ்ச்சியிலும் அதைப் பற்றி பேசப்பட்டது. ஆனால் இதே அமைப்பினர் போராட்டத்திற்கு இளம் சிறார்களை அழைத்து வந்து ஈடுபட வைத்தார்கள்.

iit-madras-apsc-ban-rsyf-protest-01-Copy

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன்

Untitled

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இளம் சிறார்களை போராட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ளச் செய்தனர் என்பதற்கான ஆதாரத்தை அவர்களே வினவு இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். போராட்டத்தில் கைதும் நடக்கலாம், கலவரமும் நடக்கலாம் என்று தெரிந்தும் இளம் சிறார்களை இவர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள் என்றால் பாஜகவின் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரானது என்று பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

உண்மையிலேயே இவர்கள் வேறொரு நோக்கத்திற்காக இந்த இளம் சிறார்களை அழைத்து வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். போராட்டம் நடக்கும்போது கண்டிப்பாக தள்ளுமுல்லு ஏற்படும். அப்படி ஏற்படும்போது இந்த இளம் சிறார்கள் யாராவது விழுந்து மிதிபட்டு இறப்பார்கள். அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்துத்தான் இவர்கள் இளம் சிறார்களை அழைத்து வந்திருக்கிறார்கள். கோ படத்தில் தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று நினைத்த நக்சலைட் வில்லன் தன் கூட இருந்த, உண்மையாகவே உழைத்த நண்பர்களை சாகடிக்க திட்டம்போடுவான். சில நண்பர்களும் இறப்பார்கள். அதே யுக்தியை இந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் நடத்தப் பார்த்தார்கள். அதிர்ஷ்டவசமாக அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. நடந்திருந்தால்….  ஒரு சிறுவன் இறந்திருந்தால்…. நினைத்துப் பாருங்கள். எப்படிப்பட்ட வன்முறைகள் ஐஐடியின் மீதும், அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள்மீதும் ஏவப்பட்டிருக்கும் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.

இங்கு இரண்டு முக்கியமான குற்றச்சாட்டை இந்த அமைப்பு சுமத்தியிருக்கிறது. ஒன்று. ஐஐடி அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் என்ற பெயரை நீக்க வேண்டும் என்று சொன்னார்கள் என்றும், மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டதாகவும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத்தை நிகழ்த்தி வருகிறார்கள்.

iit-aspc-rsyf-tvr-poster

முதல் விஷயம். அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. இந்த பெயரில் செயல்படும் இந்த அமைப்பின் பல நிகழ்ச்சிகளுக்கு ஆடிட்டோரியம், வகுப்பறை ஆகியவை ஐஐடியால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர்-பெரியார் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ஐஐடி சொன்னதாக ஒரு வருடகாலமாக இவர்கள் இந்தக் குற்றச்சாட்டை வைக்கவில்லை. இப்போது திடீரென இந்த குற்றச்சாட்டை வைப்பதிலிருந்தே நாம் உண்மையை உணர்ந்துகொள்ளலாம்.

இரண்டாவது விஷயம். இந்த தடைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த அமைப்பைப் பற்றி ஒரு விளக்கத்தைக் கேட்டிருக்கிறது.

APC3

இப்படி உண்மையை மறைத்து ஏதோ மோடி அரசுதான் தடை உத்தரவை போட்டதுபோல் இவர்கள் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். ஐஐடியில் செயல்படுகின்ற பல அமைப்புகளுக்கு சில விதிமுறைகள் ஐஐடியால் விதிக்கப்பட்டிருக்கின்றன. போஸ்டர்களிலும், பிட்நோட்டீஸ்களிலும் ஐஐடி பெயர் இடம்பெறக்கூடாது; ஐஐடியிடம் அனுமதி பெற வேண்டும் போன்ற விதிகள் இருக்கின்றன.

CGKV5C7UoAA0EKi

இந்த விதிமுறைகளை மீறுகிற அமைப்பு தடை செய்யப்படும் என்றும் இந்த அமைப்புக்குத் தெரியும். தெரிந்தே ஐஐடியின் விதிமுறைகளை மீறியது. அதனால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. தடை உத்தரவு கூட தற்காலிகமானதுதான்.

இதையெல்லாவற்றையும் மறைத்து கருத்து சுதந்திரத்தை பறித்துவிட்டார்கள்; அண்ணல் அம்பேத்கர் பெயர் இருப்பதனால் தடை செய்துவிட்டார்கள் என்று பொய்ப்பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை இந்த அமைப்பை யார் நடத்துகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஜோ.பிரிட்டோ, தீபக் ஜான்சன் போன்ற கிறிஸ்துவர்கள் இதை வழிநடத்துகிறார்கள் என்று பல மாணவர்கள் நம்மிடம் சொன்னார்கள். இது உண்மையா என்று தெரியாது. ஆனால் இவர்களுடைய நோக்கங்களைப் பார்க்கும்போதும், இவர்களுக்கு கிடைத்த ஊடகங்களின் ஒளியை வைத்துப் பார்க்கும்போதும் இந்த அமைப்புக்கு பின்புலம் மிகப்பெரிய சதிதிட்டங்களுடன் கிறிஸ்தவ, கம்யூனிச அமைப்புகள் இருக்கிறதோ என்ற ஐயத்தை புறந்தள்ள முடியவில்லை. இது ஒரு சிறிய அமைப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் இதனுடைய நிகழ்ச்சிக்கு ஆந்திராவில் இருந்தும், டெல்லியிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும் புகழ்பெற்ற பேராசிரியர்கள் வருகிறார்கள் என்றால் இவர்களின் பின்புலம் சாதாரணமானதாக இருக்க முடியாது. இவர்களை இயக்குவது வெளியில் இருந்து பாஜக அரசுக்கு கெட்ட பெயரை மாணவர்கள் மத்தியில் அதுவும் தலித்துகள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தேசவிரோத கும்பல்களே.

இந்த அமைப்பு ஐஐடியில் கடைபிடிக்காத இட ஒதுக்கீட்டை கண்டித்து எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தவில்லை.

ஐஐடியில் தலித் மாணவர்கள் பல வன்கொடுமை தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள். சிலர் மரணித்தும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இந்த அமைப்பு எந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தவில்லை.

தலித் மாணவர்களுக்கு தமிழகத்தில் விடுதிகள் போதுமானதாக இல்லை. இருக்கின்ற விடுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதைப் பற்றி இந்த அமைப்பு எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தவில்லை.

கடந்த சில மாதங்களாக தென்தமிழகத்தில் சாதி ரீதியான படுகொலைகள் நடந்து வருகின்றன. அதைப் பற்றி எந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தவில்லை.

தலித்துகளுக்கான சிறப்பு உட்கூறு நிதி தமிழகத்தில் சரியானபடி பகிர்ந்தளிக்கப்படாமல், பல்வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதைப் பற்றி எந்த ஒரு நிகழ்ச்சியும் இந்த அமைப்பு நடத்தவில்லை.

தலித் மக்களுக்கான அரசாங்க பணியிடங்கள் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்த பின்பும் இன்றுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து எந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

சாந்தி சௌந்தரராஜன் என்கிற தலித் மாணவி தேசிய அளவில் பதக்கங்கள் பல பெற்றும் அரசாங்கத்தின் தவறுதலால், கவனமின்மையால் தனக்கான அங்கீகாரம் இன்றி, வறுமையில் வாடுகின்றார். இதுபோன்ற எண்ணற்ற மாணவிக்காக இவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தவில்லை.

இப்படி தலித்துகளை மையப்படுத்தி இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு பாஜக அரசாங்கத்தை மட்டும் குறிவைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதிலிருந்து – இந்துமதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி நிகழ்ச்சி நடத்தப்படுவதிலிருந்து இந்த அமைப்பின் நோக்கமும், இந்த அமைப்பினை பின்னால் இருந்து இயக்குகின்ற அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ஆகவே மத்திய அரசு இதில் தலையிட்டு இவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

76 Replies to “ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்”

 1. தெளிவான அலசல். இதில் எல்லோரும் புகுந்து அரசியல் ஆக்குகின்றனர். இது வரை இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களிலும் இந்த அரசைத் தாக்குவது போல் வேறு எந்த அரசையும் தாக்கியது இல்லை. அதே போல் பிரதமரும்! மிக வருத்தத்துக்கு உரியது. ஊடகங்கள் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உண்மையை மறைக்கின்றன என்பதும் புரியவில்லை.

 2. அண்ணா, மிகவும் அருமையான கட்டுரை. மத்திய அரசு தனது இரும்பு கரம் கொண்டு மாணவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். இது கம்யுனிச மாணவர் இயக்கங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

 3. The generic Church sponsored DK/DMK/Leftists and the usual anti brahmin cottage industry are behind this fiasco. They are doing everything possible to discredit NaMo. Take recent events 1) Church attacks and blaming Hindus when it was simple theft and internal fighting between Christians 2) rape of elderly Nun by Bangladesh Muslims but Hindus/ NaMo blamed 3) Fake claim by Muslim woman in Mumbai that she was denied renting in an apartment complex because she was a Muslim. It turned out that it was utterly false as there were other Muslims living in the complex. Apparently she was evicted due to non payment of rent. Who is power behind this woman? Why did not the media check out the facts?
  No news when the facts emerge contrary to the accusations.
  The MSM is actively supporting the role of these Church sepoys. The whole idea here is to spread lies after lies and discredit the BJP Govt. If anyone, like the author of this article, bring solid ” Facts” and blow big holes in their accusations, these counter views hardly get published. Their aim is simple. Bring down the NaMo Govt at any cost. Tell enough lies and at some point people will start believing them.
  It is high time NaMo does something serious reg the MSM. Make them ACCOUNTABLE. Jail terms, fine and loss of licence to operate are the measures that need to be brought in to counter this nuisance.
  Plus keep politics of all shades out of educational institutions.

 4. Oppusdei, a christian intelligence agency operated by vatican with its head office at madrid spain was earlier headed by one kerala christian parnikar as indian operations chief. their job is to denigrate hinduism , hindu saints, trap them with some affairs mainly with ladies or money or drugs and bring bad light to hinduism besides doing covert operation to eliminate hindu supporters and hence BJP and RSS are its main target. Christian missionaries are not able to stand before RSS operations in india mainly to serve the tribal , st/sc students educations by offering good educations and culture to them besides on health through their networks like Ekalvidyalaya,friends of tribal society, Arokiya, vana bhandu parishad, vanavasi kalyan ashramam which has multiple operations in giving One teacher concept in all hilly,tribal belts where christians earlier simply went and converted the tribals and after finishing its agenda, left them in lurch. RSS run many hostals, educations centers, IAS coaching centers, schools, medical hospitals running more than 1.5 lacs operations throughout india. Hence Christians are afraid with BJP in power, RSS will penetrate further to nook and corner and finish christians missionarieys hidden agenda of only conversion but not providing poorer section for future education and culture. Christians agenda is to prevent any development in india since as long as indians are poorer, they can be converted by alluring with some money and once converted them, they will not longer care for them. my servent maid is now changing church to church for help but she was not given any help for he sons education by missionaries since she was already converted and their job is over now. RSS never discuss with any benecifiary about their religions and strictly ordered their workers not to talk of any religion or conversion but only to serve the poorer section of society. Hence missionaries are now trying to do mud slinging job to tarnish the good image of Modi government.

  can anyone say why pudiya thalamuri is all out to cause damages to hinduism, BJP and to modi. any special reason. ?

 5. (1) ஆரியர்கள் வெளிநாட்டவர்கள் ——————————————————ஈ வே ரா
  ஆரியர்கள் இந்நாட்டவர்களே ————————————அண்ணல் அம்பேத்கர்
  (2) இந்திதான் இந்த மண்ணிற்கு பொதுமொழி —————- அண்ணல் அம்பேத்கர்
  இந்த ஒழிக்க படவேண்டும் ———————————————————–ஈ வே ரா

  இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களை கொண்ட இருவரும் எப்படி ஒரு போஸ்டரில் இடம் பெற்றார்கள் என்று தெரியவில்லை. அந்த சிகப்பு சட்டை (அது கம்யூனிஸ்ட்காரன் கொடுத்த சட்டையோ?) போட்ட சிறுவன் IIT யில் படித்துவரும் மாணவனோ? விவசாயிகள் விடுதலை முன்னணி உறுப்பினர் எல்லாரும் ஐ ஐ டி மாணவர்களா? இதற்கு பெயர்தான் மாணவர்கள் போராட்டமா?
  டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கல்லூரியில் படிப்போர் புதிய புதிய டெக்னாலஜிகளை கண்டுபிடித்து நாட்டு முன்னேற்றத்திற்கு உதவியாக இருப்பார்கள் என்றால் இவர்களுக்கு இது தேவையானதுதானா? தமிழுக்கு குரல் கொடுக்கும் இவர்கள் போஸ்டர்களை ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்துள்ளனர். போராட வருபவர்களுக்கு ஆங்கிலம்தான் தெரியுமோ? தமிழ் தெரியாதோ?

  கூடங்குளம் அணு ஆலையின் எதிர்ப்பு அமைப்புக்கு உதயகுமார் என்ற கிறிஸ்தவன் இருப்பது போல இந்த மேற்சொன்ன கல்லூரி அமைப்புக்கும் கூட பிரிட்டோ மற்றும் ஜான்சன் போன்ற கிறிஸ்தவர்கள்தான் உள்ளனர்.

  ///பெரியார் பிறந்த ””’தமிழ்””’ மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறையாக ஆக்குவோம்/// சரி இந்த மண்ணில்தானே பெரியாரின் பூத உடலும் புதைக்கபட்டிருக்கிறது. அல்லது அவரை கன்னட மண்ணின் கல்லறையில் வைத்திருக்கிறார்களோ? பார்ப்பனர்களின் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் இவர்களுக்கு 1947 ஏப்ரல் 18ஆம் தேதி பாம்பே விற்கு treatment க்கு சென்றபோது ஒரு பார்ப்பன டாக்டர் Sharada Kabir என்பவரை மணந்தார் பிறகு அவர் தன பெயரை சவித என்று மாற்றிகொண்டார். ஒரு பிராமண பெண்ணின் கணவர் அம்பேத்கரை பிடிக்குமோ? ”அம்பேத்கர் பெரியார் படிப்பு” ஏதேனும் இந்த ஐ ஐ டி யில் subject உள்ளதா? அந்த படிப்பை இங்கேதான் படிக்கவேண்டுமா? திக காரன் நடத்தும் கல்லூரி எதிலும் இந்த subject இல்லையா? ஐ ஐ டி யில் எதை படிக்கணுமோ அதை மட்டும் படிப்பது நல்லது.

 6. இப்படிதான் உதயகுமாரை தூக்கி புடித்தார்கள் , அவரின் நேர்மை சாரதா ஊழலில் வந்து பல்லு இளித்து . இதில் என்ன என்று பார்ப்போம்

 7. அருமையான கட்டுரை. ‘Honest Man’ பின்னூட்டம் அருமை – இன்னும் ஒன்று – நாம் கட்டும் வரிபணத்தில் IIT நடத்த படுகின்றன. அப்படி இருக்கையில் இவர்கள் இப்படி அட்டுழியம் பண்ணலாமா?

 8. இந்த IIT விவகாரத்தில் விவாதம் செய்த அத்தனை ‘ அம்பேத்கர்-பெரியார்’ சீடர்களில் ஒருவர் கூட திரு M C ராஜா அவர்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. தலித்துகளுக்காக அவர் உழைத்த உழைப்பு எதுவும் இவர்கள் கண்களில் படவில்லையா ?

 9. ம.வீ. யின் பதிவுகள் எப்போதும் ஆதாரங்களை மட்டுமே கொண்டது. இந்த ஐ‌ஐ‌டி பற்றிய பதிவு அவரது ஆக்கங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது

 10. முழுமையான தரவுகளுடன் கூடிய அன்பின் ஸ்ரீ.ம.வெ அவர்களது மற்றுமொரு வ்யாசம்.

  https://swarajyamag.com/politics/10-reasons-why-ambedkar-would-not-get-along-very-well-with-periyar/

  ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தங்களுக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கருடைய கருத்துக்களுக்குமிடையே 10 முக்ய வித்யாசங்கள்……….. என்ற ஸ்ரீ அ.நீ அவர்களுடைய ஸ்வராஜ்யா தளத்தில் பதிவான வ்யாசத்தை வாசிக்கையில் ………. பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களையும் ஈ.வெ.ரா அவர்களையும் ஒன்றிணைப்பது …………. சாதத்தையும் களிமண்ணையும் கலந்த கிச்சடி போன்றது என்று தெரிகிறது.

  இன்றைக்கு ப்ரதமர் மோதி அவர்கள் எந்த ஒரு சமுதாயத்தையும் தாக்கிப் பேசும் முறைமை தவிர்க்கப்பட வேண்டுமே என்று கூறியிருக்கிறார்.

  ஹிந்துயிஸத்தை ஒழிப்போம் என்று இந்த மாணவர் அமைப்பு முன்வைக்கும் கருத்துக்களை பேச்சுரிமை என்று காங்க்ரஸ் கட்சி முழக்கமிடுகிறது. காங்க்ரஸ் கட்சி ஹிந்துயிஸத்தை ஒழிப்பதை ஆதரிக்கிறதா என்பது ………… ஹிந்துஸ்தானமளாவி……..பொது தளத்தில் மையமான கருத்தாக வைத்து விவாதிக்கப்பட வேண்டும்.

 11. இவர்கள் மீது சிபிஐ விசாரணை வெய்த்து அவர்களின் பின் இருந்து செயல்படும் தேசவிரோத கூட்டத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒருவேளை அப்படி செய்தால் சிபிஐ ஒரு பார்பன அமைப்பு என்று இந்த கும்பல் கூற வாய்பிருக்கிறது. அதனால் இந்துக்கள் பாதுகாப்பு அமைப்பு என்று ஒன்றை உறவாக்கி, இந்த கூலிப்படை சொறிநாய்கள் செல்லும் இடத்தில் எல்லாம் சென்று, இவர்களை செருப்பால் அடித்து, கை, கால்களை உடைத்து ஓட ஓட விரட்டவேண்டும். IIT வளாகத்தின் முன் கலவரம் செய்த தீயசக்திகளை வேருடன் அழிக்க வேண்டும்.

 12. கன்னட வெறியன், தேச விரோதி, தாலி அறுக்கும் திருடன், கிருத்துவ மிஷனரிகள் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து பணத்தை பெட்ட்ருக்கொண்டு தேசத்தை துண்டாட நினைத்த கயவன் ஈவேரா பெயரால் செயல் படும் தீயசக்திகளை உடனே தடை செய்யவேண்டும். படிக்கும் மாணவர்களை படிக்கவிடாமல், இனகலவரத்தை உருவாக்க நினைக்கும் தேசவிரோத கூட்டத்தை அடியோடு வேறருக்க வேண்டும்.

 13. சில நாட்களாக m வெங்கடேசன் அவர்களின் கட்டுரையை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். எல்லா வற்றையும் நன்கு ஆராய்ந்து ஆதாரத்துடன் எழுதி வருகிறார். இவருடைய முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

 14. சர்வசாதாரண விஷயம் – ஐஐடியின் விதிமுறைகளை மீறியதால் ஒரு அமைப்பு தடை செய்யப்படுகிறது – அதாவது ஐஐடியின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறினார்கள், அவ்வளவுதான். அதில் எத்தனை அரசியல்! எல்லா தரப்பும் கேம் விளையாடுகிறது, தமிழ் ஹிந்து உட்பட!

  1. ஐஐடியில் பிரச்சினை. அது எப்படி டீனிடம் புகார் போகாமல் மனித வளத்துறைக்குப் போகிறது?

  2. மனித வளத்துறைக்கு ஒரு அனாமதேயக் கடிதம் (மொட்டைக்கடிதாசு) வருகிறது. மொட்டைக்கடிதாசுக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து ஐஐடி என்ன சொல்கிறது என்று மனித வளத்துறை ஒரு கடிதம் அனுப்புகிறது. எல்லா மொட்டைக் கடிதாசுகளுக்கும் இதே அணுகுமுறைதானா?

  3. இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் நாலு பேரை – அந்த அமைப்பின் பொறுப்பாளர்களையும் சேர்த்து – விசாரிப்பார்கள். பிறகு முடிவெடுப்பார்கள். ஐஐடியின் டீன் அமைப்பிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை; முதலில் அமைப்புக்கு தடையுத்தரவு போடுகிறார். பிறகு நீங்கள் கொடுக்கும் விளக்கம் திருப்தியாக இருந்தால் உங்களை மீண்டும் அனுமதிப்போம் என்கிறார். கசபுக்குக் கூட முதலில் விசாரணை பிறகுதான் தண்டனை.

  4. ஐஐடியின் பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தவறு, அதற்காக தடை என்பது என் கருத்தில் மிக அதிகமான தண்டனை. இந்த மாதிரி கேஸ்களில் முதலில் எச்சரிக்கைதான் கொடுப்பார்கள். ஒரு வருஷமாக ஒரு அமைப்பு இயங்குகிறது, அப்போதெல்லாம் இது தெரியவில்லையா? ஆனால் ஐஐடியின் டீனுக்கு அப்படி தண்டனை கொடுக்க முழு உரிமையும் உண்டு. ஆனால் இதே அணுகுமுறையை எல்லா அமைப்புகளுக்கும் கடைப்பிடிக்கிறாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

  5. நம்மூர் முற்போக்கு கும்பல்களுக்கு கேட்கவே வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயங்களை ஊதிப் பெருக்குவார்கள். கிடந்து குதிக்கிறார்கள்.

  6. நான் பெரிதும் மதிக்கும் ம. வெங்கடேசனும் இந்தப் பிரச்சினையை திசை திருப்புவதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அம்பேத்கரின் லெகசி என்பது அவரது மொழிக் கொள்கைதானா? அம்பேத்கரை மதிப்பது என்றால் அவரது எல்லா வார்த்தைகளையும் அட்சரம் பிசகாமல் ஏற்கிறேன் என்று பொருளில்லையே? காந்தியை மதிப்பவர்கள் எல்லாரும் இளம் பெண்களுடன் நிர்வாணமாக உறங்குவதில்லையே?

  6. ம. வெங்கடேசன் எழுதுகிறார் – // இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே பாஜக தலைமையிலான மோடி அரசை விமர்சனம் செய்வதாக அமைந்திருப்பது தற்செயலாக நடந்தவை அல்ல. எல்லாம் திட்டமிட்டு நடந்தவையாகவே இருக்கின்றன. // சரி விமர்சிக்கட்டும். அதனால் என்ன? மோடி அரசு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா? இந்த அமைப்புக்கு மோடி அரசை, பாஜகவை, ஹிந்துத்துவத்தை, ஹிந்து மதத்தை காட்டமாக விமர்சிக்கும் உள்நோக்கம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படி உள்நோக்கம் இருக்கும் எல்லா அமைப்பையும் தடை செய்ய வேண்டுமா? இதை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டால் நாளை மீண்டும் காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்தால் தமிழ் ஹிந்து தளத்தை தடை செய்துவிடலாமா? // பாஜக அரசுக்கு கெட்ட பெயரை மாணவர்கள் மத்தியில் அதுவும் தலித்துகள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தேசவிரோத கும்பல்களே. // ம.வெ. கண்களில் பாஜக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதே தேசவிரோதம் ஆகிவிடுகிறதா?

  7. சுருக்கமாகச் சொன்னால் வேலியில் கிடந்த ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட மாதிரிதான் மனிதவளத் துறையும் ஐஐடியும் நடந்து கொண்டிருக்கின்றன. ஓணான் நாலு நாள் குதிக்கும் அப்புறம் தானாக அடங்கிவிடும். இதை தமிழ் ஹிந்து தளமும் சேர்ந்து ஊதிப் பெருக்க வேண்டாம் என்றே நான் கருதுகிறேன்.

  8. ம. வெ. மீது எனக்கு பெரும் மதிப்புண்டு. அவரைப் போல திராவிட இயக்கத்தின் போலித்தனத்தை வரலாற்று சான்றுகளோடு யாரும் நிரூபித்த மாதிரி எனக்குத் தெரியவில்லை. என்னைப் போன்ற armchair-punditகளுக்கு அவரை விமர்சிக்க என்ன யோக்கியதை என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை. நல்ல வேளையாக வள்ளுவரிடம் பதிலிருக்கிறது – எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்…

 15. Copy pasted from Niti Central on Media bias

  Media bias

  Once again, the media has done its bit in blowing the non-issue out of proportion. While media’s bias against the Modi Government and a particular community has come out in the open on more than one occasion. Non-existent coverage of the recent disturbing events at Aligarh Muslim University by the highly ‘aware’ 24*7 media highlights the bias in the present context. There was hardly any report on AMU professor’s alleged statement “We want removal of madarsa… Where homo sexuality is rampant…Maulanas are part of it.” The professor who has been teaching at AMU for around 30 years added that condition of Muslim youth will only improve if madrasas are banned.

  The human rights cheerleaders and thekedars of women empowerment didn’t utter a word when Asma Javed, who made headlines four years ago when she became the first woman to run for student body president at the Aligarh Muslim University, was found dead in her apartment on May 13.

 16. ///////விதியை மீறினார்கள், அவ்வளவுதான்./////

  எவ்வளவு சிம்ப்ளயாக ”அவ்வளவுதான்” என்று கூறுகிறார். அந்த விதியை மீறியதற்கு தான் இந்த தடையப்பா.புரியுதா? /////அதில் எத்தனை அரசியல்!//////// . அரசியலாக்கியது யார்? அங்கே ban க்கு பிறகு ”முதலில்” கம்யூனிஸ்ட் கட்சி, திருமா கட்சி போன்றவைதானே களத்தில் குதித்தன? அப்புறம் விளக்கம் கூறுவதற்காக கட்டுரை எழுதிய தமிழ் இந்து தளத்தை வந்து பெருசா குறை கூறுகிறீர்.

  1. உமது முதல் கேள்விக்கு இதோ பதில். இதற்கு உதாரணம் தருகிறேன். ஒரு தவறான சம்பவம் நடந்து போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் சில நேரத்தில் நடவடிக்கை எடுப்பதில்லை. புகார்தாரர்கள் அப்போது மேலிடத்தில் புகார் தருவார்கள். பிறகு நடவடிக்கை எடுப்பார்கள். இதில் கால தாமதம் ஏற்படுகிறது, ஆகவே ஒரே அடியாக மேலிடத்திற்கே மனுவை அனுப்பியுள்ளார்கள் அதிலென்ன தவறு? (குறிப்பு:-அவர்கள் டீன் க்கு அனுப்பினார்களா இல்லையா என்பது எனக்கும் தெரியாது உமக்கும் தெரியாது. முதலில் அவருக்கு அனுப்பியும் இருக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் இருக்கலாம்)

  2. எல்லாமொட்டை கடிதாசிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா? அது அந்த மொட்டை கடிதாசியில் இருக்கும் விடயத்தை பொறுத்தது. அசாதாரணம் என்றால் எடுப்பார்கள்.

  3. கசாபுவை பற்றி சொன்னீர். நான் ஒன்று சொல்கிறேன் அதை கேளும். ஒரு வழக்கு ஹை கோர்ட்டில் தீர்ப்பாகி அது உச்ச நீதி மன்றத்திற்கு மேல்முறையீட்டில் செல்கிறது என்றால் அந்த உச்சநீதி மன்றம் உடனடியாக ஹை கோர்ட்டில் அளித்த தீர்ப்பை அமுல்படுத்தாமல் அதற்கு தடை விதித்து (அல்லது நிறுத்திவைத்து) பின்னர்தான் அங்கே விசாரிப்பார்கள். அந்த அமைப்பிற்கு தடை விதிக்கவில்லை என்றால் (அராஜக கட்சிகளின் உதவியோடு) அவர்களின் ”’ஆட்டம்”’ சொல்லிமாளாது. மேலும் ஒன்று.கூறுகிறேன். ஒரு மந்திரி மீது குற்றசாட்டு எழுந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவண்டும் அதன் பிறகு விசாரணை நடக்கும்

  4. CORPORATION உடைய அனுமதி இன்றியும் புறம்போக்கு நிலத்திலும் ஒருவர் வீடு கட்டுகிறார் என்று வைத்து கொள்வோம். அப்போது அந்த வீட்டை இடித்தது மிக பெரிய தண்டனை என்று கூறுவீரா? அப்படி இல்லையெனின் இதுபோல பல கட்டிடங்கள் வந்துவிடுமே. பரவாயில்லையா? . //////அப்போதெல்லாம் இது தெரியவில்லையா? . ஆனால் இதே அணுகுமுறையை எல்லா அமைப்புகளுக்கும் கடைப்பிடிக்கிறாரா///// தெரிந்திருக்கும் ஆனால் எதுவுமே ஒரு எல்லையை தாண்டி போகும்போதுதான் நடவடிக்கை எடுப்பார்கள். அதே அணுகுமுறையை இன்னின்ன விடயங்களில் கடைபிடிக்கவில்லை என்று குறிப்பிட்டு ஆதாரத்தோடு இங்கே சொல்லும். சும்மா உமது சந்தேகததை எல்லாம் இங்கு வந்து குப்பையாக கொட்டிவிட்டு போக வேண்டாம்.

  5. //முற்போக்கு கும்பல்// என்பது திருசெங்கோட்டில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் கோதாவில் குதித்து குத்தாட்டம் ஆடினார்களே அவர்களைத்தானே கூறுகிறீர்கள்?

  6. சமஸ்கிருதம் ஒழிக! தமிழ் வாழ்க! என்ற கோஷத்தோடும கூடவே ஆங்கில பேனர்களோடும் அம்பேத்கர் பெயரில் இயங்கியஅவர்கள் களம் இறங்கினார்கள் அப்படியானால் அந்த குறிப்பிட்ட விடயத்தில் அம்பேத்கரின் மொழி கருத்து என்ன என்று தானே பார்க்கவேண்டும். அதற்காக அவர் சொன்ன 1000 விடயங்களையுமா அங்கே அலசி ஆராய்ந்து கொண்டிருக்க் முடியும்? அவரின் எந்தெந்த கருத்துக்கள் எங்கெங்கே APPLICABLE ஆகுதோ அதை மட்டுமேதானே அங்கே எடுத்துகொள்ள வேண்டும்?

  7. அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த்துவதால் ”இப்போதுதான்” அவர்கள் தேசவிரோத கட்சிகள் அல்ல. அவர்கள் ””ஏற்கனவே”’ தேசவிரோத கட்சிகள்தான். அவை தற்போது அரசுக்கு தீய பெயரை ஏற்படுத்த இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன.

  8. ஓணானை எவனும் வேட்டிக்குள் விட்டுகொள்ளவில்லை. அதை வேலியிலிருந்து அகற்ற அவர்கள் முயன்று இருக்கிறார்கள் .. அவ்வளவுதான்

  9. 5 க்கு பிறகு 6 என்று 2 தடவை வரிசை எண்ணை இவர் கொடுத்துள்ளார். எண்ணிக்கையே சரியாக தெரியாதவருக்கு அவரது எண்ணங்கள் மட்டும் சரியாகவா இருக்கபோகிறது? ஆகையால் இவரது கருத்துகளில் எது மெய் எது பொய் என்று காண்பது ரொம்ப ஈசியே! . என்றாலும் இதற்கு திரு ம வெங்கடேசன் பதில் நிச்சயமாக தருவார் என்று கருதுகிறேன்.

 17. சிரிப்பு புரட்சியாளர்களான வினவு தளத்தினர் இதை வைத்து என்ன காமெடி பண்ணுகிறார்கள் என்று எட்டிப் பார்த்தேன். காமெடி எல்லாம் இருந்தாலும் விவேகானந்தர் வாசகர் வட்டம் என்ற அமைப்பும் ஏறக்குறைய இதே மாதிரி ஐஐடியின் பெயரை இந்த சர்ச்சை உருவாகும் வரை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. (இப்போது மாற்றி இருக்கிறார்கள்.)

  https://www.vinavu.com/2015/06/02/the-conspiracy-of-madras-iit-and-the-rss/

  ஏறக்குறைய சமமான விதிமீறலுக்கு ஒரு அமைப்பை மட்டும் தடை செய்யும் ஐஐடி நிர்வாகமும் சரி, மொட்டைக் கடிதாசுக்கு இத்தனை promptஆக நடவடிக்கை எடுக்கும் மனித வளத்துறையும் சரி, புல்லரிக்க வைக்கிறார்கள். மோடிக்கு எதிரிகளே வேண்டாம், இந்த மாதிரி “நலம்விரும்பிகளே” போதும்…

 18. ‘இது பெரியார் பிறந்த பூமி, நாங்கள் மண்ணின் மைந்தர்கள்’ என்று உரக்கப் பேசியே பிழைப்பு நடத்தும் பல சகோதர/சகோதரிகள் கையில் இப்போது கிடைத்திருப்பது மனுநீதி என்கிற காணக்கிடைக்காத கறையான் அரித்த புத்தகம்.

  தொலைக்காட்சிக் காமெடிகள் :

  ‘அம்பேத்கர் இந்து மதத்தை வெறுத்து புத்த மதத்தில் சேர்ந்தார் என்கிறார்களே. இலங்கையில் அப்படிப்பட்ட மதத்தினரால் தமிழன் அழிக்கப்படுகிறானா’ என்று எவனாவது கேட்டால் பதில் இருக்கிறது — இலங்கையில் இந்துத்வா.

  ‘ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் நாங்கள் தலைதூக்கி நடந்தோம். அதனால் சுதந்திரம் தேவையில்லை என்று ஈ.வே.ரா முழங்கினாராமே. பிறகு அன்னிய முதலீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்’ என்று கேட்டால் உடனே பதில் வரும் – இது பார்ப்பனர்களின் சதி.

  சபாஷ், சரியான போட்டி.

  கோபாலன்

 19. ஈ வெ ரா பெரியார் இன்று இந்த நிகழ்வின் மூலம் முழு இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளார். அம்பேத்காரையும் ஈவெரா பெரியாரையும் கேட்டால் சிலருக்கு ஏன் இத்தனை உதறல் எடுக்கிறது என்பதுதான் விளங்கவில்லை. 🙂

 20. //அம்பேத்காரையும் ஈவெரா பெரியாரையும் கேட்டால் சிலருக்கு ஏன் இத்தனை உதறல் எடுக்கிறது….//

  ஆமாமாம் ! இவர்கள் ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் வைத்து பூஜை செய்யப்படுபவர்கள் ஆயிற்றே !!

 21. ///////ஈ வெ ரா பெரியார் இன்று இந்த நிகழ்வின் மூலம் முழு இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளார். /////

  பெங்களூரில் போலி Stamp paper ஐ பிரிண்ட் செய்து விற்று கோடி கொடியாக சம்பாதித்த ஒரு முஸ்லிம் (பெயர்:– அப்துல் கரீம் டெல்கி ) கூடத்தான் இந்தியா பூராவும் பிரபலமானான் அதுஅவனுக்கு ஒரு பெருமையா? இல்லையென்றால் அது போலதான் மேலே நீர் சொன்னதும்.

  கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று யாரை சொன்னார் என்று நீர் நினைத்து கொண்டீர்? இந்து கடவுளை மட்டும்தான் என்றா? அல்லாவை கற்பித்தவன் (அதாவது நபி) ஒரு அடிமடையன் என்றும் அது பொருள்படும் என்பது உமக்கு புரியவில்லையா? இப்போது அவர் பெயரை கேட்டால் உமக்கும் உதறல் எடுக்குமே!

 22. @suvanappiriyan
  ” அம்பேத்காரையும் ஈவெரா பெரியாரையும் கேட்டால் சிலருக்கு ஏன் இத்தனை உதறல் எடுக்கிறது என்பதுதான் விளங்கவில்லை”
  So you are back from your beloved Saudi. How is the bombing of Oman going? Or is that an Israeli conspiracy also? Sunnis killing Shites in Pakistan must be an Israeli conspiracy.
  EVR was an atheist. As per him,anyone who believes in God, like yourself, is a fool. So, why are you, a Allah fearing Islamist, be a side kick to an atheist?

 23. //அந்த விதியை மீறியதற்கு தான் இந்த தடையப்பா.புரியுதா? ///

  The procedure is to issue show cause notice first. To ban or not will be decided based on the reply and other material evidences available to the examining Committee. If the first act itself was to ban, it was the IIT which had violated the procedures. They wanted to play chamchagiri to MHRD.
  If the central government takes suo motu action on an anonymous petition w/o knowing the motive and identity of the writer or writers, that too, within a few days, any terrorist will send an anonymous petition and make the government act against his enemies. Central Vigilance Commission has instructed all Government organisations not to act on any anonymous petition but to trash it at once. The reason for such decision is in the fear expressed above. Further, a lot of anonymous petitions are motivated on personal interest. Why to serve individuals – is the concern of CVC. If anonymous petition is acted upon with alacrity, it will embolden all miscreants.

  — Bala Sundara Vinayagam

 24. துலுக்கன் என்ற சொல் இங்கு ban பண்ணபடுகின்றது . விக்கியில் இருக்கும் பொது இங்கு என்ன பிரச்னை (செக்குலர்..!!!??)
  ref;
  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 25. //அம்பேத்காரையும் ஈவெரா பெரியாரையும் கேட்டால் சிலருக்கு ஏன் இத்தனை உதறல் எடுக்கிறது என்பதுதான் விளங்கவில்லை//

  ஈ வே ரா பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கிழ உள்ள லிங்க் ஐ படித்து அதற்கு பதில் முடிந்தால் சொல்லுங்கள். ( அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல என்ற புளித்துப் போன பதிலைத் தவிர )

  https://www.dinamalar.com/news_detail.asp?id=1266467

 26. ஹானஸ்ட் மேன்,

  பொதுவாக உணர்வு ரீதியாக வரும் பதில்களை நான் கண்டுகொள்வதில்லை. உணர்ச்சி பொங்கும்போது தர்க்கம் செய்வதில் பயனில்லை என்பது நான் அனுபவத்தில் கண்டது.

  முடிந்தால் ஒன்றை மட்டும் யோசியுங்கள் – ஐஐடியின் பெயரைப் பயன்படுத்தி விதியை மீறினார்கள் என்றா மொட்டைக் கடிதாசியில் புகார் வந்தது? மனித வளத்துறை ஒரு மொட்டைக் கடிதாசுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும்போது ஏதோ ஒரு சாக்கைப் பயன்படுத்தி அதை தடை செய்ய வேண்டும் என்று ஐஐடி நிர்வாகம் களத்தில் இறங்கி இருக்கிறது என்பது உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா? அப்படி இல்லாவிட்டால் ஒரு வருஷமாக இந்த விதிமீறலை கண்டு கொள்ளாமல் இருக்குமா? இல்லை இதே போன்ற விதிமீறலை செய்திருக்கும் விவேகானந்தர் வட்டத்துக்கு (பிற வட்டங்களும் இருக்கலாம் என்றே யூகிக்கிறேன்) தடை விதிக்காமல் இருக்குமா?

 27. ஹானஸ்ட் மேன்!

  //பெங்களூரில் போலி Stamp paper ஐ பிரிண்ட் செய்து விற்று கோடி கொடியாக சம்பாதித்த ஒரு முஸ்லிம் (பெயர்:– அப்துல் கரீம் டெல்கி ) கூடத்தான் இந்தியா பூராவும் பிரபலமானான் அதுஅவனுக்கு ஒரு பெருமையா? இல்லையென்றால் அது போலதான் மேலே நீர் சொன்னதும்.//

  அப்துல் கரீம் டெல்கி இஸ்லாத்தை முழுமையாக பின் பற்றவில்லை. அவ்வாறு பின் பற்றியிருந்தால் தேசத் துரோகக் குற்றங்களை செய்திருக்க மாட்டான். தவறுகள் செய்து இன்று சிறைக்குள்ளும் இருக்க மாட்டான்.

  ஆனால்… பெரியார் இவ்வாறு பிரபலமடையவில்லை. பெரியாரின் பிரசாரத்தால் இன்று தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் அரசு உத்தியோகங்களை ஓரளவாவது எட்டிப் பிடிக்க வைக்கிறது. பெரியாரின் தீண்டாமைக்கு எதிரான பிரசாரம், மேல் சாதி ஆதிக்க பிரசாரம் போன்ற சாதனையானது அவரளவில் இமாலய சாதனையே… அவர் இட்ட கருத்துகள் இன்று வேர் விட்டு விருட்சமாகி அகில இந்தியாவையும் எட்டிப் பிடிக்க வைத்துள்ளது.

 28. புண்ணிய பூமி savoodhiyil, இரண்டுமசூதியில் நடந்த குண்டு வெடிப்பு மகிழ்ச்சி adankumunnare, ஹூரி piriyarukku, மகிழ்ச்சியை adhikapadutthukiradhu. ஈ வே ரா , காட்டுமிராண்டி என்று sonnadhu, ஹூரி பிரியரை பார்த்துதானா?

 29. @RV
  When there is evidence staring in your face, as in this instance where the Periyar group have misused the IIT name, what is the point of asking for a show cause notice? Do you want it to drag on like a civil case in Indian courts? Yes, the Dean of IIT should have banned this group a year ago. Better late than never. What is the young boy doing there? What has he got to with IIT?
  Hate speech against a particular caste is punishable by law. Why the police are not taking any action against the Periyar group for the hate speech and propaganda against the Brahmin community? If some Hindus make a declaration saying that this place will be a cemetery for the Muslims/Christians, do you think the police will be sitting on their bottom and do nothing?

 30. சுவனா மறுபடியும் இந்துமத தாக்குதலை ஆரம்பிச்சிட்டீங்களா தாக்குதல் இங்கே நடக்கும்போது பதிலை மட்டும் பதிவா போட்டுட்டீங்க.. வர வர உங்களிடமிருந்து துவேஷ கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன சற்றே நிதானியுங்கள்
  இஸ்லாமியர்களிடையே எத்தனை பிரிவுகள் என்பது உங்களுக்கு தெரியாதா அதில் வேறு பிரிவினருக்கு பெண் கொடுக்க எடுக்க மாட்டார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாதா. சவுதியில உங்க தோள்ள ஓரிரு முறை சவுத்திக்காரன் கைபோட்டு பேசினா உடனே அவனும் நீங்களும் ஒண்ணுன்னு ஆய்டுமா ? மதரீதியா அவனுகளுக்கு மட்டும் கிடைக்கும் சலுகைகளை பற்றி அறியாதவரா நீங்க.. பிரியாணிக்குள்ளே அண்டாவையே மறைக்கிறீன்களே பாய்

 31. //ஏதோ ஒரு சாக்கைப் பயன்படுத்தி அதை தடை செய்ய வேண்டும் என்று ஐஐடி நிர்வாகம் களத்தில் இறங்கி இருக்கிறது என்பது உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா? //

  and today dinamani headline says;
  கல்லூரி நிர்வாகம் விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியதையும், விளக்கம் வரும் வரை தாற்காலிகமாக அனுமதி நிறுத்தப்பட்டிருப்பதையும், ஏதோ கருத்துச் சுதந்திரத்துக்குப் போடப்படும் தடை என்பதுபோல பிரச்னையைத் திசை திருப்பி, அதை அரசியலாக்க முயல்வது, அவலை நினைத்து உரலை இடிக்கும் பேதைமை. ஊடகங்களுக்கு அடுத்தப் பிரச்னை கிடைத்துவிட்டால் இதைக் கை கழுவி விடும். அதுவரை, நேரம் போகாமல் தவிக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்குப் பொழுதுபோகும், அவ்வளவே!

 32. பிரச்னை என்ன என்று புரியலாமல் பல பின்னூட்டம் . மாகி நூடுல்ஸ் ஆல் வந்த வினை போல .

 33. அன்பின் ஆர் வி

  \\\ ஏறக்குறைய சமமான விதிமீறலுக்கு ஒரு அமைப்பை மட்டும் தடை செய்யும் ஐஐடி நிர்வாகமும் சரி, மொட்டைக் கடிதாசுக்கு இத்தனை promptஆக நடவடிக்கை எடுக்கும் மனித வளத்துறையும் சரி, புல்லரிக்க வைக்கிறார்கள். மோடிக்கு எதிரிகளே வேண்டாம், இந்த மாதிரி “நலம்விரும்பிகளே” போதும்… \\

  தடை தடை என்று பேசப்படுகிறதே. ஐ ஐ டி தரப்பிலிருந்து ban செய்யப்பட்டதாகச் சொல்லப்படவில்லையே. Derecognise செய்யப்பட்டதாகவும் அந்த வித்யார்த்திகள் அமைப்பிடமிருந்து காரணம் கேழ்க்கப்பட்டுள்ளதாகவுமே டிவியில் ஐ ஐ டி யின் spokesman பேசியிருக்கிறார்.

  விவேகானந்தர் ஸ்டடி சர்க்கிள் இப்படியே ஐ ஐ டி பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்களா? அப்படிப் பயன் படுத்தியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்………. என்றால்…….. சொதப்பல் தான்.

  மோதி சர்க்கார் தரப்பிலிருந்து இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய perception flaw.

  வேலியில் போகும் ஓணானை மடியில் எடுத்து விட்டு கொடையறதே கொடையறதே என்றால்…….

  இது சம்பந்தமான அ.நீ யின் ஸ்வராஜ்யா வ்யாசம் தவிர ……………. இண்டியா ஃபேக்ட்ஸில் ஸ்ரீமதி ராதா ராஜனின் வ்யாசமும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு வ்யாசம்.

  ஐ ஐ டியின் ப்ரதானமான படிப்புகள் பொறியியல் சார்ந்தவையே. இதில் Department of Humanities and Social Sciences என்ற ஒரு விபாகத்தின் மூலமாக …….. இந்த ஒட்டு மொத்த ஸ்தாபனத்தை நாசம் செய்ய முந்தைய காங்க்ரஸ் சர்க்கார் …………….. ஜெ என் யூ டைப் இடதுசாரிகள் இவாஞ்சலிஸ்ட்ஸ் இத்யாதி ஒரு கும்பலை இங்கு நுழைத்து கபளீகரம் செய்திருக்கிறது. ராதாராஜன் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கிறார். இந்த ஸ்தாபனத்தை பச்சீப்பாஸ் காலேஜ் ப்ரெஸிடென்ஸி காலேஜ் சட்டக்கல்லூரி போல பாழ் செய்ய இது ஒரு முனைப்பு.

  பார்ப்பன ……. ஃபாஸிஸ ……… ப்ளா ப்ளா கூச்சல் மாதிரி ……….

  ஒட்டு மொத்தமா ஜே என் யூ கும்பல் அல்லது க்றைஸ்தவ அல்லது இஸ்லாமிய பேராசிரியர் கும்பலை stereotype செய்வது தப்பு தான் ஒப்புக்கொள்கிறேன்.

  ஆனால் ஹிந்துஸ்தானமளாவி இந்த இடதுசாரி கும்பல்கள், …… ஆப்ரஹாமிய ***மதவாத சார்புடைய*** கும்பல்களுடன் கைகோர்த்து………..இது போன்ற விபாகங்களில் நுழைந்து ……….. இங்கு முறையாக நடக்க வேண்டிய ஆராய்ச்சிகளை ஒட்டு மொத்தமாக சிகப்பு சாயம் பூசி …………. அல்லது சரித்ரத்தை integrated approach என்ற படிக்கு புரிந்து கொள்ளுதல் என்ற பெயரில் ஆப்ரஹாமிய மதச்சாயம் பூச விழைதல் அல்லது தேசியக்கூறுகள் என்பது ஒட்டுமொத்தமாக சாரமில்லாத சமாசாரங்கள் என்ற படிக்கு தேசித்தை இழிவு செய்தல் ……….. இத்யாதி செயல்பாடுகளால்………….ஒரு கார்டல் போல தங்களை வடிவமைத்துக்கொண்டு செய்து வரும் அட்டகாசம் அடக்கப்பட வேண்டியதே.

  இதில் உள்ள களைகளை (பயிர்களை அல்ல) வேருடன் பிடுங்கி எறிய ஹிந்துத்வ சார்புடைய பயிர்கள் இது போன்ற விபாகங்களில் பயிரிடப்பட வேண்டும். ஆனால் ஹிந்துத்வ சார்பினரில் ஒட்டு மொத்தமும் பயிராகத் தான் இருக்குமா? அதில் களை இருக்காதா என்று கேழ்க்கலாம் தான். ஆனாலும் இது செய்யப்பட வேண்டிய ஒன்று தான்.

  சர்க்கார் ஆரம்பித்து இது வரை …………இந்த இடது சாரி………… மதவாத சார்புடைய ஆப்ரஹாமிய………. அறிவு சீவிகளை ………….. சர்க்கார் தரப்பிலிருந்தோ …………அல்லது ஹிந்துத்வ இயக்கங்களின் தரப்பிலிருந்தோ …………… திட்டமிட்ட ரீதியில்………. ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும்…………. மாற்றுத் தரப்பின் தசாப்தங்கள் அளாவிய ஆக்ரமிப்பை கறுவருக்கும் செயல்பாடு இதுவரை காணப்படவில்லை என்பது என் புரிதல்.

  ஸ்ரீ ம.வெ அவர்களது வ்யாசத்தில்………… சர்க்கார் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களில் நீங்கள் சொல்லும் வாதங்கள் சரி. ஆனால் அது வ்யாசத்தின் ஒரு கூறு மட்டிலும் தான். வ்யாசம் பேசும் மற்ற பல விஷயங்கள் நிதர்சனத்தை வெளிச்சம் போட்டுக்காண்பிக்கின்றன. அது தேவையானதும் கூட.

  ஹிந்துயிஸத்தை ஒழிப்போம் என்று ஒரு வித்யார்த்தி அமைப்பு பொது மன்றில் பேசுவது எப்படி பேச்சுரிமை ஆகும். அப்படி அது பேச்சுரிமை ஆகும் என்றால்………… இஸ்லாத்தை ஒழிக்க க்றைஸ்தவத்தை ஒழிக்க என்று உதிரி ஹிந்து இயக்கங்கள் இதே கேம்பஸில் தலையெடுத்தால்……….. அதை பேச்சுரிமை என்று எவரும் ஒதுக்கிவிட்டு போய்விட மாட்டார்கள்.

 34. திரு RV

  நீங்கள் சொல்வது அத்தனையும் சரியான வாதங்களே.

  APSC பின்னால் ஒரு சில மோசமான கும்பல்கள் இயங்கி ஔர்ங்கசீபால் முடியாததை செய்து முடிக்க வேண்டும் என்று துடித்துகொண்டிருக்கின்றாகள் என்றெல்லாம் என் போன்றவர்கள் சொல்வது ஒரு சிறு பிள்ளைத்தனம். அரசு கல்லூரிகளை, சட்டக் கல்லூரிகளை எல்லாம் துவைத்துப் போட்டாகி விட்டது. இனி IIT, IIM போன்ற நிஜமாகவே திறமைக்கு மட்டுமே இடம் உள்ள கல்வி நிறுவனங்களை முடக்கி விட்டால் பின் நம் ஆட்சிதான் என்று சில பேர் நினைப்பது – என்பதெல்லாம் என் கற்பனை.

  சரி திரு வெங்கடேசன் அவர்கள் போட்ட படங்கள் ஒன்றில் ஒரு சிறுவன் கோஷம் போடுகிறான். பார்த்தீர்களா ?
  அதைவிட மோசம் அவருடைய முகநூல் பக்கத்தில் போட்ட போடோவினில் ஒரு சிறுமி பங்கேற்கிறாள்.

  லிங்க் இதோ
  https://www.facebook.com/mave.mv.5/posts/674985802635730?pnref=story

  இதைப் பத்தியெல்லாம் உங்களுக்கென்ன கவலை. HRD தவறாக நடந்து கொண்டுவிட்டது. அவ்வளவுதான். நிம்மதியாக இருங்கள்.

 35. திரு.ஆர்.வி. அவர்களின் கருத்துடன் நான் உடன்படுகின்றேன். இந்தி பற்றி யும், அது இந்தநாட்டின் ஆட்சி மொழி ஆவது பற்றியும் தமிழ் இந்துவின் கருத்து என்ன?

 36. ஆர்வி அவர்களே, இந்து மதத்தை அழிப்போம் என்று சூளுரைக்கும் கும்பல் நாடு ரோட்டில் நின்று கூவட்டும். மக்கள் நையப்புடைப்பார்கள். ஐ ஐ டி என்பது ஒரு கல்விக்கூடம். அதன் உள்ளே சென்று, ஒரு மதத்தினரையோ, அல்லது ஒரு சாதியினரையோ அழிப்பேன் என்று கூறுவது , அந்த நிலையத்தின் அன்றாட செயல்பாடுகளை நிச்சயம் பாதிக்கும் விஷயம் ஆகும். கல்வி நிலையங்களுக்குள் மத ஜாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் செயல்களை செய்த கும்பல்களை தடை செய்வது அவசியம். இப்படிப்பட்ட போக்குகளை வளரவிட்டால், இந்தியாவும் மத்திய ஆசிய நாடுகளைப் போல தினசரி வன்முறைக் களஞ்சியம் ஆகிவிடும். ஐ ஐ டி யில் அறிவியல் புலங்களை தவிர , HUMANITIES ,ART – ஆகிய வகுப்புக்களை ஆரம்பித்தது ஒரு ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன்னர் தான். அப்போதே ஐ ஐடி க்குள் நச்சு நுழைந்து விட்டது என்று அனைவரும் கருதினார்கள். பெரியார் வெள்ளையனின் செருப்பை துடைத்து வாழ்வதை கௌரவமாக கருதியவர். அம்பேத்காரோ அன்னியரை வெளியேற்ற ஆதரவு கொடுத்தவர். இருவரையும் இணைத்து ஒரு படிப்பு மையம் என்று சொன்னாலே , இதனை வீரமணியும் , பல கேடுகெட்ட தீய சக்திகளின் கூட்டுறவும் , சம்பந்தப்பட்டு இருக்கிறது என்பது புலனாகிறது. இந்துமதத்தை அழிப்போம் என்று சொல்வோரை நீதிமன்றத்தை அணுகி , சிறையில் தள்ளவேண்டும்.

 37. பிரச்சினை ஏதும் வேண்டாம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பீகாரில் உள்ள ஆனந்த் குமார் மாதிரி 40அல்லது50தலித் மாணவர்களை iit பரிட்சைக்கு தயார் பண்ணலாம் பெரியாரின் சொத்துகளை எல்லாம் கொடுத்து அமெரிக்க போன்ற nadugaluku anupalam. Iduthan dalithkalin unmayana valarchi

 38. ராமா,
  // Yes, the Dean of IIT should have banned this group a year ago. Better late than never. // எதற்காக தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்? இந்த டெக்னிகல் விதிமீறலுக்கா? இல்லை அவர்கள் கருத்துகளுக்கா? நிர்வாகம் டெக்னிகல் விதிமீறலுக்காகத்தான் தடை செய்திருக்கிறது, கருத்துகளுக்காக இல்லை. விவேகானந்தர் பெயர் இருந்தால் இதே டெக்னிகல் விதிமீறலைக் கண்டு கொள்ள வேண்டியதில்லையா?

  க்ருஷ்ணகுமார், // Derecognise செய்யப்பட்டதாகவும் // உண்மை; தற்காலிகத் தடை என்றுதான் எழுத வேண்டும். என் பின்னூட்டங்கள் அத்தனை precise ஆக இருப்பதில்லை.
  // ஹிந்துயிஸத்தை ஒழிப்போம் என்று ஒரு வித்யார்த்தி அமைப்பு பொது மன்றில் பேசுவது எப்படி பேச்சுரிமை ஆகும். அப்படி அது பேச்சுரிமை ஆகும் என்றால்………… இஸ்லாத்தை ஒழிக்க க்றைஸ்தவத்தை ஒழிக்க என்று உதிரி ஹிந்து இயக்கங்கள் இதே கேம்பஸில் தலையெடுத்தால்……….. அதை பேச்சுரிமை என்று எவரும் ஒதுக்கிவிட்டு போய்விட மாட்டார்கள். // இரண்டுமே பேச்சுரிமைதான். இஸ்லாமிய, கிறிஸ்துவ, “முற்போக்கு” இயக்கங்கள் இஸ்லாமை ஒழிப்போம் என்பது பேச்சுரிமை என்பதை ஏற்பதில்லை. ஹிந்த்துவர்கள் ஹிந்துயிசத்தை ஒழிப்போம் என்பதை பேச்சுரிமை என்று ஏற்பதில்லை. 🙂 நான் கட்டற்ற கருத்து சுதந்திரம் என்று வினவு தளத்திலும் கத்தி நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். இங்கும் கொஞ்சம். 🙂

  இங்கே பலரும் இந்த அமைப்பை கருத்துகளுக்காக தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிர்வாகமும் மனித வளத்துறையின் (மிக மெல்லிய) அழுத்தத்தால் என்னவோ ஒரு டெக்னிகல் விதிமீறலை தேடிக் கண்டுபிடித்து அவசர அவசரமாக முட்டாள்தனமாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். அந்த முடிவுக்கு என்ன சப்பைக்கட்டு காரணம் இருந்தால் என்ன நமக்கு வேண்டியது நடந்தால் சரி என்றே இங்கே பலரும் அந்த முடிவை ஆதரிக்கிறீர்கள். தெரியாமல்தான் கேட்கிறேன், இதே டெக்னிகல் விதிமீறலைப் புரிந்திருக்கும் விவேகானந்தர் வட்டத்தைப் பற்றி ஏன் உங்களில் ஒருவருக்குக் கூட அம்பேத்கர் வட்டத்தில் மீது இருக்கும் கோபத்தில் ஒரு சதவிகிதம் கூட வரவில்லை? அம்பேத்கர் வட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவதற்குக் காரணம் இந்த விதிமீறல்தான் என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா? இன்று இதை ஆதரித்தால் நாளை வேறு அரசு வந்து இதே போல வேறு ஒரு சப்பைக்கட்டு காரணத்தைச் சொல்லி ஒரு சவர்க்கார் வட்டத்தை தடை செய்யக் கூடும் என்பது உங்களுக்கெல்லாம் புரியவே இல்லையா?

  இந்த விஷயத்தில் முக்கியக் குற்றவாளியாக நான் கருதுவது ஐஐடி நிர்வாகத்தையே. மனித வளத்துறை கொடுத்த மெல்லிய அழுத்தத்துக்கே ஐஐடி நிர்வாகத்தினர் இத்தனை தூரம் வளைகிறார்கள் என்றால் குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியில் ஜெயலலிதாவுக்கு கோவிலே கட்டிவிடுவார்கள்.

 39. வெகுஜன ஊடகங்கள் கதை வசனம் திரைக்கதை எழுதி மக்களை இருட்டில் வைத்திருந்த காலம் மலை ஏறி ரொம்ப நாளாகிறது.
  இன்னமும் சிலர் பொய்களை நாகரிகமாக சொல்லி மக்களை குழப்பலாம் என்று எண்ணுவது வேடிக்கை தான்.
  தமிழ் நாட்டில் யாரும் விமர்சிக்க பயந்த ” ஆளுமை” இயக்கம் , அதன் ” தந்தை’ இமேஜ் இந்த “படிப்பு வட்ட ” கூட்டத்தின் புண்ணியத்தில் இந்திய அளவில் சிரிப்பாய் சிரிக்கிறது.

  இவர்கள் சாதித்தது அது தான். இது ஒரு புறம்.

  எல்லோரும் சொல்வது போல சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் நுட்பம் அல்லாத துறை ஒன்றை ஆரம்பித்தது அப்போதைய காங்கிரஸ் ஆட்சி. தொலை நோக்குப் பார்வையுடன் அழிவு வேலைகளை செய்ய இவர்களுக்கு வெளிநாட்டு திட்டம் மற்றும் உதவி கிடைக்கிறது.

  இன்றைக்கு விதைக்கும் பார்த்தீனியம் விஷச்செடி பத்து வருடங்கள் கழித்துப் பலன் கொடுக்கும் . என்று தெரிந்து திட்டமிட்டு செய்யப் படும் வேலைகள் இன்னும் எத்தனையோ? இப்படி எதனை கண்ணி வெடிகளோ நாடு முழுக்க ?

  புதிய தெம்பு வந்த உதிரிகள் புதுச்சேரியில் அம்மன் சிலை ஒன்றின் மீது கால் வைத்து சிரித்தபடி காட்சி கொடுக்கும் படம் ஒன்று வெளியாகி உள்ளது.
  மீண்டும் செருப்பு மாலை , துடைப்பம் உத்திகள் கையில் எடுக்கப்படுகின்றன.

  மாநில அரசுக்கு கேட்க மனமில்லை . உதிரிகள் வேண்டப் பட்டவர்கள்.

  திட்டமிட்டு நாடு முழுக்க வேலை செய்யும் உதிரிகள் கலவரத்தைத் தூண்டப் பார்க்கிறார்கள் என்பதும் தெளிவு. மத்திய அரசு ஊடகங்களிடம் நல்ல பெயர் வாங்கும் வேண்டாத என்ணத்தை விட்டு விட்டு பிரிவினை வாதிகளை அடக்க வேண்டும்.

 40. சுபி அவர்கள் அண்டா என்ன யானையையே மறைப்பார். அப்போது தானே மத மோசடி வியாபாரம் செய்யமுடியும்.

 41. Both APSG and Vivekanda SG should be driven out of IIT campus. Otherwise, both should be allowed and given equal treatment. I would prefer the first act.

  Other option is to send IIT out of TN. It is no use to TN. Why to TN people should give subsidised land and power, water etc to this Insitutute when they don’t get any returns from it?

 42. ர்க்கார் ஆரம்பித்து இது வரை …………இந்த இடது சாரி………… மதவாத சார்புடைய ஆப்ரஹாமிய………. அறிவு சீவிகளை ………….. சர்க்கார் தரப்பிலிருந்தோ …………அல்லது ஹிந்துத்வ இயக்கங்களின் தரப்பிலிருந்தோ …………… திட்டமிட்ட ரீதியில்………. ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும்…………. மாற்றுத் தரப்பின் தசாப்தங்கள் அளாவிய ஆக்ரமிப்பை கறுவருக்கும் செயல்பாடு இதுவரை காணப்படவில்லை என்பது என் புரிதல்.//

  You are in the habit of writing with a lot of dots in between. It gives the impression that the Tamilhindu.com editors have edited many sentences or words from your message. What’s the truth? Have they edited your messages very much ?

 43. அன்பின் ஆர் வி

  \\ இஸ்லாமிய, கிறிஸ்துவ, “முற்போக்கு” இயக்கங்கள் இஸ்லாமை ஒழிப்போம் என்பது பேச்சுரிமை என்பதை ஏற்பதில்லை. ஹிந்த்துவர்கள் ஹிந்துயிசத்தை ஒழிப்போம் என்பதை பேச்சுரிமை என்று ஏற்பதில்லை. 🙂 \\

  ம்ஹும்……….. இஸ்லாமிய க்றைஸ்தவ ******முற்போக்கு இயக்கங்கள்**** ஆப்ரஹாமியத்தை ஒழிப்போம் என்பதை பேச்சுரிமையாக ஏற்கமாட்டார்கள். ஆனால் அதே சமயம் *****ஹிந்துயிஸத்தை ஒழிப்போம்**** என்பதை மட்டிலும் பேச்சுரிமை என்று ஆகாத்யம் செய்வார்கள்.

  ஐ ஐ டி போன்ற ஸ்தாபனம் அறிவார்ந்த பொறியியல் சாதனைகளைச் செய்ய வேண்டிய வித்யார்த்திகளை தயார் செய்ய வேண்டிய ஸ்தாபனம்.

  இங்கே இப்படி HSS போன்ற விபாகத்தை நுழைத்து குழப்படி செய்ததே இந்த ஸ்தாபனத்தின் முக்யமான நோக்கத்தை சிதைத்து இந்த ஸ்தாபனத்தை மதறாஸின் பச்சீப்பாஸ், presidency college லெவலுக்கு சிதைப்பதற்குத் தான்.

  இந்த வித்யார்த்திகள் இயக்கம் நிச்சயமாக இயங்கட்டும். ஐ ஐ டியில் இல்லை. இந்த டிபார்ட்மெண்டையே கூண்டோட தூக்கி பச்சீப்பாஸுக்கோ மானிலக்கல்லூரிக்கோ மாற்றி விட்டால் இன்னமும் உக்ரமாக நிறைய புரட்சி செய்யலாம்.

  தமிழகத்தில் ரொம்ப நாளாக உரக்க முழக்கம் போட்டு ………..கூச்சல் போட்டு……எவ்வளவு நாளாகி விட்டது. களம் கண்டே பழக்கமாயிப் போன தீராவிடத் தமிழ் உடன் பிறப்புகளுக்கும் பொழுது போக வேண்டாமா. ஃப்ளெக்ஸ் தட்டி ………ஏந்தி பஸ்ஸை மறித்து ………… வாயில் நுரை தள்ள ஆரியம் த்ராவிடம் என்று கூச்சல் போட்டு……….

  Brand JNU should be Brand JNU. Brand Delhi College of Engineering is different from Brand JNU. Effor to convert DCE into sort of JNU sahll be resisted. So to convert Madras IIT into sort of pachippaas. Let Pseudo Science departments like Humanities continue in some other campus. And let this Student Body flourish somewhere else and leave Madras IIT for good. A place for everything and everything in its place.

 44. இன்று சென்னை ஐஐடி நிர்வாகம் பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. எந்த நீதியும் போராட்டத்தின் மூலம் நிலை நிறுத்த முடியும் என்று இந்நிகழ்வு நிரூபித்தள்ளது.

  வாழ்த்துக்கள் மாணவர்களே!

 45. //ஈ வெ ரா பெரியார் இன்று இந்த நிகழ்வின் மூலம் முழு இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளார். அம்பேத்காரையும் ஈவெரா பெரியாரையும் கேட்டால் சிலருக்கு ஏன் இத்தனை உதறல் எடுக்கிறது என்பதுதான் விளங்கவில்லை. //

  அம்பேத்கார் சிலை இருக்ககூடாது என்று தலித்களை மிரட்டி அடக்கி ஒடுக்கி அதை எடுக்கவைத்த முஸ்லிம்கல் இன்றைய பேச்சை பாருங்கள் ..

 46. அகற்றப்பட்ட அதே இடத்தில் அம்பேத்கார் சிலையை நிறுவ வேண்டும்- வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  கடலூர் மாவட்டம், பழையபட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அதே இடத்திலேயே டாக்டர் அம்பேத்கரின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றவர்கள் கைது என்று தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பழையபட்டினம் கிராமத்திற்கு விசாரித்தனர்.
  அப்போது அந்த கிராம மக்கள் தெரிவித்த விவரங்கள் வருமாறு: –
  பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வந்தாலும், தலித் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு கிராமத்தின் பொது இடத்தில்- நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ள இடத்தில்- அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
  அதுவரை பொதுமையாக இருந்த ஒரு தரப்பினர் (முஸ்லிம்கள்) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும், அந்த சிலையை அகற்ற வேண்டும் என்றும் குரல் எழுப்பி வந் தனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டது.
  மேலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்த அந்த சமூக மக்கள், அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்றும் கூறவே, அவரும் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க சம்மதம் தெரிவித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தார். இது எங்கள் தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
  இதையடுத்து, எந்த தரப்பிற்கும் இடையூறு இன்றி பொது இடத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தையும் வாலிபர் சங்கம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து போராட்டத்தை நடத்தியது. இதற்கு அந்த கிராம மக்களும் ழுழு ஆதரவும் தெரிவித்தனர்.
  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற வாலிபர் சங்கத்தினர் 200 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்தனர். மேலும் ஏராளமான காவல்துறையினரை குவித்து பதட்டத்தை ஏற்படுத்தியதோடு கிராமத்திற்குள் யாரையும் நுழைய விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
  இதற்கிடையில் அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்கான முயற்சியில் காவல்துறையும், வருவாய்த் துறையும் ஈடுபட்டு வந்தது. இதனால் வாலிபர் சங்கத்தின் பழையபட்டினம் கிளைச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த வழக்கில் அம்பேத்கர் சிலை யை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
  இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசி தரன் ஆகியோர் 2010 ஜனவரி மாதம் 20ம் தேதி வரை தடை ஆணையை பிறப்பித்தனர். இதனை அறிந்த காவல்துறையும், வருவாய்த்துறையும் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி நள்ளிரவில் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி சிலையை அகற்றி, தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை சமப்படுத்தி அம்பேத்கர் சிலையை நிறுவிவிட்டுச் சென்றனர்.
  இந்த சம்பவத்தின் போது பழையபட்டினம் கிராமத்திற்குச் சென்று தலித் மக்களை வீட்டிலிருந்து வெளியே வர விடாமல் காவல் துறையினரை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  காவல்துறையினரின் இந்த அராஜகச் செயல் தலித் மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் பல கட்ட சாட்சியங்களை விசாரணை செய்தது. பின்னர் குழு ஒன்றையும் அமைத்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் விஜயன் தலைமையில் 5 வழக்கறிஞர்கள் பழையபட்டினம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
  இந்த வழக்கிற்காக கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 2 முறை சென்னை சென்று சாட்சி யம் கூறினார்கள். இதேபோல் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் சாட்சியம் அளித்தனர்.
  இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் ஆகி யோர் வியாழனன்று தீர்ப்பளித்தனர். அதில் மிகப்பெரிய தலைவர்களின் சிலைகளை அவமதித்த காவல்துறை, வருவாய்த்துறையினரை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்றனர்.
  நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இரவு 11 மணிக்கு மேல் சிலையை அப்புறப்படுத்திய தையும் கண்டிக்கிறது. அம்பேத்கர் சிலையை ஏற்கனவே இருந்த பொது இடத்திலேயே மீண்டும் நிறுவ வேண்டும். பிப்ரவரி 20 இறுதிக்குள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறப்பு விழா நடத்த வேண்டும் என்றும், சிலையை அப்புறப்படுத்திய வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஊதியத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பிடித்தம் செய்து மனுதாரர் அமிர்தலிங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
  மனுதாரர் சார்பில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, தியாகு, புருஷோத்தன் ஆகியோர் ஆஜரானார்கள்.
  இந்த தீர்ப்பு குறித்து வாலிபர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் என்.அசோகன் கூறுகையில், இது வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் நீதி நியாயம் வென்றுள்ளது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பை தலித் மக்கள் வரவேற்றுள்ளதோடு வாலிபர் சங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

 47. //////அப்துல் கரீம் டெல்கி இஸ்லாத்தை முழுமையாக பின் பற்றவில்லை///// அவன் மட்டும்தானா? இந்தியாவிலுள்ள 99% முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஒழுங்காக பின்பற்றவில்லை.

  ஈவேரா தனது 85 வது பிறந்தநாளின்போது வெளியான மலரில் “”நமக்கு சமுதாய எதிர்களாக 4 கூட்டங்கள் உள்ளன. அவை 1 பார்ப்பனர்கள் 2 முஸ்லிம்கள் 3 கிறிஸ்தவர்கள் 4 தலித்துக்கள்”” என்று எழுதினார்.

  அதுமட்டுமா? ஒரு நாட்டுக்கு மைனாரிட்டிகளின் ஆதிக்கம் நல்லதல்ல அவர்களுக்கு சலுகைகள் அளிப்பது நாட்டுக்கு கேடு. (ஆதாரம்:- பெரியார் சிந்தனைகள் “மைனாரிட்டி சமுதாயம்” பக்கம் 46-48)

  எனது 3-6-2015 தேதியிட்ட மறுமொழியின் 3 வது பாராவிற்கு பதிலை காணோம். Choice ல் அதை விட்டுவிட்டார் போலும். தலித்துக்களை பற்றி பேசும்போது கூடவே கொசுறு போல எதற்கு சிருப்பன்மையினரையும் செர்த்துகொல்கிறீர்கள்?. நீங்கள்தான் 800 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட பரமபரையாச்சே! ஆனால் பாவப்பட்ட தலித்துக்களோ ஆளப்பட்ட அடிமை பரம்பரை. அவர்களுக்கு சலுகை கொடுப்பதில் நியாயமிருக்கு! நீதியிருக்கு. தர்மமிருக்கு. நாங்களும் ஆளபட்டவர்கல்தான் என்று நீர் கூறினால் அப்போது ஆண்டவர்கள்தான் யார்? வெளிநாட்டிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கல்தானே? அதாவது பாபர் போன்றவர்கள். வெளிநாட்டிலிருந்து வந்த அந்த அந்நியன் கட்டிய பாபர் மசூதியை (அதாவது அவமான் சின்னத்தை) நாம் சுதந்திரம் அடைந்தபிறகு இடித்து தள்ளினால் என்னவாம்? நீர் என்ன அந்நிய கைகூலியா?

 48. /எந்த நீதியும் போராட்டத்தின் மூலம் நிலை நிறுத்த முடியும் என்று இந்நிகழ்வு நிரூபித்தள்ளது.//

  ம். உங்களுக்கென்ன – APSC எந்தக் காலத்திலும் மற்ற மதங்களில் உள்ள குற்றங்களை எடுத்து சொல்ல தைர்யம் வரபோவதே இல்லை. ஜமயுங்க சு பீ .

  சில வருடங்களுக்கு முன் கீழ் விஷார மக்கள் மேல் விஷார தாருல் இஸ்லாதிடமிருந்து விடுதலை பெற்றார்களே அப்போதும் இப்படித்தான் வாழ்த்து கூறி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 49. //இன்று சென்னை ஐஐடி நிர்வாகம் பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது//

  கல்லூரி நிர்வாகம் விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியதையும், விளக்கம் வரும் வரை தாற்காலிகமாக அனுமதி நிறுத்தப்பட்டிருப்பதையும் முஸ்லிம்களால் எப்படி மாற்ற முடிகின்றது . ஒரு ஒரு முஸ்லிம் இடத்திலும் ராமசாமி , அம்பேத்கார் சிலை வைக்க பட வேண்டும் உடனடியாக

 50. \\ You are in the habit of writing with a lot of dots in between. It gives the impression that the Tamilhindu.com editors have edited many sentences or words from your message. \\

  இல்லை.

 51. (1)/////// I would prefer the first act/////// இதை நானும் ஆதரிக்கின்றேன். Technolgy படிக்கும் இடத்தில் பெரியார் அம்பேத்கர் விவேகனந்தர் எல்லாம் எதற்கு? அவர்கள் மூவரும் டிவி யை கண்டுபிடித்தார்களா? அல்லது gravity யை கண்டுபிடித்தார்களா? அல்லது computer ஐ கண்டுபிடித்தார்களா? அவற்றை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தவர்களின் பெயர்களில் study centre வைக்காமல் சம்பந்தமில்லாமல் யார் யார் பெயரிலோ சென்டர் வைத்துள்ளனர். இப்படி மாணவர்களிடத்தில் scientific attitude சிறிதும் இல்லாததால்தான் உலக தரவரிசையில் இந்தியா பல்கலை கழகங்கள் ஒன்றுகூட இடம் பெறவில்லை. அரசியலில் ஈடுபட்டு பெரிய ஆளாகவேண்டும் என்று நினைத்தால் வேறு ஏதேனும் course ஐ படித்துவிட்டு அரசியலில் குதித்து தொலைக்கலாமே! அரசியல்வாதிகள் (குறிப்பாக இடதுசாரிகள் மற்றும் சுயமரியாதை சுயம்புகள்) அப்பாவி மாணவர்களை கெடுத்து குட்டிசுவராக்குவதிலே குறிகோளாக உள்ளனர். அவர்களின் மாயவலையில் விவரம் புரியாத மாணவர்கள் விழுந்து மாட்டிகொள்கின்றனர்.

  (2) ///////.they don’t get any returns from it?///// நீர் என்ன returns எதிர்பார்கிறீர்கள்? இப்போது என்ன கிடைக்கவில்லை?

  (3) //////You are in the habit of writing with a lot of dots in between //// நான் கூட இதை அவரிடம் காரணம் என்னவென்று கேட்கவேண்டும் என நினைத்தேன். இது போல நீண்ட புள்ளிகள் வைத்து எழுதும்போது நமக்கு படிப்பதற்கே ரொம்ப கஷ்டமாக இருக்கு.

 52. ஐஐடியின் reinstatement அறிவிப்பை யாராவது படித்தீர்களா என்று தெரியவில்லை. மனித வளத்துறை விளக்கம் கேட்குமாம்; உடனே (டெக்னிகல்) விதிமீறல் என்று தற்காலிகத் தடையாம். மீறப்பட்ட விதியே தற்காலிகத் தடைக்கு அப்புறம்தான் உருவாக்கப்படுமாம்!

  ஒரு வருஷமாக அந்த விதிமீறல் நடக்கிறது, விவேகானந்தர் வட்டமும் அதே விதிமீறலைப் புரிந்தது என்று நிறைய எழுதி இருந்தேன். ஒரு வருஷமாக அப்படி ஒரு விதியே இல்லை, வி. வட்டம் எந்த விதிமீறலையும் புரியவில்லை, ஏன் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்போது கூட அப்படி ஒரு விதியே இல்லை! வி. வட்டம் புதிய விதியைக் கண்டதும் அதற்கேற்ப தன் அறிவிப்புகளை மாற்றிக் கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்.

  முதலில் தடை, அப்புறம் விதி என்று இயங்குபவர்களிடம் போய் முதலில் தடை அப்புறம் விசாரணை என்பது நியாயமற்ற செயல், விசாரணைக்குப் பிறகுதான் தண்டனை தரப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்வது கேனத்தனம்தான்…

 53. SP
  You are happy that this Ambedkar Periyar group was given a temporary stay from derecognition. This is because you are all for” free speech” even though this speech calls for genocide of Brahmins and annihilation of Hinduism. In other words, you are in agreement with this view. Let us be clear on this. You, as a true Islamic follower, are happy to see the total destruction of Hinduism. No more Taqya on this please as you have given your blessing to this group.Your concern for freedom of expression and rights stop when it comes to Islam. Can you clarify the following?Are you willing to support the cartoonist who drew the picture of Prophet Mohamad? Are you willing to openly support Tasilma Nasrin?
  Here is why Ambedkar thought of people like you who cannot live in harmony with Hindus. 95%Muslims voted for a separate independent country. Now that you have shown your true colours,”” How can we Hindus ever trust people like you in case there is war between India and Pakistan?”””
  Ambedkar
  “That the transfer of minorities is the only lasting remedy for communal peace is beyond doubt. .. there is no reason to suppose that what they did cannot be accomplished by Indians. After all, the population involved is inconsiderable and because some obstacles require to be removed, it would be the height of folly to give up so sure a way to communal peace… The only way to make Hindustan homogeneous is to arrange for exchange of population. Until that is done, it must be admitted that even with the creation of Pakistan, the problem of majority vs. minority will remain in Hindustan as before and will continue to produce disharmony in the body politic of Hindustan.”

 54. குல தெய்வம் வைத்து கூலி படை நடத்தும் கதைதான் !போலிஸ் பிடிததால் சாமி குத்தமாயிடும் ,என்று கூவும் கூத்துதான் !இந்து மதத்தை ஓழிக்க போகிறானுன்கலாம்.சர்வதேச சல்லிப்பயலுகலயே சாட்சி இல்லாம அடிச்ச மதம் ,உள்ளூர் சுள்லிப்பயலுங்க எம்மாத்திரம்?

 55. மும்பை ஷீரடியில் அம்பேத்கார் பாடலை செல்போனில் ரிங் டோனாக வைத்ததற்காக தலித் வாலிபர் சாகர் செஜ்வாலை மேல் சாதியைச் சேர்ந்த 8 பேர் அடித்தே கொன்றிருக்கின்றனர்.

  நர்ஷிங் மாணவர் சாஹர் ஷெஜ்வால் திருமண விழாவில் கலந்து கொள்ள கோவில் நகரமான ஷீரடிக்குசென்றுள்ளார். கடந்த 16ந் தேதி பிற்பகல் 1:30 மணிக்கு அவர் தமது உறவினர்கள் இரண்டு பேருடன் உள்ளூரில் உள்ள பீர் கடைக்கு சென்றுள்ளார். கடையில் நின்று கொண்டிருக்கும் போது சாகரின் செல்போன் ஒலித்துள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த சாகர் அம்பேத்காரை புகழ்ந்து பாடிய பாடலை ரிங் டோனாக வைத்துள்ளார். அந்த பாடல் ஒலித்ததைக் கேட்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த மேல் சாதி இளைஞர்கள் எட்டு பேருக்கும் கோபம் தலைக்கேறியது. அந்த இளைஞரை பீர் பாட்டில் உதவிபோடு கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் தங்கள் பைக்கில் ஏற்றி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்ககு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சாகரை அடித்து பைக்கiயும் வெறி கொண்டு ஏற்றி கொலை செய்துள்ளனர்.

  அன்று மாலை 6;30 மணிக்கு ரூய் கிராமம் அருகே சாகரின் உடல் நிர்வாணமாகக் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் காவல் துறைக்கு தெரிவித்தள்ளனர். 25 இடங்களில் சாகரின் உடலில் காயங்கள் இருந்துள்ளது. பீர் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் தாக்கிய அனைவரின் உருவங்களும் பதிந்துள்ளது.

  இந்த சம்பவம் தொடர்பாக மேல் சாதி மாணவர்கள் விஷால் கோடே, சோம்நாத், ரூபேஷ் வாதேகர், சுனில் ஜாதவ் ஆகியோரை கைது செய்தள்ளனர். மீதமுள்ள 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  தகவல் உதவி
  தி இந்து ஆங்கில நாளிதழ்
  22-05-2015

  இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறா? என்று அப்பாவியாகக் கேட்கும் சென்னி மலை, ராம் நிவாஸ், தமிழச்சி அய்யர், டாக்டர் அன்பு ராஜ் போன்றவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம். தலித் மக்களுக்கு நிரந்தர தீர்வை கொடுக்காமல் சென்ற அம்பேத்கார் இந்த நிகழ்வை கண்டிருந்தால் கண்ணீர் விட்டிருப்பார்.

  இந்து மத ஆர்வலர்கள் இதற்கு என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?

 56. ஒருவழியாக (IIT) பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்துள்ளது. ஆனால் வரும் நாட்களில் இதே மாதிரியான பிரச்சனைகள் தொடரப்போவதை தடுக்கவேண்டும் என்றால் ஒன்று இந்த மாதிரியான தலைவர்கள் பெயரில் தொடங்கும் வாசகர் வட்டங்களை மொத்தமாக தடை செய்யவேண்டும் அல்லது இந்த (HSS) படிப்பை வரும் ஆண்டிலிருந்து வேறு பல்கலைகழகங்களுக்கு மாற்ற வேண்டும். அரசியலை மாணவர்கள் மத்தியில் புகுத்திய எல்லா கல்விநிலையங்களும் தங்கள் பெயரை கெடுத்துக்கொண்டதை தான் நடைமுறையில் காண்கிறோம்.

  இந்த பெரியார்-அம்பேத்கர் வட்டம் தான் சமீபத்தில் ( Kissing and hugging at public place is a birth right ) என்ற நிகழ்சியை நடத்தியதாக சொல்கிறார்கள். அதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் ஹிந்து இயக்கங்கள் காரி உமிழும் போராட்டம் நடத்தினார்கள். இந்த வட்டம் தான் ( Living to-gether separately ) என்று குடும்ப அமைப்பை குலைக்கும் இந்த நடத்தையை பற்றி கருத்தரங்கள் நடத்தினார்கள். பெண் மாணவர்கள் ஆண்மாணவர் விடுதியில் கதவை தாளிட்டு இரவில் அவர்கள் அறையில் தங்கினால் தவறு இல்லை என்று இந்த (HSS ) தலைமை ஆசிரியர் விடுதி வார்டனுடன் சண்டையிட்டதாகவும் கீழ்தரமாக கடிதங்கள் எழுதியதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் தான் சமீபத்தில் சைவ அசைவ உணவு ஒரே இடத்தில் தயாரிப்பதை தனிதனியாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்தார்கள். இவர்கள் வெளியிட்ட கேவலமான சுவர்ஒட்டி வாசகம்

  (பார்பன இந்துத்வாவின் தாக்குதலை முறியடிப்போம் – ஐ.ஐ.டி யை ஆக்கிரமித்துள்ள பார்பன கும்பலை விரட்டியடிப்போம் – பெரியார் பிறந்த தமிழ் மண்ணை பார்பனியத்தின் கல்லறை யாக்குவோம் ) ம.வெங்கடேசன் சொல்வது போல் தலித்துகள் குறைகளை பற்றியும் அவர்கள் நேர்மையான இட ஒதுக்கீட்டை பற்றியும் யாரும் விவாதிப்பதாக தெரியவில்லை ஆனால் பார்பான் ஆக்கிரமித்தான் என்ற கோஷத்தை சொல்லியே (OBC/MBC) உள்ள பணம் படைத்தவர்கள் தான் உண்மையான ஆக்கிரமிப்பு வேலையை தொடர்ந்து கொண்டு இடஓதுக்கீடு என்பதை அர்தமற்றதாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

  பார்பானை திட்டினால் போதும் சிலருக்கு அல்ப சந்தோஷம் மேலே சொன்னவற்றை பற்றியெல்லாம் விவாதிக்காமல் மொட்டை காகிதத்திற்கு ஏன் மோடி அரசு பதில் கேட்டது என்பதை ஒருவர் விவாதபொருளாக்கி வாதம் செய்கிறார் ? !!!

  Pl visit Vigilonline.com web site to know about the full details :-

  Something rotten in IIT Madras

  // the institute has been dragged down to cater to the lowest common denominator which presently characterizes the Marxist/Christian/Dravidian politics-driven faculty members of (HSS) and various student groups.//

 57. இந்து மதத்தை மாற்றாரால் அழிக்க முடியாது.

 58. ஆனந்த சாகர ஆவி அறையாமல்,சொப்பன பிரிய சூது சாகாது!

 59. //இந்து மத ஆர்வலர்கள் இதற்கு என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?//

  பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் அடிமை சந்தைகளில் ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு விற்கப்படும் அவலம் நடைபெற்று வருகிறது.ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று வருகிறார்கள். இந்நிலையில் ஐ.நா. அதிகாரியான ஜெய்னப் பங்குரா கடந்த ஏப்ரல் மாதம் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்றார். அவர் அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சீரழியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார்

 60. //You are in the habit of writing with a lot of dots in between. It gives the impression that the Tamilhindu.com editors have edited many sentences or words from your message. \\//

  O…I see. The blanks are given by you ! and the editors are innocent of any wrong doing. Good. Thanks for the confession. If you leave the blanks, IMHO your message will be shorter taking only that space which is required. As it is, it encroaches more space than needed. But you are creating a new wave in writing Tamil with unnecessary blanks and dots, I presume 🙂

 61. //(2) ///////.they don’t get any returns from it?///// நீர் என்ன returns எதிர்பார்கிறீர்கள்? இப்போது என்ன கிடைக்கவில்லை?//

  உமக்கு இதைப்பற்றித்தெரியவேண்டுமென்றால், ஐ ஐ டி, என் ஐ டி, சிஸ்டங்களைப்பற்றித் தெரிந்தால்தான் முடியும். நீர் கல்வித்துறையைச்சார்ந்தவர் மாதிரி தெரியவில்லை. அவ்வளவு அறியாமை? நான் விளக்கினால், நீட்டி எழுதவேண்டும். மின் தமிழில் இதே விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். படித்தறியலாம். மாநிலங்கள் எதிர்ப்பார்த்தவை எவை? கிடைததவை எவை என்று புரியும்.

  இந்த மாதிரி கல்வித் துறை சம்பந்தமான விடயங்களை விவாதிப்பவர்கள் அத்துறையைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்து வந்தால், மற்றவருக்கு நேரம் மிச்சமாகும். இத்தளத்தில் விவாதகளத்தில் இடமும் மிச்சமாகும்.

 62. //இந்து மத ஆர்வலர்கள் இதற்கு என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?/

  சுவனப்பிரியன் அவர்களே,

  சாதி வெறி கொண்டோ, மதவெறி கொண்டோ, மதப் பிரிவு [எந்த மதமானாலும் சரி] யார் யாரைத் தாக்கினாலும் அது மிகவும் தவறு. எந்தச் சமயக் கடவுளரும் அதை ஆதரிப்பதில்லை.

  இது இந்து மத ஆர்வலர்கள் மட்டுமல்ல, எந்த மத ஆர்வலர்களும் சொல்லும்/சொல்லவேண்டிய ஒன்று.

  உங்களை ஒன்று கேட்கிறேன்.

  தாங்கள் எப்பொழுதும் இந்து சமயத்தினரைப் பற்றிக் குறைகூறியும், இந்து சமயத்தினர் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் விஷயத்தைப் பற்றிமட்டுமே எழுதி, இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.

  எப்பொழுதாவது இந்து சமயத்தோர் தமிழ் இந்து.காம் இணையத்தில் தமக்குள் அடித்துக்கொள்[ல்]வது சிறந்தது என்றோ, அது கண்டிக்கத்தக்கது அல்ல என்றோ எழுதியிருக்கிறார்களா?

  தாங்கள் எப்பொழுதாவது சுன்னி/ஷியா சண்டையைக் கண்டித்தோ, ISIS யசீதி ஆண்களைக் கொன்று, பெண்களை வன்புணர்ச்சி செய்து, சந்தையில் ஆடையின்றி நிற்கச்செய்து விற்பதைக் கண்டித்து ஒரு சொல் எழுதியிருக்கிறீர்களா?

  பாகிஸ்தானில் அஹமதியாக்களை [அவர்கள் எப்படிப்பட்ட முகமதியர்ளாகவோ/முகமதியர்கள் அல்லாமலோ இருந்துவிட்டுவிட்டும்போகட்டும்]யும், இந்துக்களையும், கிறித்தவர்களையும் அடிக்கிக் கொல்வது பற்றி, “இது அல்லாவுக்கே அடுக்காது!” என்று எழுதி உள்ளீர்களா? அவர்கள் உண்மையான முகமதியர்கள் இல்லை என்று ஒற்றை வரியில் தள்ளி விடுகிறீர்களே?

  அப்படி இருக்கும்போது, இந்துக்கள் தங்களுக்குள் அடித்துகொள்வதைப் பற்றிமட்டும் எழுதுகிறீர்களே! எழுதவதோடு மட்டுமின்றி, இந்து ஆர்வலர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறீர்களே? அதில் என்ன நியாயம் இருக்கிறது?

  கண்டனம் செய்தால் எல்லா வன்முறைகளையும் கண்டனம் செய்யுங்கள். அதை விடுத்து ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்ளாதீர்கள்.

  ஒரு நண்பனாக இதை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

  இந்தியாவில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதிவாருங்கள்.

  உங்களை அனைவரும் போற்றுவார்கள்.

 63. //இந்தியாவில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதிவாருங்கள்…உங்களை அனைவரும் போற்றுவார்கள்.//

  அனைவரும் போற்ற ஒருவன் எழுதத்தொடங்கினால் மனசாட்சியை அவன் முதலில் அழிக்க வேண்டும். He who pleases everybody pleases nobody. ஒருவன் தனக்கு என்ன சரியெனப்பட்டதோ அதை அவன் தைரியமாக முன் வைக்க வேண்டும்.

  மத நல்லிணக்கமும், தலித்துகள் உயர் ஜாதியினரால் தீண்டாமைக்கொடுமைக்காளகுவதற்கும் முடிச்சுப்போடாதீர்கள்.

  சுவனப்பிரியன் போன்ற அந்நிய மதத்தினர் சுட்டிக்காட்டுவதற்கு முன் இந்துமதம் சிறப்பாக இருக்குமென்று ஆசைப்படுவோரே இக்கொடுமைகளைப்பற்றி கொதித்திருக்க வேண்டும். செய்யவில்லை. இங்குமட்டுமன்றி, பொதுவெளியிலும் செய்வதில்லை. காரணம்: உயர்ஜாதியினரின் கோபத்துக்காளகிவிடுவோமோ? அவர்கள் துணை வேண்டுமே என்ற நினைப்பால்.

  வடமாநிலங்களில் மணச்சடங்கில் ஒன்று: மாப்பிள்ளை அழைப்பு. இங்கு காரில் கூட்டிவருவர். அங்கு குதிரை மீது மணமகன் ஊர்வலம் வருவான். எல்லா ஜாதிமணமகனும் வரலாம். தலித்து மணமகன் குதிரை மேலேறி வரக்கூடாது. அப்படி வந்தவொருவர் கொல்லப்பட்டார்.

  ஜகன் ஜீவன் ராம் வந்து போன பின், பனாரஸ் பலகலைக்கழக மாணாக்கர் சுத்திப்பரிகாரம் செய்தார் என்று சொன்னார், இங்கு எழுதும் உயர்ஜாதி ஒன்று, எப்போ பார்த்தாலும் பார்ப்பனையேக் குறிவைக்கிறார்கள். பார்பானை திட்டினால் போதும் சிலருக்கு அல்ப சந்தோஷம்! என்றது. உடனே , பீஹார் முதல்வர் மாஜி மாளவியா சிலைக்கு மாலையிட்டுச்சென்றது, அச்சிலைக்குச் சுத்திபரிகாரம் பண்ணினார்கள் வாரணாசியில். அது நடந்தது இப்போதுதான் என்றவுடன் உயர்ஜாதி கப்சிப். அரிசோனனனில் ஜாதிப்பாசம் ஊரறிந்த இரகசியம்.

  தமிழ்நாட்டில் இரட்டைத்தம்ளர் முறை தெரிந்தது. தெரியாததது ஏராளம். மதுரைக்கிராமங்களில் தலித்துக்கள் அடிமைகளாகத்தான் வாழவேண்டும். கேரளாவைத்தவிர எல்லாவிடங்கள் தீண்டாமைக்கொடுமை தொடர்கிறது.

  இந்துக்கள் அனைவருமே ஒன்று சேரவில்லை ஒரே குரலாக தலித்துககளுக்கு நடக்கும் தீண்டாமையைப் பற்றிச் சொல்ல. சொல்பவர் இந்துமதத்துரோஹி எனப்படுவார். தமிழ்நாட்டில் சொன்னால்: அதில் பார்ப்பனர் ஈடும் இருக்குமானால், அவன் பார்ப்பனத்துரோஹி எனப்படுவான்.

  எனவேதான், என் கருத்து – அடிக்கடி சொல்லப்படுவது இங்கே – இந்துமதத்துக்கு எதிரிகள் உள்ளே நிறைய இருக்கிறார்கள். அவர்கள் இந்துமதப்பற்றாளர்கள் என்ற வேடம்போட்டு உலாவருகிறார்கள். நாங்கள் பார்த்துக்கொள்வோமெனற தெனாவட்டான பேச்சு. கிருத்துவபாதிரி என்று மிசுநோர்கள் பணமென்றும் தந்திரமாகப்பேச்சு மக்கள் பிறமதங்களை நாடிப்போக இந்த உள்ளிருந்து செய்யும் இரண்டாம்படைகளே காரணம்.

  (என் இம்மடல் தடைசெய்யப்படும். பார்ப்பனத்துவேசமல்லவா? அல்லது உயர்ஜாதிக்கெதிரல்லவா இருக்கிறது? ஏற்கன்வே நான் எழுதியவை தடை செய்யப்படுகின்றன. )

 64. திரு அரிசோனன்!

  //கண்டனம் செய்தால் எல்லா வன்முறைகளையும் கண்டனம் செய்யுங்கள். அதை விடுத்து ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்ளாதீர்கள்.//

  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மனித உருவில் உள்ள மிருகங்கள் என்று பல பதிவுகளை எழுதியுள்ளேன். தாலிபான்கள் தீவிரவாத செயல்களை கண்டித்து பல பதிவுகள் எழுதியுள்ளேன். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்து வரும் செயல்களை கண்டித்தும் பதிவுகள் எழுதியுள்ளேன். எனது இணைய தளத்தை பார்த்தால் உங்களுக்கு அனைத்து பதிவுகளும் கிடைக்கும்.

 65. திரு ஒரு அரிசோனன் அவர்களே.

  ஈரான், இராக் அளவுக்குக் கூடப் போகவேண்டாம். நம் ஊரிலிருக்கும் மேல் விஷாரம் / கீழ் விஷாரம் விஷயம் கேளுங்கள். இஸ்லாமியர்களிடமிருந்து ஒரு வார்த்தை வராது.

  கீழ் விஷாரம் மக்களை ( வன்னியர் தலித் இருவரும் அதில் அடக்கம்) தாருல் இஸ்லாம் மேல் விஷாரத்திடமிருந்து காப்பாற்றியது Dr. சுப்ரமணிய சுவாமி – அதாவது இவர்கள் வார்த்தையில் கூற வேண்டுமானால் ‘ ஆர்ய பார்பன அகரஹார பாசிஸ்ட் ‘ தான் கோர்ட் மூலமாக நீதி வாங்க வழி செய்தார்.

  தலித்துக்கள் தீங்கு இழைக்கப் பட்டவர்கள்தான். அவர்கள் முன்னேற வேண்டும் என்பதில் ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் திரு சு பீ அவர்களுக்கு அதைச் சொல்ல தார்மீக உரிமை உண்டா என்பது கேள்வியே.

 66. இதுவரை இந்த அமைப்பை யார் நடத்துகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஜோ.பிரிட்டோ, தீபக் ஜான்சன் போன்ற கிறிஸ்துவர்கள் இதை வழிநடத்துகிறார்கள் என்று பல மாணவர்கள் நம்மிடம் சொன்னார்கள். இது உண்மையா என்று தெரியாது.

 67. இது ஒரு சிறிய அமைப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் இதனுடைய நிகழ்ச்சிக்கு ஆந்திராவில் இருந்தும், டெல்லியிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும் புகழ்பெற்ற பேராசிரியர்கள் வருகிறார்கள் என்றால் இவர்களின் பின்புலம் சாதாரணமானதாக இருக்க முடியாது.

 68. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இளம் சிறார்களை போராட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ளச் செய்தனர் என்பதற்கான ஆதாரத்தை அவர்களே வினவு இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். போராட்டத்தில் கைதும் நடக்கலாம், கலவரமும் நடக்கலாம் என்று தெரிந்தும் இளம் சிறார்களை இவர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள் என்றால் பாஜகவின் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரானது என்று பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

 69. /ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மனித உருவில் உள்ள மிருகங்கள் என்று பல பதிவுகளை எழுதியுள்ளேன். தாலிபான்கள் தீவிரவாத செயல்களை கண்டித்து பல பதிவுகள் எழுதியுள்ளேன். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்து வரும் செயல்களை கண்டித்தும் பதிவுகள் எழுதியுள்ளேன். எனது இணைய தளத்தை பார்த்தால் உங்களுக்கு அனைத்து பதிவுகளும் கிடைக்கும்.//

  பாகிஸ்தான் மாட்டு கறி பாசமும் கூட . ISIS அதரவும் நாங்கள் பார்ததுதான்

 70. I agree most points,i agree about Sanskrit as our cultural heritage….but certainly not about hindi ..first non-hindi speaking state’s will have additional burden on learning new subject which at this century will be really burden for student,and now English is now spoken fluently by most people of india,in my experience our tamil persons who travel to hindi speaking states for works learn hindi within 2-3 months and manage well.Dont please add Holiness to hindi as saying Hindi as our national language and its something related to our pride,heritage,faithfullness etc….Every indian should learn their mother tongue well and the English for their betterment,finally i like to say surely Sanksrit is not mother of all languages…Sanskrit gave/took, collaborated with many old other languages of india…ie)tamil,bali etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *