விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்

சங்கராபுரம் அருகே கோவில் தேர் எரிப்பு: கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு; 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது

Temple-Car-Torched-in-Villupuram-2ஆகஸ்டு 17: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இங்கு காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்திருவிழாவின் போது ஊர் தரப்பு மக்கள் தங்கள் பகுதி வழியாக தேர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த காலனி மக்கள் முடிவு செய்தனர். இதையறிந்த ஊர் மக்கள் தங்கள் தெரு பகுதியில் தேர் வரக்கூடாது என்று கூறி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதையடுத்து இவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பிரச்சினைக்கு உரிய பகுதியில் தேரை கொண்டு செல்லாமல் விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து கடந்த 14-ந் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அங்கு தேர் திருவிழா நடக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலனி பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மீது கற்களும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. மேலும் போலீசாரின் 5 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன…

–   தினத்தந்தி, ஆகஸ்டு 17.  முழுமையான செய்தி இங்கே.

இந்த சம்பவத்தில் அம்மனின் புனிதமான தேரை எரித்து, ஏழை மக்களின் குடிசைகளைக்  கொளுத்தி வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களுக்கு எதிராகத்  தமிழ்ஹிந்து தனது கடுமையான கண்டனங்களைத்  தெரிவிக்கிறது.  கலவரக் காரர்களை  அரசும் காவல்துறையும்  கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.  இந்து இயக்கங்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள்  உடனடியாக  கிராம மக்களை சமாதானமடையச் செய்து  அமைதியையும் நல்லிணைப்பையும் உருவாக்கிட வேண்டும்.

இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப் பட்ட சில கருத்துக்கள்:

டிகை நீட்டி அமர்ந்த காலில்
போலி பகுத்தறிவு
திராவிடவாதியின் நாக்கில்
வர்த்தக சினிமா
உலக நாயக போலித்தனத்தில்…
இவற்றிலெல்லாம் என் தர்மத்தின் மானம் போய்விட்டதாக பொங்கினேன்.
அறியாமையையும் ஆபாசத்தையும்
மலின அரசியலையும் கடந்தது
தர்மத்தின் பெருமிதம் என்று சொன்னாள்
தேசமுத்துமாரி
ஆனால்
ஒட்டுமொத்தமாக
எரிந்து கிடக்கும்
என் தர்மத்தின் மானம்
என்று எனக்கு அன்று தெரிந்திருக்கவில்லை…
கரித்துண்டுகளாக
நேற்று தர்மபுரியில்
இன்று சேஷசமுத்திரத்தில்
அந்த கரி துண்டுகளின் குவியலில்
மாரியம்மனின் தேர் துண்டுகளையும்
தேடி பொறுக்குவேன் என்று
நானெங்கு கண்டேன்…
இன்று நின்று எரிக்கிறது மிச்சம் மீந்த
என் உயிர் உணர்வை
காவியின் மௌனம்.

அரவிந்தன் நீலகண்டன் 

******

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது என்று நான் கருதுகிறேன்.

Temple-Car-Torched-in-Villupuramபங்காரு அடிகளாரின் இயக்கம் அந்தப் பகுதியில் வேர்கொண்டு தமிழகம் முழுவதும் 1980களில் பிரபலமடைந்தது (அதன் வளர்ச்சியில் இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் ஆற்றிய பங்கும் மிக முக்கியமானது). அனைத்து சாதியினரும், குறிப்பாக பெண்களும் நேரடியாக சக்தி வழிபாடும், பூஜைகளும், சடங்குகளும் செய்யும் ஏற்பாட்டின் மூலமாக எளிய மக்களிடையே ஆன்மீக மறுமலர்ச்சியையும் சமுதாய சமத்துவத்தையும் அவரது இயக்கம் வலியுறுத்தி வந்திருக்கிறது. அந்தப் பகுதியில் கல்வி, மருத்துவ மையங்களையும் நடத்தி வருகிறது.

பங்காரு அடிகளார் இந்தக் கிராமத்திற்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும். இரு தரப்பினரும் அவர் முன்னிலையில் கூட வேண்டும். அம்மனின் தேரை எரித்து, ஏழை மக்களின் குடிசைகளை எரித்த ஆதிக்க சாதியினர் அவர் முன்னிலையில் தாங்கள் செய்த பெரும் பாவத்திற்கு தலித் குடும்பங்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எரிந்த குடிசைகளை மீண்டும் கட்டித் தருவதும் தேரை மீண்டும் செப்பனிட்டு கோலாகலமாக அம்மனை ஊரின் அனைத்துத் தெருக்களிலும் பவனி வரச்செய்வதுமே இதற்கான பிராயச்சித்தம் என்று அடிகளார் அறிவிக்க வேண்டும். இந்த பிராயச்சித்தத்தை செய்யாத பட்சத்தில், அம்மனின் கோபம் அந்த வன்கொடுமை செய்தவர்களின் குடும்பங்களையும் அவர்களது தலைமுறைகளையும் சென்று தாக்கும் என்ற விஷயம் உறுதியாக ஆதிக்க சாதிக்காரர்களிடம், குறிப்பாக அந்தக் குடும்பத்துப் பெண்களிடம் சொல்லப் பட வேண்டும். இதற்கான நிதியுதவியின் ஒரு பங்கை ஆதிபராசக்தி பீடமும் இந்து இயக்கங்களும் இணைந்து வழங்கலாம். தேர்த்திருவிழாவிலும் அடிகளார் பங்குகொண்டு ஆசியளிக்க வேண்டும்.

இந்த ஏற்பாட்டை உடனடியாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் செய்ய வேண்டும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை உடைத்தெறிந்ததில் அவர்களது பங்கு சிறப்பானதாக இருந்திருக்கிறது. அதே உத்வேகத்துடன் இந்தப் பிரசினையிலும் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது.

(பி.கு: இந்தச் சம்பவம் நடந்த சங்கராபுரம் கிராமப் பகுதியுடன் எனக்கு தனிப்பட்ட அளவில் ஒரு தொடர்பு உண்டு. எனது மாமனாரின் பூர்வீக ஊரான மேலகரம் அங்கு தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விசேஷத்திற்காக அங்கு போயிருக்கிறேன். அவரது குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலர் ஊரிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுப் பெயர்ந்து விட்டனர்).

ஜடாயு 

******

சேஷசமுத்திரம் வன்முறையில் தலித்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கோவில் தேர் எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது.

செய்ததது சோ கால்டு சாதி இந்துக்களே தான். அதுவும் புர்ச்சிகர கட்சிகளான திமுக, திக மற்றும் தேமுதிக, அதிமுக கட்சிகளில் இருப்பவர்கள். கவனிங்க சோகால்டு பாமக வன்னிய சாதி வெறியர்கள் ஏதும் செய்யலியாம். செஞ்சது எல்லாம் மத்த கட்சி சாதிவெறியர்களே.

அவர்கள் அதுவும் மேடை போட்டு இது டந்தை டரியார் பிறந்த மண் இங்கே இந்துத்துவா தலையெடுக்கமுடியாது என முழங்குபவர்கள்.

அவர்கள் எல்லாம் அப்போ புர்ச்சிகர பொங்கலாளிகளாக இருப்பவர்கள் இப்போ மட்டும் சாதி இந்துக்கள் ஆகிவிடுகிறார்கள்.

தேர்தல் வந்தா மட்டும் இங்கே இந்து இயக்கங்களை உள்ளே விடமாட்டோம். இந்துத்துவா காலூன்ற விடமாட்டோம் என கூவும் டுபாக்கூருகள் இப்போ இந்து இயக்கங்கள் என்ன செய்தன என கேட்கிறார்கள்.

இதை இந்து இயக்கங்கள் வாய்ப்பாக சவாலாக எடுத்துக்கொண்டு அங்கே எரிக்கப்பட்ட தேர் மீண்டும் ஓடவும் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்து இந்த மானங்கெட்ட த்ராவிட த்ராபைகள் மீதும் புர்ச்சி பொங்கலாளிகள் மீதும் கரியை பூசவேண்டும்.

தேர் இழுப்பு, சாமி ஊர்வலம் எல்லாம் வயதானவர்கள், முடியாதவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கடவுளை கும்பிட கோவிலுக்கு வரவேண்டியதில்லை கடவுளே வீடு தேடி போய் அருளுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பவை.

அதை எரிக்கும் கபோதிகளுக்கு கடும் தண்டனை தரப்படவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் முன்நின்று அதை நடத்திக்காட்டவேண்டும்.

ராஜசங்கர்

*****

30 Replies to “விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்”

  1. மனதை மிகவும் வருத்தும் சம்பவம். தமிழகத்தில் ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலையை எண்ணுகையில் மிகவும் அயர்வு ஏற்படுகிறது. ஒரு புறம் நகரப் பகுதிகளில் மக்களிடையே பக்தி உணர்வு பெருகி ஒற்றுமை மேலோங்குகிறது. மறுபுறம் க்ராமப்பகுதிகளில் மிக அதிகமான ஜாதிப்பூசல்கள்.

    இதன் பின்னணியில் இருக்கும் த்ராவிடத் தறுதலைகள் மற்றும் புர்ச்சி கும்பல்களின் அக்ரமத்தைப் பேசாது…….. திரும்பத் திரும்ப ஒரே ஜபமாக இது பெரியார் பூமி என்று ஜெபித்துக்கொண்டிருப்பது ……….தமிழகத்தை ஜாதிப்பூசலில் இருந்து மீட்காது போகாத ஊருக்கு வழி சொல்லும் கார்யமாகும்.

    தமிழகம் என்னும் போலிப்பகுத்தறிவுப் பாலைவனத்தில் ஜாதிகளைக் கடந்து மிகப்பெரும் ஆன்மீக பெண்டிர் சக்தியை ஒன்றிணைக்கும் பெரும் பங்கினை ஆற்றி வருபவர் தவத்திரு பங்காரு அடிகளார். அன்னாரது ஆன்மீக இயக்கத்தின் இன்னொரு ச்லாகிக்கத் தகுந்த கூறு வழிபாடுகள் அனைத்தும் எல்லோருக்கும் புரிந்த எளிய தமிழில் இருப்பது.

    தேசமுத்துமாரியின் அருளால் ***அம்மா*** என்று அழைக்கப்படும் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இந்த இடத்தில் அமைதி மீள பூஜைகளும் யாகங்களும் செய்து அனைத்து தரப்பு மக்களையும் அதில் ஈடுபடுத்துவது சமூஹ ஒற்றுமைக்கு வழிவகுக்கும். ஜாதி இணக்கத்தில் ஹிந்துத்வ இயக்கங்களுடைய பணி தொடர்ந்து சிறக்க வேண்டும்.

    வேலும் மயிலும் சேவலும் துணை

  2. /////அமைதி மீள பூஜைகளும் யாகங்களும் செய்து/////// அமைதியை பூஜைகளும் யாகங்களும் கொண்டுவருமா? இந்த 21வது நூற்றாண்டிலுமா இப்படி? பூஜை யாகம் செய்யா ஆகும் செலவை (=பணத்தை) எறிந்த குடிசைகளை புதிப்பிக்க பயன்படுத்துங்கள். அப்போதுவேண்டுமானால் அல்லல்பட்ட மக்களளின் மனதில் அமைதி திரும்பும்.

    //////ஒரு புறம் நகரப் பகுதிகளில் மக்களிடையே பக்தி உணர்வு பெருகி ஒற்றுமை மேலோங்குகிறது. ///// அய்யா எங்களூரில் போனவாரம் கருமாரியம்மன் திருவிழா நடந்தது. சில இளைஞர்கள் நிகழ்ச்சிக்கு drums வைக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். விழா அமைப்பாளர்கள் அவர்களது கோரிக்கையை ஏற்று 6000 ரூபாய் கொடுத்தனர். இரவு சாமி புறப்படும்போது ”தண்ணியை” போட்டுவிட்டு பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்குள்ளே (=இளைஞர்கள்) அடிதடி.அவர்களை சமாதானபடுத்தி முடிப்பதற்குள் போதும் என்றாகிவிட்டது. பக்கத்தூரில் நடந்த ஒரு அம்மன் திருவிழாவில் நாள் முழுக்க சினிமா குத்துபாடல்களே ஒலிபரப்பப்பட்டது.(ஆரம்ப பாட்டு மட்டும்தான் பக்தி பாடல்.) சரி போய் தொலையட்டும் என்றுவிட்டால் மறுநாள் இரவு 10 மணிக்கு சினிமா பாட்டு கச்சேரி நடந்தது. அதை கேட்ட பக்தகோடிகள் அனைவரும் அந்த பாட்டுகளில் மெய் மறந்து ஆடிபாடி கும்மாளம் போட்டனர். இதற்கு பெயர் கடவுள் பக்தியா? இளைஞர்கள் சண்டை போட்டுகொள்வதற்கு பெயர் ஒற்றுமையா? இந்துமதத்தில் ஒரு தலைமை கிடையாது. இதைத்தான் செய்யவேண்டும் இதையெல்லாம் செய்யகூடாது என்று ஒரு கட்டுப்பாடு இல்லை. தவறான ஒன்றை இது தவறு என்று சுட்டிகாட்டினால் ”’உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ ஒதுங்கி கொள். அதை விமர்சனம் செய்யாதே”’ என்று அறிவுரை கூற ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்துமதம் இப்படி சீரழிகிறதே என்று நமக்கு வேதனையாக உள்ளது. இந்த கவலைக்கு காரணம் என்னவென்றால் இந்த மதம் அழிந்தால் பிறகு நமது சந்ததியனர் கொலைகார மதமான இஸ்லாமியர் கைகளில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாக போகிறார்களே என்பதுதான். ஆகவே சாதியை ஒழியுங்கள். மூடநம்பிக்கைகளை ஒழியுங்கள். கோவில் திருவிழா என்றால் அதில் சில கட்டுபாடுகளை விதிக்கவேண்டும். இதை இதைதான் செய்யவேண்டும் இவற்றையெல்லாம் செய்யகூடாது என்று.

    /////ஊர் மக்கள் தங்கள் தெரு பகுதியில் தேர் வரக்கூடாது என்று கூறி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.//////
    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று ஒரு பழமொழி உள்ளது. அரிஜனங்களை மற்றும் அவர்களின் தேர்களை உன் தெருவில் வரகூடாது என்று நீ அரிஜனங்களை பார்த்து சொன்னால் உன்னை பார்த்து உன் விநாயகர் ஊர்வலம்
    எங்கள் தெருக்களின் வழியாக வரகூடாது என்று துலுக்கனுங்க சொல்றானுங்க பார்த்தீங்களா? நாம் ஒருவனை ஏமாற்றினால் நம்மை ஒருத்தன் ஏமாற்றுகிறான். உண்மையிலேயே Non -SC களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குமானால் அந்த தேரை வேண்டாம் என்று சொல்லும்போது அந்த தேரிலிருக்கும் அம்மனையும் சேர்த்துதானே வர அனுமதி மறுக்கிறாய். ஆகவே அவன் அரிஜனை அவமதிக்கிறானா அல்லது அம்மனை அவமதிக்கிறானா? (குறிப்பு:- இவன் என்ன சமீப காலமாக Sc களுக்கு வக்காலத்து வாங்கிகொண்டு இருக்கிறானே என்று சிலர் நினைக்கலாம். நான் Sc அல்ல. உண்மையை சொல்லபோனால் என் ஜாதி மனித ஜாதி ஆகும்.

  3. அன்பின் ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

    நான் பூஜை பற்றி எழுதியது சங்கத்தில் பெற்ற அனுபவம். வாழ்க்கையில் பெற்ற அனுபவம்.

    இதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன.

    தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களது இயக்கத்து பூஜை மற்றும் யாகம் என்ற நிகழ்வுகள் ஒட்டு மொத்த சமூஹமும் ஒருங்கிணைந்து ஒருவருடன் ஒருவர் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு சமூஹ இயக்கம். பூஜைக்கு வேண்டிய பொருட்களை ஒன்று சேர்ப்பது முதல் பூஜைகள் செய்வது வரை எல்லோரும் ஒன்றிணைந்து செய்யும் ஒரு செயல். இன்று அங்குள்ள மிகப்பெரிய ப்ரச்சினை சமூஹ விரோதம். இதற்கு மருந்து சமூஹ ஒற்றுமை. அதை செயல் படுத்துவதற்கான ஒரு சாதனம் பூஜை / யாகங்கள்.

    இரண்டாவது கூறு. தெய்வ வழிபாடு தொல்லைகளை நீக்கும் என்ற நம்பிக்கை. இது எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை. தெய்வ நம்பிக்கையில்லாதவர்கள் இதை பகடி செய்யலாம்.

    உடனடியாக செய்யப்பட வேண்டிய கார்யம் இந்த ஏழை தலித் மக்களது வீடுகள் வசிப்பதற்கு ஏற்றபடி மீள்கட்டுமானம் செய்யப்படல். நிச்சயமாக இது முதன் முதலாக செய்யப்பட வேண்டிய கார்யம். இதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

    சடங்குகள் இல்லாத மதங்களே இல்லை. சடங்குகளும் மத அனுஷ்டானங்களும் மதத்தின் அடையாளங்கள். ஹிந்து மதத்தில் கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து அவை தொடர்ந்து மாற்றங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றன. எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாது என்ற உங்களது கரிசனம் புரிகிறது. கூடுமானவரை பொருள் விரயத்தை தவிர்த்து ஒரு சடங்கை அனுஷ்டிக்க முயற்சி செய்யலாம். ஆனால் இதனை அலகீடாக வைத்து ஒரு சடங்கினை செய்ய விழைந்தால் எந்த ஒரு சடங்கும் நம்மால் செய்ய முடியாது.

  4. அன்பின் ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

    ஒரு விழாவை எல்லா சமூஹத்து மக்களையும் அரவணைத்து நடத்துவது என்பது பெரிய காரியம் தான். நிறைய ப்ரச்சினைகள் வரும். மோதி வந்து இரண்டாவது நாளில், வாரத்தில், மாதத்தில் அனைத்து ப்ரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று பொதுஜனங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது போல ப்ரச்சினைகளை அவ்வளவு சுலபத்தில் தீர்த்துவிட முடியாது. அதற்கு நிறைய அனுபவம் தேவை. பொறுமையும் தேவை.

    கொடுமையாகக் கொலைசெய்யப்பட்டு இறந்த எனது அன்பு நண்பர் ஆடிட்டர் ஸ்ரீ ரமேஷ் ஜீ அவர்கள் சேலத்தில் வாழ்ந்திருந்த வரைக்கும் ஹிந்து இயக்க செயல்பாடுகள் திருவிழாக்கள் கோவில் மீட்புப்பணிகள் என்று அயராது பாடுபட்டவர்.

    பொதுமக்கள் வாழ்க்கையில் குடி, சினிமா என்று பல விஷயங்கள் கலந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கோட்பாடு நிறைந்து விட்டதால் நெறிதவரிப்போன விழாக்கொண்டாட்டங்களை நெறிமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான கார்யம் கிடையாது. ஆனால் கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள் நெறிதவரி தகாத கார்யங்களைச் செய்கிறார்களே என்று கொண்டாட்டங்களையே நாம் நிறுத்திவிட்டால் நம் வேர்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று விடுவோம். இதைத் தான் பயங்கரவாத ஆப்ரஹாமிய சக்திகள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். நாமே நம்முடைய சமயாசாரங்களை தாழ்வாக நினைக்க வைப்பது. இவற்றை நெறிகளுக்குள் கொணர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். ரொம்பவும் கஷ்டமான கால அவகாசம் எடுக்கும் கார்யம் இது. ஆனால் நிச்சயமாக செய்யப்பட வேண்டியது.

    தேரோட்டம் என்பது எல்லா சமூஹத்தினரும் ஒன்றாக தெய்வ வழிபாடு செய்வதற்கான சாதனம். ஆனால் மானுடம் ஜாதிவெறி என்ற பிசாசால் நசுக்கப்பட்டால் அந்தப் பிசாசுக்கு தெய்வம் கூட ஒரு பொருட்டாகவே ஆகாது என்பது இந்த நிகழ்ச்சியில் நிறுவப்பட்டுள்ளது. தன்னுடைய இருப்புக்கு சாக்ஷியாக இருக்கும் சமயத்தையும் அந்த சமயத்தின் ஆதாரமாக இருக்கும் கடவுளுடைய தேரையே எரிக்க ஜாதிவெறி காரணமாக இருக்குமானால் அந்த ஜாதியை ஏன் ஒழிக்கக்கூடாது என்ற கேழ்வி மிகவும் ந்யாயமானதே. மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜாதி மனிதர்களாலேயே அழிக்கவும் படும்.

  5. இதுமாதிரி யாதி வெறி பிடித்தவர்களினால் தான் இந்துசமயம் அழிந்து கொண்டிருக்கிறது வேறு சமயங்களை தேடி ஓடுகிறார்கள் பின்பு புலம்பி பிரயோசனமில்லை . பிறேமதாசன்

  6. என் தெரு வழியாக தோ் வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்க எந்த கழுதைக்கும் உாிமை, அதிகாரம் இல்லை.அப்படி சொன்னவன் அனைவரையும் வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இன்னும் அாிசன மக்களை இழிவாகவே நடத்துவேன் என்ற பிடிவாத குணம் காணப்படுவது கண்டிக்கத்தக்கது

  7. I don’t hope the intervention of Bangaru adikalaar will bring peace between different communiies.

    In a village like this one, dalits live separately in their colony – I have seen many such places in TN. They have their own temple, mostly for Mariamman or amman of other name. These temples will have shrines for other gods mostly for Pillaiyaar. The colony temple is not in operation on daily basis throughout the year because dalits are mostly working classes and cannot afford to go to temples daily. Hence, on important days of the month, or on special requests like the ones from the families of the newly married couples or during the annual Kodai utsavams, such temples are open for worship and community pujas. Sapparam is during Utsavams only. In southern districts, during Dushera utsavs.

    In a village, dalits live in colonies away from all other castes, which means in anicent times, untouchability, now, the same is called just living apart. However, the revulsion against dalits is either open or embedded in other castes. What causes such revulsion is an ancient story which should not deter us here.

    This revulsion, when manifested, break into caste clashes if the dalits are instiagted by outside agencies for any reason, or they are an aggressive lot as in Madurai, Virudunagar and Theni districts. It manifests during such utsavs too, like here.

    For this manifestation with which Hindu religion has nothing to do, what can a saamiyaar like Bangaru adikalaar do? Can he sway his magic wand and say 1, 2 and 3 and at once, the rulsion is removed from the minds of the other castes? Naive to think so.

    The revulsion cannot be removed at all – at least in the society that we have in TN. It is ancient and deeply entrenched in psyche + modern life has brought awareness among dalits too, which makes the other castes more angry with dalits. The grammar of being dalit is service with folded hands. No asking for more or rights. If they violate the grammar, more revulsion results.

    The only way is the government way or the Collector way: segregate the parties and ask them to live within their limits and tell both to restrain and retrict their communal activities within their respective areas fixed from time immemorial. A typical village is an ancient thing.

    If both parties accept this agreement, peace will desend on the village. If you want to live anywhere, keep to your place if there is no mutual love between you and others.

    I would advise dalits: Don’t go to police; to governement, and to any political or religious leader. Because none of them can remove the revulsion or no accomodation, from the minds of other castes. Only way,is your way: Keep aloof.

    I would advise other castes to keep to your place and have no truck with dalits if you cannot love them. Love is articifical virtue. It needs planting, germination, gestation and growth to blossom. By nature, unlove is with man. Hence, tolerance is advocate and it is prefereable to make community to live amicably and is achievable too in general interest: By keeping off: leave dalits untroubled and let them worship their Mariamman in their colony. When boundaries are transgressed by either party, there is bound to be bad repercussions: both parties will have to suffer.

    From this, it is obvious for all of us here to know that dalits’ Mariamman should continue to remain an amman for dalits; and the Mariamman of other castes should continue to remain their own. Like Nadar Badrakaliamman in Nellai and Tuticorin districts, pandiya kula velaalar near Therku avani veedhi in Madurai, Therku Krishnan koil for Saurastriyas and Vadakku Krishnan Koil for Konaars in Madurai.

    This arrangement is only till the concerned caste groups continue to keep their gods as for our castes only. If they give up their Amman and make her a Goddess for all i.e. for general populace as the Brahmins have thrown open Vedic gods and goddesses to all, no one should have any exclusive claim over such public temple or claim special treatment. There should reign a perfect equality; and if equality is breached, all will enter to maintain it by any means. The equality I am talking about strongly here and everywhere is without prejudice to the existence of caste based temples.

    — Bala Sundara Vinayagam (BS)

  8. திரு. கிருஷ்ண குமார் ………….

    சாதியை பற்றி நாம் எப்போது விவாதித்து வந்திருக்கிறோம் .. இதோ நம் கண் முன்னாள் ஒரு சாட்சியாக, சேஷ சமுதிரம் பல்லிளித்து கொண்டு நிற்கிறது. கலவரம் நடந்து முடிந்து 4 நாட்கள் ஆகியும் இன்று வரை எந்த இந்து மத சொம்பு துக்கி அமைப்புகளும் அங்கு செல்லவில்லை. அதற்குள் கிடைத்த சாக்கில் திராவிட கட்சிகளை பற்றி அறம் பாட தொடங்கி விட்டீர்கள். சரி, பொறுத்திருந்து பாப்போம் எந்த இந்து இயக்கம் அதிலும் தாங்கள் அடிக்கடி வீர பராக்கிரமம் பேசும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதில் எதை கிழிக்க போகிறதென்று.

  9. //ஒரு புறம் நகரப் பகுதிகளில் மக்களிடையே பக்தி உணர்வு பெருகி ஒற்றுமை மேலோங்குகிறது.//

    மிகவும் தவறான அவதானிப்பு… நகரங்களிலும் சாதி உணர்வு இருக்கிறது, என்ன கிராமங்களில் இருப்பதைப் போன்று வெளிப்படையாக இல்லை. வாடகைக்கு விடும் வீட்டின் tolet பலகையில் “Only For vegetarians” என்று நைச்சியமாக சாதி திமிர் வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது.

  10. பேரன்பிற்குரிய ஸ்ரீ தாயுமானவன்

    \\ சாதியை பற்றி நாம் எப்போது விவாதித்து வந்திருக்கிறோம் .. \\

    ஜாதியைப் பற்றிய விவாதம் தமிழ் ஹிந்து தளத்தில் நிகழ்ந்ததில்லை என்று தாங்கள் ஜபர்தஸ்தியாக குற்றம் சாட்ட விழைவது என்று தான் சித்தமாகிறது.

    ஜாதிக்கலவரம் நிகழும்போதெல்லாம் அது நிச்சயமாக தமிழ் ஹிந்து தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் தேடுங்கள். எனக்கு விவாதங்கள் பசுமையாக நினைவில் உள்ளன.

    தவிரவும் கலவரம் நிகழாத சமயங்களிலும் ஜாதி மறுப்புத் திருமணம் என்ற விவாதமும்…….. அது மேலும் விவாதிக்கப்பட்டு மறுப்பு என்ற சொல் தவிர்க்கப்பட்டு ஜாதி இணக்கத் திருமணம் என்ற படிக்குத் தொடர்ந்தது.

    நிற்க. ஜாதி இணக்கம் என்பது ஜெபம் செய்வதால் நிகழும் விஷயம் இல்லை. செயல்பாட்டால் மட்டிலும் நிகழும் விஷயம்.

    நீங்கள் என்ன செய்தீர்கள். செய்கிறீர்கள் என்று நான் நிச்சயம் கேழ்க்க மாட்டேன். உங்களுக்கு இந்த விஷயத்தில் அக்கறை உள்ளதால் தான் நீங்கள் கேழ்க்கிறீர்கள் என்பது நிச்சயம்.

    நான் என்ன செய்கிறேன். நாங்கள் என்ன செய்கிறோம் என்பது என்னால் தொடர்ந்து பகிரப்பட்டு வரும் விஷயம். ஆர் எஸ் எஸ் சங்க ஷாக்காக்கள் நிச்சயம் அருமருந்து.

    முதலில் சமுதாயத்தில் இருக்கும் பல ஜாதியினரும் ஒன்றாகக் கூடி சமூஹப்பணி செய்தல் என்ற கோட்பாட்டில் இறங்குதலே ஜாதி இணக்கத்துக்கு வழிவகுக்கும். சங்கம் இப்படிப்பட்ட செயல்பாட்டில் ஹிந்துஸ்தானமளாவி சமூஹப்பணியாற்றி வருகிறது.

    தமிழ் ஹிந்து தளத்தின் பங்காளர்கள் பலர் சங்கப் பின்னணி உள்ளவர்கள். ஜாதிசார்புகளின்றி ஹிந்து ஒற்றுமைக்கு இவர்கள் பாடு பட்டு வருவது *****இவர்கள் செயல்பாடுகளிலிருந்தும்***** இவர்கள் விவாதங்களிலிருந்தும் நிச்சயம் தெரியும்.

    வெறுமனே வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் சமூஹத்தின் அனைத்து ஜாதி மக்களையும் ஒருங்கிணைத்து சமூஹப் பணியாற்றுதல் என்று செயல்பாட்டில் இறங்கியுள்ள இன்னொரு குழு ………….. தமிழகத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது என்றால் அது தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களது ஆன்மீக இயக்கம் மட்டிலுமே.

    இவை தான் வழிகள் என்று நான் நிச்சயமாகச் சொல்லவில்லை. இதற்கு மேலே வழிகள் இருந்தால் அவற்றை நாம் நிச்சயம் விவாதிக்கவும் வேண்டும். அவை பரவலாக்கப்படவும் வேண்டும்.

  11. “”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி இங்கே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் ” என்ற நிலை வர வேண்டும்.

  12. திரு.கிருஷ்ண குமார் ………….

    //சாதியை பற்றி நாம் எப்போது விவாதித்து வந்திருக்கிறோம் .. //

    மன்னிக்க வேண்டும் இதில் ஒரு சிறிய தட்டச்சு பிழை நேர்ந்து விட்டது.. “சாதியை பற்றி நான் எப்போதும் விவாதித்து வந்திருக்கிறோம்” என்று கூற வந்தேன்.. எப்போதும் என்பது எப்போது என்று ஆகி விட்டது. சுட்டி காட்டியமைக்கு நன்றி…

  13. இக்காலத்தில் நிறைய நகர்கள்/நகரங்கள் பல்லாயிரம் பெருகி உள்ளது. நகரங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் அனைவரும் கலந்து கொண்டு அல்லது எடுத்து நடத்துக்கின்றார்கள். எந்த பிரச்சனையும் இல்லை. கிராமங்களில் தான் இது போல் நடந்து விடுகிறது. இரண்டு தரப்பிலும் உள்ள யாரோ ஒரு சிலரின் செய்கையால் ஒட்டு மொத்தமாக எந்த சமுதாயத்தையும் குறை சொல்ல முடியாது. இதில் மாற்று மத சக்திகளின் பங்கு ஏதாவது உள்ளதா எனபதையும் கவனத்தில் கொண்டு விசாரணை செய்ய வேண்டும். நடந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கப்படவேண்டும்.

  14. //தேரோட்டம் என்பது எல்லா சமூஹத்தினரும் ஒன்றாக தெய்வ வழிபாடு செய்வதற்கான சாதனம். //

    இது பொதுக்கோயில்களுக்கு மட்டுமே ஒத்துவரும். ஜாதிக்கோயில்களுக்கு வராது. ஜாதிக்கோயில்கள் தஙகள் இடத்துக்குள்ளேதான் அனைத்தையும் நடாத்திக்கொள்ள வேண்டும். பொது இடத்தில் வந்து எம் சடங்கை நடாத்துவோமென்றால், அவர்கள் தம் கோயிலை பொதுக்கோயிலாக மாற்றிக்கொண்டு விடவேண்டும். ஜாதிக்கோயில் என்பது நம் வீட்டுப்பூஜை அறை போன்று. வீட்டுக்கு வெளியேவா மணி அடக்கிறோம்?

    குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில் தஷாரா உத்சவத்துக்குப் பேர் போனது. அது தலித்துகளால் ஸ்தாபிக்கப்பட்ட கோயில். பன்னெடுங்காலமாக அப்படித்தான் இருந்தது. பின்னர் அத்தெய்வத்தைப் பக்கத்து சிற்றூர் மக்களும் வழிபடத்தொடங்கினர்.. காலம் செல்லச்செல்ல அத்தெயவத்தின் வலிமை புகழாகப்பரவத்தொடங்க மாவட்ட மக்கள் வரத்தொடங்கினர். பின்னர் என்ன ? அங்கிருந்த தலித்து சேரி கோயிலை விட்டு வெகுதூரத்துக்கு நகர்ந்துவிட்டது. எவரும் விரட்டவில்லை. தானாக நடந்தது. தலித்துகளை விட மற்ற பக்தர்கள் எண்ணிக்கை பெருகியது. வருமானமும் வந்தது. அரசு எடுத்துக்கொண்டது.

    அனைத்து செய்லகளும் தானாகவே நடந்தேறின. எவரும் உரிமை கொண்டாடாமலே போனது. நாடார்களும் தலித்துகளும் இணக்கமாக இருந்த படியால், அத்தலித்துக்கான தெய்வம் பிறரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தலித்துகளிடம் இருந்த காலத்திலும் அத்தெய்வத்தை தலித்து தெய்வமாக மற்றவர்கள் பார்க்கவில்லை. தேரோட்டம் இன்ன்பிற எந்தப் பிர்ச்சினைக்குள்ளாக்கப்படவில்லை. ஜாதிக்கோயிலாக இருந்தாலும் இணக்கம் இருந்தால் எதுவே சாத்தியம் என்பது இங்கு தெளிவாகிறது.

    இன்னொரு புகழ்பெற்ற தலித்து மாரியம்மன் பாரதியார் பாடல் பெற்ற தேசமுத்துமாரி. புதுவை. அவர் காலத்தில் அது பறையர் சேரிக்கு நடுவே அவர்களால் வணங்கப்பட்ட தெய்வம். பாரதியார் அங்கு போய்தான் உட்கார்ந்து கொள்வார். எவரோ ஒருவர் ஒரு கட்டில் இவருக்காக போட்டு வைக்க, இவர் வந்து அதில் உட்காருவார். படுத்துக்கிடப்பார். கவிதைகளைச் சிந்திப்பார். அம்மக்கள் இவரைச்சுட்டி கூடி நின்று வேடிக்கை பார்ப்பார். அங்குதான் பூணூல் நிகழ்ச்சியும் நடத்தினார். மாரியம்மன் கொடை உத்சவத்தில் சேரிமக்கள் விண்ணப்பத்தை ஏற்று, தேடியுனைச்சரண்டைந்தோம் தேசமுத்துமாரி என்ற புகழ்பெற்ற பாடலை இயற்றினார். பின்னர் மெல்ல மெல்ல தேசமுத்துமாரி புகழ்பரவ, நகரம் வளர வளர, தலித்துக்கள் இடம் பெயன்றார்கள்; ஆனால் மாரியம்மன அங்கே இருந்து மக்களை ஈர்க்க, இன்று புதுவையில் அது பெரிய லான்ட்மார்க்.

    நல்லிணக்கம் இல்லாத போது தங்கள் எல்லைக்குள்ளேயேதான் அத்தெயவத்தை ஊர்வலம் தலித்துக்ள் கொண்டு போகவேண்டும். இஃதெல்லார் ஜாதியினருக்கும் பொருந்தும்.

    நான் முன்பே சொன்னது போல ஏன் அங்கு இணக்கமில்லை என்பதற்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை. வேறு பல சமூகக்காரணிகள் உள. அவை தனியாகப் படிக்கப்படவேண்டியவை. எனவேதான் எந்த இந்துச்சாமியாரும் இந்து இயக்கமும் இப்பிளவை ஒட்ட வைக்க முடியாது. உணர்ச்சிவசமாக எழுதிவிட்டால் புகழ் பெறலாம் என்று எழுதாதீர்கள். சிந்தித்து ஏன், எது சாத்தியம், எவை இடர்பாடுகள் எனவறிய உணர்ச்சிகள் உதவா.

    மதத்தில் சீர்திருத்தம் வேண்டுமென்றால், அச்சீர்திருத்தம் தம் ஜாதியை உள்ளடக்கினால், பார்ப்பனத் துவேசம் என்று தன் ஜாதியென்றால் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் இவர்கள் மற்ற ஜாதியினர் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றால் எப்படி? இவர்கள் போய் அவர்களிடம் இப்படிச்செய்யாதீர்கள் என்றால் நீங்கள் உங்கள் ஜாதியை விட்டுக்கொடுப்பீர்களா? அது போலத்தான் நாங்களும் என்பார்கள்.

    எந்த கட்சியாலோ, சங்கத்தினாலோ தமிழ்ச்சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. திருடனா பார்த்துத் திருந்தினா எனபது போல மக்களாகப் பார்த்துத் திருந்தினாத்தான் உண்டு.

  15. அந்தா் யோகம் என்ற நிகழ்ச்சியை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்து ஸ்தாபகா் ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தா் பொிய அளவில் நடத்து மக்களுக்கு முறையான சமய கல்வி பயிற்சியை அளித்தாா். அனைத்து இந்துக்களுக்கும் அந்தா்யோகபயிற்சி அளிக்க வேண்டும்.

  16. முதலில் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கட்சி முதலியவை அவர்களின் வீடுகளை சரி செய்து கொடுக்கட்டும். பின் அனைத்து ஹிந்து இயக்கங்களும், தேரை சரி செய்து திருவிழா நடத்தட்டும். – அரசியல் கட்சிகள், பெரியாரின் வாரிசுகள், சூரமணிகள், எல்லாம் வாய்ச்சவடால் விடும்.

    இல்லை – தருமபுரி மாதிரி, எல்லாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம்

  17. சாதிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பங்காரு அடிகளுக்குதான் பெரும் பொறுப்பு இருக்கிறதா? அந்த ஜகத் குரு என்று சொல்லபடுகிறகிறவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா? ஏன் அவர் அங்கு சென்று சண்டையிடும் இருவேறு மக்களிடம் பேசி சமாதானம் செய்யமாட்டாரா? அவர் சேரிக்குள் நுழைந்தால் ”தீட்டு” பட்டுவிடும் என்ற பயமா? சாதி சண்டை என்றால் கம்யூனிஸ்ட் காரன் ஓடுகிறான். (அவன் நோக்கம் எதுவாகவாவது இருந்து தொலையட்டும்) ஆனால் இந்துக்களில் இரு பிரிவினர்கள் மோதிகொல்லும்போது இந்து காவலர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் இந்து முன்னணி என்ன செய்து கொண்ட்டிருக்கிறது? அமைதி வேண்டி கோவிலில் பஜனை பாடல்களை பாடிகொண்டிருக்கிறதா? மோதல் நடந்த இடத்திற்கு போவதற்கு பயமா?
    சாமி கும்பிடகூட தடை என்றால் அவன் எப்படி இங்கே இருப்பான்? மதம் மாறத்தான் செய்வான். அப்படி மாறினால் உடனே கிறிஸ்தவ மதமாற்றிகள், அந்நிய மிஷ”நரிகள்” என்று ஓலமிடுவது. அதை தவிர்த்து வேறு ஒன்றும் தெரியாது. இந்து இயக்கங்களின் (உள்) நோக்கமே ஜாதிகள் அழியக்கூடாது. ஆனால் அனைத்து ஜாதியினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான். இது ஆககூடிய காரியமா?

    /////கிராமங்களில் தான் இது போல் நடந்து விடுகிறது.///
    இது தவறு. எல்லா இடங்களிலும் நடக்கிறது. காரணம்.1) திருமாவளவன் கட்சி 2) பாட்டாளி மக்கள் கட்சி.இவைதான் மோதலுக்கு காரணமே. சண்டைக்கு இவர்கள் காரணம். சண்டை வந்தபின் அதில் குளிர்காய்வது கம்யூனிஸ்ட்காரனும், திக காரனும் ஆவார்கள். ஆதரவு காட்டி கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டிவிடுவார்கள் இந்த பிஜேபி காரனும் இந்து முன்னநிகாரனும். கட்டிலின் மெத்தை மேல் படுத்து தூங்கி கொண்டிருப்பார்கள் அல்லது எதைபற்றியும் கண்டுகொள்ளாமல் தெருவில் பஜனை பாடிகொண்டிருப்பார்கள்.

    ///////ஜாதிக்கலவரம் நிகழும்போதெல்லாம் அது நிச்சயமாக தமிழ் ஹிந்து தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது/////
    ”நிகழும்போது எல்லாம்” விவாதம் நடக்குமாம். அதன் பின்னர் அது பற்றி மூச்சு பேச்சு இருக்காதாம். இந்த தளத்தில் விவாதம் பண்ணி என்ன பயன்? களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும். சுட சுட விவாதம் நடத்துவதற்கு பதிலாக சுமுக விவாகம் (இருபிரிவினருக்கு இடையே) நடக்க கூடிய சூழலை உருவாக்கவேண்டும் அப்போது நாளடைவில் ஜாதி இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

  18. \\சாதிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பங்காரு அடிகளுக்குதான் பெரும் பொறுப்பு இருக்கிறதா? அந்த ஜகத் குரு என்று சொல்லபடுகிறகிறவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா? \\

    என்னுடைய எந்த வாசகத்தில் தவத்திரு பங்காரு அடிகளுக்குத் ***தான்*** …….*பொறுப்பு* இருக்கிறது என்று சொல்லியுள்ளேன் என்று சுட்டிக்காட்ட முடியுமா?

    *பொறுப்பு* என்பது ஜகத்குரு மற்றும் *சத்குரு* எல்லோருக்கும் இருக்க வேண்டியது தான்.

    இந்த விஷயத்தில் பற்பல ஜாதியினரை ***மிகப்பெரிய அளவில்***ஒருங்கிணைத்து ஆன்மீக மற்றும் சமூஹப்பணிகள் நடத்தி வரும் செயற்பாடு தவத்திரு பங்காரு அடிகளிடம் காணப்படுகிறது. அப்படிச் சொல்வதால் மற்ற ஆன்மீகப் பெரியோர்களோ அல்லது இயக்கங்களோ இந்த விஷயத்தில் லவலேசமும் பங்களிக்கவில்லை என நான் சொல்ல வரவில்லை. இந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து இவருடைய பணி மிக விரிவானதும் பரவலானதும். ஹிந்து இயக்கங்களில் வேறு யாரேனும் இப்படிப் பணி செய்பவர்கள் இருந்தால் அவர்களுடைய பணியும் நிச்சயம் ஏற்கப்பட வேண்டியதே.

    \\ சுட சுட விவாதம் நடத்துவதற்கு பதிலாக சுமுக விவாகம் (இருபிரிவினருக்கு இடையே) நடக்க கூடிய சூழலை உருவாக்கவேண்டும் அப்போது நாளடைவில் ஜாதி இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். \\

    தமிழ் ஹிந்து தளம் இதற்கு ஒண்ணுமே பண்ணவில்லை என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே ?

    ம்………… செயல்பாடு இருக்க வேண்டும். சரி.

    தலித் மற்றும் ஜாதிஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லையென்றால் இவர்கள் குறைந்த பக்ஷம் ஒன்று கூடுவதற்கு ஒருவருடன் ஒருவர் அச்சம் வெறுப்பு இவைகளில்லாமல் அளவளாவுவதற்கு வாய்ப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திக்கொடுப்பவர்கள் ஜாதி இணக்கத்திற்கு வழிவகுப்பார்கள்.

    இது தப்பான புரிதலா?

    \\ இந்து இயக்கங்களின் (உள்) நோக்கமே ஜாதிகள் அழியக்கூடாது. ஆனால் அனைத்து ஜாதியினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான். இது ஆககூடிய காரியமா? \\

    சுத்தம். தமிழ் ஹிந்து தளத்தில் விடிய விடிய ராமாயணம் வாசித்து ……………. நெம்ப கஸ்டம்.

    ஜாதி மறுப்புத் திருமணம், ஜாதி இணக்கத் திருமணம் ………… சம்பந்தமான வ்யாசங்கல் தமிழ் ஹிந்து தளத்தில் வாசித்துப் பாருங்களேன். இன்னமும் கூட ஆர்கைவ்ஸில் இருக்கிறதே.

    \\ இந்த பிஜேபி காரனும் இந்து முன்னநிகாரனும். கட்டிலின் மெத்தை மேல் படுத்து தூங்கி கொண்டிருப்பார்கள் அல்லது எதைபற்றியும் கண்டுகொள்ளாமல் தெருவில் பஜனை பாடிகொண்டிருப்பார்கள். \\

    அது அது.

    பாஜக ஹிந்துமுன்னணி எல்லோரும் தூங்குகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஐயா, நீங்கள் ஜாதி நல்லிணக்கத்துக்காக / ஜாதி ஒழிப்புக்காக பெரும் பங்கு ஆற்றுகிறீர்கள் என்றே புரிந்து கொள்கிறேன்.

    ஐயா, நீங்கள் என்ன பங்காற்றுகிறீர்கள். அதிலிருந்து பாஜக மற்றும் ஹிந்துமுன்னணி என்ன பாடம் பெறலாம்போன்ற விஷயங்களை தயவு கூர்ந்து பகிர்ந்து கொண்டீர்களானால் பெரும் லோகக்ஷேமம் பாருங்கள். கொஞ்சம் தயவு செய்யுங்களேன்.

    பி.கு :- உத்தபுரத்தில் பரஸ்பரம் ஜாதி விரோதம் கொண்டிருந்த மக்களை ஒன்றிணைத்தது யார் என்று இதே தளத்தில் உள்ள வ்யாசத்தை ………….. அப்பாலக்கா பொறுமையா வாசியுங்கள் / வாசிக்க முயற்சி செய்யுங்கள்.

  19. சாதிக் கலவரம் ஏற்பட்டால் திராவிட கட்சிகளை வசை படுவதால் ஒரு மாற்றமும் நேரப் போவதில்லை. பாஜக கூட இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதாக தெரியவில்லை. எல்லா கட்சிகளும் ஒட்டு பொறுக்க கள்ள மவுனம் சாதிக்கின்றன. இந்து மதத்தையே தங்கி பிடிப்பதாக கூறும் இயக்கங்களும் அமைதி காக்கின்றன. சாதி என்ற சாபக்கேடு எப்போதும் நீங்காது.

  20. சாதிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பங்காரு அடிகளுக்குதான் பெரும் பொறுப்பு இருக்கிறதா? அந்த ஜகத் குரு என்று சொல்லபடுகிறகிறவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா? ஏன் அவர் அங்கு சென்று சண்டையிடும் இருவேறு மக்களிடம் பேசி சமாதானம் செய்யமாட்டாரா? அவர் சேரிக்குள் நுழைந்தால் ”தீட்டு” பட்டுவிடும் என்ற பயமா?

    Honest man – ஜகத்குருக்கள் சேரிக்கு செல்வார்கள்.- ஆனால் திரு.
    கிருஷ்ணகுமார் சொல்வது அந்தப் பகுதி சாதி ஹிந்துக்களிடம் யாருடைய பக்தர்களோ அவர்களக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

    இங்கு உண்மை என்னவென்றால் – இந்த ஜாதி விஷயத்தில் பொதுவாக – ஆரியன் , பார்ப்பான் என்று கத்திவிட்டு, கமுக்கமாக ஆகி விட வேண்டும். நேரில் தலையிட்டால் அவ்வளவுதான். விடுதலை வீரமணிக்கு தெரிந்திருக்கிறது. உங்களுக்கு புரியவில்லையா ஐயா?

  21. பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகம் என்று எழுதும்போது பாதிப்பை ஏற்படுத்தியது எந்த சமூகம் என்று ஏன் எழுதவில்லை ?

  22. தேரையும் எரித்துவிட்டு, தலித் சமூகத்தின்மேல் தாக்குதலும் தொடுத்துவிட்டு காவல்துறை அவர்கள்மேல் அநீதியாக தாக்குதல் தொடுத்ததாக வன்னியர்கட்சித்தலைவர் ராமதாஸ் அறிக்கைவேறு வெளியிட்டார் பாருங்கள், அதுதான் பெருங்கொடுமை.

    அரசு இதுபோன்ற நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகார கும்பலை ஓட்டு பயமின்றி கொஞ்சமும் ஈவிரக்கமின்றி சுளுக்கெடுத்தால்தான் தலித் சமூகத்தின்மீதான ஒடுக்குமுறையை குறைத்துக்கொண்டே வர இயலும். முட்ட வரும் காட்டெருமையிடம் கவிதை பாடிக்கொண்டிருக்க முடியாது (அல்லது மூர்க்கம் தணியட்டும் என்று முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் ஒதுங்கியிருக்க முடியாது)

  23. இந்நேரம் காஞ்சி சங்கராச்சாியாரும் மற்ற மடாதிபதிகளும் இந்துத்துவா தத்துவம் பேசும் அன்பா்கள் இந்து முன்னணி இந்து புரட்சி முன்னணி அனுமன் சேனா விசுவ இந்து பாிசத்தின் அனைத்து பிாிவுகள் ஆடிட்டா் குருமூா்த்தி போன்ற சமூக தொணடா்களும் மேற்படி ஊாில் முகாம் இட்டிருக்க வேண்டும். இந்து தலீத் மக்களின் வாழ்ககை தரம் மிகவும் தாழந்த நிலையில் உள்ளது. ஊாில் படத்தைப் பார்த்தாலே விபரம் புாியுது.அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நிறைய செய்ய வேண்டும்.
    ஆனால் இந்துக்கள் ஒருவருக்கொருவா் அடித்துக் கொண்டால் வலுத்தவன் மெலிந்தனை நசுக்கினால் கண்டுகொள்ளாத நிலை ஆபத்து

  24. /////ஜகத்குருக்கள் சேரிக்கு செல்வார்கள்.- ஆனால் திரு.
    கிருஷ்ணகுமார் சொல்வது அந்தப் பகுதி சாதி ஹிந்துக்களிடம் யாருடைய பக்தர்களோ அவர்களக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.////

    இதுவரை அவர் சேரிக்கு எத்தனை முறை சென்றுள்ளார்? விவரம் கூறமுடியுமா? அங்கே பாதிக்கப்பட்டது சாதி இந்துக்களா அல்லது வேறு இந்துக்களா? அடிபட்டவனை சந்தித்து ஆறுதல் கூறுவீர்களா? அல்லது அடித்தவனை பார்த்து குசலம் விசாரிப்பீர்களா? ஆரியன் பார்ப்பான் என்று உங்கள் ஜகத்குருவை கத்த சொன்னது? மடத்தில் குவிந்து கிடக்கும் நிதியிலிருந்து கொஞ்சம் எடுத்து வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தர சொன்னால் சாதியை பற்றியா அங்கு போய் அவரை பேச சொன்னார்கள்? திருவாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தை இங்கே எனக்கு எடுத்து கூறாதீர்கள். அவர் இந்த தளத்தில் எல்லா விஷயத்தையும் ”விவாதித்து” விட்டால் போதும் உடனே உலகமே மாறிவிடும் அல்லது மாறிவிட்டது என்று நினைத்து கற்பனை கோட்டையில் வாழ்கிறார். அவருக்கு நல்ல கருத்துக்களை ஆதரிக்கும் உள்ளமே கிடையாது. அவருக்கு வாதம் செய்வதில் பெரும் விருப்பம் போலும். அதனால் எல்லாவற்றிற்கும் எதிர் வாதம் செய்து எழுதுகிறார். அவரிடம் நாம் விவாதிப்பது வீண் என்று முடிவெடுத்து விட்டேன்.

  25. //இந்நேரம் காஞ்சி சங்கராச்சாியாரும் மற்ற மடாதிபதிகளும் இந்துத்துவா தத்துவம் பேசும் அன்பா்கள் இந்து முன்னணி இந்து புரட்சி முன்னணி அனுமன் சேனா விசுவ இந்து பாிசத்தின் அனைத்து பிாிவுகள் ஆடிட்டா் குருமூா்த்தி போன்ற சமூக தொணடா்களும் மேற்படி ஊாில் முகாம் இட்டிருக்க வேண்டும். இந்து தலீத் மக்களின் வாழ்ககை தரம் மிகவும் தாழந்த நிலையில் உள்ளது. ஊாில் படத்தைப் பார்த்தாலே விபரம் புாியுது.அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நிறைய செய்ய வேண்டும்.//

    தலித்துக்களின் வாழ்க்கை தரத்திற்கும் இந்துமதத்துக்கும் முடிச்சு போடமுடியாது.

    //வாழ்க்கைத் தரம் மதத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்து தலித்துக்களின் மோசமான வாழ்க்கைத்தரத்திற்கு இந்துமதமே காரணம்// என்று சேம்சைடு கோலே போடுகிறீர்களே மருத்துவர் அன்புராஜ் அவர்களே. கொஞ்சம் நிதானமாக எழுதினால் இப்பிழைகள் நேரா. அரைகுறை டயாக்னாசிஸ் பண்ணி மருந்து கொடுத்தால் ஆசாமி குளோசாகி விடுவான் இல்லையா டாக்டர்? இஃதொரு சென்சிட்டிவ் இஷ்யூ சார். மெதுவாகத்தான் நகரனும்.

    போகட்டும் மற்ற விசயத்துக்கும் வருவோம். இங்கு நடக்கும் சண்டை தலித்துக்களுக்கும் வன்னியர்களுக்குமே. இருவரின் மோதல்களுக்கும் காரணம் மதம் கிடையவே கிடையாது. அவர்கள் மோதல் எதிலும் வெடிக்கும்; இவர்கள் பெண்ணை அவர்கள் விடலைப்பையன் கிண்டலடித்தாலோ, அவர்கள் பெண்ணை இவர்கள் கிண்டலடித்தாலோ மோதல் வெடிக்கும். இவர்கள் கிணற்றில் அவர்கள் இறைத்தால், அவர்கள் கிணற்றுப்பக்கம் இவர்கள் போனால் மோதல் வெடிக்கும். மாமியார் மருமகள் சண்டைக்கு ஒரு துளி நீர் மேலே விழுந்தாலே போதும் 🙂

    குளம், குட்டை, சுவர், கோழி, ஆடு, மாடு, பெண் – இப்படி எல்லாமே கண்ணி வெடிகள் போல. பட்டவுடன் வெடிக்கும். இக்கட்டத்தில் இவர்கள் கோயிலும் அம்மனும் ஒரு காரணமாக வருகிறது. அவ்வளவுதான் எப்படி இந்துமதம் காரணமாகும்?

    ஆச்சாரியர்கள், குருக்கள், பிஜேபிக்காரர்கள், போய் சண்டையை தீர்த்துவிட முடியும்? கொஞ்சம் சிந்தியுங்களேன். வன்னியருக்கும் தலித்துகளுக்கும் இங்கே, தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் தென் மாவட்டங்களில். சிங்களருக்கும் தமிழருக்கும் இருக்கும் பகை எண்ணை ஊற்றி பல்லாண்டுகளாக வளர்க்கப்பட்டது. இன்றும் தொடர்கிறது. அதைப்போல, இங்கும். பகை கூடிக்கொண்டே போகக்காரணம் இன்றைய தலித்து தலைவர்கள், மற்றும் வன்னியர் தலைவர்கள், வன்னியரோடு கூடிய தேவர்கள் லெட்டர் பேடு கட்சி ஆசாமிகள் – இவர்களால், எண்ணை வார்த்து வளர்க்கப்படுகிறது. தீராப்பகை வாக்கு வங்கியை செழுமையாக வைத்துக் கொள்ளும்.

    இத்தீயை எந்தச்சாமியாரால் அணைக்க முடியு சொல்லுங்கள். குருமூர்த்தி போய் அணைத்துவிடுவாரா? அதை விடுங்கள். இவர்கள் போய் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயன்றால், வன்னியர் கேட்க மாட்டாரா? ஓய், நாங்கென்ன வெளிநாட்டிலிருந்தா வந்தோம்? நாங்களும் இந்துதானே? உங்கச்சாமியார் அங்க மட்டும் போகனுமென்றால் நாங்க ஏன் இம்மதத்தில் இருக்கவேண்டுமென்று கேட்டால் என்ன பதில் வைத்திருக்கிறார் மருத்துவர் அன்புராஜ்?

    எனினும் ஒரு உபாயமுண்டு. அதை நான் இப்போது சொல்லமாட்டேன். முதலில் உங்கள் பதிலைப்போடுங்கள். அப்புறம் சொல்கிறேன். But if you read my earlier messages here, you can cull out that strategy.

    – Bala Sundara Vinayagam

  26. இங்கு உள்ள பலர் பிராமின் தான் தலித்களை காப்பற்ற வேண்டும் என்ற வகையில் கருது தெரிவித்து உள்ளது நல்ல உள்குத்து . எழுதிய யாரும் தலித் இல்லை என்பது உறுதி . ஜாதி ஹிந்துகளின் இந்த புத்தி இறுக்கும் வரை இங்கு தலித்துகளுக்கு விமோசனம் இல்லை .

  27. சுனாமி போது உதவியவர் RSS ஆனால் வேடிக்கை பார்த்தது தி க . அவர்களின் சொத்தை புடுங்கி , அந்த இயக்கத்தை தடை பண்ண வேண்டும் .

    அப்பறோம் பார்க்கலாம் இதை

    //மடத்தில் குவிந்து கிடக்கும் நிதியிலிருந்து கொஞ்சம் எடுத்து வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தர சொன்னால் //

  28. பேரன்பிற்குரிய ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

    \\ திருவாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தை இங்கே எனக்கு எடுத்து கூறாதீர்கள். அவர் இந்த தளத்தில் எல்லா விஷயத்தையும் ”விவாதித்து” விட்டால் போதும் உடனே உலகமே மாறிவிடும் அல்லது மாறிவிட்டது என்று நினைத்து கற்பனை கோட்டையில் வாழ்கிறார். \\

    இல்லையே ஸ்வாமின்.

    செயல்பாடு தானே முக்யம் என்று துண்டு தாண்டி சத்யம் செய்யாத குறையாகச் சொல்லி வருகிறேன்.

    ஹிந்துக்களில் அனைத்து ஜாதியினரும் ஒன்று கூடி ஒருவருடனொருவர் அளவளாவுதல் அவர்களிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குறைக்கும் என்பது என் பக்ஷம்.

    அந்த செயல் பாட்டுக்கு ஆதாரமாகவே எல்லா ஜாதியினரும் பங்கேற்கும் சங்க ஷாகாக்கள் மற்றும் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களது ஆன்மீகக் கூட்டங்கள் இவற்றில் ………… இந்த செயல்பாடு காணப்படுவதால் ………… இது போன்ற செயல்பாடுகள் தேவை என்று சொல்லியிருந்தேன்.

    தமிழகத்தில் பணியாற்றி வரும் ஹிந்து சான்றோர்கள் எல்லோரும் சேரிகளிலும் பணியாற்றி வருகிறார்கள் என்றே அறிகிறேன். நான் தமிழகத்தில் இல்லை. காஞ்சி சங்கராசாரியார், சத்குரு ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்று அனைவரும் சேரிகளிலும் பணியாற்றி வருகின்றனர் என்றே எனக்குப் பரிச்சயமான் இந்த சான்றோர்களின் அடியார்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

    தமிழகத்தில் பெருகி வரும் ஜாதிப் பூசல்களைக் காணுகையில் அது ஹிந்து இயக்கங்களின் பணிகள் ஆகட்டும் அல்லது ஹிந்து சான்றோர்களின் பணிகள் ஆகட்டும்……….. இவை முழுவீச்சில் இல்லை என்பது மிகச் சரியாகப் புரிகிறது. ஆனால்……….ஆனால்……………ஹிந்து இயக்கங்களும் சான்றோர்களும் குறட்டை விட்டுத் தூங்குகிறார்கள் என்று தாங்கள் சொல்லியது சரியான புரிதல் இல்லையோ என்றே தோன்றுகிறதே. அன்புடையீர், இது எனது புரிதல் தான். தவறு என்றால் நீங்கள் சரியான விஷயங்களைப் பகிர்ந்தால் என்னுடைய புரிதலை திருத்திக்கொள்வேனே.

    \\ அதனால் எல்லாவற்றிற்கும் எதிர் வாதம் செய்து எழுதுகிறார். அவரிடம் நாம் விவாதிப்பது வீண் என்று முடிவெடுத்து விட்டேன். \\

    பாத்தீங்களா? பாத்தீங்களா? சரி என்னுடன் நீங்கள் விவாதிக்க வேண்டாம்.

    நாங்கள் பொழுது போகாமல் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் சமூஹ ஒன்றிணைப்புப் பணிகளில் ஈடுபடுகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். இந்த தமிழ் ஹிந்து தளம் கூட ஹிந்து இயக்கங்களின் பணிகளை அப்பப்போ பொழுது போகாமல் தான் போட்டோ போட்டு அட்ச்சு வுட்றாங்கோன்னு நெனக்கிறேன்.

    ஐயா, தாங்கள் மெய்யாலுமே சமூஹ ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்றே நம்புகிறேன். நீங்கள் வெறும் வாதத்தில் ஈடுபடவில்லை என்று மெய்யாலுமே நம்புகிறேன். வாழ்க நுமது பணிகள். வளர்க அதன் வீச்சு.

    கொஞ்சமாவது……….. சாமி………. தம்மாத்தூண்டாவது……… நீங்கள் வெறும் வாதத்தில் இல்லாமல் ஈடுபடும் வெல்லம் போட்ட செயல்பாட்டை…………. ஒரு ரெண்டு மூணு லைன் மெனக்கெட்டு தயவு செய்து எழுதினீர்களானால் உங்களுடைய திருவாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிந்து கொள்ளாவிட்டாலும் தளத்து வாசகர்கள் தெரிந்து கொள்வார்கள் இல்லையா. அட கொஞ்சம் குறட்டையை விட்டு வெளியே வந்து இந்த ஹிந்து இயக்கங்களும் கூட தெரிந்து கொள்வார்கள் இல்லையா ஸ்வாமின்.

    ஏதோ பெரிய மனது செய்து இந்த போக்கத்த ஹிந்து இயக்கங்களுக்கும் ஹிந்துச் சான்றோர்களுக்கும் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்து அவர்களுடைய மீளா உறக்கத்திலிருந்து அவர்களை எழுப்பி அதன் மூலம் சரியான பாடம் புகட்டினீர்களானால் லோக க்ஷேமம் உண்டாகும் ஸ்வாமின் 🙂

  29. அன்பானவர்களுக்கு ,

    முதலில் தலித் என்ற அன்னியபடுதும் வார்த்தைகளை தவிக்கவும் .

    அட்டவணை சாதியினர் சாதிகளில் 76 சாதிகளை இருக்கின்றனர் . விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் நடத்தது இரு சமூகங்களுக்கு இடையே நடந்த இன மோதல் . இருவரும் அந்த மண்ணின் மைந்தர்கள் . இருவருமே இந்துக்களாகவே வாழ்பவர்கள் வாழ விருப்புகிறவர்கள் .

    இதில் இணையதளங்களில் மற்றும் நம் பத்திரிகைகள் சாதி இந்துக்களுக்கும் தலித்களுக்கும் மோதல் என்று எழுதுவது எப்படி நியாயம் ஆகும் . அவர்கள் இந்துக்கள் இல்லையா . வன்னியரை மட்டும் சாதி இந்துக்களாக வன்னியர் என்று கருந்துகளை பதியும் நீங்கள் பறையர் இனத்தவர்களை ஏன் பெயரை சொல்லி அழைபதில்லை.

    எங்கெல்லாம் தலித் என்ற வார்த்தை பதியபடுகிறதோ அங்கெல்லாம் இந்து மத ஒற்றுமைக்கு தீங்கு விதைக்கப்படுகிறது .

    எங்கெல்லாம் தலித் என்ற வார்த்தை பதியபடுகிறதோ அங்கெல்லாம் திராவிடம் என்ற சாக்கடை தெளிக்கபடுகிறது

    எங்கெல்லாம் தலித் என்ற வார்த்தை பதியபடுகிறதோ அங்கெல்லாம் பொரியசிசமும் போலி கம்நிசமும் ஒழிந்து இருக்கிறது .

  30. //விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் நடத்தது இரு சமூகங்களுக்கு இடையே நடந்த இன மோதல் . இருவரும் அந்த மண்ணின் மைந்தர்கள் . இருவருமே இந்துக்களாகவே வாழ்பவர்கள் வாழ விருப்புகிறவர்கள் .//

    Ok. It is a fact all too well known. In a place where two communities have been living from time immemorial, both of them are no doubt the ‘sons of the soil”. Quite agree with your point dear!

    But you have failedl to notice that the bone of contention is here temple-worship. The dalits (or, as you wish, the Paraiyars), want to worship their Amman and take Her in a procession. The Vanniayrs create troubles for them to do so. It should be explored by you why Vanniyars are doing so. Instead, you are attempting to sweep it under the carpet of it-is-just-a-problem-between-two-castes 🙁

    So long as temple worship creates a communal problem, the Hindu leaders have a role to play: to enter the scene so as to bring mutual understanding and amity between the communities. Many feedbackers here-in-above have asked the question

    How many of them have gone there; and how many acharyas in the delegation?

    As per yesterday Dinakaran, the paraiyars there want to leave Hindu religion en masse: why? I am not sure but can guess this. They have not received the protection and support from the Hindu groups that matter. No politicians have played any game there. It is purely religious. And the Hindu leaders have neglected their responsibilities.

    Of all the persons, it is you who should remember that: If parayars leave Hindu fold, do you know what will Vanniyars say? Who cares whether they are in or out?

    Can Hindu leaders say so? Ask the question to yourself, dear! Will you clap if parayars of the village leave? like Vanniayrs clapping?

    I want to impress you that it is a problem of religion. Not just a problem of castes.

    The readers here (I appluade them!), who have pointed out the neglect of Hindu groups, are now corroborated with the news that the Parayars are leaving the Hindu fold.

    What is the conclusion to draw: like vanniyas, the Hindu leaders too don’t care 🙁

    The Parayars (if I don’t call them with this name which the dalits don’t want to get attached with, you will call me a Periyarist, won’t you?) – they have said it only i.e. not actually done or not, I donno. It means there is still time left. Pujjashri Kanchi seer can take the lead as it is in Northern TN.

    Shri Bangaru adigalar is a risky bet here, for, his followers come mostly from intermediate castes, which are traditionally against daltis of TN being their notorious oppressors. If the Adikalar is seen to be siding or supporting the dalits, he may lose his base;

    But Kanchi Seer is a good bet here, for, the brahmins don’t much mind his bold efforts to intervene and mediate. Tamil brahmins, unlike Tamil intermediate castes, have progressed enought to accomodate such things comfortably. Therefore, the Swamiju can go to the village and assuage the wounded feelings of parayars.

    I wish a Vaishanava Acharya to go. But the parayars are worshippers of Amman and so, only a worshipper of Kamatchi Amman like the Kanchi Seer is fit to go.

    WHY NOT?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *