சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?

சமீபத்தில் லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியது ஹிந்தியில். அந்த செய்தி ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வழியாக தமிழுக்கு வருகிறது. அந்த செய்தி நவபாரத் டைம்ஸ் இதழில் வந்துள்ளவாறு அப்படியே கீழே தமிழில் தருகிறேன். (துளசிதாசரையும் பிரேம்சந்தையும் வாசிக்கும் அளவுக்கு, சராசரிக்கும் மேலானது எனது ஹிந்திப் புலமை என்பதையும் சொல்லியாக வேண்டும்).

संस्कृत सबसे अधिक वैज्ञानिक भाषा: राजनाथ सिंह

लखनऊ: केन्द्रीय गृह मंत्री राजनाथ सिंह ने संस्कृत भाषा को बढ़ावा देने की वकालत करते हुए रविवार को कहा कि दुनिया के अन्य देशों के विद्वान भी संस्कृत को सबसे अधिक वैज्ञानिक भाषा के रूप में मान्यता दे रहे हैं। सिंह अपने संसदीय क्षेत्र के तीन दिवसीय दौरे के अंतिम दिन राष्ट्रीय संस्कृत संस्थानों एवं संस्कृत भारती की तरफ से संस्कृत भाषा को घर-घर तक पहुंचाने के लिए शुरू किए गए गृहं-गृहं प्रति संस्कृतम सम्पर्क अभियान के श्रीगणेश के लिए आयोजित एक समारोह को संबोधित कर रहे थे।

அனைத்தினும் அதிகமான அறிவியல்பூர்வமான மொழி சம்ஸ்கிருதம்: ராஜ்நாத் சிங்.

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்ஸ்கிருத மொழி மேம்பாட்டை ஆதரித்து ஞாயிறன்று பேசிகையில், ‘அனைத்து மொழிகளினும் அதிகமாக சம்ஸ்கிருதம் அறிவியல்பூர்வமான மொழி என்று உலகின் மற்ற நாடுளில் உள்ள அறிஞர்களும் போற்றுகின்றனர்’ என்று கூறினார். தனது சட்டமன்றத் தொகுதியில் மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளில் ராஷ்ட்ரீய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் மற்றும் சம்ஸ்கிருத பாரதி நடத்திய “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்ற பெயரில் இல்லங்கள் தோறும் சம்ஸ்கிருத மொழியை எடுத்துச் செல்லும் மக்கள் தொடர்பு இயக்கத்தின் துவக்க விழாவில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

उन्होंने कहा, ‘संस्कृत भाषा के ग्रंथों में गूढ़ से गूढ़ दार्शनिक प्रश्नों के उत्तर उपलब्ध हैं, चाहे ललित साहित्य की बात हो, विज्ञान अथवा प्रौद्योगिकी अन्य देशों के विद्वान भी संस्कृत को सर्वाधिक उपयोगी भाषा के रूप में स्वीकार कर रहे हैं।’ यह कहते हुए कि सभी भाषाओं का मूल संस्कृत है, सिंह ने कहा कि सुपर कम्प्यूटर बना रहे नासा ने संस्कृत को कम्प्यूटर के लिए सबसे वैज्ञानिक भाषा होने की बात कही है। उन्होंने कहा, ‘अन्य देशों के विद्वान एक तरफ संस्कृत के प्रति आकर्षित हो रहे हैं। यहां तक कि अमेरिका और इंग्लैड के छात्र संस्कृत सीख रहे हैं। मगर विडम्बना है कि भारत उससे दूर हो रहा है।’

kumbakonam-dalit-sanskrit-studentஅவர் மேலும் கூறினார் – “சம்ஸ்கிருத நூல்களில் மிகப்பெரும் சிக்கல்கள் நிரம்பிய தத்துவக் கேள்விகளுக்கு விடைகள் தரப்புட்டுள்ளன. கலை இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சம்ஸ்கிருதம் அத்துறைக்கு மிகப் பயன்தரும் மொழி என வெளிநாட்டில் உள்ள அறிஞர்களும் ஏற்கின்றனர்”. சம்ஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று கூறிய திரு சிங், “சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் நாஸா நிறுவனமும் சம்ஸ்கிருதம் கணினிகளுக்கான அறிவியல் பூர்வமான மொழி என்பதைச் சொல்லியுள்ளது” என்று குறிப்பிட்டார். “ஒரு புறம் மற்ற நாட்டு அறிஞர்கள் சம்ஸ்கிருதத்தினால் ஈர்க்கப் படுகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மாணவர்கள் சம்ஸ்கிருதம் கற்கிறார்கள். ஆனால், விநோதம் என்னவென்றால், பாரதம் அதிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

अंग्रेजी के बट और पुट जैसे शब्दों का उदाहरण देते हुए, सिंह ने कहा कि वर्तनी और उच्चारण की दृष्टि से भी संस्कृत सर्वाधिक वैज्ञानिक भाषा है। उन्होंने कहा कि विभिन्न भाषाओं के उच्चारण में क्षेत्रवार भिन्नता सुनाई पड़ती है, मगर ध्वनि विज्ञान पर आधारित संस्कृत का उच्चारण देश और दुनिया के हर भाग में एक है। सिंह ने वैदिक गणित की उपयोगिता का जिक्र करते हुए कहा कि वर्ष 1991 में उत्तर प्रदेश का शिक्षा मंत्री रहते हुए उन्होंने इसे पाठ्यक्रम में शामिल किया था, मगर बाद में आई सरकार ने उसे पाठ्यक्रम से निकाल दिया।

ஆங்கிலத்தின் but, put ஆகிய சொற்களை உதாரணம் கொடுத்து, எழுத்திலக்கணம் (வர்த்தனி – orthography) மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றின் படி பார்த்தாலும், சம்ஸ்கிருதம் அனைத்திலும் அறிவியல்பூர்வமான மொழி என்பது புலப்படும் என்று அவர் கூறினார். “பல மொழிகளில், அவை பல்வேறு இடங்களில் பேசப்படும் பொழுது பற்பல வேறுபட்ட வடிவங்களைக் கேட்க முடியும். ஆனால், த்வனி விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைந்த சம்ஸ்கிருத உச்சரிப்பு நாடு முழுவதும், உலகின் பல பகுதிகளிலும் ஒன்று போலவே இருக்கும்” என்றார் அவர். வேத கணிதத்தின் பயன்களைக் குறிப்பிட்ட அவர், 1991ல் உ.பியின் கல்வி அமைச்சராகத் தாம் இருந்தபோது பாடத்திட்டத்தில் அதை சேர்த்ததாகவும், பிறகு வந்த அரசுகள் அதை நீக்கிவிட்டதாகவும் கூறினார்.

उन्होंने संस्कृत ग्रंथों में निहित ज्ञान को आधुनिक समाज की उन्नति और सफलता की सीढ़ी बताते हुए कहा कि इस भाषा को घर-घर तक पहुंचाना है और यदि इच्छाशक्ति है तो इसमें कामयाबी जरूर मिलेगी।

“சம்ஸ்கிருத மொழியில் உள்ளுறையும் ஞானம் நவீன சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் படிக்கட்டாக அமையும். விருப்பமும் உறுதியும் இருந்தால், இந்த மொழியை இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்வது என்ற இலக்கில் கட்டாயம் வெற்றி கிடைக்கும்” என்றும் அவர் கூறினார்.

நன்றி: https://navbharattimes.indiatimes.com/…/article…/48641995.cms

****

ஒரு ஒப்பீட்டுக்காக, இந்த செய்தி தி கிண்டு (தமிழ்) நாளிதழில் எப்படி வெளியாகியுள்ளது என்று பாருங்கள். “அறிவியல், தொழில்நுட்பத்துக்கு உகந்த மொழி சமஸ்கிருதம்: ராஜ்நாத் சிங்” என்று தலைப்பில் ஆரம்பித்து, அவர் பேசியது லேசாகத் திரிக்கப் பட்டுள்ளது தெரிய வரும். இது மொழி அறிவுக் குறைபாடா அல்லது திட்டமிட்ட ஊடக திரிசமனா என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

உண்மையில் ராஜ்நாத் பேசியதில் எந்த சர்ச்சையுமே இல்லை.

*அவர் பேசிய விழாவின் நோக்கமே “சம்ஸ்கிருதத்தை வீடுகள் தோறும் எடுத்துச் செல்வது” என்பது தான். அதை ஏற்பாடு செய்த இரு அமைப்புகளில் ஒன்று மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்கும் ரா.ச.சம்ஸ்தான்.

* அவர் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல. மொழியியலிலும், பாணினி இலக்கணத்தின் கட்டமைப்பிலும் ஓரளவு பரிச்சயம் உள்ளவர்கள் அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்வார்கள்.

*ACM (Association of Computing Machine) என்ற ஆய்வேட்டில் 1980களில் சம்ஸ்கிருதம் கணினி மொழியாகத் தகுந்தது என்பதை முன்வைத்து இரு ஆய்வாளர்கள் எழுதியிருந்த கட்டுரை மற்றும் இன்னும் சில நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்த சில உண்மையான கருத்துக்களைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் தவறேதும் இல்லை.

babasheb_Sanskrit

* சம்ஸ்கிருதத்தைக் குறித்து பெருமிதமாக விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், திலகர், காந்தி, பாரதியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், காமராஜர், கண்ணதாசன், அப்துல் கலாம் போன்ற பல்வேறு தலைவர்களும் கூறாத எதையும் அவர் கூறி விடவும் இல்லை. சம்ஸ்கிருத மேன்மை பிரகடனம் என்பது பாரத பண்பாட்டு மேன்மை பிரகடனத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கம்.

எனவே, இதில் எதிர்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன? அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை என்பதால் அது அப்படி அமைந்துள்ளதே அன்றி, அது அரசாங்கத்தின் மொழித் திணிப்புக் கொள்கையோ அல்லது இந்துத்துவ அரசின் வெறித்தனமோ அல்லது ஆரிய பார்ப்பன வடவர் சூழ்ச்சியோ எல்லாம் அல்ல. இந்த அடிப்பையான எளிய விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத முழு மூடத்தனத்திலும் மௌடீகத்திலும் தமிழ் ஊடகச் சூழலும், “அறிவுஜீவிகளும்” உள்ளனர் என்பது வெட்கக் கேடு.

தமிழ் இலக்கிய வம்புகளைக் கூட தனது கனமான ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ( Ananthakrishnan Pakshirajan  ), இந்த தி கிண்டு செய்தியை எடுத்துப் போட்டு தமிழில் தாம் தூம் என்று குதிப்பது தான் இதைவிடவும் பெரிய காமெடி. அவர் தில்லிக்காரர், ஹிந்தியில் சிங் பேசியதை அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனால், எதை எழுதினால் தமிழ் ஃபேஸ்புக் கும்பல்கள் கூடி ஆர்ப்பரிக்கும் என்று தெரிந்து அதை முயன்று பார்க்கிறார் போல. அமைச்சரின் மிக அமர்ச்சையான, பொறுப்பான இந்தப் பேச்சுக்கே இப்படி பொங்கும் இவர், தி கிண்டுவில் தனது சக கட்டுரையாளரான அப்துல் ரகுமான் ஆதாமும் ஏவாளூம் தமிழ் பேசியதில் ஆரம்பித்து விளாசித் தள்ளும் போலித் தமிழ்ப் பெருமை ஜல்லிகளைக் குறித்து ஏதாவது ஒரு வார்த்தை எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

மொத்தத்தில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எந்த பிரசினையையும் குற்றச்சாட்டையும் கிளப்ப முடியவில்லையே என்ற புகைச்சலும் நமைச்சலும் மட்டுமே இதில் தெரிகிறது.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

51 Replies to “சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?”

  1. ***********இது மொழி அறிவுக் குறைபாடா அல்லது திட்டமிட்ட ஊடக திரிசமனா என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்” —————–தமிழ் இந்துவில் வரும் பெரும்பாலான செய்திகள் ஊடக திரிபுதான் என்பதில் சந்தேகம் இல்லை.

  2. இதை இங்கு நான் கோடி கான்பிந்து பின்னூட்டம் போட்டன் வேறு கட்டுரையில். எல்லாம் தெரிந்த எழுதாளர்கலுக்கே இந்த வியாதி இறுக்கும் போது ஹிந்து வை குறை சொல்லி என்ன பயன் . ஹிந்து ராம் வழக்கு என்ன அன்னது என்ரே புரியவில்லை .!!

  3. தமிழகத்தில் பெரியாரிலிருந்து இன்றைய கலைஞர் வரை பகுத்தறிவுஎன்றே தெரியாது. என்கின்ற பெயரில் கடவுள் மறுப்பையும் பிராமண எதிர்ப்பையும் பரப்பி வந்திருக்கிறார்கள். இதை ஒரு பெரிய பாமரக்கூட்டம் நம்பி வந்து கொண்டிருக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஆன்மிகம் என்றால்l என்னவென்றே தெரியாது. இந்துத்வா என்றால் அது சம்ஸ்கிருதத்துடனும் பிராமனனுடனும் சமபந்தப்பட்டது என்று நம்பி வந்திருக்கிறார்கள். இந்துத்வா எதிர்ப்பு என்கின்ற இழையில் இணைந்திருக்கும் கண்ணிகள் எவை என்று பார்த்தால் ஒரு உண்மை புரியும். தாழ்நிலை மக்கள் என்று சொல்லப்படக்கூடிய ஜாதியினரும், பின் தங்கிய இனத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று முத்திரை குத்தி அவர்களையும் இந்துக்களில் உள்ள ஜாதி அமைப்பை குற்றம் சொல்லி தலித்துக்களையும் இணைத்து செயல்படுகிறார்கள். இவர்களுடன் விரோதிக்கு விரோதி நண்பன் என்கின்ற கணக்கில் சில இஸ்லாமிய மைப்புகளும் சேர்ந்து ஏற்கின்ற தீயில் எண்ணை விடுகிறார்கள். முழுக்க முழுக்க மதம் சொல்லும் கட்டளைகளின் படி தங்கள் தினசரி வாழ்கை அமைத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இந்து மததத்தை விமரிசிக்க எந்த தகுதியும் கிடையாது.. இவர்கள் இந்த மண்ணின் கலாச்சாரத்துக்கு பொருந்தாத ஒரு இறக்குமதி செய்யப்பட்ட மதத்தை பின்பற்றுபவர்கள். இந்தக்கூட்டமே இங்கு விஷம பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறார்கள்.

  4. கணினிக்குத் கையாளத் தெரிந்த மொழி எல்லாம் ஒன்றும் சுழியமும் மட்டுமே.

    சூடுபறக்க பரிமாறப்பட்ட சோற்றின் நட்டநடுவில் யாராவது கைவத்து பிடித்துஅள்ளி வாயில் போடுவார்களா? வில்லங்கமான செயல்களில் விளிம்புகளில் இருந்துதான் தொடங்கவேண்டும். வெள்ளைக்காரன் தான் வியாபாரம் மட்டும் செய்துகொள்வதாகத்தான் இந்தியாவில் கால்பதித்தான்.

    ஆக, சமஸ்கிருத இந்துத்துவாவிற்கு(த் தகுந்த?!) காரண காரியங்களைக் கற்பித்துத் தமிழகத்தில் அதற்கு இடம் அமைத்துக்கொடுத்துச் செழிக்கச் செய்ய உருவாக்கப்பட்ட தளம் தமிழ்ஹிந்து என்று சொன்னால் மிகையாகுமா?

  5. சமஸ்க்ரிதம் நன்கு கட்டமைக்கப்பட வழிவகுத்ததே தமிழ் தான். தமிழரான பாணினி மூலம் இந்த கட்டமைப்பு உருவாக்கப் பட்டது. இலக்கியவளம் மிகுந்த சமஸ்க்ரிதம் எக்காலத்தும் மக்களின் பழகு மொழியாக இல்லை.
    ஆகவே, அதில் வட்டார வழக்குகளுக்கு வாய்ப்பு இல்லை. மறைமொழி, பெரும்பான்மையான மக்களிடம் இருந்து மறைக்கபட்டே வந்துள்ளது. இப்போது தமிழ், சமஸ்க்ரிதம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழி களையும் போற்றி வளர்க்க நம் நடுவண் அரசு முனைய வேண்டும்.

  6. சம்ஸ்க்ருதம் பற்றிய விவாதம் எழுந்து விட்டால் அதில் மற்ற விவாதங்கள் எடுபடவே படாது.

    ம்………. இதில் த கிண்டு அலையஸ் த சிண்டு வின் சிண்டு முடிதல் சமாசாரங்களும் மெய்ன் ஸ்ட்ரீம் மீடியாவின் பச்சைப் புளுகு புளுகும் அயோக்யத் தனமும் பேசவே படாது.

    மெய்ன் ஸ்ட்ரீம் மீடியாவின் அயோக்யத் தனமும் அதன் பச்சைப்புளுகுகளும் சிவப்புப்புளுகுகளும் விலாவாரியாக தனி வ்யாசத்தில் தரவுகள் சார்ந்து தனியாக துவைத்து வெளுத்துக் காயப்போடவேண்டும்.

  7. Whatever it may be,weather it is science or learning is good for our people ,our stupid Dravidian tamilnadu government won’t let our people to learn this wonderful language in our tamilnadu. We won’t get redemption until Dravidian parties die in our state.

  8. மதிப்பிற்குரிய முத்து ஐயா

    எட்டிக்காயாய் கசப்பது மாங்கனி என்று நீங்கள் சொல்லிவிட்டதால் மாங்கனியின் சுவை கசப்பாகி விடுமோ?

    \\ ஆக, சமஸ்கிருத இந்துத்துவாவிற்கு(த் தகுந்த?!) \\

    ஹிந்து மதம் என்பது வைதிக, சைவ, வைஷ்ணவ, சாக்த, பௌத்த, ஜைன, சீக்கிய மற்றும் எண்ணிறந்த நாட்டார் வழிபாடுகளை உள்ளடக்கிய மதம். ஹிந்துஸ்தானத்தின் சட்டப்படி இஸ்லாமியர்களும், க்றைஸ்த்வர்களும், பார்ஸிகளும் மற்றும் யஹூதிகளும் மட்டிலும் ஹிந்துக்களாகக் கருதப்படவில்லை. இன் கம் டேக்ஸ் சட்டத்தின் அவிபக்த ஹிந்துக்குடும்பம் என்று தனித்ததான ஒரு ஸ்டேடஸின் கீழ் இன் கம் டேக்ஸ் ரிடர்ன் தாக்கில் செய்யும் உரிமை. மேலே ஹிந்துக்களாகக் கருதப்படும் அனைவருக்கும் உரித்தானது.

    விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஹிந்துத்வ இயக்கங்களின் செயல்பாடுகளில் இந்த சமயத்தவர் அனைவரும் ஈடுபடுவது கண்கூடு.

    ஹிந்து மதம் என்ற படிக்கு யார் ஹிந்து என்று சட்ட ரீதியில் வேண்டுமானால் இஸ்லாமிய, க்றைஸ்தவ, பார்ஸி மற்றும் யஹூதிகள் வெளியே இருக்கலாமே ஹிந்துஸ்தானத்தின் பெருமளவு ஒற்றுமை உள்ள கலாசரத்தில் பங்கு கொள்வதில் இந்த மதங்களைச் சார்ந்த சஹோதரர்களுக்கும் முழு உரிமை உண்டு. ஹிந்துஸ்தானத்தின் கலாசாரத்தை ஏற்று அதற்குப் பங்களிக்கும் இந்த சஹோதரர்களையும் ஹிந்துக்கள் என்றே ஹிந்துத்வ இயக்கங்கள் ஏற்றுக்கொள்கின்றன. உடனே தமிழன் அரிசி சாப்பிடுகிறான் வடக்கத்திக்காரன் ரொட்டி சாப்பிடுகிறான். தமிழன் தமிழ் பேசுகிறான் வடக்கத்திக்காரன் வேற்று மொழிகள் பேசுகிறான் என்று வேற்றுமைகளை உயர்த்திக் கொடிபிடிக்க அவச்யமில்லை.

    ஒரே கையினில் ஐந்து விரல்கள் இருந்தாலும் எல்லாமே ஒரே பரிமாணத்தில் இல்லையே. ஐந்தையும் விரல்கள் என்று சொல்லிவிட்டாலும் கூட ஒன்றொன்றுக்கும் பெயர் வேறு வேறு ஆயிற்றே. ஒவ்வொரு விரலுக்கும் பேர் வெவ்வேறு என்றாலும் கூட அவற்றை விரல் என்று சொல்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை பாரீர்.

    மிகப் பரந்து விரிந்த கோட்பாட்டினை உடைய ஹிந்துமதத்தையும் ஹிந்துத்வத்தையும் வைதிக சமயத்தில் மட்டிலும் மூட்டை கட்டி அல்லது அதனை ஒரு மொழியுடன் மட்டிலும் சம்பந்தப்படுத்தி மற்ற மொழிகள் அதனின்று அன்னியம் என்று கூச்சல் போடுவது ஹிந்து வெறுப்பாளர்கள் செயல்பாடாக இருக்கலாம். சில சமயம் ஹிந்துத்வத் தரப்பைச் சார்ந்தவர்கள் எழுதும் போது கூட வைதிக சமயத்தைப் பற்றி விளக்குமுகமாக எழுதப்படும் ஒரு விஷயத்தை ஹிந்து மதம் என்று அவதானிக்கும் போதெல்லாம் திருப்பித் திருப்பி அதில் காணப்படும் தவறை நான் சுட்டிக்காட்டுவதுண்டு.

    ஹிந்துத்வாவில் சம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் பாரதத்தில் பிறந்து தழைக்கும் அனைத்து மொழிகளும் உண்டு. சர்வ நிச்சயமாக் ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைக்கும் உர்தூ மொழிக்கும் கூட அதில் அசைக்க முடியாத பங்குண்டு.

    சம்ஸ்க்ருத மொழி பேசும் விஷயங்கள் அமேரிக்காவைப் பற்றியோ ஆப்பரிக்காவைப் பற்றியோ அல்லது அரேபியாவைப் பற்றியோ இல்லை. இல்லவே இல்லை. காஷ்மீரம் முதல் கன்யாகுமாரி வரைக்குமான கட்ச் முதல் டிப்ரூகர் வரைக்குமான மேலும் அதை ஒட்டிய அடுத்த பகுதிகளைப் பற்றிய நிலப்பரப்புகளைப் பற்றியும் அங்கு வாழும் மனிதர்களது வாழ்க்கை மற்றும் அறம் பற்றியே சம்ஸ்க்ருதம் பேசுகிறது.

    சம்ஸ்க்ருதம் என்ற மொழியின் இலக்கியக் களஞ்சியத்திற்கும் வடக்கத்தியர் மட்டிலும் பங்காளர்கள் அல்லர். முழுமையான ஹிந்துஸ்தானமும் மற்றும் ஹிந்து மதத்தின் எந்தெந்த சமயங்கள் ஹிந்துஸ்தானத்து நிலப்பரப்புக்கு வெளியே பரந்து விரிந்ததோ அந்த நிலப்பரப்பைச் சார்ந்தவர்களும் கூட சம்ஸ்க்ருத இலக்கியத்துக்கு பங்களித்துள்ளனர். தமிழக நிலப்பரப்பிலிருந்து சம்ஸ்க்ருதத்துக்கு பங்களித்தவர்களும் இதில் அடங்குவர். தமிழகத்தின் அனைத்து ஜாதியைச் சார்ந்த அன்பர்களும் இதில் அடங்குவர். இல்லாவிட்டால் ஒரு மொழியுடன் ஜாதியைப் பிணைத்து கும்மியடிக்க விழையும் அவலம் தொடங்கி விடும்.

    ஹிந்துஸ்தான முழுதும் உள்ள வெவ்வேறு ப்ராந்தியங்களில் வேறுபாடுகள் நிச்சயம் உண்டு. உணவு, உடை, மொழி என பல விஷயங்களில் நிச்சயம் வேறுபாடுகள் உண்டு. அறவிழுமியங்களில், இலக்கியம், இசை போன்ற கூறுகளில் சமயம் மற்றும் மொழிகளைத் தாண்டி சர்வ நிச்சயமாக அசைக்க முடியாத கருத்தொற்றுமைகளும் உண்டு. உண்டு. உண்டு. இதையே ஹிந்துத்வம் என்று ஹிந்துத்வர்கள் சொல்லுகின்றனர்.

    பௌத்த சமயத்து நூற்களையும் தமிழ் இல்லக்கியங்களையும் ஹிந்தி இலக்கிய நூற்களையும் வாசிக்கையில் வெறுப்பு கசப்பு போன்ற பாவனைகளின்றி இவை அனைத்தும் நமது என்று பாவனையில் வாசிக்கையில் நிச்சயமாக இந்த ஒற்றுமைகள் காணக்கிட்டும். ஏன் ரஹீமுடைய தோஹாக்களிலும் தமிழ் மொழியின் அற நூற்களிலும் கூட அற விழுமியங்களில் ஒற்றுமை காணக்கிட்டும். ரஹீம் யவனக் குடும்பத்தில் பிறந்தவர். ஆயினும் கருமாணிக்கப்பெருமான் கண்ணனிடம் ஆறாக்காதல் கொண்டவர். அரபி, பார்ஸி மொழிகள் தவிர சம்ஸ்க்ருதத்திலும் அவதி பாஷையிலும் பாரங்கதம் பெற்றவர். அப்படி இருந்தும் கூட ஒரு முஸல்மானாகவே இறந்தவர்.

    இவர் எழுதிய சம்ஸ்க்ருத மொழியிலான ஜோதிஷ நூல்கள் இன்று வரை உத்தரபாரதத்தில் அனைத்து சமயத்தவராலும் கொண்டாடப்படுகிறது.

    அப்படியே உர்தூவும். இதை இஸ்லாமியர் மொழி என்று கும்மியடித்து விட்டால் அதை ஹிந்துஸ்தானத்தின் சொத்து என்று சொல்லுவதில் இருந்து பிரித்து வைத்து விடலாம். ஆனால் ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைக்கும் இந்த மொழியில் கஜல் பாடல்களைப் பாடி கஜல் ஸ்ரீநிவாஸ் அவர்கள் இதனை ஏழுமலையான் திருவடிகளுக்கே சமர்ப்பித்து விட்டார்.

    தமிழுக்கென்று நானும் நீங்களும் உட்பட ஒவ்வொரு தமிழனும் மார்தட்டிக்கொள்ளும் தனித்த சிறப்புகள் உண்டு.

    ஆனால் தமிழ் மொழி மற்றும் தமிழரது மரபுகள் மனித சமுத்ரத்தில் தனித்த ஒரு தீவு என்றும் அந்தத் தீவின் வெளியே உள்ள மற்ற மனிதத் தீவுகளில் உள்ள வேற்று மொழியினருடைய தீவுகளுடன் சம்பந்தப்படாத ஒரு தனித்த தீவு என்ற படிக்கான உருவகம் ஏற்புடையதல்ல.

    ஹிந்துத்வா என்று ஹிந்துத்வர்கள் சொல்லும் விளக்கமே ஹிந்துத்வா ஆகும்.

    நீங்களோ அல்லது வேறு யாருமோ வெறும் வெறுப்பின் பாற்பட்டு மட்டிலும் கசப்பின் பாற்பட்டு மட்டிலும் பிரிவினை வாதத்தின் பாற்பட்டு மட்டிலும் வேறுபாடுகளின் மீது மட்டிலும் ஒரு கோட்பாட்டைக் கட்டமைத்து அதனை ஹிந்துத்வம் என்று சாதிக்க விழைவது ஹிந்துத்வம் ஆகாது.

  9. Already school children are overburdened with syllabus. They study in three language formula in many States. You want to add one more to that. Please consider the children kindly.

  10. முத்து

    கணினிக்கு 1,0 தான் தெரியும் என்று புட்டு புட்டு வைகிறீர்கள். அப்போ ஜாவா சி ஷார்பெல்லாம் என்னவாம். நீங்கள் சொல்வது அடித்தளத்தில் உள்ள டிஜிட்டல் லாஜிக்.

    கணினித் துறையில் natural language programming என்று ஒரு துறை உண்டு. இதற்க்கு சமஸ்க்ருதம் தான் மிகவும் ஏற்ற மொழி என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒன்றே. கொஞ்சமேனும் விஷயம் என்ன என்பதை விளங்கிக்கொண்டு எழுதவும்.

    சமஸ்க்ருதம் நல்ல மொழி என்று ஒத்துக் கொள்வதால் தமிழன் குடி முழுகி போய்விட மாட்டன்.

  11. முத்துவுக்கு தெரியாது சமஸ்கிருதம் என்றால் என்னவென்று. ஏனெனில் மீடியாவின் பொய் செய்திகளை கேட்டு மயக்கத்தில் இருப்பவர் போல தெரிகிறது. நாத்திகம் என்ற பெயரில் போலி வியாபாரம் செய்து பரிசுத்த ஆவியை எழுப்பும் கூட்டங்களை நடத்திவரும் பெரியார் வாரிசுகளை விட அதிகமான , உண்மையான நாத்திக கருத்துக்களை நூல்களாக தன்னகத்தே கொண்ட மொழி உலகிலேயே சமஸ்கிருதம் தான்.

    சிவபிரானின் உடுக்கையின் வலது பக்கத்திலிருந்து தமிழும், இடது பக்கத்தில் இருந்து சமஸ்கிருதமும் வெளிப்பட்டன . இரு மொழிகளும் சகோதரிகளே ஆகும். முத்து போன்றோர் விரைவில் உண்மையை புரிந்து கொள்வார்கள். நிற்க கம்ப்யூட்டரில் ஒன்று, சைபர் ( முத்துவின் சுழியம்) இந்த இரண்டை தவிர வேறு எழுத்துக்களும் உண்டு என்று தகவல் தெரிவித்த திரு சாரங் அவர்களுக்கு நன்றி. நேச்சுரல் லாங்குவேஜ் புரோகிராமிங் பற்றி நான் நிறையப் படிக்கவேண்டும். நண்பர் முத்துவும் தான் என் ரகம் போல இருக்கிறது.

  12. ///////////நீங்களோ அல்லது வேறு யாருமோ வெறும் வெறுப்பின் பாற்பட்டு மட்டிலும் கசப்பின் பாற்பட்டு மட்டிலும் பிரிவினை வாதத்தின் பாற்பட்டு மட்டிலும் வேறுபாடுகளின் மீது மட்டிலும் ஒரு கோட்பாட்டைக் கட்டமைத்து அதனை ஹிந்துத்வம் என்று சாதிக்க விழைவது ஹிந்துத்வம் ஆகாது.//////////

    உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இஸ்லாமிற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாட்டைக் கொண்டுதான் இந்து என்னும் சொல்லும் இந்துத்துவா என்னும் சொல்லும் கையாளப்படுகின்றன.

    ////////கணினிக்கு 1,0 தான் தெரியும் என்று புட்டு புட்டு வைகிறீர்கள். அப்போ ஜாவா சி ஷார்பெல்லாம் என்னவாம். நீங்கள் சொல்வது அடித்தளத்தில் உள்ள டிஜிட்டல் லாஜிக். ///////

    அந்த க்லாசிக்கல் பைனரி டிஜிட்டல் லாஜிக்கைத் தாண்டி க்வாண்டம் பிட்/Qubit பற்றி தெரியுமா? எனக்கு Fortran தவிர வேறு எந்த Programming languageம் இதுவரை தேவைப்படவில்லையாதலால் தற்போதைக்குத் தெரியாது. Natural Language Processing பற்றியும் கூட எனக்கும் கொஞ்சம் தெரியும். Once common people were even banned to learn the language and its literature. Now suddenly the same kind of people who banned dream of everyone to learn and everything to be in that language. Oxymoronic!

    ///////முத்துவுக்கு தெரியாது சமஸ்கிருதம் என்றால் என்னவென்று.///////

    சமஸ்கிருதம் படிக்க மட்டும் தெரியும். அது ஒருமொழி என்ற மட்டில் அதன் மேல் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. தமிழில் உள்ள சமஸ்கிருத கூறுகள் மட்டும் தெரியும். சமஸ்கிருதத்தாலும் மணிப்பிரவாளத்தாலும் தமிழ்பட்ட பாடும் தெரியும்.

    ///////இரு மொழிகளும் சகோதரிகளே ஆகும்.//////

    Linguistics படி பார்த்தால், இந்த இருமொழிகளுமே வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் சகோதரிகள் என்று கூறமுடியாது என்னும் மட்டும் தெரியும்.

    ////////நண்பர் முத்துவும் தான் என் ரகம் போல இருக்கிறது.///////

    இல்லைங்க, நான் உங்கள் ரகம் இல்லை 🙂

  13. திருமிகு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, பொருளியல் வல்லுனர்களின் விளக்கமே பொருளியல் என்ற ஒரு வழக்கு உண்டு.அதுபோன்றே, இந்த நாட்டில் (வரையறுக்கப்பட்ட) இந்துக்களின் வாழ்வியலே இந்துமத விளக்கம் என்ற தங்களின் கருத்து சிறப்பானது. ஆயினும், நடைமுறையில் நாம் காணும் காட்சி தாங்கள் அறியாதது அல்ல.

  14. தாயே.. கொன்னுடீங்க போங்க.. அப்ப ஆங்கிலம் பிரெஞ்சு லத்தின் போன்ற மொழிகள் எல்லாம் யார் உடுக்கை அடிச்சு ஒட்டினது… சீ.. உருவாக்கினது.. ஒரு வேளை உலகின் முதல் மொழிகளான தமிழும் சமற்க்ருதமும் தான் பல்கி பெருகி சீனம் கிரேக்கம் போன்று பல மொழிகளாக இந்த உலகில் உருவெடுத்திருக்கலாம் யார் கண்டது. எல்லாம் சமஸ்க்ருதம் போட்ட பிச்சை. இன்னும் சீனம் எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகள் எல்லாம் யார் உடுக்கை அடித்து படைத்தார்கள் என்றுக் கூறினால் என் போன்ற பாமரர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். சாரங்கு போன்ற நபர்கள் அவுத்து விடும் சரடுகளைக் கூட மூக்கை பொத்திக் கொண்டு தாங்கிக் கொள்ளலாம். ஆனால், சிவ பிரானின் உடுக்கை ஓசையைத் தான் தாங்க முடியவில்லை. காது ஜவ்வு கிழிந்து ரத்தம் கொட்டுகிறது.. சிவ.. சிவா ..

  15. அன்பின் ஸ்ரீ தனசேகரன்

    \\ ஆயினும், நடைமுறையில் நாம் காணும் காட்சி தாங்கள் அறியாதது அல்ல. \\

    ஆமாம் ஐயா. நடைமுறையில் நாம் காணும் நிகழ்வுகள் நாம் வெட்கித் தலைகுனியத் தக்கவை. குறைந்த பக்ஷம் இதை ஒப்புக்கொள்ளவாவது வேண்டும். அப்போது தான் வெட்கித் தலைகுனியத் தக்க யதார்த்த வாழ்வினை ஆதர்சங்களின் திசைக்குத் திருப்ப ப்ரயாசையாவது செய்ய முடியும்.

    ஹிந்துத்வத்தைப் பற்றி நான் பகிர்ந்தது கூட என் புரிதல் தான். இதில் பிழைகள் கூட இருக்கலாம்.

    ஆனால் நிஸ்ஸம்சயமாக எனக்குப் புரிந்தது

    இது ஒரு மொழியிலோ ஒரு ப்ரதேசத்திலோ அல்லது ஒரு சமயத்திலோ ………… ஏன் ஒரு மதத்திலோ கூட ……….. இறுக்கமாகக் கட்டப்பட்ட கட்டவிழ்க்கப்பட முடியாத ஒரு மூட்டை இல்லை.

    அனாதி காலமாக ஓடும் வற்றாத ஒரு ஜீவநதி. பழையன கழிதலும் புதியன புகுதலும் என தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் ஜீவநதி. இந்த ஜீவநதியின் ஆதார ச்ருதி மனிதரின் வாழ்க்கைக்கு ஆதாரமான நீர். ஆயினும் ஒரு பெருநதியாதலால் பலப்பல கிளைநதிகள் இதில் தொடர்ந்து கலந்த வண்ணம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் சற்றே வித்யாசமான சுவை. வித்யாசமான நிறம். ஆனால் பாருங்கள் அந்தக் கிளை நதிகள் கூட நீரையே இந்த ஜீவநதியில் இணைக்கின்றன.

    குமரியில் சமுத்ர சங்கமத்தில் பார்த்தால் இந்த அருமை தெரியும். முக்கடல் கூடும் அழகு. ஒவ்வொரு புறம் ஒவ்வொரு நிறம்.

    ஜீவநதி ஹிந்துமதம். கிளைநதிகள் அதில் சங்கமமாகும் பற்பல சமயங்கள். கோட்பாடுகள். திருவள்ளுவரும், வேத வ்யாசரும், கம்பனும், வால்மீகியும், அபிநவகுப்தரும் ஆறுமுகநாவலரும், நாயன்மார்களும், வள்ளல் அருணகிரிப்பெருமானும்,ஆழ்வார்களும், அஷ்டசாப்கவிகள் எனப்படும் கண்ணனைப் பாடிய எட்டு விருந்தாவனத்துக் கவிகளும், தர்மகீர்த்தியும், ச்ராவக சான்றோர்களும், ரஹீமும், ரஸ்கானும், கபீரும், குணங்குடி மஸ்தான் சாஹிபும், ஸ்ரீ சாமுவேல் வேதநாயகம் பிள்ளையவர்களும் எனத் தொடரும் ஒரு ப்ரவாஹத்தில்…….. இன்றைய தினத்தில் ஒரு ஸ்ரீ ஜெயமோஹனும், ஸ்ரீ ஜோ.டி.குரூஸும், ஸ்ரீ எச்.ஜி.ரஸூல் அவர்களும்………… இப்படி எண்ணிக்கையில் அடங்காத மிக உயர்வான கிளைநதிகள் சங்கமாகும் வற்றாத ஜீவநதி ஹிந்து மதம். வெவ்வேறு கோட்பாடுகள் உடைய இவற்றின் இடையே காணப்படும் ஒற்றுமைகளை ஒன்றாக இணைக்கும் இழை ஹிந்துத்வம்.

    ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் க்ஷமிக்க வேண்டும். இந்த வ்யாசத்தின் கருப்பொருள் பத்திரிக்கைக் காரர்களின் கயமைத்தனமா? அல்லது சம்ஸ்க்ருத பாஷைக்கு எதிராகத் தேவையற்ற பூச்சாண்டி காட்டுதலைக் கட்டுடைப்பதா? தெரியவில்லை.

    ஹிந்துத்வம் என்ற கோட்பாடு தேவையில்லாமல் குறுகிய நோக்கத்தில் விவரிக்கப்பட்டதை எனக்கு புரிந்த அளவில் மறுதலித்து எழுத நேர்ந்து விட்டது.

  16. அன்பின் ஸ்ரீ முத்து

    \\ இஸ்லாமிற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாட்டைக் கொண்டுதான் இந்து என்னும் சொல்லும் இந்துத்துவா என்னும் சொல்லும் கையாளப்படுகின்றன. \\

    ஹிந்துத்வம் என்ற கோட்பாடு மிகப் பரந்ததாகியது. இதன் அடிநாதம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வழிபட்டாலும் இறைவனின் திருவடிநீழலை அடைய முடியும். இது ஹிந்து மதத்தின் அடிப்படை.

    ஒட்டு மொத்த ஆப்ரஹாமியம் இதற்கு நேர் எதிரானது. ஆப்ரஹாமிய அடிப்படை வாதம் என்பது இதற்கு நேர் எதிரானது என்று மட்டுமில்லாமல் பரந்து விரிந்த கோட்பாடுகளைப் பின்பற்றும் ஹிந்துக்களை ஜபர்தஸ்தியாக மிகக் குறுகிய ………..சித்தாந்த அளவில் மிகத் தாழ்ந்த ஒரு கோட்பாட்டுக்கு ………… இழுத்துவர அச்சுறுத்துவது.

    இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கும் ஹிந்துத்வ அடிப்படை வாதத்திற்கும் உள்ள வானுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி வெள்ளிடைமலை.

    அடிப்படை வாதம் என்ற சொல் புத்திஜீவிகளால் எதிர்மறையாக உபயோகப்படுத்தப்படும் சொல். ஆனால் எது அடிப்படை என்று ஆராய்வோருக்கு இந்த வித்யாசம் நிச்சயம் புலனாகும்.

    \\ சமஸ்கிருதத்தாலும் மணிப்பிரவாளத்தாலும் தமிழ்பட்ட பாடும் தெரியும். \\

    ஆமாமாம். ஆங்க்லத்தால் தமிழுக்கு எந்தப் பாடும் இல்லவே இல்லை பாருங்கள். தமிழ்ப் பொன்னிப்புனலுடன் கலந்த ஆங்க்ல வைன் என்ற கலப்பு சரக்கு பரம பவித்ரமானது போலும். மொழிக்கலப்பு மிகவும் இயல்பானது என்று பொது வாழ்வில் பல மொழி பேசுபவருடன் பழகிய படிக்கு தமிழுடன் கலந்த ஆங்க்லத்தையும் நான் இயல்பாக மட்டிலும் பார்க்கிறேன்.

    ஒரு சில தொல்லைக்காட்சிகளை விடுத்து பொதுவில் தமிழில் ஒளிபரப்பாகும் எந்தத் தொல்லைக்காட்சியைப் பார்த்தாலும் டம்ளர்கள் பேசும் டமில் மொளி உனர்ச்சி புர்வமான புர்ச்சியான மொளி. இது தான் டமில் மொளி என்று துண்டு தாண்டி கூட டம்ளர்கள் சத்யம் செய்யலாம்.

    இதை நீங்கள் கண்டு கொள்ளவும் கூட மாட்டீர்களோ. இதனால் தமிழுக்கு எந்தப்பாடும் இல்லையோ?

    தன்னுடைய மொழித்தூய்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற சங்கல்பத்தைக் கொண்டவர்கள் இருக்கும் வரை எந்த மொழியாலும் எந்த மொழியும் எந்தப் பாடும் பட முடியாது.

    உலகில் மனிதர்கள் தனித்த தீவுகளில் நிச்சயம் வசிப்பதில்லை. ஜன சமுத்ரத்தில் பற்பல மொழிகள் ஒன்றுடன் ஒன்று இயைவது மிக இயல்பான ஒன்று என்பது பற்பல மொழியினருடன் பழகினால் இது ஏதோ தமிழுடைய நிலைமை மட்டிலும் இல்லை என்பது புரிய வரும்.

    கலப்பு மொழிநடை தூய்மையான மொழிநடை இரண்டும் எல்லா மொழிகளிலும் எக்காலத்திலும் தொடர்ந்து இருந்து வரும் ஒரு விஷயம். சம்ஸ்க்ருதமும் கூட இதற்கு விதி விலக்கில்லை. சம்ஸ்க்ருத நாடகங்களில் சங்கதம் பாகதம் என்ற இரு மொழிநடைகள் ஊடும் பாவுமாகவே இருக்கும். சம்ஸ்க்ருதம் வாசிக்கத் தெரிந்த நீங்கள் உதாரணத்திற்கு உத்தரராமசரிதத்தையும் மத்தவிலாஸப்ரஹஸனத்தையும் பாருங்கள்.

    மொழித்தூய்மையில் அக்கறை உள்ளவர்கள் கலப்பு நேரவே கூடாது என்று மிகக் கவனமாக இருப்பார்கள். இது மிகவும் உயர்வான செயற்பாடு தான். சந்தேகமே இல்லாமல்.

    ஆங்க்லம் தமிழுடன் கலப்பதை பரம பவித்ரமாக நினைத்து சம்ஸ்க்ருதம் தமிழுடன் கலப்பதை மட்டிலும் தீட்டாக நினைப்பது ………..மொழித்தூய்மைப் பற்றி லவலேசமும் கவலையில்லாத ஆனால் வெற்றுக் கோஷத்தால் மட்டிலும் தூய தமிழின் மீது அக்கறை உள்ளது போல் நடிக்கும் இழிவான பொழுதுபோக்காளர்களின் செயல்பாடு.

    பரங்கிக் கும்பினியருக்கு விலை போன இந்த டம்ளர்களுக்கு தமிழ் மொழியில் கலப்பு என்பது ப்ரச்சினையே இல்லை. தமிழில் எது கலக்கிறது என்பதில் தான் ப்ரச்சினை.

    தமிழ் மொழியின் தூய்மைக்கு வாஸ்தவத்தில் எதிலிருந்தாவது மிகப்பெரிய ஆபத்து என்றால்…………

    ஒரு புறம் சகட்டு மேனிக்கு தமிழுடன் ஆங்க்லத்தை கலந்து கட்டிக்கொண்டே சம்ஸ்க்ருதம் தமிழில் கலப்பதற்கு மட்டிலும் முதலைக்கண்ணீர் விடுவது மட்டுமில்லாமல்…………

    ஆங்க்லம் கலந்த தமிழை கலப்பில்லாத தமிழ் போலவும் தூய தமிழ் போலவும் நாடகமாடும் இழிநிலை.

    உரத்துக் கூச்சல் போடுதலே உண்மை என்றால் ஆங்க்லம் கலந்த தமிழே மெய்யான தூய்மையான தமிழ் என்று கல்வெட்டில் கூட பொறித்து விடுவார்கள்.

  17. அன்பின் ஸ்ரீ முத்து

    \\ \\ இஸ்லாமிற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாட்டைக் கொண்டுதான் இந்து என்னும் சொல்லும் இந்துத்துவா என்னும் சொல்லும் கையாளப்படுகின்றன. \\

    https://tamilhindu.com/2010/03/hindutva-three-types/

    ”Hindutva is understood as a way of life or a state of mind and is not to be equated with or understood as religious Hindu fundamentalism”.- Supreme Court of India.

    ஹிந்துக்களில் ஒருசாராரது செயற்பாடுகள்………… பொத்தாம் பொதுவாக இல்லாமல்……….. மிகக்குறிப்பாக இடம் பொருள் நபர் என்று தரவுகளுடன் பகிரப்படும் செயற்பாடு………… மேற்கண்ட ஆதர்சத்திலிருந்து மாறுபட்டது ………… என்று பகிரப்பட்டால் அது நிச்சயம் விவாதத்துக்கு உரியது……….

    அதை விடுத்து முழு முனைப்புடன் தரம் தாழ்ந்த செயற்பாட்டுக்கு ஹிந்துத்வம் என்று நாமகரணத்தை அளித்து ஹிந்துத்வத்தை இழிவு படுத்த முனைவது சரியல்ல.

  18. தாயுமானவன்
    “தாயே.. கொன்னுடீங்க போங்க.. அப்ப ஆங்கிலம் பிரெஞ்சு லத்தின் போன்ற மொழிகள் எல்லாம் யார் உடுக்கை அடிச்சு ஒட்டினது… சீ.. உருவாக்கினது..” பகுத்தறிவை ஃபாரிங்கார்னிடம் கடன்வாங்கினா இப்படித்தான் பேசுவாங்க. சுயமாக பகுத்து அறிதல் வேண்டும். ஒரு ஆம்பளை எப்படித்தாயாக முடியுமுன்னு கேட்டால்? என்ன சொல்லுவீங்க. ஒரு ஆம்பளைத்தாயாக முடியாது ஆனால் பெண்ணாகமுடியாது என்பதுவரைக்கு இன்றைய அறிவியல் வந்திருக்கிறது. சிவபுராணத்தில் இலா என்ற அரசன் பெண்ணாய் கருவுற்றுக்குழந்தைப்பெற்றக்கதையும் வரும். வருங்காலத்தில் அதுவும் கூட நடைமுறையில் சாத்தியமாகலாம்.
    மொழி என்பது என்ன? எழுத்தா(ஒளி) ஒலியா என்றுக்கேட்டால் ஒலிதான் முதலில் தோன்றியது என்று இன்றைக்கு மொழியியல் வல்லுனர்கள் பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் மொழி எப்படித்தோன்றியது என்பதில் கருத்தொற்றுமை இல்லை. அதுபற்றிப்பலக்கோட்பாடுகள் அவர்களிடத்தில் உண்டு. ஒருசிலக்கோட்பாடுகளை கீழேக்காண்க.
    https://mentalfloss.com/article/48631/6-early-theories-about-origin-language
    அப்படி ஒருக்கோட்பாடுதான் சிவனாரின் துடியிலிருந்து தமிழும் வடமொழியும் வந்தது என்பது. ஈசானம் சர்வ வித்யானாம் என்று சொல்வார்கள். சிவபெருமானே கலைகள் வித்தைகள் எல்லாவற்றிற்கும் மூலமாய் விளங்குகிறார்கள். உண்மையான சைவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
    உடுக்கை ஒலி, மணி ஒலி, பறை ஒலி எல்லாம் ஓம் காரத்தினைத்தான் காட்டுகின்றன. ஓம் அ உ ம என்ற மூன்றெழுத்தின் கூட்டெழுத்தாகும். ஓம் காரத்திலிருந்து ஐம்பது அக்ஷரங்கள் எழுந்ததாகவும் சொல்லுவதுண்டு.
    எந்தையும் தாயுமான சிவபெருமானுடையத்துடியிலிருந்து மொழிபிறந்தது என்பதன் பொருள் ஒலியே மொழியின் மூலம் என்பதே.

  19. தாயுமானவன்
    ஆனால், சிவ பிரானின் உடுக்கை ஓசையைத் தான் தாங்க முடியவில்லை. காது ஜவ்வு கிழிந்து ரத்தம் கொட்டுகிறது.. சிவ.. சிவா .. தாயுமானவர் பெரிய சைவ ஞானி என்று அறிவோம். தமிழ் ஹிந்துவில் தம்மை சைவராகவே திரு தாயுமானவன் அடையாளப்படுத்தியதை இதுவரை அறிந்துவந்தோம்.இப்போது தான் தெரிகிறது அவர் சிவபெருமானையும் அவரது திருச்சின்னங்களையும் எவ்வளவு மதிக்கின்றார் என்பது. துடியின் ஒலி மிக அருமையானது. நாராசமானது அல்ல. உடுக்கை ஒலியைக்கேட்டால் நமது மனது தனது ஆழ்ந்த நிலைக்கு செல்லும். பம்பையும் உடுக்கையும் இன்னும் சக்திவழிபாட்டில் உயிர்ப்புடன் இருக்கிறது. உடுக்கடிக்கதைப்பாடல்கள் மிக அருமையானக்கதைசொல்லும் முறை இன்னும் வழக்கத்தில் இருக்கிறது. கோவலன் கதை, காத்தவராயன் கதை, அண்ணண்மார்கதையெல்லாம் அதிலேதான் கேட்டேன். ஒரு அருமையான இசைக்கருவியை உங்களது அபிராஹாமியக்கடன்வாங்கி சிந்தனை அபத்தமாக்கிவிட்டதே. அபிராஹாமியர்களுக்குத்தான் அதன் ஒலி அச்சத்தைத்தரும். இணையத்தில் யூடூபிலே பலப்பதிவுகள் உடுக்கை ஒலியை ஆவணப்படுத்தியிருக்கின்றன. அவசியம் கேளுங்கள். பம்பம் பம்பம் ஹரஹர பம்மம். சிவசிவ பம்பம்.

  20. முதலாவதாக நாசா சூப்பர் கம்பியுடர்களை உருவாக்குவதில்லை. அதில் ப்ரோக்ராம் செய்ய சமஸ்கிரித மொழியை உபயொகிக்கவுமில்லை. எண்பதுகளில் NLP துறை ஆரம்ப நாட்களில் மொழி சம்பந்தப்பட்ட விசயங்களை கணினி மூலம் கையாள வழிகளை தேடிய பொது ஒரு பேப்பர் சமஸ்கிரதம் உபயோகிக்கலாம் என்று வெளியிடப்பட்டு அதோடு முடிந்து விட்டது. அதையே பிடித்துக் கொண்டு நாசாவில் சூபர் கணினியில் சமஸ்கிரிதம் உபயோகமாகிறது என்று அரசியல்வியாதிகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

  21. சிவபிரானின் உடுக்கை ஓசையால் தாயுமானவன் அவர்கள் காது ஜவ்வு கிழிந்து ரத்தம் கொட்டுகிறது என்றால் இந்தத் தாயுமானவன் எந்த அளவுக்கு “நல்லவராக” இருக்கவேண்டும் என்பது தெரிகிறது.

    நிற்க, தாயுமானவன் உண்மையாகவே ஆராய்ச்சி பூர்வமாக மொழியியலை அணுக விழைந்தால் மலேசியத் தமிழறிஞரான முனைவர் உலகநாதனின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படில்க்க வேண்டும். அவரது கருத்து தமிழும் சமஸ்கிருதமும் சகோதர மொழிகள். சுமேரியாவில் தோன்றியவை.

    ஆராய்ச்சி செய்யும் பக்குவமும் இல்லை. ஆன்மீகத்தை மதிக்கும் பண்பும் இல்லை. ஆனால் வாய்க்கு வந்தபடி வாய் கிழியப் பேசமட்டும் தெரியும் என்றால் என்ன செய்வது?

  22. முத்து, தாயுமானவன் வகையறாக்களுக்கு

    மொழியியல் ஆராய்ச்சி செய்து மூழ்கித் திளைத்தவர்கள் போல சமஸ்கிருதத்தையும் தமிழையும் சகோதரிகள் அல்ல என்று கூறாமல், ஆராய்ச்சி செய்தவர்களின் கட்டுரைகளையாவது படியுங்கள்.

    சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை, இன்றல்ல தமது 1975 ஆம் ஆண்டுக் கட்டுரையில் பல சொற்களை உதாரணம் காட்டி பதம் பிரித்துப் பொருள் காட்டி முனைவர் லோகநாதன் எழுதிய கட்டுரையை இங்கே படியுங்கள்:
    https://www.heritagewiki.org/index.php?title=Sumerian:TAMIL_of_the_First_CaGkam

    சிந்து சமவெளி நாகரிகக் காலத்து குறியீடுகள்/ எழுத்துக்கள் குறித்து கணினி ஆய்வின் பிரதிபலிப்பாக அறிஞர்களின் அண்மைய நிலைப்பாடு பற்றிய ஒரு செய்தியை இங்கே படியுங்கள்.
    https://www.wired.com/2009/04/indusscript/

    தமிழ் சமஸ்கிருதத் தொடர்பு குறித்த முனைவர் லோகநாதனின் கட்டுரைகளில் ஒன்றை இங்கே படியுங்கள்.
    https://sites.google.com/site/vedictamil/sanskrit-is-dravidian

    இதை எல்லாம் படித்தால் இந்து மதத்திற்குள் பிரிவை உண்டாக்க சமஸ்க்ருத, தமிழ்ச் சண்டைக்குத தூபம் போட முடியாது என்பதால் வேறுவிதமாகத் திரித்து எழுத ஆரம்பியுங்கள்.

  23. வடமொழியும் தென் தமிழும் ஆயினானை – என்கிறது தேவாரம் . இறைவனே இரண்டு மொழியாகவும் உள்ளான் என்பது திருமறை வாக்கு( வடமொழியாம் சமஸ்கிருதம், மற்றும் தென்தமிழ் )

    . தாயுமானவன் சொல்லும் லத்தீன் எங்கிருந்து வந்தது என்று லத்தீனை தாய்மொழியாக கொண்ட தாயுமானவருக்கே தெரியும்.ஒரு மொழி எங்கிருந்து வந்தது என்று அந்த நாட்டுக்காரர்கள் தான் பெரும்பாலும் ஆராய்ச்சி செய்வார்கள். தாயுமானவன் தமிழ் நாட்டுக்காரர் அல்ல என்று தெரிகிறது. ஏனெனில் இவரிடம் மதமாற்றப்பாதிரிகளின் அயல்நாட்டு பாசமே தெரிகிறது. அய்யகோ !

  24. /////////// ஆங்க்லம் தமிழுடன் கலப்பதை பரம பவித்ரமாக நினைத்து சம்ஸ்க்ருதம் தமிழுடன் கலப்பதை மட்டிலும் தீட்டாக நினைப்பது ………..மொழித்தூய்மைப் பற்றி லவலேசமும் கவலையில்லாத ஆனால் வெற்றுக் கோஷத்தால் மட்டிலும் தூய தமிழின் மீது அக்கறை உள்ளது போல் நடிக்கும் இழிவான பொழுதுபோக்காளர்களின் செயல்பாடு. பரங்கிக் கும்பினியருக்கு விலை போன இந்த டம்ளர்களுக்கு தமிழ் மொழியில் கலப்பு என்பது ப்ரச்சினையே இல்லை. தமிழில் எது கலக்கிறது என்பதில் தான் ப்ரச்சினை. /////////

    தரம் தாழ்ந்து செல்கின்றன உங்கள் சொற்கள், நீங்கள் எனக்கு மறுமொழி அளிப்பதால்! ஆங்கிலம் தமிழுடன் கலப்பதை பரம பவித்திரமாக நான் நினைப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை!

    கேரளாவில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? தமிழில் முதல் காப்பியத்தைத் தந்த இடம், இப்போது எங்கோ சென்று கொண்டிருக்கிறது. மலையாளத்தில் 70% த்திற்கும் அதிகமாக சமஸ்கிருத சொற்கள் இப்போது கலக்கப்பட்டுள்ளன. எனது மலையாள நண்பர் ஒருவர் சொன்ன தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அங்கே பள்ளிகளில் மலையாளப்பாடத்தில் சமஸ்கிருத கதைகளையும் கவிதைகளையும் மலையாள எழுத்துருவில் எழுதி அதனை மலையாளம் என்று கற்றுக்கொடுக்கிறார்களாம்! மலையாளத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க்கூறுகளும் இன்னும் ஒரு அரை நூற்றாண்டு கூட தாக்குப்பிடிக்காது போல் தெரிகிறது. இதனைக் கேட்டால் உங்களைப் போன்றோருக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும், சமஸ்கிருதம் தலையெடுக்கிறது என்று! ஏனெனில், அதே நிலையைத் தமிழுக்கும் கொண்டுவரத்தானே தாங்கள் மாடாய் உழைக்கிறீர்கள்! நீங்கள் எழுதும் தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்கள் பெரும்பாலும் எனக்குப் புரிவதில்லை, புதிது புதிதாகக் கலந்துவிடுவதால். உங்களைப்போன்றோருக்கு தூய தமிழைப் பற்றிப் பேச அருகதையே இல்லை. இப்படியிருக்க, ஆங்கிலம் கலக்கிறது, சமஸ்கிருதம் கலந்தால் என்ன என்ற நாட்டாமை வேறு.

    ///////// அதை விடுத்து முழு முனைப்புடன் தரம் தாழ்ந்த செயற்பாட்டுக்கு ஹிந்துத்வம் என்று நாமகரணத்தை அளித்து ஹிந்துத்வத்தை இழிவு படுத்த முனைவது சரியல்ல./////////

    நானும் ஒரு இந்து தான். ஆனால், இந்துத்துவா என்பது மதவெறியை உள்ளடக்கிய சொல்லாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மேற்கோள் காட்டியது உண்மையென்றால், சுப்ரீம் கோர்ட்டே தனியாக விளக்கம் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

  25. தமிழ் இந்து தளத்தில் தமிழையோ , தமிழரையோ எந்த சூழ்நிலையிலும் இழிவு செய்து எழுத வேண்டாம் என்று அன்பர்களையும் , அத்தகைய இழிவினை வெளியிட வேண்டாம் என்று ஆசிரியர் குழுவினரையும் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

  26. //இந்துத்துவா என்பது மதவெறியை உள்ளடக்கிய சொல்லாகத்தான் பயன்படுத்தப்படுகிறது//

    மன்னிக்கவேண்டும் திரு முத்து அவர்களே. ஹிந்துத்வா என்பது மதவெறி என்ற சொல்லாடல் ஹிந்து மதத்தை அழித்து ஒழிக்கவேண்டும் என்று துடிப்பவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. ஹிந்துத்வா என்ற சொல்லை விட சனாதன தர்மம் என்று கூறினால் உடனே வர்ண வெறியர்களே என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.

    இந்துத்வா என்று இந்திய நாட்டில் கூட சொல்ல முடியாது என்றால் வேறு எங்கே போவது என்று புரியவில்லை.

    //கேரளாவில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?//

    ஏன் கேரளா போகவேண்டும் ? எங்கள் தொண்டை மண்டலத்துக்கு வந்து பாருங்கள் தமிழின் ‘அழகை’ சமீபத்தில் பட்டுகோட்டையின் அருகே ஒரு கிராமத்துக்கு சென்றபோது ‘கிருஷ்ணபுரம் ராமர் மடம் எப்படிச் செல்லவேண்டும் என்று கேட்டதற்கு ‘ அதோ அங்கிட்டு தெரியுற பாலத்தை தாண்டி கொஞ்ச தூரம் போய் வலது பக்கம் திரும்புங்க அய்யா’ என்று கூறினார். கேட்பதற்கு ரம்மியமான தமிழ் ! இதே பதில் எங்க ஊரான செய்யாறில் எப்படிக் கிடைத்திருக்கும் தெரியுமா ? ‘ அதோ அந்த பிட்ஜ் தாண்டி கொஞ்ச தூரம் போனாக்கா ரைட் சைட்ல ஒரு கொய்லு வரும்’. நாராசமாக இருக்கும் ! இதெல்லாம் திரு கிருஷ்ணகுமார் தமிழை அழிக்க வேண்டும் என்று செய்யும் முயற்சிகளா ?

    கால தேச வர்த்தமானம் – அவ்வளவுதான்.

  27. ”சங்கத்தமிழை ,அதன் செய்யுள் வடிவில் எவன் பேசுகிறான்.புழக்கத்தில் உள்ள தமிழ் பேச்சு உரை நடை தமிழ்தானே?ஐரோப்பிய இலக்கியமும் ,அச்சு யந்திர வருகைக்கும் பிறகு வடிவெடுத்தவைதானே?ஒரு முன்னூறு வருட வழக்கு மொழிக்கு எதற்கு செம்மொழி அந்தஸ்து?”என்று எவனாவது கேட்டால் அவனது பேதமையும் ,முட்டாள் தனமும் வெளிப்படுமே அல்லாது,அதில் வேறென்ன விளங்கும் ?
    அப்படியொரு லாஜிக் தான் ,சூனா பானா வீரபாண்டியனையொத்த ரிட்டையர்டு டுடோரியல் வாத்திகளின் வக்கணை வாதம் !சமஸ்கிருதம் தன் ஞான ,விஞ்ஞான உரிமையால்தால்தான் வாழ்கிறதே அன்றி எவர் கருணையிலும் ,எந்த அறக்கட்டளை ஆதரவிலும் இல்லை,என்பதை அதை ஆங்கில மொழி யில் படிக்கிற போதே புரிகிறது.அதில் சரக்கு இருப்பதினால் தான் ,கிழக்கிந்திய கம்பனி அந்த காலத்திலேயே லச்சங்களை மார்க்ஸ் முல்லருக்கு வழங்கி ஆராயச்சொன்னது.
    தலைகளை எண்ணி ஒரு மொழி பெருமை படுவதில்லை ,அதில் புழங்கும் அறிஞனின் மூளை வண்மையே கணக்கில் கொள்ளக்கூடியது.
    ஒரு அமானுட மொழிக்களஞ்சியத்தை,ஓட்டு பொருக்கி பெருமை தேட்டிக்கொள்ளும்,’தலைவன் ‘அந்தஸ்துக்கு இறக்குவது அய்யோக்கியத்தனம்.
    சமஸ்கிருதத்தை வசை பாடுபவர்களின் உக்கிரம் அவர்களின் தோல்வியில் இருந்து வருகிறது!:அது இன்னும் எத்தனை காலம் ”தெய்வீக ”மாக உப்பரிகையில் வாழ்வது?தெருப்புழுதிக்கு ,அதாவது தங்கள்”அந்தஸ்த்திற்கு”இழுத்து வந்து,தமிழ் பட்ட பாட்டை ,அதற்கும் இழைப்பது எப்படி?என்பதே .
    அண்ணாதுரையின் ‘கம்பரசத்தை’வைத்துக்கொண்டு கம்பராமாயணத்தை பாடம் எடுத்த அரசு கல்லூரி வாத்திகளை நானே அறிவேன்.தமிழும் பக்தி இலக்கியத்தில் சன்னதி கொண்டாளோ,நிம்மதி கொண்டாள்.

  28. @ விபூதி பூஷன்….

    பகுத்தறிவெல்லாம் ஒன்றுமில்லை. கேள்வி எளிமையானது தான். ஈசனின் உடுக்கையில் இருந்து வடமொழியும் தென்மொழியும் உருவானது என்றால் உலகின் மற்ற திசைகளில் உள்ள மொழிகள் எப்படி உருவானது என்பது தான்?

    ஒரு மொழியின் உருவாக்கத்தில் ஓசைக்கும்(த்வனி) காற்றுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. இது உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால், சைவர்கள் சிவபெருமானின் துடியில் இருந்து இந்திய பிராந்தியத்தை சேர்ந்த 2 மொழிகள் உருவானது என்று கூறினால், தமிழ் மற்றும் சமற்க்ருதம் இரண்டையும் போல உலகில் உள்ள மற்ற இனிமையான மொழிகள் எதில் இருந்து உருவானது என்று கேள்வி எழாதா? இதில் என்ன பகுத்தறிவு வேண்டி கிடக்கிறது. ஆப்ரிக்காவில் இருக்கும் பழங்குடி இனங்கள் கூட அவர்கள் பேசும் பண்படாத மொழியை தங்கள் தெய்வம் படைத்ததாகத் தான் நம்புகிறார்கள்.

    “என் மொழியை கடவுள் படைத்தார்” என்பது உலகெங்கும் இருக்கும் ஒரு பண்படாத குழந்தைத் தனமான நம்பிக்கை அவ்வளவுதான். சிவ பெருமானின் வல்லன்மையை உணர்த்த இதுப் போன்ற அற்பத்தனமான நம்பிக்கைகளை எல்லாம் சமுகத்தில் உலவ விட வேண்டாம் என்பதே என் எண்ணம். மேலும், சிவ பெருமானின் உடுக்கை ஓசை தாங்க முடியவில்லை என்று நான் எந்த அர்த்தத்தில் கூறினேன் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு வேளை தெரியவில்லை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம். நான் கூறியதன் பொருள் இதுத் தான், சிவபெருமானின் பெயரால் இங்கிருப்பவர்கள் அடித்து விடும் உடுக்கை ஓசையை தாங்க முடியவில்லை என்பதை தான் அப்படி கிண்டலாக கூறினேன். மற்றப் படி சைவத்தையோ ஈசனையோ பகடி செய்ய அல்ல. நான் சைவன் தான் என்பது என் மனச்சான்றுக்கு தெரியும், அதற்காக சைவம் என்கிற பெயரில் உலாவும் அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற அவசியமும் எனக்கில்லை. நன்றி..

  29. @ அத்விகா…

    //தாயுமானவன் சொல்லும் லத்தீன் எங்கிருந்து வந்தது என்று லத்தீனை தாய்மொழியாக கொண்ட தாயுமானவருக்கே தெரியும்.//

    ஒரு மொழி எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அது நம் தாய் மொழியாக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கொஞ்சம் முன் யோசனையும், கொஞ்சம் அறிவும் இருந்தால் போதும் தாயே. இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். லத்தின் மொழி மக்களிடம் இருந்து தான் வந்தது. லத்தின் மட்டுமல்ல உலகின் அனைத்து மொழிகளும் உருவானது மக்களிடம் இருந்துதான். வானில் இருந்து எதுவும் ஒரே நாளில் குதித்து விடவில்லை. ஒரு மொழியின் தோற்றமும்,வளர்ச்சியும் உருவாக காரணம் ஒட்டு மொத்த சமுகத்தின் கூட்டு உழைப்பினால் தானே தவிர வேறெதுவும் இல்லை. இயற்க்கை மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரிய வரப்ரசாதமான ஆறாம் அறிவின் துணைக் கொண்டு தான் மனிதன் மொழிகளை உருவாக்கினான். மற்றப்படி என் அப்பன் சிவ பரம்பொருளுக்கு இதெல்லாம் வேலை கிடையாது.

    //வடமொழியும் தென் தமிழும் ஆயினானை – என்கிறது தேவாரம் . இறைவனே இரண்டு மொழியாகவும் உள்ளான் என்பது திருமறை வாக்கு//

    விடுங்கள் அவர் காலத்தில் ஆங்கிலம் இல்லாமல் போய் விட்டது.. ஒரு வேளை உலகின் பொது மொழியாக ஆங்கிலம் அன்று இருந்திருந்தால், இந்நேரம் அதையும் சேர்த்தே பாடி இருப்பார். என்ன செய்வது அவருக்கு தெரிந்தது அந்த 2 மொழிகள் மட்டும்தானோ என்னவோ.

  30. /// என்ன செய்வது அவருக்கு தெரிந்தது அந்த 2 மொழிகள் மட்டும்தானோ என்னவோ///

    திருஞான சம்பந்தருக்குத் தெரிந்தது இரண்டே மொழிகள்தான் என்பது தெரியும் அளவுக்கு இந்தத் தாயுமானவனுக்கு அனைத்தும் தெரியும், எந்த மொழி எப்படி எப்போது உருவானது என்பதும் தெரியும். ஆராய்ச்சி செய்து அறிவைத் தேடுவதெல்லாம் தேவையில்லாத அளவுக்குப் பிறந்ததில் இருந்தே தாயுமானவனுக்குத் தெரியாதது என்பதே கிடையாது. என்சைக்கிளொபீடியோ எழுதம் எல்லா அறிவாளி வெள்ளைக் காரனும் இந்தத் தாயுமானவனைக் கேட்டுத்தான் எழுதுகிறார்கள்.

  31. ///அவர் காலத்தில் ஆங்கிலம் இல்லாமல் போய் விட்டது///

    அது என்ன? அப்போ ஆங்கிலம் பிறக்க வில்லையா? இல்லை கிறிஸ்தவ மதமாற்றிகள் இந்தியாவுக்கு அப்போது வரவில்லை என்றா சொல்கிறார்? போப் கேட்டால் நொந்து விடுவார். கோடிக்கணக்கில் செலவழித்து “தாமஸ் ஏசு செத்தவுடனேயே தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடந்தே வந்து திருவள்ளுவரைக் கிறிஸ்தவராக்கி, இங்கே பரங்கிமலையில் பாப்பானால் ஈட்டி எறிந்து கொல்லப் பட்டார்” என்று எத்தனை கட்டுக் கதை சொன்னாலும் இன்னமும் இந்தத் தாயுமானவன் கூட அதை நினைவில் ஏற்றவில்லையே? “இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றவேண்டும் இந்த நாட்டிலே? தமிழ் நாட்டிலே” என்று போப் எந்த மொழியில் பாடுவார் என்பதும் இந்தத் தாயுமானவனுக்குத் தெரிந்திருக்கும்.

  32. பேரன்பிற்குரிய ஸ்ரீ முத்து ஐயா

    திருச்சிற்றம்பலம்.

    \\\ தரம் தாழ்ந்து செல்கின்றன உங்கள் சொற்கள், நீங்கள் எனக்கு மறுமொழி அளிப்பதால்! ஆங்கிலம் தமிழுடன் கலப்பதை பரம பவித்திரமாக நான் நினைப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை! \\\

    ஐயா, க்ஷமிக்கவும். மேற்கண்ட சொற்கள் தங்களைக் குறித்துச் சொல்லப்பட்டவை இல்லை. சைவ சமய மணம் கமழும் தூய தமிழிலான கருத்துக்களைத் தொடர்ந்து பகிர்ந்து வரும் தங்களை நான் மிகவும் மதிக்கிறேன். பெருமிதம் மிகவே தங்கள் கருத்துக்களை நான் வாசித்து வருகிறேன். நான் எதற்காக உங்களைத் தரம் தாழ்ந்து அவதானிப்பேன்.

    ஆனால் தூய தமிழுக்குப் போலியாகக் கொடிபிடித்துக்கொண்டே எந்தக் கூச்சமும் இல்லாது தமிழில் சகட்டு மேனிக்கு ஆங்க்லத்தைக் கலக்கும் செயற்பாட்டை உடைய அன்பர்களைக் குறித்தான் வாசகங்கள் அவை. இவர்கள் தமிழுடன் ஆங்க்லத்தை இயல்பாகக் கலப்பதைக் கூட இது இயல்பானது என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியும். ஆனால் கிட்டத்தட்ட அதுவே தூய தமிழ் போல கதைப்பதை ஏப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    என்னுடைய எழுத்துக்களில் சம்ஸ்க்ருதம் மற்றும் உர்தூ கலந்துள்ளன. என்னுடைய தமிழ் தூய தமிழ் என்று நான் எங்கும் பறை சாற்றியதில்லை.

    அதே சமயம் தூய தமிழைப் போற்றும் யாரையும் குறை சொன்னதும் இல்லை. மாறாக அவர்களைப் போற்றியே வந்திருக்கிறேன். ஏன் உங்களுக்கு நான் அளித்த பதிலிலேயே மிகத் தெளிவாக இதைப் பற்றிய வாசகத்தைப் பகிர்ந்திருக்கிறேனே.

    தமிழகத்தில் இருந்து மலயாளத்துக்கு ஏன் செல்லுகிறீர்கள். தமிழகத்துத் தொலைக்காட்சிகளில் ஆங்க்லம் கலந்த தமிழ் கோலோச்சுவது உங்களது கண்களில் ஏன் தென்படவில்லை. இதனால் தூய தமிழுக்குக் கேடு என்பது உங்களுக்குத் தோன்றவில்லையா? மேல் விஷாரம் முற்று முழுதாக அராபிய மயமாக ஆக்கப்பட்டுள்ளது உங்கள் கண்களுக்குத் தென்படவில்லையா?

    தமிழுடன் வேறு எந்த மொழி கலந்தாலும் அது தூய தமிழுக்குக் கேடு என்று தான் இங்கு கருத்துப்பகிரும் ஸ்ரீ தாயுமானவன் மிகத் தெளிவாக கருத்துப்பகிர்ந்துள்ளார். அவருடைய கருத்தை உள்வாங்கிய எனக்கு இந்த விஷயத்தில் எனக்கு எந்த சம்சயமும் இல்லை.

    தூய தமிழைப் பற்றிய பேச்சு எங்கு வந்தாலும் தமிழுடன் சம்ஸ்க்ருதம் கலப்பதை மட்டிலும் விவாதித்து விட்டு கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்வில் பாலில் கலந்த நீர் போல இருக்கும் ஆங்க்லத்தைப் பற்றிக் கண்டும் காணாதது போல விட்டு விடுவதை ஏன் சுட்டிக்காட்டக்கூடாது? அல்லது அது சுட்டிக்காட்டப்படாது ஏன் விடுபட வேண்டும் என நினைக்கிறீர்கள்.

    \\ உங்களைப்போன்றோருக்கு தூய தமிழைப் பற்றிப் பேச அருகதையே இல்லை. இப்படியிருக்க, ஆங்கிலம் கலக்கிறது, சமஸ்கிருதம் கலந்தால் என்ன என்ற நாட்டாமை வேறு. \\

    அன்புடையீர். எனக்கு தூய தமிழைப் பற்றிப் பேச அருகதை இல்லவே இல்லை என்று சொல்லி தாங்கள் உகப்படைவதானால் சொல்லிக்கொள்ளுங்களேன். அதனால் நான் உங்களுக்கு தூய தமிழின் மீது உள்ள ஈடுபாட்டையோ உங்களது சமய ஈடுபாட்டையோ குறைத்து மதிப்பிட மாட்டேன்.

    என்னுடைய மொழிநடை கலப்பு மொழிநடையாகவே இருந்தாலும் தூய தமிழின் மேல் எனக்கு ஆசையும் காதலும் ஏன் இருக்கக்கூடாது? தூய தமிழைப் பேசுபவர்களை நான் ஏன் மதிக்கக் கூடாது? அல்லது கலப்பு மொழி நடையைக் கையாளுபவர்கள் ஏன் தூய தமிழின் மீது அக்கறைகொண்டவர்களாக இருக்கக்கூடாது?

    எனக்கு தூய தமிழைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லாவிட்டாலும் கூட …………. சம்ஸ்க்ருதம் கலந்த தமிழ் மட்டும் கலப்புத் தமிழாகவும் ஆங்க்லம் கலந்த தமிழ் தூய தமிழாகவும் எப்படி ஆக முடியும்?

    அன்புடையீர், என்னுடைய 30 வருஷ காலம் எல்லைப்பகுதிகளில் உத்யோகம் செய்த படிக்கு பல மொழி பேசுபவர்களுடன் நான் பழகி வந்த படிக்கு ஹிந்துஸ்தானத்தில் பேசப்படும் எந்த ஒரு மொழியும் வேற்று மொழியுடன் கலப்பது என்பது இயல்பானது என்பது நான் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்ட விஷயம்.

    ஆங்க்லம் தமிழுடன் கலப்பதை மிக இயல்பாக மட்டிலுமே நான் பார்க்கிறேன். கலப்பில் இரட்டை அலகீட்டை மட்டிலும் ஒப்புக்கொள்ள முடிவதில்லை 🙂

    ஆங்க்லம் கலந்த தமிழ் சம்ஸ்க்ருதம் கலந்த தமிழ் இரண்டும் ஜாதி, சமய, மத வேறுபாடுகளின்றி புழங்கி வந்துள்ளது; புழங்கி வந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் நிச்சயமாக புழங்கும் என்பது என் அனுபவ வாழ்வு எனக்குச் சொல்கிறது.

    மற்ற மொழிகளை எதிர்ப்பதையோ மொழிக்கலப்பினை இரட்டை அலகீட்டினால் அணுகுவதையோ விடுத்து தூய தமிழை எந்த சமரசமும் இல்லாது வேறு எந்த மொழிக்கலப்பும் இல்லாமல் தூய தமிழாகவே எடுத்துச் செல்ல முயலும் அன்பர்களால் மட்டிலுமே தூய தமிழ் செழிப்பாகும் என்பது என் புரிதல். இந்தப் புரிதல் தவறானது என்றால் தகுந்த காரண காரியங்களைச் சுட்டினால் என் புரிதலை மேம்படுத்திக்கொள்வேன்.

    அறுதியாக, அன்பின் ஸ்ரீ முத்து ஐயா, தாங்கள் சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பகிர்வதிலிருந்தும் கலப்பில்லா தூய தமிழில் எழுதும் பாங்கிலிருந்தும் என்னைப்போன்றவர்களால் நிச்சயம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும். என்னுடைய உத்தரம் எதிலும் நான் உங்களையோ உங்களது தனித்த செயற்பாடுகளையோ எதிர்மறையாக விமர்சனம் செய்யவில்லை. மாறாக அப்படித் தாங்கள் நினைத்திருந்தால் அதற்கு என் க்ஷமா யாசனங்கள்.

  33. அன்பின் ஸ்ரீ முத்து ஐயா

    \\ நானும் ஒரு இந்து தான். ஆனால், இந்துத்துவா என்பது மதவெறியை உள்ளடக்கிய சொல்லாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மேற்கோள் காட்டியது உண்மையென்றால், சுப்ரீம் கோர்ட்டே தனியாக விளக்கம் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. \\

    ஐயா, தங்களது சைவ சமய மணம் கமழும் எழுத்துக்களை பெருமிதம் மிக்க வாசித்து வருகையில் தாங்கள் சொல்லாவிட்டாலும் கூட தாங்கள் ஹிந்து என்று மட்டிலும் தான் அறிவேன்.

    \\ இந்துத்துவா என்பது மதவெறியை உள்ளடக்கிய சொல்லாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. \\

    ஹிந்துக்களை ஜாதி சமய வேறுபாடுகளை மீறி ஒன்றிணைக்க ஹிந்து இயக்கங்கள் பாடுபட்டு வருகின்றன.

    ஹிந்துக்கள் ஒன்றிணைவதால் …………. ஆப்ரஹாமியத்துக்குப் பிள்ளை பிடிக்கும் ………ஆன்ம அறுவடை வ்யாபாரம் பிசுபிசுத்துப் போகும் என்று அச்சமுள்ள ………… பரங்கிப் பணத்துக்கு விலை போயுள்ள ஆப்ரஹாமிய மிஷ நரி இயக்கங்கள் மட்டிலும் தான் ஹிந்துத்வா என்ற சொல்லை மதவெறியை உள்ளடக்கிய சொல்லாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதே தளத்தில் ……. இங்கு கருத்துக்கள் பகிரும் …..சைவ சமயத்தில் ஒழுகும் …..ஸ்ரீ தாயுமானவன் அவர்களை…… நீங்கள் ஏன் இதுவரை க்றைஸ்தவமதத்துக்கு மாறவில்லை என பரிபூர்ண சுத்த சுவிசேஷ வேதாகமக் கல்லூரியில் ஸ்நாதகரான ரெபெக்கா என்ற அம்மணி வினவியுள்ளார்கள். இங்கு கருத்துப்பகிரும் அன்பர்கள் பலரும் இதை அறிவர்.

    ஹிந்துத்வ இயக்கங்கள் ஜாதி மற்றும் சமய வேறுபாடுகளை மீறி ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியில் மட்டிலும் ஈடுபட்டு வருவதில்லை. அதற்கும் மேற்பட்டு க்றைஸ்த்வ மற்றும் இஸ்லாமிய மதங்களை ஒழுகி வரும்……….. ஆயினும்….. இந்த தேசத்துப் பண்பாட்டினை ………. விட்டுக்கொடுக்காத ஆப்ரஹாமிய சஹோதரர்களையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிகள் இயக்க ரீதியாக ஹிந்துஸ்தானமளாவி நிகழ்ந்து வருகின்றன.

    இந்த செயல்பாட்டில் மதவெறி காணப்படுகிறதா அல்லது இங்கு கருத்துப்பகிர்ந்த ரெபெக்கா என்ற அம்மணியின் அறைகூவலில் மதவெறி காணப்படுகிறதா?

    ஹிந்துத்வ இயக்கங்களது செயல்பாடுகளில்…… இடம் பொருள் நபர் சார்ந்து மதவெறிச் செயல்பாடு இன்னது என்று குறிப்பாக நீங்கள் சுட்டினால்……. அதில் மதவெறி உள்ளபடி தென்பட்டால்…….. அப்படிப்பட்ட மதவெறியை நிச்சயம் நானும் அடையாளம் கண்டு எதிர்ப்பேன்.

    அதற்கு மாறாக பொத்தாம் பொதுவாக ஹிந்துத்வம் என்பது மதவெறியை உள்ளடக்கிய சொல் என்று உரத்துச் சொல்வது நிச்சயம் ஏற்புடையது இல்லை. இப்படிப் பட்ட உங்களது ஒரு கருத்து ஒருக்கால் உங்களுக்கு அச்சொல்லின் மீதுள்ள வெறுப்பை வேண்டுமானால் பறைசாற்றலாமே ஒழிய தர்க்க பூர்வமான நிலைப்பாடாக அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கொம்புத் தேன் பாகற்காயை விட கசக்கும் என்று நீங்கள் சொன்னால் உங்களது சுவையில் குறை உள்ளது என்று அவதானிக்கப்படுமே ஒழிய தேனின் சுவை கசப்பு என்று அவதானிக்கப்படமாட்டாது.

  34. அன்பின் ஸ்ரீ முத்து ஐயா அவர்களது கவனத்திற்கு,

    திண்ணை தளத்தில் பல்லவ க்ரந்த எழுத்துக்களின் அவச்யம் பற்றிய ஒரு வ்யாசம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான் எழுதிய ஒரு உத்தரம் இங்கு பேசப்படு விஷயத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகையால் அதை இங்கு பகிர விழைகிறேன்.

    https://puthu.thinnai.com/?p=30067

    தமிழும் ஸம்ஸ்க்ருதமும் கலந்து தமிழில் மணிப்ரவாளம் என்ற மொழிநடை புழங்கியுள்ளது. தமிழுடன் ஸம்ஸ்க்ருதமும் கலந்த மொழிநடை என்றபடிக்கு இது தமிழ்நாட்டுக்கே உரியது. பிற்காலத்தில் குணங்குடி மஸ்தான் சாஹிபு, சதக்கத்துல்லாஹ் அப்பா போன்ற இஸ்லாமிய அவுலியாக்கள் தமிழ் மொழியில் தங்களது இஸ்லாமிய மத நூற்களை படைக்குங்கால் இந்த மணிப்ரவாள நடையுடன் உர்தூ மொழிச்சொற்களும் இந்த சான்றோர்களது பனுவல்களில் கலந்தன.

    எந்த ஒரு மொழியையும் அல்லது மொழிநடையையும் ஒரு ஜாதி அல்லது மதம் இவற்றுடன் பொருத்தி விடுவது அறியாமையின் பாற்பட்டது.

    மணிப்ரவாள மொழிநடையில் சைவ வைஷ்ணவ இலக்கிய நூற்களுடைய ஒரு பெரும் களஞ்சியம் உள்ளது. அது மட்டுமன்று மணிப்ரவாள மொழிநடையில் தமிழகத்து பௌத்த மற்றும் ஜைன சமய இலக்கிய நூற்களும் உள்ளன.

    ஒரு சில க்றைஸ்தவ பிரிவினர் முனைந்து தமிழார்வம் காரணமாக தூய தமிழ் மொழியில் விவிலியத்தைச் சமைத்திருக்கின்றனர். ச்லாகிக்கத் தக்க முயற்சியே. ஆயினும் க்றைஸ்தவ சஹோதரர்களது வெகுஜனப்புழக்கத்தில் இருக்கும் விவிலியம் மணிப்ரவாளத்தில் அமைந்ததே. பொதிகை தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் ராத்திரி 10.30 மணிக்கு பாஸ்டர் சாம் செல்லதுரை அவர்களது ப்ரசங்கத்தின் ப்ராரம்பத்திலும் முடிவிலும் அன்னார் மேற்கத்திய இசையுடன் இசைக்கும் பெரும்பாலான க்றைஸ்தவப் பாடல்கள் ரெவரெண்டு வேதநாயகம் சாஸ்திரியார் போன்ற க்றைஸ்தவ சான்றோர்களாலும் ஏனைய க்றைஸ்தவ சான்றோர்களால் இயற்றப்பட்டவை. புழங்கிவரும் மற்ற க்றைஸ்தவ சேனல்களிலும் வெகுஜனப்புழக்கத்தில் உள்ளது மணிப்ரவாள பைபள் என்பதும் வெள்ளிடைமலை.

    எனக்கு கண்டஸ்தமான ப்ராபல்யமான சில மணிப்ரவாள க்றைஸ்தவ கீர்த்தனைகளிலிருந்து ஒரு துளிகள் :- (வார்த்தைகளில் பிழைகள் இருக்குமானால் டாக்டர் ஸ்ரீ ஜான்சன் மஹாசயர் அவர்கள் திருத்தம் செய்யலாம்)

    பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
    பரமபதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
    காரோன் அனுகூலனுக்கு கன்னிமரிசேயனுக்கு
    கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு

    சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம்

    ஸர்வலோகாதிப நமஸ்காரம் ஸர்வ ச்ருஷ்டிகனே நமஸ்காரம்
    தரைகடலுயிர்வாழ் ஸகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம்

    இந்த மணிப்ரவாள நடையுடன் தமிழகத்து சொத்தான இஸ்லாமிய தமிழிலக்கிய நூற்களில் மணிப்ரவாளத்துடன் உர்தூ பாஷையின் சொற்களும் உள்ளன.

    இப்படி தமிழகத்தில் புழங்கிய ஹிந்து மதத்தின் அனைத்து சமயத்து நூற்களையும் மற்றும் க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமிய இலக்கிய நூற்களையும் அடக்கிய மணிப்ரவாளத்து மேலும் கலப்பு மொழிநடையினைச் சார்ந்த நூற்களை உள்ளது உள்ளபடி போஷிக்க பல்லவ க்ரந்த எழுத்துக்கள் நிச்சயம் தேவை. இந்த எழுத்துக்கள் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு இவை நிச்சயம் இல்லை. இந்த எழுத்துக்கள் தேவை என்று கருதுபவர்களால் இவை தொடர்ந்த் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் சமயங்கள் கடந்த மதங்கள் கடந்த தமிழகத்தின் ஒரு மிகப்பெரும் கலைக்களஞ்சியம் மணிப்ரவாள / கலப்பு மொழிநடையில் உள்ளது என்ற கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இவை தமிழகத்தின் தமிழ் மொழி பேசும் ஹிந்து, முஸ்லீம், க்றைஸ்தவ சஹோதரர்களது ப்ரத்யேகமான சொத்து என்பதையும் யாரும் மறுதலிக்க முடியாது. தமிழகத்தின் ப்ரத்யேகமான இந்த சொத்தை ரக்ஷிக்க முனைபவர்கள் நிச்சயமாக இந்த பல்லவ க்ரந்த எழுத்துக்களையும் ரக்ஷணம் செய்வது அவச்யமாகிறது.

    …………..

    மேலதிகமாக

    தமிழகத்தின் பெருமை மிக்க அவுலியாக்களுள் ஒருவராகிய ஸ்ரீ குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களது கண்ணிகளுள் ஒன்று :-

    திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
    தீன் கூறி நிற்பர் கோடி!

    சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
    ஜெய ஜெயா வென்பர் கோடி!

    ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
    அணி அணியாய் நிற்பர் கோடி!

    அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
    அனைந்தருகில் நிற்பர் கோடி!

    மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
    மன்னரே என்பர் கோடி!

    வசனித்து நிற்கவே கொழுவீற்றிருக்குமும்
    மகிமை சொல வாயுமுண்டோ

    தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
    தவராஜ செம்மேருவே!

    தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
    ஷாஹுல் ஹமீதரசரே!

    ஸ்ரீ குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்கள் நந்தீஸ்வர சதகம் போன்ற பனுவல்களும் இயற்றிய பெருந்தகை என்பது காண்க.

  35. தாயுமானவன்
    “நான் சைவன் தான் என்பது என் மனச்சான்றுக்கு தெரியும், அதற்காக சைவம் என்கிற பெயரில் உலாவும் அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற அவசியமும் எனக்கில்லை. நன்றி..”
    சைவம் என்றப்பெயரில் உலவும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது சரிதான். சிவனாரின் உடுக்கையில் மொழி பிறந்தது என்பதின் தாத்பரியத்தில் ஏதுபிழை? சிவபெருமான் அனைத்து வித்தைகளுக்கும் கலைகளுக்கும் மூலம் என்பது சைவத்தின் அடிப்படை நம்பிக்கை. ஆகவேதான் அவரை ஆடல்வல்லானாகவும் தென்முகக்கடவுளாகவும் நாம் காண்கிறோம். சிவமூர்த்தங்களில் மிகச்சிறந்த இரண்டு நடராஜரும் தக்ஷிணாமூர்த்தியும். அதையே மறுதலிக்கலாமா? அதை ஏற்றுக்கொள்ளாத நீவிர் எப்படி சைவராக இருக்கமுடியும்? கிறிஸ்தவத்தில் கிளைத்த திராவிடியக்கருத்தியலை ஏற்போர் பெயரளவில் கூட சைவராவது அரிதே.

  36. சமஸ்கிருதத்தை பத்தாயிரம் பேர்தான் பேசுகிறார்களாம்,அதனால் அது செத்த மொழி எனவே அதை புதைத்து விடலாம் ,சங்கத்தமிழை ஒரு பயலும் பேசுவதில்லை,{முத்தமிழ் அறிஞர் குடும்பத்தினர் கூட!காவிய சோகம்,}அதையும் ஒழித்துக்கட்டிவிடலாம்,அப்புறம் மிச்சம் இருப்பது கருணாநிதி தமிழ்’அண்ணா துரை ,ராமசாமி சமாச்சாரங்கள்தானே?மூளையே வேண்டாம் ,சுனா பானா வீரபாண்டியனைப்போல் எல்லா ரெடையர்ட் டுடோரியல் கால்லேஜ் வாத்திகளும் பேரறிஞ பிதாக்கள் ஆகிவிடலாம்,ஜாலியா இருக்கலாம்,
    சில்லறைகள் எப்போதும் தங்கள் சிறுமைகளை மறைக்க சிற்ரெல்லை வகுத்துகொண்டு வாழும்.பேறேல்லை களை ஆள முடியாது.
    இந்திய வரலாறு அற்பத்தரவுகளையும் ஆள் வைத்து எழுதிய குறிப்பு களையும் தாண்டி எதுவுமில்லை என்பார்கள்,அரசியல் சாசனம் வகுத்தபின் வந்ததே இந்தியா ,அதற்கு முன் அப்படியொரு நாடே இல்லை என்பார்கள்!ராமாயனத்தில்,பாரதத்தில் வருவது எந்த நாடு?என்றால் அது புராணம் ,சரி அந்த புராணத்தின் ஆயுள் நிச்சயம் இரண்டாயிராம் ஆண்டு இலக்கிய சாட்சிக்கொண்டது தானே ?
    இங்கிலிஸ் காரன்தான் இந்தியாவை உண்டாய்க்கினான் என்ற பிரச்சாரமும் அயோக்கியத்தனம் தானே?
    இப்படியல்லாம் மூளையை தொந்தரவு செய்வதால் தான் ,சிற்றெல்லை சுகமாய் இருக்கிறது.
    கருணாநிதி கூட்டணிக்கு ஆள் பிடிப்பது போல் மொழிகளும் ,ஆள் பிடித்துதான் பெருமை தேடிக்கொள்ள அவசியமில்லை,கண்டம் கடந்தும் காதலர்களை கவரும்,
    தமிழ், கான்ஸ்தான்டின் நோபிள் ,போப் போன்றவர்களை ,வந்த தொழிற் மறந்து போக கலை காந்த புலம் ஈர்த்தது போல.

  37. முக நூலில் கண்டெடுத்தது :

    https://www.facebook.com/jeyananths/posts/1052276671491393

    அத்விகா, சிவஸ்ரீ விபூதிபூஷன் போன்றோர் சொல்வது போல கருத்துள்ள பதிவு.

    விரும்புவோர் ஏற்றுகொள்வார். விரும்பாதோர் சிறிது யோசிக்க வேண்டுகோள்

  38. Only in Tamilnadu, a strong Sanskrit lobby exists and erupts whenever subject of language teaching crops up. I lived in all 4 Southern States; and in States like Maharastra, MP, Delhi, UP; there, too, there are many brahmins and other locals who know and read Sanskrit. In States like Bihar and UP, Sanskrit teachers come from all castes, including Dalits, and take it a good profession to live with. Still, there are no such controversies there like mother-tongue vs. Sanskrit. They don’t give any other lanuguage equal importance with their mother-tongue. Why only here? Why not Tamil first and Sanskirt second, or third here? Why Sanskrit lobby here gets annoyed with the Tamil lobby when the latter wants put their mother tongue up above the rest. I don’t understand. If your mother-tongue is Tamil. be clear like the Northerners what is your priority and where you should keep other languages, including Sanskirt.

    On the one hand, it is written here that Sanskrit is a common language and shouldn’t be linked to religion; On the other hand, most of you are saying it is created by Lord Shiva and a divine language.

  39. அன்புடையீர்

    \\ Only in Tamilnadu, a strong Sanskrit lobby exists and erupts whenever subject of language teaching crops up. \\

    சம்ஸ்க்ருதம் ஹிந்துஸ்தானமளாவிய ஒரு மொழி. ஹிந்துஸ்தானமுழுதுமுள்ள அனைத்து மாகாணங்களிலும் ஜாதி, சமயம், மதம் இவற்றைக் கடந்து இந்த மொழிக்கு பங்களிப்பு உண்டு. ஆகவே இந்த மொழியில் உள்ள கலைக்களஞ்சியங்களைப் பாதுகாக்க விழையும் அனைத்து ஹிந்துஸ்தானியரும் ……….. அவ்வாறே இவற்றில் அக்கறை உள்ள விதேசிகளும் கூட இந்த மொழியின் வளர்ச்சியில் அக்கறை கொள்வது இயல்பே.

    \\ I lived in all 4 Southern States; and in States like Maharastra, MP, Delhi, UP; there, too, there are many brahmins and other locals who know and read Sanskrit. In States like Bihar and UP, Sanskrit teachers come from all castes, including Dalits, and take it a good profession to live with. \\

    மிகச்சரியான அவதானிப்பு.

    \\ They don’t give any other lanuguage equal importance with their mother-tongue. \\

    தாங்கள் சொன்ன எல்லா இடங்களிலும்…………. மேலும் ஜம்மு காஷ்மீர் மாகாணத்திலும் வசித்த படிக்கு……………

    ம்ஹும்………. இங்கு இடறி விட்டீர்கள். தாய் மொழி என்று வருகையில் டோக்ரி, கோஜ்ரி, பத்ர்வாஹி, கிஷ்த்வாடி, (பஞ்சாபி மற்றும் கஷ்மீரி மொழிகளின் சைலிகள்), ப்ரஜ்பாஷா,அவதி, போஜ்புரி, மைதிலி, மகதி, அங்கிகா, ஸந்தாலி, குமாவுனி, கட்வாலி ( சம்ஸ்க்ருதத்தின் அபப்ரம்ச பாஷைகள்) என்ற பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் யாரும் இந்த தாய்மொழியில் தங்கள் பாடங்களைப் படிப்பதில்லை. இவர்கள் அனைவரும் ஹிந்தியில் அல்லது உர்தூவிலேயே பாடங்களைப் படிக்கிறார்கள்.

    இது தவறா என்றால்………. என் புரிதலின் படி தவறு தான்…………

    \\ Why only here? Why not Tamil first and Sanskirt second, or third here? Why Sanskrit lobby here gets annoyed with the Tamil lobby when the latter wants put their mother tongue up above the rest. \\

    இது நீங்கள் வழக்கமாகச் செய்யும் கருத்துத் திரிபு. தமிழகத்தில் சம்ஸ்க்ருதத்தை நீங்கள் முதலாவது, இரண்டாவது அல்லது மூன்றாவது என்று ஏன்? முப்பத்து மூன்றாவது இடத்தில் கூட வைத்துக்கொள்ளுங்களேன். யாரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இதற்கு இல்லை. எனக்குத் தெரிந்து தமிழகத்தில் சம்ஸ்க்ருதத்திற்கு என்று லாபி ஏதும் கிடையாது. மேலும் சர்க்காரிடம் யாரும் சம்ஸ்க்ருதத்திற்கு முதல் இடம், இரண்டாம் இடம் மூன்றாம் இடம் கொடுங்கள் என்று பேரம் ஏதும் செய்வதும் கிடையாது

    மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்ற கணக்கு. நீங்களே முன்பு இந்த தளத்தில் சம்ஸ்க்ருதத்தை ஒரு ஜாதியுடன் சம்பந்தப்படுத்த முனைந்து இருக்கிறீர்கள். யதார்த்தத்துக்கு புறம்பான கருத்து இது. அனைத்து ஜாதியினருக்கும் சம்ஸ்க்ருதம் கற்க தமிழகத்தில் வாய்ப்பில்லை என்றும் கூட சொல்லியிருக்கிறீர்கள். இதுவும் பிழையான கருத்து.

    சம்ஸ்க்ருதத்தை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க இயக்க ரீதியாக முயற்சிக்கையில் இது திணிக்கப்படுகிறது என்ற வாதம். அதைக் கைவிட்டால் அய்யோ போச்சு என்று ஜாதிவாதம். ஆக எதைச்செய்தாலும் சம்ஸ்க்ருதத்தை விவாதத்திற்குரியதாக வைத்திருப்பதால் விவாதிகளுக்கு லாபம் போலும்.

    நயா பைசா சர்க்காரிடம் இருந்து பைசா பெறாது தமிழகத்தவரின் சம்ஸ்க்ருதத்திற்கான பங்கு என்னது என்று பார்ப்போம்.

    தமிழகத்தில் மட்டிலும் சம்ஸ்க்ருத பாஷையில் கடந்த நாலைந்து தசாப்தங்களில் முறையான இலக்கணத்தின் படி யாக்கப்பட்டுள்ள செய்யுட்களாலான இலக்கியப்படைப்புகள் ஒரு லக்ஷம் க்ரந்தந்தத்திற்கு மேற்பட்டவை. ஒரு க்ரந்தம் = அனுஷ்டுப் என்ற பா அலகீட்டில் 34 அக்ஷரங்களால் ஆன ஒரு ச்லோகம். இலக்கியப்படைப்புகள் ஒரு லக்ஷத்திற்கு மேற்பட்ட ச்லோகங்கள் என்பது மட்டிலும் ஒரு விஷயமன்று. பெரும்பாலும் இவை பக்தி இலக்கியங்கள் என்ற படிக்கு இந்தப் படைப்புகள் ஹிந்துஸ்தானமளாவியும் விதேசங்களிலும் பற்பல ஜாதிகளைச் சார்ந்த ஹிந்துக்களால் தங்களது பூஜா மற்றும் பாராயண முறைமைகளில் அன்றாடம் கைக்கொள்ளவும் படுகின்றன என்பதும் விஷயம். இவை சர்க்காரி நயா பைசாவினால் நடக்காத ஒரு கார்யம் என்பது அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட வேண்டியது முக்யமான விஷயம்.

    \\ On the one hand, it is written here that Sanskrit is a common language and shouldn’t be linked to religion; On the other hand, most of you are saying it is created by Lord Shiva and a divine language. \\

    மதத்துடன் சம்பந்தப்படுத்தாதீர்கள் என்றால் மதச்சிமிழில் அடைத்து விட்டு அல்லது ஜாதிச்சிமிழில் அடைத்து விட்டு இந்த மொழிக்கு வேறு எந்த மதத்திற்கோ சமயத்திற்கோ ஜாதிக்கோ சம்பந்தமில்லை என்ற படிக்கு யதார்த்தத்திலிருந்து வேறான ஒரு பொய்க்கருத்தாக்கத்தை உருவாக்காதீர்கள் என்றே பொருள். சம்ஸ்க்ருதத்தை வைதிக சமயத்தவர்கள் அணுகுகையிலேயே …………. சிவ பெருமானுடைய டமருகத்திலிருந்து அக்ஷரங்கள் வெளிப்போந்தன என்று கருத்துருவாக்கம். சம்ஸ்க்ருத மொழியிலான ஜைன, பௌத்த மற்றும் க்றைஸ்தவ க்ரந்தங்கள் இப்படியான கருத்தாக்கத்தை அவர்களது சமய / மத கருத்தாக்கத்தின் படி ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதும் இல்லையே. சமயம் கடந்து மதம் கடந்து ஜைன, பௌத்த மற்றும் க்றைஸ்தவத்திலும் சம்ஸ்க்ருத க்ரந்தங்கள் உள்ளன என்பது தத்யம்.

    சம்ஸ்க்ருதம் அறியாதவரிடம் சம்ஸ்க்ருதத்தின் புழக்கம் பற்றிய விஷயம் இது.

    இருக்கட்டும். தமிழல்லாத மாற்று மொழி பேசுவோரிடம் தமிழ் மொழியை அறிமுகப்படுத்துதல் அதனை வளர்க்க விழைதல் என்பதில் ஹிந்துஸ்தானத்துக்கு ஸ்வதந்த்ரம் கிடைத்தது முதலாக இப்போது வரைக்குமான பற்பல தமிழக சர்க்கார்களின் பங்களிப்பு என்ன? தமிழகத்தில் மொழி வளர்ச்சியில் ஈடுபடும் இயக்கங்களின் பங்களிப்பு என்ன என்பதை தனியாகப் பகிருங்களேன். இதற்கு முன்னால் கூட பல வருஷங்களுக்கு முன் நான் இந்த கேழ்வி எழுப்பியிருக்கிறேன்.

    மற்ற மொழி பேசுவோரிடம் தமிழ் எந்த விதத்தில் புழங்குகிறது. யார் முன்னெடுக்கிறார்கள் என்பதை நான் நிச்சயம் விலாவாரியாகத் தனியாகப் பகிர்கிறேன்.

  40. திரு BS

    // Why not Tamil first and Sanskirt second, or third here? Why Sanskrit lobby here gets annoyed with the Tamil lobby when the latter wants put their mother tongue up above the rest.//

    சமஸ்க்ரிதம் வேண்டும் என்பது தமிழ் மொழி இல்லாமல் என்று சொல்ல வில்லை – யாரும் தமிழ் நாட்டில் சொல்லவும் முடியாது. தமிழ் மொழி தான் இங்கு முதன்மையாக இருக்கின்றது. அப்படிதான் இடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையே. தமிழ் பற்று வேறு – வேற்று மொழி வெறுப்பு என்பது வேறு.

    அன்று ஹிந்தி எதிர்ப்பு ஆட்சியைப் பிடிப்பதற்கு சௌகரியமாக இருந்தது. இன்று சமஸ்க்ருத எதிர்ப்பு வெறும் பிராமண எதிர்ப்பாகத்தான் இருக்கிறதே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை. பிராமணர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு எவ்வளவோ உண்டு.

    //On the one hand, it is written here that Sanskrit is a common language and shouldn’t be linked to religion; On the other hand, most of you are saying it is created by Lord Shiva and a divine language//

    மதத்துக்கு மொழி நேரடித் தேவை இல்லைதான். ஆனால் இங்கு சிவன், உடுக்கை என்றெல்லாம் பேசுவதற்கு காரணம் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு மொழி வேறுபாடு கொண்டாட வேண்டாமே என்று சொல்லத்தான்.

  41. திரு பி எஸ் , தாங்கள் தமிழில் டைப் செய்து எழுதினால் எங்களுக்கு பதில் அளிக்கும் போது , மிக்க உதவியாக இருக்கும்.

    தமிழ் மொழி வட மொழியாம் சந்தஸ் இரண்டுமே சிவபிரானின் உடுக்கை மூலம் வெளிப்போந்தவை என்பது இந்துக்களில் ஒரு சாராரின் நம்பிக்கை. கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திகர்கள் மற்றும் ஆக்ஞேயவாதிகள் ( ATHEISTS AND AGNOSTICS ) ஆகியோருக்கும் தமிழகத்தில் தாய்மொழி தமிழ்தான். அவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இங்கு கிடையாது.

    தங்களது நம்பிக்கைகளை பிறர் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் செயல் காட்டுமிராண்டி தனமானது. அது ஆபிரகாமியர்களுடைய இழி குணம் ஆகும். இந்துக்களுக்கு அந்த குணம் எப்போதும் கிடையாது. தமிழ் மொழி எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் தமிழனை ஆபிரகாமிய மதங்களுக்கு மதம் மாற்றிவிட்டு, உருது உன் தாய் மொழி என்று சொல்லி மிரட்டும் கும்பலை தான் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஸ்லீமுக்கு உருது தாய் மொழியாக இருக்கலாம் என்பது கூட தவறு. அங்கு உள்ள முஸ்லீம்கள் கூட சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்துவாக இருந்து மதம் மாற்றப்பட்டவர்களே ஆவார்கள் .அவர்களின் தாய்மொழி இந்திதான். தமிழகத்திலும் தாய்மொழி தமிழாக உடையோர் தான் பிற ஆபிரகாமிய மதங்களுக்கு மதம் மாறி சென்றுள்ளனர்.

    மேலும் உலகத்தில் உள்ள மொழிகளிலேயே சமஸ்கிருதத்தில் உள்ள அளவுக்கு நாத்திக மற்றும் ஆக்ஞேய வாத கருத்துக்களை கொண்ட நூல்கள் வேறு எந்த மொழியிலும் கிடையாது. ஏனெனில் நாத்திகம் என்பதும் இந்து மதத்தின் ஒரு பகுதியாகும். சார்வாகத்தின் ஒரு மறு பெயர் தான் இன்று கூத்தாடும் அரைகுறை பகுத்தறிவுப் போலிகள் சொல்லும் நாத்திகம் என்பதும். இங்கர்சால் நாத்திகர் அல்ல. அவர் ஒரு அக்னாஸ்டிக் .( AGNOSTIC )

  42. I am disappointed with the 2 responses. It is in Tamilhindu.com, whenever a debate takes places where the other lobby says Sanskrit is a Brahmin language; or a language of orthodox Hindus; or language used in Temple worship only, or not common to all; or not found in common use at all, so many from the Sanskrit lobby retort: //NO! You are twisting. It is not a language of Brahmins, of temples, of Hindu religion only. It is a common Indian language like any other language like Tamil.//

    Alas! here the Sanskrit lobby takes a somersault to point out that it is a divine language for Hindus and the creator is Lord Shiva Himself.

    You are talking according to the occasion. What a fall !

    Krishnakumar, as usual, is ambiguous. But Rangan is better. Still he is not clear to me.

    He writes: சமஸ்க்ரிதம் வேண்டும் என்பது தமிழ் மொழி இல்லாமல் என்று சொல்ல வில்லை – யாரும் தமிழ் நாட்டில் சொல்லவும் முடியாது. தமிழ் மொழி தான் இங்கு முதன்மையாக இருக்கின்றது. அப்படிதான் இடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையே. தமிழ் பற்று வேறு – வேற்று மொழி வெறுப்பு என்பது வேறு.

    அன்று ஹிந்தி எதிர்ப்பு ஆட்சியைப் பிடிப்பதற்கு சௌகரியமாக இருந்தது. இன்று சமஸ்க்ருத எதிர்ப்பு வெறும் பிராமண எதிர்ப்பாகத்தான் இருக்கிறதே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை. பிராமணர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு எவ்வளவோ உண்டு.

    This is ok when the debater include DKists or DMKists, or Periyarists or anyone against Sanskirt. But here, the debators are people like Thayumanavan. So, you should take him only into consideration when you reply. About Tamil brahmins and their contribution to Tamil etc.. you can say it here only if the debators here have denied it. No one has said it!. Therefore, it is pointless argument from your side. Why controversy crops us here in Tamilhindu.com between the two language lobbies if our common stand is Tamil first, other language is next. Take for e.g. a UPite. Whichever caste he or she belongs to, he or she puts his or her mother-tongue Hindu on top. Ask Mr Rajnath, also from UP. He may advocate Sanskrit learning; but not at the cost of his own mother-tongue Hindi. Hindi became the national official language by one vote cast by a UP Brahmin MP Mr Tandon. They were zealots and wanted to see Hindi all over India. At the same time, as written here by some, Ambedkar was for Sanskrit. Sanskrit would have been propped up and the occasion was opportune: but UP Brahmins skuttled it in favor of Hindi. NOT TAMILIANS OR OTHERS. Sankrit is taught, learnt and everywhere. But it is unable to usurp the place of the locals’ mother-tongue. Hence, no controversies. Fear creates controversies. If you create fear of imposition and fear of replacing mother-tongue, controversies will crop up.

    //மதத்துக்கு மொழி நேரடித் தேவை இல்லைதான். ஆனால் இங்கு சிவன், உடுக்கை என்றெல்லாம் பேசுவதற்கு காரணம் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு மொழி வேறுபாடு கொண்டாட வேண்டாமே என்று சொல்லத்தான்.//

    This is not the correct answer to my point; i.e. that there is patent hypocricy shown by writers here that Sanskrit should be propogated and accepted and read by all Tamilians because it is not a divine language exclusively for Brahmins or used in Temple worship. It is as common as Tamil and its alleged exclusivism is a cunning ploy on the anti-Sanskrit lobby. Then, why are so special with the religious view that Sanskrit came directly from Lord Shiva,

    I would suggest that you, the pro-Sanskrit friends may just throw off all religious stuff associated with Sanskrit and treat it as Tamil. Tamilians read Tamil not because it is divine. Even if some one says it came from Lord Shiva, no one attaches any importance. Because the language is the mother-tongue of Tamilians following many religions. If you want Sanskrit to spread among Tamilians, of all hues, (really you don’t want to restrict it to Tamil hindus, am I correct or not?), then, you should go on thinking the language is as common, as handy, as easy, as Tamil: no hangs-up like Lord Shiva creating it. This is effective service you are rendering to Sanskrit. To call it Deva basha is to backstab it 🙁

  43. மற்ற மொழி பேசுவோர் தமிழ் கற்பது இருக்கட்டும். திராவிட மாயை வாதிகள் முனைந்து தமிழ் எழுத்துக்களில் ழகரத்தையும் , ளகரத்தையும் லகரமாகி விட்டார்கள் கடந்த சில காலமாக. ..நல்ல சமத்துவம் .:-).

    பேச்சு வழக்கில் முழுக்க ஒழித்தாயிற்று என்றால் நாளை மேலும் எழுத்து ” சீர் திருத்தம் ” செய்து வேண்டாத அட்சரங்களை ஒழித்து விடுவார்கள் மேற்சொன்ன மாயை வாதிகள்.

    மேற்சொன்ன ழகரம் மற்றும் ளகரம் இரு அட்சரங்களையும் மலையாள தேசத்தில் போய் தான் பின் வரும் சந்ததியினர் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு…

    பேச்சுத்தமிழில் தமில் பாடான பாடு படுகிறது . திராவிடஸ்தான் வாரிசுகள் [ கல்] நடத்தும் ஊடகங்கள் [ கல்] அவற்றை காப்பி அடிக்கும் மற்ற உடான்ஸ் ஊடகங்கள் சினிமாக்கள் வேண்டுமென்றே செய்யும் மொழிக்கொலை பற்றி சம்ஸ்க்ருத வெறுப்பு மூலம் பல காலமாக தமிழ் “வளர்க்கும் ” சிலர் பேசுவதே இல்லை என்பது தமிழ் நாட்டின் தலையாய காமெடி.

  44. “மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்…”

    ஆதியில் தோன்றிய சம்ஸ்க்ருதம், மற்றும் தமிழ் மட்டுமல்ல பாரதிய மொழிகள் பல பரமாத்மாவின் பல ரூபங்களில் சிலவற்றையாவது பாடுகின்றன.

    அத்தனை மொழிகளும் நம் எல்லோரின் பாட்டன் சொத்து தான். நல்ல எண்ணம் கொண்ட வெளியாருடனும் பகிர்ந்தாலும் அள்ள அள்ளக் குறையாத சொத்து.

    மனிதனை தெய்வத்தன்மை அடையச் செய்யும் சிறந்த வழிகள் நம் மொழிகள். அது பிடிக்காத சக்திகள் பேதம் விளைவிக்க முயல்வது நாம் வாழும் காலத்தின் இயற்கையே.

    இதில் ஆன்மிகக் களஞ்சியமான சம்ஸ்க்ருத மொழி இருநூறு ஆண்டுகள் இங்கிருந்த அந்நிய அழிவு சக்திகள் காலம் தொட்டே திட்டமிட்டே தாக்கப்படுகிறது.

    மற்றோர் பெரும் ஆன்மிகக் களஞ்சியமான தமிழ் ஒழிப்பு செய்யும் இந்திய உடைப்பு சக்திகளைப் பற்றி நமக்கு தெரியும்.

    முதலில் எண்ணூறு வருஷங்கள் இங்கிருந்த பல்வேறு அழிவு சக்திகள் தண்டோபாயத்தை [ வன்முறை ] மட்டுமே செய்தன. பின் வந்த ஆங்கிலம் பேசிய அழிவுக் கூட்டம் சாம, தான முக்கியமாக பேத உபாயங்களை நம்மை உடைக்கக் கடைப் பிடிகிறது. ஓரளவு வெற்றியும் பெற்று விட்டது தான். ஆனால் காலம் இன்னும் கடந்து விடவில்லை தர்மத்துக்கு.

    இப்போதும் நவீன கால அசுர அந்நிய சக்திகள் [ ஷெல்டன் போலக் போன்ற மற்றும் பல இந்திய சிப்பாய்களின் உதவியில் ]முனைந்து சம்ஸ்க்ருத கல்வியை தாங்கள் தங்கள் ஆட்கள் மூலம் மட்டுமே கற்க வேண்டும் என்று வேலை செய்கின்றன,.

    நவீன பேதா வாதிகள் நம் பாட்டன் சொத்தை இதெல்லாம் உங்களுதில்லை சீச்சீ என்கின்றனர் . அப்பாவிகளாய் நம்புவோர் அல்லது கள்ளம் என அறிந்தே துணை போவோர் போகட்டும். விழித்துக்கொண்டிருப்போர் நிஜத்தூக்கம் தூங்குவோரை எழுப்புவோம்.

    சம்ஸ்க்ருதம் ஒழிக்கப் படா விட்டால் மக்கள் பேத அரசியல் செய்வோரை இனம் கண்டு விடுவார்கள். தங்கள் உள்ளீடான ஒற்றுமையை உணர்ந்து விடுவார்கள். நம் பம்மாத்து செல்லாது என்ற பயம் காரணம்.

    “முன்பு செய்த பழிக்குத் துணை ” நாம் இந்த வியாதியின் மூல காரணமான ஆறிப்போன ஆரிய- திராவிட போலிக் கொள்கையை முதலில் அடையாளம் கண்டு உண்மையைப் புரிந்து கொள்வதே.

  45. திரு அத்விகாவுக்கு தமிழில்:

    என் கருத்துக்கள்:

    சமற்கிருதம் ஒரு பொது மொழி. அஃது அன்று மக்களால் பேசப்பட்டு நன்கு புழங்கிய மொழி. இதை தெய்வபாஷை என்றும் பிராமணர்களின் பாஷை என்றும் மக்களுக்கானதன்று என்றும் சொல்பவர்களைப் பார்த்து வைக்கப்பட்ட வாதம் இப்பொதுமொழி வாதம். இங்கே இத்தளத்திலும் பிறவிடங்களிலும் சமற்கிருதம் கோஷடியினர் இப்படித்தான் எழுதியிருக்கிறார்கள்: சமற்கிருதம் மக்கள் மொழியன்று என்று.

    இச்சூழலில், சமற்கிருதக் கோஷ்டியென்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இன்னொரு கூட்டம் சொல்வது: //இல்லை…இல்லை இது தேவபாஷையே. சிவபெருமான் தன் உடுக்கையிலிருந்து உருவாக்கியதே// என்று சொல்லி, சமற்கிருதம் மக்கள் மொழியென்று சொல்பவரை அறியாமலே அவர்கள் வாதத்தை நீர்த்து, மக்கள் மொழியன்று என்ற எதிர் கோஷடியினரிடம் சேர்ந்து விடுகிறார்கள்.

    சிவபெருமானிடமிருந்து வந்தது நம்பிக்கை இந்துக்கள் நம்பிக்கை. ஆனால், தமிழகத்தில் வாழும் தமிழர்கள் இந்துக்கள் மட்டுமன்று; அப்படியே இந்துக்கள் என்றாலும் அவர்கள் இப்படிபபட்ட நம்பிக்கைகளையெல்லாம் ஆராய்வதேயில்லை. எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ கிடையாது.

    தெலுங்கோ , ஹிந்தியோ, மலையாளமோ, மராட்டியோ, வங்காளமோ – மக்களை மதவாரியாகப்பிரித்து சென்றடையவில்லை. ஓர் இந்து, ஒரு முசுலிம், ஒரு கிருத்துவர் – என்று வங்காள மக்களிடையே மூன்று மொழிகள் புழங்கவில்லை. மூவருமே வங்காளம் தான் பேசி எழுதி வாழ்கிறார்கள். வங்காளிகள் என்றுதான் அவர்கள் பெயர். இதுவே இங்கும் இருந்தால், அல்லது சமற்கிருதம் புழங்கவேண்டுமென விரும்பினால், செய்யப்படவேண்டும். ஆனால், செய்ய விடாமல் சிவபெருமானிடமிருந்து வந்தது; தேவ பாசை என்று அடுக்கும்போது சமற்கிருத ரீச் தடை செய்யப்படுகிறது.

    இதைத் தடுக்க என்ன வழியென்றால் இந்துக்களின் நம்பிக்கையைப் பெரிது படுத்த கூடாது. சமற்கிருதம் சிவபெருமானிடமிருந்து வரட்டும்; இந்துப்பனுவல்கள் எழுதப்பட்டிருக்கட்டும். அவை எம்மாத்திரம் தமிழர்களே படியுங்கள் இம்மொழியை என்ற கோரிக்கைக்கு உதவும்? உண்மையில் அக்கோரிக்கையை உதவாமலல்லாவா செய்துவிடும்? இவையே கேள்விகள்.

    மாறாக, இதை தேவ பாசையென்றால், இது அவா பாஷை? நமக்கெதற்கென்றல்லவா போவார்கள்? அப்புறம் திக காரன், திமுககாரன், பெரியாரிஸ்டுதான் காரணம் என்று அழற்றி என் பயன்?

    இதுதான் என் வாதம். இன்னும் நிறைய இருக்கின்றன. இப்போது இதற்கு மட்டும் அத்விகா பதில் சொல்லலாம். சிவபெருமான்; உடுக்கை; வேதங்கள்; உபநிடதங்கள் என்றெல்லாம் பேசப்படக்கூடாது. மக்கள் மொழி என்றால், அவை இங்கு வாரா என்பதை உணர்ந்து. பதில் சொல்லவும்.

  46. ஹிந்துஸ்தானத்தில் அனைத்து ஜாதி, சமய மற்றும் மத மக்களது பங்களிப்புள்ள சம்ஸ்க்ருத மொழியை வெறும் பார்ப்பனர்களது பங்களிப்பால் ஆன மொழி என்று பி எஸ் என்ற பெயரில் எழுதும் இந்த அன்பர் அடையாளப்ப்படுத்த விழைவது குசும்புத் தனத்தின் பாற்பட்ட பொய்ப்பரப்புரை. இந்த பரப்புரை பார்ப்பனர் அல்லாத மற்ற ஹிந்துக்களது பங்களிப்பை புறந்தள்ளும் இழிவு படுத்தும் மற்றும் சிறுமைப்படுத்தும் பாங்குடையது. இப்படிப்பட்ட பொய்ப்பரப்புரைகள் வெறுப்பு முதல்வாதத்தின் பாற்பட்டவையானாலும் அப்பட்டமான பொய்யில் ஊறியமையால் இதற்கு மாறான உண்மைகளை குறைந்த பக்ஷம் கோடிட்டாவது காட்ட வேண்டியது அவச்யமாகிறது.

    வேதங்கள் மஹாபாரதம் புராணங்கள் இவற்றைத் தொகுக்த்தளித்தவர் மீனவப்பெண்ணின் மகனான வேத வ்யாசர். இவர் ஹிந்துக்களில் மிகப்பெரும்பான்மையினரால் கொண்டாடப்படுகிறார்.

    ராமாயணத்தை ஆதியில் மனிதகுலத்துக்கு அளித்த ஆதிகவி வால்மீகி வேடுவர். இவரை முனிசிம்ஹம் என்று கொண்டாடுகிறார்கள்.

    பகவதஜ்ஜுகம் மத்த விலாஸப்ரஹஸனம் போன்ற சம்ஸ்க்ருத நாடகங்களை இயற்றிய மஹேந்த்ரவர்ம பல்லவன் பார்ப்பனன் அல்லன்.

    கேத கௌதுகம் மற்றும் த்வாவிஷத் யோகாவலி போன்ற ஜோதிஷ நூல்களை இயற்றிய ஸ்ரீ கான் ஜாதா மிர்ஜா கான் அப்துல் ரஹீம் கானே கானா ……….. சுருக்கமாக ரஹீம்……….. என்று அழைக்கப்படும் க்ருஷ்ணபக்தர் ……………. ஹிந்து கூட அல்லர். யவனராக இருந்து க்ருஷ்ணபக்தியும் செய்து யவனராக உயிர் துறந்த இவரது சமாதி இன்றைய தினத்தில் தில்லி மாநகரத்தில் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் தர்க்காஹ் ஷெரீஃபின் கிழக்கே காணப்படுகிறது.

    க்றைஸ்தவராகவே வாழ்ந்து க்றைஸ்தவராகவே இறந்த ஸ்ரீ பி.ஸி.தேவஸியா என்ற மலயாள க்றைஸ்தவர் எழுதிய க்றிஸ்து பாகவதம் என்ற ஏசுபிரானின் வாழ்க்கை சரிதத்தை விளக்கும் 33 காண்டங்களடங்கிய ஸம்ஸ்க்ருத நூல். இந்நூல் இந்தப் பெருந்தகையால் மஹாகாவ்யத்தின் இலக்கண மரபுகளை ஒட்டி ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டது. 1980ம் வருஷம் இந்த நூலுக்காக இவருக்கு சாஹித்ய அகாதமி விருதும் கிட்டியது.

    பார்ப்பனரல்லாதவர்களின் ஸம்ஸ்க்ருத மொழிக்கான பங்களிப்பு மற்றும் ஹிந்து மதத்தையே கூட சாரத அன்பர்களின் ஸம்ஸ்க்ருத மொழிக்கான பங்களிப்பு இங்கு சில உதாஹரணங்களாகப் பகிரப்பட்டுள்ளது.

    ஆனால் வெறுப்பு முதல்வாதம் மற்றும் ராமசாமி நாயக்கரின் ஜாதிக்காழ்ப்பு வாதம் இவற்றை அடியொற்றி எழுத விழையும் பி எஸ் என்ற பெயரில் எழுதும் அன்பர் அவர்கள் கூசாது பொய்மை மிக சம்ஸ்க்ருதத்தை ஜாதிச் சிமிழிலோ மதச் சிமிழிலோ அடைக்க விழையலாம். ஆனால் உண்மை அதற்கு மாறானது.

    இப்படியே உர்தூ மொழியை இஸ்லாமியக் குமிழில் அடைக்க விழையும் அவலம். த்ராவிட விசிலடிச்சான் குஞ்சப்பத்தனமான இப்படிப்பட்ட பொய்க்கருத்தாக்கங்கள் உண்மைக்குக் மாறானவை. வெறுப்பு முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஹிந்துஸ்தானத்தின் நளினமான மொழிகளுள் ஒன்றான உர்தூ மொழிக்கு ஹிந்துக்களுடைய பெருமை வாய்ந்த பங்களிப்பை சிறுமைப் படுத்தும் இழிவினைக் கொண்டவை மேலும் இவர்களது பங்களிப்பினை சிறுமைப்படுத்த விழைபவை. ஹிந்துக்களில் இருந்து நூற்றுக்கணக்கான உர்தூ இலக்கியப் படைப்பாளிகள் உள்ளனர். ஆனால் வெறுப்பு முதல்வாதிகள் இதை இஸ்லாமிய மொழியாக மட்டிலும் அடையாளம் காட்டி சுகம் காண்பர்.

    தமிழ் ஹிந்து தளத்தில் pro sanskrit anti sanskrit என்றெல்லாம் இல்லை. விஷயமெல்லாம் pro truth anti truth. கந்த சஷ்டி கவசம் வள்ளல் அருணகிரிப்பெருமான் எழுதியது என்று அட்ச்சு வுட்ட அன்பருக்கு சகட்டு மேனிக்கு பொய்கள் கூறுவது புதிதல்ல. தொடரும் அவலமே.

    ஜம்மு காஷ்மீரம், பீஹார் மற்றும் உத்தரப்ரதேசத்தில் பேசப்படும் மொழிகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். இங்கெல்லாம் எத்தனைப் பள்ளிக்கூடங்களில் பட்டியலிடப்பட்ட மொழிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று இந்த அன்பர் பகிர்ந்தாரானால் …………. இந்த அன்பர் விதிவிலக்காக உண்மை கூட பகிருவார் என்று ஒப்புக்கொள்ள முடியுமே.

    சம்ஸ்க்ருதம் சிவபெருமானிடத்திலிருந்து தோன்றிய மொழி என்ற சைவ நம்பிக்கை சம்ஸ்க்ருத இலக்கியங்களில் காணப்படுகிறது. இதை மறைக்க விழைவது தான் அசிங்கமானது. உண்மையை உண்மையாகச் சொல்வது நேர்மையாளர்களின் பாங்கு. சம்ஸ்க்ருதம் மட்டிலும் என்ன ஜைனர்களும் கூட அர்த்தமாகதி என்ற ப்ராக்ருத பாஷையை தேவபாஷையாகவே கூறுகிறார்களே.

    வள்ளல் அருணகிரிப்பெருமான் முருகப்பெருமானை முத்தமிழ் வடிவாகவே உருவகப்படுத்துகிறாரே. முத்தமிழோனே. தமிழ்த்ரயவிநோதப்பெருமானே என்றெல்லாம் விதந்தோதுகிறாரே.

    தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம் மட்டுமல்ல உலகில் மனிதர்களால் பேசப்படும் எல்லா மொழிகளுமே தெய்வ சம்பந்தப்பட்டவையே………. தேவ பாஷைகளே……….. என்பதே ஆஸ்திகர்களுடைய கருத்தாக்கம். இறைவனல்லாது உலகில் ஒரு படைப்பும் உளதோ?

  47. @க்ருஷ்ணகுமார்

    குறைந்த பக்ஷம், தண்டோபாயம், வ்யாசம், ஹிந்துஸ்தானம், த்ராவிட, உர்தூ, சம்ஸ்க்ருதம், விதேசி, சர்க்கார், தசாப்தம், லக்ஷம், அக்ஷரம், பூஜா, த்வனி, க்றைஸ்தவம், க்ரந்தம், ஸ்வதந்த்ரம், ரக்ஷணம், கண்டஸ்தம், அவஸ்யம் இவ்வாறான சொற்களை வலிந்து பயன்படுத்தியுள்ளபோதே தெரிகிறது, இது யாருக்கான தளம் என்பதும் சமற்கிருதத் திணிப்பு என்பது தமிழைக் கெடுக்கத்தான் என்பதும்.

    மேற்கண்ட சொற்களைத் தமிழ் மொழிபெயர்ப்புச் செய்தும், மொழி பெயர்ப்பில் இடர்ப்பாடுள்ள சொற்களுக்குத் தமிழ் நெறிப்படித் தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டும் அவைகளைப் பயன்பாட்டில் கொண்டுவந்தும் பல்லாண்டுகளாயிற்று. அதன் பிறகும் திணிக்க முற்படும்போதே உம்முடைய தந்திரம் தெரிகிறது.

    ஒருபுறம் தமிழும் சமற்கிருதமும் சமமானவையே என்கிற பொருளில் ‘சிவபெருமானின் உடுக்கையிலிருந்து பிறந்தவை’ எனத் தமிழுக்குத் தெய்வத்தன்மை கொடுப்பது போன்று நடித்துவிட்டு நைச்சியமாக உம்முடைய எழுத்துக்களில் சமற்கிருதத்தை உயர்த்திப் பிடித்தலைக் கண்ணுறும்போதே தெரிகிறது நீர் தமிழைத் தாழ்த்துகின்றமை. இதற்குத் தமிழின் மணிப்பவள (மணிப்பிரவாள) நடை மதச் சார்பு இலக்கியங்களை வேறு துணைக்கழைத்துக்கொள்கிறீர்.

    மேற்கண்ட, தமிழின் சீர்திருத்தத்திற்குக் கரணியம் (காரணம்) தனித்தமிழியக்கமும் அதன் தாக்கமுமேயாகுமென்பது வரலாறுணர்த்தும் உண்மை. தனித்தமிழியக்கத்தின் முதன்மையானவராய் வைத்துப் போற்றப்படக்கூடியவரான மறைமலையடிகள் நாத்திகரல்லரே, தூய சிவனியப் (சைவ) பற்றாளரும் சிவனிய இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவரும்தாமே, பின் ஏன் மணிப்பவள நடையையும் பிறமொழிக் கலப்பையும் எதிர்த்தார்?

    உடுக்கையிலிருந்து பிறந்த மொழி எம்மொழியுமன்று. மாந்த இனம் தோன்றிய நாள் முதல் இயல்பாக எண்ணத்தில் தோன்றி ஒலிக்குறிப்பால் சுட்டப்பட்டு மாந்தன் பரவிய இடங்களுக்கும் பரவி அவ்வவ்விடத்தின் தட்ப வெப்ப நிலைக்கும் மாந்தனின் பலுக்கத்திற்கும் (உச்சரிப்பிற்கும்) ஏற்பச் சிறிதுசிறிதாகத் திரிவாக்கம் (பரிணாமம்) அடைந்து தற்போதைய நிலையையடைந்து, அத்திரிவாக்கப் பாதையில் மேலும் தொடர்ந்துகொண்டிருப்பதே மொழி. இதுவே மொழி பற்றிய அறிவியல் பார்வை. தமிழோடு சமற்கிருதத்தைக் கலக்கவிட்டமையும் தமிழ் தன் தூய்மையை இழந்தமைக்கு இன்றியமையாக் கரணியம். இதன் விளைவாகவே தமிழ்ச் சொற்களுக்கெல்லாம் சமற்கிருத மூலங்கள் காண்பிக்கப்பட்டுத் தமிழின் பெருமை மறைக்கப்படுகின்றது. சமற்கிருதத்தை எதிர்க்கும்போதே உம்மைப் போன்றோர் வலிந்து சமற்கிருதச் சொற்களைப் புகுத்தி தமிழைக் கெடுக்கிறீரெனில், அம்மொழியைக் கட்டற்றுப் புகவிடின் எவ்வாறான விளைவுளேற்படுமெனச் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

    மன்னராட்சியின்போது, தமிழ் மன்னர்களின் கொடை மடத்தையும் மதப்பித்தத்தையும் பயன்படுத்திச் சமற்கிருதம் தேவமொழியென்றும் தாம் நிலத்தேவரென்றும் (பூசுரர்) கூறிய கூட்டத்தினரால் தமிழின் பெருமை தாழ்த்தப்பட்டுக் கோவிலில் வழிபாட்டுக்குரிய மொழி தமிழன்று என்று துடைத்தெறியப்பட்டு அந்த அவல நிலை இன்றும் தொடருவதைக் கண்கூடாய்ப் பார்த்தும் யாம் சமற்கிருதத்தை ஏற்றுக்கொள்வோமா?

    அறிவியல் நூல்களுள் ஏராளமானவை ஆங்கிலத்திலுள்ளன. ஆங்கிலேயன் ஒரு அகரமுதலி (அகராதி) தொகுத்தால் அதில் தன் மொழிச் சொல் இன்ன மொழியிலிருந்து வந்தது என்று உண்மையைக் கூறுகிறான். சமற்கிருதப் பற்றாளன் அப்படிச் செய்வதில்லை; இந்தியாவின் எந்த மொழிச் சொல்லாகவிருப்பினும் அது சமற்கிருதத்தினின்றே பிறந்ததாகத் திரித்து அதனினின்றே மூலங்காட்டுகிறான். இக்கண்ணோட்டத்திலேயே பல தூய தமிழ்ச் சொற்கள் சமற்கிருத வேர் கொண்டனவாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகரமுதலியில் காட்டப்பட்டுள. அவற்றைத் தேவநேயப் பாவாணர் சுட்டிக் காட்டிக் கடிந்துரைத்திருக்கிறார். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மிகுவளர்ச்சி ஆங்கிலேயரால் ஏற்படுகின்றது. அவற்றைக் கற்க ஆங்கிலம் இன்றியமையாதது. எனவேதான் பிற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டபோதும் தமிழகத்தில் ஆங்கிலம்-தமிழ் தழுவிய இருமொழிக் கொள்கை செயலாக்கப்பட்டது.

    தமிழில் ஆங்கிலம் கலத்தல் கேடு பயப்பதுதான். தனித்தமிழ் உணர்ச்சியும் தனித்தமிழியக்கத்தின் தாக்கமும் குறைந்தமைதாம் ஆங்கிலம் கட்டுக்கடங்காது கலப்பதற்குக் கரணியம். அதில் ஏற்பட்ட தொய்வைச் சரி செய்தலின் மூலம் தமிழைத் தூய்மைபடுத்த என் போன்றோர் முயன்றுகொண்டுள்ளோம். ஆனால் எக்காலும் தொல்கதைப் (புராண) புரட்டுகளும் மூடத்தனமும் தமிழரை அடிப்படுத்தும் சூழ்ச்சியும் நிரம்பிய சமற்கிருதத்தை நுழையவிடோம்.

    “தமிழ்தான் உலக முதன்மொழி; தமிழ்தான் திராவிட மொழிகளுக்குத் தாயும் ஆரிய மொழிகளுக்கு மூலமும் ஆகும்; சமஸ்கிருதம் என்பது அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியும் (SEMI-ARTIFICIAL LITERARY DIALECT) தமிழின் மும்மடித் (3 TIMES) திரிபும் ஆகும்; சமஸ்கிருதத்திலுள்ள சொற்களுள் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச் சொற்களே” எனும் உண்மைகள் ‘மொழி ஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் அவர்களின் மொழியாராய்ச்சியால் நிறுவப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. “தமிழ் ஒன்றே இயன்மொழி (NATURAL LANGUAGE) , ஒலிப்பதற்கு வருத்தமும் முயற்சியும் மிகவும் தேவைப்படாத மொழி. எனவே நோயாளியும், முதியோரும், குழந்தைகளும் எளிதில் பேசக்கூடிய மொழி” இவையும் மெய்ப்பிக்கப்பட்டவையே. அடி வயிற்றிலிருந்து உரப்பியும் எடுத்தும் ஒலிக்கும் வன்மை நடை தமிழுக்கில்லை. உண்மை இவ்வாறிருக்க நீர் சமற்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி தமிழை அழிக்கவேயன்றி வேறெதற்காக இருக்க முடியும்?

    தமிழில் பிறமொழிச் சொல்லுக்கீடான தனித்தமிழ்ச் சொல்லொன்றைப் புனைந்து அதைப் புரிய வைக்கவும் அப்புனையப்பட்ட தனித்தமிழ்ச் சொல்லைத் தமிழில் வழக்கூன்றச் செய்யவும் முனைந்து அடைப்புக்குறிக்குள் பிறமொழிச் சொல்லைக் குறிப்பிடும் இக்காலத்தில் அதற்கு எதிரான நிலைப்பாட்டுடன் “தண்டோபாயம் (வன்முறை)” என்று சமற்கிருதத்தை வலியப் புகுத்தி அதை வழக்கூன்றச் செய்யத் தமிழ்சொல்லைக் குறிப்பிடும் உம் போன்றோரின் நோக்கம் அதைத் தெற்றெனக் காட்டுகிறது.

    அத்துடன் சந்தடியில் ராமசாமி ‘நாயக்கர்’ என்று அழைத்து உம்முடைய பண்பையும் காட்டிவிட்டீர்.

  48. திரு. கார்த்திக் கரன்…

    தங்களின் தனி தமிழ் தொடர்பான கருத்துக்களை நான் வரவேற்கிறேன். ஆனால், அதனை கூறும் விதத்தில் தான் நீங்கள் முரண்பட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். திரு.கிருஷ்ண குமார் அவர்கள் இத்தளத்தின் மிக மூத்த வாசக அன்பர்களுள் ஒருவர். மேலும், தமிழ்ஹிந்து தளத்தில், மிக நீண்ட காலமாக பல கட்டுரைகளையும், மறுமொழிகள் சார்ந்த எதிர்வினைகளையும், தொடர்ந்து வழங்கி வரும் அறிவில் சிறந்த சனாதன ஞானி. எல்லாவற்றையும் விட என் தந்தையின் வயதிற்கு ஒப்பானவர்.

    அவருடைய மணிப்ரவாள நடையை நானும் பலக் காலமாக விமர்சித்து வந்துள்ளேன். அவருடைய இந்த போக்கு வலிந்து திணிக்க படுவதா என்பது எனக்கு தெரியாது, ஆனால், அவர் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்னும் “காவி”ய இயக்கத்தின் தாக்கத்தால் இவ்வாறு அவர் செய்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இயல்பான மொழிக் கலப்பில் இவ்வளவு வேற்றுமொழி சொற்களை காண இயலாது.

    திரு.கிருஷ்ண குமார் அவர்களின் மீதான என் வருத்தம் எல்லாம் இரண்டே இரண்டு தான். முதலாவதாக, அவரின் மணிப்ரவாள நடை. இரண்டாவது,ஆர்.எஸ்.எஸ்ஸின் மீதான அவரின் கண்மூடித்தனமான பற்றுதல் . மேற்கூறிய இந்த 2 விடயங்கள் தான் அவரிடம் இருந்து நான் வெகுவாக முரண்ப்பட காரணம். ஆகவே ,ஒருவர் யார் என்று தெரியாமல் அவரை பற்றி தரம் தாழ்த்தி ஒருமையில் பேசுவது நம் தரத்தை குறைத்து போல் ஆகிவிடும்.

    எனவே நம்முடைய கருத்தினை நாம் நயமாகத் தான் எடுத்துக் கூற வேண்டுமே தவிர நீர், உமது போன்ற ஒருமையில் விளிப்பதெல்லாம் அநாகரீகமான ஒன்று. தமிழ் பண்பாட்டிற்கும் அது அழகல்ல. அப்படி நாகரீகத்தை ஒதுக்கி விட்டு ஒருமையில் பேசி ஒருவரை நம் வழிக்கு கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. அநாகரீக சொற்ப பயன்பாட்டை காட்டிலும் மணிப்ரவாளம் அவ்வளவு அசிங்கமானது ஒன்றுமில்லை. அவரிடம் ஒருமையில் பேசியதற்கு மன்னிப்பினை கோரி, பிறகு தங்களின் வாதங்களை தொடருங்கள். நன்றி.

  49. @தாயுமானவன்

    ‘நீர்’, ‘உம்’ ஆகியன ஒருமையல்ல; முன்னிலைப் பன்மைப் பெயர்கள். எனவே நான் அவரை மதிப்புக் குறைவாக விளிக்கவில்லை என்பது தேற்றம்.

    https://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512663.htm

    மேற்கண்ட சுட்டியைத் தொடர்ந்தீரெனில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். இருப்பினும் தங்கள் மனக்குறையைத் தணிக்கும் பொருட்டு அவற்றை இனிப் பயன்படுத்துவதில்லை.

    //அவர் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்னும் “காவி”ய இயக்கத்தின்//

    //இயல்பான மொழிக் கலப்பில் இவ்வளவு வேற்றுமொழி சொற்களை காண இயலாது.//

    //ஆர்.எஸ்.எஸ்ஸின் மீதான அவரின் கண்மூடித்தனமான பற்றுதல்//

    இவ்வாறு அவர் சார்ந்த இயக்கத்தையும் மணிப்பவள நடையையும் அவரது மொழி வழக்காற்றினையும் (Usage) நன்கு அறிந்த தாங்களே, //அவருடைய இந்த போக்கு வலிந்து திணிக்கப்படுவதா என்பது எனக்கு தெரியாது// என ஐயுறவு (சந்தேகம்) கொண்டு பின்வாங்கலாமா?

    //“தண்டோபாயம் (வன்முறை)”// இந்த ஒரு சொற்பயன்பாட்டிலிருந்தே எவரும் அவருடைய பக்கச்சார்பைக் (பாரபட்சத்தை) கண்டுணர்ந்துவிடலாமே. அப்படித்தானே இந்த ஒரேயொரு கட்டுரையிலுள்ள அவருடைய மறுமொழிகளைக்கொண்டு மட்டுமே நான் கண்டுகொண்டேன்!

    ஏனெனில் ‘வன்முறை’ என்பது மிகப் பெரும்பான்மையோர் அறிந்த ஒரு தமிழ்ச்சொல். ‘தண்டோபாயம்’ என்னும் வடமொழிச் சொல் அத்தகையதன்று. சொற்சிக்கனம் எனும் பாங்கின்படியும் நீளமானது; எனவே தட்டச்சு செய்தற்கும் முன்னதை விடப் பின்னதற்கு சற்றே கூடுதல் முயற்சி தேவை. எனவே, இவற்றையெல்லாம் கடந்து அவ்வடமொழிச் சொல்லைப் பயன்படுத்தி அடைப்புக்குள் தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுவதானது தமிழ்ச் சொல்லை வழக்கு வீழ்த்துதற்குத்தான் என்பது வெள்ளிடைமலை. நெடுநாள் வாசகரான உங்களுக்கு அவர் சமற்கிருதத்தை வலிந்து திணிக்க முற்படுகிறாரா, இல்லையா என்பதில் ஐயமுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது.

    தாங்கள் ஐயுறுதலே வேண்டாம். மிகத் தெளிவாகவே அறுதியிடலாம், அவர் சமற்கிருதத்தைத் திணிக்கத்தான் செய்கிறாரென.

    முதுகுன்றம் அல்லது பழமலை இன்று விருத்தாசலம் ஆகியுள்ளது; குரங்காடுதுறை இன்று கபிஸ்தலம் ஆகியுள்ளது; சிற்றம்பலம் சிதம்பரம் ஆகியுள்ளது. இன்னும் பல எடுத்துக்காட்டுகள் கூறலாம். அவற்றைப் புதுப்பிக்கும் முயற்சியில் நாம் நத்தை வேகம் கொண்டுள்ளோம். அவற்றில் ஒன்றுதான் மாயூரம் மயிலாடுதுறையானது. வேதாரண்யம் திருமறைக்காடு என்றாகியும் மிக அருகியுள்ளது. குன்னூர் என்பது சமற்கிருதப் பெயராக்கத்திற்கு உட்படுமாறு பார்ப்பனரொருவர் செய்த முயற்சி கேரளத்தைச் சார்ந்த அன்றைய ஆட்சியாளரொருவரால் முறியடிக்கப்பட்டதை தேவநேயப் பாவாணரின் ‘தமிழர் வரலாறு’ எனும் நூலில் கண்டுகொள்க. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவநேயரால் தொகுக்கப்படவிருந்த தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி (Tamil Etymological Dictionary) பார்ப்பனக் கல்வியாளர்களின் கூட்டோடு ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தடுக்கப்பட்டுவிட்டது; எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைகழகப் பார்ப்பனப் பேராசிரியர் கூட்டத்தினரோடு சேர்ந்துகொண்டு தமிழைப் பிறழ ஆய்ந்தமையும் தமிழ்ச் சொற்களுக்கெல்லாம் சமற்கிருத மூலங்கற்பித்தமையும் வரலாறு.

    இவற்றை ஏன் கூறுகிறேனெனில், தம் மொழி மேல் பார்ப்பனர்கள் மிக்க பற்றுக்கொண்டுள்ளனர்; நாம் அவ்வாறு இருப்பதில்லை; இதனால்தான் நிறைய இழந்துள்ளோம் என்பதையுணர்த்தவே.

    சரி, கிருட்டிணகுமார் அவர்களது கூற்றுப்படி சிவபெருமானின் உடுக்கையிலிருந்து பிறந்த மொழிகளுள் தமிழுமொன்று என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அதை வளர்க்க அவர் போன்றோர் செய்த முயற்சிகள்தாம் என்ன? தமிழ்ச் சொல்லை வழக்கு வீழ்த்த சமற்கிருதத்தை அதனோடு கலப்பதா? சிவபெருமான் உறையும் சிதம்பரம் கோவிலினுள்ளே இன்றைக்கு அவர் உருவாக்கினதாகச் சொல்லப்படுகின்ற தமிழிலேயே தேவாரம் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏற்படுத்தியுள்ள தடைக்கு அவரது நிலைப்பாடு என்ன?

    தமிழ்நாட்டிலேயே வாழ்ந்துகொண்டு, தமிழையே தாய்மொழியாகக் கொண்டு அதை உரையாட்டிலும் பயன்படுத்திக்கொண்டு, தம் வாழ்க்கையை வளம்படுத்துதற்குரியனவற்றைத் தமிழைக் கொண்டே பெற்றுக்கொண்டு அதற்கே வஞ்சகம் (த்ரோகம்) செய்வதை எப்படிப் பொறுக்க முடியும்?

    சார்வாகம் முதலிய நாத்திகச் சிந்தனைகள் சமற்கிருதத்தில்தான் உள்ளனவாம். இருக்கட்டும். ஆனால் இந்தச் சனாதனவாதிகள் அதை என்றைக்கு விவாதிக்க விட்டிருக்கிறார்கள்? அவர்கள் போக்கெல்லாம் தொல்கதைப் புரட்டுகளில் உழன்றுகொண்டிருப்பது மட்டுமல்லாது அப் போக்கை நோக்கியே பிறரையும் இழுப்பதுதானே!

    கிருட்டிணகுமார் அவர்களே, சார்வாகத்தை நாங்கள் எங்கள் தமிழிலேயே மொழிபெயர்த்துப் படித்துக்கொள்கிறோம். அதற்கு அப்பாத்துரையார், தேவநேயனார், மறைமலையடிகள் போன்ற சமற்கிருதம் கற்ற, தமிழின் பெருமையறிந்த, தமிழ்ப்பற்று மிக்க அறிஞர் கூட்டத்தை உருவாக்கிக்கொள்கிறோம்.

  50. திரு.கார்த்திக் கரன்….

    தங்களுடைய மறுமொழிகளை இப்பொழுது தான் காண நேரிட்டது. தாங்கள் கூறி இருப்பது அனைத்தும் உண்மையே. தங்களின் மணிப்ரவாள நடை தொடர்பான கருத்துகளை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *