மறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்

பிரிட்டிஷாருக்கு முந்தைய பாரதத்தில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பங்கள், சமூக அமைப்புகள், சமூக ஒழுங்குகள், தத்துவங்கள் என பாரதத்தின் கடந்த காலத்தை மாறுபட்ட கோணத்தில் அலசி ஆராய்கிறது B.R.மகாதேவன் எழுதியுள்ள இந்த நூல்.

maraikkappatta-bharatham-wrapper-1

காந்தியவாதியும் வரலாற்றாய்வாளருமான தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு 18ம் நூற்றாண்டு இந்தியாவின் சித்திரத்தை உருவாக்கி இருக்கிறார். இந்நூலின் முதல் பாதி தரம்பாலின் நூல்களை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டாம் பாதி இந்திய சாதிய சமூகம் குறித்து இதுவரை பேசப்படாத விஷயங்களை புதிய கோணத்தில் அறிமுகம் செய்துவைக்கிறது. இந்தியாவின் சாதி அமைப்பு உலகிலேயே மிகவும் கொடூரமானது – இந்தியாவின் சாதி அமைப்பு உலகிலேயே உன்னதமானது’ என்ற இரண்டு எதிர்நிலைகளுக்கு நடுவே சாதியின் உண்மைநிலை மற்றும் சமூகப் பங்களிப்பு, அதன் முக்கியத்துவம், அதில் வரவேண்டிய சீர்திருத்தங்கள் என இந்திய சாதி அமைப்பைப் பற்றிய கருத்துகளை மறுபரிசீலனை செய்யும்படி வாசகர்களை இந்த நூல் கேட்டுக்கொள்கிறது.

மறைக்கப்பட்ட பாரதம்
ஆசிரியர்: B.R. மகாதேவன்
வெளியீடு: தடம் பதிப்பகம்

அச்சுப் புத்தகம் – ரூ 170
இணையம் மூலம் வாங்க:  என்.எச்.எம்
தொலைபேசி மூலம் வாங்க:  டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

மின்னூல் (E-book):  ரூ 50 – கூகிள் ப்ளே | டெய்லி ஹண்ட்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் 2016 ஜனவரி 14 முதல் 24 வரை நடைபெறும் பொங்கல் புத்தகத் திருவிழாவில் தடம் பதிப்பகத்தின் புத்தகங்கள் ஸ்டால் எண் 201 (டயல் ஃபார் புக்ஸ்) மற்றும் ஸ்டால் எண் 190 (நூல்வனம்) கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

maraikkappatta-bharatham-wrapper-2

3 Replies to “மறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்”

  1. இந்நூலை திரு மகாதேவன் அவர்களை பதிப்பிக்க சொல்லி கோரியது, இப்போது நிறைவேறியுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம்.

  2. ஹிந்துஸ்தானத்தில் ஜாதி முறைமைகள் பற்றி ஸ்ரீ பீ.ஆர்.மஹாதேவன் அவர்கள் தமிழ் பேப்பரில் ஒரு வ்யாசத்தொடர் எழுதியதாக நினைவு. அதில் இந்த நூலறிமுகம் குறிப்பிடும் விஷயங்களையும் வாசித்ததாகவும் விவாதித்ததாகவும் நினைவு. வாசிக்கத்தூண்டும் நூலறிமுகம்.

  3. தரம்பலின் எழுதியது ஏழு புத்தகங்களாக Other India Book store – goa – வெளியிட்டுள்ளது.அதில் Indian sciences in 17th century மிகவும் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *