தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)

<< முந்தைய பதிவு

தொடர்ச்சி..

நேற்றைய பதிவில் திமுக காங்கிரஸ் கூட்டணி என்னும் நாசகார, கொலைகார, கொள்ளைக்கார, ஊழல் மலிந்த, இந்து விரோத, மக்கள் விரோத கூட்டணிக்கு ஏன் எவரும் ஓட்டுப் போடக் கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்தேன். இன்று தமிழ் நாட்டின் அடுத்த முக்கிய கட்சியும் ஆளும் கட்சியுமான அதிமுகவுக்கு ஏன் எவரும் ஓட்டுப் போடக் கூடாது என்பதைக் காணலாம்

அதிமுகவுக்கு ஏன் ஓட்டுப் போடக் கூடாது?

jayalalitha1. செயலின்மை:

ஜெயலலிதா இது வரை மூன்று முறைகள் தமிழ் நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் நன்நம்பிக்கையுடனும் அவருக்கு மீண்டும் மீண்டும் மக்கள் ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்தியவுடன் அவர் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது போல தனது ஆணவமும், திமிரும், அராஜகமும், அகங்காரமும், முட்டாள்த்தனமும், செயலின்மையும் கூடிய ஆட்சி முறைக்கே ஏறிக் கொள்கிறார்.

ஜெயலலிதா ஏற்கனவே மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பது கிடையாது. அவர் தேர்தலுக்குப் பின்னர் மக்களையோ மந்திரிகளையோ மத்திய அரசின் பிரதிநிதிகளையோ சந்திப்பது கிடையாது. அவரது அடிமைகள் கூட அவரை சட்டசபையில் கண்டால்தான் உண்டு. இந்த முறை அவரது மோசமான உடல் நிலையினால் அவரால் நடக்கக்வோ நிற்கவோ கூட முடியவில்லை. முன்பாவது அவர் தமிழ் நாட்டை தேர்தல் தோறும் சுற்றி வருவார். இந்த முறை அதற்கும் வாய்ப்பில்லை. ஹெலிக்காப்ட்டரில் பறந்து கடும் கோடை வெயிலில் வந்து அவர் மட்டும் குளிரூட்டப் பட்ட மேடையில் அமர்ந்து கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொடூரமான கோடை வெயிலில் பல மணி நேரங்கள் காக்க வைத்து விட்டு தான் எழுதிக் கொண்டு வந்த அதே பேச்சையே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டு போகிறார். கூட்டத்திற்கு வந்த வயதான ஆட்கள் கூட்ட நெரிசலிலும் வெயிலிலும் மிதி பட்டுச் சாகிறார்கள். இதுவா ஒரு மாநில முதல்வர் மக்களை அணுகும் முறை?

அவரால் சுறுசுறுப்பாகவோ நாட்டின் எந்தவொரு மூலைக்கும் சென்று நாட்டின் நிலவரம் அறிந்து ஆட்சி செய்யவோ ஏற்கனவே முடியவில்லை இனிமேல் முற்றிலும் முடியாது என்பது இந்தத் தேர்தலில் உறுதியாக்கப் பட்டுள்ளது. குளிரூட்டப் பட்ட தனது பாதுகாப்பான இல்லத்தில் இருந்து கொண்டு அதிகாரிகள் தரும் தகவல்களை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்தி வருகிறார். அவர்களின் தகவல்களை சரிபார்க்கவோ நாட்டின் ஒரு பகுதியில் வறட்சியோ வெள்ளமோ தீ விபத்தோ கட்டிட விபத்தோ எது நடந்தாலும் அவரால் நேரில் சென்று அறிந்து ஆட்சி செலுத்த முடியவில்லை. அவரது உடல் நலனும் மன ஆரோக்யமும் அவற்றுக்கு இடம் தரவில்லை. இப்படியாகப் பட்ட உடல் ஆரோக்யமும் மன ஆரோக்யமும் இல்லாத செயலாற்ற முடியாத தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுக்குச் செல்ல முடியாத ஆணவத்தின் மூலமாகவும் அடிமைகளின் மூலமாகவும் ஆட்சி செய்யும் ஒருவருக்கு ஏன் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்?

நம் வீட்டு வேலைக்கோ சமையல் வேலைக்கோ நடக்க முடியாத, நிற்க முடியாத, உடல் நிலை சரியில்லாத நம்மைத் திமிராகப் பேசும் நம்மை அடிமைகளாகக் கருதும் ஒரு நபரை நாம் வேலைக்கு அமர்த்துவோமா? நடக்க முடியாத நிற்க முடியாத,கண் தெரியாத ஒருவரை, நம்மை ஆணவத்துடனுன் அணுகும் ஒருவரை தன் வீட்டில் இருந்து கொண்டுதான் வேலை செய்ய முடியும் என்றும் சொல்லும் ஒருவரை நாம் நமது வாகனத்தை ஓட்டும் காரோட்டியாக அமர்த்துவோமா? மாட்டோம் அல்லவா?

அப்படியானால் ஒரு மாபெரும் மாநிலத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை உடல் ஆரோக்யமும், மன ஆரோக்யமும் இல்லாத மக்களை சந்திக்க விரும்பாத முடியாத ஒருவரிடம் எப்படி அளிக்கப் போகிறீர்கள்? கொஞ்சமாவது சிந்த்தித்தீர்களா? கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை ஜெயலலிதா மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறார்? மாபெரும் வெள்ளமும் வறட்சியும் வந்த பொழுது கூட அவரால் அந்த இடங்களுக்கு வர முடியவில்லையே? அவர் எத்தனை முறை டி வி யிலோ, ரேடியோவிலோ மக்களிடம் உரையாடியிருக்கிறார்? எத்தனை முறை மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்? எத்தனை முறை பத்திரிகை வாயிலாக கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்? அவரது மந்திரிகள் கூட அவரை அவசியமான காரியங்களுக்குக் கூட சந்திக்க முடியவில்லையே? மத்திய அமைச்சர்களைக் கூட அவர் சந்திக்க நேரம் ஒதுக்குவதில்லையே? இப்படியான ஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும்? சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள். நம் வீட்டில் ஒரு வயதான முதிய பெண்மணி கடும் உடல் சீர்கேட்டில் இருந்து கஷ்டப் பட்டால் நாம் அவரை நம் வீட்டு வேலைகளுக்கு கட்டாயப் படுத்திக் கஷ்டப் படுத்த மாட்டோம் அது போலவே இவருக்கும் நாம் ஓய்வு நிரந்தரமான ஓய்வு அளிக்க வேண்டிய தருணம் இது. ஆகவே புறக்கணியுங்கள் ஜெயலலிதாவை.

2. மோசமான நீர் மேலாண்மை:

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த புதிதில் விஷன் 2023 என்று ஒரு திட்டத்தை அறிவித்து அவற்றைப் பற்றி பரபரப்பாக அறிக்கைகள் விட்டார். அவ்வளவுதான அதற்கு மேலாக எந்தவொரு தமிழ் நாட்டின் நீண்ட கால நலத் திட்டங்கள் குறித்தும் அவர் அக்கறை கொள்ளவில்லை. குறுகிய கால இலவச திட்டங்களிலும் டாஸ்மாக் சாராய விற்பனையை அதிகரிப்பதிலும் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வந்தார். தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை சீர்படுத்தி நீர் மேலாண்மையை அதிகரிக்க அவர் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழ் நாட்டுக்குள்ளேயே உற்பத்தியாகி தமிழ் நாட்டுக்குள்ளேயே கடலில் கலக்கும் தாமிரவருணி நதி இன்று மிக மிக மோசமான நிலையில் கருவேல முள் செடிகளும் சகதிகளும் நிரம்பி வழிகின்றது. நதிப் படுகைகளில் உள்ள மணல் அனைத்தும் இவர்கள் இருவரது ஆட்சிகளிலும் கொள்ளையடிக்கப் பட்டு அங்கு சகதிகள் மட்டுமே மீதம் உள்ளன. நீர்ப் பிடிப்புக் கொள்ளாமல் வீணாகின்றன. நதிகள், அணைகள், குளங்கள், ஏரிகள் என்று எந்தவொரு நீர் நிலைகளும் இவரது ஆட்சியில் பராமரிப்பு இல்லாமல் மிக மிக மோசமான நிலையில் உள்ளன. மழை பெய்தாலும் உடனடியாக அவை வீணாகி தமிழ் நாட்டை நிரந்தர வறட்சியில் வைத்துள்ளன. அவர் அறிவித்த இலவச திட்டங்களுக்கும் மாநில அரசு ஊழியர் சம்பளங்களுக்குமாகவே வருமானம் அனைத்தும் செலவாகி விட மக்களின் முக்கியமான தேவைகளான நீர், மின்சாரம், கல்வி ஆகியவற்றை சரி செய்ய முடியாமல் பராமரிக்க முடியாமல் கேவலமான அவல நிலையில் வைத்திருக்கிறது ஜெயலலிதாவின் ஆட்சி.

சென்னைவாசிகள் செம்பரம்பாக்கம் ஏரி தூர்க்கப் படாமல் அதன் அளவில் தண்ணீரைக் கொள்ள முடியாமல் வெளியேற்றப் பட்டு அதில் மூழ்கி அவதிப் பட்டிருப்பீர்கள். பிற பகுதிகளில் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் அக்கம் பக்கம் இருக்கும் ஏரி குளங்களை நதிகளை வாய்க்கால்களை ஒரு முறை சென்று அவை இருக்கும் நிலையினை சற்று பாருங்கள். அவை அனைத்தும் கருவேல முள் செடிகளால் சூழப் பட்டு மணல் படுகைகள் கொள்ளையடிக்கப் பட்டு சேறும் சகதியுமாக இருப்பதைக் காண்பீர்கள். இந்த நிலைக்குக் காரணம் இந்த இரு திராவிடக் கட்சிகளின் ஊதாரித்தனமான நிர்வாகம் என்பதை உணருங்கள். உங்களது இயற்கை ஆதாரங்கள் முற்றிலுமாக இந்த மூடர்களின் ஆட்சியினால் அழிக்கப் படுவதற்கு முன்பாக இவர்களின் ஆட்சிகளுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். அணைகளும், குளங்களும், நதிகளும் தூர்வாரப் பட்டுத் தடுப்பணைகள் கட்டப் பட்டு ஆக்ரமிப்புகள் கழிவுகள் முள் செடிகள் அகற்றப் பட்டு தூய்மையான நீர் ஆதாரங்கள் உங்களுக்கு மீண்டும் தேவை என்றால் நீங்கள் தண்ணீர் இன்றி பாசனம் செய்யவோ குடிக்கவோ முடியாமல் அழிந்து போகாமல் காக்கப் பட வேண்டும் என்றால் ஜெயலலிதா அரசை கண்ணை மூடிக் கொண்டு புறக்கணியுங்கள். இல்லாவிட்டால் நதிகளுடன், குளங்களுடன் நீங்களும் தண்ணீர் இன்றி அழிவீர்கள்.

நீர் மேலாண்மை என்று மட்டும் அல்லாமல் சாலைகள், பாலங்கள், சாக்கடைகள், குப்பை அகற்றல்கள், நகர நிர்வாகம், சுகாதாரம், விவசாயம், உற்பத்தி, வேலைவாய்ப்புக்கள், தொழிற்சாலைகள், கிராம நிர்வாகம், கோவில்கள், கல்வி, மின்சாரம், கடல் வளங்கள், பாதுகாப்பு என்று அனைத்து துறைகளிலும் இந்த ஜெயலலிதாவின் ஆட்சி மிக மிக மோசமாகவே மிக மிக கேவலமாகவே திறனின்மையும் ஊழல்களுமாகவே செயல் பட்டு வந்துள்ளது.

3. சீர்கெட்டுப் போன கல்வி

நீங்கள் அனைவரும் உங்கள் நலன்களை விட முக்கியமாகக் கவலைப் படுவது உங்களின் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து. தமிழ் நாட்டின் கல்வி நிலையங்கள் எப்படி உள்ளன?

அரசியல்வாதிகளை பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாக நியமித்து உயர் கல்வி நிலையங்களை எல்லாம் அரசியல் மையங்களாக மாற்றியது இந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் மட்டுமே. முந்தைய ஆட்சியில் நெடுஞ்செழியனின் சம்பந்தி என்ற ஒரே தகுதியிலும், கோசி மணியின் மச்சினன் என்ற தகுதியிலும் கட்சியின் மாவட்டத் தலைவர் என்ற அடிப்படைகளிலும் துணைவேந்தர்களை இருவரும் நியமித்தார்கள். இந்த ஆட்சியில் 5 கோடி 6 கோடி என்று காசு வாங்கிக் கொண்டும் கட்சிக்காரர்களையும் துணைவேந்தர்களாக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. மதுரைப் பல்கலையில் நெடுஞ்செழியனின் மருமகள் என்பதற்காகவே ஒரு பெண்மணியை துணைவேந்தராக நியமித்து அவரும் ஏராளமான ஊழல் குற்றசாட்டுக்களில் சிக்கி பல்கலைக் கழகத்தைக் கட்சி ஆஃபீஸ் போல நடத்தினார். பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எதிர் கொள்ளும் திறனும் நம்பிக்கையும் இன்றி மனப்பாடம் செய்து மார்க்குகள் வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே இவர்கள் ஆட்சியில் மாற்றப் பட்டிருக்கிறார்கள். கல்வி நிலையங்களும் இவரது ஆட்சியில் ஊழல்களில் சிக்கிப் புழுத்துச் சீரழிகின்றன. எல்லா பல்கலைக் கழகங்களிலும் ஊழல்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு நியமிக்கப் படும் ஆசிரியர்கள். ஒரு லெக்சரர் வேலைக்கு 30,50 லட்சங்கள் கொடுத்து பணிக்கு வருகிறார்கள் என்றால் அவர்களின் தரம் எப்படி இருக்கும்? இதுதான் ஜெயலலிதா ஆட்சியில் கல்வியின் லட்சணம். இப்படிப் பட்ட கல்வி நிலையங்களில் உங்கள் குழந்தைகள் படித்தால் அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்? உங்கள் வாரிசுகளை மூளை மழுங்கடிக்கப் பட்ட திறமையில்லாத அறிவில்லாத உருப்படாத இளைஞர்களாக உருவாக்கினால் அவர்களின் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும். கொஞ்சம் யோசியுங்கள், உங்களுக்குத் தற்கால இலவசங்கள் மட்டுமே முக்கியம் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கிடையாது என்று நினைப்பவர்கள் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மீண்டும் ஓட்டுப் போடுங்கள் மற்றவர்கள் உங்கள் குழந்தைகளின் கல்வியில் வேலையில் எதிர்காலத்தில் அக்கறையுள்ள அனைவரும் தயவு செய்து ஜெயலலிதாக்களையும் கருணாநிதிகளையு முற்றிலுமாகப் புறக்கணியுங்கள். அதிமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.

JJ_TASMAC_Cartoon

4. சீரழிந்து போன கட்டமைப்புகள்:

ஜெயலலிதா அரசு ஊழல்களில் ஊறியது. தன் அடிமைகளாக வைத்திருக்கும் மந்திரிகளை வைத்து எந்தவொரு திட்டத்திலும் எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மின்சாரத் துறை, சாலைகள், பொது நிர்வாகம் என்று சகல தரப்பிலும் லஞ்ச ஊழல்களினால் அப்படியே சீரழித்து வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஒவ்வொரு ஆட்சியிலும் கொள்ளையடிக்கும் மந்திரிகளின் பெயர்கள் மட்டுமே மாறுமே அன்றி அவரது மந்திரிகள் மீண்டும் மீண்டும் பல லட்சம் கோடி ஊழல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது உத்தரவு அனுமதி இன்றி எவரும் ஒரு துரும்பைக் கூட வாங்கி விட முடியாது என்னும் பொழுது அனைத்து விதமான ஊழல்களுக்கும் ஜெயலலிதாவே நேரடிப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

தமிழ் நாட்டின் மாநில சாலைகள் மிக மிக மோசமான தரங்களில் உள்ளன. ஆறு மாதம் கூட ஒரு சாலை வருவதில்லை மீண்டும் ஜெயலலிதா அரசு போலவே குண்டும் குழியுமாக மாறி விடுகின்றன. மீண்டும் சாலைகள் போட மீண்டும் 45% கமிஷன் வாங்கிக் கொண்டு மீண்டும் மோசமான சாலைகளை அமைக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் இலவச திட்டங்களில் மட்டுமே தன் அனைத்து நேரத்தையும் செலவிட்ட ஜெயலலிதா புதிய மின்சாரக் கட்டமைப்புக்களை உருவாக்கவேயில்லை. காற்று, சூரிய சக்தி மின்சாரங்கள் கமிஷன்களினாலும் ஊழல்களினாலும் தன் உற்பத்தி அளவை எட்டவில்லை. மின்சார வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தின. மத்திய அரசின் மின் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. மின்சார அமைச்சரை சந்திக்க நேரம் கொடுக்க கூட ஜெயலலிதாவுக்கு நேரமும், உடல் மன நிலையும் விருப்பமும் இல்லை. கமிஷன் கொடுக்கும் அதிபர்களை மட்டுமே அவர் சந்தித்து வந்தார். மத்திய மின்சார அமைச்சர் ஃப்யூஷ் கோயல் இது குறித்து கடுமையான ஊழல் குற்றசாட்டுக்களை வைத்துள்ளார். மத்திய அரசாங்கம் தனது பொது மின்சாரப் பகிர்வின் மூலமாக அளிக்கும் மின்சாரத்தினால் மட்டுமே தமிழ் நாட்டில் பெரிய அளவில் மின் தடையின்றி இன்று மின்சாரம் வருகிறது. ஆக மத்திய அரசும் காங்கிரஸ் அரசு போல மெத்தனமாக இருந்திருந்தால் இந்த ஆட்சியிலும் கடுமையான மின்சார வெட்டையே எதிர் கொள்ளா வேண்டியிருந்திருக்கும். தினமலர் பத்திரிகையில் தினம் தோறும் மத்திய தொகுப்பில் இருந்து எவ்வளவு மின்சாரம் வருகிறது என்று போடுகிறார்கள். அதை நோக்கினாலே தமிழ் நாடு அரசு புதிதாக மின் உற்பத்தி எதையும் செய்யவில்லை என்பது விளங்கும். கூடங்குளம் செயல் படுவதற்கு அனுமதிக்காமல் அணு உலைகளை எதிர்க்கும் தேச விரோத குண்டர்களைத் தூண்டி விட்டுத் தடை போட்டார். ஆக இவர் ஆக்க பூர்வமாக எந்தவொரு வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்ற குறைந்த அளவு முனைப்பு கூடக் காட்டவில்லை.

சென்னையச் சுற்றி உள்ள பகுதிகள் தவிர்த்து தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் எந்தவிதமான தொழிற்சாலைகளும் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப் படவில்லை. தமிழ் நாட்டின் மற்றொரு முக்கியமான நிதி ஆதாரமான சுற்றுலா வளர்ச்சி மேன்மைப் படுத்தப் படவில்லை. ஐ டி நிறுவனங்கள் மதுரை போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப் படவில்லை. அரசு கட்டிய ஐ டி பார்க்குகள் வீணாகி செயல் படாமல் தூசி மண்டிப் போயுள்ளன. ஜெயலலிதாவின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் மீது பல லட்சம் கோடி ரூபாய்கள் சுருட்டியதாக ஊழல் குற்றசாட்டுகள் மத்திய அரசினாலும் பிற அமைப்புகளினாலும் சுமத்தப் பட்டுள்ளன. ஆக நிர்வாகத் திறனும், செயல் திறனும் அற்ற ஊழல் மலிந்த இருண்ட ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கா உங்களது வாக்குகளை அளித்து உங்களையும் தமிழ் நாட்டையும் ஊழல் மிகுந்த இருட்டில் தள்ளப் போகிறீர்கள். சற்று சிந்தியுங்கள். யோசித்து வாக்களியுங்கள்.

5. வளர்ந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதம்:

ஜெயலலிதா ரவுடிகளையும் பயங்கரவாதத்தையும் கடுமையாக எதிர் கொள்வார் என்று முன்பு அவருக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. இந்த ஆட்சியில் அதையும் இழந்து விட்டார். கடந்த தி மு க ஆட்சியில் நிலவி வந்த ரவுடிகளின் கட்சிக்காரர்களின் அராஜகங்கள் இந்த ஆட்சியில் இல்லை. நில அபகரிப்புகள் பெரும் அளவில் இல்லை என்ற வேறுபாட்டைத் தவிர வேறு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. வழக்கம் போலவே கொள்ளைகளும் கொலைகளும் கற்பழிப்புக்களும் தமிழ் நாட்டில் அதிகரித்துள்ளன. அவற்றை ஒடுக்க எந்தவொரு முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. முக்கியமாக இஸ்லாமிய பயங்கரவாதம் பல மடங்கு தமிழ் நாட்டில் அதிகரித்துள்ளது. அவர்களின் ஓட்டு வங்கிக்காக தமிழ் நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் அனுமதித்து தமிழ் நாட்டை இன்னொரு ஆப்கானாக, தாலிபான் தேசமாக, ஐ எஸ் எஸை நாடாக, சிரியாவாக நைஜீரியாவாக மாற்றி வருகிறார்.

கமலஹாசனின் விஸ்வரூபம் சினிமா வெளியிடப் பட முடியாமல் 23 இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளினால் மிரட்டப் பட்டார். அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டது. அந்த பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்குப் பதிலாக பயங்கரவாத ப்ளாக்மெயில்களை அடக்குவதற்குப் பதிலாக ஜெயலலிதா அரசு அந்த பயங்கரவாத கும்பல்களின் ஏஜெண்ட் போலச் செயல் பட்டு அவரும் கமலஹாசனை மிரட்டினார். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தலைவர் போலச் செயல் பட்டவர் இந்த ஜெயலலிதா என்பதை நினைவில் வையுங்கள்.

தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். அத்வானி வரும் பாதையில் குண்டுகள் வைக்கப் பட்டன. தமிழ் நாடு முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்கள் எந்தவிதமான தடையும் இல்லாமல் சுதந்திரமாக செயல் பட்டு வருகின்றன. சென்னை மவுண்ட் ரோட்டில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடவும் மவுண்ட் ரோடையே ஒரு மாதமாக இஸ்லாமிய வன்முறைக் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஜெயலலிதா அனுமதி அளித்தார். அவர்களை கைது செய்யவோ தடை செய்யவோ முயலக் கூட இல்லை. ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கிய பொழுதும் பெண் போலீஸ்காரர்களை மான பங்கப் படுத்திய பொழுதும் கண்டு கொள்ளாமல் அவற்றை அனுமதித்து இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ் நாட்டில் ஊடுருவ நிலை பெற அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஓட்டுப் பொறுக்குவதற்காக தமிழ் நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் அடமானம் வைத்தார். தமிழ் நாடு பயங்கர்வாதிகளின் தலமை மாநிலமாகச் செயல் பட அவர்களுக்கு சாதகமான சூழல்களை அமைத்துக் கொடுத்தார்.

தனி மனித பாதுகாப்பு அறவே இல்லாத சூழலை தமிழ் நாட்டில் உருவாக்கி வைத்திருக்கிறார். இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ் நாட்டில் வேர் விட்டு வளர அனுமதி அளித்து வைத்திருக்கிறார். ஓட்டுக்காக இவர் அனுமதித்திருக்கும் பயங்கரவாதம் நாளைக்கு ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டையே அழித்து விடக் கூடியது. நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் குண்டு வெடித்துச் சிதறும் அபாயம் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ளது. அதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதாவேயாகும். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழ் நாட்டைச் சுடுகாடாக மாற்ற அடித்தளம் அமைத்திருக்கிறார். உங்கள் உயிர் பாதுகாப்பாக்க்காகவும் உங்கள் வருங்கால சந்ததியினர் வாழும் நாடு சிரியா போல, ஆப்கான் போல மாறாதிருக்கவும் நீங்கள் அவசரமாகவும் அவசியமாகவும் செய்ய வேண்டிய முக்கியமான பணி, கடமை இந்தத் தேர்தலில் ஜெயலலிதா கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் நீக்குவது மட்டுமாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளைய தமிழ் நாடு சுடுகாடாக மட்டுமே இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

6. இந்து எதிர்ப்பு:

ஜெயலலிதா அரசில் தமிழ் நாட்டுக் கோவில்கள் அழிக்கப் பட்டு வருகின்றன. அறநிலையத் துறை மூலமாக கோவில்களின் சொத்துக்கள் களவாடப் படுகின்றன. கோவில்களின் புரதானமான கல் தூண்களும் தரைகளும் நீக்கப் பட்டு சிமெண்ட்டிலான கட்டிடங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. கோவில்களின் ஆகம முறைகள் மீறப் பட்டு அசிங்கமான முறையில் கோவில் நிதி கொள்ளையடிக்கப் பட்டு புனருத்தாரணம் செய்யப் பட்டு வருகின்றன. பழமையான சிற்பங்களும், தூண்களும் மண்டபங்களும், கற் தரைகளும், கோபுரங்களும் ஓவியங்களும் மிக மிக வேகமான மிக அவசரத்துடன் அழிக்கப் பட்டு வருகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களிடம் கட்டணம் வாங்கப் படுகின்றன ஊழல்கள் பெருத்து விட்டன. கோவில்கள் அனைத்தும் இன்று சதிகாரர்களின், லஞ்ச ஊழல் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் கோட்டைகளாகி விட்டன. கோவில்களை அழிப்பதன் மூலம் சொல்லொணா பாவத்தை ஜெயலலிதா சம்பாதித்திருக்கிறார். ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நீங்காத பாவங்கள் வை. அவருக்கு ஓட்டுப் போடுவதன் மூலமாக நீங்களும் அந்தப் பாவத்தில் பங்கு பெறாதீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் வாரிசுகளுக்கும் அந்தப் பாவத்தில் பங்கு அளிக்காதீர்கள்.

இந்துக் கோவில்களின் சொத்துக்களை ஊழல்கள் மூலமாகவும் அலட்சியம் காரணமாகவும் அழித்து வரும் அதே ஜெயலலிதா அரசு தன் தேர்தல் அறிக்கையில் சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் நிதியுதவி அளிக்கும் என்று சொல்லுகிறது. அதில் இந்துக் கோவில்கள் மேம்பாடு குறித்து ஒரு வரி கூட இல்லை. தன்னை ஒரு பக்தியுள்ள நபராகக் காண்பித்துக் கொண்டே இந்துக் கோவில்களை அழிக்கும் வேலையில் இவரது ஆட்சி மும்முரமாகச் செயல் பட்டு வருகின்றது. இந்துத் தலைவர்களைக் கொன்றவர்கள் மீது இவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதிரியையும் முல்லாவையும் உடனடியாக சந்திக்க நேரம் கொடுக்கும் ஜெயலலிதா என்றுமே இந்து மதத் துறவிகளை சந்திக்கவோ இந்து அமைப்பு தலைவர்களை சந்திக்கவோ நேரம் அளித்ததேயில்லை. அவர்களை அவமானம் செய்து அனுப்புகிறார்

ஜெயலலலிதா அரசின் ஒரே சாதனை தமிழர்களைக் குடிகாரர்களாக மாற்றி டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தி அதன் மூலம் தனது இலவச திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டது மட்டுமே. நீண்டகால திட்டங்கள் குறித்தும் மாநில ஒட்டு மொத்த தொழில், விவசாய, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தான எந்த அறிவும் அக்கறையும் இல்லாத தன்னை மட்டுமே முன்னிறுத்தும் ஒரு அகங்காரம் பிடித்த ஆணவ ஆட்சியை மட்டுமே ஜெயலலிதா அளித்து வந்தார் என்பதை மறந்து விடாதீர்கள்.

 • ஜெயலிதாவுக்கு ஓய்வு கொடுங்கள். அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்.
 • இவ்வாறாக சிந்திக்கும் திறனும் செயல் திறனும் இல்லாத ஒரு தலைமை அப்புறப் படுத்தப் பட வேண்டும்.
 • இப்படியான ஊழல் மலிந்த நீர், மின்சாரம், கல்வி, பாதுகாப்பு,சாலை, வேலை என்று அனைத்து துறைகளிலும் மெத்தனமும் செயலின்மையும் ஊழல்களும் மலிந்த ஜெயலலிதா அரசு உடனடியாக நீக்கப் பட வேண்டும்.
 • மந்திரிகளை அடிமைகளகாகவும் ஊழல் பணம் உற்பத்தி செய்யும் ஏஜெண்டுகளாகவும் நடத்தும் ஆணவ அரசு நீக்கப் பட வேண்டும்.
 • இந்துக் கோவில்களை அழிக்கும் இந்துத் தலைவர்களைக் கொல்பவர்களை ஆதரிக்கும் இந்த அரசு ஒழிய வேண்டும்.
 • இஸ்லாமிய பயங்கரவாதத்தை மறைமுகமாக ஆதரித்து அவர்களை கைது செய்யாமல் அவர்களது கொலைவெறியை ஆதரித்து வரும் இந்த பயங்கரவாத ஆதரவு அரசு ஒழிய வேண்டும்.

இந்த அரசு குறித்து எழுதப் போனால் இண்ட்டர்நெட்டிலேயே இடம் இல்லாமல் போய் விடும். ஆகவே இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

உங்கள் நலனையும், உங்கள் வாரிசுகளின் நலன்களையும், தமிழ் நாட்டின் இந்தியாவின் ஒட்டு மொத்த நலன்களையும் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடாதீர்கள். இந்த ஆணவமும் திமிரும் ஊழலும் நிறைந்த பயங்கரவாத இந்து விரோத அரசை நீக்க ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுங்கள். மே 16 ஆம் தேதி இந்த ஆட்சியை அகற்றுங்கள். செய்வீர்களா? செய்வீர்களா?

(தொடரும்)

அடுத்த பகுதி >>

6 Replies to “தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)”

 1. //சென்னைவாசிகள் செம்பரம்பாக்கம் ஏரி தூர்க்கப் படாமல் அதன் அளவில் தண்ணீரைக் கொள்ள முடியாமல்// செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாமல் என்று சொல்லவருகிறீர்களா திருமலை?

 2. see DMK is also in the same bedridden condition. They need to learn from Mr. Vajpayee, of Mr Kalam who are away from active polictics immediately after their health and age . Here in TN he want to be a tendulkar to score 100 .

 3. அம்மா உடலுக்கு முடியவில்லைஎன்றால் ,கார் மேடையிலே ஏறுகிறது ,நாடெங்கும் ஊனமுற்றோர் ஒரு தெருவை கடக்கவே பரிதவித்து போகிறார்கள்,தன் பாடாவதி ,பேசாமடந்தை ஆட்சியில் உடல் ஊனமுற்றோர்களை இவளபோல அவமானப்படுதியவன் எவனுமில்லை.அத்தனை அலட்சியம் ,கருணாநிதி இருக்க கவலையேன்?என்ற மிதப்பு,இன்று சனி பகவான் ”கண்”வைத்து விட்டான் ,ஜெயலலிதா ஊனத்தின் உச்சத்தை அனுபவிக்கிறார்,தேர்தலுக்கு பின் தெருவில் நிற்கபோகிறார்,எம் எ ,எம் பில்,பி ஹெஇச்டி ,இங்க்லீஸ் படித்த ஊனமுற்ரவனெல்லம் ,கையில் பிடித்துகொண்டு [கல்வி சான்றிதல்ககைளைதான்]கவலையில் வாட ,இந்த காலாவதி உதிர்ந்து போனவைகளை ,உதிரி பாகங்களை கொண்டு பூட்டி ”,கலாவதி நான்தான் கண்டு கொள்ளுங்கள்” ,என்கிறார்.சித்திரவதைகளின் திலகன் ”சனி பகவான்”புன்னகை புரிகிறான்!

 4. கட்டுரை ஆசிரியர் ஜெயலலிதாவின் முஸ்லிம் தீவிரவாத ஆதரவு குறித்த முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை, அல்லது அவருக்கே தெரியவில்லை! அந்த அளவுக்கு தமிழக ஊடகங்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை!!

  1. கோவையில் 14, ஃபெப்ருவரி 1998 இல் நடந்த குண்டுவெடிப்பைச் செய்த அல்-உம்மாவை நிறுவியவர்கள் இருவர், எஸ்.ஏ பாஷாவும், எம்.ஹெச்.ஜவஹிரிருல்லாவும். பாஷா உடல்னலம் குன்றி மரணம் அடைந்துவிட்டார். ஜவஹிரிருல்லா சுதந்திரமாக நடமாடி, அல்-உம்மாவுக்கு பதிலாக, சிமி, பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு தவுகீத் ஜமாத், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றி மாற்றி மேலும் பல தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி, பின்னர் ஆரம்பித்ததுதான் மனித நேய (எப்பேர்ப்பட்ட பெயர்!!) மக்கள் கட்சி. அல்-உம்மாதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூட பெங்களூருவில் குண்டு வெடித்தது என்பதைக் கவனத்தில் இருத்தவும். அல்-உம்மா உயிர்ப்புடன் இன்னமும் இருக்கிறது.

  இந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு, ஜவஹிரிருல்லா என்ற குண்டு வெடித்த பயங்கரவாதிக்கு, முதல் முதலில் ஜனநாயக அங்கி கொடுத்தவர் ஜெயலலிதா. 2011 இல் எதிர்க் கட்சியாக இருந்தபோது, ஆட்சியைப் பிடிக்க என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற உயர்ந்த கோட்பாட்டின் படி, ஜெயலலிதா இந்த மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தார். ஜவஹிரிருல்லாவும், பி.ஜைனுலாபுதீனும் தொடர்ந்து செய்த பரப்புரைகளால், தமிழக முஸ்லிம் இளைஞர்களிடையே ஒருவித வன்முறை வேகத்தை நன்றாக விதைத்தனர். பெண்கள் பர்தா போட்டே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டு இப்போது அதை சாதித்தும் விட்டனர். 2011 தேர்தலில் ஜெயலலிதா ஆதரவளித்து ஜவஹிரிருல்லா என்ற பயங்கரவாதி/தீவிரவாதிப் புலி, ஜனநாயகவாதி சட்டமன்ற உறுப்பினர் என்ற பசுத்தோலைப் போர்த்தப் பட்டார். தனித் தனியாக இருப்பது போலத் தோன்றினாலும், மேற்கூறிய அத்தனை இயக்கங்களும் ஜவஹிரிருல்லா, ஜைனுல்லாபுதீன் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.

  அதனால்தான், தங்கள் குட்டு வெளிவரக் கூடாதே என விஸ்வரூபத்தின் வெளியீட்டின்போது இவர்கள் உரக்கக் குரல் எழுப்பினர். அப்போது அவர்கள் சொன்ன முக்கிய விஷயம்: விஸ்வரூபம் படத்தில் தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் -அதுவும் அல்-கொய்தா, லஷ்கர் இ தொய்பா தொடர்புடையவர்கள்- இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது என்பதுதான் அவர்களது ஆட்சேபம். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததோ, அல்லது தாம் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற அச்ச உணர்வோதான் காரணம்.

  அப்போதும் கூட ஜெயலலிதா இந்தப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே தமிழ் நாட்டில் அத்தனை மாவட்டங்களிலும் தனித்தனியாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார், அதாவது, இவர்களது பயங்கரவாத முகத்தை மூடி மறைத்தார்!!

 5. தொடர்ச்சி….

  2. ஜெயலலிதாவின் 2011-16 ஆட்சியில் தமிழக முஸ்லிம் பயங்கரவாதிகள் ஜவஹிரிருல்லாவின் ஆதரவுடன் செய்த கொலைகள் முக்கியமானவை. குறிவைத்து இந்து இயக்கங்களின் முக்கியஸ்தர்களை, உண்மையாகவும் உத்வேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் இருப்பவர்களாகப் பட்டியலிட்டுக் கொன்றார்கள். வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டியும், வெள்ளையப்பனும், சேலம் ஆடிட்டர் ரமேஷும், பாடி சுரேஷ்குமாரும், மதுரை முருகனும், இன்னும் பலரும் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டனர். இவர்களுக்குப் பகிரங்கமாக ஜவஹிரிருல்லாவும் ஜைனுல்லாபுதீனும் ஆதரவளித்தனர். ஜெயலலிதாவும் ஒரு அரசியல்வாதி மூலம் அறிக்கை கொடுத்தால் அது அரசியல் ரீதியாக எதிர்க்க பட்டு விடும் என்பதால், அன்றைய டி.ஜி.பி.ராமானுஜம் வாயிலாகவே அறிக்கை கொடுக்க வைத்தார். டி.ஜி.பி. தனது அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் ரியல் எஸ்டேட் வியாபரத்தில் விரோதம், கட்டப்பஞ்சாயத்து செய்தவகையில் விரோதம், பெண் தொடர்பால் விரோதம் என்று செத்த இந்துத் தலைவர்களைக் கேவலப்படுத்தி, கொன்ற முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வெளியிட்டார். இனி, அந்தப் பயங்கரவாதிகள் பிடிபட்டாலும் வழக்கு கோர்ட்டில் நிற்காத வகையில் ஜெயலலிதாவின் செயல்பாடு அமைந்தது.

 6. தொடர்ச்சி…..

  3. காஷ்மீரில் ஜீலானி என்பவன் ஒரு அறிவுஜீவியாக, பேராசிரியராகக் காட்டிக் கொண்டு தீவிரவாத்தை வளர்க்கிறார். ஹைதராபாத்தில் ஒவைசி அதைச் செய்கிறார். இப்போது தமிழ்நாட்டில் “பேராசிரியர்” ஜவஹிரிருல்லாவை அந்த இடத்துக்கு வளர்த்து விட்ட ஜெயலலிதா தீவிரவாதம், சட்டம் ஒழுங்கு, அமைதிப் பூங்கா என்றெல்லாம் பேச எந்தத் தகுதியும் அற்றவர். இந்த ஒரு செயல் எப்பேர்ப்பட்ட தேசத் துரோகம் என்பதைக் காலம் சொல்லும்.

  4. இப்போது கருணாநிதி ஜெயலலிதா வழியில் ஜவஹிரிருல்லாவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இதனால் திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஜன்மத்துக்கு ஜவஹிரிருல்லா தீவிரவாதி, அல் உம்மா நிறுவனர் என்று மறந்து கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாடு எக்கேடு கெட்டால் என்ன, நமக்கு ஓட்டு வந்ததா, அது போதும் என்ற எண்ணம் இருவரிடமும் இருக்கிறது.

  5. பாரத தேசியத்தைச் சிதைக்க நாசக்கார சதிகாரர்கள் காஷ்மீர், தில்லி (JNU), ஹைதராபாத் (Hyderabad University), சென்னை (IIT) ஆகிய இடங்களில் அன்மைக்காலங்களில் நடத்திய விஷயங்களுக்கும், இதே இடங்களில் ஜீலானி, அஃப்சல் குரு (இப்போது இல்லை, ஆனால் “நினைவில் வாழும்”!), ஒவைசி, ஜவஹிரிருல்லா, ஜைனுல்லாபுதீன் என்ற பசுத்தோல் போர்த்திய ஓநாய்களுக்கும் உள்ள தொடர்பை மனதில் வைத்து, இவர்களை வேரூன்ற வைத்த ஜெயலலிதாவைத் தோற்கடிக்கவேண்டும். தற்போது ஆதரிக்கும் கருணாநிதியையும் தோற்கடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *