தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)

<< முந்தைய பதிவு

தமிழகத் தேர்தலில் இருக்கும் முக்கிய கட்சிகளான தி மு கவையும் அதிமுக வையும் ஏன் தமிழக வாக்காளர்கள் அருவருத்து வெறுத்து ஒதுக்க வேண்டும், ஏன் ஆதரிக்கக் கூடாது, ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று என் முந்தைய இரு பதிவுகளில் தெளிவாக எழுதியிருக்கிறேன். அவற்றைக் கருத்திக் கொள்ளவும். தற்கொலை மனநிலையில் இருப்பவர்களும் புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் இருப்பவர்களும் மேற்படி கட்சிகளின் கொள்ளைகளின் கூட்டாளிகளும் மட்டுமே எனது பதிவுகளைப் படித்த பிறகும் அந்த இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியும். மற்றவர்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்பொழுது தமிழ் நாட்டுத் தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது கட்சியான மக்கள் நலக் கூட்டணி பற்றியும் ஜாதிக் கட்சியான பா ம க பற்றியும் சிறிது அறிந்து கொண்ட பிறகு இறுதியாக எனது கடைசி பதிவில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதைக் காணலாம்.

விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியை ஏன் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்? ஏன் ஓட்டுப் போடக் கூடாது?

இந்தக் கூட்டணியை தமிழ் நாட்டு மக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஆதரித்து விடக் கூடாது. இவர்கள் எந்த விதத்திலும் தி மு க அதிமுகவை விட வேறு பட்டவர்கள் கிடையாது. அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணியே இந்த மக்கள் விரோதக் கூட்டணி. மக்கள் நலக் கூட்டணி என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

இந்தக் கும்பலில் இருக்கும் அயோக்கிய சிகாமணிகளின் லட்சணங்களைக் கொஞ்சம் காணலாம்.

இந்தக் கும்பலின் முதன்மையான தலைவர் வை.கோபாலசாமி. இந்த ஆள் முதலில் இலங்கைத் தமிழர்களின் பேரழிவுக்குக் காரணமாக இருந்தவர். இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் எந்த வளர்ச்சியும் நடக்க விடாமல் இந்தியாவின் எதிர் காலத்துக்கே எமனாக இருந்தவர். எப்பொழுது பார்த்தாலும் இந்தியா நாசமாகப் போக வேண்டும் இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் பிரித்து விடுவேன் என்று இந்திய விரோதக் கருத்துக்களை மட்டுமே பேசி வரும் ஒரு டுபாக்கூர் அரசியல்வாதி. தன் மகனுக்கு சிகரெட் ஏஜென்ஸி எடுத்துக் கொடுத்து விட்டு உள்ளூர் டாஸ்மாக் கடையை நொறுக்கிய உத்தமபுத்திரன். இவர் கட்சி டெல்லியில் பங்கு வகித்த பொழுது இவர் மந்திரி தனது வைப்பாட்டி மூலமாகக் கலெக்ட் பண்ணிய மணிதான் செய்த ஊழ்ல்கள்தான் அந்தக் காலத்திய 2ஜி ஊழலே. ஆகவே இவர் ஒன்றும் ஊழல் செய்யாத உத்தமபுத்திரனும் கிடையாது.கோபாலசாமி என்பவர் எப்பொழுதுமே இந்திய நலன்களுக்கு எதிராக வெளிநாடுகளிடம் காசு வாங்கிக் கொடு செயல் படும் ஒரு துரோகி. கைக்கூலி. ஏமாற்றுக்காரன், மோசடிப் பேர்வழி. இந்த ஆள் இது வரை எந்தவொரு ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் ஈடுபட்டதே கிடையாது. இந்தியாவையும் இந்து மதத்தையும் கடுமையாக வெறுக்கும் ஒரு வெறுப்பு அரசியல் வாதி. இன விரோதத்தைத் தூண்டி விடும் ஒரு அபாயகரமான நச்சுப் பேர்வழி.

அடுத்து டேனியல் ராஜா, தா(வீத்) பாண்டியன் வகையறாக்கள். இந்த டேவிட் ராஜாவும் அவரது மனைவியும் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பொழுது அங்கிருந்த போலீஸ்காரர்கள் அவரது மனைவியின் ஐ டி கேட்ட பொழுது கொடுக்க மறுத்து தன் யூனியன் ரவுடிகளை அங்கே வரவழைத்து அங்கிருந்த போலீஸ்களைத் தாக்கி மிரட்டிய ஒரு ரவுடி. ஜெயலலிதா போட்ட பிச்சையில் பின்வாசல் வழியாக எம் பி பதவி பெற்ற ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. இவரது மகள் இப்பொழுது டெல்லி ஜிகாதி நக்சல் பல்கலைக் கழகத்தில் இந்திய விரோத கோஷம் போட்டு கைது செய்யப் படப் போகிறவள். ஒட்டு மொத்தக் குடும்பமே தேச விரோதக் கும்பல். இந்த ரஷ்யக் கைக்கூலிக் கும்பலின் இன்னொரு தலைவன் டேவிட் பாண்டியன் என்ற தா.பாண்டியன். இவர் மீது இவர் கட்சிக்காரர்களே பல கோடி பணத்தைத் திருடி விட்டதாகக் கேஸ் போட்டிருக்கிறார்கள். சென்னையில் கட்சிக் கணக்கில் பல கோடி ரூபாய்களை சுருட்டி விட்டதாக உள்கட்சியிலேயே அடிதடி நடந்து கொண்டிருக்கிறது. இவர்களைப் போன்ற அயோக்கியர்கள்தான் இணைய இடதுசாரி கொழுந்துகள் எல்லாம் உத்தம புத்திரர்கள் தமிழ் நாட்டைக் காக்க வந்தக் காவலர்கள் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கும்பலின் இன்னொரு தலைவரான மகேந்திரன் என்பவரது மகள் வங்கியில் கடன் வாங்கி படித்து முடித்து ஆஸ்த்ரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். வங்கி படிப்புக் கடனைக் கட்டச் சொல்லி கேட்ட பொழுது இவர் கட்ட மறுத்து வங்கியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

அடுத்ததாக மார்க்ஸிஸ்ட் சிகாமணிகள். இப்பொழுது கேரளாவில் ஜெயராஜன் என்ற அவர்களது தலைவர் கொலைக் குற்றங்களுக்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறான். இந்தக் கட்சியின் தேச விரோத மாணவ அமைப்புகள் தேசம் முழுவதும் தேச விரோதக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். இவர்கள் கட்சிக்கார எம் எல் ஏக்கள் ரெண்டே ரெண்டு பேர்கள் இருந்தாலும் கூட இருவர் மீதும் கொலை, கொள்ளை ஊழல் குற்றசாட்டுக்கள் உள்ளன. பல லட்சம் பேர்களை மே வங்கத்திலும் கேரளாவிலும் கொன்று குவித்த ரத்தக் காட்டேரிகள். இவர்கள் ஆட்சி செய்த கேரளத்தில் இவர்கள் தலைவர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றசாட்டுக்கள் உள்ளன. இவர்களின் தலைவர்கள் பொது மேடையிலேயே தைரியமாக ஆமாம் நாங்கள்தான் கொலை செய்தோம் இத்தனை பேர்களைக் கொன்றோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்பேப்பட்டக் கொடூரமான கொலைகாரர்கள்தான் மார்க்ஸிஸ்டுகள். ஸ்டாலின் மாவோ பாணி ஆட்சியை நடத்தி வருபவர்கள்.

mnk_vijaykanth

இவர்கள் ஆட்சி செய்த கேரளாவையும், மேற்கு வங்கத்தையும் இவர்கள் பிச்சைக்காரர்கள் மாநிலங்களாக வைத்திருக்கிறார்கள். அங்கு எந்தவிதமான வளர்சிகளையும் இவர்கள் அனுமதிக்கவில்லை. மாறாக கடுமையான வன்முறைகள் மூலமாக எதிர்க்கட்சியினரைக் கொலை செய்து மிரட்டி அடக்கி வைத்திருப்பவர்கள். கருணாநிதி ஜெயலலிதாக்களை விடவும் பல ஆயிரம் மடங்கு மோசமான வன்முறை வாதிகள். தேச விரோதிகள். ஊழல்வாதிகள். இந்த கம்னியுஸ்டு கட்சியினரின் யூனியன் அராஜகங்கள் மூலமாகவே தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தொழில்கள் பலவும் அழிந்தன. மதுரையின் நெசவாலைகள் மூடப் பட்டன. கைத்தறி தறிகள் மூடப் பட்டன. சிறு சிறு தொழிற்சாலைகள் இவர்களது மிரட்டல்களுக்கு பயந்து கொண்டு நிறுவனங்களை மூடினார்கள். இவர்களினால் பல லட்சம் வேலை வாய்ப்புக்கள் தமிழ் நாட்டில் காணாமல் போயின. இவர்கள் எதிர்மறையானவர்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்புபவர்கள். எந்தவிதமான முன்னேற்றத்தையும் கடுமையாக எதிர்ப்பவர்கள். நாட்டின் வளர்ச்சியை அழிக்கும் நச்சுக் கிருமிகள். நாசகார ஏஜெண்டுகள். இவர்கள் இந்தக் கூட்டணியில் இருப்பதினாலேயே இந்தக் கூட்டணி கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டிய ஒரு கூட்டணியாகும்.

திருமாவளவன் கட்சியைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை. தமிழ் நாட்டின் அத்தனை ஊர்களிலும் மிரட்டியும் போலி ரெஜிஸ்ட்ரேஷன் செய்தும் பல லட்சம் கோடிகளில் நிலங்களை மிரட்டி ரவுடித்தனம் செய்து அபகரித்தவர்கள். பல பெண்களை மிரட்டி பயன் படுத்திக் கொண்ட மாஃபியாக் கும்பல் இது.

ஆக இப்படிக் கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் தேசத் துரோகிகளும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அதை ஆதரிப்பவன் எவனும் நிச்சயமாக ஒரு இந்திய தேச விரோதியாக, கடைந்தெடுத்த அயோக்கியனாக, கொலைகாரனாக கொள்ளைக்காரனாக, மாஃபியாவாக மட்டுமே இருக்க முடியும் அல்லது மூளை கழன்று போன மனநோயாளியாக இருக்க முடியும். ஊழல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், அதிமுக அதிக பட்சமாக ஊழல் செய்வார்கள் அடாவடி செய்வார்கள். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே உலை வைத்து விடுவார்கள். இதை ஆதரிக்கும் எவரும் ஒரு முறை தங்கள் மனசாட்சிகளைக் கேட்டு விட்டு ஆதரிக்கட்டும்.இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் எந்த ஆட்சியில் இல்லாத பொழுதே. பதவிக்கு லேசாகவோ அல்லது வராத பொழுதோ செய்யும் செய்த அக்கிரமங்கள் அராஜகங்கள் இவைகள் எல்லாம்.

இந்தக் கூட்டணியின் தலைவர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதராக இருக்கலாம். அவரைத்தான் இவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஜெயலலிதாவை விடவும் மோசமான உடல் மற்றும் மன நிலை உடையவராக இருக்கிறார். இவரால் நிதானமாக நிற்கவோ நடக்கவோ கூட முடிவதில்லை. கோர்வையாக எதையும் பேச முடியவில்லை சிந்திக்க முடிவதில்லை. எதைப் பற்றி பேசுகிறோம் என்ற பிரக்ஞை கூட இவருக்கு இருப்பதில்லை. இவரது உடல் நலம் மட்டும் அல்லாமல் இவரது மூளைத் திறனும் கேள்விக்குரியவையாக உள்ளன. இவருக்கு நரம்பியல் பிரச்சினைகள் இருக்கலாம் என்பதும் சற்று மன நிலை பிறழ்ந்தவரகாக இருக்கக் கூடும் என்பதும் இவரது பொதுப் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாகத் தெரிகின்றன. மேலும் இவருக்கு நிர்வாகம், பொருளாதாரம் போன்ற எவை பற்றியும் எந்தவிதமான அடிப்படை அறிவும் இருப்பதாகவும் தெரியவில்லை. இவருக்கு தமிழ் நாட்டில் சினிமாவைப் பார்த்து மதி கெட்டுத் திரியும் விடலைகளின் ஆதரவு கணிசமாக உள்ளது. இவரது மனைவியும் இவரது மைத்துனரும் இவருக்கு இருக்கும் ஆதரவை முதலீடாக வைத்து பிற கட்சிகளிடம் இருந்து பணம் அல்லது சில பதவிகள் பெற்று லாபம் அடையப் பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட மன நிலை தவறிய ஒரு நோயாளியை முதலீடாக வைத்து அரசியல் வியாபாரம் செய்யத் துடிக்கிறார்கள். இவர்களது கூட்டாளிகளும் இவரை முன் வைத்து எப்படியவாது சில பதவிகளைப் பெற்று தங்களது இந்திய விரோத அரசியலை முன்னகர்த்த முயல்கிறார்கள். குணா என்னும் சினிமாவில் புத்தி ஸ்வாதீனமில்லாத மகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று மோசடி செய்ய முயலும் அவனது அம்மாவின் கும்பலைப் போன்றது இந்தக் கூட்டணி.

இந்த ம ந கூ ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயம், பொருளாதாரம், தொழில், வணிகம், மாநில அரசின் எல்லைகள் என்பவையெல்லாம் குறித்த எந்தவொரு அறிவும் இல்லாத ஒரு முட்டாள்த்தனமான அறிக்கையாகவே தெரிகிறது. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அந்த அறிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. அந்த அறிக்கை கடுமையான இந்து விரோத செயல் பாடுகளை இந்து வெறுப்பினை முன் வைக்கின்றது.

இவர்களது தேர்தல் அறிக்கை தெளிவாகவே

 • மதக் கலவரத்தைத் தூண்டுகின்றது
 • மத மாற்றத்தை ஊக்குவிக்கின்றது
 • இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஆதரிக்கின்றது
 • இந்துக்களின் கோவில்களின் சொத்துக்களை அழிப்போம் என்கின்றது
 • சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் தமிழ் நாட்டில் இருந்து ஒழிப்போம் என்கிறது

ஆக, இது ஒரு அபாயகரமான இந்து விரோத, இந்திய விரோத மக்கள் விரோதக் கூட்டணி. எந்தவிதமான வளர்ச்சியிலும் அக்கறையில்லாத ஒரு மோசடிக் கூட்டணி மட்டுமே. இந்த நாசகாரக் கும்பலை நம்பி ஒருவன் ஆதரவு தெரிவிக்க வேண்டுமானால் அவன் கடைந்தெடுத்த இந்திய மக்கள் விரோதியாக இந்தியாவைக் கெடுக்க வந்த கோடலிக் காம்பாக மட்டுமே இருக்க முடியும். அறிவுள்ளவன், இந்தியாவை நேசிப்பவன், ஊழல்களையும் வன்முறைகளையும் வெறுப்பவன் எவனும் எந்தக் காலத்திலும் இந்தக் கும்பலைக் கனவில் கூட ஆதரிக்க முன் வர மாட்டான். அப்படி ஆதரிக்கும் எவனும் மனிதப் பிறவியாகக் கூட இருக்க முடியாது.

ஆகவே மறந்தும் கூட எந்தக் காரணத்திற்காகவும் இந்த அபாயகரமான மோசடி கொள்ளை கொலைகார இந்திய விரோத இந்து அழிப்பு இயக்கத்தை ஆதரித்து விடாதீர்கள். அப்படி ஆதரித்து விட்டால் அதனால் பலியாகப் போகும் முதல் குடும்பம் உங்கள் குடும்பமாகவும் இருக்கலாம். கேரளத்தையும் மேற்கு வங்கத்தையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லாயிரக்கணக்கான படு கொலைகளை கவனத்தில் கொள்ளுங்கள். நாளைக்கு தமிழ் நாடு சுடுகாடாக மாற உறுதுணையாக இருந்த பாவத்தைச் செய்து விடாதீர்கள்.

விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியை அருவருத்து ஒதுக்குங்கள். அதன் அருகில் கூடச் சென்று விடாதீர்கள். கடுமையாக எதிர்த்து வாக்களியுங்கள். உங்கள் எதிர்காலத்தை சீரழித்து விடாதீர்கள் அழிவுப் பாதைக்குச் சென்று விடாதீர்கள். இந்தக் கூட்டணிக்கு மறந்தும் கூட ஓட்டுப் போட்டு விடாதீர்கள். அவர்கள் அழிவு கொள்ளைத் தீமைக் கழகத்தினர். அவர்கள் சென்ற இடமெல்லாம் பஞ்சம் படுகொலை பேரழிவுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. கம்னியுஸம் நுழைந்த எந்த ஊரும், மாநிலமும், நாடும் உருப்பட்டதாக முன்னேறியதாக வரலாறே கிடையாது.

எச்சரிக்கையுடன் இருங்கள். அழிவு கொள்ளைத் தீமைக் கழகம் உங்களை நோக்கி வருகின்றது. அதை ஒழிக்க உறுதி பூணுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள். ம ந கூட்டணியைப் புறக்கணியுங்கள்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

4 Replies to “தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)”

 1. மக்களுடைய மனோபாவம் மாறவேண்டும் நம் ஒரு எதிர்ப்பு என்ன செய்யும் என்ற மனோபாவத்தில் நம் சிந்தனையை தவறான வழியில் செலுத்துகிறோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதனை உணர்ந்து மோசமானவர்களில் ஒரு சிரிய மோசாமானவனை தேர்வுசெய்தால் நாளடைவில் நல்லவைகள் நடக்கும்

 2. Sir,
  after reading the 3 episodes, my mind became clear about the 2016 assembly election
  Thanks
  G.Krishnaraj

 3. அப்படியென்றால் மேற்கூறிய குற்ற சாட்டைவுடைய கட்சிகளுடன் நாடாளு மன்றத்தில் பிஜேபி கூட்டணி வைத்தது ஏன் ?

 4. தேசவிரோத கும்பல்களை உள்ளடக்கி இருந்த மக்கள் நலக் கூட்டணி ஒருவாறு மக்களால் விடை கொடுத்து அரசியலில் இருந்து ஒய்வு கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *