தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)

<< முந்தைய பகுதி

தொடர்கிறது பா.ஜ.கவின் சாதனைப் பட்டியல்.. 

bjp_tn_ad_roads7.  கட்டுமானத் திட்டங்கள்

இந்தியா முழுவதும் ஏராளமான கட்டுமான திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு சாலை போட வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 45% ஜெயலலிதாவின் பல்வேறு அடுக்குகளுக்கு வேலையை எடுக்கும் காண்ட்ராக்டர் கப்பம் கட்ட வேண்டும். மீதமுள்ள 55% நிதியில் சாலையையும் போட்டு அதில் அவர்கள் லாபமும் பார்க்க வேண்டும். ஆக ஒதுக்கப் பட்ட நிதியில் 25% அந்த வேலைக்கு நடந்தாலே சரி. அதனால்தான் மோசமான பாலங்களும், மோசமான குண்டும் குழியுமான சாலைகளும் மோசமான கட்டிடங்களும் கட்டப் படுகின்றன. தமிழ் நாட்டில் அரசு கட்டும் எதுவுமே உருப்படியாக இருப்பதில்லை. அரசு பஸ்களின் கூரைகள் காற்றில் பறக்கின்றன. அரசு பள்ளிக் கூடங்கள் மழைக்கு ஒழுகுகின்றன. அரசு செய்யும் எதுவுமே ஊழல்களினாலும் நிர்வாகச் சீர்கேட்டினாலும் மிக மோசமான நிலையில் உள்ளன.

ஆனால் மத்திய அரசில் கட்காரி அமைச்சரவையிலும் சரி ரெயில்வேயில் சுரேஷ் பிரபு அமைச்சரவையிலும் சரி இன்னும் ஏராளமான பிற துறைகளிலும் சரி கட்டுமான திட்டங்களை செயல் படுத்துவதற்கான காண்ட்ராக்டுகளில் எந்தவிதமான கமிஷனும் பெறப் படுவதில்லை. அவற்றிற்கான ஏலங்கள் வெளிப்படையான முறையில் ஆன்லைனில் நடத்தப் படுகின்றன. தரக்கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசின் கட்டுமானங்கள் செய்யப் படுகின்றன. மத்திய அரசின் தேசீய நெடுஞ்சாலையையும் மாநில அரசின் மாநில சாலைகளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை விளங்கும்.

இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய நெடுஞ்சாலைகளில் 75% க்கும் மேலான சாலைகள் கடந்த வாஜ்பாய் தலமையிலான பி ஜே பி அரசில் போடப் பட்டவை. இப்பொழுதைய மோடி அரசாங்கம் ஒரு நாளைக்கு 25 கி மீ தூரம் சாலைகளை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதையும் இணைக்கும் தேசீய நெடுஞ்சாலைகளை ஊழல் இல்லாமல் தாமதம் இல்லாமல் அசுர வேகத்தில் உருவாக்கி வருகிறார்கள். தமிழ் நாட்டில் 63ம் வருடம் வந்த கடும் புயலில் அழிந்து போன தனுஷ்கோடிக்கு மோடி அரசாங்கமே மீண்டும் சாலை அமைத்திருக்கிறது. தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நிறைவடையாத மோசமான சாலைகளை மத்திய அரசு மீண்டும் கட்டிக் கொடுத்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் மாநில அரசின் ஒப்புதல் இல்லாதபடியாலும் ஜெயலலிதா லஞ்சம் எதிர்பார்ப்பதினாலும் தேக்கம் கண்டு நிற்கின்றன. சென்னையில் ம்துரவயல் பாலம் ஒரு உதாரணம் மட்டுமே.

சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்கள் கழித்து வட கிழக்கு மாநிலங்கள் மீது அக்கறை கொண்ட அரசு மோடி அரசாங்கமே. அருணாச்சல பிரதேசத்திலும், மணிப்பூரிலும் அஸ்ஸாமிலும் மேகாலையாவிலும் அகலமான தேசீய நெடுஞ்சாலைகளை அமைத்து அந்த மாநிலங்களை இந்தியாவுடன் நல்ல  சாலைகள் வழியாக இணைத்து வருகிறார்கள். அந்த மாநிலங்களின் சுற்றுலா வளர்ச்சிக்கு அது பெரும் துணையாக உள்ளது.

bjp_tn_ad_developmentசாலைகள் மட்டும் அல்லாமல் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம், தமிழ் நாட்டில் குளச்சல் துறைமுகம் என்று ஏராளமான துறைமுகங்களையும் கட்டி வருகிறார்கள். அவை பல்லாயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளன. சாலைப் போக்குவரத்தையும் ரெயில் போக்குவரத்தையும் மேம்படுத்துவதைப் போலவே மோடி அரசு உள்நாட்டு நதி வழி போக்குவரத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான சாலை வழி சரக்குகள் நதிகள் வழியாக வேகமாகவும் குறைந்த செலவிலும் இந்தியாவின் பல பகுதிகளையும் அடைய முடியும்.

இந்தியா முழுவதும் ஏராளமான தரமான உயர் நவீன மருத்துவ மனைகளைக் கட்டி வருகிறார்கள். வாரம் ஒன்றுக்கு 1200 கி மீ தூரத்துக்கு ஆப்டிக்கல் ஃபைபர் இணைப்புக்களை இழுத்துக் கட்டி 50,500 கிராமங்களை இது வரை டிஜிடல் இணைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். இது வரை 1.5 லட்சம் கி மீ தூரத்துக்கு ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் போடப் பட்டுள்ளன.

ஆகவே, நல்ல தரமான ஊழல்கள் அற்ற சாலைகளைப் பெறவும், நல்ல தரமான குடிநீரைப் பெறவும் நல்ல தரமான மருத்துவமனைகளைப் பெறவும் நல்ல தரமான கல்விக் கூடங்களைப் பெறவும் ஆதரிப்பீர் பாரதிய ஜனதாவை, ஓட்டளிப்பீர் தாமரைச் சின்னத்தில்.

8. நகரங்கள் மேம்பாடு

ஸ்மார்ட் சிட்டி என்னும் நவீன டிஜிட்டல் மயமான நகரங்களை உருவாக்கி வருகிறார்கள். தமிழ் நாட்டில் சென்னை, கோவை போன்ற நகரங்கள் இதில் இணைக்கப் பட்டுள்ளன. வழக்கம் போலவே ஜெயலலிதா அரசின் மெத்தனத்தினால் மதுரை போன்ற பல நகரங்கள் முதல் சுற்றில் விடுபட்டுப் போயுள்ளன.

9. நதிகள் பாதுகாப்பு

கங்கை தூய்மைப் படுத்தும் திட்டம் மற்றும் நதிகள் இணைப்புத் திட்டம். கங்கை நதி வட இந்திய மாநிலங்களில் கடுமையாக மாசு பட்டுள்ளது. கழிவு நீர், தோல் பதனிட்ட நீர், ஆலைகளில் இருந்து சுத்தகரிக்கப் படாத நீர், மக்களின் அன்றாட அசுத்தங்கள் யாவும் கங்கையில் விடப் பட்டு அந்த மாபெரும் நதியின் அந்த ஜீவ நதியின் இந்தியாவின் ஆன்மாவின் இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன. கங்கையை மீட்ப்பதற்காக மோடி தனியாக ஒரு அமைச்சரவையையே உருவாக்கி பெரும் பொருட் செலவில் கங்கை நதியைத் தூய்மைப் படுத்தி வருகிறார். ஏற்கனவே குஜராத்தில் நம் கூவம் போல இருந்த சபர் மதி நதியை சுத்தமான அழகான நதியாக மாற்றியிருக்கிறார்.

bjp_tn_ad_riversதமிழ் நாட்டில் நதிகளும் நீர் நிலைகளும் மிக மோசமாகப் பராமரிக்கப் படுகின்றன. நதி வளங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன. மணல்கள் அள்ளப் பட்டு நதிகள் சகதிகளாக மாற்றப் பட்டுள்ளன. நதிகளும், அணைகளும், குளங்களும் தூர் வாரப் படாமல் அதன் கொள்ளளவு குறைந்து காணப் படுகின்றன. சிறு அணைகளைக் கட்டி நதி நீரை சேமிக்கும் திட்டம் தமிழ் நாட்டில் இல்லை. இருக்கும் நதிகளில் இருந்து நீரையும் மணலையும் எப்படி கொள்ளையடிப்பது என்பது ஒன்றே கருணாநிதி மற்றும் ஜெயலலிதாக்களின் திட்டமாக உள்ளன. அவர்கள் இருவரும் தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்களைக் கற்பழித்துச் சூறையாடி விட்டார்கள். பஞ்சமா பாதகங்களைச் செய்து வருகிறார்கள். இந்தக் கொள்ளையர்களின் ஆட்சியில் மீதமுள்ள கடைசிச் சொட்டு நீர் வரையிலும் அழிக்காமல் அவர்கள் ஒழியப் போவதில்லை. இந்த நிலை மாற பா ஜ க ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ் நாட்டின் ஜீவ நதிகள் மீட்க்கப் பட பா ஜ க ஆட்சி வர வேண்டும். தமிழ் நாட்டின் குளங்களும், ஏரிகளும், நதிகளும் பராமரிக்கப் பட்டு அவை பயன் படுத்தும் நிலைக்கு மீண்டும் வருவதற்கு பா ஜ க ஆட்சி வேண்டும்.

தமிழ் நாட்டின் நதிகள் மீண்டும் உயிர் பெற சென்னை பெரு வெள்ளம் போல மீண்டும் நிகழாதிருக்க ஆதரிப்பீர் பா ஜ கவை. ஓட்டளிப்பீர் தாமரைக்கு.

10. வேலைவாய்ப்பு, திறன்கள் மேம்பாடு:

ஸ்கில் டெவலப்மெண்ட் திட்டம். அதிகம் படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் உருவாக்க மத்திய அரசு தொழிற் கல்விகளை கற்றுக் கொடுத்து அவர்களை கட்டுமானப் பணிகளுக்காக வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அவற்றுக்குத் தேவையான தொழிற் கல்வியைக் கற்றுக் கொடுக்கவும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. வேலைவாய்ப்புகள் உருவாகவும் அனைவருக்கும் பல்வேறு கல்வி கிடைப்பதற்கும் ஆதரிப்பீர் பா ஜ க வை. ஓட்டளிப்பீர் தாமரைக்கு

bjp_tn_ad_educationதூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இண்டியா திட்டம் என்று ஏராளமான முன்னேற்ற வளர்ச்சித் திட்டங்களை மோடி அரசு சிந்தித்து செயல் படுத்தி வருகின்றது. அந்தத் திட்டங்களினால் தமிழ் நாடும் பயன் பெற வேண்டுமானால் தமிழ் நாட்டிலும் அதே பா ஜ க அரசு வந்தால் மட்டுமே சாத்தியமாகும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு அமையும் பட்சத்தில் அதன் மூலமாக ஏராளமான முன்னேற்றங்களைத் தமிழ் நாடு அடைய முடியும்.

ஆகவே, தமிழ் நாடு வளர, தமிழர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக தமிழ் நாட்டில் தொழிற்சாலைகள் உருவாக ஆதரிப்பீர் பாரதிய ஜனதா கட்சியை ஓட்டளிப்பீர் தாமரைக்கு.

இது வரை மத்திய அரசின் சாதனைகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நான் பட்டியலிட்டிருக்கிறேன் இன்னும் ஏராளமான திட்டங்களைச் சொல்ல நேரமும் இடமும் அனுமதிக்கவில்லை. வருங்காலங்களிலும் தொடர்ந்து சொல்வேன்.

பாரதிய ஜனதா கட்சிக்கும் பிற தமிழகக் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கமாகச் சொன்னேன். அதன் மூலமாக எவ்வாறு பா ஜ க அனைத்து விதங்களிலும் சிறப்பான ஊழல் இல்லாத வளர்ச்சி நோக்கம் உடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட ஒரு கட்சி என்பதை உதாரணங்களுடன் விளக்கினேன்.

இவற்றை அனைத்தையும் கருத்தில் கொண்டு நன்கு யோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவும்.

bjp_tn_ad_agricultureதமிழ் நாடு முன்னேற வேண்டுமானால் உங்கள் பிள்ளைகளுக்கு நாளைய தமிழ் நாட்டில் நல்ல எதிர்காலம் உருவாக வேண்டுமானால் தமிழ் நாடு ஊழல்களில் இருந்தும் அராஜகங்களில் இருந்தும் பயங்கரவாதங்களில் இருந்தும் விடுபட வேண்டுமானால் இந்துக்கள் பாதுகாக்கப் பட வேண்டுமானால் அச்சமின்றி மக்கள் வாழ வேண்டுமானால் தமிழ் நாட்டின் இயற்கை வளங்களும் கோவில்களும் அழியாமல் காக்கப் பட வேண்டுமானால் நீங்கள் ஆதரிக்க வேண்டிய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய ஒரே சின்னம் தாமரைச் சின்னம் மட்டுமே.

உங்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள். உங்கள் நதிகளை அழித்து விடாதீர்கள். உங்கள் மலைகளை இழந்து விடாதீர்கள். உங்கள் கோவில்களை அழித்து விடாதீர்கள். உங்கள் எதிர்காலத்தை ஒழித்து விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்கேடாக்க உறுதுணையாக இருந்து விடாதீர்கள். ஆதரிப்பீர் பா ஜ க வை, ஓட்டளிப்பீர் தாமரைக்கு.

முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர்களாக இருந்தால்,  உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிறிதேனும் அக்கறை இருந்தால், உங்கள் வேலைகளைப் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் துளியேனும் அக்கறையிருந்தால், தண்ணீர் குறித்தும் மின்சாரம் குறித்தும் ஒரு துளியேனும் கவலை இருந்தால், தமிழ் நாட்டின் தீய சக்திகளான திமுக, அதிமுக, பாமக, மநகூ கட்சிகளை அறவே புறம் தள்ளி தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஓட்டளியுங்கள்.

வெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பா ஜ க. அதன் சின்னம் தாமரை.

மே 16 திங்கள் அன்று உங்கள் உள்ளத்தில் தெளிவு பிறக்கட்டும். உங்கள் எண்ணத்தில் ஒளி கூடட்டும். ஆக்கம் சிறக்கட்டும். திராவிடக் கட்சிகள் ஒழியட்டும். தமிழ் நாடு வளரட்டும், ஒளி பெறட்டும். இருண்ட தமிழ் நாட்டை ஒளிமயமான எதிர்காலத்திற்குக் கொண்டு செல்ல தாமரை தமிழ் நாட்டில் மலர வேண்டும். அதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்

ஓட்டளிப்பீர் பா ஜ கவுக்கு. வாக்களிப்பீர் தாமரை சின்னத்தில்.

இது வரை எனது நீண்ட பதிவுகளைப் பொறுமையுடன் படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

(முற்றும்)

bjp_tn_ad_modi_letter

7 Replies to “தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)”

 1. // உங்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். //

  இவ்வளவு நேரம் நன்றாகத்தானே எழுதிக்கொண்டிருந்தீர்கள்.

  தமிழகத்திற்கு மட்டுமல்ல, அகில இந்தியாவிற்கே சீரும் சிறுத்தைகளும், பாயும் புலிகளும், கர்ஜிக்கும் சிங்கங்கலுமே தேவை. மன்றாடி கேஞ்சுபவர்களல்ல!

 2. பிஜேபி நல்லதொரு சந்தர்பத்தை நழுவ விட்டது என்றே நினைகிறேன். DMDK கூட்டணி காத்து கிடந்ததிருக்கு பதிலாக சீமானை போன்றோ அன்புமணி போன்ற தனியாக போட்டி போட்டு இருக்க வேண்டும். ஜெயலலிதா அம்மையாரிடம் சற்றே பவ்யமாக பிஜேபி தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். இந்த போக்கு இளைய தலைமுறை இடம் பிஜேபி யை கொண்டு சேர்க்காது.
  2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்ன் ஊழலை கடுமையாக எதிர்த்த போக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் அம்மையாரின் அரசை எதிர்க்காமல் மிகவும் அடக்கியே வாசிக்கப்பட்டது. இது ஏன் என்று தெரிய வில்லை.
  பிஜேபி தமிழக தலைவர்கள் இந்த விஷயத்தில் முதுகு எலும்போடு நடந்து கொண்டால் அடுத்த தேர்தலில் குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் பயனுள்ளதாக இருக்கும்.

 3. தமிழக தேர்தலில் தமிழக பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும்
  மத்திய அரசின் திட்டங்களை லோக்சபா தேர்தலில் பேச வேண்டும்
  மத்திய அரசின் திட்டங்களில் எத்தனை திட்டங்கள்
  தமிழக பா.ஜ.க. வால் மக்களிடம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  நம் திட்டங்களை மக்களிடம் சொன்னால் போதாது,அதை நாம்
  வாங்கி கொடுத்தால் தான் மக்களிடம் எளிதாக சென்றடையும்.
  உதாரணம் அனைவருக்கும் வீடு திட்டம்.இத்திட்டத்தை அ.தி.மு.க.
  வினர் மட்டுமே மக்களுக்கு வாங்கி கொடுக்கிறார்கள்.
  இப்போது இது தமிழக அரசின் திட்டமாகிவிட்டது..இது போல்
  ஸ்மார்ட் சிட்டி,முத்ரா கடன் போன்றவை.
  நேரடியாக தேர்தலில் நிற்காமல் ராஜ்யசபா மூலம் எம்.பி. யாகி
  மந்திரியாக உள்ளவர்கள் அரசியல் எப்படி செய்வார்கள்

 4. அதே போல் ஒருவர் கருத்து கூறினால் சொந்த கருத்து என கூறுவதை நிறுத்த வேண்டும்.
  சொந்த கருத்து கூற இது கட்டுப்பாடு இல்லாத கட்சியா?
  இன்னொன்று தொண்டர்களிடம் தலைவர்கள் நெருக்கமாக வேண்டும்.
  ஆகஸ்ட் மாதம் நிலக்கோட்டைக்கு ஸ்ரீ ஹெச்.ராஜா அவர்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர்
  ஏற்பாடு செய்த சமுதாய நிகழ்ச்சிக்கு வந்தார்.கட்சியின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் யாரையும்
  அழைக்கவில்லை.
  பிப்ரவரி மாதம் ம.அ. ஸ்ரீ நிர்மலா சீதாராமன் அவர்கள் உறவினர் வீட்டிற்கு வந்த போது இதேபோல்
  நிர்வாகிகளுக்கு தகவல் இல்லை. ஆனால் வீட்டில் தொழிலதிபர்களை மட்டும் சந்திக்கிறார்
  இது போன்ற சிலவற்றை சரி செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்

 5. தேர்தல் முடிந்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விட்டது. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் வாக்காளர்களின் முடிவு இப்படி அமைந்தது ஏன் ?

  தமிழக வாக்காளர்களின் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகள் என்ன ? அவர்கள் என்ன காரணங்களால் இந்த முடிவுகளை எடுத்தனர். ?

  தமிழக வாக்காளர்கள் முன் அதிமுக ஆட்சிக்கு மாற்றாக என்ன வாய்ப்புக்கள் இருந்தன ?

  சீமான் முதல் பாமக , பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே தமிழகம் முழுவதும் வாக்கு வலிமை உடையவை அல்ல.பாமக வட தமிழகத்தின் ஒருபகுதியில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே சற்று அதிக அளவு வாக்குகளை பெற்றுள்ளது. அதிலும் கூட பென்னாகரத்தில் அன்புமணி தோற்றுப்போனார். காரணம் என்ன தெரியுமா ? பென்னாகரத்தில் அன்புமணி வெற்றி பெற்றால், அவர் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார். எனவே தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு இடைத்தேர்தல் வரும். சுமார் 15- லட்சம் வாக்காளர்கள் வாக்கு சாவடியை நோக்கி ஓடவேண்டும். இடைத்தேர்தலால் அரசும் , அரசியல் கட்சிகளும் சேர்ந்து சில பத்து கோடிகளை செலவு செய்யவேண்டும். இது எதற்கு ? இந்த செலவு தேவை இல்லாதது. எனவே அன்புமணி வெற்றிபெரவேண்டாம் வேறு ஒரு வேட்பாளருக்கே ஓட்டுப்போடுவோம் என்று மனநிலை தான் பென்னாகரம் வாக்காளர் மத்தியில் இருந்தது. பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று அனைவரும் அறிந்ததால், அன்புமணி எம் பி யாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.பாஜக கூட்டணியை விட்டு பிரிந்ததால் ஒரு உபயோகமும் இல்லை என்பதை தேர்தலுக்கு பிறகு உணர்ந்திருப்பார்களோ என்னவோ ஆண்டவனுக்கே வெளிச்சம். பாஜக கூட்டணியில் இருந்திருந்தால், இரு கட்சிகளும் சேர்த்து சுமார் 35 லட்சம் ஓட்டுக்களை பெற்று ஒரு பத்து தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க முடியும். மகனை முதல்வர் ஆக்கும் ராமதாசின் ஆசை ஒரு எம் எல் ஏ கூட இல்லை என்ற நிலையைத்தான் ஏற்படுத்தி உள்ளது. புரிந்தால் சரி.

  சீமான் மீது தமிழகம் முழுவதுமே ஒரு நல்ல கருத்து இல்லை. அவர் விடுதலைப் புலி பிரபாகரன் படங்களை தனது கட்சி மேடைகளில் வைத்திருந்தது பொதுமக்களால் வெறுக்கப்பட்ட ஒன்று. பிரிவினை வாத விதைகளை விதைக்கும் வண்ணம் அவர் பேசிய பேச்சுக்களை யாருமே ரசிக்கவில்லை.

  பாஜகவிலோ முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் அறிமுகப்படுத்தவில்லை. மோடி அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தனித்து போட்டியிடும் திட்டத்தை ஒரு ஆண்டு முன்னரே முடிவு செய்து , பிரச்சாரத்தை தொடங்கி இருந்தால், இன்று பாஜகவுக்கு ஆட்சி கிடைக்கா விட்டாலும் தமிழக சட்ட சபையில் குறைந்தது 25- எம் எல் ஏக்கள் கிடைத்திருப்பார்கள். விஜயகாந்த் வருவாரா என்று ஏங்கி தவம் இருந்ததற்கு பதிலாக ,கட்சி வளர்ப்பில் முழு கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

  ஆறுபேர் அணிக்கு விஜயகாந்த் சேர்ந்த பின்னர் , மீடியாவின் தயவில் மிக பெரிய இமேஜ் உருவாக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்தால் அதோகதிதான். ஏனெனில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு கரைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தமாக, வைகோ, இரண்டுமே அதிக வாக்கு வங்கி இல்லாத கட்சிகள். தமாக ஜே- கொடுக்க சம்மதித்த தொகுதிகளை ஏற்று , இரட்டை இல்லை சின்னத்தில் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் , இன்று அவருக்கு 10-க்கும் மேற்பட்ட எம் எல் ஏக்கள் கிடைத்திருப்பார்கள். விஜயகாந்த் , திருமாவளவன் இருவருக்கும் இருந்த வாக்குவங்கி ஜாமீன் தொகையை திரும்ப பெறுவதற்கு கூட போதுமானதல்ல.வைகோவும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி , அந்த அணிக்கு ஒரு தேவை இல்லாத குழப்பத்தை உருவாக்கிவிட்டார். எனவே பெரிய சைபர் ஆகிவிட்டது அந்த அணி.

  திமுகமீது ஏற்கனவே டூ ஜி, கலைஞர் டிவி, பி எஸ் என் எல் , ஏர்செல் மாக்சிஸ், மெத்தேன், காவிரி, கச்சத்தீவு, மதுக்கடைகளை முதல் முதலில் தமிழகத்தில் திறந்தது, நிலப்பறி, மின்சாரத்தட்டுப்பாடு , லட்சக்கணக்கான ஈழத்தமிழரை படுகொலை செய்த இந்திரா காங்கிரசுடன் கூடா நட்பு , , நடைப்பயணம் சென்ற தாகி படுகொலை, தினகரன் ஊழியர் உயிருடன் எரிப்பு, சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை ஆதரித்து வாக்களித்தது , குடும்ப அரசியல், என்று ஏராளம் அணி வகுக்கும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உள்ளூரில் உள்ள ஆளும்கட்சி எம் எல் ஏக்கள் மீது அதிருப்தி உள்ள தொகுதிகளில் வாக்காளர்கள் வேறு வழி இல்லாமல், ஆறுபேர் அணி, பாமக, சீமான், பாஜக ஆகிய நான்கினையும் நிராகரித்து , திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அதன் விளைவாகத்தான் அந்த கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. இப்போதைக்கு பிரதான எதிர் க்கட்சி ஆகி உள்ளது. ஆனபோதும் வரவிருக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போலத்தான்.

  அதிமுகவை பொறுத்தவரையில் சென்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர், திசம்பர் 2015- மாதம் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது ஒரு பாதகமான அம்சம். 2011- சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், இரு கம்யூனிஸ்டுகள், ஆகியோருடன் சேர்ந்து 150 எம் எல் ஏக்களை பெற்ற அதிமுக, இப்போது கூட்டணி இல்லாமல் 134 எம் எல் ஏக்களை பெற்று வெற்றி பெற்றுவிட்டது. பெங்களூரு சிறைக்கு சென்று மீண்டும் முதல்வராக மேமாதம் 2015
  இல் முதல்வராக பதவி ஏற்கும் வரை சுமார் எட்டுமாதம் நிர்வாகம் செயல் இழந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டதென்பதை யாரும் மறுக்கமுடியாது. இவ்வளவு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று , கருத்து கணிப்புக்கள், கருத்து திணிப்புக்கள், எக்சிட் போல்கள் இவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி சாதனை புரிந்துள்ளது. ஜே விடம் தமிழக வாக்காளர்கள் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை மட்டுமே இது காட்டுகிறது. ஜே- யின் வெற்றிக்கு பிறகு, அவரது செயல்பாட்டை இந்திய துணைக்கண்டமே உற்றுநோக்கும்.

 6. 2011 சட்டசபை தேர்தல் முடிந்தபின்னர் திருமாவளவன் அவர்கள் பே ட்டி கொடுத்தபோது , எம் ஜி ஆர், ரஜினி, சரத்குமார், விஜய், அஜித் ,கமல் , விஜயகாந்த் ரசிகர்கள் எல்லோரும் ஒன்றுகூடி என்னை தோற்கடித்துவிட்டனர் என்று சொன்னார்.

  2016- தேர்தலில் விஜயகாந்த் ரசிகர்களுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டார். இப்போதும் தோற்றுப்போனார்.அவரது தோல்விக்கு முக்கிய காரணம் அவர் இந்திய தேசீயத்துக்கு எதிராக அடிக்கடி உளறுவது தான் என்பதை அவர் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. கிறித்தவ மத மாற்ற ஏஜெண்டுகளை தமிழக வாக்காளர்கள் ஏற்கமாட்டார்கள்.

  ஈவேரா பெரியார் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இரண்டு பிரதமர்களை உருவாக்கிய காமராஜர் பெரியாரின் தகாத கூட்டால், அதாவது புரியும் படி சொன்னால், கூடா நட்பால் , அரசியல் வாழ்வில் அஸ்தமனத்தைக் கண்டார். அதன் பிறகு காமராஜரால் எழுந்திருக்கவே முடியாமல் போனது.

  திருமாவளவனும் பித்தலாட்டமான திராவிடம் என்ற விஷத்தை குடித்து தனது கட்சியை காலி செய்துவிட்டார். இந்துக்களுக்கு எதிராக மதமாற்ற சக்திகளுக்கு துணைபோகும் எவருக்கும் இதே கதிதான் ஏற்படும்.

 7. சகுனங்கள் , நிமித்தங்கள் என்று பல விஷயங்கள் உள்ளன. இவற்றை கேலி செய்து மூட நம்பிக்கை என்று புறந்தள்ளிய பகுத்தறிவு வாதிகள் வாழ்வில் நடப்பதை பார்ப்போம்.

  தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல் நாள் ஆரம்ப பயணம் கிளம்புகிறார் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அவரது பிரச்சாரப்பயணத்தைத் தொலைக்காட்சியில் லைவாக நேரடி ஒலிபரப்பு / ஒளிபரப்பு செய்த தொலைகாட்சி காமிரா மேன் வேனில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். முதல் நிமித்தம் சரி இல்லை.

  தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து , ஆரத்திப்பொட்டு வைக்கிறார்கள் ஒரு அரசியல்வாதியின் நெற்றியில். அந்த மங்கலமான பொட்டினை அவர் உடனே அழித்துவிடுகிறார். செய்யக் கூடாத அமங்கலமான செயல். இந்த நிமித்தமும் சரியில்லை.

  இந்த இரு நிமித்தங்களும் அந்த அரசியல் தலைவருக்கு அதிருஷ்டம் இல்லை என்பதையும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பதை தெய்வக் குற்றம் தடுக்கிறது என்பதையும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. எனவே ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்தனர்.

  அந்த அரசியல் தலைவர் எம் எல் ஏ தேர்தலில் வெற்றிபெற்ற மறுநாளே அவரது தொகுதிக்குள் உள்ள கோயில் தேர் கவிழ்ந்து இருவர் பலியாகின்றனர் . ஒரு எம் எல் ஏ என்பவர் அந்த தொகுதியின் மக்கள் பிரதிநிதி மட்டுமல்ல. அந்த தொகுதிக்கு ஒரு சிறு குறுநில மன்னரை போல , ஆட்சித்தலைவர் ஆவார். கோயில் தேர் கவிழ்ந்து பக்தர்கள் இருவர் பலியானது, எம் எல் ஏக்கு மேலும் எதிர்கால நிகழ்வுகள் சாதகமாக இல்லை என்பதையும், தெளிவாக குறிகாட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *