வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

முதலைத்தோல் காலணிகளின் பழக்கமான சர்ரரக் சரக் சர்ரரக் சரக் என்ற சத்தம் மிருகநயனியின் காதுகளில் ஒலித்தது. காலணிகள் அவள் அருகே வந்து நின்றன. இடது காலணி வலதை விட சற்றே உயரமான குதிகால் பகுதியைக் கொண்டது. மஞ்சள் சாயம் பூசப்பட்ட காலணிகள். அங்கங்கே ரத்தக் கறைகள் படிந்திருந்தன. சில கறைகள் காய்ந்து கருநிறம் கொண்டிருந்தன. சில சமீபத்தில் பட்ட கறைகள். இன்னும் மெல்லிய வாடை கூட இருந்தது. காலணிகளின் மேல் அங்கங்கே கிழிந்திருந்த கறுப்பு நிற வேட்டி.

மிருகநயனியின் புலன்கள் உணர்ந்த இந்தச் செய்திகள் எவையும் அவள் நெஞ்சில் பதியவில்லை. அவள் குனிந்த தலை நிமிரவில்லை. சகுனி அவள் தலையைக் கோதியபோதுதான் அவள் திடுக்கிட்டு தன்னுணர்வு பெற்றாள். சகுனி அவளை தழுதழுத்த குரலில் அழைத்தார் -‘மகளே!’

மிருகநயனி நிமிர்ந்து சகுனியைப் பார்த்தாள். அவள் கண்கள் உலர்ந்திருந்தாலும். கண்ணீர் வழிந்த கோடுகள் தெரிந்தன. சகுனிக்கு குரல் அடைத்தது. ‘மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்களம்மா!’ என்றார். மிருகநயனி பதிலே சொல்லவில்லை. சகுனி தொடர்ந்தார் – ‘கடைசி நப்பாசையாக துரியன் திராவிட அரசன் சேரலாதனிடம் பணி புரியும் ஒரு மூலிகை மருத்துவனை அழைத்து வர சென்றிருக்கிறான்’ என்றார். ‘சூதாட்டம் நடந்த அன்றே அவரை இறைவன் கைவிட்டுவிட்டான் மாமா! இப்போது அவருக்கு தேவை இந்த வலியிலிருந்து விடுதலை. அவர் இறந்தால் போதும் மாமா!’ என்று மிருகநயனி மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

சகுனி உடைந்து அழுதார். ‘எல்லாம் என்னால்தான்! பாண்டவர் மேலிருந்த அழுக்காறால் நாங்கள் சிறுமை கொண்டோம். இவனோ எங்கள் மேல் உள்ள அன்பால் சிறுமை என்று அறிந்தும் விரும்பியே சூடிக் கொண்டான்’ என்று சொன்னபோது எழுந்த கண்ணீரை மறைக்கத் திரும்பினார். ஆதரவுக்காக கூடாரத்தின் ஒரு தூணை பிடித்துக் கொண்டார். கூடாரமே அசைந்து ஆடியது. கூடாரத்தின் துணிச்சுவரில் ஏழு நிழலுருவங்கள் அசைந்து ஆடின.

சகுனி திகைப்புடன் மிருகநயனியின் பக்கம் திரும்பினார். நிழலுருவங்கள் பக்கம் கையைக் காட்டினார். மிருகநயனி தலையை அசைத்தாள். – ‘ஆம் மாமா பாண்டவர்களும், கிருஷ்ணனும், திரௌபதியும்தான்’ என்றாள்.

கூடாரத்தின் துணிக் கதவை ஏறக்குறைய கிழித்துக் கொண்டு துரியோதனன் உள்ளே நுழைந்தான். அவர் பின்னாலேயே நான்கடி உயரமே உள்ள குள்ளமான ஒருவர் வந்தார். துரியோதனனின் நடை வேகத்துக்கு ஈடு கொடுக்க அவர் ஓட வேண்டி இருந்தது. துரியோதனன் கூடாரத்தின் உள்ளறை ஒன்றில் நுழைந்து மருத்துவரிடம் கையைக் காட்டி ஏதோதோ பேசினான். பிறகு விரைவாக வெளியே வந்தான். வாசலை நோக்கி நடந்து கொண்டே ’இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?’ என்று உரத்த குரலில் கேட்டான். வாயிலை மூடியிருந்த துணிச்சீலையை விலக்கி ‘உள்ளே வாருங்கள்!’ என்று அழைத்தான்.

பாண்டவர்கள் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். கிருஷ்ணன் தவிர்த்த அனைவரின் ஆடைகள், காலணிகள் எல்லாவற்றிலும் உலர்ந்த ரத்தக் கறைகள் இருந்தன. பீமனின் உடலெங்கும் ரத்தம் தெறித்திருந்தது. திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே திட்டுத்திட்டாக சிவப்பாக இருந்தது. ஆனால் கிருஷ்ணன் மட்டும் மாசுமறுவற்ற ஆடையோடும் நேர்த்தியான அணிகளோடும் வாடாத மாலையுடனும் மயிற்பீலியுடனும் காட்சி தந்தான்.

துரியோதனன் எந்தத் தயக்கமும் இல்லாமல் யுதிஷ்டிரனின் தாள் பணிந்தான். யுதிஷ்டிரன் தழுதழுத்த குரலில் ‘புகழோடு விளங்குவாயாக!’ என்று ஆசீர்வதித்தான். எழுந்தவன் பீமனைப் பார்த்து புன்னகைத்தான். அவனை நோக்கி கைகளை நீட்டினான். பீமன் முன்னகரவில்லை. துரியோதனனே பீமனை நெருங்கி அவனைத் தழுவிக் கொண்டான். பிறகு கொஞ்சம் விலகி பீமனை இன்னும் பெரிய புன்னகையோடு நோக்கினான். ‘அஞ்சாதே பீமா! நேற்றும் நாளையும் எதிரிகள்தான். ஆனால் இந்தக் கணம் நீ கர்ணனின் சகோதரன் என்ற உணர்வுதான் மிஞ்சி இருக்கிறது’ என்றான். பீமன் எதையோ சொல்ல முயன்றான், ஆனால் வார்த்தை எழும்பவில்லை. இரண்டு முறை தொண்டையை செருமிவிட்டு பிறகு விரைந்து முன்னகர்ந்து துரியோதனைத் தழுவிக் கொண்டான்.

Karna's_wheel_is_stuckதுரியோதனன் ‘கர்ணன்தான் மூத்த பாண்டவன் என்று தெரிந்திருந்தால் இந்தப் போரே…’ என்று ஆரம்பித்து தொடர முடியாமல் பெருமூச்சிட்டான். யுதிஷ்டிரன் ‘இத்தோடாவது நிறுத்திக் கொள்வோம் துரியா!’ என்று மெல்லிய குரலில் சொன்னான். ‘காலம் கடந்து விட்டது மூத்தவரே!’ என்றான் துரியோதனன். பிறகு திரௌபதியை நோக்கினான். திரௌபதியின் தலை தானாகக் குனிந்தது. அவளது விரிந்த கூந்தல் அவளது கன்னங்களை மறைத்தது. துரியோதனனின் முகம் விகசித்தது. ‘மேலும் அண்ணியின் முகம் முடிந்த கூந்தலோடுதான் இன்னும் பொலிவாக இருக்கும்’ என்றான். திரௌபதியில் கண்ணோரத்தில் கூட கொஞ்சம் ஈரம் தெரிந்தது.

இந்தக் காட்சியை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த மிருகநயனி செருமினாள். ‘இந்த நெகிழ்ச்சி, பாசம் எல்லாம் நாளைக்கு இருக்காது என்று இன்றிரவே முழுமூச்சாக ஈடுபடுகிறீர்கள், சரி. ஆனால் அவருக்கு ஒரு வழி சொல்லிவிட்டு இதையெல்லாம் நடத்தக் கூடாதா?’ என்று ஆங்காரத்தோடு கேட்டாள்.

ஓரிரு நிமிஷம் அசௌகரியமான மௌனம் நிலவியது. அதை துரியோதனனே கலைத்தான். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் சொன்னான் – ‘அவன் பிழைக்கமாட்டான் அண்ணி! விலா எலும்புகள் நுரையீரலைத் துளைத்திருக்கின்றன. பாதி ரத்தத்தையாவது இழந்திருக்கிறான். மருத்துவர்கள் அர்ஜுனனின் அம்பு அவனைத் தேர்க்காலில் தாக்கியபோதே அவன் இறந்திருக்க வேண்டும், இத்தனை நேரம் உயிர் பிழைத்திருப்பதே அதிசயம்தான், இன்னும் சில நிமிஷங்கள்தான் என்கிறார்கள். நாம் அனைவரும் இந்த நேரத்தில் அவன் அருகில் இருப்போம், அது ஒன்றுதான் நாம் செய்யக் கூடியது. வாருங்கள்’ என்றான்.

‘இன்னும் சில நிமிஷங்கள்தான் என்றுதான் எட்டு நாழிகையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா?’ என்று மிருகநயனி துரியோதனனைக் கேட்டாள்.

துரியோதனன் மௌனமாக நின்றான்.

‘அவர் இறக்க மாட்டார். எத்தனை காயம்பட்டாலும், எத்தனை ரத்தம் போனாலும், என்ன ஆனாலும் சரி, அவரது மனோதிடம் அவரை இறக்கவிடாது. அவருடைய வாழ்வின் பொருள் நீங்கள்தான் அண்ணா! உங்களைக் காக்க வேண்டும், உங்களுக்காக போரிட வேண்டும் என்றுதான் உயிரை இன்னும் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். முன்னூறு அம்புப் படுக்கை வலியை தாங்கிக் கொண்டும் அவர் விழைவதெல்லாம் மீண்டும் வில்லெடுத்து போரிட வேண்டும் என்றுதான். அவரது கை நரம்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன, அவரால் மீண்டும் நாணைத் தொடுக்க முடியாது என்றெல்லாம் அவர் அறியமாட்டார். உங்களை தனியே விட்டுவிட்டு அவர் இறக்கமாட்டார் அண்ணா, இறக்கமாட்டார்!’

மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

மிருகநயனியின் விசும்பல்கள் மெதுமெதுவாக குறைந்தன. சகுனி, யுதிஷ்டிரன், துரியோதனன், பீமன் என்று ஒவ்வொருவரையும் பார்த்தாள். அர்ஜுனன் மீது அவள் பார்வை கொஞ்ச நேரம் நிலைத்து நின்றது. அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது.

கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்.

கண்ணன் தன் பொன்னிற உத்தரீயத்தை மடித்து மீண்டும் தோளில் போட்டுக் கொண்டான். ‘வரும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அர்ஜுனனின் அம்புகளாலும் கர்ணனைக் கொல்ல முடியாது, அவன் செய்த தானதருமங்கள் அவன் உயிரைக் காக்கின்றன, அவையே அவனுடைய புதிய கவசம், கர்ணன் மீண்டெழுந்து வருவான், அர்ஜுனனை வெல்வான் என்று பாடிக் கொண்டிருந்தான்’ என்றான்.

மிருகநயனி ஐயோ என்று அலறினாள். ‘இது மாதிரி ஒரு பாடல் அவர் காதில் விழுந்தால் அவர் மூவாயிரம் அம்புப் படுக்கைகளின் வலி இருந்தாலும் தன் இறப்பை அனுமதிக்கமாட்டார், அவர் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை கண்ணா! அவரை எப்படியாவது கொன்றுவிடு, அவருக்கு விடுதலை கொடு!’ என்று கதறினாள்.

கண்ணன் துரியோதனனை நோக்கினான். துரியோதனன் உச்சுக் கொட்டினான். பிறகு சம்மதம் தெரிவிக்கும் வகையில் தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

கதவு போல இருந்த கறுப்பு நிறச் சீலையை விலக்கி கண்ணன் உள்ளே சென்றான். அவன் பின் துரியோதனனும் யுதிஷ்டிரனும் அர்ஜுனனும் மிருகநயனியும் சென்றனர். கர்ணன் அங்கே ஒரு மேடை மேல் வாழை இலைகளின் மீது சாய்ந்து உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவனது வலது கை முழுவதும் ஒரு கந்தக மணம் வீசிய ஒரு பூச்சினால் மூடப்பட்டிருந்தது. அவன் மார்பில் பெரிதாக கீறி இருந்தது. வெள்ளையாக எலும்புகள் தெரிந்தன. சேவகர்கள் ஈக்கள் வராமல் இருக்க விசிறிக் கொண்டிருந்தார்கள். ஒரு மருத்துவர் அங்கே ஒரு சின்ன சட்டியில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தார். அபின் புகையும் வாசம் வந்து கொண்டிருந்தது. ரத்தத்தில் ஊறிய பல வெள்ளைத் துண்டுகள் ஒரு ஓரமாக குவிக்கப்பட்டிருந்தன. உள்ளே வந்தவர்களைப் பார்த்ததும் கர்ணன் புன்னகத்தான். யுதிஷ்டிரன் விரைந்து வந்து அவன் தாள் பணிந்தான். மிகவும் சிரமத்துடன் ‘வெற்றி பெறுக’ என்று கர்ணன் வாழ்த்தினான்.

வாழ்த்திய பிறகு என்னவோ முணுமுணுத்தான். கண்ணன் அவன் வாயருகில் தன் காதை குவித்துக் கேட்டான். பிறகு நிமிர்ந்தான். மாறாத புன்னகையுடன் சொன்னான் – “‘மீண்டும்; போர்; அர்ஜுனன்’ என்கிறான்”

மிருகநயனியின் முகம் கோணியது. அவள் சீலையை விலக்கிக் கொண்டு வெளியேறினாள். அர்ஜுனன் எவ்வளவு முயன்றாலும் முகத்தில் கவலையின் சாயல் தோன்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை. துரியோதனன் எவ்வளவுதான் முயன்றாலும் பெருமிதத்தால் அவன் முகம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. கண்ணன் எல்லோரையும் பார்த்தான். ‘நீங்கள் எல்லோரும் கொஞ்சம் வெளியே நில்லுங்கள்’ என்று சொன்னான். அவனை மறுக்க வாயெடுத்த மருத்துவரும் அவன் கண்ணைப் பார்த்ததும் அடங்கினார். ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.

கண்ணன் கர்ணன் அருகே அமர்ந்தான். ‘துரியோதனனே உனது ஜீவன், இல்லையா கர்ணா?’ என்று கேட்டான். கர்ணன் சிரித்தான் – ‘இதை நான் சொல்லவும் வேண்டுமா?’ என்று மிகவும் பலவீனமான குரலில் கேட்டான். ‘அப்படி என்றால் அவனுக்கு ஏன் துரோகம் செய்தாய் கர்ணா? என்று கண்ணன் கேட்டான். கர்ணனின் புருவம் நெளிந்தது. ‘என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘துரியோதனனின் வெற்றியே உனக்கு முக்கியம் என்றால் எப்படி அர்ஜுனன் தவிர்த்த துரியோதனனின் எதிரிகளைக் கொல்லமாட்டேன் என்று நீ குந்திக்கு வாக்கு கொடுக்கலாம்? சரி அர்ஜுனனைக் கொல்லும் வாய்ப்புகளையும் ஏன் தவிர்த்தாய்? என்ன அவமானம் நேர்ந்தாலும் நீ பிதாமகரின் கீழ் நின்று போர் புரிந்திருக்க வேண்டுமே கர்ணா? முதல் நாளிலேயே நீ அர்ஜுனனைத் தேடிச் சென்று போர் புரிந்து உன் சக்தி ஆயுதத்தால் அவனைக் கொன்றிருந்தால் இந்தப் போர் நான்கு நாட்கள் கூட நடந்திருக்காதே? இத்தனை நேரம் துரியோதனன் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக முடி சூடி இருக்கலாமே! சரி பத்து நாட்கள் கழித்து போரில் கலந்து கொண்டாய். அர்ஜுனனை போரில் சந்திக்க நீ ஏன் முயலவே இல்லை? நான் உன்னைத் தவிர்த்திருப்பேன், ஆனால் சம்சப்தகனாக நீ நின்றிருந்தால் உன்னை யாராலும் தவிக்க இயலாதே? ஜயத்ரதனைக் காத்து நின்றபோது துரியோதனன் கூட அர்ஜுனனைத் தேடி வந்து போர் புரிந்தான். நீ என்ன செய்து கொண்டிருந்தாய் கர்ணா? சக்தி ஆயுதம் இல்லாமல் போகும் வரை நீ ஏன் அர்ஜுனனைத் தவிர்த்தாய்?இதில் மீண்டு வந்து அர்ஜுனனோடு போர் புரிவேன் என்று வீண் வஞ்சினம் வேறு. துரியோதனனுக்கு நீ விசுவாசமாக இல்லை கர்ணா! ஏன் இப்போது கூட யுதிஷ்டிரன் வெற்றி பெற வேண்டும் என்றுதான் வாழ்த்தினாய். நீ துரியோதனன் வெல்ல வெண்டும் என்று விரும்பவில்லை உன் தம்பிகள் வெல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறாய். துரியோதனனுக்காக உன் உயிரைக் கொடுத்து தியாகசீலன், நட்புக்கு உதாரணம் என்று புகழ் பெற விரும்புகிறாய், அவ்வளவுதான்!’

கர்ணனின் உதடுகள் துடித்தன. மூச்சு வேகவேகமாக வந்தது. சில நொடிகளில் அடங்கியும் போனது.

தூணில் மாட்டி இருந்த வெண்கலக் கேடயம் ஒன்றில் கண்ணன் தன் உருவத்தை நோக்கினான். அவன் உதடு சுழித்தது. வெறுப்போடு அந்தக் கேடயத்தை கீழே போட்டு மிதித்தான். சீலையை விலக்கிக் கொண்டு வெளியேறினான். அது மூடுவதற்குள் மிருகநயனி வேகமாக உள்ளே புகுந்தாள். அவள் அலறலைக் கேட்டு அனைவரும் உள்ளே விரைந்தனர். கண்ணன் மட்டும் தன் கால்களை தரையில் உதைத்துக் கொண்டே கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான். ‘செய்த புண்ணியங்கள் கர்ணனைக் காத்து நின்றன. வஞ்சகன் கண்ணன் அந்தப் புண்ணியங்களை தானமாகக் கேட்டு வாங்கிக் கொண்டான், அதனால்தான் கர்ணன் இறந்தான்!’ என்று பாடலைக் கேட்டதும் கண்ணனின் வழக்கமான புன்னகை திரும்பியது. கழுத்தில் இருந்த மணியாரத்தை கழற்றி சூதனின் கையில் கொடுத்துவிட்டு கூடாரத்தை நோக்கி நடந்தான்.

12 Replies to “வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]”

  1. படித்ததும் நெஞ்சம் கனக்கிறது

    விதியின் ஆழத்தை யாராலுமே அறிய முடியவில்லை

    விதியை மதியால் மட்டுமல்ல இறைவனால் கூட மாற்ற முடியாது என்பது புரிகிறது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  2. Excellent thought process in the form of a short story. Made very good reading. Thanks

  3. Karna born from Surya, so he came only to help the mission of Sri krishna. He used as an instrument for launch the “DHARMA”.

  4. மனம் வேதனையில் ஆழ்ந்தது. கண்ணன் வஞ்சகன் தான்! ஆனால் இந்த நிகழ்வு வியாச பாரதத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். நேற்றுத் தான் முகநூலில் திரு தேவ் அவர்கள் எழுதியதையும் படித்தேன். என்றாலும் இப்படியும் நடந்திருக்கலாம் என்னும் நினைப்பே வேதனை தருகிறது. நல்ல எழுத்தாற்றல்! மனதைத் தொட்டது!

  5. பாராட்டுக்களுக்கு நன்றி!

    தமிழ்த்தேனீ, இந்தக் கதை என் கற்பனை மட்டுமே.

    கீதா சாம்பசிவம், வியாச பாரதத்தில் என்ன, எனக்குத் தெரிந்த வரையில் எந்த பாரதத்திலும் இப்படி எதுவுமில்லை. இது கதை, முழுக்க முழுக்க என் கற்பனை மட்டுமே. கண்ணன் வஞ்சகனாக சித்தரிக்கப்படுகின்றான் என்று நினைத்து வேதனைப்படுகிறீர்களோ என்று தெரியவில்லை. கண்ணன் மதியூகி, ஆனால் வஞ்சகனாக புரிந்து கொள்ளப்படுகிறான் என்று சித்தரிக்க நினைத்திருந்தேன், அது இப்படி வந்திருக்கிறது போலிருக்கிறது. என்ன செய்வது, நம்ம திறமை அவ்வளவுதான். 🙂

  6. கொய்யா RV அவர்களே,

    இதுவே அரபு நாடாயிருந்தால் உம்முடைய இந்த புனிதநூல்-மறுப்பு-கட்டுரைக்கு பரிசாக ,புலியாக இருக்கும் உம்மை, கொட்டை நீக்கி புளியாக்கி இருப்பர்.

    /*
    தமிழ்த்தேனீ on July 6, 2016 at 11:26 am
    விதியை மதியால் மட்டுமல்ல இறைவனால் கூட மாற்ற முடியாது என்பது புரிகிறது
    */
    விதி ==நான்முகன்
    மதி ==சந்திரன்
    இறைவன் ==திருமால்
    சனாதன தர்மத்தில் ஒவ்வொருவருக்கும் 16 சடங்குகள்/ சம்ஸ்காரங்கள் உள்ளன . (நாமகரணம்,அன்னப்ராசனம்,சௌளம்,உபநயனம் …இத்யாதி ) . இவற்றுள் சங்கல்பம் எடுத்துக்கொள்வர் .(Atleast ஆவணியவிட்டம் அன்றாவது கேட்டிருக்கின்றீரா !!)
    அத்ய பிராம்மண: ;த்விதீய பரார்த்தே ;ஸ்வேதவராஹ கல்பே ,வைவஸ்வத மன்வந்தரே ,கலியுகே ,………. அஶ்விநீ நக்ஷத்ரே,….பஞ்சமி திதௌ என்னுமிப்படி .(வரிசை க்ரமத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்)
    இவற்றுள்
    அத்ய பிராம்மண: == இப்பொழுதுள்ள நான்முகனுக்கு
    த்விதீய பரார்த்தே== இரண்டாம் பரார்த்தம்(50 வயதுக்கு மேல். அதாவது ஒரு பரார்த்தம் என்பது ப்ரம்மாவின் கணக்கில் 50 வருடங்கள் ). எனவே 50 வருடங்கள் கழிந்து Now he is running his 51th year (old man).
    மனிதனின் 1 வருடம் (தக்ஷிணாயணம் 6 மாதம் – தேவமாணத்தில் இரவு + உத்தராயணம் 6 மாதம் – தேவமாணத்தில் பகல் ) = தேவர்கணக்கில் ஒரு நாள் .
    தேவர்கணக்கில் 1200 ஆண்டுகள் =1 கலியுகம் ;தேவர்கணக்கில் 2400 ஆண்டுகள் =1 துவாபரயுகம் ;
    தேவர்கணக்கில் 3600 ஆண்டுகள் =1 த்ரேதாயுகம்;தேவர்கணக்கில் 4800 ஆண்டுகள் =1 க்ருதயுகம்
    ஆக தேவர்கணக்கில் 12000 [ 1200(1+2+3+4)] ஆண்டுகள் =1 சதுர்யுகம்
    1000 சதுர்யுகம் -ஒரு கல்பம் =நான்முகனாருக்கு ஒரு பகல் .
    இதே கால வகையில் ஒரு நைமித்திக பிரளயம்(ஊழி) =நான்முகனாருக்கு ஒரு இரவு . (அப்பொழுது ஸ்ருஷ்டி நடக்காது)
    2000 சதுர்யுக கால அளவு (1 கல்பம் + 1 ஊழி ) = நான்முகனாருக்கு ஒரு நாள் .
    நான்முகனாரின் ஒரு பகலில் 14 சந்திரனின் ஆயுள் நடந்து முடிகின்றது . (ஏன் ! இந்திரன் மற்றும் எல்லா தேவர்களும் சேர்ந்து தான். )
    இரு பரார்த்தங்கள் முடிந்து நான்முகனாரின் 100 வயதில் அவர் மரணிக்கின்றார்.
    அதன் பின்னர் ஒரு பிராகிருத பிரளயம் .
    அதன் பின்னர் மீண்டும் ஒரு புது நான்முகனாரை திருமால் தனது கொப்பூழில் ஸ்ருஷ்டிக்கின்றார் .(கிடந்த நம்பி கோவில்களில் சேவிக்கலாம்).

    யாருக்கு ம்ருத்யு உபஸேசநமோ (உபநிஷத் ). ம்ருத்யு =சிவனார் ,உபஸேசநம் =ஊறுகாய் .
    அதாவது ,நாம் ஊறுகாய் தொட்டுக்கொண்டு உணவு உண்கின்றோம் .உண்டபின் எழுவதற்கு முன் அந்த ஊறுகாயையும் தூக்கி வாயில் இடுகின்றோம் .
    அதேபோல திருமால், சிவனை வைத்து அண்ட சராசரங்கள் முழுதும் உண்ணுகின்றார் .கடைசியில் சிவனாரையும் விழுங்குகின்றார்.

    ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் . ஏகம் ஏவ அத்விதீயம் .
    .- சாந்தோக்கிய உபநிஷத் -அத்யாயம் -2-கண்டம்-2 .
    ஸ்ருஷ்டிக்கு முன்பு ஸத் என்ற முழுமுதற் கடவுள் மட்டுமே இருந்தான் .

    ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் . ந ப்ரம்ஹா ,ந ஈஶாந: – மஹோபநிஷத்
    ஸ்ருஷ்டிக்கு முன்பு நாராயணன் ஒருவனே இருந்தான் .நான்முகனுமில்லை ,சிவனாருமில்லை .

    அஜாயமாநோ பஹுதா விஜாயதே – தைத்தீரிய உபநிஷத்
    திருமால் பிறப்பே இல்லாதவனாகியும், தன் இச்சையினால் பலவாறாகப் பிறக்கின்றான்.( ராமனாக,கண்ணனாக,etc)

    அஜ: அபி ஸன் அவ்யயாத்மா பூதானாம் ஈஶ்வர: அபி ஸன் |
    ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா ||- கீதை -4-6
    நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.
    https://www.vedabase.com/ta/bg/4/6

    ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
    அன்று, நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர்படைத்தான்,
    குன்றம்போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள்,
    நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே. திருவாய்மொழி-4-10-1
    https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3912

    அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: – தைத்தீரிய உபநிஷத்- நாராயண அநுவாகம்
    எல்லா த்ரவ்யங்களுக்கும் அந்தர்யாமியாக உள்ளும் , ப்ரபஞ்சமாக வெளியேயும் வியாபித்து இருப்பவன் நாராயணன் .

    ஸர்வம் கலு இதம் ப்ரம்ம தத் ஜலானி சாந்த உபாஸீத – சாந்தோக்கிய உபநிஷத்- சாண்டில்ய வித்யை
    இங்கு காணப்படுகின்ற இவையெல்லாமும் பிரம்மமே அன்றோ .
    எவனிலிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றுகிறதோ ,எவனால் தாங்கப்படுகின்றதோ ,எவனுள்ளேயே திரும்பவும் லயமடைகின்றதோ அவனே ப்ரம்மம்- திருமால்

    ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ; ப்ருதிவ்யா அந்தரோ; யம் ப்ருதிவீ ந வேத ;
    யஸ்ய ப்ருதிவீ ஶரீரம் ;ய: ப்ருதிவ்யாம் அந்தரோயமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யா மி அம்ருத: -ப்ருஹதாரண்யக உபநிஷத் – 3 ம் அத்யாயம் -7 ம் ப்ராம்மணம்
    1)யார் நிலத்துடன் இருக்கின்றானோ ,2)யார் நிலத்துக்கு உள்ளேயே உறைபவனோ ,3)அப்படி தன்னுள் உறையும் யாரை அந்நிலம் அறியாதோ ,4)யாருக்கு நிலம் சரீரமோ ;( யார் கிளம்பிச் சென்றால் அந்நிலம் தன்னிலையில் அழிந்துபோகுமோ- ஆத்மா கிளம்பிச் சென்றால் உடல் அழிந்து போவது போலே) ;5)யார் அந்த நிலத்தை தன் இச்சைக்கேற்ப நியமிக்கின்றானோ ,
    அந்த பரமான-ஆத்மா அந்தர்யாமி மற்றும் அழிவற்றவன்.

    இது நிலம் .இப்படி நீர் ,காற்று ,நெருப்பு, ஆகாயம்,சுவர்க்கம் ,சூரியன் ,வாயு,திக்குகள் ,சந்திரன் ,தமஸ்,பிராணன் ,வாக்கு ,ஸ்ரோத்ரம் ,சக்ஷுஸ் ,மனஸ் ,த்வக் ,விக்ஞாநம்,ரேதஸ், எல்லா உயிர்கள் என்று மொத்தம் 19 தத்வங்களுக்கு அந்தர்யாமியான பகவானைப் பற்றி உத்தாலக ஆருணிக்கு யாக்ஞவல்க்யர் பாடஞ்சொல்லுகின்றார் . பிறகு

    ய: ஆத்மநி திஷ்டந் ;ஆத்மநே அந்தரோ; யம் ஆத்மா ந வேத ;
    யஸ்ய ஆத்மா ஶரீரம் ;ய: ஆத்மநி அந்தரோயமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யா மி அம்ருத:
    யார் ஜீவாத்மாவுடன் இருக்கின்றானோ ,யார் ஜீவாத்மாவுக்கு உள்ளேயே உறைபவனோ ,
    அப்படி தன்னுள் உறையும் யாரை அந்த ஜீவாத்மா அறிய மாட்டானோ, யாருக்கு ஜீவாத்மா சரீரமோ ;( யார் கிளம்பிச் சென்றால் ஜீவாத்மா தன்னிலையில் அழிந்துபோகுமோ ) ;யார் அந்த ஜீவாத்மாவை தன் இச்சைக்கேற்ப நியமிக்கின்றானோ ,
    அந்த பரமான-ஆத்மா அந்தர்யாமி மற்றும் அழிவற்றவன் , என்று முடிக்கின்றார்.
    இதற்கு அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்று பெயர்.
    ஆதிசங்கரருக்கு வேதாந்தத்தில் சங்கு ஊதிய பல இடங்களில் இது மிகவும் தலையாயது . “ஜீவாத்மா பரமாத்மா ஒன்றே” – செம பல்பு வாங்கிய இடம் … ஊஊஊஊ
    அத்வைதம் என்னும் சொல் சரியானதுதான் .
    ஆனால் அதனை மாயாவாதம் என்று மயங்கியவர்கள் -சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் போன்றோர் .

    நம்நாட்டில் உருவ வழிபாட்டினை குழி தோண்டிப்புதைத்த புண்ணியவான்கள் இவர்கள்.
    சாயிபாபா ,பிரேமானந்தா ,நித்தியானந்தா இன்னும் எவ்வளவு கேடிகள் உளரோ ,அத்துணை பேரையும் முழுமுதற்கடவுளராக நம்மை ஒத்துக்கொள்ள வைத்த சான்றோர் இவரே .”நான் கடவுள்” என்று “ரஜினிகாந் த் முதல் ஸௌந்தரா கைலாசம் வரை நம்புவதும் இதனாலே .

    எவனாவது காஷாயம் வஸ்திரம் அணிந்தாலே ,அவன் சாமிதான் .

    நம்நாட்டில் ஜாதி பூசல் வளரக் காரணம் குமாரில பட்டர் என்னும் மற்றோர் ப்ருஹஸ்பதி .

    இத்துணை பெரியவனான பரப்ரும்மம் எங்கே. விதி எங்கே ?(நான்முகன்).
    மதி எங்கே ?(சந்திரன்).

    கர்ணனும் ,துரியோதனனும் ,ராவணனும் ,ஹிரண்யகசிபுவும் இவனுக்கு ஒரு பொருட்டா ?

    பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய
    வித்தகன், மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் ,
    மத்துறு கடை வெண்ணெய் களவினில் உறவிடை ஆப்புண்டு,
    எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே திருவாய்மொழி -1-3-1

    கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
    கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
    கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
    கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
    கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
    கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,
    கடல்ஞாலத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
    கடல்ஞாலத் தென்மகள் கற்கின்றனவே?- திருவாய்மொழி-5-6-1
    https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3979

    /**CN.Muthukumaraswamy on August 10, 2011 at 5:52 am

    //செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான். எச்சைவனும் இவ்வாறு கூறான்.//
    **/
    ஒருமுறை பீர்பாலும் பேரரசர் அக்பரும் சேர்ந்து உணவு அருந்தினார்கள். விருந்திற்குப் பிறகு பீர்பாலுக்குத் தாம்பூலம் உண்ணும் பழக்கம் உண்டு. சக்கரவர்த்தியாருக்கு அப்பழக்கமில்லை. பீர்பால் நம்மைப்போலொரு ஸனாதன தர்மி. ஆனால் சக்கரவர்த்தியாரோ நம் சகோதர சமயமாகிய இஸ்லாம் சமயம் சார்ந்தவர். எனவே பேரரசர் ,பீர்பால் தாம்பூலம் உண்ணும்போதில் -” ஓ பீர்பால் – இந்த வெற்றிலை பாக்கினை கழுதைகள் கூட சாப்பிடுவதில்லையாமே என்றார்” – நையாண்டியுடன்.
    உடனே பீர்பால் -” இதனை மனிதர்கள் சாப்பிடுவதுண்டு. ஆனால் கழுதைகள்தான் சாப்பிடாது” என்றார்.

    எனவே முழுமுதற்கடவுள் என்பவன் தனது லீலை மடியாக(விளையாட்டாக) செத்துப் பிறப்பவனே அன்றி பிறவாது இருப்பவனாகக் கூறப்படுபவன் முழுமுதற்கடவுள் அல்லன். இதுவே ஸனாதன தர்மம் என்று நிறுவ விழைகிறேன்.
    ஆம், எங்கள் ராமன் கோஸலையின் கருவில் பத்து மாதங்களல்ல, 12 மாதங்கள் தங்கிப் பின் இவ்வுலகில் பிறந்தான்.
    ததோ யக்ஞே ஸமாப்தே து ருதூநாம் ஷட் ஸமத்யயு: |
    தத: ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ || பாலகாண்டம் – ஸர்கம்-12 -ஸ்லோகம்- 8
    https://www.valmikiramayan.net/utf8/baala/sarga18/bala_18_frame.htm
    ப்ரோத்யமானே ஜகந்நாதம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
    கௌஸல்யா அஜனயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம்யுதம்
    விஷ்ணோ: அர்தம் மஹாபாகம் புத்ரம் ஐக்ஷ்வாகு நந்தனம் 1-12-10

    புத்ரகாமேஷ்டி யாகத்தின் பிறகு ஆறு ருதுக்கள்(பருவம்) கழிந்து ,12 மாதங்களுக்குப் பிறகு, சித்திரை மாதம் வளர்பிறை நவமியன்று எல்லாவுலகங்களுக்கும் நாதனுமான விஷ்ணு ,மனிதனாக அவதரிக்க வரித்துத் தன் பாதி அம்ஸத்தால் கௌஸல்யையின் மகனாக அவதரித்தான்.

    சாதுசனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு
    ஆதியஞ் சோதியுருவை அங்குவைத்து இங்குப் பிறந்த
    வேத முதல்வனைப்பாடி வீதிகள்தோறும் துள்ளாதார்
    ஓதியுணர்ந்தவர் முன்னா என்சவிப்பார் மனிசரே – திருவாய்மொழி 3-5-5
    https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3752

    கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
    புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே
    நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
    நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே – திருவாய்மொழி 7-5-1
    https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4194
    அவதாரம் முடிந்து ராமன், தன்னுடைச்சோதியான வைகுந்தலோகமாம் முக்த உலகிற்கு எழுந்தருளும்போது தன்னோடுடனே அயோத்தியில் வாழும் புல், எறும்பு முதல் அனைவரையும் அழைத்துச் சென்றான் ,முக்தி நல்கினான் என்று உத்தரகாண்டத்திலே காணப் பெறுகிறோம். (அனுமன், அங்கதன் ,விபீஷணன் ,மைந்தன், த்விவிதன் ,ஜாம்பவான் ,தவிர அனைத்து ஜீவராசிகளையும் அழைத்துச் சென்றான்.)

    மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மாபெரும்போர்
    பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப் போய்
    விண்மிசைத் தனதாமமே புகை மேவியசோதி தன் தாள்
    நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு ஆர்பிறர் நாயகரே – திருவாய்மொழி -6-4-10
    https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4079
    பூமியின்மேலிருந்த பெருஞ்சுமை தொலையும் படியாக மஹாபாரத யுத்தத்தை யுண்டாக்கி ஆச்சரியச் செயல்களைச் செய்து எல்லாச்சேனையும் பாழ்படும்படி ஸங்கல்பித்து முடித்து இவ்விடம் விட்டுப் புறப்பட்டு பரமாகரசத்திலே(வைகுந்தலோகம்) தன்னுடைய ஸ்தான விசேஷத்திலே சென்று பொருந்தின, பரஞ்சோதிப்பெருமானுடைய திருவடிகளை நான் கிட்டி வணங்கப் பெற்றேன், எனக்கு வேறு நியாமகர் ஆர் (ஆருமில்லை).
    தனியொருவனாக மோக்ஷலோகமாம் வைகுந்தலோகம் சென்றான்.

    ஏஷ: நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
    நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் ||
    திருப்பாற்கடலில் அரவிற்பள்ளி துயின்றவனாயிருந்தவனே அப் பள்ளியைவிட்டு மதுரையிலே திருவவதாரஞ் செய்தருளின கண்ணபிரான் ஆனான்.

    இதற்கு மேலும் எவரேனும் ராம ,க்ருஷ்ணர்களை பற்றி இழிவாகப் பேசினால் ,ஜாக்கிரதை .

    எவரேனும் மனம் புண்பட்டால் வருந்துகின்றேன் ,
    பொடியேன்
    கெணேசு

  7. கெணேசு,

    உங்கள் நீளமான பதிலுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு? எதற்காக என் கதைக்கான பின்னூட்டப் பகுதியில் வந்து உளறுகிறீர்கள்?

    உங்கள் பதிலில் இரண்டு வாக்கியங்களுக்குத்தான் கொஞ்சமாவது கதையோடு சம்பந்தமிருக்கிறது. முதல் வாக்கியம் // இதுவே அரபு நாடாயிருந்தால் உம்முடைய இந்த புனிதநூல்-மறுப்பு-கட்டுரைக்கு பரிசாக ,புலியாக இருக்கும் உம்மை, கொட்டை நீக்கி புளியாக்கி இருப்பர். // இது கட்டுரையா? ஏதாவது போதையில் இந்தப் பின்னூட்டத்தை எழுதினீர்களா? இந்தக் கதை – கவனிக்கவும் கதை, கட்டுரை அல்ல – எந்தப் புனித நூலை எப்படி மறுதலிக்கிறது?

    // இதற்கு மேலும் எவரேனும் ராம ,க்ருஷ்ணர்களை பற்றி இழிவாகப் பேசினால் ,ஜாக்கிரதை . // உங்களால் என்ன கிழிக்க முடியுமா கிழித்துக் கொள்ளலாம். என் விலாசம் வேண்டுமானால் தருகிறேன்.

    தமிழ் ஹிந்து பொறுப்பாளர்களுக்கு: இந்த மாதிரி மிரட்டல்களை எல்லாம் தமிழ் ஹிந்து தளம் அனுமதிக்கிறதா? எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை, ஆனால் தளம் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் இருந்தால் சரி.

  8. உடன்பிறப்பு, RV ஐயா அவர்களுக்கு ,
    முதலில் ஒரு எழுத்தாளனுக்குப் பொறுமை வேண்டும் .சாந்தமாகப் படியும் .
    /** Q1.) உங்கள் நீளமான பதிலுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு? **/
    A1.)மன்னிக்கவும் ,நீர் எழுதியது கதை அல்ல ,ஒரு புனைவு! திருத்திக் கொள்ளும் .

    /**Q2.) இந்தக் கதை – கவனிக்கவும் கதை, கட்டுரை அல்ல – எந்தப் புனித நூலை எப்படி மறுதலிக்கிறது?**/
    A2.) மஹாபாரதம் ஐந்தாம் வேதம்(பாரதம் பஞ்சமோ வேத:) எனப் போற்றப்படுகின்றது . கீதா ப்ரெஸ் கோரக்பூர் ,என்ற நிறுவனத்தினர் மஹாபாரதம் -1,25,000 வடமொழி ஸ்லோகங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். விலை ரூபாய் .1975/=.
    நீர் எழுதியது கதை என்றால் ,கர்ணபர்வத்தில் எந்த அத்தியாயத்தில் இப்படி நடந்தது என்று அறிந்து கூறவும் .
    மேலும் , நீர் எழுதிய இந்தப் புனைவு ,முழுமுதற்கடவுள் கண்ணனை இழிவுபடுத்துகின்றது.
    சிறிது பொறையுடன் அடியேன் மறுப்பினை வாசித்தால் உங்களுக்கு அது புரியலாம் .
    “SATANIC VERSES” என்ற புனைவினை எழுதிய சல்மான் ருஷ்டி தலைக்கு ஈரானின் கொமேனியரசர் பல கோடி டாலர்கள் பத்வா விதித்தது தெரியாதா?
    https://en.wikipedia.org/wiki/The_Satanic_Verses_controversy
    /**Q3.உங்கள் நீளமான பதிலுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு? எதற்காக என் கதைக்கான பின்னூட்டப் பகுதியில் வந்து உளறுகிறீர்கள்?**/
    அடியேன் எழுதிய பின்னுட்டத்தில் பல ஆதாரங்கள் கொடுத்து உள்ளேன் . (www.valmikiramayan.net , http://www.dravidaveda.org ) நீர் எழுதியது உளறலா அல்லது அடியேன் சுட்டிக்காட்டுவது உளறல்களா என நடுநிலையாளர்கள் ஆராயட்டும்.
    உங்களுடன் அடியேனுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையா.(வாய்க்கால் தகராறு .)
    ஒரு பொதுவான வலைத்தளத்தில் இப்படியா எழுதுவது .
    உமக்கு வைட்ணவ சமயத்தின் மீது காய்ச்சல் இருப்பின் http://www.vinavu.com சென்று உமது கதை(புனைவினை) எழுதலாம்.

    /**Q4. தமிழ் ஹிந்து பொறுப்பாளர்களுக்கு: இந்த மாதிரி மிரட்டல்களை எல்லாம் தமிழ் ஹிந்து தளம் அனுமதிக்கிறதா? எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை, ஆனால் தளம் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் இருந்தால் சரி.**/
    A4. தமிழ் ஹிந்து பொறுப்பாளர்களுக்கு: இங்கு பல எழுத்தாளர்கள் வைட்ணவ சமய மறுப்புக் கட்டுரைகள் ,புனைவுகள் ஆதாரமின்றி ,பொறுப்புமின்றி , மிகவும் இழிவாக எழுதுகின்றனர் .இதுதான் நீங்கள் காட்டும் சமயப்பொறையோ? நடுநிலை என்பதும் இதுதானோ ?மெத்த மகிழ்ச்சி .
    /**Q5. உங்களால் என்ன கிழிக்க முடியுமா கிழித்துக் கொள்ளலாம். என் விலாசம் வேண்டுமானால் தருகிறேன்.**/
    A5. அன்பரே உம்மைத் திருத்துவது அடியேனின் பணியுமல்ல.
    அடியேனது பின்னுட்டம் ,இங்கே வாசிக்கும் நடுநிலையாளர்களின் பார்வைக்குமாம் .
    நீர் அவ்வளவு பெரிய புலியாயிருந்தால் எம்முடைய முஸ்லிம் சகோதரர்கள்/ சமய நூல்கள் பற்றி எழுதித்தான் பாருமே. முடிந்தால் விவாதம் கூட செய்யலாம்
    விலாசம்:
    பெரு மதிப்புக்குரிய அண்ணன் ஜைனுல் ஆபிதீன் அவர்கள்,
    Tamil Nadu Thowheed Jamath party.
    30, Armenian St, Mannady, George Town, Chennai, Tamil Nadu 600001, India
    /**Q6.ஏதாவது போதையில் இந்தப் பின்னூட்டத்தை எழுதினீர்களா?**/
    மேலும் வால்மீகி ராமாயணத்தினை பாராயணம் செய்பவன் சுராபானம் குடிப்பதில்லை .
    அது பஞ்சாக மஹா பாதகங்களுள் ஒன்றாம்.
    நிஷித்தகர்மம் / பஞ்ச மஹாபாதகங்கள் என்பவை -1.)கொலை ,2.)களவு ,3.)பிறன் மனை விழைதல் ,4.)மது பானம் மற்றும் 5.)இவ்வாததாயினரோடு கூட்டு .

    அன்புடன் ,
    உம் சகோதரன் (அ) நலம்விரும்பி

  9. கெணேசு, // நீர் எழுதியது கதை அல்ல ,ஒரு புனைவு! // கதைக்கும் புனைவுக்கும் நடுவே வித்தியாசம் கண்டுபிடிக்கும் உமது தமிழறிவைக் கண்டு வியக்கிறேன். ஆமாம் இதை கட்டுரை என்று குறிப்பிடும்போது இந்தத் தமிழறிவு எங்கே போனது கேனேசு?

    // கர்ணபர்வத்தில் எந்த அத்தியாயத்தில் இப்படி நடந்தது என்று அறிந்து கூறவும் // கர்ணபர்வத்தை அப்படியே திருப்பி எழுதினால் அது கதையாகாது இல்லை இல்லை புனைவாகாது. கதை என்றால் என்ன, புனைவு என்றால் என்ன, கட்டுரை என்றால் என்ன என்பது கூடத் தெரியாத தமிழறிஞருடன் என்னத்தை விவாதிப்பது? என் நேரம் எனக்கு முக்கியம், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

  10. கட்டுரைக்கு சம்பந்தமில்லை. ஆனாலும் இது மறுதலிக்கப்பட வேண்டியது —

    // ஆனால் அதனை மாயாவாதம் என்று மயங்கியவர்கள் -சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் போன்றோர் .

    நம்நாட்டில் உருவ வழிபாட்டினை குழி தோண்டிப்புதைத்த புண்ணியவான்கள் இவர்கள்.

    சாயிபாபா ,பிரேமானந்தா ,நித்தியானந்தா இன்னும் எவ்வளவு கேடிகள் உளரோ ,அத்துணை பேரையும் முழுமுதற்கடவுளராக நம்மை ஒத்துக்கொள்ள வைத்த சான்றோர் இவரே .”நான் கடவுள்” என்று “ரஜினிகாந் த் முதல் ஸௌந்தரா கைலாசம் வரை நம்புவதும் இதனாலே . //

    மஹநீயரே,

    அழகாகப் பல பிரமானங்களைக் காட்டி பின்னும் இப்படியா?

    சங்கரர் உருவ வழிபாட்டினை குழிதோண்டிப் புதைத்தாரா? போலி சாமியார்களின் நடமாட்டத்திற்கு சங்கரர் காரணமா?

    என்ன வேடிக்கை!

    சங்கரர் மாயாவாதியே. மறுக்கவில்லை. ஆனால் சங்கரர் பாஷ்யம் முழுதும்… இல்லை இல்லை, குறைந்தது பாஞ்சராத்ர அதிகாரணத்தில் என்ன கூறுகிறார், படித்தீர்களா?

    தேசிகர் தாத்பரிய சந்திரிகை சரம ஸ்லோக வியாக்கியான இறுதியில் சங்கரரைப் பற்றிச் சொன்னதையாவது படித்திருக்கிறீர்களா?

    அல்லது PBA சுவாமி நூல்களையோ, சுதர்சனர் எழுதிய “சங்கரரும் வைணவமும்” படித்திருக்கிறீர்களா ?

    நாமும் விசிஷ்டாத்வைதி தான். நம்மாழ்வார், நாதமுனிகள், இராமானுஜர், மாமுனிகள், தேசிகர் நமக்கு பரம ஆச்சாரியர்கள். இருப்பினும் மும்மத ஆச்சாரியார்களைப் பற்றிய — ஏன், எந்த ஒரு ஆஸ்திக தர்சனங்கள் பற்றிய — தவறான பிரச்சாரம் குற்றமே.

  11. அடியேன் ராமானுஜ தாசன் ,
    உ.வே .கந்தர்வன் .ச்வாமி திருவடியில் தண்டன் சமர்பிக்கின்றனன் .

    இவ்விருள்தருமா ஞாலத்தே ,”முன்னம் நோற்ற விதிகொலோ ,முகில்வண்ணன் மாயங்கொலோ ” அடியேன் , “நீறு செவ்வேயிடக் காணில், நெடுமால் அடியாரென்று ,அவர்பின்னால் ஓடும் தவமுடையேனானேன் “.

    அடியேனை தேவரீர் “மஹநீயர் ” என்றழைக்க வேண்டா . அடியேன் சிறிய ஞானத்தன், நீசனேன் நிறையொன்றுமிலேன்.
    “மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் நம் கூரத்தாழ்வான் அருள் பெற விழைபவன்” ,- அடியேன்.
    ” என்னை உச்சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்தேத்தி கைதொழவே அருள் எனக்கு , என் அம்மா ,என் கண்ணா ,இமையோர்தம் குலமுதலே ” என்றும்
    “ஆறெனக்கு நின்பாதமே சரணாகதி தந்தொழிந்தாய் ,உனக்கோர் கைம்மாறு நானொன்றிலேன் எனதாவியும் உனதே “,என்றும்
    “இசைவித்தென்னை உன்தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே ” என்றும்,
    “குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
    நலந்தான் இலாதசண்டாள சண்டாளர்க ளாகிலும்,
    வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்றுள்
    கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே. ”
    என்றும் நாளும் இறைஞ்சும் சடகோபன்-தொண்டர்-தொண்டர்-தொண்டர்-
    தமரடிப்பொடி சூடும் நாய் என்று அழைக்கலாம்.

    கீர்த்திமூர்த்திகளாம் காஞ்சிபுரம் PBA ஸ்வாமி மற்றும் புத்தூர் சுதர்சனர் சுவாமி அருளிச்செய்த சில சுவடிகளை சேவிக்கும் பாக்கியம் பெற்றேன் . PBA ஸ்வாமியின் சுயசரிதம் சேவித்தபின்னரே அடியேனுக்கும் நன்நூல் ,நிகண்டு கற்கும் ஆர்வமே ஏற்பட்டது .
    PBA ஸ்வாமி எழுதிய முந்நாள் vs முன்னாள் என்னும் கட்டுரையை வாசித்தேன் .பின்னரே நன்நூல் ,தொல்காப்பியம், திவாகர நிகண்டு போன்ற க்ரந்தங்கள் வாங்கினேன் (மனப்பாடம் செய்ய கொடுப்பினை இல்லை ) .

    அவற்றை மேலோட்டமாக வாசித்தேன் . நமது உடன்பிறப்புக்கள் -DOCTOR என்பதற்கு முனைவர் என்ற சொல்லினை அங்கிருந்தே களவு செய்தனர் என்று கண்டேன் . “முனைவர்” பெயரில் – பின்னுட்டங்களில் இங்கு பல அலப்பறைகளும் செய்கின்றேன் .

    சுவாமியின் சுவடிகள் கொடுத்த அறிவுதான் தேவரீர் – போயும் போயும் அல்பனான அடியேனை “மஹநீயர் ” என்று விளிக்க ஹேதுவாம் .

    அடியேன் “வைட்ணவன்” என்று கூறும் துணிவுடையேனும் அல்லேன் . ஏனெனில் இவ்விருள்தருமா ஞாலத்தே ,அடியேன் செய்யும் குற்றங்களால் எங்கே -ஆரப்பொழில் தென்குருகைப்பிரானையும் ,சீலங்கொள் நாதமுனிகளையும் ,யதிகட்கிறைவன் யமுனைத்துறைவரையும், மாறனருள் பெற்றுய்ந்த உடையவரையும் ,பொய்யிலாத மணவாள மாமுனிகளையும் தொழும் அச்சொல்லுக்கு ஒரு கொத்தை வருமோ என்றஞ்சுபவனுமாம் .

    மதிப்பிற்குரிய RV அவர்கள் தமது 9 ம் பின்னுட்டத்தில்
    விதண்டம் தொடங்கினார்.
    ” தான் சொல்வதே சரி என்று முதலிலேயே தீர்மானம் பண்ணிக்கொண்டு அதற்காகவே கட்சி கட்டிக் கொண்டு பேசுவதற்கு “ஜல்பம்” என்று பெயர்;
    ஆனாலும் மற்றவர் எந்தக் கட்சியைச் சொன்னாலும் அதை ஆக்ஷேபித்து சண்டை போடுவது, அதற்கு ‘விதண்டை’ என்று பெயர். ‘விதண்டாவாதம்’ என்று இதிலிருந்துதான் வந்தது. ”
    1) https://www.kamakoti.org/tamil/Kural114.htm
    தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) – பக்கம் 74.
    2) https://www.youtube.com/watch?v=h-mKsC-FYJc&index=110&list=PLog-e7pBcwcmujBd-ysoRWvaMvNyyDSQJ
    at 8:20 minutes, there is a discussion on விதண்டம் and ஜல்பம்.
    சரிதான் , இந்த சிரிப்பு போலீஸ் பற்றி ,நடுநிலையாளர்களுக்குப் புரியும் என்று வாளாவிருந்தேன்.
    ***********************************************
    எனினும் இன்றுதான் தேவரீருடைய ப்ராம்மண – வர்ணம் -குலபாசம் என்று ஒரு கட்சியிலிருந்து முதல் வாதமாக -“சங்கரரையும் ,மத்வரையும், தூப்புல் வேங்கடேசரையும் ” போற்றிய பின்னுட்டம் கண்டேன்.

    அடியேன் தொடக்கத்தில் ஒரு கருத்து சொல்லி வாதத்தினை தொடங்க விரும்புவேன் .
    மற்ற சமயாச்சார்யார்களான – சுவாமி ஏசுநாதர் ,சுவாமி முஹம்மது நபி ,சுவாமி குமாரிலபட்டர் ,சுவாமி சங்கரர் ,சுவாமி மத்வாசார்யர், சுவாமி தூப்புல் வேங்கடேசர் போன்றோருடன் அடியேனுக்கு எந்த தனிமனித-பூசல்கள் கிடையா .
    .(சங்கிலிமுருகன் :ஏம்பா ! பொண்ண கைய புடிச்சு இழுத்தியா !! ,
    வடிவேலு : என்னா ! பொண்ண கைய புடிச்சு இழுத்தியா !
    சங்கிலிமுருகன் :ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் வாய்க்கா தகராறு ).
    இவாளுடன் அடியேனுடன் எந்த பூசலுமில்லை .

    “சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!“. ஒருக்கால் ,இவர்கள் அடியேன் முன்னர் தோன்றினால் ,விழுந்து சேவிக்கவும் தவற மாட்டேன் .ஏனெனில் “புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே ” அனைத்துள்ளும் கரந்துறைபவன் முகில்வண்ணன் .
    எனினும் யாவர் சொல்லினும் அது சுவாமி.பராசர ரிஷி மற்றும் சுவாமி.சடகோப ரிஷி உபதேசங்களுக்கு ஒத்திருந்தால் ஏற்றுக்கொள்வேன் . அங்ஙணமில்லையாகில் ,ஒப்பமாட்டேன் ,மன்னிக்கவும் . இவர்கள் சித்தாந்தம் மறுக்கப்பட வேண்டியது தான் .

    எங்கள் ஊர்க்காரர், அடியேனது ROLE MODEL ,காஞ்சிபுரம் PBA ஸ்வாமி தான் அருளிச்செய்த ராமானுஜ நூற்றந்தாதி 53 ம் பாசுர வ்யாக்யானம் பாரீர் .
    https://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3431

    பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
    றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
    டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
    வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே.

    எம்பெருமானார் குத்ருஷ்டிகளின் குத்ஹிதமான வாதங்கனைக் கண்டித்த படிகளில் ஒருபடியைச் சொல்லி ஈடுபடுகிறார்.
    சில “மூர்க்கர்கள் தாங்கள் சொல்லுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று கொக்கரித்துக் கொண்டு அபார்த்தங்களைப் பிதற்றுவர்கள்.”
    ***மூர்க்கர்கள், கொக்கரித்து , பிதற்றுவர்கள். *** வார்த்தைப் ப்ரயோகம் பாரீர்.

    சங்கரர் பாஞ்சராத்ர ஆகமத்தை ஒத்துக் கொள்கின்றார் .(பாசுபத ,சாக்த ஆகமங்களை மறுக்கின்றார்.)
    எனினும் வாசுதேவன்,சங்கர்ஷணன் ,அநிருத்தன் ,ப்ரத்யும்னன் போன்ற வ்யூஹங்களை ஒத்துக் கொள்ள மறுக்கின்றார்.

    ஏகாயனர் என்று த்வைத மதமும் ஈட்டில் முதல் ஸ்ரீயப்படி பகுதியில் கண்டனம் பெருகின்றது. அடியோங்கள் மிதுனாயனர் கோஷ்டி .

    தேவரீர் இவ்விரு கீர்த்திமூர்த்திகளின் திருநாமங்களைச் சொன்னதினாலும் ,அவர்கள் தேவரீர் சுட்டியதுபோல் எழுதியது உண்மையே என்பதினாலும் அடியேன் சங்கர பகவத் பாதரை அவதூறு சொன்னது பற்றி மன்னிப்புக் கோருகின்றேன் . (ராமானுஜன் – இதழ் 351)

    எனினும்

    ராமானுஜன் – இதழ் 367 page 8
    பாஹ்யா குத்ருஷ்டய இதி த்விதயேப்யபாரம்
    கோரம் தம: ஸமுபயாந்தி நஹீக்ஷஸே தாந் |
    ஜக்தஸ்ய காநநம்ருகைர் ம்ருகத்ருஷ்ணிகேப்ஸோ
    காஸார ஸத்த்வ நிஹதஸ்ய ச கோ விஶேஷ: || – கூரத்தாழ்வான் -வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகம் -14
    வேத பாஹ்யர்களும் ,வேத குத்ருஷ்டிகளும் துல்யயோக க்ஷேமர்களென்பதற்கு ஒரு அற்புதமான த்ருஷ்டாந்தம் காட்டியுள்ளார் இதில். விடாய் மிகுந்து தண்ணீரைத் தேடியோட இரண்டு மிருகங்கள் புறப்பட்டன. அவற்றில் ஒரு ம்ருகமானது தடாகத்திற் புகாதே கானலைக் கண்டு பாநீய பிரவாகமாக மயங்கி இருக்கையில் ,வழியில் புலியின் வாயிலே விழுந்து மாண்டொழிந்தது .இது இப்படியாக, மற்றோரு ம்ருகமானது விடாய் தீரப் பெறுவதற்கு உண்மையாகத் தண்ணீருள்ள தடாகத்தில் சேர்ந்தும் துறைதப்பி இழியவே அங்கு கிடந்த முதலையினாலே கதுவப்பட்டு மாண்டொழிந்தது.
    என்னும் அத்வைத கண்டனம் பாரீர் .

    கீர்த்திமூர்த்தி காரப்பங்காடு ஸ்ரீனிவாசாச்சார்யார் ச்வாமியின் சதுஸ்லோகி உபன்யாசம் கேளுங்கள் . அதில் மிகமிகச் சாதுர்யமாக வேதாந்த தேசிகரின் பக்கம் தவறு என்று நிரூபிக்கின்றார் .சரியான பக்கம் ச்வாமி.நாயனாசார்யரின் பக்கமே என்று விளக்குகின்றார்.(உபக்ரமோzபஸம்ஹாரம், அப்யாசம்,அர்த்தவாதம் என்று பல யுக்திகள் ).
    (ப்ரம்ம சூத்திரத்தின் 545 ஸூத்ரங்களும் ஸ்ரீமஹா லக்ஷ்மி தாயாருக்கும் பொருத்தும் என்றும் அவளும் பரமாத்மா என்று விச்வாமித்ர ஸ்ருஷ்டி செய்தவர்தானே தேசிகர். இதனால் இன்று வடகலை என்று ஒரு (குருட்டு)தரிசனம் உண்டாகி ஸ்ரீவைட்ணவம் இந்த க்ஷிண தசையினை அடைந்தது .எங்கள் காஞசிபுரத்தில் பெருமாள் கோயில் யானைக்கு என்ன திருமண் சாத்தலாம் என்று பூசல் கிளம்பி அது லண்டன் பிரீமியர் கோர்ட் வரை சென்று ஊரை சிரிக்க வைத்தது யார் குற்றம்?)
    ஸ்ரீ ஸ்ரீபாஷ்யம் அப்லாச்சார்யர் ச்வாமி தானும் சுந்தரகாண்டத்தில்
    https://www.youtube.com/watch?v=nzwck8qXbws&list=PLCmXWVTk85Ahd4eEV2M7IhaU4HMHLLs4U
    ததோ ராவண நீதாயா: ஸீதாயா: ஶத்ருகர்ஶந: |
    இயேஷ பதம் அந்வேஷ்டும் சாரணா சரிதே பதி: || முதல் சர்கம்-1 ம் சுலோக
    உபன்யாசத்தில் ஸ்லோகத்தில் பிராட்டி ஜீவாத்மாதான் என்று நிறுவுவதை காணீரே ! காணீரே !

    நம் தேசத்திலிருந்து பெளத்தர்களை ஓட ஓட விரட்டியது குமாரில பட்டரும் தான்.(ச்வாமி உதயணாச்சார்யாரின் கைங்கர்யம் அதில் பாதி.).
    ஆனால் ஜாதி என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் ஸ்ருஷ்டித்தது இவரேயன்றோ !
    ச்வாமி உடையவரின் ,பூர்வாஸ்ரம தேவிகளான தஞ்சமாம்பாள் ,3 அபச்சாரங்களை செய்ய வைத்ததும் குமாரில பட்டரின் பூர்வ மீமாம்சை மதம் தான் .பின்னர் அவர் தன் தாயகம் செல்லவைத்ததும் அதனால்தான் .

    நமது முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் உருவ வழிபாடு சிறுபிள்ளைத்தனமானது என்று நூல் எழுதினார்.அத்வைதமே சரியானது என்றார் .இவரை அங்ஙணம் எழுத வைத்தது சங்கரர் தானே .அதனால்தான் சொன்னேன் .

    “யத்யதா zசரதி ஸ்ரேஷ்டஸ் தத்தத தேவேதரோ ஜனா: |” – இவ்வாறு ஜனாதிபதி முதல் நடிகர் (ரஜினிகாந்த்) வரையில் உருவ வழிபாடு நசித்தது .

    மைசூர் கல்லூரி பேராசிரியர் Vidvan Sri M.A. Alwar ச்வாமி ,தன் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபத்தில் ,சங்கரரின் உரையினை அப்படியே எழுதி ,
    இவ்வாறெல்லாம் வ்யாக்யானம் எழுத பல ஜென்மங்களில் செய்த பாபமே என்கின்றார் பாரீர். இதற்கு நம் ச்வாமி .உடையவரின் ஸ்ரீஸுக்தியைக் காட்டுகின்றார்.
    https://www.youtube.com/playlist?list=PLog-e7pBcwcmujBd-ysoRWvaMvNyyDSQJ
    (அது எந்த சுட்டி என்று சரியாகத் தேடி பின்னர் சொல்லுவேன்).

    ஆயினும் இவ்வாறெல்லாம் ஆதாரம் காட்டிடினும் ,தேவரீர் அடியேனைப்போல ,வாதங்களை ஒத்துக்கொள்ள மாட்டீர் ,என நினைக்கின்றேன் . அது காலத்தின் கோலம்.மன்னிக்கவும் .

    அடியேனின் வாதங்களில் உண்மை இருப்பதிலும் மறுப்பதற்கில்லை .
    அடியேன் புல்லெறும்பாதிகளையும் புண்படுத்த விழையாதவன் .

    இதனால் அடியேனுக்கு பாவம் சம்பவிக்க இருப்பினும் (ஒருக்கால்) , இன்னொரு ஜென்மம் எடுப்பேன் .அதிலும் திருவாயமொழி ,ஸ்ரீபாஷ்யம் சேவிப்பேன் .

    நாவினால் நவிற்று இன்பமெய்தினேன்
    மேவினேனவன் பொன்னடி மெய்மையே
    தேவுமற்றறியேன் குருகூர் நம்பி
    பாவினின்னிசை பாதித்த திரிவனே .

    தேவரிரெல்லோரும் திருநாடு ஏகுங்கள் .அடியேன் இங்கேயே கிடந்துழல்வேன் .

    இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
    என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
    துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
    அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.

    ந தேவலோகா க்ரமணம் நாமரத்வம் அஹம் வ்ருனே |
    ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வய விநா || – ராமாயணம் -2-31-5

    யதி த்வம் ப்ரஸ்தித துர்கம் வனம் அத்ய ஏவ ராகவ |
    ஆக்ரத: தே கமிஷ்யாமி ம்ருத்ரந்தி குச கண்டகான் || ராமாயணம் 2-27-6

    ஸ்வர்க்கே பி ச விநா வாஸோ பவிதா யதி ராகவ !
    த்வயா மம நரவ்யாக்ர நாஹம் தமபி ரோசயே || ராமாயணம் 2-27-20

    ஏதாவது பிழையிருப்பின் மன்னிக்கவும் ,
    தாசன் அடியேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *