சாணக்கிய நீதி – 5

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

நமக்கு நேரில் போரிடும் எதிரியைவிட, நம் முதுகில் குத்த முயலும் அணுக்கரிடம்தான் நாம் கவனமாக இருக்கவேண்டும் என அரச தந்திரிகளும் அறிவுரை கூறுகின்றனர். நண்பன் என்று போற்றப்பட்ட புரூட்டஸும், ஜூலியஸ் சீசரை இறுதியில் கத்தியால் குத்திக் கொன்றதும் வரலாறு. அப்படிப் பட்டவர் பாலில் நஞ்சைக் கலந்து கொடுக்கவும் தயங்கார்.

View More சாணக்கிய நீதி – 5

அருச்சுனனின் ஆத்திரம்

“நீ ஒரு கோழை.  கர்ணனுக்குப் பயந்துகொண்டு இங்கே ஓடிவந்திருக்கிறாய்.  அத்தனை அதிவில்லாளர்களையும் அடித்துத் துவம்சம் செய்த கர்ணனை — அபிமன்யுவை அநியாயமாகக் கொல்வதற்காக அவனது பின்புறமாக நின்று, வில்லைத் துண்டித்துச் செயலிழக்கச் செய்தவனை — வீரத்தில் உன்னைவிடச் சிறந்த உன் செல்வன் விழக் காரணமாவிருந்த கள்வனை — பாஞ்சாலியின் துகில் உரியக் காரணமாக இருந்த அந்த மாபாவியை விட்டுவிட்டு, இங்கென்ன செய்கிறாய்? பேசாமல் உன் காண்டீவத்தையும், வீரவாளையும் கேசவனிடம் கொடுத்துவிட்டு, அவனுக்குச் சாரதியாக இருந்துவிடு.  அவன் கர்ணனை அரைநொடியில் கொன்றுவிடுவான்” 

View More அருச்சுனனின் ஆத்திரம்

தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்

இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன்.  கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன்.  “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்?  பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்?  எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.  

View More தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்

உடுக்கை இழந்தவள் [சிறுகதை]

இந்த நால்வரின் எண்ணத்தில் நல்லவையே உதிக்காதா? அதுவும் க்ஷத்ரியர் அவையில் இந்த சூதனுக்கு என்ன வேலை? ஆனால் சூதனுக்கு உடலோடு ஒட்டிய பொற்கவசம் எப்படி? எந்தத் தேரோட்டி கவசம் அணிகிறான்? தேரோட்டிகளுக்கு கவசம் அணிவிப்பது நல்ல யோசனையாக இருக்கிறதே! அவர்களை எதிராளியின் வில்லிலிருந்தும் வேலிலிருந்தும் பாதுகாக்குமே…அஸ்வத்தாமனின் கண்கள் சுருங்கி இருந்தன. அர்ஜுனன் அடிமையா? இது என்ன குறுக்கு வழி கர்ணா? உன் கவசத்துக்கு இனி என்ன பயன்? நீ அர்ஜுனனை போரில் வென்றிருந்தால் சூதன் என்று இழித்துப் பேசி உனக்கு கற்பிக்க மறுத்த என் தந்தைக்கும் மாமனுக்கும் சரியான பாடமாக இருந்திருக்கும்…

View More உடுக்கை இழந்தவள் [சிறுகதை]

கட்டாய ஓய்வு [சிறுகதை]

‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா? இதைச் சொல்லத்தானே நானே வந்தேன்! நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த மதுக்குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். ‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான்…. சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன…

View More கட்டாய ஓய்வு [சிறுகதை]

வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது. கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்… கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான்…

View More வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

ரிஷிமூலம் [சிறுகதை]

கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான்….

View More ரிஷிமூலம் [சிறுகதை]

பாஞ்சாலியின் புலம்பல்

ஆண் மட்டும்தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று பெண்ணுக்குத் திருமண முறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒரு பெண், ஒருவர் பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எரியவில்லையே, அதை என் போற்ற மாட்டேன் என்கிறீர்கள்?… என் கணவன் குடாகேசி(அருச்சுனன்)யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தை விட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்க வேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)?….

View More பாஞ்சாலியின் புலம்பல்

ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]

கர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் “மாமா! மாமா!” என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப் பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்…. “இந்த சூதன் மகனை அங்க நாட்டு அரசனாக்கினோம். தோழன் தோழன் அண்ணன் மாமன் என்று கொண்டாடினோம். நமக்கு உண்மையிலேயே சரிசமானமாக வைத்தோம். சூத ரத்தம் என்று பார்க்காமல் நம் வீட்டு ரத்தினத்தை அவன் வீட்டுக்கு ஒளி தர அனுப்ப எண்ணினோம்…..

View More ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]

வீரனுக்கு வீரன் [சிறுகதை]

தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது… கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச் சென்றது…

View More வீரனுக்கு வீரன் [சிறுகதை]