பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்

யங்கொள்ளிப் பார்ப்பான் என்று ஒரு இரகம் உண்டு. யார் அவர்கள்?

தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பிராம்மண துவேஷம் இருக்கிறது. பொதுவாக பிராம்மணர்கள் ஒதுங்கிப் போய்விடுவார்கள். இல்லை மும்பை, அமெரிக்கா எங்காவது சென்றுவிடுவார்கள். சிலர் துணிந்து எதிர்கொள்வார்கள்.

ஆனால் ஒரு சிலர் இடதுசாரி ஆதரவு, ஹிந்துத்துவ எதிர்ப்பு, ஹிந்துமத நிந்தனை, ஹிந்துக் கடவுள் நிந்தனை போன்ற ஈன செயல்களில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய ஆதரவாளர்களாக இருப்பார்கள். மாட்டிறைச்சி உண்பதை ஆதரிப்பார்கள். ஹிந்துக்களுடன் மற்றும் ஹிந்துத்துவ ஆதரவாளர்களுடன் பேசும்போது தெனாவட்டாகப் பேசுவார்கள். நையாண்டி செய்வார்கள். எந்த ஹிந்து பதிலுக்கு அடிக்கப்போகிறான்? 🙂 ஆனால், கிறிஸ்தவத்தையோ, இஸ்லாத்தையோ, இயேசுவையே, நபியையோ விமர்சிக்க சொல்லுங்கள். ம்ஹூம், மாட்டார்கள். சவாலைக் கேட்ட உடனேயே கௌபீனத்தில் கக்கா போய்விடுவார்கள். கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் முன் மண்டியிட்டு அவர்கள் சொல்லுமிடங்களில் முத்தமிடுவார்கள். தாங்கள் பிராம்மணர்கள் இல்லை என்று பறைசாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

இந்த வீர்யமற்ற கோழைகளுக்குப் பெயர்தான் பயங்கொள்ளிப் பார்ப்பான். எதிரியோடு கைகோர்த்துக் கொண்டால் பிழைக்கலாம் என்ற நோக்குடையவர்கள். பிராம்மணராகப் பிறந்து, கிறிஸ்தவராக மதம் மாறி, அதனால் திரை உலக வாய்ப்பைப் பெற்று, திராவிட கழகத்திலும் சேர்ந்த கமல்ஹாசன் இந்த இரகத்தை சேர்ந்தவர். சமீபத்தில், இதே இரகத்தை சேர்ந்த சஹஸ்ரநாமம் பத்மநாபன் என்பவர் இதே செயல்களில் ஈடுபட்டார். அவரை, “ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதைப்போல் இயேசுவை சொல்லிப் பாரும். உங்களைக் கூலிப்படையாக நடத்தும் வெள்ளைக்காரன் செவுளில் ஒன்று விடுவான்” என்று சவால் விட்டேன். எதிர்பார்த்தவிதமே கௌபீனத்தில் கக்கா போய்விட்டார்.

பசுவதைத் தடையை எதிர்த்த அவர் பால் அருந்துவதால்தான் பசுவதை நடக்கிறது என்று அவர் இட்ட வாதத்தை மறுத்து நான் எழுதியது –

”உங்கள் பதிவில் நாணயமில்லை. நீங்கள் மாமிசத்திற்காகவோ, தோல் பொருட்களுக்காகவோ பசு வதை செய்வது தார்மீகக் குற்றம் என்று எழுதினீர்களா? பசுக்களையும், கன்றுகளையும் கொடூரமான முறையில் லாரிகளில் ஏற்றி செல்வது அநீதி என்று எழுதினீர்களா? அந்த அநீதியையும், குற்றத்தையும் தடைசெய்யும் விதமாக மோதியும் ஆதித்யனாத்தும் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தலைவணங்கினீர்களா? கேட்பாரின்றி வெட்டப்படும் பசுக்களுக்காகக் குரல் கொடுக்கும் கோரக்ஷகர்களுக்குக் கைகூப்பி நன்றி சொன்னீர்களா?

இல்லை. இல்லை. இல்லை. இல்லை. அவர்களையெல்லாம் தூஷித்தீர்கள். மனதில் ஈரமற்றவன் என்று எவனைத் திருவள்ளுவர் குறிப்பிட்டாரோ அவனுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். ஒரு குழந்தையைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பதை விட மாபெரும் பாதகம் செய்பவனுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கும் கற்பழித்துக் கொன்ற கயவனுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களுக்கும் தார்மீகரீதியாக வேறுபாடு இல்லை.

ஆனால், “பாலும், தயிரும், நெய்யும் அதிகம் சாப்பிடுபவர்கள்தான் பசுக் கொலைக்கு முதற்காரணமாகிறார்கள்” என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்கள். பசுவதை தவறு. அதைத் தடை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு, பால் குடிப்பதால் பசுவதை அதிகரிக்கிறது. எனவே அதையும் நிறுத்தவேண்டும் என்று சொல்லியிருந்தால் நீங்கள் நியாயமானவர் என்று கொள்ளலாம். அது உங்கள் நிலை அல்ல.

இதைப்பற்றி ஓராண்டுக்கு மேல் எழுதி வருகிறேன். பால் குடிப்பதால் பசுவதை நடக்கிறது என்பதால்தான் வேகனாக மாறினேன். ஆனால், பால் குடித்தால் பசு வதை நடக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ராஜஸ்தானில் பிஷ்ணோய் என்ற ஹிந்துக் குடியினர் இருக்கிறார்கள். அவர்கள் பால் விற்றுத்தான் பிழைக்கிறார்கள். பசுக்களை வீட்டுப் பிள்ளைகள் போல பராமரிக்கிறார்கள். மாமிசம் உண்பதில்லை. பசுக்கள் அளவுக்கு அதிகம் பால் கறக்கின்றன. கறப்பது நின்றால் அவற்றை விற்பதில்லை. குடும்ப உறுப்பினராகப் பாவித்துப் பேணிக்காக்கிறார்கள். இதற்கெல்லாம் மானியம் கூடப் பெற்றுக்கொள்வதில்லை.

எனவே பசுவதை இன்றி பால் அருந்த வழி இருக்கிறது. ஆனால், பசுவதை இன்றி மாட்டிறைச்சி அருந்த வழி இல்லை. இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் மட்டுமில்லை. அயோக்கியத்தனமும் கூட. மேலும், பால் அருந்துபவர்கள் முக்கால்வாசிப்பேருக்கு பசுக்கள் வதைபடும் என்ற உண்மை தெரியாது. ஆனால், மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு பசுக்கள் வதைபடும் என்ற உண்மை தெரியும்.

பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டால் “போஷிக்க விவசாயியால் முடியாது. எனவே சந்தையில் அடிமாடாக விற்க வேண்டி வருகிறது” என்பதும் கள்ளவாதம். பிஷ்ணோய் மக்களால் போஷிக்க முடியுமெனில் மற்றவர்களாலும் முடியும். பேராசை கொண்டவனால் முடியாது. விவசாயிகள் மானியம் கேட்கத் தயங்குகிறார்களா என்ன? கடன் இரத்து செய்ய சொல்லி கேட்பதில்லை? இலவசமாக மின்சாரம் கேட்பதில்லை? கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களை போஷிக்கவும் மானியம் கேட்கட்டுமே? கிறிஸ்தவ சர்ச்சுகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து மானியம் வழங்கலாம்.

வழியா இல்லை?”

6 Replies to “பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்”

 1. வந்தே மாதரம். அருமை.
  வாழ்க பாரதம்.

 2. Naanum paarpaanthan .
  Mutrilum unmai . ..
  Enna seivathu…ingu arasiyal appadi irukirathu..
  Indru mulaitha naam thamizhar varai paarpana ethirpu thodarkirathu
  Paarpana ethirpu vanthal avargalai aathariga entha katchi yum illai
  Ondrum seyya mudiyathu…kaalam maarinalthan undu.
  Ore karuthai pona radhakrishnan h raja iruvarum solgirargal.
  Aanal h raja pala munaikalil irunthun vimarsanangalal thakkapadukirar . ..
  Kurippaga dravida . ..desiya thamuzh iyakanfal..
  MATRUM islamiya amaipugal…

 3. Actor kamal has not converted to any other religion. He uses Hinduism whenever it suits him.

 4. ஏனய்யா! ஓடி ஓடி உழைத்து பின்னர் ஓய்ந்து போன நம் பெற்ற தாய் தந்தையரை நாமென்ன அடித்தா கொன்று விடுகிறோம்?! அல்லது நாமே நாளை ஓய்ந்த பின்னர் தற்கொலைதான் செய்து கொள்கிறோமா? கறவை நின்ற பசுக்களை அடிமாடாக்குவதை நியாயப்படுத்துபவர்கள் மனிதர்களே கிடையாதய்யா!!

 5. //பிராம்மணராகப் பிறந்து, கிறிஸ்தவராக மதம் மாறி, அதனால் திரை உலக வாய்ப்பைப் பெற்று, திராவிட கழகத்திலும் சேர்ந்த கமல்ஹாசன்//

  False accusation. பார்ப்பன ஜாதியில் (பார்ப்பனர் என்றால்தான் ஜாதி; பிராமணர் என்றால் ஜாதி கிடையாது) பிறந்தவர் எனபதுமே மட்டும் உண்மை. அவர்கள் வாழ்ந்த ஊர் பரமக்குடி. பார்ப்ப்னர் ஜாதியினர் சொற்பமே. பிற ஜாதியினரே அதிகம். தலித்துகளுக்கும் மறவர்களுக்கும் சண்டை நடக்குமூரது. அப்படி பலமக்களிடையே வளரும்போது அக்குடும்பத்தாரின் தம் ஜாதி உணர்வும் உங்கள் உணர்வும் ஒன்றாக இருக்காது. எப்படி வளர்ந்திருந்தாலும் பார்ப்பனரில் நாத்திகர் ஏராளம். பார்ப்ப்ன ஜாதியில் பிறந்தால் நாத்திகராக இருக்க மாட்டார் எனப்தும் கூடாதென்பதும் மூர்க்கத்தனமான வாதம்.

  சிறுவயதில்தான் இறைநம்பிக்கையைத் திணிக்க முடியும். வளர்ந்தவுடன் அவரவர் வழி போவர். ஆத்திக குடும்பத்திலிருந்து நாத்திகரும் நாத்திக குடும்பத்திலிருந்து ஆத்திகரும் உருவாவது கண்கூடு. அப்படி நாத்திகரானவரதான் கமல். திராவிடக்கழகத்தினரோடு உறவில்தான் நாத்திகரானார் என்பது கற்பனை. ஒரு நாத்திகர் – சிவன், விஷ்ணு, பிரம்மாக்கள் இல்லையென்று சொல்லிவிட்டு இயேசு, மேரி உண்டு என்றால் எப்படி நாத்திகராவார்? கமல் எப்படி கிருத்துவ மதத்தில் சேரமுடியும்? சேர்ந்தார்? பொது மேடை பிற்ரைப்பற்றி ஆதராமில்லாமல் எழுதலாமா?

  திராவிடக்கழகத்தில் சேர்ந்தார் என்பதும் பொய். திராவிடக்கழகம் ஒரு சில கொள்கைகள் கொண்டது கிடையாது. பல கொள்கைகள்; அவையும் காலத்திற்கேறப மாறிக்கொண்டேயிருக்கும். நாத்திகம் முன்பு அதன் மையக்கொள்கை. இன்று அடித்தளத்திற்குச் சென்றுவிட்ட கொள்கை. அவற்றுள் சிலவற்றையோ பலவற்றையோ ஏற்றுக்கொண்டவர்கள் எல்லா ஜாதியிலும் உண்டு. பார்ப்பனர்கள் பலருண்டு. அவர்கள் அக்கழகத்தில் இணையவேண்டுமென்ற கட்டாயமில்லை. வெளியே தெரிந்தவர்கள் என்றால் நீஙகள் போட்டுத்தாக்குவீர்கள். அமைதி காப்பார்கள். அவ்வளவுதான்.

  யாரோ ஒரு சகஸ்ரநாம பத்மநாபன் என்பவரைப்போட்டுத் தாக்குகிறீர்கள். அவர் சொன்னதில் ஒரே வரிதான் இருக்கிறது. அவர் என்ன எழுதினார் என்பது தெரியவில்லை. லிங்க் கொடுக்கணும். அல்லது அவர் எழுதியதை முழசாகப் போட வேண்டும். Ex-parte decision எடுத்துவிட்டு வீட்டுக்குப் போக இஃதென்ன நீதிமன்றமா? பதம்நாபன் என்னென்ன காரணங்களை முன்வைத்தார் வெங்கட்?

  இராஜஸ்தான் பிஷ்னோய் ஜாதிமக்களைப்போல இந்தியா முழுவதும் மாற வேண்டும் என்ற ஆசை. ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அப்படியானால் என்னவாகுமென்பதையும் சிந்திக்க வேண்டும். என்னவாகும்? இப்படிப்பட்ட செய்திகள் வாரா: https://indianexpress.com/article/world/india-third-biggest-beef-exporter-fao-report-4772389/

 6. கட்டுரையின் தலைப்பே தவறு. கட்டுரையாளரின் தன் ஜாதி மேட்டிமைத்தனத்தை அப்பட்டமாக முன் வைக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வாழ்க்கை வரைமுறை இருக்கிறது எனபது கற்பனை. ஆனால் அக்கற்பனையை உண்மையென எடுத்து வாழ்கிறோம்.

  ஆதிகாலத்து மன்னன் எங்கள் ஜாதி என்று அவன் சிலைக்கு ஜாதிவாரியாக உரிமை கொண்டாடுவதும், ஆண்ட பரம்பரை என்று சங்ககாலத்தைக் காட்டுவதும் இவைபோல பல, இன்றைய சமூகத்தைக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கின்றன.

  பார்ப்பனர் என்பதுதான் ஜாதி. ஜாதியில் பிறப்பது விபத்து. பிராமணனாக பிறப்பது விபத்தன்று என்பது இந்துமதம். அப்படி பிராமணனாக கோடியில் ஒருத்தர் கூட இருக்க முடியாத காலமிது. எனவே வெறும் ஜாதியைத்தான் எடுத்துப்பேசுகிறோம். ஓரூரில் உள்ளவர்கள் அஜ்ஜாதிக்கு ஒரு வரைமுறை உண்டு என்றால் அங்கு ஒரு குடும்பம் அவ்வரைமுறைகளை ஒதுக்குவிட்டு வாழ்கிறதென்றால் ஒதுக்கிவைக்கலாம்; வைத்தார்கள்.(பாரதியாரின் குடுமபம் கடையத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டது) இன்று அதுகூட செய்யக்கூடாதென்று உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு. கப் பஞ்சாயத்து தீர்ப்புக்கள் அரசின் விதியின்படி குற்றமஙகள்.

  இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னைப் பார்ப்ப்னர் என்றே காட்டிக்கொள்ளாத ஜாதியில் பிறப்பென்பதே விபத்து என்ற கொள்கைக்கொண்ட – அதாவது ஜாதிப்பிறப்பைப் பற்றி பெருமையோ சிறுமையோ அடையாத ஒருவரை எப்படி ஜாதிப்பெயரை வைத்து பயங்கொள்ளி பார்ப்பான் எனலாம்? அவர் வேறொரு அடையாளத்துக்குள் தன்னை வைத்துக்கொண்டால் அவ்வடையாளத்தை முன்னொட்டாக வைத்து சொல்லலாம். கமல்ஹாசன் ஒரு கட்சியைச்சார்ந்தவரானால் – எ.கா. தி மு க – அவர் கிருத்துவரையோ, இசுலாமியரையோ விமர்சிக்காமல், இந்துக்களை மட்டும் விமர்சித்தாரென்றால் – பயங்கொள்ளித் திமுக காரன் என்றல்லா சொல்லவேண்டும்?

  அவர் கட்சியிலும் இல்லை; ஜாதியையும் கண்டு கொள்ளவில்லை. பின்னெப்படி பய்ங்கொள்ளி பார்ப்பான் என இழிக்க முடியும்? முடியுமென்றால், அங்கு கட்டுரையாளரின் ஜாதி மேட்டிமைத்தனமே வெளிப்படும். வெங்கட் தன் பார்ப்பன ஜாதியை உயர்வாக நினைத்து, தம் ஜாதியினர் இப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் ஜாதியை முன்னொட்டாக வைத்து இழிவுபடுத்துவோம் என்று இத்தலைப்பை வைத்திருக்கிறார். கமலை மட்டுமன்று; இவர் ஜாதியில் பிறந்து அதைத்துறந்து வாழ்ந்தார்கள அனைவரையும் இழுத்துப்போட்டு தாக்குகிறார். மறைந்த சின்னக்குத்தூசி கமலைப்போலில்லாமல், நேரடி திமுக காரர். அவர் இந்துக்களை விமர்சித்தால், அவரை பயங்கொள்ளிப் பார்ப்பான் என்றால் அவர் சிரிகக்த்தான் வேண்டும்! நான் என்றைக்கையாக பார்ப்பனன் என்று சொல்லிக்கொண்டேன்? நீர் அங்கே இருந்துகொள்ளும். என்னையேன் இழுக்கிறீர் என்றல்லவா கேட்டிருப்பார்? அதே இங்கே. கமல் என்றைக்கையா உமது ஜாதி?

  தவறு நண்பரே. கமல் செய்ததது தனிநபராக. அவரை ”பய்ங்கொள்ளி கமல்” என்று சொல்லலாமேயொழிய பய்ங்கொள்ளி பார்ப்பான் எனப்து உங்கள் ஜாதியை ஏற்காத ஒருவரை ஜாதியோடு இணைப்பது போல !

  You can’t coerce people to live and believe as you do 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *