திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

ஆங்கிலம்: ஸர் கந்தையா வைத்தியநாதன்[1]தமிழாக்கம்: ஒரு அரிசோனன்

 மொழிபெயர்ப்பாளனின் குறிப்புஇலங்கையின் ஐந்து பழமையான ஐந்து சிவன் கோவில்களில் திருக்கேதீஸ்வரம் கோவிலும் ஒன்றுஇது மன்னாருக்கு அருகாமையில் இலங்கை தலைநிலப்பரப்பில் இருக்கிறதுஇக்கோவில் போர்ச்சுகீசியர்களால் பதினாறாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டதுஇப்பொழுது, இந்திய அரசின் நிதியுதவியுடனும், தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணத்துடனும் மீண்டும் பெரிதாகக் கட்டப்பட்டுவருகிறதுகடந்த ஜனவரி மாதம், 2017ல் நான் நேரில் அங்குசென்று புதுப்பிக்கும் பணியைக் கண்டு வந்தேன்இக்கட்டுரையின் ஆங்கில மூலம், திருக்கேதீஸ்வர்ம் கோவில் புணர்நிர்மாணச் சங்கத்தால் 2003ல் மற்ற கட்டுரைகளுடன் திருக்கேதீஸ்வரம் கட்டுரைகள் [Thiruketheeswaram Papers] என்னும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மொழிபெயர்க்கும்போது, மொழிபெயர்ப்பாளர் தனது நடையில் மொழிபெயர்த்து எழுதுவது மூலத்தின் தனித்தன்மையை வெளிக்கொணராதுபோகும்அதைக் கருத்தில்கொண்டு, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்து, மூல ஆசிரியர் எவ்வாறு சொல்லியுள்ளாரோ, அதன் தன்மை குன்றாது, நீட்டவோ, குறைக்கவோ செய்யாது, தமிழ் இலக்கணத்திற்குத் தகுந்தவாறு சொற்றொடர்களை அமைத்துள்ளேன்அதன்மூலம் மூலக்கட்டுரையாளரின் நடையும், அவரது கருத்துகளும், உணர்ச்சிகளும் அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொணரப்பட்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்.

இக்கட்டுரை திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணி சபையின் அனுமதியுடன் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது

***

மொகஞ்சதாரோ, ஹாரப்பாவில் நமக்குக் கிடைத்த வைளிப்பாடுகளின் கண்டுபிடிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், செம்புக்காலத்திற்கோ [bronze age], அதற்கும் முன்னதாகவோ வரலாறு உள்ளது சைவசமயம்எனவே, அதை உலகத்தின் மிகப் பழமையான வாழும் சமயம் என்றே எண்ணவைக்கிறது

ஸர் ஜான் மார்ஷல்

சிவபெருமானை ஒப்புயர்வற்றவரென்றும், முழுமையானவரென்றும் வழிபடுதல் மிகவும் பரவியுள்ள பழமையான சமயங்களில் தொன்மையானதாகும்.  அது படைப்பு துவங்கியதிலிருந்தே இருக்கிறது என்று மரபு பறைசாற்றுகிறது.  இமயம் தோன்றி ஆன்மீக மரபின் சின்னமாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே — மிகப்பெரிய இந்திய-ஆப்பிரிக்கக் கண்டம் பிரிவதற்குமுன்னரே — இலங்கை அதன் ஒருபகுதியாக இருந்தபோதே அங்கு சிவவழிபாடு துவங்கிவிட்டது.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிவபெருமானை மகாதேவராக, ஆதிசைவத்தின் ஒரு பெரிய கடவுளாக வழிபட்டதாகவே — சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளியிலும், ஜார்ஜ் ஃபெப்ரி மற்றவர்கள் மால்ட்டா, மடகாஸ்கர் மற்றும் கிரீட்டிலும் கண்ட புதைபொருள் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று முகமுள்ள கடவுள் முத்திரைகளும் — மும்மூர்த்திக் குறிக்கோள் — பிற்காலப் பிரம்மா, விஷ்ணு, சிவன் பதிப்புருவாக இருக்கக்கூடும்.  பொது ஆண்டுகளுக்கு மூவாயிரம் ஆண்டு முன்னதான மூன்றுமுக சிவபெருமானும் ஒருமுகக் கடவுளின் முந்தைய முத்திரைகளவு முக்கியமானதாகவே இருக்கலாம்.

சைவக் குருமாரான திருஞானசம்பந்தரும்[2], சுந்தரமூர்த்தி நாயனாரும்[3] திருக்கேதீஸ்வரத்திலுள்ள பெருமானைப் புகழ்ந்து பாடும்போது, பெரிய, சிறந்த துறைமுகமான — மகாவம்சத்தில் மாதிட்டை என்றழைக்கப்படும் — மாந்தோட்டத்தை எண்ணிலடங்காத மரக்கலங்களின் புகலிடம் என்றும், அங்கு மாடமாளிகைகள் நிறைந்திருந்ததாகவும், பூம்பொழில்கள், பழத்தோட்டங்கள், வயல்கல் சூழ்ந்திருந்ததென்றும் வர்ணித்திருக்கின்றனர்.

மாந்தோட்டத் துறைமுகம் பாலாவி ஆற்றுமுகத்தில் இருந்தது. மலையளவு அலைகள் எழுந்தும் விழுந்தும் ஆர்ப்பரித்தன. ஆற்றின் தென்கரையில் அலைவாய்க்குரடுகளும் [piers] கிடங்குகளும் அமைந்திருந்தன.  இப்பொழுது அக்கிராமம் வங்காலை [வங்கக் கலங்கள் கலக்குமிடம்] என்றழைக்கப்படுகிறது.  வடகரையில் திருக்கேதீஸ்வரம் கோவிலும், அரசுக்கட்டிடங்களும், மாளிகைகளும் இருந்தன.  இது மாளிகைத்திடல் என்று இப்பொழுது அழைக்கபடுகிறது.  பபமொடை [அர்ச்சகர்களுக்கான இடம்], கோவில் குளம் என்றும் கிராமங்கள் உள்ளன. திருக்கேதீஸ்வரம் கோவில் வங்காலையிலிருந்து நான்குமைல் தொலைவிலுள்ளது.  இதிலிருந்து பாலாவி ஆற்றின் முகத்துவாரம் அந்நாளில் எவ்வளவு பெரிதாக இருந்ததென்றும், அதன் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வணிகம் அக்காலத்தில் நடந்துவந்தது. அந்நாட்டார் தென்மேற்குப் பருவமழைக்குப் பயந்தனர்.  அதன் சீற்றத்திலிருந்து மாந்தோட்டத் துறைமுகம் புகலிடமளித்தது. அதற்குக் காரணம் தெற்கிலுள்ள மன்னார் தீவும், ராமர் அணையும்தான்.  அக்காலத்தில் மன்னார் தீவுக்கும், இலங்கை நிலத்திற்கும் இடையுள்ள நீர்ப்பரப்பு இருபருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல்தட்டாமல், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.

கப்பல்கள் செல்லுமளவுக்கு ஆழமான மன்னார் கடற்கால் எப்படி சதுப்புநிலமானது, மிகச்சிறந்த மாந்தோட்டத்துறைமுகம் மணல்மேடுற்றது, அலைமோதிய பாலாவியாறு எப்படி ஒரு சிறுவாய்க்காலானது, அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதி தரிசுநிலமானது என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.

பாலாவி ஒரு வளமிக்க ஆறாக இருந்தபோது, மல்வத்து ஓயாவின் நீர்ப்பெருக்கும், மற்ற இயற்கையான நீரோட்டங்களும் அதில்தான் கலந்தன.  காலப்போக்கில் மல்வத்து ஓயா தனது போக்கைத் தெற்குநோக்கி மதவாச்சிப் பக்கம் திருப்பியது. இது மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தைப்பற்றி ஆய்வுசெய்த ஒரு ரஷ்யப் பேராசிரியரின் கருத்தும் ஆகும்.  மல்வத்து ஓயாவை ஜயன்ட்ஸ் டாங்கைவிட்டு [Giants Tank] மன்னாருக்குப் பலமைல்கள் தொலைவிலுள்ள அருவியாற்றுக்குத் திருப்பியது ஜீவநதியான பாலாவியாற்றை மழைகாலத்தில்மட்டும் நீர்ப்பெருக்குள்ள மணற்படுகையாக ஆக்கியது. அகலமான பாலாவியின் கழிமுகம் மணல்மேடாகுவது விரைவாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மன்னார் தீவுக்குச் செல்ல அமைக்கப்பட்ட சாலைப்பாலமும், ரயில்வே பாலமும் கடல் நீரோட்டத்தை முழுவதும் நிறுத்திவிட்டன.  மாந்தோட்டத்திற்குப் பதிலாகத் தலைமன்னார் இந்தியாவுக்கு அருகாமையான துறைமுகமாக உருப்பெற்றது. பராக்கிரமபாகுவின் காலத்தில் துவங்கி, போர்ச்சுகீசியரின் வருகையும் மாந்தோட்டத் துறைமுகத்தின் சிறப்புகுன்றி, வடக்கிலிருக்கும் கேட்ஸ் துறைமுகம் சிறப்புப்பெற்றது.

மாந்தோட்டத்தின் பொற்காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமன்றி, தென்னிந்திய கடல்வணிகர்கள் தங்கள் சரக்குகளை மேற்கேயும், சீனாவுக்கு கொண்டுசெல்லும்போது இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகவும் விளங்கியது.

அவ்வமயம் இந்தியாவில் இராமேஸ்வரம் கோவிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோவில் விளங்கியது.  ஆனால் அது இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் படைகளின் வழியைவிட இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்துவரும் இராணுவத்தின் வழியில் அதிகமாகவே இருந்தது.  அதனால் திருக்கேதீஸ்வரம் உள்ளான அளவுக்கு அதன் தோழமைக்கோவிலான இராமேஸ்வரம் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தது.

திருக்கேதீஸ்வரத்தின் செழிப்பு வன்னித் தமிழர்களின் ஏற்றத்தாழ்வின்போது அதிகமாகவும், இந்தியத் தீபகற்கத்தின் ஏற்றத்தாழ்வின்போது மறைமுகமாவும் ஏற்றத்தாழ்வடைந்தது.

சோழர்கள் பொலனருவையிலிருந்து இலங்கையில் ஆட்சிபுரிந்தபோது மாந்தோட்டமும், திருக்கேதீஸ்வரமும் தாற்காலிகமாக அவற்றின் புகழின் உச்சக்கட்டத்தை அடைந்தன. அது ராஜராஜேச்சுரம் என்றுகூட அழைக்கப்பட்டது. அரசியல்நிலை மாறியவுடன் அப்புகழ் உடனேயே மங்கிக் குன்றியது.

முதலாம் சுந்தரபாண்டியனின் காலத்தில் [பொ.ஆ. 1251-80] அரசச்சலுகைபெற்ற திருக்கேதீஸ்வரம் கோவில் பாண்டியச் சிற்பக்கலையின்படி புதுப்பித்துக் கட்டப்பட்டது[4]. அதற்குச் சான்றுகள் தற்பொழுது கோவிலருகிலுள்ள கற்களின்வாயிலாகவும் கிடைக்கின்றன.

சடையவர்மன் வீரபாண்டியனின் குடுமியாமலைக் கல்வெட்டுகள் அவன் இலங்கை மன்னனை வென்று திறைபெற்றதாகவும், கோணமலை[திரிகோணமலை]யில் பாண்டியரின் இரட்டைமீன் சின்னத்தைப் பொறித்ததாகவும் கூறுகின்றன.  கடற்படையில் வலிமையுள்ள பாண்டியனான அவன் திருகோணமலைக்குக் கடல்வழியாகச் சென்றிருந்தாலொழிய திருக்கேதீஸ்வரமும் அப்பொழுது அரசனின் கவனத்தைப் பெற்றிருக்கலாம்.

போர்ச்சுகீசியர்கள் பொ.ஆ 1540ல் இலங்கையின் வடக்குக் கடற்கரைப்பக்கம் வந்தபோது திருக்கேதீஸ்வரம் ஒரு பெரிய இந்துசமய வழிபாட்டுத்தலமாகவே இருந்தது.[5]

எமர்சன் டெனந்ட் [Emerson Tennent] கொடுத்துள்ள விவரிப்பைக் காண்போம்:

போர்ச்சுகீசியர் நெடுங்காலமாக யாழ்ப்பாணத்தை அடையவிரும்பினாலும், அது செழிப்பான தெற்கிலிருக்கும் அவர்களது குடியிருப்பின் பாதுகாப்புக்காக அல்ல; அவர்களது கடல்வணிகத்திற்காகவேஅப்படியிருந்தும் 1617ல்தான் மலபார் அரசபரம்பரையைப் பதவிநீக்கம்செய்து, அதைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். அதுவரை அவர்களது அரசியலுக்கு மசியாத அப்பகுதி, அப்பொழுது மதமாற்று நடவடிக்கைக்கு உற்சாகமளிக்கும் வாய்ப்பை அளித்தது

1544ல் அவர்களின் முதல் படையெடுக்கும் முயற்சி தக்காணத்தின் தென்கடற்கரைப் பகுதிகளிலுள்ள இந்துக் கோவில்களைச் சூறையாடப் பொருத்தமாக அமைந்தது. [யாழ்ப்பாண]தீபகற்பத்தின் அரசரை அழைத்து, போர்ச்சுகலுக்குத் திறைசெலுத்தும் நாடாக ஆகாவிட்டால் [போர்ச்சுகலின்] கொள்ளைக்காரக் கடற்படைத் தாக்குதலை எதிர்நோக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இடப்பட்டதுஅரசர் முன்னதைத் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு நாலாயிரம் டக்கெட்டுகள் திறைசெலுத்த ஒப்புக்கொண்டார்அந்த ஆண்டிலேயே செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியரின் கட்டளைப்படி ரோமன் கத்தோலிக்க மதப்பிரசாரகர்களால் ஏராளமானவர் மன்னாரில் மதமாற்றம் செய்தனர். யாழ்ப்பாணப்பட்டினத்தின் அரசர் சமயமாற்றத்தை வேரறுக்கவேண்டி புதிதாக மதம்மாறிய அறுநூறுபேருக்கு மரணதண்டனை கொடுத்தார்ஆயினும், இந்தத் துன்மார்க்கம் அவரது அரண்மனையையே அடைந்ததுஅவரது மூத்தமகன் மதம் மாறினான்எனவே, அதன் விளைவாக, அவனுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டதுஅவரது இரண்டாம் மகன் தந்தையின் தாளாத சினத்திலிருந்து தப்பிக்க கோவாவுக்கு ஓடினான்.

இந்தக் கடுமையான நடவடிக்கைளுக்கு எதிராக மெதுவாக, பாதுகாப்பாக, ஆனால் தீவிரமாகப் பழிவாங்குமாறு மூன்றாம் போப் ஜான் [போர்ச்சுகலின்] இந்திய வைஸ்ராயுக்கு உத்தரவிட்டார்உடனே, மன்னாரில் கிறித்தவர்களின்மீது அடக்குமுறை அடுத்தடுத்து நிகழ்வதாகவும், கோவாவுக்கு ஓடிவந்த அண்ணனின் அரசுரிமையை யாழ்ப்பாண அரசர் பறித்துக்கொண்டதாகவும் உள்ள இரண்டு முறையீடுகளின்படி நடவடிக்கையெடுக்கவேண்டி, இந்திய வைஸ்ராய் டான் கான்ஸ்டன்டீன் தெ பிரகான்சா [Don Constantine de Braganza] யாழ்ப்பாணத்திற்கு எதிராக மற்றொரு கடற்படையை 1560ல் அனுப்பினார். தெ கோட்டோ [De Couto] தனது இந்திய வரலாற்றின் எழுபதாவது பத்தாண்டில் இந்த புனிதப்போரைப்பற்றி பகட்டான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்

வைஸ்ராயுடன் கப்பலில் பயணித்த கொச்சி பிஷப் தரையிறங்கியவுடன் ஒரு வழிபாட்டிடத்தை நிறுவி, நகரின்மீது தாக்குதலைத் துவங்குவதற்காக படையெடுத்துவந்த இராணுவத்தின் முன்னிலையில் தொழுகைநடத்தி, போரில் விழுவோருக்கு முழுமையான சலுகைகளையும், சிலுவைக்காக உயிர்துறப்போருக்கு முழுபாவமன்னிப்பும் வழங்கினார்

தாக்குதல் வெற்றியடைந்தாலும் முடிவு மோசமாக இருந்தது.  பல பிரபுக்கள் எதிரிகளின் பீரங்கிகளால் கொல்லப்பட்டனர்.   நகரம் வீழ்ந்தது, அரண்மனை எரிக்கப்பட்டது. அரசரும், அவரைச் சேர்ந்தவரும் வெற்றிகொண்டோருடன் உடன்படிக்கை செய்துகொள்ளவைக்கப்பட்டனர்.  கண்டியிலிருந்தும், கோட்டாவிலிருந்தும் ஆறாம் புவனேகாவின் மருமகனும், தர்மபாலாவின் தந்தையுமான திரிபுல பந்தாவால் கொண்டுவரப்பட்ட பொக்கிஷத்தின் மறைவிடத்தைத் தெரிவிக்கவேன்டுமென்றும், அதற்கும் மேலாக, எண்பதாயிரம் குருசேடோ பணமும் தரவேண்டுமென்றும், மன்னார் தீவை போர்ச்சுகீசியருக்கு விட்டுத்தரவண்டுமென்பதும் என்பதே அந்த உடன்படிக்கை.  உடனே மன்னார் தீவு ஆக்கிரமிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

சிங்கள அரசர்களுக்கு உதவியாக போர்ச்சுகீசியருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக யாழ்ப்பாண அரசரைத் தண்டிக்கவேண்டி, 1591லும், 1604லும், கோவாவிலிருந்து புதிய படையெடுப்புகள் மேற்கொள்ளப்பப்பட்டனஆனால், ஒவ்வொரு தடவையும் பயமுறுத்தல் அபாயத்தைத் தடுக்க வலிமையற்றவர் தானாகச் சரணடைந்தனர். ஆயினும், ஏற்கனவே யாழ்ப்பாணப் பகுதியைப் போர்ச்சுகலின்கீழ் கொண்டுவரும் திட்டமிருந்தாலும், அதை நிறைவேற்றத் தகுந்த தருணத்திற்காக அச்செயல் ஒத்திப்போடப்பட்டுவந்தது.

“1617ல் கான்ஸ்டன்டைன் தெ சா நொரனாவின் [Constantine de Saa Norana] தலைமையில் ஒரு படை யாழ்ப்பாணத்தை முன்புசொல்லப்பட்ட ஒருமுகப்பட்ட காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கிக் கைப்பற்றியதுஅரசர் கைதுசெய்யப்பட்டு கோவாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டார். மலபார் இளவரசர்களில் கடைசியான அவரது மருமான் அவரது அரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டி ஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டில் சேர்ந்தார்அவரது சொத்துரிமை போர்ச்சுகலின் ஆட்சிப்பகுதியாக முறைப்படி இணைக்கப்பட்டது.

எமர்சன் டெனன்ட்டால் தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்படாதிருந்தாலும், இந்த வரலாற்றுச் சூறாவழிச் சுழல் நிகழ்ச்சிகளான போர்ச்சுகீசியரியன் காலத்தில் திருக்கேதீஸ்வரம் ஒரு முக்கியமான பங்கை வகித்தது.

தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர்.  சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.

மன்னார்த்தீவு மக்களின் சமயமாற்றம் துவங்குவதற்குமுன்னரே திருக்கேதீஸ்வரம் கோவிலின் சூறையாடல் நிகழ்ந்துமுடிந்தது.  அதைப் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களே மன்னார் கோட்டையைக் கட்டப் பின்னர் உறுதுணையாகவிருந்தன.  இதைப் பழிவாங்க யாழ்ப்பாண மன்னர் எடுத்துக்கொண்ட வலுக்குறைந்த முயற்சிகளே படுகொலையாக பூதக்கண்ணாடிகொண்டு காட்டப்பட்டன.

இதில் நாம் கருத்தில்கொள்ளவேண்டியது என்னவென்றால், திருக்கேதீஸ்வரத்தின் வீழ்ச்சியுடன் இலங்கையின் தமிழ் அரசுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு, தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.

[திரிகோணமலையில் குடிகொண்டுள்ள] கோணேஸ்வரரின் பக்தனான இலங்கேஸ்வரன் இராவணனும் அவனது மாமனார் மயனும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையான கோவிலைக் கட்டினார்கள் என்பது மரபு. இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பிச்செல்லும் வழியில் இராமேஸ்வரத்தில் சிவனுக்குக் கோவில்கட்டி வழிபட்ட இராமர், திருக்கேதீஸ்வரத்திலும் சிவபெருமானை வழிபட்டதாகப் புகழப்படுகிறது.

மகாபாரதத்தின் நாயகனும், கிருஷ்ணனின் உறவினனும், சீடனுமான அருச்சுனன் தெற்கே தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது திருக்கேதீஸ்வரத்திற்கும் வருகைதந்தான் என்பது ஐதிகம்.  இந்த யாத்திரையின்போதுதான் அவன் மாந்தோட்டத்தையடுத்த பகுதியை ஆண்டுவந்த நாக இளவரசியான அல்லி அரசாணியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.  மன்னார்த்தீவை அடுத்து இலங்கை நிலப்பரப்பில் காணப்படும் இடிபாடுகள் அல்லியின் கோட்டையென்று குறிப்பிடப்படுகின்றன.

பொது ஆண்டுகளுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பவுத்த இலக்கியங்கள் இவ்விடத்தை மஹாதித்த என்கின்றன. மரபையொட்டிச் சில கற்றறிவாளர் குறிப்பிடுவதைப்போல இராமர், அகத்தியர், அருச்சுனன் ஆகியோர் மாந்தோட்டத் துறைமுகத்தின்மூலம் கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தார்களென்றால், இளவரசன் விஜயனும்[6] அதேவழியில்தான் வந்திருக்கவேண்டும்.  அப்படியிருந்தால், விஜயனோடு வந்த உபதீசன் என்ற அந்தணப் பூசாரி வழிபாடு நடத்திய அங்கிருந்த சிவன்கோவில் திருக்கேதீஸ்வரத்தைத்தவிர வேறெதுவாகவும் இருக்கமுடியாது.

யாழ்ப்பாணத்து டச்சு கவர்னருக்காக 1736ல் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் புலவரால் தயாரான [எழுதப்பட்ட] வரலாற்று மரபுகளின் பதிவான யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது:

பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.

ஒன்பது-பத்தாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மக்கள் குடியிருந்த பகுதிகளில் தமிழர்களின் மேலாண்மையை விவரிக்கும் ராஜ ரத்தினாகர என்ற சிங்கள நூல், சைவசமய முதல்வர்களின் காலத்திய மாந்தோட்டச் செழிப்பை ஒட்டியதாகவே உள்ளது.

திருக்கேதீஸ்வரம் கோவிலை மீட்டெடுக்கும் [புணருத்தாரணம்] பணியின் முதல் முயற்சி மாபெரும் இந்துசமயச் சீர்திருத்தவாதியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரால் செய்யப்பட்டது. ஆயினும், அக்காலத்துச் சைவர்களின் அக்கறையின்மையாலும், கிறிஸ்தவர்களின் எதிர்ப்பாலும் அவரது முயற்சி உடனே வெற்றியை எதிர்கொள்ளவில்லை.

அவர் காலமடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருக்கேதீஸ்வரம் கோவிலின் தொன்மைப் புகழைப்பற்றி நிலையான பதிவைத் தனது அலுவலக அறிக்கையில் எழுதியிருந்த ஸர் வில்லியம் ட்வைமனால் 13, டிசம்பர் 1893ல் யாழ்ப்பாணச் சைவர்களால், யாழ்ப்பாணக் கச்சேரியில் [அரசு அலுவலகம்] நடத்திய ஏலத்தில், நாற்பது ஏக்கர் காட்டுநிலம் யாழ்ப்பாணச் சைவர்களால் வாங்கப்பட்டபோது அவரது கனவு நிறைவேறியது.

எந்தவொரு புதுப்பிக்கும் வேலையும் செய்யப்படும்முன்பு இந்தப் பண்டைய கோவில் இருந்த நிலத்தின் நிலைபற்றிய பதிவு நவம்பர் 7, 1887ல் திருக்கேதீஸ்வரம், மஹாதிட்ட, மாதோட்டம் அல்லது மாந்தொட்டை[7], என்ற தலைப்பில் டபில்யூ. ஜே. பொவாக்கே [W. J. Boake] சமர்ப்பித்த கட்டுரையிலிருந்து திரட்டிக்கொள்ளலாம்.

செதுக்கப்பட்ட சிலைகளின் சில துண்டுகள், உடைந்த ஓடுகள், செங்கல்கள், மட்பாண்டச் சில்லுகள் தவிர வேறெதுவும் இப்புராதன நகரின் நிலப்பகுதிக்குமேல் காணப்படவில்லைஇந்நிலம் மட்டுமீறிப் பெரிதாக வளர்ந்த, அடர்த்தி குறைந்த, தாழ்ந்த காடாகிவிட்டிருக்கிறது; சில தனக்கா, பவொப்பா மரங்கள்தாம் பெரிதாக வளர்ந்துள்ளனபழைய தெருக்கள் இருந்ததற்கான அடையாளமும், இரண்டுமூன்று கிணறுகளும் காணப்படுகின்றனஅங்கிருந்த குன்றின் மையத்திற்குப் பக்கத்தில் ஏதோ ஒரு இடத்திலிருந்த எந்தவொரு செங்கல்கட்டிடத்தின் அடித்தளத்தின்மேல் நகரின் பெரும்பகுதி நின்றது என்று நம்பினேனோ, அவை அரண்மனை என்று குறிப்பிடப்பட்டன; கோவிலின் வாசல் கிணற்றுக்கு அருகாமையில் இருந்ததென்று சொல்லப்பட்டது.

[கட்டுரை சமர்ப்பித்தபோது] கூட்டத்திற்கு வந்திருந்த பி. இராமநாதன் [பிற்காலத்தில் ஸர் பொன்னம்பலம்] இந்த அறிக்கையின் ஒருபகுதிக்கு மறுப்பு தெரிவித்ததுடன், இவ்விடத்தின் இந்துசமய நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஒரு கருத்தையும் சேர்த்தார்.  மேலும், பழைய கட்டிடங்களின் இடம் உலகியல் சார்ந்த [secular] நகரின் பகுதியல்லவென்றும், கோவிலின் உடமையென்றும், அந்தப் பகுதியின் மக்கள் கோவிலின் அதிகாரிகள், பக்தர்கள், பணியாளர்கள் என்றும் சொன்னார்.  அப்பகுதியின் ஒரு குறிப்பிடத்தக்க தனித்தன்மை —  பொவாக்கேவும், முந்தைய பிரித்தானியப் பார்வையாளர்களும் கவனிக்கத்தவறியவை, கோட்டையென்று சொல்லப்பட்டதைச் சுற்றியிருந்த இரட்டை அகழிகள் — வெளித்தடுப்பு அரணாகக் கடல்நீரையும், உட்பாதுகாப்பாக நன்நீரையும் உள்ளடக்கி, செல்வச்செழிப்பான கோவிலின் உடமைகளுக்கு வலுவான பாதுகாப்பாக அமைந்தன என்று இப்பொழுது தெளிவாகிறது.

கோவில்நிலத்திலிருந்த சோழர்கிணறு, போர்ச்சுகீசியர் காலத்துக்குமுன் வழிபாட்டிலிருந்த சிவலிங்கம், உட்கார்ந்திருக்கும் நந்தி, அப்போது மண்மூடியிருந்த கோவில் அடித்தளத்தின் அருகிலுள்ள பிள்ளையார் திருவுருவங்கள் வாய்ப்பளித்த தடயங்களிலிருந்து தரைமட்டமாக்கப்பட்ட தலைமைக் கோவிலின் மூலமனை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை இந்துக்களின் வேண்டுதலின்படி காசியிலிருந்து புகழ்பெற்ற சிவலிங்கம் ஒன்று திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே தற்பொழுது ஆதிமூலமாக வழிபடப்பட்டுவருவதாகவும் இராமேஸ்வரத்திலுள்ள பதிவுகள் சான்றாக உள்ளன.

பண்டைய [கோவில் இருந்த] மிகச்சரியான நிலத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டு, 1903, ஜூன் 28ம் தேதியில் பிராணப்பிரதிஷ்டை [உயிரூட்டல்] செய்யப்பட்டது[8].

தற்போதைய சுவாமி மற்றும் அம்பாளின் சன்னதிகள் முதல் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மன்னாரில் பணியாற்றிய இந்துப் பொது அலுவலர்களின் [public servants] தூண்டுதலால் மிகவும் பகட்டான அளவில் கட்டப்பட்டன. அவைகளும் காலப்போக்கில் சிதிலமடைந்தன.  அக்டோபர் 19, 1948ல் இந்துக்களால் கொழும்பில் ஒரு கூட்டத்தில் துவக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் கோவில் மறுநிர்மாணிப்புச் சங்கத்தின் [Thiruketheeswaram Temple Restoration Society] ஆதரவின்கீழ் புதுப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 1952ல் குடமுழுக்கும் [கும்பாபிஷேகம்] செய்விக்கப்பட்டது.

இது தற்போதைக்கு மையச்சன்னதிகளில் பூசைகளும், வழிபாடுகளும் தடையின்றித் தொடர உதவும்போது, ஒன்பது பிரகார சன்னதிகள், ராஜகோபுரம், திருமதில், மற்ற பக்கமண்டபங்களின் புதுப்பிப்புப்பணிகள் நடந்தன.

தென்னிந்தியாவில் கிட்டும் மிகச்சிறந்த சமய, [ஆகம]சிலைக்கலை வல்லுனர்களின் திறமையால் புதுக்கோவிலின் வரைபடமும், நில அமைப்புத் திட்டமும் மரபுசார்ந்த வழியில் உருவாக்கப்பட்டன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்குச் சுற்றுக்கட்டில் ஒரு உத்சவ மண்டபம் [வசந்த மண்டபம்] உடனிருக்கும், வெளிச்சுவற்றால் சூழப்பட்ட மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் இருக்கும்.  மாபெரும் பக்தர்திரளுக்கு இடங்கொடுக்கும்வகையில் வெளிச்சுவருக்கு வெளியே சுற்றிலும் அகலமான பகுதியில் இரதவீதி அமைந்திருக்கும்.  அதைச் சுற்றியுள்ள நிலங்களில் குறுக்குநெடுக்கான வீதிகள் பூங்காக்கள், பொழில்கள், தோப்புகள், மடங்கள், சத்திரங்கள், அர்ச்சகர், அடியார்கள், கோவில் பணியாளர்களுக்கான வீடுகள் இவற்றுக்கு ஏற்பாடளிக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

திட்ட அமைப்பில் குருகுலம், சமய மேற்படிப்புக்கான கல்லூரி, சாதுக்களுக்கான ஓய்விடம் இவற்றிற்கும் திட்த்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  குருகுலம் ஏற்கனவே உருவாகியிருக்கிறது.  கோவிலுக்குச் செல்லும் வழியில் அநாதை இல்லத்திற்கான இடவசதியுடன் மகளிர் நல்வாழ்வு மையம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது.

நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

இந்தக் கும்பாபிஷேகத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி விநாயகர், சுப்பிரமணியர், நந்தீஸ்வரர் இவர்கள் உட்பிரகாரத்திலுள்ள தத்தம் சன்னதிகளில் நிறுவப்பட்டனர்.நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

‘ஈ’ என்னும் இசைத்தொனிக்கு துல்லியமாச் சுரம்கூட்டிய, தூய தாமிரம்-காரீயக் கலப்பு உலோகத்தில் லண்டனில் நன்கு அறியப்பட்ட வார்ப்பகத்தில் வார்த்த, நான்கடி விட்டமுள்ள கோவில்மணி ஒன்று ஏற்கனவே கடல்வழியாகத் திருக்கேதீஸ்வர்த்திற்கு வந்துகொண்டிருக்கிறது.  அதன் எடை ஒரு டன், மூன்று குவார்ட்டர்கள், ஐம்பதுக்கு, ஐம்பதுக்கு ஐம்பது அங்குல வடிவமைந்தது.  அதன் மொத்த எடை இரண்டு டன் ஆகிறது.  தகுந்த மணிக்கூண்டும் கட்டப்பட்டுவருகிறது.

1960ன் திருவெம்பாவுக்காக கடல்மட்டத்திற்கு எழுபத்தைந்தடி உயரத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் பலமைல்கள் வட்டாரத்திலிருக்கும் இந்துக்களை திருப்பள்ளியெழுச்சி பாடித்தொழுவதற்காக அழைத்தெழுப்யும் என நம்பப்படுகிறது.

பத்துவருட இருப்பை நிறைவேற்றிய திருக்கேதீஸ்வரம் கோவில் புனரமைப்புச் சங்கம் அதிகமாகச்  என்பதை கோவிலுக்கு வருகைதந்தால்மட்டுமே ஒரு இந்து அடியாரால் உணரவியலும்.  யாத்திரிகர்களின் வசதிக்குத் தேவையானதை நிறைவேற்றும் பல மடங்களுக்கும், கோவிலின் வாயிற்படிக்கு நேராக வருவதற்கு நல்ல வண்டிவரக்கூடிய தார்ரோடும் உள்ளது. பாலாவி ஆற்றில் புனித நீராடுவதற்காக சிமிண்ட் படிகளுல்ல குளிக்கும் துறையும், அருகாமையில் மற்ற நோக்கத்திற்காக குழாய்த் தண்ணீர் வசதியும் உள்ளன.  அடியார்களின் அனைத்து அன்றாடத் தேவைகளை எதிர்கொள்ள மின்வசதி, தொலைபேசி இணைப்புள்ள துணை அஞ்சல் அலுவலகம், கடைகள், மன்னாரிலிருந்து அடிக்கடி பஸ் சேவை உள்ளன.

அவரது சமயத்தின், பண்பாட்டின், மொழியின், இந்நாட்டில் நிலைத்துநிற்கும் சின்னமான திருக்கேதீஸ்வரத்திற்குத் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வருகைதருவது இலங்கையிலுள்ள ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமையாகும்.

தொண்டர் நாள்தொறுந் துதிசெய் அருள்செய்கே தீச்சர மதுதானே!

***

இக்கட்டுரை பிரதிலிபி வலையத்தில் ஆங்கில-தமிழ் மொழியாக்கப் போட்டியில் வெளிவந்திருக்கிறது.

***

[1] இக்கட்டுரை சிலோன் பல்கலைக் கழகத்தில் இந்து சமயப் பகுதிக்காக எழுதப்பட்டது.

[2]  பண்டு நால்வருக் கறமுறைத் தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை

கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்

வண்டு பண் செயு மாமலர் போழில்மஞ்ஞை நட்முடு மாதோட்டந்

தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தேச்சர் மதுதானே.

— திருஞானசம்பந்தர்

[3]  மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி

மாவின்கனி தூங்கும்பொழின் மாதோட்டநன் நகரிற்

பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்

தேவன்னெனை யாள்வான்றிருக் கேதீசரத் தானே.

— சுந்தரமூர்த்தி நாயனார்

[4] சிதம்பரம் கோவில் கல்வெட்டுகளும் இதைத் தெரிவிக்கின்றன.

[5] பொது ஆண்டு 1505ல் லொரென்சா த அல்மெய்டா [Lorenza de Almeyda] காலி[Galle]க்கு வந்தார்.  ஜூடாசின் மூன்றாவது வைஸ்ராயான லோப்பெஸ்  சுவாரெஸ் [Lopez Suarez] 1517ல் கொழும்புக்குப் படையெடுத்து வந்தார்.  லோப்பே தே பிரிட்டோ [Lope de Brito] 1520ல் மன்னாருக்கு அருகிலுள்ள அர்ரிபூ முத்துக்குளிக்கும் கரைக்கு வந்தார்.

[6] பவுத்தநூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் விஜயனை இலங்கையின் முதல் அரசனாகக் குறிப்பிடுகின்றன.

[7] Royal Asiatic Society Journal, Volume No. 35

[8] திருவிழா விபரங்களுக்கு அத்தேதிய “யாழ்ப்பாண இந்து இசைப்பெட்டி”ச்  [Jaffna Hindu Organ] செய்தித்தாளைப் பார்க்கவும்.

63 Replies to “திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்”

 1. இது போன்ற அருமையான அாிய தகவல்களைக் கொண்ட கட்டுரைகள் தினமணி இந்து

  தினமலா் போன்ற முனனணி பத்திாிகைகளில் வெளியிடப்படவேண்டும்.இவ்வளவு

  தகவல்களை எங்கே எப்படி திரட்டினீா்கள்.

  கட்டுரை ஆசிாியருக்கு எனது பாராட்டுக்கள்.

 2. அன்பர் திரு மகாதேவனுக்கு வனி. அவர் தமிழீழத்தில் பயணம் சென்று வவ்தபின், தம்முடைய பயண அனுபவத்தை என்னுடன் தொலைபேசியில் பலமுறை பகிர்ந்து கொண்டார். கட்டுரையாக எழுதினால் முழிவிவரம் எமக்குக் கிட்டுமே என என் ஆவலைத் தெரிவித்தேன். இது அப்பயணக் கட்டுரையின் முதற் பகுதி; இன்னும் தொடர் கட்டுரைகள் வர இருக்கின்றன என நம்புகின்றேன்.அந்நிய மதத்தினரின் தாக்குதல்களால் விளைந்த அழிவுக்குப் பின்னரும் இஹ்திருத்தலம் சீரும் சிறப்போடும் விளங்க்குகின்றதெனின் ஈழத் தமிழரின் சைவச் சிறப்பின் மாண்பன்றோ. சர்.பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தலைவர்கள் வமக்குக் கிடைப்பது எந்நாளோ?

 3. வனி அன்று. நன்றி. வவ்த பின்- வந்த பின். முழுவிவரம்

 4. A long quotation from Emerson Tennent. In which book has he recorded these or you have taken from?

  You have’t – or the original writer of this article – given the reference. Could you find out and give?

 5. BSV

  Sir Emerson Tennent was a colonial secretary of ceylon between 1845 –1850. He has written books on Ceylon. I am not sure which book deals with the above quote.

  A book written by late S Arumugam, an Irrigation Engineer, on Thiruketheeswaram,
  ( published in 1980 and 1990 ) refers to Tennent’s book “Ceylon ” (published in London 1859 )in its bibliography.This may be the source.

  The book Thiruketheeswaram deals with the history of the temple.

  A tamil book on Thiruketheeswaram written by A Kandiah appears in Noolaham website. This too deals with the history.

 6. Rishi!

  The source here is not direct, isn’t?

  After admitting you’re not sure about the source, you go on to refer to one Engineer who quotes the source in the bibliography. It means that the bibliography must be giving the name of the book and the publishers.

  Please go to that bibliography and help me with the source so that I can access it from my efforts. In such an article dealing with history, we should rely on the direct sources. If we rely on the secondary sources, the secondary source should at least quote the title of the source (or the book). In internet, many fake quotations are being afloat. To lay any doubt to rest, please write the name of the book by the office where this long quotation occurs.

 7. BSV

  Yes I repeat that I am not sure which one of Tennent’s books deal with the quote.
  I thought you were interested in knowing more historical facts about this temple, hence I suggested two b
  ooks. The second one is available in Noolaham website under book category. It was not quotations as you have stated. I would not have mentioned these books had I realised that your intention is something else. Sorry.

  The tone of your comment hurts. Further it shows that you do not believe in the quote and wanted to dig it for some reason. In the beginning of my comment I have clearly stated that I am not aware of the source, so finding fault on me is unreasonable. Even if I come to know the source in the future, I doubt I will reveal it to you. Bye.

 8. இனி வரும் தொடர் கட்டுரைகளில் திரு மகாதேவன் இவ் ஆலயத்தைப் பற்றி விரிவாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். கத்தோலிக்க மதத்திற்கு மாறிய அறுநூறுபேர் கொல்லப்பட்டதை கட்டுரையில் காணலாம். இவர்கள் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனின் படையை சேர்ந்தவர்கள்.மதம்மாறி போர்த்துக்கீசருடன் சேருவதன்மூலம் சங்கிலியனைக் கொன்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது அவர்களது எண்ணம். சங்கிலியனின் மகன்களும் நினைப்பும் அதுவே.இதனால்தான் இக்கொலைகள் நிகழத்ந்தன. இப்படிப்பட்ட நிகழ்வுகள் குடும்ப கொலைகள் இலங்கையின் தென் பகுதிகளிலும் பலதடைவைகள் நடைபெற்றுள்ளன.வரலாறு இவற்றைக் கூறும்.

  ஈழத்தில் இப்பொழுதும் ஹிந்துக் கோவில்கள் அழிக்கப்படுவதும் மதம் மாற்றப்படுவதும் நடைபெற்று வருகின்றன.1990களில் திருக்கீதீச்வரம் சிங்கள பவுத்த அரச படைகளினால் அழிக்கப்பட்டது. சுற்றிவர உள்ள எத்தனையோ மடங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டன.” Temple priests other employees and residents in the vicinity were forcibly driven away. The whole place was desecrated. Even the moolasthanam was found fully exposed. Most heinous and unforgivable part of the vandalism is the disfigurment and gouging of the Third Eye of the Icon of Somaskanda ” ( Destruction of Hindu Temples – book )
  சிங்கள பவுத்த விமானப் படையினரால் குண்டுகள் போடப்பட்டு அளிக்கப்பட்ட கோவில்களும் பல ஈழத்தில்உள்ளன. திருக்கோநேஸ்வரத்தில் உள்ள விநாயகர் சிலையை எடுத்து கடலில் வீசிவிட்டு விநாயக கடவுள் குளிக்கப் போய்விட்டார் என எழுதிவைத்த வரலாறும் உண்டு. இன்று கதிர்காமம் திருக்கோணேஸ்வரம் முற்றிலுமாக சிங்களவர்களின் கையிலேயே உள்ளன.மத மாற்றங்களின் வேகத்தைப்
  பார்த்தால் இருபது முப்பது வருடங்களின்பின் ஈழத்தில்இந்துக்களின் தொகை மிக அற்பமாகவே இருக்கும்.வடக்கில் கிறிஸ்தவம் பவுத்தம், கிழக்கில் இஸ்லாம், மலையகத்தில் கிறிஸ்தவம் பவுத்தம் ஆகியவற்றால் இந்துக்கள் அழிந்து கொண்டிருப்பதுதான் இன்றைய நிஜம்.

 9. சிங்கள-பவுத்த இனவெறியின் காரணமாகவே ஹிந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டன. இதற்கு காரணம் யாழ்வாழ் – வாழ்ந்த தமிழ்மக்களில் பெரும்பாலோர் சைவ ஹிந்துக்கள் காலம்காலமாக. அவர்களை அழித்தல் மட்டுமன்றி, அவர்கள் வாழ்க்கைச்சின்னங்களையும் அழிக்கவேண்டும் எனபது அவ்வினவெறியின் வெளிப்பாடு. கூண்டோடு அனைத்தையுமே அழித்தலின் பெயர் ஜெனோசைட். எங்கும் இது நடக்கும். ஆதிகாலத்திலிருந்து வருவது. ஓரின மக்களை ஒரேயடியாக அழித்தலும், அல்லது அவ்வினமக்களை அடிமைப்படுத்தி தம்மோடு கலத்தலும் (மிசஜெனேஷன்) வரலாறு. War for territorial conquest involves complete annihilation of the other side. சிங்கள்- பவுத்த இனவெறி நடாத்த்தொடங்கியது ஆதிகாலம் இல்லை. 1980 களிலிருந்துதான். இதைத் தடுக்க முடியாது. தடுக்க வேண்டுமானால் அழிக்கப்படும் மக்கள் மாபெரும வலிமையாக உருவாகவேண்டும். அப்படி உருவாக முயற்சித்த இயக்கம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டது. இப்போது உங்களைக் காப்பாற்றுவாரில்லை. இந்தியா நுழைந்து காப்பாற்ற முடியாது. அது சிங்கள் அரசுடன் இணக்காமாகவே இருக்க முய்ல்கிறது. இல்லாவிட்டால் அவ்வரசு சீனர்களோடு சேர்ந்துவிடும் அபாயமிருப்பதால். அது மோடி அரசாக இருந்தாலும் காங்கிரசாக இருந்தாலும் செயலொன்றே. மேலும், இந்தியா தலையிட்டால், எங்கள் உள்ளாட்டு விடயத்தில் தலையிட நீ யார்? என்றால் உலக நாடுகள் அதை ஆமோதிக்கும். தமிழ்நாடு வாழ் மக்கள் யாழ்தமிழருக்காக முன்பு பேசவும் இல்லை; செயல்படவுமில்லை. பேசியவர்கள் இகழப்பட்டார்கள்; தோறகடிக்கப்பட்டார்கள். அவர்கள் எண்ணிக்கயும் சொற்பம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்காக வரவுமில்லை. இனியும் வரமாட்டார்கள். சிங்கள-பவுத்த மனது அதுவாக இரக்கப்பட்டால் மட்டுமே இந்துக்கோயில்கள் யாழ்ப்பாணத்தில் கொஞ்சமாகவாவது இருக்கும்.You may pray your God to help your survival as Shaiva Hindus.

  (All I’ve written will appear to be heartless, but it is the only truth I know from history)

 10. திருவாளர்கள் மஹாதேவனின் கட்டுரையும் ரிஷியின் கருத்துக்களும் நெஞ்சொடு கிளத்தல். அவர்கள் அன்று அழித்தார்கள்; இவர்கள் இன்று அழிக்கிறார்கள் என்று புலம்பிவிட்டால் அழிப்பவர்கள் நிறுத்தப்போவதில்லை. நூறு நூல்களிலிருந்து எடுத்துப்போட்டு யாரார் அழித்தார்கள் என்று நிரூபித்துவிட்டால் கோயில்கள் பிழைத்துவிடுமா?

  For your own satisfaction, and also the satisfaction of the readers, you may write; I’ll read.

 11. பேரன்பிற்குரிய பெருந்தகை அன்பர் பீ எசு அவர்கள் சமூஹத்திற்கு அடியேன் தெண்டனிட்டு சமர்ப்பித்துக்கொள்வது :-

  \\\ All I’ve written will appear to be heartless \\

  should not be so humble, sir……… there are other ***less*** or **lesses** too.

  \\ சிங்கள-பவுத்த இனவெறியின் காரணமாகவே ஹிந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டன \\

  சிங்கள-பவுத்த இனவெறியின் காரணமாகவே……………

  அப்படீங்களா சாமி……….. ஆனால் ஈழத்தமிழ் அன்பர் ஸ்ரீமான் ராஜ் ஆனந்தன் அவர்கள் ………….. இதே தமிழ் ஹிந்துவில் தமிழீழ கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் தமிழர்களுடைய கோவில்களை ஒன்றொன்றாக அழித்தொழித்து அவர்களுடைய காணிகளை அபஹரித்தமையும் சொல்லப்பட்டுள்ளதே.

  https://tamilhindu.com/2012/03/snatched-up-lands-of-eastern-srilanka-3/

  தேவரீர் அதை கடாக்ஷிக்க விழையலாமே.

  தமிழர் தம் சொத்தை சிங்களக்காடையர் அழித்தாலும் நாசம் தான். போர்த்துகீசிய க்றைஸ்தவ ம்லேச்சர்கள் அழித்தாலும் நாசம் தான். ஈழத்து முஸ்லீம்கள் அழித்தாலும் நாசம் தான்.

  க்றைஸ்தவ முஸ்லீம்கள் தமிழீழத்தில் அழித்த கோவில்களையும் தமிழர் தம் காணிகளை அபஹரித்ததையும் …………. இவாஞ்சலிக்கல் பணத்தையும் ஜிஹாதிகள் பணத்தையும் பெற்று கூலிக்கு மாரடிக்கும் தீராவிட தீய சக்திகள் மறைக்க முயல்வது புரிந்து கொள்ள முடியும்.

  தேவரீர் ஏன் மறைக்க விழைகிறீர் என்பதும் தெரிந்த விஷயம் தானே.

  ரகுபதி ராகவ ராஜாராம் பதித பாவன ஸீதாராம்.
  ஈச்வர கேசவ தேரோ நாம் ஸப் கோ ஸன்மதி தே பகவான்.

 12. எனனைக்கிருத்துவன் என்று நினைத்து கற்பனையில் எழுதும்போது இப்படித்தான் எழுத முடியும்.

  சிங்கள பவுத்த இனவெறி கோயில்களை அழித்துக்கொண்டிருக்கிறது என்றெழுதியவர் இலங்கைத்தமிழர் ரிஷி. ஆக, அதுவே எடுத்துப்பேசப்பட்டது .

  போர்த்துக்கீசியர்களால் அழிக்கப்பட்டது என்று கட்டுரை சொல்கிறது. அது மறுக்கப்படவில்லை.

  இசுலாமியர் அழித்தார்கள் என்றால், கிருத்துவர்கள் அழித்தார்கள் என்றால் ஒன்றும் செய்யமுடியாது. அழித்ததது என்றால் இறந்த காலம். மீண்டும் கட்டலாம். இனி அழிக்கப்படாமல் கவனித்துக்கொள்ளலாம்.

  ஆனால் சிங்கள-பவுத்த இனவெறி அழித்துக்கொண்டிருக்கிறது. அப்படியே கிருத்துவர்களும், இசுலாமியர்களும் அழித்துக்கொண்டிருந்தார்கள் என்றாலும் இலங்கை சைவத்தமிழர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால், ஆளும் சிங்கள-பவுத்த அரசு அழித்தலை ஆதரிக்குமே தவிர தடுக்கவராது. ஏன் தடுக்க வேண்டும்? நமக்கு ஒத்தாசைதானே இவர்களும் செய்கிறார்கள் என்று நினைக்கும்.

  ஆக, இசுலாமியர்கள், கிருத்துவர்கள், சிங்கள-பவுத்தர்கள் இந்துக்கோயில்களை அழித்துக்கொண்டேயிருப்பார்கள். சிங்கள் ஆட்சியாளருக்கும் சிங்கள மக்களுக்கும் வேண்டாதவர்கள் தமிழர்களும் அவர்தம் சைவ மதமும்.

  இதைவிட பெரிய கொடுமையென்னவென்றால், மோடி இன்றைய அரசால் ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால், இலங்கைத்தமிழர் பிரச்சினையோடு சேர்த்துதான் இது பார்க்கப்படுகிறது. அழிக்கப்படும் கோயிலகள் போர் நிலமாக இருந்த ஒன்று. யாழ்ப்பாணத்தமிழர்கள் அனைவருமே க‌வனிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கப்படவேண்டியவர்கள் எனப்து இன்றைய நிலை. மீண்டும் விடுதலைப்புலிகள் எழந்தால்?

  இந்தியாவும் இலங்கை அரசும் இணக்கமாக இருக்கிறது என்றார் போன மாதம் இந்தியா வந்த இலங்கை அமைச்சர். இது ஜியோ போலிட்டிக்ஸ் இதில் இந்தியா தன் நலத்தைப்பார்க்கவேண்டும். இலங்கை சிறு நாடு என்று உதாசீனப்படுத்தி இலங்கைத்தமிழருக்காக நுழைந்தால் இலங்கை சீனரகளுடனும் பாகிஸ்தானியரிடம் சேர்ந்து பகை நாடாகும். ஏன் இலங்கைத்தமிழருக்காக 85 கோடி இந்தியர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக வேண்டுமென்றுதான் இந்தியா நுழையாது. இன்னொரு நாடு – அதுவும் க்டலகடந்த நாடு – அங்கு வாழும் சிறு கூட்ட மக்களுக்கு ஏன் இந்தியா போய் உதவ வேண்டும்? தமிழர்கள். அப்படியா? தமிழ்நாட்டிலேயே அவர்கள் வேண்டப்படாதவர்கள் என்று மத்திய அரசு நன்கு தெரிந்துகொண்டதே? ஏற்கனவே புலிகள் காலத்தில் ராஜீவ்காந்தியால் இந்தியா பட்டது பெரும்பாடு. மீண்டும் படவேண்டுமா என்று நினைக்குமே? மேலும், இலங்கைத்தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு கொதித்த காலத்தில் கூட வடவிந்தியர்கள் ஒரு சொல்கூட ஆதரவாக பேசவில்லை. அவர்கள் கணிப்பில் ஏன் நமக்கு இந்த வம்பு வேலை எனபதுதான்.

  தீர்வே இல்லை. கோயில்கள் அழிக்கத்தான்படும். நிறுத்துவது சிவனின் கையில்தான் இருக்கிறது என்று அவனிடமே வேண்டிக்கொள்ளுங்கள் என்றேன்.

  கிருத்துவர்கள் அழித்தார்கள்; இசுலாமியர்கள் அழித்தார்கள் என்று அரிசோனன் புட்டு புட்டாக ஆதாரங்களோடு வைத்தால் அது கிருஸ்ணகுமாருக்கு மகா மகிழ்ச்சியைத்தரும். இலங்கைத்தமிழருக்கு என்ன தரும்? அவர்கள் கோயில்கள் நிலைக்குமா? நிலைக்க என்ன வழி என்று கிருஸ்ணகுமார் அல்லது வேறெவராலும் சொல்ல முடியுமா?

 13. BSV

  நிலைக்க என்ன வழி ? நிலைக்க என்ன வழி?
  மிகப்பெரும் கேள்வி இது.விடை தெரிந்திருந்தால் கோவில்களை மாத்திரம் அல்ல தமிழ் இனத்தையே காப்பாற்ற முடியும்.

  1920களில் இருந்து தமிழர்களின் எதிர்ப்பு கிளம்பியது.சட்ட சபை பாராளுமன்ற பதிவுகள் நிரம்பியதுதான் மிச்சம்.1961லிருந்து சத்தியாகிரகம் சட்ட மறுப்பு சாத்வீகம் எனப் போராட்டம் தொடர்ந்தது. பலனில்லை. 1965ல் அரசாங்கத்துடன் சேர்ந்தும் பார்த்தாயிற்று .இருந்ததையும் இழந்தாயிற்று. 1970களின் கடைசியிலிருந்து ஆயுதப் போராட்டம் தொடங்கியது. அதுவும் இந்தியா பாகிஸ்தான் சீனா அமெரிக்கா ஆகிய நாடுகளினால் அழிக்கப்பட்டது. இப்பொழுதும் அரசாங்கத்துடன் ஒத்து ஊதுகிறார்கள் தமிழ் அரசியல் வாதிகள்.பலன் எதுவும் இல்லை.தமிழ் மக்கள் சிறைகளிலும் வீதி ஓரங்களிலும் வாடுவதுதான் மிச்சம்.

  எல்லா வழிகளுமே பல்வேறு காரணங்களால் பயன்தராது போயிற்று.

  நிலைக்க என்ன வழி ?

  சிவன் கண் திறக்கப் போவதில்லை .சிங்கள பவுத்த அரசு மனம் இரங்கப் போவதில்லை .திருகோணமலை கடலில் குளிக்கப் போன விநாயகர் -கண தெய்யோ– அங்கேயே மூழ்கி விட்டார்.கதிர்காமம் கத்தரகம ஆக மாறி சிங்களவர்களைத்தான் முருகன் -கத்தரகம தெய்யோ – காப்பாற்றுகிறார். சிலாபத்தில் உள்ள முநீச்வரமும் சிங்களவர்களின் சொத்தே. 1958ல் கலவரத்தின்போது பாணந்துறை எனும் சிங்களப் பகுதியில் இருந்த சிவன் கோவில் சிவாச்சாரியரை வீதிக்கு இழுத்து போட்டு கொளுத்தி எரித்ததிளிருந்து சிங்கள பவுத்த வெறி ஆரம்பமாயிற்று. இன்னும் முடிவில்லை. இந்நிலையில் நிலைக்க என்ன வழி?

  நான் எனது எண்ணத்தைப் பகிர்வது எனதோ வசகர்களதோ மனத் திருப்திக்காக அல்ல .எங்கோ ஒரு மூலையில் உள்ள நாலு பேராவது வாசித்து உணர்ந்து உணர்ச்சி வயப் படாது சிந்தித்து நானூறு பேருக்கு எடுத்து விளக்கி விவாதித்து ஆலோசித்து நல்லதொரு வழியைக் காட்டமாட்டார்களா என்ற ஆதங்கம்தான்.

  ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்காது கொச்சைப் படுத்தும் ஜடாயு ஜெயமோகன் போன்றவர்களைவிட BSV எவ்வளவோ மேல்தான். அதற்காக நன்றி.

 14. பேரன்பிற்குரிய பெருந்தகை அன்பர் பீ எசு அவர்கள் சமூஹத்திற்கு அடியேன் தெண்டனிட்டு சமர்ப்பித்துக்கொள்வது

  \\ எனனைக்கிருத்துவன் என்று நினைத்து கற்பனையில் எழுதும்போது இப்படித்தான் எழுத முடியும். \\

  நான் அப்படி **வெளிப்படையாக** எழுதியிருக்கிறேனா ஸ்வாமின். இல்லையே.

  \\ சிங்கள் ஆட்சியாளருக்கும் சிங்கள மக்களுக்கும் வேண்டாதவர்கள் தமிழர்களும் அவர்தம் சைவ மதமும். \\

  மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா போன்றோர் ஈழத்தில் ஹிந்து சிவசேனை என்ற பெயரில் ஹிந்துக்கள் ……….. சிங்கள் பௌத்த க்றைஸ்தவ இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளுக்கு இரையாகாத வண்ணம் முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகிறார்.

  இங்கே ஹிந்து மதத்தின் அங்கமாகிய சைவத்தினை தனியே ஹிந்து மதத்திலிருந்து பிரிக்கும் படி தங்களால் எழுத முடிகிறது. ஏன். எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே இது. இதே தளத்தில் நீங்களே இதே அவதாரத்திலேயே தாங்கள் சைவ சமயத்தை வெறுப்பதாக எழுதியிருக்கிறீர்கள். இங்கே என்னடாவென்றால் ஈழத்தமிழருக்காக முதலைக்கண்ணீர். சைவத்தை ஹிந்துமதத்திலிருந்து பிரித்தெடுக்கும் இழிவு ப்ரசாரம். ஆவியெழுப்புக் கூட்டங்களில் கூட இப்படி ஒரு நடிப்பைக் காணமுடியாது சாமி.

  உள்ளங்கை நெல்லிக்கனியாகிய விஷயத்திற்கு பக்கம் பக்கமாக வ்யாக்யானாதிகளும் தேவையோ ஐயன்மீர்.

  மோதி சர்க்கார் ஈழத்தமிழர்களுக்கு வீடுகளைப் புனர் நிர்மாணம் செய்துவதற்கு என்பதில் துவங்கி பற்பல விதமாக செய்து வரும் உபகாராதிகள் வெகு நிச்சயமாக இந்த தளத்தில் பகிரப்பட வேண்டும் என்பது தேவரீரது துஷ்ப்ரசாராதிகளால் நிச்சயமாகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக மோதி சர்க்கார் முனைப்பெடுத்து தமிழக மீனவர்களது வாழ்வில் ஒளிவிளக்கேற்ற முனைந்து கனரக படகுகள் வாங்க திட்டம் வகுத்தமையை நிச்சயம் இங்கு குறிப்பிட வேண்டும்.

  **********ஈழத்து சைவ மடாலாய புனர்நிர்மாணத்திற்காக இந்த தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தமிழ் ஹிந்து தள வாசகர்கள் அதில் பங்கெடுத்தோம். இது போன்ற ஈழத்துக் கோவில் புனர்நிர்மாண நடவடிக்கைகளைப் பற்றிய விபரங்கள் நமது தளத்தில் அடுத்தடுத்து பகிரப்பட வேண்டும் என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன். கூடவே ஈழத்து ஹிந்து இயக்கங்கள் ஈழத்து ஹிந்து மக்களை ஒன்றிணைத்து செய்து வரும் சமய போதனை வகுப்புகளைப் பற்றிய செய்திகளும் ஈழத்தைச் சார்ந்த ஹிந்து ஒருங்கிணைப்பு நிகழ்வுகளும் தொடர்ந்து நமது தளத்தில் பகிரப்பட வேண்டும். ஈழத்துக்கோவில்களை புனரமைப்பதற்கு ஹிந்துஸ்தான சர்க்கார் உபகாரமளிப்பது மற்றும் ஹிந்து இயக்கங்கள் உபகாரமளிப்பது என்பது பற்றி இந்த தளத்தில் நிச்சயமாகப் பகிரப்பட வேண்டும்.*********

  ஹிந்துக்களை சமய வாரியாக மொழி வாரியக ஜாதிவாரியாக பிரித்தெடுப்பது என்பது மட்டுமின்றி அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கும் வண்ணம் காழ்ப்புக் கருத்துக்களை ஊதி ஊதி வளர்த்தெடுப்பது ………….. தங்கள் எழுத்துக்கள் செய்யும் பணி.

  ஹிந்து மதத்தின் பல்வேறு சமயங்களிடையே பகைமையைப் பரப்பும் வண்ணம் யார் என்ன எழுதினாலும் அதை மிகக் கடுமையாக கண்டித்திருக்கிறேன் என்பதை இங்கு கருத்துப் பகிரும் வாசகர் அனைவரும் உணர்வர். எனது எழுத்துக்கள் அதற்கு சான்று. வெகு நிச்சயமாக அதைத் தொடர்வேன்.

  சமயங்களிடையே ஒற்றுமை மொழிகளிடையே ஒற்றுமை ஜாதிகளிடையே ஒற்றுமை என்பதனை விரிவாக எழுதுவதே உங்களுடைய நாசித்தனமான ஆதிக்க ஜாதி இனவெறி மற்றும் ஹிந்துமத த்வேஷ ப்ரசாரங்களுக்கு மாற்றாக இருக்கும்.

  நீங்கள் உங்களது ஹிந்துக்களைப் பிரித்தாள முனையும் துஷ்ப்ரசாராதிகளிலிருந்து வெளி வந்து ……………. ஹிந்து மக்கள் ஒருங்கிணைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்து நிகழ்வுகளில் பங்கேற்று தாங்களும் உய்வுற்று உலகையும் உய்விக்க விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு.

 15. // இதைவிட பெரிய கொடுமையென்னவென்றால், மோடி இன்றைய அரசால் ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால், இலங்கைத்தமிழர் பிரச்சினையோடு சேர்த்துதான் இது பார்க்கப்படுகிறது. அழிக்கப்படும் கோயிலகள் போர் நிலமாக இருந்த ஒன்று. யாழ்ப்பாணத்தமிழர்கள் அனைவருமே க‌வனிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கப்படவேண்டியவர்கள் எனப்து இன்றைய நிலை. மீண்டும் விடுதலைப்புலிகள் எழந்தால்?

  ……
  ……

  தீர்வே இல்லை. கோயில்கள் அழிக்கத்தான்படும். நிறுத்துவது சிவனின் கையில்தான் இருக்கிறது என்று அவனிடமே வேண்டிக்கொள்ளுங்கள் என்றேன்.

  கிருத்துவர்கள் அழித்தார்கள்; இசுலாமியர்கள் அழித்தார்கள் என்று அரிசோனன் புட்டு புட்டாக ஆதாரங்களோடு வைத்தால் அது கிருஸ்ணகுமாருக்கு மகா மகிழ்ச்சியைத்தரும். இலங்கைத்தமிழருக்கு என்ன தரும்? அவர்கள் கோயில்கள் நிலைக்குமா? நிலைக்க என்ன வழி என்று கிருஸ்ணகுமார் அல்லது வேறெவராலும் சொல்ல முடியுமா? //

  பட்டவர்த்தனமான உண்மை, வேதனையெனினும். கொஞ்ச நஞ்சம் இந்தியாவுக்கு இலங்கைத்தமிழர்கள்மேல் இருந்த பரிவையும் புலிகள் சுத்தபத்தமாக துடைத்தெறிந்துவிட்டனர். இலங்கைவாழ் தமிழர்களை மட்டுமல்ல, நாளையே கடல்தாண்டி தமிழகத்திலேயே இலங்கை அரசு தாக்குதல் நடத்தினால்கூட வெளியுறவுத்துறை மூலம் ஒரு கண்டனத்தை தெரிவிப்பதைத்தவிர ஒரு துரும்பையும் அசைக்காது என்று சிங்கள அரசுக்கு இந்திய அரசு நன்றாக புரியவைத்துவிட்டது.

  எனவே வீரத்தை பாகிஸ்தானிடம் மட்டுமே காட்டிக்கொண்டு (அதுகூட ஐயம்தான்) இலங்கையிடம் வாய்பொத்தி மௌனமாகத்தான் இருக்கும் இந்தியா. இனியும் இந்தியாவை எதிர்பாராமல் இலங்கைத்தமிழர்கள் தமது அரசிடமே பணிந்தும் நயந்தும் காரியங்களை சாதித்துக்கொள்ளலே ஒரே வழி.

  சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன்காலில் விழுவதே மேல்.

 16. பொன் முத்துக்குமார் சொல்லிய வழி சரி. யாழ்ப்பாணத்தமிழர்; கிழக்குமாவட்டத்தமிழர்; மத்திய தோட்டத்தமிழர்; கொழும்புத் தமிழர் – என மூவகை. இவர்கள் ஹிந்துக்கள் எனவெடுத்துப்பேசுகிறோம். யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து மற்றவிடங்களில் இசுலாமியத்தமிழர் கணிசம். கிருத்துவத்தமிழர் யாழ்ப்பாணத்தையும் சேர்த்து வாழ்கிறார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் சைவக்குடுமப் வழிவந்தவர். புலிகளில் இசுலாமியர் தவிர மற்றவர்கள் இருந்தாலும் பெரும்பாலோர் சைவைத்தமிழரே. பெஙக்ளூரில் வீழ்த்தப்பட்ட ராஜீவ் கொலையாளிகள் வீட்டைச்சோத்தித்த போது அவர்கள் நாடோறும் சிவ பூஜை நடத்தினரென்பது. எவ்விடத்தில் வாழ்ந்தாலும் புலிகள் சிவபூஜையை விட்டதில்லை, ஹிந்து சைவமதமும் விடுதலை புலிகள் இயக்கமும் இணைத்தே பார்க்கபபடுகிறது. அதே சமயம் இசுலாமியத் தமிழரை அரசு கண்காணிக்கவில்லை காரணம் அவர்கள் விடுதலை இயக்கத்தாலே பயங்கரப்படுகொலைகளுக்காணவர்கள். விடுதலை இயக்கமே அவர்களுக்குக் கூடாதென்பது நிலைப்பாடு. ஒருசிலர் இருந்திருக்கலாம்.

  இச்சூழ்நிலையை வைத்தே யாழ்ப்பாணத்தமிழர் அரசால் கண்காணிக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் ஒரு காரணம் விடுதலை இயக்கத்து எஞ்சிய தலைவர்களோ, அல்லது தலைவர்கள் என தங்களை வரித்துக்கொள்வோரே, அந்நிய நாடுகளின் வசித்து பரப்பரைகள் பண்ணிக்கொண்டிருப்பதால் அரசு தயார்படுத்திக்கொள்ள யாழ்ப்பாணத்துக்கு கேட்ட உரிமைகளை வழங்காமல் தம்மோடு இணக்காமலிருப்போரை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது

  ஆட்சியில் அமர்த்தப்பட்டோர் இணக்கமாகவிருந்து, யாழ்ப்பாண தமிழ்மக்களும் இணக்கமே என்று உறுதிப்பாட்டை உருவாக்கும் போது சிங்கள-பவுத்த அரசு மெல்லமெல்ல தந்நிலையிலிருந்து விலகி, யாழ்மக்கள நம்பத் தொடங்கும். அத்தருணத்தில்தான், பொன்முத்துக்குமார் வழி நிறைவேற முடியும்.

  Next to Krishnakumar.

 17. Krishnakumar is evading my direct question: What’s the solution? Instead, he says all that I have already known. I’m an avid Srilankan Tamil scene watcher.

  கோயில்களை அழிக்கிறார்கள்; இந்திய அரசு தடுக்குமா? என்று கேட்டால், கிருஷ்ணகுமார் சொலவது மோடி அரசு யாழ்தமிழருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கிறது. மருத்துவமனைகள் கட்டிக்கொடுக்கிறது. புகைவண்டித்தண்டவாள்த்திற்கு உதவி செய்திருக்கிறது. இவையெல்லாம் எவ்விதத்திலும் கோயில்கள் இடிக்கப்படாமலிருக்க உதவா. அப்படியே உதவினாலும் அதன் பெயர் புனரமைப்பே. இடித்துக்கொண்டேயிருப்பார்கள்; புனரமைத்துக்கொண்டேயிருப்போம் என்றால் நகைச்சுவையான வாதம்.

  யாழ்ப்பாணத்தமிழரில் ஹிந்துக்களில் மதவழிப் பிளவேயில்லை. அவர்கள் அனைவருமே ஆதிசைவ மரபாளர்கள். தமிழ்நாட்டுத்தமிழரை விட தீவிர சைவர்கள். அன்றும் இனறும். எம்மூரில் நடக்கும் சைவசித்தந்த சபையில் ஆண்டுவிழா (பத்துநாட்கள்) விழாவில் ஒரு நாளில் பெயரே யாழ்பாண சைவ மங்கையர் தினமென்பதே. அங்கிருந்து 100க்கும் மேலானோர் அன்று வருவர்.

  சைவமே அவர்கள் மதம் எனப்தை கிருஷ்ணக்குமார் தெரிய வேண்டும். மற்றவர்கள் இருக்கலாம். ஆனால் அதுவே அவர்கள் மதம் எனச்சொல்லும்படி இல்லை. அவர்களின் மதத்தை விதந்தோதும் – எம்முறவினர்களில் சிலர் அங்குண்டு – என்னை, எப்படி யாழ்ப்பாணத்தமிழரை மதவாரியாகப் பிளப்பதாகச் சொல்ல முடியும்? நா.பாவின் பிறந்தமண் நாவலின் காட்சிகள் பல உண்மை.

  இங்கு சில ஹிந்து இயக்கங்கள் அங்கு புனரமைப்புக்கு உதவலாம். மற்றபடி கிருத்துவர்கள், இசுலாமியர்கள், சிங்கள-பவுத்தர்கள் கோயில்களை இடித்தால் தடுக்க முடியாது.

 18. // தம்மோடு இணக்காமலிருப்போரை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது//

  தம்மோடு இணக்கமாக ” என்று வாசிக்கவும்

 19. ஹிந்து …… மதம். பற்பல சமயங்களைத் தன்வசம் கொண்ட தொகுப்பு. அதில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார் வழிபாடுகள் அனைத்தும் அடங்கும்.

  ஹிந்து மதத்தில் அடங்கிய பற்பல சமயங்களைத் தனிமதங்களாகக் காட்டி ……. பின்னர் நைசாக அதை ஹிந்து மதத்தில் இருந்து பிரித்தெடுத்து…… பின்னர் அதனை க்றைஸ்தவத்துடன் தொடர்பு படுத்தி….. அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ….. அதை அழித்தொழிக்க விழைவது இவாஞ்சலிகல் க்றைஸ்தவ பயங்கரவாதத்தின் முறைமை. பீ எசு அவர்களின் எண்ணப்பாங்கு புரிகிறது.

  ஈழத்தில் தமிழர் தம் ப்ரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்னென்ன என்பதை விலாவாரியாக ஈழத்தமிழர் ஒருவரே இதே தளத்தில் பகிர்ந்துள்ளார். பாரதசர்க்கார் ஈழத்தமிழர்களுக்கு ஒரு புல்லையும் பிடுங்கவில்லை என்று பீ எசு அவர்கள் கதைப்பதற்கு உத்தரம் பாரத சர்க்கார் என்னென்ன செய்து வருகிறது என்பது. பாரத சர்க்கார் ப்ரயாசிக்கும் செயற்பாடுகள் ஈழத்தமிழர் உளம் குளிர்வதற்கு வழிவகுக்குமா என்பதே அலகீடு. அப்படியான செயற்பாடுகளில் ஈழத்துக் கோவில் புனரமைப்புகளுக்கு திட்டங்கள் இல்லை. ஈழத்துக் கோவில் மற்றும் சைவ சமய மடாலயங்கள் புனரமைப்புக்கு பாரத சர்க்கார் மற்றும் தமிழக சர்க்கார் என்னென்ன உபகாரங்கள் செய்யலாம் என்பது விவாதிக்கப் பட வேண்டிய விஷயம். சங்க பரிவாரத்திலும் விவாதிக்கப் பட வேண்டும்.

  தமிழ் ஹிந்து தளத்தில் தள வாசகர்கள் சைவ மடாலய புனருத்தாரணத்தில் பங்கு பெற்றதை முன்னமே பகிர்ந்திருந்தேன். ஈழத்தின் எல்லா ஹிந்து ஆலய திருப்பணிகளுக்கும் ஹிந்துஸ்தானத்தின் தமிழர்கள் மற்றும் மாற்று மொழியாளர்கள் பங்கு பெறுவதனை சங்கபரிவார செயற்பாடுகளின் மூலம் ப்ரயாசிக்க முடியும்.

  ஈழத்தில் கோவில்களை மற்றும் தமிழர் தம் காணிகளை சிங்களத்தவர், க்றைஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் அபகரிப்பதை ….. பாரத சர்க்கார் லங்கையின் சர்க்காரிடம் தொடர்ந்து நடத்தும் சம்வாதத்தின் மூலமும் டிப்ளமசியின் பாற்பட்டு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் முடிவுக்குக் கொணர முடியும். ஊழலின்றி திட்டமுடன் இயங்கும் பாரத சர்க்காரின் தரப்பிலிருந்து ஒரு விஷயத்தின் தீர்விற்கு காலதாமதம் ஆகலாம். ஆனால் விஷயத்தீர்வு நிச்சயம் உண்டு என்பது என் த்ருடமான நம்பிக்கை.

  தனிப்பட்ட முறையில் ஈழத்துச் சைவ சமயம் சார்ந்த…… மிகக் குறிப்பாக முருகப்பெருமான் வழிபாடு சார்ந்த …… விழாக்களை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். நண்பர்களுடன் பகிரவும் செய்கிறேன்.

  ம்…………..மெல்ல மெல்ல பீ எசு அவர்கள் தமது வழக்கமான முறைப்படி வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விவாதத்தை வேறு திசைக்குக் கடத்தும் ப்ரயாசைக்கு என் தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி.

 20. // பாரதசர்க்கார் ஈழத்தமிழர்களுக்கு ஒரு புல்லையும் பிடுங்கவில்லை என்று பீ எசு அவர்கள் கதைப்பதற்கு உத்தரம் பாரத சர்க்கார் என்னென்ன செய்து வருகிறது என்பது. பாரத சர்க்கார் ப்ரயாசிக்கும் செயற்பாடுகள் ஈழத்தமிழர் உளம் குளிர்வதற்கு வழிவகுக்குமா என்பதே அலகீடு. அப்படியான செயற்பாடுகளில் ஈழத்துக் கோவில் புனரமைப்புகளுக்கு திட்டங்கள் இல்லை. ஈழத்துக் கோவில் மற்றும் சைவ சமய மடாலயங்கள் புனரமைப்புக்கு பாரத சர்க்கார் மற்றும் தமிழக சர்க்கார் என்னென்ன உபகாரங்கள் செய்யலாம் என்பது விவாதிக்கப் பட வேண்டிய விஷயம். சங்க பரிவாரத்திலும் விவாதிக்கப் பட வேண்டும்.//

  திருக்கேதீஸ்வரம் கோவில் புணர்நிர்மாணப் பணிக்கு இந்திய அரசு முப்பத்திரண்டுகோடியே அறுபது இலட்சம் இலங்கை ரூபாய்கள் [பதினாறுகோடியே முப்பது இலட்சம் இந்திய ரூபாய்கள்/இருபத்தோறு இலட்சத்து எழுபத்திமூவாயிரம் அமெரிக்க டாலர்கள்] உதவித்தொகை அளித்துள்ளது. இந்திய அரசின் பங்குபற்றி இக்கட்டுரையின் முன்னுரையிலேயே இதை எழுதியுள்ளேன்.

  சுட்டி: https://www.cgijaffna.org/page/display/48

  The legendary Thiruketheeswaram temple, one of the five sacred Ishwarams dedicated to Lord Shiva, is venerated by Shaivites throughout the sub-continent. Government of India is in the process of restoring the Temple under the Indian Grant Assistance of LKRs. 326 million with the assistance of the Archaeological Survey of India and the College of Architecture and Sculpture, Mamallapuram. The project for undertaking restoration work was launched by Hon’ble Kumari Selja, Minister of Culture, Housing and Urban Poverty Alleviation, Government of India on 20 August 2012.

  இதுபோக, இலங்கையின் வடமாகாணத்தில் 1000 புதுவீடுகள் கட்டவும், பழுதுபார்க்கவும் ஐந்துகோடி இந்திய ரூபாய்களும், இரயில்வே புணரமைக்குக்காக எண்பதுகோடி அமெரிக்க டாலர்களும், காங்கேசன்துறை துறைமுகச் சீரமைப்புப்பணிக்காக ஒரு கோடியே தொண்ணூற்றுஐம்பது இலட்சம் அமெரிக்க டாலர்களும் உதவித் தொகை அளித்துள்ளது.

  https://www.cgijaffna.org/page/display/76

  இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்கு வசதியளிக்கும் வண்ணம் காங்கேசன் துறையிலிருந்து காரைக்காலுக்குக் கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கான முயற்சியிலும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.

  எனவே, இந்திய அரசு ஈழத்தமிழர்களின் புனர்வாழ்விலும், அண்மைய போரில் அழிக்கப்பட்ட கோவில்களின் புணரமைப்புக்கும் உதவிசெய்யவில்லை என்று உண்மையற்ற பதிவுகளை எழுதவேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இதுமட்டுமன்றி பல கோவில்கள் தமிழர் வாழும் பகுதியில் எழுப்பப்பட்டு வருகின்றன என்பதையும் நேரில் கண்டறிந்தேன் நான். விரைவிலேயே அதுபற்றியும் விவரமாக எழுதுகிறேன்.

 21. // ஹிந்து …… மதம். பற்பல சமயங்களைத் தன்வசம் கொண்ட தொகுப்பு. அதில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார் வழிபாடுகள் அனைத்தும் அடங்கும். //

  பௌத்தம், ஜைனம் எல்லாம் எப்போது இந்து மதத்தில் அடங்கியது என்று தெரியவில்லை. அவர்களை விடுங்கள், இன்றும்கூட தீவிர சைவர்கள் திருமாலையோ தீவிர வைஷ்ணவர்கள் சிவனையோ வணங்குவார்களா என்பதில் எனக்கு ஐயமுண்டு.

  // பாரத சர்க்கார் லங்கையின் சர்க்காரிடம் தொடர்ந்து நடத்தும் சம்வாதத்தின் மூலமும் டிப்ளமசியின் பாற்பட்டு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் முடிவுக்குக் கொணர முடியும். ஊழலின்றி திட்டமுடன் இயங்கும் பாரத சர்க்காரின் தரப்பிலிருந்து ஒரு விஷயத்தின் தீர்விற்கு காலதாமதம் ஆகலாம். ஆனால் விஷயத்தீர்வு நிச்சயம் உண்டு என்பது என் த்ருடமான நம்பிக்கை. //

  உத்தரம், சம்வாதம், பிரயாசிக்கும், த்ருடமான என்பதற்கெல்லாம் எனக்குப்பொருள் தெரியவில்லை. இணையான தமிழிலும் எழுதலாம், அதுவும் நல்ல மொழிதான் 🙂 நீவிப்பார்த்தால் இந்தியா வெளியுறவுத்துறை மூலம் அழுத்தம் கொடுத்து அதன்மூலம் இஸ்லாமிய / கிறித்தவர்கள் / பௌத்தர்கள் (சிங்களர்கள் என்று தனியாக நீங்கள் குறிப்பது இவர்களைத்தான் என்று நினைக்கிறேன்) நடத்தும் இந்துக்கோவில்கள் அழிப்பை நிறுத்தலாம் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  கூரை, கோழி, வானம், வைகுண்டமெல்லாம் நினைவுக்கு வருகிறது, வேறென்ன சொல்ல. இதுவரை நூற்றுக்கணக்கில் தமிழக மீனவர்களை கொன்றும், அடித்துத்துரத்தியும் கொடூரங்கள் நிகழ்த்திவரும் இலங்கை கடற்படையை ”சம்வாதத்தின் மூலமும் டிப்ளமசியின் பாற்பட்டு அழுத்தம் கொடுப்பதன் மூலமும்” ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் இலங்கைக்குள் நடக்கும் வன்முறைக்கு மேற்படி முறையால், காலதாமதமானாலும் (எப்போது, எல்லாக்கோயில்களும் அழிக்கப்பட்டபிறகா ?) தீர்வு கண்டுவிட முடியும்.

  நல்லது, நம்பிக்கையோஓஓஓஓடு இருப்போம்.

  // திருக்கேதீஸ்வரம் கோவில் புணர்நிர்மாணப் பணிக்கு இந்திய அரசு முப்பத்திரண்டுகோடியே அறுபது இலட்சம் இலங்கை ரூபாய்கள் [பதினாறுகோடியே முப்பது இலட்சம் இந்திய ரூபாய்கள்/இருபத்தோறு இலட்சத்து எழுபத்திமூவாயிரம் அமெரிக்க டாலர்கள்] உதவித்தொகை அளித்துள்ளது //

  BSV சொல்வதை நீங்கள் அப்படியே எதிரொலிக்கிறீர்கள். நீங்கள் சொல்வது அழிவுக்குப்பின்னான புனரமைப்பு பற்றி. அவர் கேட்பது அழிவைத் தடுக்க இயலுமா ? ஏதேனும் அதற்கு செயல்திட்டங்கள் உள்ளனவா ? புனரமைக்கப்பட்ட ஆலயங்கள் மறு அழிப்பு செய்யப்படமாட்டாது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா ? அல்லது அழிப்பு – புனரமைப்பு, மறு அழிப்பு – மறு புனரமைப்பு ….. இதுதான் வழியா ?

  அதற்கு பதில் உண்டா ?

 22. அன்பின் பொன் முத்துகுமார்

  \\ பௌத்தம், ஜைனம் எல்லாம் எப்போது இந்து மதத்தில் அடங்கியது என்று தெரியவில்லை. அவர்களை விடுங்கள், \\

  பொன் முத்துக்குமார் பௌத்த ஜைனர்களை விட்டு விட்டால் தமிழ் ஹிந்து எதற்காக அவர்களை விட வேண்டும் 🙁 நான் எதற்காக அவர்களை விட வேண்டும் 🙁

  IGNORANCE IS BLISS.

  எப்போதிருந்து சைவ வைஷ்ணவம் போற்றும் தேவர்கள் பௌத்த ஜைன மதத்து தர்ம க்ரந்தங்களில் இடபெற்றார்களோ அப்போதிருந்தே இந்த சமயங்கள் ஹிந்து மதத்தில் அடங்கி விட்டனவே.

  உங்களதும் எனதுமான …. மற்றும் ஒட்டு மொத்த தேசத்தின் 125 கோடி ஜனத்திரளும் கடமைப்பட்டுள்ள ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனமும் ஹிந்துஸ்தானத்தின் சட்டங்களும் பௌத்தர்களையும் ஜைனர்களையும் ஹிந்துக்கள் என்று தான் அடையாளப்படுத்துகிறது.

  ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தை ஏற்கமாட்டேன் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. நான் சொல்லுவதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால் காரண்டவ்யூஹ ஸூத்ரம், ஆர்யதாரா அஷ்டோத்தரசதநாமாவளி போன்ற பௌத்த க்ரந்தங்களை பரிசீலிக்கலாமே. first hand.

  வைதிக ஸனாதன தர்மம் மட்டிலுமே ஹிந்து மதம் என்பது வெறுப்பாளர்கள் மற்றும் காழ்ப்பாளர்கள் முன்வைக்கும் வெறுப்பு மற்றும் காழ்ப்பின் பாற்பட்ட பச்சைப் பொய். அல்லது ஹிந்துத்வ எழுத்தாளர்கள் பழக்கதோஷத்தால் எழுதும் பிழை.

  இவாஞ்சலிக்கர்கள் மற்றும் ஜிஹாதிகள் போன்றோர் வைதிக ஸனாதன தர்மம் மட்டிலுமே ஹிந்து மதம் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அது அவர்களுக்கு ஹிந்துக்களை பிரித்தாளுவதற்கு வழிவகை செய்து தருகிறது. அல்லது அவர்களிடம் கூலி வாங்கிக்கொண்டு கூலிக்கு மாரடிக்கும் த்ராவிட டம்ளர்கள் இப்படி கூச்சல் போடவும் காரணமிருக்கிறது. த்ராவிட டம்ளர்கள் கூலிக்கு மட்டிலும் கூத்தடிக்கும் கூத்தாடிகள் கும்பலாயிற்றே.

  வைதிக சாக்த மண்டலிகளில் பௌத்த திக்பாலர்களையும் கூட ஆராதிப்பவர்கள் இருக்கிறார்கள்.

  மியான் பீபி ராஜி ஹை தோ க்யா கரேகா காஜி…… கணவனும் மனைவியும் ராஜியாகி விட்டால் காஜியென்ன செய்வார் ந்னு ஒரு உர்தூ பழமொழி. நீங்கள் சித்தம்போக்கு சிவம்போக்குன்னு இஷ்டத்துக்கு வைதிகன் தாண்டா ஹிந்துன்னு அடையாளப்படுத்தும் வைதிகர்களுக்கும் ………… பௌத்தர்களுக்கும் பரஸ்பரம் ஆராதனை விஷயமாக சௌஜன்யம் இருக்கும் போது பொன்முத்துக்குமார் எதற்காக கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு அதை அறுப்பதற்கு அலைய வேண்டும் 🙂

  \\ இன்றும்கூட தீவிர சைவர்கள் திருமாலையோ தீவிர வைஷ்ணவர்கள் சிவனையோ வணங்குவார்களா \\

  மாட்டார்கள். எதற்காக வணங்க வேண்டும்? அப்படி வணங்காதவர்கள் மாற்று சமயத்தார் மீளா நரகத்தில் புகுவார்கள் என்று தெருத்தெருவாகக் கூவுகிறார்களா ஆப்ரஹாமியர் போல்? புறந்தொழாமை சமய நெறி. புறந்தொழாமையை முன்னிட்டு குண்டு வைத்தார்களா? குடியழித்தார்களா?

  யார் யாரை வணங்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் அவரது சமய நெறிகள். சிவனை வணங்காததனால் வைஷ்ணவர்களோ அல்லது விஷ்ணுவை வணங்காததனால் சைவர்களோ ஏன் ஹிந்துவாக இருக்கக் கூடாது?

  அவர்கள் ஹிந்துக்களாக இருக்கக்கூடாது என்பதனை தீர்வு செய்வதன் அதிகாரத்தினை யார் பொன் முத்துக்குமாருக்குக் கொடுத்தது?

  நெம்ப கய்ஸ்டம்டா சாமி 🙂

  ஃபத்வா போடும் மௌலவிகளே கூட பரவாயில்லை போலிருக்கிறதே. அல்லது யார் டம்ளர் என்று தக்ஷிணாமூர்த்திகாரு செப்பினவாரிக்கி உன்னதே 🙂 🙂 🙂

  வொய் திஸ் கொலவெறி பொன் முத்துக்குமார் ஜி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  \\ இணையான தமிழிலும் எழுதலாம், அதுவும் நல்ல மொழிதான் \\

  என்னுடைய மொழியுமே கூட நல்ல மொழி தான் 🙂

  இதைத் தான் வள்ளல் அருணகிரிப்பெருமான் அரியதமிழ் தானளித்த மயில்வீரா என்று பெரும் விகுதியும் கூட அளித்துச் செப்பியுள்ளார்.

  நான் எழுதி நீங்கள் அதைப்புரிந்து கொண்டு தான் உத்தரமெழுதியிருக்கிறீர்கள்.

  உங்களுக்கு அது ஜீர்ணமாகவில்லை. அல்லது பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். அது நேர்மையாக இருக்கும். பொய்சொல்லலாகாது பொன் முத்துக்குமார்.

  உங்களுக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக என்னுடைய ஜிஹ்வாவை அறுத்துக்கொள்ள முடியாது அல்லவா?

  சரி.

  தமிழக மீனவர்கள் லங்கையால் முன் போல துன்புறுத்தப்படுவது இப்போது குறைந்துள்ளதே. தமிழக மீனவர்கள் கடலெல்லையை மீறுவதில் காண்டாகுபவர்கள் ஒட்டுமொத்த லங்காவாசிகளும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். அதில் ஈழத்தமிழர்களும் வெகு நிச்சயமாக அடங்குவர். அந்த ப்ரச்சினையத் தீர்க்கவே ஆழ்கடல் மீன்பிடிப்பு கனரக படகுகளை மோதி சர்க்கார் தமிழக மீனவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

  நாம் டம்ளர்கள் கூட தமிழக மீனவர்களுக்கென்று இப்போது நாடகம் போடுவதில்லை. அப்பத்தா போடும் ஆப்பத்திற்கும் ஊறுகாய்க்கும் மோதி சர்க்கார் ஜி எஸ் டி வரி போடுகிறது டம்ளா என்பது தான் நாம் டம்ளர்களின் இப்போதைய லேட்டஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட்.

  சம்வாதம் மற்றும் டிப்ளமசியில்லாமல் …….. ஒரு தேசத்திற்கும் இன்னொரு தேசத்திற்கும் இடையே ……….. வேறு எந்த வழியின் பாற்பட்டு பிணக்கத்தை குறைக்க முடியும் என்று சொல்லுவீர்களா? இல்ல தெரிஞ்சிக்கலாம்னு தான்.

  லங்கையுடன் யுத்தம் செய்வது கூட ஒரு வழி….. லங்கையுடன் ஹிந்துஸ்தானம் யுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை வெளிப்படையாக சொல்லலாமே.

  \\ புனரமைக்கப்பட்ட ஆலயங்கள் மறு அழிப்பு செய்யப்படமாட்டாது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா ? \\

  கிடையாது.

  தன் கையே தனக்குதவி. முதல் தற்பாதுகாப்பு சுயத்திலிருந்தே தொடங்கும்.

  ஈழத்து ஹிந்துக்களது தற்பாதுகாப்புத் திறமை குறைதல் ………. ஹிந்து மதத்தின் மாற்று சமயத்தவர் மற்றும் மாற்று மதத்தவரின் தணியாத மதவெறி போன்றவை குறையாதிருந்தால் நிச்சயமாக புனரபி எல்லாம்திரும்ப நடக்கும்.

  ஈழத்து ஹிந்துக்கள் தற்பாதுகாப்பில் முனைப்பாக இருக்கிறார்கள்.

  மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் முனைந்தெடுத்துள்ள ஹிந்து சிவசேனை போன்ற அமைப்புகள் ஹிந்துக்களை ஒன்றிணைக்கப் பாடுபடுகிறது. ஈழத்தில் ஹிந்துக்களது ஆலயங்களை மற்றும் காணிகளை அபகரிக்க முயலும் சிங்களத்து பௌத்தர்கள், க்றைஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியரிடமிருந்து அவர்களை தற்பாதுகாத்துக்கொள்ள அந்த அமைப்பு முனைகிறது.

  ராஜபக்ஷவை லங்கை அரசியலில் நாசம் செய்தது ஹிந்துஸ்தான மோதி சர்க்காரின் சதி என்று அவரும் அவரது பந்து மித்ரர்களும் ப்ரலாபிக்கிறார்கள். நீங்களோ …….. வானம், கூரை, கோழி, வைகுண்டம் என்று வசனம் பேசுகிறீர்கள்.

  சிங்களத்து பௌத்தர்களையோ…….க்றைஸ்தவர்களையோ…..முஸ்லீம்களையோ………..ஒட்டுமொத்த எதிரியாகப் பார்க்காது……இவர்களிலும் ஈழத்துத் தமிழ் பேசும் ஹிந்துக்களொடு இணக்கமாக வாழ விழைபவர்களை அடையாளம் கண்டு …….. அவர்களொடு நட்பு பேணுவது…….ஒட்டு மொத்த லங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு நலனளிக்கும்.

  ஹிந்துத் தமிழர்களது சொத்துக்களை அதே ஹிந்து மதத்தைச் சார்ந்த சிங்கள பௌத்த சமயத்தவரும் மாற்று மதத்தவர்களான க்றைஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அபகரிக்கும் போது …………..

  தமிழகத்திலானால் ஈழத்தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவர்கள் சிங்கள் பௌத்தர்கள் மட்டிலுமே …… என்று தீராவிட விசிலடிச்சான் குஞ்சுகள் மாதிரி ……. அவர்கள் கையூட்டு வாங்கியஆப்ரஹாமியப் பணத்திற்குக் ……கூலிக்கு மாரடிக்கும் போக்கு தொடர்ந்தால் ……… சிங்கள பௌத்தர்கள் திருந்தினாலும் கூட ஈழத்தமிழ் ஹிந்துக்களது வாழ்வு மேம்படாது. ஏனெனில் ஈழத்தமிழ் ஹிந்துக்களது ப்ரச்சினை சிங்கள பௌத்தர்களில் தொடங்கி அங்கேயே முடியும் ப்ரச்சினை நிச்சயமாகக் கிடையாது. அதன் விழுதுகள் பல்கிப் பரவியுள்ளன.

  நோய் நாடி நோய் முதல் நாடி……….. அப்படீன்னு திருவள்ளுவ நாயனார் இப்படிப்பட்ட விசிலடிச்சான் குஞ்சுகளுக்கே ப்ரத்யேகமாகச் சொல்லியிருக்கிறார்.

  BACK TO THE PAVILION. தேசத்தின் பண்பாடு போற்றும் இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களும் கூட ஹிந்துக்களே என்று சங்க பரிவார இயக்கங்கள் சொல்லுகின்றன. உங்கள் வயிற்றெறிச்சலுக்கு இந்தளவு மிளகாய்த்தொக்கு போதுமா 🙂 இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா 🙂

 23. \\\ அண்மைய போரில் அழிக்கப்பட்ட கோவில்களின் புணரமைப்புக்கும் உதவிசெய்யவில்லை என்று உண்மையற்ற பதிவுகளை \\\

  Thank you. I was wrong and stand corrected.

 24. //BSV சொல்வதை நீங்கள் அப்படியே எதிரொலிக்கிறீர்கள். நீங்கள் சொல்வது அழிவுக்குப்பின்னான புனரமைப்பு பற்றி. அவர் கேட்பது அழிவைத் தடுக்க இயலுமா ? ஏதேனும் அதற்கு செயல்திட்டங்கள் உள்ளனவா ? புனரமைக்கப்பட்ட ஆலயங்கள் மறு அழிப்பு செய்யப்படமாட்டாது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா ? அல்லது அழிப்பு – புனரமைப்பு, மறு அழிப்பு – மறு புனரமைப்பு ….. இதுதான் வழியா ?

  அதற்கு பதில் உண்டா ?//

  உயர்திரு பொன். முத்துக்குமார் அவர்களே,

  அழிவதும், ஆக்கப்படுவதும் உலகநியதி. இதற்கு எந்த நாடும், எந்தச் சமயமும், எந்தப் பண்பாடும் விலக்கல்ல.

  சங்கத் தமிழர்கள்கூட போரில் ஒருவரையொருவர் தாக்கி, வயல்களையும், கழனிகளையும், பகைவர் மாளிகைகளையும் அழித்திருக்கின்றனர்.

  Crusades என்று சொல்லப்படும் புனிதப்போர்களை[?] கிறித்துவ நாடுகள் மேற்கொண்டுள்ளன. அதில் எத்தனையோ அழிவு நடந்திருக்கிறது.
  அதுபோலவே, ஜிஹாத் எனப்படும் புனிதப்போர்களை[?]யும், அதன் விளைவுகளையும் நாமறிவோம். அதனால் எத்தனை கோவில்கள், எத்தனை சர்ச்சுகள் அழிக்கப்பட்டிற்க்கின்றன என்று நான் பட்டியல் போட்டுத் தரவேண்டியதில்லை.

  அதுபோல அமைதியை வலியுறுத்தும் பௌத்தசமயமும் செய்துவருகிறது.

  இங்கு வலியவர் எளியவரைத் தாக்கி தமக்கு அடிபணியவைக்கிறார்.

  திருக்கேதீஸ்வரம் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்:
  எவ்வளவுதூரம் நாங்கள் தாக்கியழிக்கப்பட்டாலும், நாங்கள் மீண்டும் நெருப்பிலிருந்து வெளிவரும் ஃபீனிக்ஸ் பறவையப்போல உயிர்த்தெழுவோம் என்பதே! சைவசமயத்தை முனைந்து, பல எதிர்ப்புகளுக்கிடையில் துளிர்க்கவைத்துக்கும் செயலைப் பாராட்டி வாழ்த்துவதே சிறப்பாகும்.

  அதைவிடுத்துத் துன்னம்பிக்கை வாதத்தை முன்வைப்பதால் முயன்று முன்வருபவரைச் சோர்வடையச் செய்வதைத்தவிர வேறு என்ன செய்யவியலும்?

  “புயலுக்குப் பின்னே அமைதி” என்று என்றோ ஒரு கவிஞன் பாடிவைத்ததை நினைவில்கொண்டு, இந்து சமயம் மீண்டும் துளிக்கிறதே என்று மகிழ்வோம்.

 25. //“புயலுக்குப் பின்னே அமைதி” என்று என்றோ ஒரு கவிஞன் பாடிவைத்ததை நினைவில்கொண்டு, இந்து சமயம் மீண்டும் துளிக்கிறதே என்று மகிழ்வோம்.//

  மகிழலாம்தான். ஆனால், தொடர்ந்து இந்துக்கோயில்கள் சிங்கள-பவுத்த கூட்டணியால் அழிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே மகிழலாம். அவர்கள் அழித்துக்கொண்டேயிருப்பார்கள்; இவர்கள் புனரமைத்து மகிழ்ந்துகொண்டேயிருப்பார்கள் என்றால் காமெடிதானே?

  மோடி அரசு இந்துக்கள் பிரச்சினைகள முன்னெடுக்கும் அரசு. இலங்கைக்கும் இந்தியாவுக்கு உறவு கெடவில்லை. கெடுமளவுக்கு இதுகாறும் இரு அரசுகளும் – இந்தியா-பாகிஸ்தான் போல – ஒன்றுக்கொன்று முரணபடவில்லை. எல்லாவிடயங்களையும் எடுத்துப் பேசும் இந்திய அரசு ஏன் இப்பிரச்சினையை இன்றும் எடுத்துப்பேசவில்லை என்ற கேள்விக்குத்தான பதில் சொல்லவேண்டும். பேசினார்களென்றால், அதைத்தான் சுட்டிக்காட்டவேண்டும். அதைப்பற்றி வாயே திறக்காமல் இரண்டாங்கெட்ட மணிப்பிரவாள்த்தில் நீட்டி முழக்கி என்ன பயன்? Just tell why Modi sarkar has not taken up this issue with the Srilankan government so far. If they had indeedn taken up, what is the assurance given by Srilankan government? This information is enough from you. Face the questions and give straight answers.

  இந்திய அரசால் முடியும். இந்திய – இலங்கை பேச்சுவார்த்தைகளில் போது இந்துக்கோயில்கள் அழிக்கப்படுவது பற்றி அஜண்டா பாயின்ட் வைக்க வேண்டும். அதில் பல ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களையும் வைக்க வேண்டும். புனரமைப்பது பெரிய வேலையல்ல. பணமிருந்தால் முடியும். அழிக்கப்படாமல் இருக்கச் செய்வதே மாபெரும் தொண்டு. இதற்கு பணம் தேவையில்லை. மனம்தான் வேண்டும். கோயில்கள் அழிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தால் இந்துசமயம் மீண்டும் துளிர்க்கிறதே என்று எப்படி மகிழமுடியும் ?

  இலங்கை அரசுக்கு அனைத்தும் விளக்கப்படவேண்டும். நடக்குமா என்று அறுதியிட்டுச்சொல்ல முடியாது; காரணம், பவுத்தர்கள் இலங்கை அரசை தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்த விடயமே.

 26. அன்புள்ள கிருஷ்ணகுமார்,

  // நான் எழுதி நீங்கள் அதைப்புரிந்து கொண்டு தான் உத்தரமெழுதியிருக்கிறீர்கள்.

  உங்களுக்கு அது ஜீர்ணமாகவில்லை. அல்லது பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். அது நேர்மையாக இருக்கும். பொய்சொல்லலாகாது பொன் முத்துக்குமார்.

  உங்களுக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக என்னுடைய ஜிஹ்வாவை அறுத்துக்கொள்ள முடியாது அல்லவா? //

  எனக்குப்புரியவில்லை என்று எழுதியதை ஜீரணமாகவில்லை / பிடிக்கவில்லை என்று சொல்லச்சொல்கிறீர்கள். உறுதியாக புரிந்துகொள்ளவில்லை ‘இப்படிச்சொல்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். பலபேருடன் ஒரு உரையாடல் என்று வரும்போது அத்தனைபேருக்கும் புரியும் மொழியில் உரையாடும்போதுதான் அதன் குறிக்கோள் நிறைவேறும். உங்களது மணிப்பிரவாள நடையின் பல சொற்கள் எனக்குப்புரியவில்லை அவ்வளவே. ஏனெனில் நான் வளர்ந்த இடங்களில் எவ்விடத்திலும் இப்படிப்பட்ட நடையை கேட்டதில்லை. அதற்கு பிடிக்கவில்லை என்றோ ஜீரணமாகவில்லை என்றோ பொருளில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அது உங்களது நடை, உங்களது விருப்பம். ஆனால் மற்றவர்களோடு உரையாடும்போது, அவர்களுக்கு(ம்) புரியும்படி உரையாடலாமே என்பதுதான் எனது வேண்டுகோள்.

  மற்றபடி உங்களது ஜிஹ்வா-வை (பாருங்கள், ஜிஹ்வா என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆனால் அதற்கு ஜீரணமாகவில்லை என்றெல்லாம் பொருளில்லை). அறுத்துக்கொள்ளச்சொல்லவில்லை.

  // பொன்முத்துக்குமார் எதற்காக கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு அதை அறுப்பதற்கு அலைய வேண்டும் //
  // அவர்கள் ஹிந்துக்களாக இருக்கக்கூடாது என்பதனை தீர்வு செய்வதன் அதிகாரத்தினை யார் பொன் முத்துக்குமாருக்குக் கொடுத்தது? //

  இப்படி நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக நீங்களே கற்பிதம் செய்துகொண்டு இப்படித்தான் மட்டையடியாக உரையாடுவீர்கள் எனில், மன்னிக்கவும், நமக்கிடையே இனி எவ்வித உரையாடலுக்கும் சாத்தியமில்லை.

 27. // அழிவதும், ஆக்கப்படுவதும் உலகநியதி. இதற்கு எந்த நாடும், எந்தச் சமயமும், எந்தப் பண்பாடும் விலக்கல்ல.
  சங்கத் தமிழர்கள்கூட போரில் ஒருவரையொருவர் தாக்கி, வயல்களையும், கழனிகளையும், பகைவர் மாளிகைகளையும் அழித்திருக்கின்றனர். //

  உண்மைதான். ஆனால், மனிதன் நாகரிகம் அடைந்து ஜனநாயகம், குடியரசு என்றெல்லாம் பரிணாமம் அடைந்தபிறகு இந்த அழிவு எல்லைமீறாமல் இருக்கவும் பண்டையகாலம் போல வலுத்தது எளியதை அழிக்கும் என்பதை கொஞ்சம் கட்டுப்படுத்தி அனைவருக்கும் சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கவும் ஜனநாயக அமைப்பில் உத்தரவாதம் செய்யப்படுகிறது.

  இன்றைய காலகட்டத்தில் பகை அரசைத்தவிர தமது குடிமக்களையோ, அவர்களது பண்பாடுகளையோ, அவர்கள் வலுவற்றவர்கள் என்பதால் அழித்தொழிக்க முற்படுவது என்பது அரச தீவிரவாதமே. ஆனால் நடைமுறையில் இதை தடுப்பது மிகவும் கடினம் என்பதே நான் சொல்ல வருவது. அதுவும் இந்தியா அரச ரீதியில் வெறுமனே வேண்டுகோள் விடுப்பதைத்தவிர வேறெதையும் செய்ய முடியாது, செய்யவும் செய்யாது என்பதே நடைமுறை உண்மை.

  நான் புனரமைப்பு நடவடிக்கைகளையோ, அவற்றை செய்பவர்களையோ ஒன்றுமே சொல்லவில்லையே. நான் சொல்வதை மீண்டும் சுருக்கமாக வலியுறுத்த விரும்புகிறேன் :

  ”இலங்கைத்தமிழர்கள், சிங்களர்கள் நிகழ்த்தும் இந்து ஆலய அழிப்புக்களையோ, இன அழிப்பையோ தடுக்க இந்திய அரசை பெரிதும் எதிர்பார்க்கவேண்டாம். அவர்களால் செய்யக்கூடுவது எதுவுமில்லை. ஒருவேளை ஆலய புனரமைப்புக்களுக்கு உதவலாம் அவ்வளவே.

  எனவே, சிங்கள அரசோடு ஜனநாயக முறையில் ஒத்துழைத்தும், அவர்களது கையே ஓங்கியிருப்பதால், அவர்களை நயந்தும் பணிந்துமே உரிமைகளை பெற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம். எனவே அதையே செய்தம் உசிதம். இதுவே நடைமுறை.”

  இதைத்தவிர வேறெதையும் நான் சொல்லவில்லை.

 28. // இந்திய அரசால் முடியும். இந்திய – இலங்கை பேச்சுவார்த்தைகளில் போது இந்துக்கோயில்கள் அழிக்கப்படுவது பற்றி அஜண்டா பாயின்ட் வைக்க வேண்டும். அதில் பல ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களையும் வைக்க வேண்டும் //

  இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். ஆனால் இந்தியா இதை செய்யுமா என்பது கேள்விக்குறி.

  நான் சொன்னதுபோல வேண்டுகோளாக வைக்கலாம். அதைத்தாண்டி இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்த இயலாது. அப்படி ஒருவேளை, ஏதேனும் பெரியண்ணன் பாணியில் நிர்ப்பந்திக்க நினைத்தால் இந்தியாவுக்குத்தான் கேடு. விடுதலைப்புலிகளுடனான போரில் பாகிஸ்தானையும் சீனாவையும் காட்டி பயமுறுத்தி கடைசியில் மூன்று நாடுகளிலிருந்தும் உதவிகள் பெற்று புலிகளோடு அப்பாவிகளையும் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு, அதேபோல மறுபடியும் பாகிஸ்தானையும் சீனாவையும் காட்டி நம்மை பணிய வைக்க வெகுநேரமாகாது.

 29. இந்துக்களுக்கு இணக்கமான அரசு மோடி அரசு. இதுதான் தருணம் என இந்துக்கள் நினைக்க வேண்டும். குறிப்பாக இலங்கைத்தீவில் இந்துக்கோயில்கள அழிக்கப்படுவதை தடுப்பதை ஓரெல்லாவற்றுக்கும் மேலான குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு வாழ் இந்து இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மோடி அரசை முந்தள்ள வேண்டும். இலங்கை அரசிடம் வற்புறுத்த வேண்டும். ஆக, கடைசியில் பொறுப்பு தமிழ்நாடு வாழ் இந்து இயக்கங்களின் கைகளில்தான் இருக்கிறது. பொது இயக்கங்களும் செய்யலாம்.

  This is the practicable solution to the issue. When the Srilankan government is pressurised through all channels, diplomatic first, the SL Government comes to understand seriousness their Indian counterpart is attaching to the issue, they cannot overlook the issue. They”ll do something. Further, this is not a contentious issue between both Governments. In other words, none of the two governments is going to lose any thing in the matter. No money is involved. Indian government is not going to ask SL government to pay for renovation at all. Just a request to them to intervene and stop – that’s all. Because the power to do or undo is with them. யாருமே எதுவுமே கேட்கலன்னா அவுங்க எதுக்கு கவலைப்படவேண்டும்? வம்பா?

 30. பொன் முத்துக்குமார்

  \\ மன்னிக்கவும், நமக்கிடையே இனி எவ்வித உரையாடலுக்கும் சாத்தியமில்லை. \\

  பொய்யுடன் சம்வாதம் செய்வது அசாத்யம். அதுவும் பச்சைப்பொய்யுடன் சம்வாதம் செய்வது முயல்கொம்புக்கு விளக்கமளிப்பது போல.

  நான் எழுதியது உங்களுக்குப் புரியவில்லை என்பது மிகப்பெரிய பொய் என்பது கொஞ்சமே. உங்களது மத தூஷணைப் பேச்சுக்கு நான் அளித்த உத்தரம் உங்களுக்கு ஏற்புடையதாகவும் இல்லை உங்களது மத நக்கல் நையாண்டிப்பேச்சுக்கு தர்க்க பூர்வமான அறிவு பூர்வமான ப்ரத்யுத்தரமும் உங்கள் தரப்பிலிருந்து இல்லை. அதாவது நான் எழுதிய விஷயத்தில் ஓரிரு வார்த்தைகளுக்கு உங்களுக்கு நேரடிப் பொருள் தெரியவில்லை. ஆயினும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது வெகு தெளிவாக உங்களுக்குப் புரிந்தும் உள்ளது. குடையவும் செய்கிறது.

  நான் மணிப்பவளத்தில் எழுதியது உங்களுக்குப் புரிந்தும் புரியாதது மாதிரியான ஒரு பாசாங்கு. ஆனால் நீங்கள் ஏகபோக குத்தகை எடுத்துள்ள சுயசான்றிதழ் அளித்துக்கொண்டுள்ள ஒரு நடையில் எழுதிய விஷயம் உங்களுக்கே கூட புரிந்துள்ளதா என்பது நீங்கள் வணங்கும் கடவுளுக்கே வெளிச்சம்.

  \\ இப்படி நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக நீங்களே கற்பிதம் செய்துகொண்டு இப்படித்தான் மட்டையடியாக உரையாடுவீர்கள் \\

  டிவி வாதங்களில் குய்யோ முறையோ என்று கத்தோ கத்துன்னு கத்தி ஒரு க்ஷணம் முன்னாடி பேசின பேச்சை அப்படியே கழுவி விடுவார்கள்.

  ஆனால் எழுத்து பூர்வமாக ஒருவர் பகிர்ந்த கருத்தை நேர்கீழே லவலேசமும் கூச்சமில்லாமல் இப்படி மலை முழுங்கியாகப் பேச கடைந்தெடுத்த நெஞ்சழுத்தம் வேண்டும்.

  ****** பௌத்தம், ஜைனம் எல்லாம் எப்போது இந்து மதத்தில் அடங்கியது என்று தெரியவில்லை. அவர்களை விடுங்கள் *****

  மேற்கண்ட நக்கலான மத தூஷணைப் பேச்சு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவுடையதோன்னு இன்னொரு முறை பார்த்தேன். தாங்கள் தானே எழுதியிருக்கிறீர்கள்.

  ஹிந்து மதம் என்ற ஆல வ்ருக்ஷத்தின் முக்யமான சாகைகளாகிய் பௌத்த ஜைன சமயங்களை லவலேசமும் கூச்சமில்லாமல் உங்கள் சொற் கோடரியால் பிளந்து விட்டு ***நீங்கள்*** சொல்லாததை எல்லாம் சொன்னதாக *** நான் *** கற்பிதம் செய்ததாக சொல்லுகிறீர்கள்.

  இஸ்லாத்தைப் பின் பற்றுபவர்கள் இஸ்லாமியர்
  க்றைஸ்தவத்தைப் பின் பற்றுபவர் க்றைஸ்தவர்

  ஆனால் ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனம் ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்துபவர்கள் பின்பற்றும் மதம் ஹிந்து மதம் இல்லை என்பது பொன் முத்துக்குமார் முன் வைக்கும் வாதம். அதுவும் பொன் முத்துக்குமார் அவர்களின் சண்டப்ரசண்ட வாதத்தின் பாற்பட்டு இன்று நேற்று அல்ல என்றுமே இவை ஹிந்து மதத்தின் அங்கம் இல்லை. ஏன் இல்லை? அதற்கு பதிலும் கிடையாது?

  அல்லது அரசியல் சாஸனத்தை எழுதியவர்கள் அதை நிர்ணய சபையில் விவாதம் செய்து தேசத்துக்கு அர்ப்பணித்தவர்கள் முழுமூடர்கள் என்று பொன்முத்துக்குமார் கருதுகிறார் போலும்.

  புறந்தொழாமையைக் கைக்கொள்ளும் சைவரும் வைஷ்ணவரும் கூட ஹிந்து இல்லை என்று சொல்ல வந்தீர்களா …….. அல்லது அப்படி சொல்லுவதை ஏதாவது தடுத்து விட்டதா தெரியவில்லை.

  சிவபெருமானும் கணபதியும் உமாதேவியும் ராமனும் கண்ணனும் ஹிந்து மதத்தில் தானே உள்ளனர். அல்லது பொன் முத்துக்குமார் அதையும் கூட மறுதலிப்பாரோ. இந்த தேவி தேவர்கள் பௌத்த ஜைன க்ரந்தங்களிலும் வந்து விடுகிறார்களே? எப்படி? ஏன்? ஒருக்கால் அந்த க்ரந்தங்களில் இவர்களை எடுத்தாண்டவர்கள் உங்களை அணுகியிருந்தால் மறுதலித்திருப்பீர்கள் போலும்.

  கொஞ்சமும் கூச்சமில்லாது சமய த்வேஷக்கருத்தை தமிழ் ஹிந்து தளத்தில் பரப்புரை செய்வதற்கு உங்களுக்குத் தயக்கம் கூடாது. ஆனால் அதை தயக்கமில்லாது கண்டனம் செய்வதற்கு நான் வார்த்தைகளைத் தேட வேண்டும்.

  ஒரு மூனரை தசாப்த காலமாக ஹிந்து இன்றே ஒன்று படு என்று சங்கத்தில் கற்ற பாட்டை பாடி வருகிறேன். நீங்கள் ஏகபோககுத்தகை எடுத்துள்ள தமிழ் மொழி தெரியாத மற்றைய மொழி பேசும் சங்க சஹோதரர்கள் பலருக்கும் இந்தப் பாட்டைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

  வழிபடு முறைகளால் க்றைஸ்தவ இஸ்லாமிய சஹோதரர்கள் மாறுபட்டாலும் பண்பாட்டால் அவர்களும் ஹிந்துக்களே என்ற ஹிந்துத்வக் கோட்பாட்டை தயக்கமின்றி பரப்புரை செய்து வருகிறேன். நிச்சயமாக எதிர்காலத்திலும் செய்வேன். பௌத்த ஜைனர்களையே ஹிந்துக்களாக ஏற்க மறுக்கும் உங்களுக்கு இது நிச்சயமாக ஏற்புடையாதக் இருக்காது.

  தலைநரைத்துப் போன எனக்கு புத்தி மங்கியிருக்கலாம். என்னுடைய ஒருமைப்பாட்டு எண்ணம் குறையுள்ளதாக இருக்கலாம். இளைஞராகிய உங்கள் பிரிவினைக்கருத்து சாரமுள்ளதாகவும் இருக்கலாம். க்ருஷ்ணகுமாருக்கு என்று இல்லை. தமிழ் ஹிந்து தளத்தின் ஏனைய வாசகர்களுக்கு உங்கள் பிரிவினைக்கருத்தின் சாரத்தை முன்வையுங்கள்.

  ஹிந்து மதம் என்று நீங்கள் கருதுவது என்ன? அதற்கு என்ன ஆதாரம்? எந்த ஆதாரத்தின் பாற்பட்டு பௌத்த ஜைன சமயங்களை ஹிந்து மதத்திலிருந்து உங்கள் சொற் கோடரிகளால் வெட்டிச் சாய்க்கிறீர்கள் என்பதனை தமிழ் ஹிந்துவின் மற்ற வாசகர்களுக்கு உங்கள் வசம் தர்க்க ந்யாயம் இருந்தால் விளக்குங்கள்.

 31. ஜிஹ்வா என்றால் என்ன பொருள்? “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” பாரதியார்.

 32. இலங்கையில் சிங்கள-பவுத்த இனவெறி இந்து ஆலயங்களை அழித்துக்கொண்டிருக்கிறது என்பது தமிழீழ விடுதலை புலி இயக்கத்தின் ஆதரவாளர்களின் பொய் பரப்புரைகள் மட்டுமே
  வெளிநாடுகளில் இவர்களின் பரப்புரை வேறு மாதிரியானது இந்துவா மதவெறி இந்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது

 33. திரு பொன் முத்துக்குமார் அவர்களின் கருத்துக்கள் இந்த தமிழ் இந்து தளத்தில் ஆபிரகாமிய மத மாற்றி கும்பலால் அனுப்பி வைக்கப்பட்ட குழப்பவாதியின் கருத்து என்று தெளிவாக தெரிகிறது. மாற்றுக் கருத்துக்கள் எந்த கலந்துரையாடலிலும் அனுமதிக்கப்படவேண்டியது தான். ஆனால் துவேஷக் கருத்துக்களை வெளியிடுகிறார் பொன் முத்துக்குமார்.இந்து சட்டம் பவுத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கும் பொருந்தும் என்றும் சட்டத்தின் வரையறைகளில் அவர்களும் இந்துக்களே என்று தெளிவாக சட்டத்தின் முன்பகுதியிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, பொன்குமார் செய்வது விதண்டாவாதம் மட்டுமல்ல. சட்ட அறிவின்மையால் விளைந்த கருத்து மற்றும் இந்து மதத்தை பற்றி ஏகடியம் பேசும் வீணர்களின் மற்றும் மதமாற்ற ஏஜெண்டுகளின் கருத்தாகவே உள்ளது.

 34. ” ஹிந்து …… மதம். பற்பல சமயங்களைத் தன்வசம் கொண்ட தொகுப்பு. அதில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார் வழிபாடுகள் அனைத்தும் அடங்கும்.

  ஹிந்து மதத்தில் அடங்கிய பற்பல சமயங்களைத் தனிமதங்களாகக் காட்டி ……. பின்னர் நைசாக அதை ஹிந்து மதத்தில் இருந்து பிரித்தெடுத்து…… பின்னர் அதனை க்றைஸ்தவத்துடன் தொடர்பு படுத்தி….. அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ….. அதை அழித்தொழிக்க விழைவது இவாஞ்சலிகல் க்றைஸ்தவ பயங்கரவாதத்தின் முறைமை. பீ எசு அவர்களின் எண்ணப்பாங்கு புரிகிறது.”-

  திரு கிருஷ்ணகுமாரின் மேற்கண்ட கருத்து முழு உண்மை. மதமாற்ற விஷமிகளின் கொக்கரிப்பு ,2000- ஆம் ஆண்டு துவங்குவதற்கு முன்னரே, இந்தியாவை ஏசுவுக்கு ஒப்புக்கொடுப்போம் என்று உளறிவந்ததுடன் , வாஜ்பாயி ஆட்சியிலேயே வந்த போப்பு விஷ விதிகளை தூவினார். இப்போது என்ன ஆயிற்று ? ஐரோப்பா முழுவதும் ஐ எஸ் தீவிரவாதிகளை நுழையவிட்டு, போப்பாண்டவர் உயிருக்கே அபாயம் வந்துவிட்டது. ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இணைய தளங்களில் , போப் இஸ்லாத்துக்கு மாறாவிட்டால் , அவரை போட்டு தள்ளிவிடுவோம், போப்பாண்டவரின் அரண்மனையிலும், வாடிகனிலும் ஷாரியா கொடியை ஏற்றுவோம் என்றும் கொக்கரிக்கிறார்கள். போப்பாண்டவரோ மூளை மழுங்கிப்போய் இஸ்லாமும் கிறித்தவமும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டு, மசூதிகளில் போய் தொழுகைகளில் பங்கேற்றுவருவதை மீடியா மூலம் அனைவரும் அறியவருகிரார்கள்.

 35. //இலங்கையில் சிங்கள-பவுத்த இனவெறி இந்து ஆலயங்களை அழித்துக்கொண்டிருக்கிறது என்பது தமிழீழ விடுதலை புலி இயக்கத்தின் ஆதரவாளர்களின் பொய் பரப்புரைகள் மட்டுமே// – By the Commentator named Hindutva

  இங்கே தோன்றும் பின்னூட்டக்கருத்தொன்றில் ரிஷி என்ற இலங்கைத் தமிழர் எழுதியது கீழே:

  //1990களில் திருக்கீதீச்வரம் சிங்கள பவுத்த அரச படைகளினால் அழிக்கப்பட்டது. சுற்றிவர உள்ள எத்தனையோ மடங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டன.” Temple priests other employees and residents in the vicinity were forcibly driven away. The whole place was desecrated. Even the moolasthanam was found fully exposed. Most heinous and unforgivable part of the vandalism is the disfigurment and gouging of the Third Eye of the Icon of Somaskanda ” ( Destruction of Hindu Temples – book )
  சிங்கள பவுத்த விமானப் படையினரால் குண்டுகள் போடப்பட்டு அளிக்கப்பட்ட கோவில்களும் பல ஈழத்தில்உள்ளன. //

  சிங்கள-பவுத்த இனவெறி என்கிறார்!

 36. //ஹிந்து மதத்தில் அடங்கிய பற்பல சமயங்களைத் தனிமதங்களாகக் காட்டி ……. பின்னர் நைசாக அதை ஹிந்து மதத்தில் இருந்து பிரித்தெடுத்து…… பின்னர் அதனை க்றைஸ்தவத்துடன் தொடர்பு படுத்தி….. அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ….. அதை அழித்தொழிக்க விழைவது இவாஞ்சலிகல் க்றைஸ்தவ பயங்கரவாதத்தின் முறைமை. பீ எசு அவர்களின் எண்ணப்பாங்கு புரிகிறது.”//

  எனக்கென்ன கிடைத்துவிடப்போகிறது?

  ஹிந்துமதம் என்றொரு மதமே இல்லை. ஹிந்து என்ற சொல் வைதீகப் பண்டை நூல்களில் இல்லவே இல்லை. ஹிந்துநதிக்கரை மக்கள் என்றிருக்கும். அம்மக்களின் மதத்தின் பெயர் ஹிந்து என்றில்லை.

  வைதீகப்பண்டை நூல்கள் (வேதங்கள்; பிராமணங்கள்; ஆரண்யங்கள்; மஹாபாரதம் (5ம் வேதம்); இராமாயணம்; உபநிஷத்துக்கள்; புராணங்கள்; சாஸ்திரங்கள் ) இவற்றினிடப்படையில் மக்கள் வாழும் மதம் சநாதன மதம். ஹிந்து மதம் கிடையாது. இவற்றை கடைபிடிக்காமல் சென்ற மதங்கள் பவுத்தமும் ஜயினமும். அல்லது இவற்றின் காணப்படும் கடவுளர்கள் சிலரை எடுத்துக்கொள்வதும் சில கொள்கைகளை எடுத்துககொள்வதும் இவ்விருமதங்கள் செய்தன ஆனால் வேதங்களை முற்றிலும் நிராகரித்தன. வருணக்கொள்கையும் நிராகரித்தன.

  பின்னர் வைதீகப்பண்டை நூல்கள் தென்னிந்தாவுக்கு வந்தன. ச்நாதன மதத்தின் கூறுகள் ஏற்கனவே இங்கிருந்த மதங்களில் இணைந்தன. அல்லது முழுமையாகவும் சில குழுக்களால் ஏற்கப்பட்டன. அவ்வாறே பவுத்தமும் ஜயினமும் நுழைந்தன. இது தென்னிந்திய மத வரலாறு. பிற்காலத்தில் எழுந்ததது சீக்கிய மதம். வேதங்களையும் வேதச்சடங்குகளையும் வருணாஷ்ர கொள்கையையும் முற்றிலும் நிராகரித்தனர் சீக்கிய குருக்கள். இதே சமயம், அவ்வப்போது சிலர் ஒரு மதம் என்று உருவாக்காமல் (சீக்கிய, ஜயின, பவுத்தரைப்போன்று) தனியாகவே தஙகள் வழியென்று சொல்லி முற்றிலும் சநாதன மதத்தை நிராகரித்தனர் சிலர். ஆனால் கடவுளர்கள் ஒருவரையோ பலரையோ ஏற்று தனிவழிபாடு செய்தனர். சநாதன வழிபாடு பிராமணீயம் எனவழைக்கப்படுகிறது. இப்படி செய்த தனிநபர்கள் பின்னால் தொண்டர்குழுக்கள் சென்றன. இன்றும் அவர்கள் இருக்கிறார்கள்: இரவிதாஸ், வள்ளலார்; அய்யா வைகுண்டர்; நாராயண குரு; கோயில்களும் சிலைவழிபாடும் வேண்டாம். சிவன் லிங்கத்தில் இல்லை; வேண்டாம். சிவன் நம்முள் உறைகிறான். அவனே நமது ஒரே தெய்வம் அவனை லிங்கத்தையும் பிராமணீயம் காட்டும் சிவனையும் மறுத்து நம் வழியில் தொழலாமென்ற பசவன்னா; சிலைவழிபாடு, கோயில்களெல்லாம் வேண்டாம், வேதம் காட்டிய யாக வழிபாடு மட்டும் போதுமென்ற தயானந்தர் போன்றவர்கள்.

  இவர்களுள் ஒரு சிலர் பிராமணீய மதத்தை நிராகரித்தாலும் அதன் சடங்குகள் சில்வற்றை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் பிராமணரை விட்டுவிலகியே நின்றனர். சுருக்கமாக, சநாதன மதம், பவுத்தம், ஜயினம், சீக்கியம், தனிநபர் குழுக்கள். இதுதான் இந்தியாவின் மத வரலாறு. இதில் எங்கே வந்தது இந்துமதம் என்றால். இவர்கள் அனைவருக்கும் ஓரொற்றுமை இருக்கிறது. அனைவருமே இந்தியமண்ணில் தோன்றி வாழ்பவர்கள். இண்டிக் என்பது பரவலாகத் தெரியப்படும் சொல் இதற்கு. Indic religions or religious philosophies.

  தனித்தனியாக எடுத்தால் வலிமை போகும். சேர்த்தால் வலிமை உருவாகும். ஒற்றுமையே பலம். பலம் குன்றும்போது, இண்டிக் மதங்களை வென்று தம் மதத்தை நிலைநாட்டிவிடலாமென ஆபிரஹாமிய மதங்கள் நினைத்துச் செயல்பட்டு வெற்றியும் கண்டு வருகின்றன. இப்படியே விட்டால் இண்டிக் மதங்களே இல்லாமல் போய்விடுமென்பதால், ஒரு பொதுச்சொல்லை உருவாக்கி அனைத்து இன்டிக் மதங்களையும் அதன்கீழ் கொண்டுவந்தால் ஒற்றுமையோங்கி ஆபிரஹாமிய மதங்களில் செய்ல்பாடுகளைத் தடுக்கலாமென்பதால், ஹிந்து என்ற பொதுச்சொல் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் நான் மேலே காட்டிய மத வழிகள்; மேலும் பல்விருக்கலாம் – எல்லாவற்றையும் ஹிந்து மதம் என்ற பொதுச்சொல்லால் குறிப்பிட்டார்கள். இதையே உச்ச நீதி மன்றம் வழிமொழிந்தது.ஆனால் சில மூடர்கள் சநாதன மதமே ஹிந்து மதமென்றும் அதை ஏற்காதவர்கள் ஆபிர்ஹாமியர்களோடு நம்மை அழிக்கப்பார்க்கிறார்கள் என்று கூறிக்கொண்டு ஹிந்து என்ற ஒற்றுமையை அழிக்கிறார்கள்.

  சரியான வழியென்னவென்றால், ஹிந்து என்று பொதுவெளியில் சொல்லி ஒற்றுமை கண்டு தம்ர்தமர் வாழ்க்கையில் அவரவர் தலைவர்கள் காட்டிய வழி செல்ல வேண்டுமென்று போவதுதான். வீட்டுக்கு வெளியே தமிழர்; வீட்டுக்குள் நாம் தெலுங்கர்கள் என்று எழுத்தாளர் கி ராஜநாராயணன் குறிப்பிட்டதைப்போல‌

  பாலச்சந்திரனுக்கும் கிருஸ்ணகுமாருக்கும் இப்போது ஹிந்துமதமென்னவென்றால் தெளிவாகி இருக்கும். நன்றி.

 37. அன்பின் ஸ்ரீ பாலசந்த்ரன்

  \\ திரு பொன் முத்துக்குமார் அவர்களின் கருத்துக்கள் இந்த தமிழ் இந்து தளத்தில் ஆபிரகாமிய மத மாற்றி கும்பலால் அனுப்பி வைக்கப்பட்ட குழப்பவாதியின் கருத்து என்று தெளிவாக தெரிகிறது. \\

  இல்லை. மாறாக பொன் முத்துக்குமார் அவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் இல்லாது ஆழ்ந்த மற்றும் அடிப்படைப் புரிதல்களின் பாற்பட்டு கருத்துப் பகிரும் பண்புடையவர். அப்படிப்பட்டவரிடம் இருந்து ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்கள் *ஹிந்து* என்ற சொல்லை வரையறுக்கும் பொருளிலிருந்து விலகி அல்லது சமய ரீதியிலான எந்தப்புரிதல்களுமின்றி எந்தத் தரவுகளுமின்றி வெற்று நையாண்டி / ஏகடியம் பாற்பட்ட ஒரு கருத்தை வாசித்ததில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

  மற்றும் சைவம், வைஷ்ணவம், ஜைன பௌத்த சமயங்கள், சீக்கியம் போன்ற சமயங்களிடையே காணப்படும் வேற்றுமைகளை மட்டிலும் ஊதிப்பெரிதாக்குவதை விடுத்து இவற்றினிடையே இருக்கும் சாம்யதைகளையும் கணக்கில் கொண்டால் இவற்றை ஒரு தொகுப்பாகக் ஏன் கருத வேண்டும் என்பது தெளிவாகப் புலனாகும்.

  மேற்கொண்டு அடுத்த படியாக……..வஹாபியம் இவாஞ்சலிஸம் போன்ற விதேசி விஷமக்கருத்துக்களை ஒரு புறம் தள்ளி தேசத்தின் பண்பாட்டுடன் இசைந்த ஹைந்தவ இஸ்லாம் மற்றும் ஹைந்தவ க்றைஸ்தவத்தை அவதானிக்கையில்………. இவற்றிலும் கூட ……….. தேசப்பண்பாடு உள்வாங்கப்பட்டு ஆப்ரஹாமியத்தின் குடியழிப்பு மாற்று மத கபளீகர அசுரத்தனம் குறைந்து தேசத்தின் பண்பாட்டு விழுமியங்கள் அடங்கிய ……….. ஏனைய சமயங்களுடன் நட்பு பாராட்டும் மாண்பும் கூடத் துலங்கும்.

  \\ சட்ட அறிவின்மையால் விளைந்த கருத்து மற்றும் இந்து மதத்தை பற்றி ஏகடியம் பேசும் வீணர்களின் மற்றும் மதமாற்ற ஏஜெண்டுகளின் கருத்தாகவே உள்ளது. \\

  சட்ட ரீதியாகவோ அல்லது சமய ரீதியாகவோ எந்த விதமான அடிப்படைப்புரிதலுமில்லாத கருத்து ஸ்ரீ பொன் முத்துக்குமார் அவர்கள் பகிர்ந்த கருத்து.

  ஹிந்துமதத்தின் மீது பகைமை பாராட்டும் ………. அதை முனைந்து உடைக்க மற்றும் சிதைக்க முயலும் ஆப்ரஹாமியர்களுடைய கருத்தும் இப்படியான பிரிவினையை ஊதிப்பெருக்கும் கருத்து என்பதும் கவனிக்கத் தக்கது.

  ஆனால் பொதுவில் அசுரத்தனமான வெறுப்பு மற்றும் காழ்ப்பினை மட்டிலும் அடிப்படையாகக் கொண்ட ஆப்ரஹாமியத்தின் சாரமடங்கிய கருத்துக்களைப் பகிர்பவர் அல்லர் ஸ்ரீ பொன்முத்துக்குமார். மிகவும் ஆழ்ந்த புரிதல்களாலான கருத்துக்களையே முன்வைப்பவர். மேலும் ஹிந்து ஒற்றுமை மற்றும் தேச ஒருமைப்பாடு இவற்றிற்கு எதிரான கருத்துக்களை தயக்கமேதுமின்றி எதிர்மறையாக விமர்சிப்பவர் இவர் என்பதும் கூட என் புரிதல்.

 38. அன்பர் பீ எசு

  \\ ஹிந்துமதம் என்றொரு மதமே இல்லை. \\

  ஸ்ரீமான் தேவ் அவர்கள் இது சம்பந்தமாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது.

  பிறந்த போது மனிதனுக்கு பல் இல்லை. ஆதியில் இல்லாமல் பாதியில் வந்ததனால் பல் வேஸ்ட் என்று எவனும் கருதுவதில்லை.

  அப்படியே ஹிந்துமதமும். வைதிக, சைவ, வைஷ்ணவ, சாக்த, பௌத்த, ஜைன சீக்கிய சமய நூற்களில் ***ஹிந்து மதம்**** என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவற்றினிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறிய ஒற்றுமை, சமன்வயம் மற்றும் ஒன்றுடன் ஒன்று உறவாடும் தன்மை இவற்றை உள்ளடக்கி ஹிந்துமதம் என்ற மதத்தொகுப்பு இயற்கையாக இருந்து வந்துள்ளது. இதற்கு ஹிந்து மதம் என்ற நாமகரணம் வேண்டுமானால் பிற்காலத்தில் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

  இஸ்லாமிய நூற்களிலோ க்றைஸ்தவ நூற்களிலோ இஸ்லாம் க்றைஸ்தவம் என்ற சொல் உள்ளதா என்று கேட்டிருப்பீர்களா? விசாரம் செய்ய முனைந்திருப்பீர்களா?

  ஹிந்து மதம் என்ற சொல் யாரால் உருவாக்கப்பட்டது? எப்போது உருவாக்கப்பட்டது? விசாரிக்கலாம் தவறில்லை. ஆனால் இந்த அனைத்து சமயங்களும் ஆப்ரஹாமியம் என்ற அசுரக்கருத்தால் விழுங்கப்படாதிருக்கவும் ஒவ்வொரு சமயமும் அதனதன் தனித்துவம் மற்றும் ஏனைய சமயங்களுடனான உறவு பேணல் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஹிந்து மதம் என்ற தொகுப்பு ஒருமிக்க காக்கப்படுவதற்கு மிகவும் தேவையானது இதை ஒருமிக்க அடையாளப்படுத்துதல்.

  ஒருமிக்க அடையாளப்படுத்துவதில் எந்த ஒரு சமயத்தின் தனித்துவமும் லவலேசமும் குறையவும் போவதில்லை.

  \\ ஆனால் வேதங்களை முற்றிலும் நிராகரித்தன. \\

  அப்படியா? வஜ்ரயான பௌத்த ஸ்துதி இதிலிருந்து மாறுபடுகிறது.

  எப்படி இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் என்பது ஒற்றை மதம் இல்லையோ பல கிளைகளாக உள்ளனவோ அப்படியே பௌத்தமும். மஹாயானம் ஹீனயானம் பள்ளிக்கூடங்கள் போதித்த பௌத்த சமயப்பிரிவுகள்.

  மாத்யமகம், யோகாசாரம், வஜ்ரயானம், தந்த்ரயானம், தேராவாதம்…………..வெகுசமீபத்திய நவயானம் இவையெல்லாமும் பௌத்தம் தான். வாழும் பௌத்தம்.

  வஜ்ரயானத்து ஆர்யதாராவை ஸ்துதிக்கும் ஆர்யதாரா அஷ்டோத்தர சதநாமாவளி

  முழு ஸ்தோத்ரத்தையும் நீங்கள் தேவநாகர லிபியிலும் ஆங்க்ல ரோமன் லிபியிலும்

  https://www.dsbcproject.org/canon-text/titles/%E0%A4%86%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%A4%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B6%E0%A4%A4%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AE%E0%A5%8D/%E0%A4%86%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%A4%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B6%E0%A4%A4%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AE%E0%A5%8D

  மேற்கண்ட உரலில் வாசிக்கலாம்.

  सरस्वती विशालाक्षी प्रज्ञा श्रीर्बुद्धिवर्धिनी॥ २९॥

  ஸரஸ்வதீ விசாலாக்ஷி ப்ரக்ஞா ஸ்ரீர் புத்தி வர்த்தினி

  ब्रह्माणी वेदमाता च गुह्या च गुह्यवासिनी॥ ३५॥

  ப்ரம்ஹாணி வேதமாதா ச குஹ்யா ச குஹ்யவாஸினி

  சித்தார்த்த கௌதம புத்தரைப் போலவேயான போதிசத்வரான (நாரீ) ஆர்யதாரா ஸரஸ்வதீ என்றும் ………… வேதமாதா (வேதத்தை ஏற்காத பௌத்தத்தின் ஒரு போதிசத்வர் வேதமாதா) என்றும் இந்த ஸ்துதியில் சொல்லப்பட்டுள்ளார்.

  \\ பின்னர் வைதீகப்பண்டை நூல்கள் தென்னிந்தாவுக்கு வந்தன. ச்நாதன மதத்தின் கூறுகள் ஏற்கனவே இங்கிருந்த மதங்களில் இணைந்தன. அல்லது முழுமையாகவும் சில குழுக்களால் ஏற்கப்பட்டன. அவ்வாறே பவுத்தமும் ஜயினமும் நுழைந்தன. இது தென்னிந்திய மத வரலாறு. \\

  எப்போது எப்படி நுழைந்தன?

  தமிழில் புழக்கத்திலுள்ள ஆகப்பழைய நூலான பரிபாடலில் வைதிக தேவதைகள் இருக்கின்றன. இந்த தேவதைகள் தமிழகத்தில் வந்தேறியனவா?

  தமிழ் ஹிந்து எனும் தளம் இல்லாது போனால் நாசித்தன இனக்காழ்ப்பிலான த்ராவிடக்குப்பைகளும் ஆப்ரஹாமிய அழிச்சாட்டியங்களும் எதிர்க்கேழ்வியே இல்லாமல் வரலாறு என்று அரங்கேற வாய்ப்புண்டு.

  \\ இவர்களுள் ஒரு சிலர் பிராமணீய மதத்தை நிராகரித்தாலும் அதன் சடங்குகள் சில்வற்றை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் பிராமணரை விட்டுவிலகியே நின்றனர். \\

  அது என்ன ப்ராமணீய மதமெனும் திலகாஷ்ட மஹிஷ பந்தனமதம். த்ராவிடக்குப்பை உருவாக்கிய மதம்?

  ப்ராமணரை விட்டு விலகியே நின்றனர் என்பது பச்சைப்பொய். பூர்வமீமாம்சை, அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் இவை அவைதிக சமயங்களின் கருத்துக்களை பூர்வ பக்ஷமாக விசாரித்து அவற்றை நிராகரணம் செய்கின்றன. வைதிக அவைதிக சமயத்திடையேயான போக்குவரத்து ஒற்றைவழியல்ல. இருவழிப்போக்குவரத்து என்பதனை வரலாறு நிர்த்தாரணம் செய்கிறது. வைதிகத்திலிருந்து அவைதிக சமயங்களுக்கு அனைத்து ஜாதியிலிருந்து மக்கள் சென்றிருக்கிறார்கள். அவ்வண்ணமே போனவழியிலேயே திரும்பியும் வந்திருக்கிறார்கள்.

  ஆப்ரஹாமியம் போல ஹிந்து மதத்தின் வைதிக அவைதிக சமயங்கள் மீளாப்படுகுழியல்ல.

  பரம வைதிகமான சாக்த மண்டலிகளில் பௌத்த திக்பாலகர்கள் இன்றைய தினத்தில் கூட உபாஸனையின் அங்கமாக உள்ளது……….அவிச்சின்னமாக இந்த சமயங்களிடையே சம்வாதம் இருந்திருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது. இன்று அது தொடரவும் செய்கிறது.

  ஆகவே *****ப்ராமணரை விட்டு விலகியே நின்றனர்**** என்பது ஆதிக்க ஜாதி நாசித்தன இனவெறி த்ராவிடக்குப்பை எதிர்ப்பார்ப்பு மட்டும் தானே ஒழிய யதார்த்தம் நிச்சயமாகக் கிடையாது. ப்ராம்மணர் என்று சொல்லப்படும் ஜாதியில் ஒரு பகுதி பௌத்த சமயத்தை ஒரு புறம் நிராகரித்தாலும் அதிலேயும் கூட ஒரு பிரிவினர் பௌத்தத்தை நிராகரிப்பதில்லை என்பது போக தமது உபாஸனா பத்ததிகளில் ஒரு அங்கமாகவும் கொள்கின்றனர். யாரும் யாரையும் விட்டு ஒட்டு மொத்தமாக விலகவில்லை.

  த்ராவிட ஆதிக்க ஜாதி நாசித்தனக் குப்பைக்கருத்துப்படி மட்டிலும் தான் சமூஹம் என்பது தொடர்புகள் இல்லாத தீவுத்திடல்கள். யதார்த்தத்தின் பாற்பட்ட ஹிந்துத்வத்தின் வழி சமூஹம் பற்பல மணம் பரப்பும் புஷ்பங்களால் ஆன உத்யானவனம்.

  \\ இவர்கள் அனைவருக்கும் ஓரொற்றுமை இருக்கிறது. அனைவருமே இந்தியமண்ணில் தோன்றி வாழ்பவர்கள் \\

  ஸ்……………ஸப்பா………. பேரளவுக்காவது ஒரு ஒற்றுமையை கண்டுபிடித்ததற்கு நன்றி. மாறாக எக்கச்சக்கமாக ஒற்றுமைகள் இருக்கின்றன. த்ராவிட காழ்ப்புக் கண்ணாடியைக் கழட்டி விட்டு ஹிந்துத்வம் எனும் தெளிந்த நீரருந்தி விட்டு இந்த தேசத்து சமய நூற்களை பார்வையிட்டால் அதில் காணப்படும் வேற்றுமைகளும் தனித்துவங்களும் மட்டுமின்றி ஊடே காணப்படும் எண்ணிறந்த ஒற்றுமைகளும் வெளிப்படும்.

  ஜெய்ஹிந்த்.

 39. மீண்டும் தெரிவிக்கிறேன். இலங்கையில் சிங்கள-பவுத்த இனவெறி இந்து ஆலயங்களை அழித்துக்கொண்டிருக்கிறது என்பது விடுதலை புலி ஆதரவாளர்களின் கிறிஸ்தவ மிசனறிகளின் திட்டமிட்ட பொய் பரப்புரைகள் மட்டுமே.
  நல்லூர் கந்தசுவாமி ஆலய சிறப்பு 10 Aug, 2017
  https://www.nalluran.com/article/6AD20C28B5A000C2
  பிள்ளையார் ஆலயத்தில் தேர் இழுக்கும் சிங்கள-பவுத்த ராணுவத்தினர்.
  https://www.e-jaffna.com/archives/67286
  மாவிட்டடபுரம் முருகன் ஆலயத்தில் வழிபடும் சிங்கள-பவுத்த ராணுவத்தினர்.
  https://www.army.lk/news/troops-attend-mavaddipuram-kovil-pooja

 40. // திரு பொன் முத்துக்குமார் அவர்களின் கருத்துக்கள் இந்த தமிழ் இந்து தளத்தில் ஆபிரகாமிய மத மாற்றி கும்பலால் அனுப்பி வைக்கப்பட்ட குழப்பவாதியின் கருத்து என்று தெளிவாக தெரிகிறது. //

  யப்பா யப்பா யப்பா, மொஸாட், சி.ஐ.ஏ-வெல்லாம் உங்களிடம் பிச்சை வாங்கவேண்டும், நல்ல நகைச்சுவை.

 41. // நான் எழுதியது உங்களுக்குப் புரியவில்லை என்பது மிகப்பெரிய பொய் என்பது கொஞ்சமே. உங்களது மத தூஷணைப் பேச்சுக்கு நான் அளித்த உத்தரம் உங்களுக்கு ஏற்புடையதாகவும் இல்லை உங்களது மத நக்கல் நையாண்டிப்பேச்சுக்கு தர்க்க பூர்வமான அறிவு பூர்வமான ப்ரத்யுத்தரமும் உங்கள் தரப்பிலிருந்து இல்லை. அதாவது நான் எழுதிய விஷயத்தில் ஓரிரு வார்த்தைகளுக்கு உங்களுக்கு நேரடிப் பொருள் தெரியவில்லை. ஆயினும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது வெகு தெளிவாக உங்களுக்குப் புரிந்தும் உள்ளது. குடையவும் செய்கிறது.

  நான் மணிப்பவளத்தில் எழுதியது உங்களுக்குப் புரிந்தும் புரியாதது மாதிரியான ஒரு பாசாங்கு. ஆனால் நீங்கள் ஏகபோக குத்தகை எடுத்துள்ள சுயசான்றிதழ் அளித்துக்கொண்டுள்ள ஒரு நடையில் எழுதிய விஷயம் உங்களுக்கே கூட புரிந்துள்ளதா என்பது நீங்கள் வணங்கும் கடவுளுக்கே வெளிச்சம்.//

  “உத்தரம், சம்வாதம், பிரயாசிக்கும், த்ருடமான என்பதற்கெல்லாம் எனக்குப்பொருள் தெரியவில்லை.” என்று நான் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் எப்படி பொருள் கொண்டிருக்கிறீர்கள் ? ”நான் எழுதியது உங்களுக்குப் புரியவில்லை …. நான் மணிப்பவளத்தில் எழுதியது உங்களுக்குப் புரிந்தும் புரியாதது மாதிரியான ஒரு பாசாங்கு” என்று.

  ஐயன்மீர், நான் சொல்வது என்ன ? எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. ஆகவே, மேற்கண்ட சம்ஸ்கிருத சொற்கள் – எனக்கு பொருள் தெரியாத சொற்கள் – வாக்கியங்களின் நடுவில் வந்தால் என்னால் எப்படி பொருள் கொள்ள இயலும் ? எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாததால் யூகிக்க மட்டுமே இயலும். இப்படி ஒரு வாக்கியத்தில் எனக்குத்தெரியாத நான்கு சம்ஸ்கிருத சொற்கள் வந்தால், நான் அந்த வாக்கியத்தை பொருள் கொள்வது மிகவும் தடைபடும். அப்புறம் சாலையில் அமைக்கப்படும் வேகத்தடை போல, ஒவ்வொரு வாக்கியத்தையும் நிறுத்தி நிறுத்தி, யோசித்தும் யூகித்துமே பொருள் கொள்ளவேண்டும். உங்களது பின்னூட்டத்தை படிக்கும்போதெல்லான் நான் செய்வது அதையே.

  மற்றபடி, ’மத துவேஷம் செய்பவன்’, ’கடைந்தெடுத்த நெஞ்சழுத்தம்’ (எனக்கு low BP, ஹி..ஹி), ’லவலேசமும் கூச்சமில்லாமல்’ என்றெல்லாம் தனிமனித அவதூறு / நிந்தை செய்யும் எல்லைக்கு உங்களது கோபம் உங்களை கொண்டு சென்றிருப்பதால் இனி உங்களோடு உரையாட எனக்கு எதுவுமில்லை.

 42. //அப்படியே ஹிந்துமதமும். வைதிக, சைவ, வைஷ்ணவ, சாக்த, பௌத்த, ஜைன சீக்கிய சமய நூற்களில் ***ஹிந்து மதம்**** என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவற்றினிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறிய ஒற்றுமை, சமன்வயம் மற்றும் ஒன்றுடன் ஒன்று உறவாடும் தன்மை இவற்றை உள்ளடக்கி ஹிந்துமதம் என்ற மதத்தொகுப்பு இயற்கையாக இருந்து வந்துள்ளது. இதற்கு ஹிந்து மதம் என்ற நாமகரணம் வேண்டுமானால் பிற்காலத்தில் கொடுக்கப்பட்டிருக்கலாம்.//

  —-கொடுக்கப்பட்டிருக்கலாமென்பது சரியில்லை. கொடுக்கப்பட்டது என்பதே சரி. எனினும் என் கருத்தை வழிமொழிந்தது நன்று.

  //இந்த அனைத்து சமயங்களும் ஆப்ரஹாமியம் என்ற அசுரக்கருத்தால் விழுங்கப்படாதிருக்கவும் ஒவ்வொரு சமயமும் அதனதன் தனித்துவம் மற்றும் ஏனைய சமயங்களுடனான உறவு பேணல் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஹிந்து மதம் என்ற தொகுப்பு ஒருமிக்க காக்கப்படுவதற்கு மிகவும் தேவையானது இதை ஒருமிக்க அடையாளப்படுத்துதல்.ஒருமிக்க அடையாளப்படுத்துவதில் எந்த ஒரு சமயத்தின் தனித்துவமும் லவலேசமும் குறையவும் போவதில்லை.//

  —என் கருத்தே. வழிமொழிந்தது நன்று. தனித்துவம் லவேசம் குறைவு என்று நான் பேசவில்லை. இருக்கிறது என்பதுதான் நான் பேசியது.

  //எப்போது எப்படி நுழைந்தன?

  தமிழில் புழக்கத்திலுள்ள ஆகப்பழைய நூலான பரிபாடலில் வைதிக தேவதைகள் இருக்கின்றன. இந்த தேவதைகள் தமிழகத்தில் வந்தேறியனவா?//

  சங்க இலக்கிய பரிபாடல் ஒன்றே எடுத்துக்காட்டப்படுகிற்து. மற்றபாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது எனப்து தமிழ் இலக்கியம் படிக்காத – தமிழில் எழுதினாலே ஆபாசமென நினைக்கும் கிருஸ்ணகுமாருக்குத் தெரிநதிருக்க வாய்ப்பில்லை. நிறைய பாடல்கள் வைதீக தெய்வங்களைப்பற்றிப்பேசுகின்றன. ஆனால், சங்க இலக்கியமே வேதகாலத்துக்குப் பின்பட்டது. இராமாயண, பாரத காலத்துக்கும் பின்பட்டது என்பதை இவ்விரு இதிகாசங்களைப்பற்றிய குறிப்புக்களை சங்க இலக்கியத்தில் காணலாம். பாண்டியன் குருச்சேத்திரப்போருக்கு உதவினான் என்று குறிப்பும் உண்டு.

  சமஸ்கிருதம் தமிழரின் தாய்மொழியே அன்று. அது வடக்கிலிருந்தே கொண்டுவரப்பட்டது. வானத்திலிருந்து குதிக்கவில்லை. வேதங்கள்-பிராமணங்கள்-ஆரியங்கள்-மஹாபாரதம்-இராமயாணம்-புராணங்கள்-சாஸ்திரங்கள் – இவையே வைதீக மதத்தின் அடிப்படை. இவை சமஸ்கிருத நூல்கள். எப்படி வைதீக மதம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்க முடியும்?

  //ப்ராமணரை விட்டு விலகியே நின்றனர் என்பது பச்சைப்பொய்//

  நான் எழுதியவற்றைக் குறைக்கண்களோடு வாசித்ததால் வந்த எதிர்வினை. அதில் சொல்லப்பட்டது பிராமணீயக்கூறுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை எனபதே. அதுவல்ல என் அடிப்படைக்கருத்து. எடுக்கப்படுவது வேறு; பிராமணரை விட்டு விலகி நின்றது வேறு. Anti-brahmin sentiment is the root cause of branching out of religious philosophies under leaders like Buddha, Jaina, Sikh Gurus, Ayya Vaikuntar, Narayana Guru and so many. You can defend anything because you are born to defend, but history is against you.

  //ஆப்ரஹாமியம் போல ஹிந்து மதத்தின் வைதிக அவைதிக சமயங்கள் மீளாப்படுகுழியல்ல.//

  —ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படையே வேறு. வைதீக மற்றும் இந்திய மண்ணின் தோன்றிய மதங்களின் அடிப்படைகள் வேறு. இரண்டையும் சேர்த்து குழப்பி மடைமாற்றம் செய்ய‌க்கூடாது. இங்கு பேசப்படுவது மத அரசியல் அன்று. அப்படி மத அரசியல் பேசும்போதுதான் ஆபிரஹாமிய மதங்களைப் பற்றி உரையாடவேண்டும். ஹிந்து மதம் தனி. அது தனியாகவே பேசப்படவேண்டும் இந்துமதம் பற்றி வாதத்தில். இந்துமதம், இசுலாம், கிருத்துவ, யூத மதங்களோடு சேரவே சேராது.

  //ஆகவே *****ப்ராமணரை விட்டு விலகியே நின்றனர்**** என்பது ஆதிக்க ஜாதி நாசித்தன இனவெறி த்ராவிடக்குப்பை எதிர்ப்பார்ப்பு மட்டும் தானே ஒழிய யதார்த்தம் நிச்சயமாகக் கிடையாது. ப்ராம்மணர் என்று சொல்லப்படும் ஜாதியில் ஒரு பகுதி பௌத்த சமயத்தை ஒரு புறம் நிராகரித்தாலும் அதிலேயும் கூட ஒரு பிரிவினர் பௌத்தத்தை நிராகரிப்பதில்லை என்பது போக தமது உபாஸனா பத்ததிகளில் ஒரு அங்கமாகவும் கொள்கின்றனர். யாரும் யாரையும் விட்டு ஒட்டு மொத்தமாக விலகவில்லை.//

  —கிருத்துவ பிராமணரும் உண்டு. இத்தளத்திலேயே சிசம் என்ற கிருத்துவ பிராமணர் எழுதிக்கொண்டிருந்தாரே? ஆக, ஒரு புதிய மதம் தாமிருக்குமிடத்தில் தோன்றும்போது, அங்கும் சிலர் செல்வார்கள். அப்படி பிராமணர்கள் பவுத்தம், ஜயினம் போய் துறவிகளானார்கள். அப்பரே சமணத்துற்விதானே? அதைப்போல வைதீக மதத்திலிருந்து விலகிக்கொண்டோர் தத்ரிக் என்ற பிரிவை உண்டாக்கினர். அது தனிமதம் அன்று. இந்துமதம்தான். ஆனால் அங்கு பிராமணர்கள் செல்லவில்லை. எனினும் அம்மத வரலாற்றைப்படிக்கும்போது பிராமணர்கள் சிலரும அங்கு போனார்கள். பெரிய தத்ரிக் சாமியார்களாகவும் இருந்தார்கள். ஒரு சிலர்தான். போனமாதம் அஹோரிகள் (தத்ரிக் பிரிவினர்) தி.நகர் திருப்பதி கோயிலில் நுழைந்துவிட்டார்கள். பட்டர்கள் கடுமையாக எதிர்த்து அவர்களைத் தடுத்தததுமட்டுமில்லாமல் சுத்திபரிஹாரமும் பண்ணினார்கள் என்று எல்லாச்செய்தித்தாள்களும் பரபரப்பராக போட்டனவே? அஹோரிகளில் பலபல ஜாதியினரில் பிறந்தோரே. அவர்களுள் கண்டிப்பாக பிராமண குலத்தில் பிறந்தோரும் கண்டிப்பாக உண்டு.

  எல்லாமே உண்டு இங்கே. எதிர்ப்பு, ஆதரவு, பிரிவினைகள் அதுதான் இம்மதம். ஆனால், வைதீக மத எதிர்ப்பு மட்டும் இல்லை. மற்றெல்லாம் உண்டு என்று அடித்துவிடுவது ஒரு திருப்திக்குத்தான், உண்மையாகாது. என்றும் வைதீக மதத்துக்கு ஆதரவு உண்டு. எதிர்ப்பும் உண்டு எனபதே வரலாறு காட்டுவது. இதைச்சொன்னால் ஆபிரஹாமிய மதங்கள்; திராவிடக்காழ்ப்புணர்ச்சியா? மீண்டும் எழுதுகிறேன்: சநாதன மதமே இந்துமதம். அதை விலக்கியோர் இந்துமதத்துரோஹிகள் என்பவர்கள் மூடர்கள் மட்டுமல்ல. உண்மையில் இந்துமதத்தை அழிக்க வந்தவர்கள்.

 43. ஹிந்துவா! நீங்கள் மீண்டும்மீண்டும் சொல்லலாம். உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. நான் எடுத்துக்காட்டியதெல்லாம் இக்கட்டுரையின் பின்னூட்டத்தில் கூட ஓர் இலங்கைத்தமிழர் மாறுபட்டிருக்கிறார் என்பதே. Let SriLankan Hindu Tamils speak.

 44. அன்பர் பீ எசு

  \\ தமிழில் எழுதினாலே ஆபாசமென நினைக்கும் கிருஸ்ணகுமாருக்குத் தெரிநதிருக்க வாய்ப்பில்லை. \\

  தூய தமிழில் எழுதுவதை நிச்சயம் நான் உயர்வாகக் கருதுகிறேன். அதை மதிக்கவும் செய்கிறேன் என்று தெளிவாகப் பலமுறை எழுதியும் இருக்கிறேன். எனக்கு மணிப்ரவாளமும் உயர்வே. தேவரீர் பல்வேறு அவதாராதிகளிலும் தற்போதைய அவதாரத்திலும் தப்புத்தப்பாக தமிழில் எழுதி போதாமைக்கு அதில் ஆங்க்ல சாராயத்தைக் கலப்பதை தரம் தாழ்ந்ததாகக் கருதுகிறேன். அதையும் கூட ஆபாசம் என்று கருதவில்லை. நான் சொல்லாத கருத்தை என் மீது திணிக்கும் உங்களது கீழ்த்தரமான கருத்தாடலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் அடுத்தவர் சொல்லாத கருத்தை சகட்டு மேனிக்கு திணிப்பது உங்களுக்கு இயல்பாயிற்றே. அவதாரம் மாறினாலும் அது எப்படி மாறும்?

  \\ சமஸ்கிருதம் தமிழரின் தாய்மொழியே அன்று. அது வடக்கிலிருந்தே கொண்டுவரப்பட்டது. வானத்திலிருந்து குதிக்கவில்லை. வேதங்கள்-பிராமணங்கள்-ஆரியங்கள்-மஹாபாரதம்-இராமயாணம்-புராணங்கள்-சாஸ்திரங்கள் – இவையே வைதீக மதத்தின் அடிப்படை. இவை சமஸ்கிருத நூல்கள். \\

  உங்களது க்றைஸ்தவ ப்ரசாரத்தை மொழி என்ற முக்காடு போட்டு ஆரம்பித்து விட்டீர்கள். வேத நூற்கள் யாக்கப்பட்டது ஸம்ஸ்க்ருதத்தில் இல்லை. சந்தஸீ என்று சாரங்க் என்று உங்களுக்கு ஜோ அமலன் அவதாரத்தில் க்ளாஸ் எடுத்து விட்டார். இப்படி அவதாரம் அவதாரமாக நீங்கள் தொடர்ந்து இஷ்டத்துக்கு கருத்தை மாற்றிக்கொண்டால் எத்தனை முறை தான் உங்களுக்கு க்ளாஸ் எடுப்பது?

  எல்லாம் தெரிந்த நீங்கள் ஆழ்வார் அருளிச்செயல்களை இந்த தளத்தில் இழிவு படுத்தி….. வேற்றுமை உருபு சஹிதமாக உங்களுக்கு விளக்கம் தமிழ் ஹிந்து தளத்தில் அளிக்கப்பட்டது.

  ஆனால் இவை நீங்கள் முக்யமான விஷயத்தை வழக்கம் போலத் திசை திருப்புவதற்கு கையாளும் வழி. அவ்வளவே. நீங்கள் விசாரம் செய்ய வேண்டிய விஷயம் கீழே உள்ளது.

  \\ எப்படி வைதீக மதம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்க முடியும்? \\

  வைதிக மதம் ஒட்டு மொத்த ஹிந்துஸ்தானத்துக்குமானது. வடக்கு தெற்கு என்று பிரிக்க முனைபவர்கள் தமிழர்கள் அல்லர். தமிழ் என்ற முகமூடி போட்டுக்கொண்டுள்ள ஆப்ரஹாமியரே.

  தமிழில் ஆகப்பழைய நூல் பரிபாடல். அதிலேயே வேதக்கடவுள்கள் சொல்லப்பட்டுள்ளன. விஷயம் அவ்வளவு தான்.

  இதற்கு முன்னால் தமிழில் ஏதாவது நூல் உண்டு என்றால் அதை ஆதார பூர்வமாக விளக்கவும். வெறுங்கையால் முழம் போடாதீர்கள்.

  வெட்டி விதண்டா வாதம் நீங்கள் நிறைய செய்வீர்கள். நேராக விஷயத்துக்கு வாருங்கள்.

  \\ அதில் சொல்லப்பட்டது பிராமணீயக்கூறுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. \\

  வைதிக மதம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், என எந்த வைதிக சமயத்திலும் உள்ளது வைதிகக் கூறு மட்டிலுமே. த்ராவிட பாஷாணம் எனும் நாசித்தனக் காழ்ப்புணர்வு உங்கள் எண்ணங்களிலிருந்து விலகாமையால் எந்த ஒரு சமய நூற்களையும் த்ராவிட ஜாதிக்குப்பைக் கருத்தாக்கத்தை மீறி உங்களால் சிந்திக்கவும் முடியாது.

  \\ முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை எனபதே. அதுவல்ல என் அடிப்படைக்கருத்து. எடுக்கப்படுவது வேறு; பிராமணரை விட்டு விலகி நின்றது வேறு. \\

  ஆதாரத்தோடு உங்களது பச்சைப்பொய் நிராகரிக்கப்பட்டது. எதற்காக வளவளவென இப்படி தலையைச் சுத்தி மூக்கைத்தொட விழைகிறீர்கள்?

  \\ சநாதன மதமே இந்துமதம் \\

  என்று உங்களுக்கு எந்த க்றைஸ்தவ சபையில் சொல்லிக்கொடுக்கப்பட்டது என்று சொல்லலாம். அல்லது எந்த த்ராவிடக் குப்பை நூலில் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாகச் சொல்லலாம்.

  ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சட்டப்படி இது பொய். பரங்கியனுக்கு வால் பிடித்த உங்களது குருநாதராகிய ராமசாமி நாயக்கர் வழி செல்லும் உங்களுக்கு ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனம் என்பது ஒரு பொருட்டல்ல என்று தெளிவாகச் சொல்ல விழைகிறீர்களா?

  சமயரீதியான ஆய்வின்பாற்பட்டும் இது பொய்.

  எதற்காக க்றைஸ்தவத் திருச்சபைகளில் நீங்கள் கேட்டுவந்த கசடுகளை இங்கு தமிழ் ஹிந்து தளத்தில் பரப்புரை செய்கிறீர்கள்?

 45. அன்பின் பொன்முத்துக்குமார்

  \\ அப்புறம் சாலையில் அமைக்கப்படும் வேகத்தடை போல, ஒவ்வொரு வாக்கியத்தையும் நிறுத்தி நிறுத்தி, யோசித்தும் யூகித்துமே பொருள் கொள்ளவேண்டும். \\

  நான் எழுதியதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் பரிச்ரமப்பட்டு. என்னால் இவ்வாறே கருத்துப் பரிமாறல் லகுவானது. விஷயம் அவ்வளவுதான். இதே வேகத்தடையுடனேயே நான் எழுதிய ஒரு வ்யாசத்திற்கு கிட்டத்தட்ட 400 எதிர்வினை. இது யதார்த்தம்.

  மணிப்ரவாளத்தின் மீது உங்களுக்கு த்வேஷம் என்றால் அது நேர்மையாகும். மற்ற சாக்குப்போக்கு…… புரியவில்லை…… இத்யாதி இத்யாதி…… அதற்கு முட்டுக்கொடுத்தல்.

  \\ இணையான தமிழிலும் எழுதலாம், அதுவும் நல்ல மொழிதான்\\

  எந்த மாற்று மொழியும் கலக்காத தூய்மையான தமிழ் மொழியை நான் என்றும் தூஷித்ததில்லை. மாறாக வெளிப்படையாக விதந்தோதியும் இருக்கிறேன்.

  த்வேஷத்தை மட்டிலும் கொள்பவர்கள் மட்டிலுமே தான் மணிப்ரவாளத்தை கெட்ட மொழி என்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ சொல்லவியலும்.

  இது புதிதுமல்ல. எல்லாம் வள்ளல் அருணகிரிப்பெருமான் காலத்திலேயே அரங்கேறிய அவலம் தானே.

  அடியார்கள் அவரிடம் சென்று ஐயா திருப்புகழை மொழிக்காக பலரும் இகழுகின்றனரே என்று அவரிடம் வ்யாகூலப்பட்டிருக்க வேண்டும்.

  அவர்களுக்கு அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம் என.

  மணிப்ரவாளம் நல்ல மொழியல்ல என்று மறைமுகமாக உங்கள் மேற்கண்ட வாசகம் சொல்லுகிறது. ஆனால் மணிப்ரவாளத்தில் இயற்றப்பட்ட திருப்புகழில் வள்ளல் பெருமான் சொல்லியிருப்பது……

  அருணதளபாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரியதமிழ் தானளித்த மயில் வீரா என………….

  வள்ளல் பெருமான் திருப்புகழ் யாக்க தமிழ்த்ரயவிநோதப்பெருமான் அவருக்களித்த மொழி கெட்ட மொழி கிடையாது. அரிய தமிழ் என்றறிக.

  \\ இப்படி நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக நீங்களே கற்பிதம் செய்துகொண்டு இப்படித்தான் மட்டையடியாக உரையாடுவீர்கள் \\ மற்றபடி, ’மத துவேஷம் செய்பவன்’, ’கடைந்தெடுத்த நெஞ்சழுத்தம்’ (எனக்கு low BP, ஹி..ஹி), ’லவலேசமும் கூச்சமில்லாமல்’ என்றெல்லாம் தனிமனித அவதூறு / நிந்தை \\

  தனிமனித அவதூறு நிந்தை இவையெல்லாம் செய்வதற்கு உங்களுக்கு மட்டிலும் ஏகபோக பாத்யதை இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா?

  நீங்கள் பௌத்தத்தையும் ஜைனத்தையும் ஹிந்து மதத்திலிருந்து பலவந்தமாக / காரணமன்னியில் விலக்கிச் ***சொல்லியதைத்*** தவறு என்று வெறுங்கையில் முழம்போடாது தரவுகளுடன் அதை நிராகரணம் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லாததைச் சொல்லியதாக நான் கற்பிதம் செய்ததாகவும் மட்டையடி என்றும் தூஷிப்பது உங்கள் பாஷா ப்ரயோக ரீதியில் நிந்தனை / தூஷணை ஆகாது. சபாஷ்.

  \\ உங்களது கோபம் உங்களை கொண்டு சென்றிருப்பதால் இனி உங்களோடு உரையாட எனக்கு எதுவுமில்லை \\

  ஸ்வாமின். நீங்கள் பகிர்ந்துள்ள மத த்வேஷக் கருத்துக்கள் மத நிந்தனைக் கருத்துக்கள் இவற்றுக்காக நீங்கள் என்னுடன் உரையாடவோ சதிராடவோ வழக்காடவோ வேண்டாம். உங்கள் பக்கம் ந்யாயம் அன்யாயம் வாதம் தர்க்கம் குதர்க்கம் சுஷ்கதர்க்கம் என்று ஏதாவது சரக்கு இருந்தால்………… எனக்கு உத்தரமாக இல்லை…… தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு ……………. உங்கள் மத த்வேஷக் கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கலாம்.

  இல்லை வெறுமனே மொக்கை போடும் வ்யாஜத்தில் நீங்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதியிருந்தால் …………. மண்தரையில் உட்கார்ந்து எழுந்தவர்கள் ப்ருஷ்டத்திலிருந்து தூசி தட்டிச்செல்வது போல சென்று விடலாம்.

  என்னுடன் நீங்கள் உரையாடுவது ஆடாதது உங்கள் ஸ்வதந்த்ரம். உங்களது கருத்துக்களில் பொய்கள், த்வேஷம் இத்யாதிகள் தென்படில் அவற்றை இடித்துரைப்பதற்கு எனக்கு எந்த தயக்கமும் இருக்காது. அது எனது ஸ்வதந்த்ரம்.

  ஸுகீ பவ.

 46. எனது பெருமதிப்பிற்குரிய பெருந்தகை அன்பர் பீ எசு அவர்கள் சமூஹத்திற்கு அடியேன் தெண்டனிட்டு சமர்ப்பித்துக்கொள்வது

  \\ இத்தளத்திலேயே சிசம் என்ற கிருத்துவ பிராமணர் எழுதிக்கொண்டிருந்தாரே? \\

  ஆருங்காணும்? உமது வாக்குதத்த மித்ரர் சில்சாமை சொல்லுகிறீர்களா? அவுரு கிருத்துவ பிராமணர் என்று ராம்சாமி நாயக்கரு உங்களுக்கு கெனால சொன்னாரா? இல்லாங்காட்டி ஏஞ்சல் டிவில சாது செல்லாப்பான்னு ஒருத்தரு டமாஸ் செய்வாரே அவுரு சொன்னாரா? இப்புடி திடீர் திடீர்னு ஒங்க தக்ஷிணாமூர்த்தி காரு ஸோனியா கேண்டியை மணிமேகலையே என்று செப்துன்னவாரிக்கி மீரு ஏமி செப்துன்னாரண்டி? தேவுடா? இதி எந்துகோசவ்ம்?

  தேவரீர் உமது வாக்குதத்த மித்ரர் சில்சாமிடம் வாக்குதத்தம் செய்ததை ஒட்டி ………….. எந்த திருச்சபையிலோ கேட்டு உலகோருக்கு…………. சாது செல்லப்பா பாணியில் செய்த அருளிச்செயல்கள் கீழே :-

  BSV on August 13, 2017 at 4:19 pm………

  ஹிந்துமதம் என்றொரு மதமே இல்லை……………

  வைதீகப்பண்டை நூல்கள் (வேதங்கள்; பிராமணங்கள்; ஆரண்யங்கள்; மஹாபாரதம் (5ம் வேதம்); இராமாயணம்; உபநிஷத்துக்கள்; புராணங்கள்; சாஸ்திரங்கள் ) இவற்றினிடப்படையில் மக்கள் வாழும் மதம் சநாதன மதம். ஹிந்து மதம் கிடையாது.

  BSV on August 14, 2017 at 11:29 pm………………

  சநாதன மதமே இந்துமதம். அதை விலக்கியோர் இந்துமதத்துரோஹிகள் என்பவர்கள் மூடர்கள் மட்டுமல்ல. உண்மையில் இந்துமதத்தை அழிக்க வந்தவர்கள்.

  உங்கள் ஒரே தேவனான ஏஸ்ஸப்பருடன் சாது செல்லப்பா அவர்கள் சுவனத்தில் டேபிளின் முன்னால் உக்காந்து சல்லாபம் செய்து அதை உலகோருக்கு ஏஞ்சல் டிவியில் வழங்குவதில் கூட இத்தனை ஹாஸ்யம் இருக்காது ஸ்வாமின். இப்படி சகட்டு மேனிக்கு மொக்கை போடுதல் தகுமா? தகுமா? தகுமா?

  மக்கால தமிழ் ஹிந்து தளத்தில் சநாதன தர்மத்தை யாரும் ஹிந்து மதத்தில் இருந்து விலக்கவில்லை. பௌத்த ஜைன சீக்கிய மற்றும் நாட்டார் வழிபாடுகளை ஜபர்தஸ்தியாக ஹிந்துமதத்தில் விலக்குவதையே கண்டிக்க விழைகிறோம். ஹிந்து மதத்திலிருந்து வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார் வழிபாடுகள் என எந்த ஒரு சமயத்தையும் யாரும் ஹிந்து மதத்திலிருந்து விலக்குவது அயோக்கியத் தனம். யார் விலக்கினாலும் அதை கண்டித்து வந்திருக்கிறேன்,. இந்த தளத்தில் இல்லை. எல்லா தளத்திலும். இதே பெயரில்.

  மொக்கை மேல் மொக்கை போட சுவிசேஷ நற்செய்திக் கூட்டங்களில் பேயாட்டம் ஆடுவது போல சகட்டு மேனிக்கு தேவரீர் மொக்கையாட்டம் ஆடி பயமுறுத்தாதீர்கள். தமிழ் ஹிந்து வாசகர்கள் பாவம் 🙂 🙂 🙂 சமத்தாக வேதாளம் முருங்கை மரமேறட்டும்.

 47. இந்துவா என்ற பூனை கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டதாக நினைக்கின்றது.இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

  சின்ஹல பவுத்த அரச படையினர் தேரையும் இப்பொழுது இழுப்பார்கள் தேரை எரிக்கவும் செய்வார்கள். இழுக்கவேண்டாம் என எதிர்த்துப் பேச தமிழ் இந்துக்களால் முடியவே முடியாது.அவர்கள் செய்வதும் நடப்பதும் செய்யப்போவதும் செய்து முடித்ததும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடலாமேதவிர எதிர்ப்பது என்பது விபரீதத்தையே கொண்டுவரும் என்பதை ஈழத்து இந்துக்கள் அறிவர். புலிகளின் ஆதரவாளர்களை திட்டுவதை விட்டுவிட்டு இலங்கையில் வெளிவரும் தினசரிப் பத்திரிகளை வாசித்தால் உண்மையை இந்துவா உணரக்கூடும். கூடவே Hindu Religious and Cultural Affairs அலுவலகம் வெளியிட்ட reportஐயும் வாசிக்கவும்.அழிக்கப்பட்ட சில கோவில்களின் படங்களைப் பார்க்க வேண்டுமாயின் Destruction of Hindu Temples என்ற நூலைப் பார்க்கவும்.
  இன்னும் ஒன்று. கதிர்காமத்தின் முன்னே இருந்த ஓம் என்ற சின்னத்திற்கு என்ன நடந்தது? ராமகிருஷ்ண மடம் எப்படி பவுத்த museumஆக மாறியது? சுற்றிவர இருந்த மடங்களுக்கு என்ன நடந்தது ?கிண்ணியா வெந்நீர் ஊற்றும் அதன் பக்கத்தில் இருந்த கோவிலும் ஏன் பவுத்தமாக மாறியது? சின்ஹல பவுத்தர்கள் வாழாத தமிழர் பிரதேசங்களில் ஏன் அரச செலவில் பவுத்த விஹரைகள் முளைக்கின்றன? சுமார் இருபதினாயிரத்திட்குமேல் இந்துக்கள் பவுத்தர்களாக எப்படி மாற்றப்பட்டார்கள்? பத்து இந்து சிறுவர்கள், ஒரு பிராமண சிறுவன் உட்பட, எப்படி பிக்குகளாக மாற்றப்பட்டார்கள் ? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பாவம் இந்துவாவுக்கு இது போதும்.

  ராணுவத்தின் இன்றைய புதிய தந்திரத்தில் ஒன்று இப்படியான செய்கைகளின் மூலம் தமிழ் மக்களிடையே ஊடுருவது.தங்களை நல்லவர்களாகக் காட்ட முயற்ச்சிப்பது. தங்களது கொடூரச் செய்கைகளை மக்கள் மறப்பதற்கான ஒருவகை தந்திரோபாயம். அரசின் amalgamation /acculturation திட்டத்தின் ஒரு படி.கூடவே தமது குற்றங்களை பாவங்களை கழுவி குற்ற உணர்வினை குறைப்பதற்கான ஒரு முயற்சியும்தான். இவற்றை இந்துவா மறைக்க முற்பட்டாலும் ( இவருக்கு இது நல்லாவே தெரியும். ஆனாலும் எதற்காக மூடி மறைக்கிறார் என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும் ) ஈழத்து இந்துக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளார்கள்.

 48. இன்னும் ஒன்று:

  சின்ஹல பவுத்தர்களின் மனதில் ஆழ்ந்து இருக்கும் assimilation எனும் எண்ணம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 1956ல் கொண்டுவரப்பட்ட தனிச் சின்ஹல மொழி சட்டத்தின்போது வெளிப்படையாகவே சின்ஹல பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில்கூ றப்பட்டதுதான். I M R A Iriyagolle M P declared that disunity would not arise because we sinhalese want to absorb you Tamils into our community. (see Hansard Vol.22 col.1754 -55 ) Another M.P Sagara Palansuriya told in parliament ” we want to absorb you.Why do you resent that? because there are 40 million people speaking the Tamil language across the palk strait, you people give up the tamil language and get abosrbed, get assimilated.” ( see Hansard Vol.24 col.942- 1917 )

  யுத்தம் முடிவடைந்ததன்பின் அரசாங்கம் தனது படைகளின்மூலமும் அரச அதிகரிகளின்மூலமும் மேலே குறிப்பிட்டதை அடைய பலவற்றை செய்து வருகின்றது . தேர் இழுத்தல் அதில் ஒன்று. ஆடு நனைகின்றது என ஓநாய் அழுகின்றது . இந்த ஓநாய் ஆட்டிற்கு குடை பிடிக்கின்றது. சாதாரண குடை அல்ல . சின்ஹல பவுத்த மயமாக்கல் குடை. இதனை எமது இந்திய இந்துக்கள் உணர வேண்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள் .

 49. நேற்று ஃபேஸ் புக்கில் ஒரு பதிவு வந்துள்ளது.

  ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அபகரித்து அழித்தொழித்த ஆலயத்தின் புனர் நிர்மாணத்துக்கு தேராவாத பௌத்த சிங்கள பிக்ஷுவின் முன்னிலையில் பூஜை போடப்படுகிறது

  இது பற்றி மேலதிகத் தகவல் அறிந்தவர்கள் இந்த நிலைத்தகவலை சரிபார்த்து விபரம் தெரிவிக்கலாமே

 50. திரு கிருஷ்ணகுமார்

  நீங்கள் குறிப்பிடுவது அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பற்றியது. இந்த பவுத்த பிக்கு அவர்கள் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் வாழ்பவர். சில வருடங்களுக்கு முன்பாக இவர் தமிழர்களுக்கு எதிரான துவேஷ மனப்பான்மை கொண்டிருந்தவர்.தமிழர்களால் வெறுக்கப் பட்டவர். தற்பொழுது யுத்தத்தின்பின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அதிகாரமும் அடாவடித்தனமும் மேலோங்கி வருகின்றது.கிழக்கு மாகாண சபை அவர்களின் கைகளிலையே இருக்கின்றது. பல முஸ்லிம்கள் அரசில் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள்.இந்தப் பலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் தமிழர்களைப் பின்தள்ளி இப்பொழுது முதல் நிலைக்கு வந்துள்ளார்கள். பன் நெடுங்காலமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக சனத் தொகையில் இருந்தார்கள். அதற்கு அடுத்து முஸ்லிகளும் சிங்களவர்களும் இருந்தார்கள்.1950 களிலிருந்து ஆட்சியில் இருந்துவந்த சிங்கள அரசுகள் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் சிங்களவர்களை கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்தியது. தமிழர்களின் விகிதாசாரத்தை இது குறைத்தது.கூடவே முஸ்லிம்களின் இனப் பெருக்கமும் கூடிவந்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிலே முஸ்லிம்கள் முக்கிய பதவிகளில் இருப்பார்கள்.இதன்மூலமான செயற்பாடுகளினால் இன்று முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் முதல் நிலையிலும் சிங்களவர்கள் அடுத்தும் மூன்றாவது நிலையில் தமிழர்களும் இருக்கின்றார்கள் ஆட்சி அதிகாரம் எனும் நிலையைப் பொறுத்து.

  சிங்கள பொது மக்களும் பவுத்த பிக்குகளும் தமிழர்களைப் பொறுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத நிலையில் காலம் காலமாக இருக்கின்றார்கள். சிங்கள அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இதற்கு விதி விலக்கு. இந்தப் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதும் கோவில்களை அழிப்பதும் தமிழர்களை தாக்குவதும் பல வருடங்களாக நடந்து வருகின்றது. இது பற்றிய கட்டுரை தமிழ் ஹிந்துவில் வெளிவந்தது ஞாபகம் இருக்கலாம் வாசகர்களுக்கு. ( விடுதலைப் புலிகளின் காலத்தில் இது வெகு குறைவாகவே இருந்தது ) தற்பொழுது இவ் அட்டகாசங்கள் அதிகரிக்கத் தொடங்கவும் தமிழ் மக்கள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.அண்மையில் ஆறு எழு வயது சிறுமிகள் இந்து அறநெறிப் பாடசாலைக்குப் போகும்பொழுது சில முஸ்லிம் இளையர்களால் பாலியல் துச்பிரயோகத்திட்கு உள்ளாக்கப் பட்டதையும் இங்கு நினைவு படுத்துகின்றேன். தமிழ் அரசியல்வாதிகள் இவற்றை எல்லாம் பெரிது படுத்தி தமிழ் – முஸ்லிம் உறவை முறியடிக்கக் கூடாது என்ற பச்சோந்தி நிலையில் குருடர்களாகவும் ஊமைகளாகவும் பதவிகளைப் பிடித்துக் கொண்டு தம் நலனைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். தமிழ் உயர் அதிகாரிகளும் இதே மாதிரித்தான். இந் நிலையில் சாதாரண தமிழர்கள் ஆக்கை அகத்ததோ புறத்ததோ என்ற பரிதாப வாழ்க்கையை ஓட்டும் நிலை. ஏற்கனவே முஸ்லிம்களின் விஷ்தரிப்பின்மீது வெறுப்புக் கொண்டிருக்கும் பவுத்த மத குருக்களில் ஒருவரான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இந்த அநாதரவான தமிழ் ஹிந்துக்களின் பரிதாப நிலையைக் கண்டு அவர்களுக்கு உத முன் வந்துள்ளார் .அவரது முக்கிய நோக்கம் முஸ்லிம்களின் விஸ்தரிப்பை நிருத்துவதாயினும் அவர் அதன்மூலம் எமது தமிழ் ஹிந்துக்களுக்கும் பெரும் உதவி புரிகின்றார். அவரது இச் செயலுக்கு நாம் மதிப்பளிப்போம் நன்றி உடையவர்களாக இருப்போம். சம்பந்தன்,ஏபிரகாம் சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்ற ஆசாமி அரசியல்வாதிகளைவிட இத் தேரர் எவ்வளவோ மேல்.

 51. அன்பின் ஸ்ரீ ரிஷி ஐயா

  நான் படித்த தகவல். ஆனால் ஒரு முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள விரும்பினேன். மிக்க நன்றி.

  புத்த பொதுபல சேன என்றொரு சிங்கள அமைப்பு லங்கையில் முஸல்மாணியரொடு எல்லா இடங்களிலும் பொருதுவதை வாசித்து வருகிறேன்.

  ஈழத்தின் கிழக்கு மாகாணத்து தமிழர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. ஒரு புறம் முஸல்மாணியர் மற்றும் க்றைஸ்தவ ஓநாய்கள் மறுபுறம் சிங்களப் பேரினவாதிகள்.

  சிங்களர்கள் பெருமளவில் தமிழருடன் உறவு கொண்டு அவர்களை நாலைந்து தசாப்தங்களில் சிங்களர்களாகவும் பௌத்தர்களாகவும் ஆக்க முனைப்பு நடந்து கொண்டு வருகிறது என்பதை வாசிக்கையில் வ்யாகூலமாக இருக்கிறது.

  ஈழத்தமிழர் வழி அவர்களது ப்ரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் விவாதித்து இங்கு பதியப்படுபவை சரியான காதுகளுக்குப் போகும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு.

  \\ அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இந்த அநாதரவான தமிழ் ஹிந்துக்களின் பரிதாப நிலையைக் கண்டு அவர்களுக்கு உத முன் வந்துள்ளார் .அவரது முக்கிய நோக்கம் முஸ்லிம்களின் விஸ்தரிப்பை நிருத்துவதாயினும் அவர் அதன்மூலம் எமது தமிழ் ஹிந்துக்களுக்கும் பெரும் உதவி புரிகின்றார். அவரது இச் செயலுக்கு நாம் மதிப்பளிப்போம் நன்றி உடையவர்களாக இருப்போம். \\

  நல்லதே நடக்கும்.

 52. சகோதரர் க்ருஷ்ணகுமார் குறிப்பிட்ட பேஸ் புக் பதிவு போல் இஸ்லாமியர்கள் அபகரித்து அழித்தொழித்த ஆலயத்தின் புனர் நிர்மாணத்துக்கு பௌத்த சிங்கள பிக்ஷுவின் முன்னிலையில் பூஜை போடபட்டிருக்கலாம்.இதில் வியப்பு எதுவும் இல்லை. பௌத்த சிங்கள மக்களே இந்து ஆலயங்களில் வழிபாடு செய்கிறவர்களாவார். ஆனால் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயலும் கோஷ்டினர் தான் பௌத்த சிங்களவர்களுக்கு எதிராக, கொடூரமான வெறுப்புகளை வளர்க்க பொய் பரப்புரைகள் செய்துவருகின்றனர். இந்துக்கள் என்றால் திருட்டுபயல்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு விளக்கமளித் திராவிட தலைவர் கருணாநிதியும் இலங்கையில் உள்ள இந்து ஆலயங்கள் பௌத்த சிங்களவர்களால் அழித்து ஒழிக்கபடுகின்றன என்று கண்ணீர் சிந்தியவர்.

  https://newuthayan.com/story/19690.html

  *Hindu Religious and Cultural Affairs அலுவலகம் வெளியிட்ட reportஐயும் வாசிக்கவும்*
  அப்படி தேடினால் அப்படி எதுவும் இல்லை பரப்புரைகள் உண்மை ஆகாது.
  *இருபதினாயிரத்திட்குமேல் இந்துக்கள் பவுத்தர்களாக எப்படி மாற்றப்பட்டார்கள்? *
  உண்மையாகவே கிறிஸ்தவர்களாக மதம் மாற்றபட்டு கொண்டிருக்கும் இந்துக்களுக்காக ஏன் இவர் வருந்தவில்லை?

 53. திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்

  உங்களுக்குப் பிடிக்கின்றதோ இல்லையோ ஈழத்து ஹிந்துக்களைப் பற்றி சில உண்மைகளை இங்கு குறிப்பிட விரும்பிகின்றேன்.

  இந்த ஹிந்துக்களுக்கு சமய அறிவு என்பது மிக மிகக் குறைவு.கோவிலுக்குப் போய் கும்பிடுவதும் திருவிழா செய்வதும் தேர் இழுப்பதுவும் மட்டுமே இவர்களுக்குத் தெரிந்தவை.எதுவிதமான விளக்கமும் தெளிவும் அற்ற பக்தி. ஐம்பது நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதையே இன்றும் செய்கின்றார்கள்.காலத்திட்கேட்ப மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை. ஏனைய மதத்தவர்கள் தம் தம் மதத்தைப் பற்றி விளக்கம் அளிக்கக்கூடிய அறிவு கொண்டவர்களாக இருக்க ஹிந்துக்கள் மாத்திரம் அறிவிலிகளாக மூடர்களாக இருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்களாக பதவிகளில் இருந்தாலும் இந்த ஹிந்துக்களுக்கு சமய அறிவென்பது அறவே இல்லை.இது சமய மாற்றத்திற்கு வெகு இலகுவாக அமைகின்றது.

  ஹிந்துக்களுக்கு என்று ஓர் வலுவான அமைப்பில்லை.ஒரு சில அமைப்புகள் அங்கும் இங்கும் இருப்பது உண்மைதான்.ஆனால் இவைகள் இயங்குவது மாறி மாறிப் பட்டங்கள் வழங்கவும் பொன்னாடை போற்றவுமே அல்லாது சமய அறிவை வளர்க்கவோ சமூக முன்னேற்றத்திற்கு உதவுவதிலோ ஈடுபடுவதில்லை.அக்கறையும் இல்லை.

  சமயப் பெரியோர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் பிற்போக்கு வாதிகளாகவே இருக்கின்றார்கள்.பலர் சாதி வெறியும் பிரதேச வெறியும் கொண்டவர்கள்.சமூகம் எக் கேடு கேட்டாலும் சமய மாற்றம் எங்கணும் நிகழ்ந்தாலும் இவர்களுக்கு அக்கறை இல்லை.தமக்கு பெயரும் பட்டமும் புகழும் கிடைத்தால் போதும் என்ற மனப் பான்மை உடையவர்கள்.கூடவே நாலு புராணக் கதைகளை அரையும் குறையுமாகக் கூறி மக்களை ஏமாற்றி கிடைக்கும் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்கள்.

  ஹிந்துக்களுக்கு என்ன நேர்ந்தாலும் அல்லது கோவில்கள் அழிக்கப் பட்டாலும் சமய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இவர்கள் வாயையே திறக்க மாட்டார்கள்.

  யுத்தத்தினால் பாதிக்கப் பட்டவர்களை இவர்கள் திரும்பியே பார்க்க மாட்டார்கள்.ஆனால் திருவிழாக்கள் செய்ய போட்டி போட்டு ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிப்பார்கள். அன்பே சிவம் என்பது இவர்களுக்குத் தெரியாத ஒன்று.மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது கேள்விப் படாத ஒன்று. பாவம் இவர்களை குறை கூறுவது தவறுதான். இக் குறைகளுக்குக் காரணமே நான் முன் சொன்ன சமய அறிவு இன்மையே.போதிக்கப் படாமையே.சமய நூல்கள் இவர்கள் கண்ணில் படுவதே இல்லை.வாங்கிக் கொடுப்பாரும் எவரும் இல்லை.பொன்னாடை வாங்கும் காசில் நாலு புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது மேல் எனும் எண்ணமே இவர்களுக்கு எழுவதேயில்லை

  இந்துக்களுக்கென ஓர் பத்திரிகையோ சஞ்சிகையோ இல்லை.யோகர் சுவாமிகளின் சிவதொண்டன் என்ற சஞ்சிகை மட்டக்களப்பில் இருந்து வெளிவருகின்றது என்பதை 99வீதமானோர் தெரிந்திலர் .ஏனைய சமயத்தவர்கள் நடத்துவதுபோல் ஒரு தொலைக் காட்சி நிறுவனம் இல்லை. இவற்றைப் பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை.எத்தனை injections போட்டாலும் இந்த எருமைகளுக்கு ஏறவே ஏறாது.

  யுத்தத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ( பெரும்பாலனவர்கள் இந்துக்கள் ) உதவ அண்மையில் ஐரோப்பிய யூனியன் மில்லியன் கணக்கான ரூபாய்களை இரு கிறிஸ்தவ அமைப்புகளுக்கு –world vision and Habitat- வழங்கியது.ஏனெனில் உருப்படியான ஒரு இந்து அமைப்பு இலங்கையில் இல்லை. தொடர்ந்து சமூக சேவை செய்யும் இந்து சமய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்கு இல்லை.வெளி நாடுகளில் வாழும் ஒரு சிலர் கொடுக்கும் பணத்தினைக் கொண்டு சில சாமான்களை வாங்கி ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு அதனைப் படம் எடுத்து பத்திரிகைகளில் பிரசுரித்து வள்ளல் பெயர் வாங்கும் கேடு கேட்ட இந்துக்கள் நிறைந்த ஊர்தான் ஐயா இலங்கை.இந்நிலையில் மதம் மாற்றும் கிறிஸ்தவர்களை முஸ்லிம்களை பவுத்தர்களை எப்படி ஐயா குறை சொல்ல முடியும்?

  எமது விடுதலைப் போராட்டம் கிறிஸ்தவர்களால் முன் எடுக்கப் படுவது என்ற ஜடாயு தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் விவாதங்கள் பிழையானவை.இந்துக்கள் முன் வராததால்தான் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் நிற்கிறார்கள். அவர்களிடம் திறமையான அமைப்பு இருக்கின்றது. ஓடி ஓடிப் போய் உதவி செய்ய அவர்கலுக்கு மனம் இருக்கின்றது.பாதிரியார்கள் நன்கு படித்தவர்களாயும் ஆங்கிலம் பேசக் கூடியவர்கலாயும் இருக்கின்றார்கள். ஆனால் எம்மவர்களுக்கோ இவைகள் பூச்சியம்.நாம் வீட்டிலேயே குந்தி இருந்து கொண்டு மற்றவர்களுக்கு இடம் விட்டு விட்டு குற்றம் சாட்டுவது எவ்வகையில் நியாயம்? முதலில் நாம் எம்மை திருத்தி விட்டு பின்பு மற்றவர்களைப் பார்ப்போம்.

  ஆங்கிலத்தில் இந்து சமயம் பற்றியோ அல்லது இந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றியோ எழுதக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள் இலங்கையில் மிக மிக அற்பமே.இல்லையே என்று சொல்லலாம். ஆங்கில வானொலியிலோ தொலை காட்சியிலோ பேசுவதற்கு எவருமே இல்லை.வெட்கப் படக் கூடிய விடயம் என்னவென்றால் இந்த நிலைமையைப் பற்றி இந்துப் பிரமுகர்கள் சிந்திப்பதே இல்லை. இந்தப் பின்னணியில் இந்துக்கள் விட்ட வெளியினை கிறிஸ்தவர்கள் நிரப்புகிறார்கள்.இதை உணராது எமது விடுதலைப் போராட்டம் கிறிஸ்தவர்களின் போராட்டம் எனக் கூறுவது எத்தகைய பிழை என்பதை ஜடாயுவும் தமிழ்செல்வனும் உணர வேண்டும் .

  மொத்தத்தில் இந்துக்களின் அழிவு எம்மாலேயே நிகழ்வது.ஒரு விவேகானந்தரை நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

 54. கிறிஸ்தவ மிசனறிகளினால் நீண்ட காலம் திட்டமிடபட்ட முறையில் சிங்கள பவுதர்களுக்கு எதிராக இலங்கையை சேர்ந்த ரிஷி போன்றவர்களுக்கும் மனதில் ஆழ்ந்து assimilation ஆழமாக விதைக்கபட்டிருக்க வேண்டும். எப்போதும் சகோதர பவுத்த மதத்தின் மீது வெறுப்பை கக்குவது,அதற்கு இந்தியா உதவ வேண்டும் என்பது.
  *தமிழர் பிரதேசங்களில் ஏன் அரச செலவில் பவுத்த விஹரைகள் முளைக்கின்றன?*
  ஆனால் மிசனரிகள் செலவில் கிருஸ்துவ கோயில்கள் முளைக்கலாம்.அதற்கு இந்தியா உதவ வேண்டும்.
  *பல முஸ்லிம்கள் அரசில் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள்.இந்தப் பலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் தமிழர்களைப் பின்தள்ளி இப்பொழுது முதல் நிலைக்கு வந்துள்ளார்கள்.*
  இவர்களும் தங்களது பவுத்த சிங்கள சகோதரர்கள் மீதான காழ்புணர்ச்சியை தங்களது குறுகிய மனபான்மை கைவிட்டால் முதன்மை நிலையை அடைவார்கள்.

 55. இந்துவா

  கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு எங்கே ஐயா நான் ஆதரவு அளிக்கின்றேன்.இந்துக்களை மதம் மாற்றும் எல்லோரினையுமே நான் எதிர்க்கின்றேன். அதேவேளையில் இம் மத மாற்றத்திற்கு இந்துக்களே பிரதான காரணமாயும் இருக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிடுவேன் .இந்துக்கள் கும்பகர்ணன்களாய் மோடர்களாய் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி கவலை கொள்ளாதவர்களாய் சுய நலமிகளாய் நடப்பது நடக்கட்டும் என்று இருப்பதாலேயே இம் மத மாற்றங்கள் காலம் காலமாய் நடக்கின்றன . socially engaged buddhism ,christianity, islam இருப்பதுபோல் எங்காவது இலங்கையில் ஒரு இந்து மத நிறுவனம் இருக்கின்றதா?

  1900ம் ஆண்டுகளிலிருந்து இலங்கை சரித்திரத்தைப் படித்தால் சிங்களவர்களுக்கு அவர்களின் மொழி மீதும் சமயத்தின் மீதும் அக்கறையையும் ஆர்வத்தையும் தூண்டியவர்கள் தமிழ் இந்துக்களாய் இருப்பதை அறிவீர்கள். பொன் ராமநாதன் ,அருணாசலம் ஆகியோரின் வரலாறு இதற்கு சான்று. ஆனால் 1920களின் கடைசிகளில் இவர்கள் சிங்களவர்களை நம்பாதீர்கள் எனக் கூற வேண்டி வந்தது சிங்களத் தலைவர்களின் கபட நிலைகளினால்தான் .இதன்பின் நடந்தவை தொடர் cheating என்பதை இலங்கையின் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வர். காழ்ப்புணர்ச்சியும் குறுகிய மனப் பான்மையும் சிங்கள அரசியல்வாதி களிடமும் அவர்களை தெரிவு செய்த சிங்கள மக்களிடமும்தான் உள்ளது நண்பரே.

  இந்தியா மட்டுமல்ல எந்த உலக நாடும் தனது சொந்த நலனை பிரதானமாக முன்வைத்தே இயங்கும். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தமும் கச்சதேவை இலங்கைக்கு தாரை வார்த்ததும் இதற்குச் சான்று.

 56. இந்துவா

  colombo telegraph எனும் இணையத் தளத்தில் கிறிஸ்தவ வெறிகொண்டு இந்துக்களைத் தாக்கி Ratnajeevan Hooleம் அவரது குடும்ப அங்கத்தவர்களிம் எழுதும் கட்டுரைகளை வாசித்து விட்டு அதற்குப் பதில் கட்டுரை எழுதுங்கள். என்னில் பிழை பிடிப்பதை விட்டுவிட்டு உங்கள் திறமையை அங்கே காட்டுங்கள். பார்ப்போம் உங்கள் கெட்டித்தனத்தை.

 57. //இவர்களும் தங்களது பவுத்த சிங்கள சகோதரர்கள் மீதான காழ்புணர்ச்சியை தங்களது குறுகிய மனபான்மை கைவிட்டால் முதன்மை நிலையை அடைவார்கள்.//

  கோயில்களை அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்கிறீர்கள்! அழிப்பவன் காலில் விழுந்தால் சாத்தியம் என்கிறீர்கள்.

  இந்துத்வா என்பவர் சிங்களரின் பிரதிநிதியாக எழுதுகிறாரோ என ஐயமேற்படுகிறது.

 58. Rishi அவர்களின் கருத்துக்கு நன்றி.

  BSV
  * //இவர்களும் தங்களது பவுத்த சிங்கள சகோதரர்கள் மீதான காழ்புணர்ச்சியை தங்களது குறுகிய மனபான்மை கைவிட்டால் முதன்மை நிலையை அடைவார்கள்.//
  கோயில்களை அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்கிறீர்கள்! அழிப்பவன் காலில் விழுந்தால் சாத்தியம் என்கிறீர்கள்.
  இந்துத்வா என்பவர் சிங்களரின் பிரதிநிதியாக எழுதுகிறாரோ என ஐயமேற்படுகிறது.-BSV*

  பௌத்த சிங்களவர்களால் திட்டமிட்டு கோயில்கள் அழிக்கப்பபடவே இல்லை என்கிறேன் இந்துக்களை மதம் மாற்றுவோரின் பொய்பரப்புரை என்கிறேன்.புத்த இந்து மக்கள் வாழ்கின்ற அயல்நாடான இலங்கையுடன் இந்தியா நல்லுறவை வைத்து கொண்டிருப்பது தங்களது நோக்கங்களுக்கு மிக பெரும் தடை என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன்.

 59. A request to Shri Mahadevan (Or Arizonan). When you post a translation of an English article, please give hyperlink to the original article. I can find out whether the quotation from the colonial ruler by name Emerson is fake or genuine. I’m quite familiar with colonial English prose. You may also search for that by yourself because, if it is fake, you are a party to the act as you pass it here as genuine in your translation. The English version will also help us search for the book in which it occurs. In case it does, we shall remain satisfied that it is genuine. It is not to say that the colonialist esp. the Portuguese are not haters of Hinduism and didn’t kill or proselytize or destroy the places of worship of Hindus. It is only to confine ourselves to this quotation. Shouldn’t we be responsible to what we write?

 60. பேரன்பிற்குரிய ஸ்ரீ ரிஷி மற்றும் ஸ்ரீ இந்துவா அவர்களுக்கு

  எந்த வித சார்புகளும் இல்லாமல் ஈழத்து ஹிந்துக்களின் நிலைமையை பட்டியலிட்ட உங்களுக்கு நன்றிகள்..

  1. பௌத்தர்களையும் ஹிந்துக்களாகத் தான் ஹிந்துஸ்தான அரசியல் சாஸனம் மற்றும் அதன் சட்டங்களின் பாற்பட்டுக் கருதுகிறோம். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் கோட்பாடுகளின் படியும்.

  2. ஸ்ரீ ரிஷி அவர்களது பதிவில் பெரும் விரக்தி காணப்படுகிறது. அதை விலக்க விழையாலாம். ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு ஆழிப்பேரலையில் எதிர்நீச்சல் போடுவதைப் போன்றதொரு விஷயம். ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் உழைப்பு தேவையானது. இரண்டில் எது பின் தங்கினாலும் லக்ஷ்யத்தை எட்ட முடியாது. கிட்டத்தட்ட ஒரு சதாப்த கால ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கப் பணிகள் அவ்வாறே நடந்துள்ளன. மேலும் தொடர்ந்து நடக்கும்.

  3. ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது என்பது ஒரு பன்முகப்பணி. அடிப்படை ரீதியில் உணர்வு ரீதியில் அவர்களை ஒருங்கிணைப்பதை ஆர் எஸ் எஸ் செய்து வருகிறது. வெவ்வேறு துறைகள் சார்ந்து …….. அறிவுத்தளம், சமயம், கல்வி, ஊடகம், விளையாட்டு, மருத்துவம், சேவை, தூய்மை, சினிமா…………….. என பல்வேறு துறைகளிலும் துறை சார்ந்த ஞானம் பெற்றவர்கள் மற்றும் சங்கப்பயிற்சி பெற்றவர்கள்…….. துறை சார்ந்த சங்க அடிப்படையிலான கோட்பாடுகளின் படி பணி செய்கையில்….. ஹிந்து ஒருமைப்பாட்டு செயற்பாடுகள் துரிதம் பெருகிறது. ஒரு சதாப்த காலத்தில் ஹிந்துஸ்தானத்தில் ……. சங்கத்தின் அடிப்படைப்பணிகள் ஈடிணையற்ற படி முன்னகர்ந்துள்ளது. வேறெந்த இயக்கத்துக்கும் உலக அளவில் கூட இப்படிப்பட்ட ஒரு உறுதியான அமைப்பு கிடையாது. ஆனால் துறைசார்ந்த பணிகளில் கல்வி, சமயம் மற்றும் அறிவுத்தளம் போன்றவற்றில் மட்டிலும் பெரும் முன்னகர்வு ஹிந்துஸ்தான அளவில் காணக்கிட்டியுள்ளது. ஏனையவற்றில் எதிர்நீச்சல் தொடர்கிறது.

  4. ஈழத்தில் தமிழரின் பாடுகளுக்கு முக்யமான காரணம் அவர்கள் ஹிந்துக்கள் என்ற காரணத்தால் கொடுமைப்படுத்தப்பட்டது. பௌத்தர்களை தமிழ் ஹிந்துக்களிடமிருந்து பிரித்ததில் இஸ்லாமியர் மற்றும் க்றைஸ்தவர் இந்த விஷயத்தில் பெரும் வெற்றி கண்டுள்ளனர்.

  ஈழத்தமிழரின் மெய்யடையாளமாகிய ஹிந்து மதம்……… அதிலும் குறிப்பாக சைவ சமயத்தையும் அதன் பண்பாட்டு அடையாளங்களையும் அழித்தொழிப்பதில் இஸ்லாமிய க்றைஸ்தவ அமைப்புகளுக்கு பெரும்பங்குண்டு. அவர்களது சதிவலையில் விழுந்தவர்கள் அறிவுத்தளத்தில் குறைவான புரிதல் உள்ள சிங்கள பௌத்தர்கள். பௌத்தர்களது இந்த புரிதலில் கிஞ்சித்தாவது மாற்றம் வந்துள்ளது……. தமிழர் தம் ஹிந்து சமயத்தின் பால் ஆதுரம்………. க்றைஸ்தவ இஸ்லாமியர் பால் எச்சரிக்கை…………. வெகு நிச்சயமாக லங்கையிலும் ஹிந்துஸ்தானத்திலும் இதற்காகப் பாடுபடும் ஹிந்து அமைப்புகளின் செயற்பாடு.

  5. மிக மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம். போலித் தமிழின வாதம். தங்களது மஸ்ஜிதில் அரபியில் மட்டும் தொழுகை நடத்தி உருதுப் பதாகைகளை ஏந்தி ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் போராடும் முஸல்மாணியரை தமிழராகச் சித்தரிக்க விழையும் தமிழகத்து தமிழ்ப் போராளிகளின் இழிவுச் செயற்பாடு. தமிழகத்தில் அடையாளப்படுத்தப்படும் ஒரு போலித் தமிழினக் கருத்தாக்கத்தில் தமிழ் மொழியுடன் எந்த விதத்திலும் ஒட்டும் உறவும் இல்லாத இது போன்ற ஜிஹாதிகளை தமிழினத்தவர் என்று அடையாளப்படுத்தும் அவலம். ஜிஹாதிக்காசு கிடைத்தால் இவர்கள் அல்லாஹு அக்பர் என்ற சொற்றொடர் கூட தமிழ்ச்சொல் என்று சொல்லத் தயங்கமாட்டார்கள். இதே போலவே பரங்கி க்றைஸ்தவனுடன் கூட்டு சேர்ந்து ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர் தம் சமய வரலாற்றை திரிக்கும் இழிவுச் செயற்பாடு. திருவள்ளுவரை க்றைஸ்தவராக்கும் சிறுமை. தமிழரின் கோவில்களையும் தமிழர் தம் நிலத்தையும் அபகரித்து தமிழர் தம் வாழ்விடங்களை நாசமாக்கும் தமிழரை ஐரோப்பிய அடிமைகளாக்க விழையும் அவலம்.

  6. புள்ளி ஐந்தில் தமிழர் இழக்கும் அவலத்தை சரிசெய்து புள்ளி நாலில் ஒரே மதத்தவரான ஹிந்துத் தமிழர் சிங்கள பௌத்தர்களுடனான நல்லிணக்கத்தை அபிவிருத்தி செய்தல். தமிழரின் கோவில்கள் மேற்கொண்டு பௌத்தர்களாலேயும்………….. க்றைஸ்தவ முஸல்மாணியராலும் ………. அழித்தொழிக்கப்படாது அபகரிக்கப்படாது காப்பதற்கு செயற்பாடுகள். ஹிந்துஸ்தானத்திலிருந்து இதற்கு நிச்சயம் துணை உண்டு. ஈழத்தில் ஹிந்து சிவ சேனை போன்ற அமைப்புகள் துவக்கப்பணிகளில் உள்ளதை கவனிக்கவும். மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் விச்வஹிந்து பரிஷத் பயிற்சிக்கூட்டங்களில் கலந்துரையாடி இவர்களது செயற்பாடுகளைப் பற்றி அறிந்துள்ளார். ஈழத்தில் அங்குள்ள சூழ்நிலைக்கேற்றபடி அவை நிச்சயமாகச் செயல்வடிவம் பெறும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.

  7. ஈழத்தில் ஹிந்து சமயத்திற்காக வேண்டி சமயப் பயிற்சிகள், சஞ்சிகைகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் அவர்கள் காலத்திய ஹிந்து சஞ்சிகைகள் மீட்டெடுக்கப்பட்டு மீள்துவக்கம் பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்து தமிழர்களையும் மலையகத்துத் தமிழர்களையும் வடக்குமாகாணத்து தமிழர்களுடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்பது அறிய விழையும் விஷயம். ஈழத்து ஹிந்துக்களின் ஒருங்கிணைப்புப் புள்ளியில் மிகவும் முக்யமான புள்ளி இது.

  8. ரிஷி ஐயா, விரக்தி விடுத்து ஈழத்து செயற்பாடுகளில் உற்சாகமாகப் பணிசெய்ய ப்ரயாசை செய்து பாருங்கள். குறைகள் நம்மைச்சுற்றி எக்கச்சக்கமாக உண்டு. எறும்பூறக்கல்லும் தேயும் என்பது தாங்கள் அறியாததா? நம்முடைய செயற்பாடுகளால் குறைகள் கூட நிவர்த்தி செய்யப்படலாகுமே

  வேலும் மயிலும் சேவலும் துணை.

 61. சகோதரர் க்ருஷ்ணகுமார் தெரிவித்தவைகள் ஆக்கபூர்வமான அறிவுரைகளாகும்.அவருக்கு நன்றி.

 62. இலங்கை திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் சிவராத்திரியை முன்னிட்டு அமைக்கப்பட் பெயர் வளைவை கிறித்தவ கத்தோலிக்க மத வெறியர்கள் தகர்த்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் நாஷனல் கூட்டமைப்பு அரசியல் கட்சி பாதிரிகளிடம் வழமைபோல மண்டியிட்டு அமைதியாக நிற்கிறதாம்.
  https://tamilleader.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *