அக்பர் எனும் கயவன் – 2

மூலம்: பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகம்

தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

1563 :

மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலி வேட்டையாடப் போகிறார் அக்பர். ஆனால் மதுராவிற்கு அருகில் நூறாண்டுகளுக்கு மேலாக புலிகள் எதுவும் இருந்த தடையம் இல்லை. அக்பரின் அகராதியில் வேட்டையாடுவது என்றால் ராஜபுத்திர அரசர்களுடன் போர் புரிவதற்கான ஆயத்தங்கள் செய்வது என்பதாகும். தனக்கு முன்னதாக ராஜபுத்திர அரசர்கள் போர் ஆயத்தங்கள் செய்யாமலிருக்கச் செய்யும் ஒரு தந்திரமேயன்றி வேறில்லை. அக்பரின் இந்த மதுரா வேட்டையில் ஹிந்து வழிபாட்டு ஆலயங்களைத் தகர்த்தெறிவதும் ஒரு நோக்கமாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரா தொடர்ச்சியான இஸ்லாமியப் படைத்தாக்குதல்களால் சிதறுண்டு போயிருந்தது. அதில் அக்பரின் பங்கிற்கும் குறைவில்லை. அகப்ர் சென்ற ஒவ்வொரு ஹிந்து வழிபாட்டிடங்களும் தகர்க்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதரத்தை பின்னர் தருகிறேன்.

ஜனவரி 12, 1564 :

நிஜாமுதீன் தர்காவிற்குச் சென்றுவிட்டு தில்லியின் செங்கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அக்பரின் மீது புரானா கிலா (பழைய கோட்டை)வுக்கு அருகில் விஷம் தோய்ந்த அம்பொன்று எய்யப்படுகிறது. (இந்த இடத்தில் நீங்கள் ஒன்றைக் கவனிக வேண்டும். பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்கள் தில்லியின் செங்கோட்டை ஷாஜஹானால் கட்டப்பட்டதாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தில்லி செங்கோட்டை ஷாஜஹானுக்கு முன்பிருந்தே இருக்கிறது). அழகான பெண்களை தனது அந்தப்புரத்திற்குக் கவர்ந்து செல்லும் பொருட்டு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த அக்பரை மிரட்டுவதற்காக அந்த அம்பு எய்யப்பட்டது.

மார்ச் 1564 :

அக்பர் ஹிந்துக்களின் மீது கடந்த 800 ஆண்டுகளாக முஸ்லிம் அரசர்களால் விதிக்கப்பட்டு வந்த ஜிஸியா வரி நீக்கப்படுவதாக அறிவிக்கிறார். அது ஒரு பொய்யான அறிவிப்பே என்பதற்கான காரணங்களைப் பின்னர் விவரிக்கிறேன். மேலும் அக்பர் 1562-ஆம் வருடம் ஹிந்துக்களை போர்க் கைதிகளாகப் பிடிக்கக் கூடாது என்கிற சட்டத்தையும், 1563-ஆம் வருடம் கோவில்களுக்குப் புனிதப் பயணம் செல்லும் ஹிந்துக்கள் மீதான வரியை நீக்குவதாகவும் அறிவிக்கிறார். அதுவும் பொய்யானதொரு தகவலே.

1564 :

அக்பரின் தாய் மாமனான க்வாஜா முவாஸம் (அக்பரின் தாயாரான ஹமீதாபானு பேகத்தின் சகோதரன்) அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். அக்பர் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையின் நிலவறையில் அடைக்கிறார். க்வாஜா முவாஸம் மனம் பிறழ்ந்து, பைத்தியம் பிடித்து சிறையிலேயே இறக்கிறார்.

செப்டம்பர் 1564 :

காண்டேஷ் நாட்டை ஆண்ட மிர்ஸா முபாரக் ஷாவை தோற்கடிக்கும் அக்பர் அவரது மகளை தனது அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறார். திருமணம் எதுவும் செய்து கொள்ளாமலேயே அந்த அப்பாவிப் பெண் அக்பரின் அலியான இட்டிமத்கானினால் அக்பரின் அந்தப்புரத்திற்குத் தூக்கிச் செல்லப்படுகிறாள்.

ஜுலை 1564 :

மால்வா பகுதியின் ராணுவ கவர்னராக இருந்த அப்துல்லாகான் உஸ்பெக் அக்பருக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார். அக்பருக்கு எதிரான ஆறாவது புரட்சி அது.

அக்டோபர் 1564 :

ஆக்ராவுக்கு அருகில் நாகர்செய்ன் என்னும் புதிய நகரத்தை நிர்மாணிக்க அக்பர் உத்தரவிடுகிறார். அதன்படியே பெரும் கட்டிடங்களும், பூங்காக்களும், கட்டிடங்களும், தோரண வாயில்களும் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறு எழுதப்படுகிறது. ஆனால் உண்மையில்  அபபடி ஒரு நகரம் கட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. அக்பர் ஒரு செங்கல்லைக் கூட அந்த நகரைக் கட்டச் செலவிடவில்லை. அக்பரின் வரலாற்றாசிரியர்கள் வழக்கம்போல்ப் புளுகி வைக்கிறார்கள். உண்மையில் அக்பர் கட்டியதாகச் சொல்லப்படும் எந்தவொரு நகரும், கட்டிடமும், கோட்டையும் ஹிந்து அரசர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவையே.

1564 :

அக்பரின் அரசவையிலிருந்த கான் ஜமான் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். அக்பருக்கு எதிரான ஏழாவது புரட்சி அது.

1564 :

அக்பர் அவரது தளபதியான ஆசாஃப் கானிடம், சிறப்பாக ஆளப்பட்டுவரும் ராணி துர்காவதியின் நாட்டைச் சிதறடித்து அழகியான அரசி துர்காவதியை தனது அந்தப்புரத்திற்குத் தூக்கி வரும்படி உத்தரவிடுகிறார்.

1565-66 :

ராணி துர்காவதியின் நாட்டைச் சூறையாடி அக்பரின் தளபதி ஆசஃப்கான் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். துர்காவதியின் அரண்மனையில் கைப்பற்றிய அளவற்ற செல்வத்தைத் தானே வைத்துக் கொள்வதற்குத் திட்டமிடுகிறான் ஆசஃப்கான்.

1567 :

காபூலை ஆண்டுகொண்டிருந்த அக்பரின் சகோதரனான முகமது ஹக்கீம், பஞ்சாபைத் தாக்குகிறார். அதனை அடக்குவதற்கு அக்பர் செல்கிறார். ஆக்ராவில் அக்பர் இல்லாததை உபயோகித்துக் கொள்ளும் மிர்ஸா வகுப்பினர் அக்பருக்கு எதிரான புரட்சியைத் துவங்க, அதனை அடக்க ஆக்ராவுக்கு விரைகிறார் அக்பர்.

ஏப்ரல் 1567 :

ஆக்ராவுக்குத் திரும்பும் வழியில் அக்பர் பஞ்சாபின் தானேஷ்வர் என்கிற இடத்தில் முகாமிடுகிறார். பஞ்சாபின் இரண்டு ஹிந்து வகுப்பினரான குருவும், புருவும் கோவிலின் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வதில் தங்களுக்குள் உள்ள சர்ச்சையை அக்பரிடம் முறையிடுகிறார்கள். அவர்கள் இருவரையும் இரண்டு பக்கமாகப் பிரித்து நிற்கவைக்கும் அக்பர் அவர்களுக்குக் கத்திகளையும், ஈட்டிகளையும், குறுவாள்களையும் கொடுத்து அவர்களை சண்டையிட வைக்கிறார். ஏறக்குறைய 800 பேர்களிருந்த அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று மடிகிறார்கள். ஏதாவது ஒரு தரப்பில் ஆட்கள் குறைகையில் அக்பர் தனது படையிலிருந்த கொலைகார முஸ்லிம்களை அவர்கள் பகுதிக்கு அனுப்பி வைக்கிறார். இபபடியே மாற்றி மாற்றிச் செய்து அந்த 800 குருக்களும், புருக்களும் செத்து மடிகிறார்கள். அக்பர் அந்த “விளையாட்டை” மிகவும் ரசித்து மகிழ்ந்ததாக அவரின் அத்தனை வரலாற்றாசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள்.

மே 1567 :

இரண்டு வருடங்களுக்கும் மேலாக அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்து கொண்டிருந்த கான் ஜமானும் அவனது சகோதரனான பகதூரும் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவனுடன் பிடிபட்ட மற்றவர்கள் யானையின் கால்களில் இடறப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

மே-ஜுன் 1567 :

இந்தியாவின் செல்வவளம் வாய்ந்ததும், ஹிந்துக்களின் புனித நகரமுமான அலஹாபாதும், பனாரசும் மிகக் கொடூரமாக அக்பரால் தாக்கி அழிக்கப்படுகின்றன. அங்கிருந்தவர்கள் அக்பருக்கு அஞ்சி தப்பி ஓடுகிறார்கள்.

செப்டம்பர் 1567 :

அக்பர் சித்தூரைக் கைப்பற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார். அக்டோபர் 20-ஆம் தேதி ஏறக்குறைய 10 மைல்கள் தூரம் நீண்ட தனது படையணினருடன் (10 மைல்களா? பின்னர் விளக்குகிறேன்) சித்தூர் குன்றின் வடகிழக்கில் முகாமிட்டுத் தங்குகிறார்.

பிப்ரவரி 13, 1568 :

அக்பரின் கையில் சிக்கி அவரது முஸ்லிம் படையினரால் கற்பிழந்து, அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போவதனை விரும்பாத சித்தூர் ராஜபுத்திர வீரப்பெண்கள் பெரும் தீ மூட்டி அதில் குதித்து இறக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் சித்தூர் கோட்டைக்குள் புகும் அக்பர் அங்கிருக்கு அத்தனை பேர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார். ஏறக்குறைய முப்பதினாயிரம் ஆண், பெண், முதியவர்கள், சிறுவர் சிறுமிகள் எனக் கணக்கில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படுகிறார்கள். அங்கு இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பூணூல் மட்டுமே ஏறக்குறைய எழுபத்தி நாலரை மாண்ட்கள் (1 maund = 37 kg) இருந்ததாகத் தெரிகிறது.

மார்ச் 1568 :

அக்பர் ஆக்ரா திரும்புகிறார். மிர்ஸா வகுப்பினர் மீண்டும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர்.

பிப்ரவரி 1569 :

ராஜபுத்திர சவுகான்களின் உட்பிரிவினரான ஹாடாவுக்குச் சொந்தமான ரன்தம்போர் கோட்டை அக்பரால் முற்றுகையிடப்படுகிறது. ஒரு மாதகால முற்றுகைக்குப் பின்னர் அதன் ஆளுனரான சுர்ஜன் அக்பரிடம் சரணடைகிறார்.

ஆகஸ்ட் 1569 :

பாண்டா மாவட்டத்தில் ராஜா ராம்சந்திற்குச் சொந்தமான கலன்ஜர் (kalanjar) கோட்டை கைப்பற்றப்படுகிறது. பிரபல சங்கீத வித்வானான தன்சேன் ராஜா ராம்சந்தின் அரசவைப்பாடகர். அக்பர் ஏராளமான பொக்கிஷங்களுடன் தான்சேனையும் கட்டித் தன்னுடன் இழுத்துச் செல்கிறார். செல்ல விருப்பமில்லாத தான்சேன் கண்ணீர் வடித்து துக்கத்துடன் அக்பருடன் செல்கிறார்.  ராம்சந்திற்கு அலகாபாத்திற்கு அருகில் சிறிது நிலம் ஒதுக்கப்பட்டு அக்பருக்கு கப்பம் கட்டுகிற சிற்றரசராக்கப்படுகிறார்.

ஆகஸ்ட் 30, 1569 :

சலீம், எதிர்கால ஜஹாங்கீர், அக்பரின் மனைவியருள் ஒருவரான அம்பரைச் சேர்ந்த ராஜா பர்மாலின் மகளுக்குப் பிறக்கிறார். அக்பர் சம்பாரிலிருந்து அந்தப் பெண்மணியை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

பிப்ரவரி 28, 1572 :

இந்தியாவின் வீரப்புதல்வர்களில் ஒருவரான ராணா பிரதாப்பிற்கு கோகுண்டாவில், உதய்பூருக்கு 16 மைல்கள் வடக்கிலிருக்கும், வைத்து மன்னராக அறிவிக்கப்படுகிறார். சிறிது காலம் கழித்து கும்பல்மீர் கோட்டையில் அவருக்கு முடிசூட்டப்படுகிறது.

நவம்பர் 1572 :

குஜராத்தின் சுல்தானான முஸாஃபர் ஷா பிடிக்கப்பட்டு அவரது ராஜ்ஜியம் முகலாய ராஜ்ஜியத்துடன் இணைக்கப்படுகிறது. முஸாஃப்ர் ஷாவின் படைகள் யானையின் காலிலிடப்பட்டு நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள்.

காம்பேயின் முதல் முறையாக கடலைப் பார்க்கிறார் அக்பர். அக்பரது பெற்றோர்களின் வளர்ப்பு மகனான கான்-இ-ஆஸம் (மிர்ஸா அஜிஸ் கோகா) குஜராத்தின் கவர்னராக அறிவிக்கப்படுகிறார். இப்ராஹிம் ஹுசைன் என்பவரின் தலைமையில் மிர்ஸாக்கள் மீண்டும் புரட்சி செய்கிறார்கள்.

பிப்ரவரி 26, 1573 :

சூரத்தின் புரட்சிக்காரர்கள் கைப்பற்றப்படுகிறார்கள். அவர்களின் தலைவனான ஹம்ஜபானின் நாக்கு துண்டிக்கப்படுகிறது. ஹம்ஜபான் அக்பரின் தகப்பனான ஹுமாயுனிடம் பணிபுரிந்தவன்.

செப்டம்பர் 2, 1573 :

மிர்ஸாக்களுக்கு எதிரான அகமதாபாத் போர் நடக்கிறது. பிடிபட்டவர்களின் தலைகள் வெட்டப்பட்டு அவர்களின் தலைகளினால் கோபுரம் அமைக்கப்படுகிறது.

(தொடரும்)

2 Replies to “அக்பர் எனும் கயவன் – 2”

  1. மஹம்மது தமதுஆட்சிக் காலத்தில் கொள்ளையடித்தாா். 67 போா்களை நடத்தினாா். கௌதம புத்தா் முஹம்மதுவிற்கு 900-1000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவா். கௌதமன் அன்பை -வாத்ஸல்யத்தை முதலீடாகக் கொண்டு மக்கள் மத்தியில் தொண்டை முன்நிறுத்தி தியாகம் செய்தாா்.ஆனால் முஹம்மதுவோ பத்ரு என்ற இடத்தில் மெக்காவின் வியாபாாிகளின் உடமைகளை கொள்ளையடிக்கின்றாா். ஆனால் முஸ்லீம் வரலாற்று ஆசிாியா்கள் அதை பத்ரு யுத்தம் என்கின்றாா்கள். என்ன முட்டாள்தனம்.பகல் கொள்ளை எப்படி யுத்தம் ஆகம். சிலைகளை ஒழிப்பது தனது வாழிவின் லட்சியம் என்றும் சிலை வழிபாடு மன்னிக்க முடியாத குற்றம் என்று போதித்த முஹம்மது கொன்று குவித்த தலைகளின் எண்ணிக்கை வரலாற்று நூல்களில் இருக்குதா இல்லையா என்று தொியாது.67 யுத்தங்களில் தன்னை நபியாக ஏற்றுக் கொள்ளாத மக்களை -அந்த ஒரு செயலுக்காக படுகொலைகளை அஞ்சாமல் செய்தாா். இதற்கு போா் என்று பெயாிட்டுள்ளாா்கள். தன்னை ஏற்காத மக்களை காபீா் என்று பட்டம் கட்டி கொன்று குவித்தாா்.பெண்களை செக்ஸ்அடிமைகளாக வைத்துக் கொள்வது அன்றைய அரேபிய நாகரீகம்.இதற்கு இணங்க 12 மனைவிகளுக்கு கூடுதலாக யுத்தங்களில் பிடிப்பட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தாா். முஹம்மதுவை முன் உதரமாக கொண்ட எந்த ஒரு சமூகமும் ஒட்டு மொத்த மனித உலத்திற்கு பெரும் தொல்லையாக விளங்கும். குரானைப் பின்பற்றும் எந்த ஒரு சமூகமும் அன்பின் நெறியில் வாழவில்லை. இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது.பிறன்மனை நோக்கா பேராண்மை வேண்டும் – இது குறள்மொழி.
    யுத்தத்தில் கைபற்றிய பெண்கள் எத்தனை வேண்டுமானாலும் செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள்.என்று விபச்சாரத்திற்கு பெண் கொடுமைக்கு உாிமம் வழங்குகின்றது அரேபியாவில் தோன்றிய புத்தகமான குரான்.குரான் மஹம்மது மனிதா்கள் மனதில் இருக்கும் வரை இந்த உலகில் அமைதி திரும்பாது.

  2. அக்பரும் குரான் மஹம்மது வழியில் ………………………….. சிலை வணக்கம் செய்யும் இந்து காபீா்களை கொன்று குவித்தாா். இந்த நடவடிக்கை இன்றும் பயங்கரவாத செயல்களாக பாக்கிஸ்தான் பிாிவினையாக யுத்தமாக நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 60 ஆண்டுகளில் நமது ராணுவ வலிமை பல மடங்கு பெருகியிருக்கின்றது. ஏதோ இந்துக்கள் பிழைத்திருக்கின்றோம். இவ்வளவுநடந்தும் இந்துக்கள் மதம் மாறி போவதை உறுதியுடன் தடுக்க என்ன செய்து விட்டது நமது அரசு.இந்துக்கள் மதம்மாறி அரேபியா்களாக மாறுவது இன்றும் நிறைய நடக்கின்றது.இந்து விழப்புணா்ச்சி போதாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *