அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு பிறகு தொல்.திருமாவளவன் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் தீண்டாமை எனும் கோட்பாட்டை கொண்டு வந்தவை பௌத்த சமண சமயங்களே எனக் கூறியிருக்கிறார். திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையை தாம் பயணத்தின் போது கேட்டதாகவும் அதன் மூலம் ‘கண்டு முட்டு கேட்டு முட்டு’ என்கிற சைவ எதிர்ப்பான சமணக் கோட்பாட்டை தாம் அறிந்து கொண்டதாகவும் சொல்கிறார். இதை திருமாவளவன் பதிவு செய்வது முக்கியமான ஒன்று. திருமாவளவன் அது ‘பார்ப்பனர்களையும் சைவர்களையும்’ பார்த்து சமண-பௌத்தர்கள் செய்ததாகவும் எனவே சைவ வைணவ எழுச்சியின் போது அவர்களே தீண்டத்தகாதவரென ஆக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.
திருமுருக கிருபானந்த வாரியார் இவ்விஷயத்தில் கூறுகிற ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சமணர்களின் மதம் பொய் என்பதால் அவர்கள் தோற்கவில்லை என்பது. திருப்புகழமிர்தம் என அவர் நடத்தி வந்த பத்திரிகையில் (விய ஆண்டு ஆனி மாதம்: ஜூன் 1946) அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பார் திருவள்ளுவர். மனிதனை மனிதன் தீண்டக்கூடாது என்பதும் தீண்டினால் நீராடவேண்டுமென்பதும் அறிவியலுக்குப் பொருந்தாதவையாம். அங்ஙனமிருக்க சமணர்கள் திருநீறு பூசும் சைவர்களைக் கண்டால் ‘கண்டுமுட்டு’ என்று நீராடுவதும், நீராடுகின்ற ஒருவனை மற்றொருவன் ஏன் குளிக்கின்றனை என வினவுவானாயின் ‘பூச்சாண்டியைக் கண்டேன்’ என்று அவன் கூறியவுடன், கேட்டவன் ‘கேட்டு முட்டு’ என்று நீராடுவதும் ஆகிய இத்தகைய அநீதிகளை சமணர்கள் மேற்கொண்டார்கள். கண்டால் குளிப்பதும் கேட்டால் குளிப்பதும் என்றால் இவை எத்தனைப் பெரிய கொடுமைகள்? அதனால் திருவருள் சமணர்கட்குத் துணை புரியவில்லை”.
ஆனால் திருமாவளவன் பரசமய கண்டனம் என்பதை அது பறையரின் சமயம் என்பதுடன் இணைக்கின்றார். இதற்கு ஆதாரமில்லை என்பதுடன் ’பர’ என்பது உயர்ந்த ஆன்மிக நிலை என்பதுடன் இணைந்து ‘பரசிவம்’ ‘பரம் பொருள்’ என்பதுடன் வரும் ‘பர’ என்பதே பறையர் சமுதாயத்துடன் இணைத்து பேசப்படதக்கதாக அமைகிறது.
பறை எனும் இசையொலியும் இத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். நேற்று சுசீந்திரம் கோவில் பிரகாரத்தின் பெரு மண்டப பாதை தூண்கள் ஒன்றில் பறை அடிக்கும் ஒரு கலைஞரின் சிற்பத்தைக் கண்டேன். ஆபரணங்களும் முறுக்கு மீசையுமாக அக்கலைஞர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?
இங்கு திருநாவுக்கரசர் தேவார வரிகளே நினைவுக்கு வருகின்றன:
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கிஅயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
என மறையோசைக்கு முன்னராக அதற்கு நிகராக பறையின் ஓசையை கூறுகிறார். பஞ்சமி சாம்பவி ஆகிய பெயர்களும் பறைச்சி எனும் பெயரும் பராசக்தியின் பெயர்கள் என முந்தைய இடுகையில் சுட்டியிருந்ததை இப்போது நினைவுக்குக் கொண்டு வரலாம்.
இவையெல்லாம் காட்டும் விஷயம் ஒன்றேதான். தீண்டாமை என்பது இழிவானது மனித நெறிகளுக்கு எதிரானது. அதை சமணமோ சைவமோ எம்மார்க்கம் பின்பற்றினாலும் அது திருவருளுக்கு எதிரானது. இதையே சைவ வைணவ பெரியோர்கள் அதாவது இந்து சமய ஆன்மிக அருளாளர்கள் வலியுறுத்தினர். அதற்கு மாறாக தீண்டாமையை சமயத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளும் எவரையும் அவர் எத்தனை பெரிய பீடத்தில் இருந்தாலும் அவரை நாம் நம் சனாதன இந்து சமயத்தின் ஒரு அணுத்துளியை அறிந்தவராகவேனும் மதிக்க தேவையில்லை. அதே நேரத்தில் சமுதாய தேக்கநிலையில் அன்றைய மத அதிகார பீடங்களில் இருந்தவர்கள் மீதான ஆத்திரத்தில் அயோத்திதாசர் இவ்வுண்மைகளில் சிலவற்றை மறந்து தீண்டாமைக் கொடுமைகளை பௌத்தம் x சைவ-வைணவம் என பிரித்து பேசினார். அவரது ஆத்திரம் புரிந்து கொள்ளக் கூடியதே. இன்று பட்டியல் சமுதாயத்தில் இருப்பவர்களின் ஆன்மிக பண்பாட்டு வரலாறு என்பது இந்து சமயத்தின் புதையுண்ட பெரும் வரலாறு. அதனை வெளிக் கொணர்வது இந்துக்களாக அனைவரின் கடமை. இடிக்கப்பட்ட போலி மதச்சார்பின்மையின் கும்மட்டங்களைப் போலவே சாதியத்தின் கும்மட்டங்களையும் இந்து ஒற்றுமையும் இந்துத்துவ வரலாற்று ஆராய்ச்சியும் உடைக்க வேண்டும்.அவை உடைக்கப்படும்.
‘இந்துத்துவத்தின் ஆலயங்களில் பட்டியல் சமுதாயத்தினருக்கு வேறெந்த சமுதாயத்தினரையும் போல உரிமை உண்டு’ என பாபா சாகேப் அம்பேத்கர் கூறினார். இந்து கோவில்கள் என அவர் சொல்லாமல் இந்துத்துவத்தின் கோவில்கள் என்றார். அவ்வார்த்தைகளின் உண்மையை சரித்திர தரிசனத்தை திருமாவளவன் மட்டுமல்ல தமிழ்நாட்டு இந்துத்துவர்களும் உணர வேண்டும்.
*******
கடந்த சில ஆண்டுகளாகவே என் பேச்சுக்கள் குறித்து நான் எந்த பதிவையும் போடுவதில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. முடிந்த வரை கூட்டங்களை தவிர்த்துவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஆனால் பாஜகவில் உள்ள வழக்கறிஞர் விசு (முன்பு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) சில நாட்கள் முன்னர் என்னை அழைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண தினத்தை சமுதாய நல்லிணக்க நாளாக கொண்டாடும் நிகழ்ச்சி (10-12-2017) அன்று சுசீந்திரம் திருப்பனந்தாள் மடத்தில் நிகழ்வதாகவும் அதில் பேச முடியுமா என அழைத்த போது மறுபேச்சில்லாமல் ’எப்போது வரணும்னு சொல்லுங்க வந்துவிடுறேன்’ என்றேன். யோசிக்கவே இல்லை. மிக இயற்கையாக அந்த பதில் வந்தது.
காரணம் இருந்தது. சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது. சிறிய நிகழ்ச்சிதான். திருப்பனந்தாள் மடத்தின் அடக்கமான மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்தது.
ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலாக இருக்கும். வலைப்பதிவுகளின் காலம். முன்னர் ஒரு திராவிட முற்போக்கு எனக்கு ஒரு சவால் விடுத்திருந்தார். பெரிதாக டாக்டர் அம்பேத்கர் சாதியற்ற இந்துத்துவம் என்றெல்லாம் பீற்றுகிறாயே ’தலித்துகள்’ அல்லாத ‘சாதி இந்துக்களின்’ தெருவொன்றில் டாக்டர் அம்பேத்கரை மரியாதை செய்ய ஒரு கூட்டத்தை உங்கள் சங்க பரிவாரத்தால் நடத்த முடியுமா?
ஏபிவிபி மூலமாக சகோதர வட்டத்தில் வந்த இந்துத்துவ போராளியும் இளம் சிந்தனையாளருமான விசு இன்று அதை நடத்திக் காட்டியிருக்கிறார். இன்று நிகழ்ந்த நிகழ்ச்சி குமரி மாவட்ட வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் கொண்டது என்றே கருதுகிறேன். ஒரு முதன்மை சைவ மடத்தின் மண்டபத்தில் கோவில் திருக்குளத்தின் வடக்கே உள்ள கோவில் தெருவில் பாபா சாகேப் அம்பேத்கரைக் குறித்த நிகழ்ச்சியில் சாதி பிரிவின்றி மக்கள் வந்திருந்தனர். இந்த அருமையான நிகழ்ச்சியில் என்னையும் பங்கேற்க வைத்த விசுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
*****
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
Indeed sir, a great deal of change is happening within Hindu community. It is surely becoming more inclusive and accommodative. Casteless (supremacyless) Hinduism is soon to become a reality.
I am eager to know your views on Ambedgar and his significance.
suvanapriyan has published an article in support of Tholthirumavazhavan. Could you publish a refuttal . We must challenge.
இலங்கைத் தீவின் வட முனையில் உள்ள யாழ்ப்பாணத்திட்கு அப்பால் உள்ள ஒரு சிறு தீவான புங்குடுதீவில் வாழுகின்ற பறையர் என அழைக்கப் படுகின்ற சகோதரர்களின் உயர்வுக்கும் சாதி வித்தியாச ஒழிப்பிற்கும் பாடுபட்ட காலம் சென்றவர்களான எழுத்தாளர் மு தளையசிங்கம் கவிஞர் சு வில்வரத்தினத்தையும் மற்றும் நண்பர்களையும் இங்கு நினைவு கூருகின்றேன் .
பார்ப்பார் குலத்தில் பறையர் குலமே மேட்குலமாம் அதை கேட்பார் இல்லாமல் கீழ்க் குலமாய்ப் போனதாம். இதனை ஓர் பெரியவர் எனக்கு சொல்லி இருந்தார்.
source : suvanapriyan September 2017
( Mohammed is said to be quintessence of virtue )
முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.?ஹபீபுல்லாஹ்
பதில் :
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري
நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 5133
ஆயிஷா (ரலி) அவர்களை பருவ வயது அடைவதற்கு முன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.
அகில உலகுக்கு வழிகாட்டியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமியைத் திருமணம் செய்தது நியாயமானது தானா? என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமையைத் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் சிறுமியைத் திருமணம் செய்யலாமா என்பது முஸ்லிம்களில் பலருக்கு இருக்கும் சந்தேகம்.
இது குறித்து தக்க முறையில் அறிந்து கொண்டால் இரு சாராரின் சந்தேகமும் முற்றாக விலகி விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது அவர்களுக்கு இடப்பட்ட ஒரே கட்டளை ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த அடிப்படைக் கொள்கையை ஏற்றவர் உடனே முஸ்லிமாகி விடுவார், இதன் பின்னர் அவர் அந்தச் சமுதாய வழக்கப்படி நடந்து கொள்வார். ஏனெனில் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.
இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றவர்களும் நடந்து கொண்டனர்.
அன்றைய மக்களில் மதுபானம் அருந்தக் கூடியவர்கள் தான் அதிகமான இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர்.
இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.
அதுபோல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.
திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.
திருக்குர்ஆன் 2:228
தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.
திருக்குர்ஆன் 4:19
صحيح البخاري
6971 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البِكْرُ تُسْتَأْذَنُ» قُلْتُ: إِنَّ البِكْرَ تَسْتَحْيِي؟ قَالَ: «إِذْنُهَا صُمَاتُهَا»
கன்னிப் பெண்ணிடமும், விதவையிடமும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, கன்னிப் பெண் வெட்கப்படுவாளே? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
صحيح البخاري
5138 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعٍ، ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ، عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَرَدَّ نِكَاحَهُ»،
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் எனக்கு மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.
திருக்குர்ஆன் 4:21
இந்த வசனத்தில் திருமணத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சி பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.
மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும், ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.
திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும்.
இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லாத காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இஸ்லாத்தை ஏற்ற பலரும் சிறுமிகளைத் திருமணம் செய்திருந்தனர்.
இத்திருமணம் இறைவன் தடை செய்வதற்கு முன்னர் நடந்த்து என்பதால் நபிகள் நாயகத்தின் ஒழுக்கத்தை இது பாதிக்கும் என்று கருத எந்த நியாயமும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால்ய விவாகத்தை தவறு என்று எப்போது போதித்தார்களோ அதன் பின்னர் அவர்கள் பால்ய வயதுடைய சிறுமியைத் திருமணம் செய்திருந்தால் தான் அதைக் குறை கூற முடியும். அதை தடை செய்யாமல் ஊர் வழக்கப்படி அவர்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் இத்திருமணம் நடந்ததால் இது விமர்சனத்துக்கு உரியதாக ஆகாது.
A.Anburaj – Letter to suvanapriyan
சிறுமிகளை பொியவா்கள் அதுவும் 53 வயதான முஹம்மது 9 வயது ஆயிசாவை திருமணம் செய்து 9 வயதில் அச்சிறுமியோடு உடல்உறவு கொண்டாா் என்ற செய்தி படிக்க கடினமாக உள்ளது.ஒரு சீாதிருத்தவாதிஎன்ற நிலையில் தன்னைக் காட்டிக் கொண்டவா் சமூக அமைப்பில் பிரபல்யமாக இருந்த பல கருத்துககளை திருத்தியவா் சிறுமியை திருமணம் செய்தது ஏற்க சிரமமாக உள்ளது. இசுலாம் என்றும் சிறுமிகளை கிழவா்கள் மணப்பதை தடை செய்யவில்லை.முஹம்மதுவிற்கு பின் யாருக்கும் வஹி வரவில்லை.-அதாவது இறைவன் மற்றவா்களிடம் பேசவில்லை என்கிறாா் சுவனப்பிாியன்.ஆனால்
முஹம்மது இறந்த பின் ஜனாதிபதி -கலிபா ஆக அபுபக்கா் இரண்டு ஆண்டுகள் உயிரோடு இருந்ததா். பின்பு உமா் என்ற நபி தோழா் இரண்டாம் கலிபா ஆக பதவி வேற்றாா்.இந்த உமா் முஹம்மதுவின் மகள் பாத்திமா -அலிக்கு பிறந்த ”குலதும்” என்ற சிறுமியை 8 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டாா்.குரானிலோ ஹதீஸ்களிலோ சிறுமிகளை திருமணம் செய்யக் கூடாது என்று எங்கும் இல்லை.சாி முஹம்மது வஹி வந்த பின்பு சிறுமிகளை மணக்க தடைவிதித்து விட்டாா் என்றால்
இரண்டாம் கலிபா உமா் ஏன் சிறுமியைதிருமணம் செய்தாா் ?
இன்றம் இசுலாமிய உலகில் சிறுமிகளை கிழவா்கள் மணக்க தடை ஏதும் இல்லை. கூடுதலாக பணம் தேவை.அதுமட்டும்தான்.
———————–
பெருமதிப்பிற்குரிய அன்புராஜ் அவர்களுக்கு
ஐயா, தாங்கள் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களது கவனத்திற்கு கொணர வரும் விஷயங்கள் அந்த விஷயம் சம்பந்தப்பட்ட ஒரு வ்யாசத்தில் பதிவு செய்தால் முறையாக இருக்குமில்லையா? அல்லது தாங்களே தனியாக ஒரு வ்யாசம் எழுதி தமிழ் ஹிந்துவில் அதைப் பதிவு செய்யலாமே?
வ்யாசத்தின் கருப்பொருளை ஒட்டி நாம் விவாதங்களை முன்வைத்தல் நல்லது.
தலைப்புக்கு அறவே சம்பந்தமில்லாத கருத்துக்களை ஆசிரியர் குழுவினர் சரிபார்த்து பதிவேறுவதைத் தவிர்க்கலாமே.
There is a reference to “unmenstruated wifes – small children who havenot attained puberty “
நானும் உயர்திரு கிருஷ்ணகுமார் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன். திரு அன்புராஜ் தொடர்பு எதுவுமில்லாமல் இஸ்லாமைப்பற்றிய தனது கருத்தை அனைத்துக் கட்டுரைகளிலும் பதிவுசெய்கிறார். சுவனப்பிரியன் அவரது வலைத்தளத்தில் ஏதாவது பிரசுரித்தால் அன்புராஜ் அவர்கள் தனது எதிர்க்கருத்தைப் அங்கு பதியவேண்டும். இடம்,பொருள் ஏவல் இல்லாது அவர் இப்படிப்பதிவது தமிழ் ஹிந்து இணையத்தின் தரத்தைக் குறைக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் அவரது கருத்துகள் வெட்டி ஒட்டப்படுபவதாகவே அமைகின்றன. அவற்றை தமிழ் ஹிந்து ஆசிரியர்குழு நீக்கவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலாக இருக்கும். வலைப்பதிவுகளின் காலம். முன்னர் ஒரு திராவிட முற்போக்கு எனக்கு ஒரு சவால் விடுத்திருந்தார். பெரிதாக டாக்டர் அம்பேத்கர் சாதியற்ற இந்துத்துவம் என்றெல்லாம் பீற்றுகிறாயே ’தலித்துகள்’ அல்லாத ‘சாதி இந்துக்களின்’ தெருவொன்றில் டாக்டர் அம்பேத்கரை மரியாதை செய்ய ஒரு கூட்டத்தை உங்கள் சங்க பரிவாரத்தால் நடத்த முடியுமா?
சாதி பிரிவின்றி மக்கள் வந்திருந்தனர்.
*****
இப்படி ஒரு திராவிட முற்போக்கு என்று முகநூலில் எழுதலாம். முகநூல் அதற்குத்தான் இருக்கிறது. ஒரு இணைய இதழில் எழுதலாமோ? பெயரைச் சொல்லிவிட்டால் அவரிடமே கேட்டு நீங்கள் சவால் விட்டது உண்மையா என்றறியலாமே? மேலும் உங்கள் சவாலை அவர் முறியடித்தார் என்கிறாரே எனக் கேட்டுத் தெரியும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
அவர் விட்ட சவால் சாதி இந்துக்கள் தெருவில் முடியுமா? அச்சவாலுக்குப் பதில் சுசீந்தரத்தில் ஒரு சைவமடம். மடத்தில் பேசமுடியும். காரணம் நாம் சைவமதத்தையோ, இந்து தெய்வங்களையோ, விமர்சனம் செய்யவோ, அல்லது நகையாடவோ செய்யவில்லை. ஒரு த்லித்து தலைவரைப் பற்றி பேசுகிறோம். சவால் விட்டவர் மனத்தில் என்ன வைத்துக்கேட்கிறார்? தேனியில் ஒரு தலித்து மாரியம்மன் கோயில் பூஜாரிப்பையன் தற்கொலை பண்ண ஓ பி எஸ் தம்பி முதற்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு மதுரை – சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, இராம்நாதபுரம் போன்ற மாவட்டங்களில் இப்படி தேவர்கள் வீதியில் விசு அம்பேத்கரைப் புகழ்ந்து அர்விந்தன் நீலகண்டனால் உரையாற்ற முடியுமா? இதுதான் சவால் என்று நான் நினைக்கிறேன்.
கூட்டத்தின் படம் போடப்பட்டிருக்கிறது. சாதி பிரிவின்றி மக்கள் என்பது இன்றைய தமிழகத்தில் நிலையே. அதாவது, தலித்துகள் அல்லாத மற்றெல்லா சாதியினருக்குமிடையில் பிணக்கில்லை. அவர்களிடையே எப்படி ஒரு கூட்டத்து முதலியார் வருகிறார். நாமெல்லாரும் செட்டியார்கள்; போகக்கூடாது என்று நினைப்பார்கள். தலித்துகள் வந்தார்களா? படம் அதைக்காட்டுகிறதா?
//போலி மதச்சார்பின்மையின் கும்மட்டங்களைப் போலவே சாதியத்தின் கும்மட்டங்களையும் இந்து ஒற்றுமையும் இந்துத்துவ வரலாற்று ஆராய்ச்சியும் உடைக்க வேண்டும்.அவை உடைக்கப்படும்.//
ஏன் இந்து ஒற்றுமையையும் இந்துத்வ வரலாற்று ஆராய்ச்சியையும் உடைக்க வேண்டு.’ உடைக்கப்படும் என்ற சவால்? புரியவில்லையே.
பறையர்கள் பற்றி கட்டுரை. ஆனால் பின்னர் பட்டியல் இனத்தார் என்று பலதடவை எழுதுகிறார். பறை- பரமசிவம்- ஆன்ம நிலை – இந்து மதத்தில் சிற்ப்பானதொரு இடம் – என்றெல்லாம் அரவிந்தன் குறிப்பிடுவது, பறையர்களைப்பற்றியே.
பட்டியல் இனத்தார் எனப்து பறையர்கள் மட்டுமன்று. கெஜட்டில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். பட்டியல் இனத்தார் என்ற் சொல்லை இந்து மதத்தோடு இணைத்ததால் வந்த பொருள் மயக்கமிது. இங்கே வெறும் பறையர்கள் பற்றியே பேசப்படுகிறது. எங்கே வந்தார்கள் நூற்றுக்கணக்கான பட்டியலினத்தார்.
மேலும் பறையர்கள் என்றாலும் ஒரு கூட்டமன்று. அவர்கள் பலவிதமான மக்கள்; தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் கேரளா, ஆந்திரா, கருநாடகம் (கெஜட்டில் பார்க்கவும்) சிதறிக்கிடக்கும் பல்வகை பறையர்கள். இன்றில்லை.. அநாதி காலம் தொட்டு.
Hello You Mr.Krishnakumar and Arisonan,
I wonder what is the use of writing about Akbar ? If it is useful,essential then my copy-paste and my letters are also useful to readers who are in a position to challenge Muslims.
Once son of my Goldsmith friend had approached me and complained that His Muslims friends were making fun of him by asking numerous questions about Hindu religion particularly Hindu Puranam- Murugan with 6 heads, Brahma with 3 heads, Narasimhan , birth of Ayyappan.He had felt very helpless and humbled. I told him to ask his muslims friends ” Who are Kumus girls ” ? If they replied then ask How Kumus women did Mohammed have ? He did that. The Muslim gang did not reply and stopped harassing him.
Hindus must know to give fitting rejoinder to Muslim and christian fanatics. My copy – paste items and comments are useful on that score.If you do not like my comments it just give a skip.
Let the author /administrator decide it.
Hindus had been slaves to Muslims for 800 years slavery is deeply rooted in
the psychology of Hindus.
Hindus in General would relish comments about Hindu religion and
culture and strongly afraid of and have no guts to criticise Islam and
christianity which is cowardice.
(Edited and published)
எனது கடிதங்களை நீக்கி வீட்டீர்கள் நன்றி.தமிழ் இந்து வில் உள்ள பல கட்டுரைகளை சுவனப்பிாியனில் பதிவு செய்துள்ளேன்.திரு.கிருஷ்ணகுமாாின் தமிழ் எத்தனை பேருக்கு புாியும் என்று எனக்கு தொியவில்லை.அது என்ன நடையோ? யாருக்குதான் முழுமையாகப்புாிகின்றதோ.தொியவில்லை. 1000 ஆண்டுகள் துலுக்கனுக்கு அடிமையாக இருந்து விட்டோம்.தலுக்கன் பற்றி குறை கூறுவது தன் பயம் காரணமாக பிடிக்கவில்லை. இசுலாம் பற்றி விமா்சனம் செய்வதுதான் என் நொக்கம். அதற்கு முன்னணி கட்டுரைகளை தோ்வு செய்கின்றேன். பழைய கட்டுரைகளை தோ்வு செய்தால் யாரும் படிக்காமல் போகலாமே
//அதற்கு முன்னணி கட்டுரைகளை தோ்வு செய்கின்றேன். பழைய கட்டுரைகளை தோ்வு செய்தால் யாரும் படிக்காமல் போகலாமே//
You can write a separate article on Muslims.
இந்த மறுமொழி ( sishri.org – web page – பிரவாஹன்) கட்டுரைகளிலிருந்து எடுத்தது.
”துடியன், பாணன், பறையன், கடம்பன் அந்நான்கல்லது குடியுமிலவே” என்கிற புறநானூறு பறையர்களில் ஒரு பிரிவாக உள்ள அறிவர்கள் அந்தனப்பிரிவில் இருந்துள்ளனர்.
”பார்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே” – தொல்
குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினையர்களை சங்க இலக்கியம் ”வேட் கோவர்” என குறிப்பிடுகிறது. வேட்கோவர் வேள்வி செய்யக்கூடிய தகுயுடையோர். சங்க இலக்கியங்களின் படி கண்மானர்கள் சூத்திரர் அல்ல – அந்தணப் பிரிவில் இருந்தனர். விஸ்வகர்மா என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் தாங்களே உண்மையான அந்தனர் என்பதை நிரூபிப்பதற்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதுதான் ”சித்தூர் ஜில்லா அதாலத்” எனப்படும் வழக்கு. மேலும் இவர்கள் தாங்களே சோழ அரசர்களின் குல குருக்கள் எனவும் கோரிவந்தனர். தமிழ் சமூகத்தில் கம்மாளர் x பார்பனர்கள், பறையர் x கம்மாளர்கள், பார்பனர்கள் x பறையர்கள் என்ற சண்டைகள் இருந்ததாக சான்றுகள் உள்ளன. நாவிதர் மற்றும் மருத்துவர் என்பவர்கள் அம்பட்டர் என்ற பெயரில் அந்தணர் பிரிவில் இருந்துள்ளனர். வைணவ கோவில்களில் பூஜை செய்பவர்கள் ”பட்டர்” என்றே அழைக்கப் படுகின்றனர். அமர்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரை ஆசிரியர் இளம் பூரணர் ”அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு” என்கிறார்.. இப்படி தான் பார்பான் என்று வேறு எந்த ஜாதியும் சொல்வதில்லை.
”பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி” என்பது திராவிடர்கள் அதிகம் உரைத்தது. அப்பொழுது கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரா ஜிவானத்தம் பல மேடைகளில் ” பார்பனர்கள் பறையர்களை தொட்டால் தீட்டு என்றார்கள் ஆனால் கார்காத்த வேளாளர்கள் பறையர்களைப் பார்த்தாலே தீட்டு என்கிறார்கள். ஆனால் பார்பான் ஆரியன் என்றும் தமிழர் அல்ல என்பது ஏன் ? ”தேன் கொடுத்து மீன் வாங்கியவர்களை” பூணூல் அணிந்தவர்கள் பிரித்தாண்டார்கள் ? என்பது திராவிட இயக்கத்தவரின் குற்றச் சாட்டு. பார்பனர்கள் மட்டும்தான் பூணூல் அணிந்தார்கள் என்பது பொய். தொல்காப்பியம் சொல்கின்ற மூன்று வர்ணத்தவருமே பூணூல் அணிந்தவர்கள்தாம். தாழ்த்தப் பட்டவர்களாக சொல்லப்படும் பறையர் சமூகத்தவரும் தாங்களும் பூணூல் அணிந்தவர்கள் தாம் என்பதை தெரிவிக்கும் பழைமையான பாடல் ஒனறு உண்டு.
cont…..
” முந்திப் பிறந்தவன் நான்
– முதல் பூணூல் தரித்தவன் நான்
– சங்குப் பறையன் நான்
– சாதியில் மூத்தவன் நான்” மேலும் ஞானவெட்டியார் பாடல்கள்
”தரணிமுத லென்பறையில் தழைத்தாண்டே பூணூல் தரித்துக் கொள்ளுவோம் சிவ சிவ
பொறியுமைம் புலனையுந்தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகள் விகிதமாய் வெண்குடை வெண்சாமரமும் பிடித்துக்கொள்வோம்
பூணூல் பிறந்ததெங்கே சிவ சிவ”
பழைய வள்ளுவர் படங்களில் பலவற்றில் பூனூலுடன்தான் கானப் படுகிறார். பறையர் சமூகத்ததை தவிற விஸ்வகர்மாக்களும் பூணூல் அணிபவர்கள்தாம். விஸ்வகர்மாக்கள் கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேதகர்மாக்களுடன் உபநயனம் எனும் பூனூல் அணியும் சடங்கைச் செய்து கொள்கிறார்கள். நாட்டுக் கோட்டை நகரத்தார் என்னுமம் செட்டியார்கள் பூனூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்ற பெயரில் பூனுல் அணிகிறார்கள். தமிழ் நாட்டில் மன்னர்களின் சிலைகள் போர் வீரர்களின் சிலைகள் கோவில்களில் உள்ள பல சிற்ப்பங்களில் பூனூல் வரையப்பட்டுள்ளன. க்ஷத்திரியர்களான மூவேந்தர்களும் பல்லவர்களும் பூனூல் அணிந்தவர்களே.
தொல்காப்பியர் தனது இலக்கணநூலை அங்கீகரத்திற்காக பனம்பரனாரின் பாயிரத்தில் சொல்லி உள்ள அதன்கோட்டு ஆசான் என்பவர் கேள்விகள்மூலம் சோதித்து ஒப்புதல் அளித்தார். இவர் குமரி மாவட்டம் அதங்கோட்டில் உள்ள சான்றோர் குலத்தவருள் ஒரு பிரிவினர் ஆவார். இவர்கள் இன்றும் இவருக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கிறார்கள்.
தமிழக வரலாற்றில் சைவ வேளாளர் ஆதிக்கம் என்பது 13-14 ஆம் நூற்றாண்டில் இருந்து உறுதிப்பட்டுவிட்டது. என்று சொன்னால் அது மிகையல்ல. இவர்கள்தான் கன்யாகுமரி மாவட்டத்திலும் இன்னபிற பகுதிகளிலும் சாணார் எனப்படும் சான்றோர்களை தீண்டாமை கொடுமையைவிடக் கொடிய ”காணாமை” நிலைக்கு தள்ளியவர்கள் என்பது வரலாறு. ”நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெண்சாமராம்……… நாலாவன் நல்வழிக்குத் துணையுமாவான்” என்ற பிற்கால ஓளவைப் பாட்டு தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கணத்திற்கு நேர் எதிர் நிலைக்குச் சமூகம் வந்து விட்டதைக் காட்டுகிறது.
சென்னை பல்கலைகழகம் (Tamil Lexicion) தமிழர்கள் யார் என்பதற்கு ”பறையனொழித்தவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. (தொகுதி III பக்கம் 1757)
ஏன் இந்த தலைகீழ் மாற்றம் – அந்தனர் என்று கோருவோர் உண்மையிலேயே அந்தணர்களாக இருந்தவர்களா ? அல்லது அந்தணர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் பிரிவில் ஜாதி பிரஷ்டம் செய்து பின்னுக்கு தள்ளப்பட்ட பரம்பரையில் வந்தவர்களா இவர்கள். இதை பற்றி அரவிந்தன் தனது கருத்து என்ன என்பதை கூறும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதைப்போல் முதல் குறளில் வரும் ஆதி-பகவன் என்பதற்கும் பறையர்கும் தொடர்பு அல்லது சொல்லாடல் – கதை புனைவு இருக்கிறதா ?
தமிழகத்தில் பன்றிகூட்டத்தவரான தி.க.வினர் பன்றிக்கு புணூல் போடும் விழா எடுத்தபோது பிராமணர்களை தவிர மற்ற புணூல் போடும் ஜாதியினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ?
/////விஷயம் சம்பந்தப்பட்ட ஒரு வ்யாசத்தில் பதிவு செய்தால் முறையாக இருக்குமில்லையா? ////
இது என்னையா தமிழ் வார்த்தை. குலத்தினை அடையாழப்படுத்துகிராரோ?
பேரன்பிற்குரிய ஸ்ரீமான் அன்புராஜ்
நீங்கள் இஸ்லாம் பற்றி எழுத விழையும் விஷயங்களை நான் எழுத வேண்டாம் என்றா சொல்லுகிறேன். நிச்சயமாக இல்லை. ஒன்று அது சம்பந்தப் பட்ட ஒரு வ்யாசத்தில் அதற்குப் பின்னூட்டமாக எழுதுங்கள். அல்லது நீங்களே தனியாக விவரமாக ஒரு வ்யாசமாக எழுதி தமிழ் ஹிந்து தளத்தில் சமர்ப்பிக்கலாம். வ்யாசத்தின் கருப்பொருளுடன் சம்பந்தப்படாத ஒரு விஷயத்தை பதிவிடல் முறையல்ல. அவ்வளவே. என்னுடைய கருத்துக்களை லகுவாக என் மொழிநடையில் சொல்லுகிறேன். அவ்வளவே. உங்களுக்கு உகப்பில்லையென்றால் அதை உதாசீனம் செய்து விடுங்கள்.
\\ குலத்தினை அடையாழப்படுத்துகிராரோ? \\
நான் எழுதிய மொழிநடையை ஐயா பாலாசீ அவர்கள் நிச்சயமாக விமர்சிக்கலாம். ஆயினும் தேவரீர் எழுதியிருப்பது தமிழோ. எந்தப் பள்ளிக்கூடத்தில் இப்படிச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்
பத்துலக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்………..இதை எழுதியவர் எந்தக் குலத்தவர்?
எந்த ஒரு மொழியும் மொழிநடையும் எந்த ஒரு குலத்துக்கோ அல்லது மதத்துக்கோ கூட சொந்தமில்லை என்பதை சொல்ப அறிவுடையவர் அறிவர். மொழியும் மொழிநடைகளும் எல்லா குலத்தினராலும் மதத்தினராலும் கையாளப்படுகின்றன என்பதை சொல்ப வாசிப்புள்ளவர் கூட அறிவர். சைவம், வைஷ்ணவம், ஜைனம், பௌத்தம், வைதிகம், க்றைஸ்தவம் மற்றும் இஸ்லாம் இவையனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் வாழும் மணிப்பவளத்திற்கு சான்று வேண்டுமா?