அண்மையில் நடந்த திரிபுரா, நாகலாந்து, மேகாலயம் மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த விரும்புவோருக்கு இனிய சேதியை அளித்திருக்கின்றன. குறிப்பாக, திரிபுராவில் பாஜக அடைந்துள்ள வெற்றி மிகவும் அற்புதமானது. அங்கு 20 ஆண்டுகாலமாக முதல்வராக இருந்த, காட்சிக்கு எளியவரான மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சிக் கட்டில் ஏறுகிறது பாஜக.
இன்றைய நிலையில் ஒட்டுமொத்த பாரதத்தில் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கரம் ஓங்கி இருக்கிறது. இது முன்னர் பழைய தேசிய கட்சியான காங்கிரஸ் வகித்த நிலை. இன்று அக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போலாகிவிட்டது. அந்த இடத்தை உண்மையான தேசியக் கட்சியான பாஜக கைப்பற்றிவிட்டது.
அ. தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள்:
1. மத்தியப்பிரதேசம் (தனித்து ஆட்சி)
2. சத்தீஸ்கர் (தனித்து ஆட்சி),
3. ராஜஸ்தான் (தனித்து ஆட்சி),
4. குஜராத் (தனித்து ஆட்சி),
5. ஹிமாச்சல பிரதேசம் (தனித்து ஆட்சி),
6. ஹரியாணா (தனித்து ஆட்சி),
7. உத்தரகண்ட் (தனித்து ஆட்சி),
8. ஜார்க்கண்ட் (கூட்டணி),
9. உத்தரப்பிரதேசம் (கூட்டணி)
10. அருணாசல பிரதேசம் (கூட்டணி)
11. அசாம் (கூட்டணி)
12. மணிப்பூர் (கூட்டணி)
13. மஹாராஷ்டிரா (கூட்டணி)
14. கோவா (கூட்டணி).
(குறிப்பு: இவற்றில் கூட்டணி என்று குறிப்பிடப்படுபவை, பாஜக தலைமையில் அமைந்த கூட்டணிகள். இம்மாநிலங்களில் பாஜக முதல்வர் உள்ளார்).
ஆ. கூட்டணி அரசில் பாஜக பங்கேற்கும் மாநிலங்கள்:
1. ஜம்மு- காஷ்மீர் (மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியில் பங்கேற்பு)
2. பிகார் (ஐக்கிய ஜனதாதளம் ஆடசியில் பங்கேற்பு),
3. சிக்கிம் (சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஆட்சி)
4. ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி)
இ. பாஜகவின் புதிய ஆட்சி அமையவுள்ள மாநிலங்கள்:
1. திரிபுரா (திரிபுரா பழங்குடி மக்கள் கட்சியுடன் கூட்டணி)
2. நாகலாந்து (தேசிய ஜனநாயக முனேற்றக் கட்சி, நாகலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமையும் வாய்ப்பு)
3. மேகாலயா (தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் பங்கேற்கும் வாய்ப்பு)
ஈ. மீதமுள்ள பகுதிகள்:
1. கர்நாடகா (விரைவில் ஆட்சி)
2. தில்லி (விரைவில் ஆட்சி)
3. கேரளா (அடுத்த தேர்தலில் ஆட்சி)
4. ஒடிசா (அடுத்த தேர்தலில் ஆட்சி)
5. மேற்கு வங்கம் (அடுத்த தேர்தலில் ஆட்சி)
6. தெலுங்கானா (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)
7. தமிழகம் (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)
8. பாண்டிசேரி (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)
9. மிசோரம் (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)
10. பஞ்சாப் (விரைவில் அரசியல் காட்சி மாறும்!)
இங்கு அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளவை, ஆணவ வெளிப்பாடுகள் அல்ல; பாஜகவின் தெளிவான திட்டமிட்ட வியூகம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படும் கட்சியாக பா.ஜ.க. மட்டுமே இருக்கிறது.
மோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு, அதன் தலைவரான அமித் ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி.
இத்தகைய நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகளை ஆராய்வது காலத்தின் தேவையாகும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாஜகவை குறைந்தபட்சம் வரும் 10 ஆண்டுகளுக்கு யாரும் ஒதுக்கிவைக்க முடியாது என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றன தேர்தல் முடிவுகள். ஆனால், பாஜகவின் எதிரிகள் வழக்கம் போல, நீலிக் கண்ணீர் விடுகிறார்கள். இது அவர்கள் அழ வேண்டிய நேரம். அழட்டும்!
நமக்கு இந்த தேர்தல் முடிவுகள் களிப்பை மட்டும் நல்கவில்லை. தமிழகம் போன்ற மாநிலத்துக்கான எதிர்காலத் திட்டமிடலுக்கான வாய்ப்பையும் தந்திருக்கின்றன. எனவே நாம் ஆராய்வோம்!
***
நாகலாந்தில் நட்புப் பூக்கள்:
நாகலாந்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சிதான் (நாகலாந்து மக்கள் முன்னணி-என்.பி.எஃப்.) இதுவரை ஆட்சியில் இருந்தது. இப்போது அதன் கூட்டணிக் கட்சி (நாகலாந்து தேசிய முன்னேற்றக் கட்சி- என்.டி.பி.பி.) மாறி இருக்கிறது. அங்கு தேர்தலே பாஜகவின் நண்பர்களிடையிலான களமாகத் தான் இருந்தது. எதிர்பார்த்தபடியே, பாஜக கூட்டணியே அதிக வெற்றி பெற்றிருக்கிறது.
பாஜகவின் முன்னாள் நண்பரான என்.பி.எஃப். இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் நெய்பு ரியோ (என்.டி.பி.பி.), இப்போதைய முதல்வர் ஜிலியாங் என்.பி.எஃப். ) ஆகிய இருவருமே பா.ஜ.கவின் தோழர்கள். இது ஒரு தரும சங்கடமான நிலை. எனினும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையில் நெய்பு ரியோ முதல்வராகவே அதிக வாய்ப்பு. அநேகமாக என்.பி.எஃப். கட்சியும் அரசில் இணையக்கூடும் அவ்வாறு நிகழ்ந்தால், எதிர்க்கட்சிகளே இல்லாத மாநிலமாக நாகலாந்து மாற வாய்ப்புண்டு.
அங்கு மொத்தமுள்ள இடங்கள்: 60; தேர்தல் நடைபெற்ற இடங்கள்: 59. பாஜக கூட்டணி 28 (பாஜக-11, என்.டி.பி.பி.-17) இடங்களிலும், என்.பி.எஃப். 27 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வென்றிருக்கிறார்கள். காங்கிரஸ் இங்கு சுத்தமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறது. நாகா பழங்குடியினர் விவகாரம் இனிமேல் சுமுகமாகத் தீர்வதற்கான வாய்ப்பை இத்தேர்தல் முடிவு அளித்திருக்கிறது.
மேகாலயாவில் காங்கிரஸ் சிறுத்தது!
கிறிஸ்தவப் பெரும்பான்மை மாநிலமான மேகாலயாவில் தேர்தல் முடிவுகள் நிர்ணயிப்பவை சர்ச்களே. அங்கு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுலுக்கு ஆதரவாக பாதிரிப்படை வெளிப்படையாகவே களமிறங்கியது. ராகுலும், பா.ஜ.க.வை இந்து வகுப்புவாதக் கட்சி என்று பிரசாரத்தின்போது பூச்சாண்டி காட்டினார். எனினும், அக்கட்சியால் மீண்டும் ஆட்சிக்கான பெரும்பான்மை பெற முடியவில்லை.
மேகாலயத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 60. இங்கு கட்சிகளின் வெற்றி நிலவரம்: தேர்தல் நடந்த தொகுதிகள்: 59, காங்கிரஸ்- 21, என்.பி.பி- 19, பாஜக- 2, யு.டி.பி- 6, பிறர்- 11. இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெறவில்லை. இங்கு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக பாஜக- என்.பி.பி. கூட்டணிக்கு 21 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் இக்கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
காங்கிரஸின் இப்போதைய முதல்வர் முகுல் சங்மாவா, பாஜக ஆதரவு பெற்ற காண்டிராட் சங்மாவா (முன்னாள் நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன்) , யார் அடுத்த முதல்வர் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும். மக்கள் ஆதரவை காங்கிரஸ் இழந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுவதால், பாஜக ஆதரவு பெறுபவரே முதல்வர் ஆகக் கூடும்.
இப்போதைக்கு காங்கிரஸ்- பாஜக என இரு தரப்பிலும் மேலிடப் பார்வையாளர்கள் தலைநகர் ஷில்லாங்கில் அணி திரட்டுகின்றனர். ஆரம்ப நிலையிலும், தார்மிக ரீதியிலும், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புள்ளது.
திரிபுராவில் அதிரடித் திருப்பம்:
இவ்விரு மாநிலங்களை விட, திரிபுராவில் ஏற்பட்டுள்ள திருப்பமே தலையாயது. எனவே தான் இக்கட்டுரையின் பெரும் பகுதியை திரிபுரா ஆக்கிரமிக்கிறது.
இந்தியாவில் இடதுசாரிகள் தம்பட்டம் அடித்துக்கொண்ட பிரதான அம்சங்களில் ஒன்று திரிபுரா. அங்கு இதுவரை முதல்வராக இருந்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் அனைவருமே எளியவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் அமைந்தது அக்கட்சியின் பேறு. அதைப் பயன்படுத்தியே அம்மாநிலத்தில் நீண்டகாலம் ஆட்சியை தக்கவைத்திருந்த்து அக்கட்சி.
ஆனால், மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்களின் அரசியல் வன்முறைகளைப் பொருத்த வரை, நமது அண்டை மாநிலமான கேரளம் போலவேதான். அங்கு தேர்தலே மார்க்சிஸ்ட் கட்சியினர் நினைத்தால் தான் அமைதியாக நடக்கும் என்ற நிலையே சென்ற தேர்தல் வரை நிலவியது. மார்க்சிஸ்ட்களின் ஜனநாயகம் என்பது அவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் வரை மட்டுமே.
அங்கு சென்ற தேர்தலிலேயே (2013) ஆட்சி மாற்றத்துக்கான காரணிகள் தென்பட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சியால் மார்க்சிஸ்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தவிர, திரிணாமூல் காங்கிரஸும் வாக்குகளைப் பிரித்தது. எனவே தான் சென்ற தேர்தலில் மாணிக் முதல்வராக முடிந்தது. எனினும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை முன்னைவிட அதிகரித்தது.
இந்த நேரத்தில் தான் தேசத்தின் பிரதமர் ஆனார் நரேந்திர மோடி. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகர்தலா தொகுதியில் பாஜக வெல்ல முடியாத போதும், அங்கு அக்கட்சியின் வாக்குகள் கூடின. அப்போதே பாஜக திரிபுராவை தனது அடுத்த இலக்காகத் தீர்மானித்துவிட்டது.
தேர்தல் களத்தில் வெல்ல, நல்ல தலைமை, அர்ப்பணிப்புள்ள தொண்டர் படை, சிறந்த அரசியல் வியூகம் ஆகிய மூன்றும் அவசியம். இம்மூன்றும் பாஜகவிடம் இருந்தது. கடந்த இரண்டாண்டுகளாக பாஜக கீழ்மட்டத்தில் நடத்திவந்த அரசியல் போராட்டமும், கைக்கொண்ட தேர்தல் அணுகுமுறையும் தான் அக்கட்சிக்கு தற்போது இமாலய வெற்றியை வழங்கியுள்ளன. தவிர பா.ஜ.க.வின் தலைமையை உணர்ந்த மாற்றுக் கட்சியினர் மார்க்சிஸ்டுகளுக்கு மாற்றாகும் வல்லமை அக்கட்சிக்கு மட்டுமே உணர்ந்து அக்கட்சியில் இணைந்தனர்.
திரிபுராவில் சென்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. அங்கு 1.5 % வாக்குகளைக் கூட வாங்க முடியவில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் பலரே பாஜகவில் ஐக்கியமாயினர். அவர்கள் மார்க்சிஸ்ட்களை எதிர்க்க பாஜகவைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துவிட்டனர்.
நால்வர் அணியின் வியூகம்:
இந்தக் காட்சிகளை பின்னிருந்து இயக்கியவர், வடகிழக்கு மாநில கூட்டணி நிர்வாகத்தைக் கவனிக்கும் ஹிமாந்த பிஸ்வ சர்மா. முன்னாளில் காங்கிரஸில் இருந்தபோது கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்பட்ட சர்மாவிடமிருந்த தலைமைப் பண்பை உணர்ந்த அமித் ஷா அவரையே வட கிழக்கு மாநிலங்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக்கினார். இப்போது அவர் சர்வானந்த் சோனோவால் தலைமையிலான அசாம் அரசில் கல்வி அமைச்சராகவும் இருக்கிறார்.
சர்மாவிடம் திரிபுரா தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தவிர, அவருக்கு உதவியாக, பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவும் அகர்தலா வந்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பிரசாரகரும், சமூக சேவகருமான விப்லப் குமார் தேவும் களம் இறக்கப்பட்டார். தேர்தல் களத்தில் அனுபவம் மிக்க மற்றொரு ஆர்.எஸ்.எஸ். செயல்வீரர் சுனில் தேவ்தரும் உடன் களமிறங்கினார், இவர்கள் நால்வரும் இணைந்து நடத்திய துல்லியமான தாக்குதலுக்குக் கிடைத்த வெற்றியே பாஜகவுக்கு பல்லாண்டு காலக் கனவை நனவாக்கி இருக்கிறது.
இந்த நால்வர் அணி திரிபுராவின் 60 தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் களப் பணியாளர்களை நியமித்தார்கள். மார்க்சிஸ்ட் ஆட்சி மீதான அதிருப்தி மாநிலமெங்கும் விரவிக் கிடந்தது. அதை பாஜக ஆதரவாக அவர்கள் தொடர் பிரசாரத்தால் மாற்றினார்கள். தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் மோடிக்கு சோனாமுராவில் கூடிய பிரமாண்டமான கூட்டத்திலேயே, அங்கு அடுத்து பாஜக வெல்லப்போவது தெரிந்துவிட்டது.
எனினும், எந்த ஒரு வாய்ப்பையும் வீணாக்க விரும்பாத அமித் ஷா, அரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் கட்சி (ஐ.டிஎஃப்.டி.) உடன் கூட்டணி கண்டது. வாக்குகள் சிதறுவதைத் தடுத்ததாலும், மார்க்சிஸ்ட்கள் முன்புபோல வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முடியாததாலும், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
அங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அவற்றில் பாஜக கூட்டணி 43 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கூட்டணி 16 இடங்களிலும் வென்றுள்ளன. திரிபுராவில் சென்ற தேர்தலில் அடையாளமே இல்லாமல் இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இப்போது 42.4 %. அதன் கூட்டணிக் கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 %. மார்க்சிஸ்ட் கட்சி 43.2 % வாக்குகளைப் பெற்றபோதும், கூட்டணி வலுவால் பாஜக வென்றுள்ளது. இதற்கு அமித் ஷாவின் வியூகமே காரணம்.
“திரிபுராவில் ஐ.டிஎஃப்.டி. கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவால் ஆதாயமும் கிடைக்கலாம்; பாதகமும் ஏற்படலாம் என்று நாங்கள் சொன்னபோது, உடனடியாக அக்கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார் ஷா. அவரது தேர்தல் வியூகமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்” என்கிறார் சர்மா. அது மட்டுமல்ல, “அரசியல் பல்கலைக் கழகத்தில் அமித்ஷா முனைவர் பட்ட மாணவர் என்றால் ராகுலை நரசரி பள்ளி மாணவராகத் தான் கருத வேண்டும்” என்றும் அவர் கூறி இருக்கிறார். உண்மைதான். தேர்தல் முடிவுகளுக்கு பதில அளிக்காமல் இருக்க- பாட்டியைப் பார்ப்பதற்காக என்று சொல்லி- இத்தாலிக்கு ஓடிவிட்ட ராகுல் குறித்து, முன்னாள் காங்கிரஸ்காரர் கூறுவது சரிதான்.
ஒருகாலத்தில் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் இப்போது 1.8 % வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது பரிதாபம்தான். மோடி கூறுவது போல காங்கிரஸ் இல்லாத பாரதம் நோக்கி மக்கள் பயணிக்கத் துவங்கிவிட்டதையே திரிபுரா முடிவுகள் காட்டுகின்றன. அதேபோல, இடதுசாரிகளின் செங்கோட்டைகளுள் ஒன்றான மேற்கு வங்கம் ஏற்கனவே தகர்க்கப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது கோட்டையும் திரிபுராவில் தகர்க்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் கேரளத்துடன் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” கோஷத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
கேரள முதல்வர் பிணாரயி விஜயன் இனியேனும் அரசியல் எதிரிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடாமல் நல்லாட்சி நடத்துவது அவருக்கு நல்லது. இல்லையெனில், அங்கும் தாமரை மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மொத்தத்தில் வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவின் பாதம் அழுத்தமாக பதிந்துவிட்டது. இனியும் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்படாது. அதிக அளவில் பிரிவினை குறுங்குழுக்கள் உள்ள வட கிழக்கில் பாஜகவின் ஆதாரம் கூடுவது தேசத்தின் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.
நால்வருக்கு சமர்ப்பணம்!
இந்த நல்ல நேரத்தில் துயரமான ஒரு நினைவைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
1999 ஆகஸ்ட் 6-இல் திரிபுராவில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நால்வர் என்.எல்.எஃப்.டி. பிரிவினைவாதிகளால் பங்களாதேஷுக்குக் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க வாஜ்பாய் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில், அங்கு அதிகார வர்க்கமும், ஆளுங்கட்சியும் பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக இருந்தன. கடுமையான சித்ரவதைகளுக்குப் பிறகு அவர்கள் நால்வரும் கொல்லப்பட்டதாக 2000 நவம்பரில் தெரிய வந்தது.
அந்த நால்வர்: வடகிழக்கு பாரதத்தின் ஆர்.எஸ்.எஸ். ஷேத்திர கார்யவாஹ் ஷியாமல் காந்தி சென்குப்தா, அகர்தலா விபாக் பிரசாரக் சுதாமய் தத்தா, ஜில்லா பிரசாரக் சுபாங்கர் சக்கரவர்த்தி, தெற்கு அசாம் பிரசாரக் தீபேந்திரநாத் தேவ் ஆகியோர்.
வனவாசி கல்யாண் ஆசிரமம் வனவாசி மக்களை மேம்படுத்த சேவை செய்து வரும் அமைப்பு. திரிபுராவில் பழங்குடியின மக்களின் தொலைதூரக் கிராமங்களில் இந்த அமைப்பின் பணிகளை மேற்பார்வையிடச் சென்றபோதுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நால்வரும் -அவர்கள் நால்வருமே பிரம்மசாரிகள்- பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர்!
பல்லாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் சகோதர இயக்கங்களும் நிகழ்த்திய தியாக மயமான பணிகளுக்குக் கிடைத்துள்ள மதிப்புமிகு பயனே, தற்போது பாஜக பெற்றுள்ள வெற்றியின் ஆதாரம். 2000—இல் பலியான இந்த நான்கு உத்தம ஸ்வயம்சேவகர்களுக்கும் இன்றைய பாஜகவின் திரிபுர வெற்றி சமர்ப்பணம்.
//7. தமிழகம் (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)//
அடுத்த தேர்தலில் ஆட்சி என்று மாற்ற இன்னும் நம்பிக்கை வரவில்லையா? கூட்டணி ஆட்சி யாரோடு?
தொடரும் பாரதீய ஜனதாவின் வெற்றி யாத்திரை நம்பிக்கையளிக்கிறது. இடது சாரிகள் வன்முறையினாலும் வாக்குச் சாவடிகளைப் பிடிப்பதாலும்தான் தொடர்ந்து வெற்றிபெற்று வந்தனர். இந்த நிலை முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் கையாளும் முறை ஹிந்துக்களைப் பிரிப்பது. இதை அண்மையில் குஜராத்தில் பார்த்தோம். இதன் இன்னொரு அத்தியாயம் இப்போது கர்னாடகாவில் அரங்கேறி வருகிறது.அங்கு லிங்காயத்துகளை சிறுபான்மையினர் என அறிவிக்கும் முயற்சி நடந்து வருகிறது.ஹிந்துக்கள் மட்டுமே ஜாதி, மொழி, இனம் ஆகிய பெயர்களில் பிரிக்கப்பட்டு வருகிறார்கள். இதை அவர்கள் இன்னமும் உணரவில்லை.
தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளாக பிரிவினைவாதம் அரசுக்கொள்கையாகவே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. வெளிப்படையாக திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டாலும் திராவிடம் என்ற பெயரில்தான் அரசியல் நடக்கிறது.கல்வித்துறையிலும் இது ஊடுருவி, ஆண்டுதோறும், லட்சக் கணக்கான இளைஞர்கள் மூளை சலவைக்கு ஆளாகிறார்கள். இன்று இத்துடன் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெயரில் புதிய சக்திகள் தலைதூக்க முயற்சிக்கின்றன. [இவை அரசியல் சாசனப்படி சரியாகுமா என்பதை யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.]மத்தியில் பாரதீய ஜனதா இருந்தாலும், ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு எதிராக வன்முறை அவிழ்த்துவிடப்படுகிறது.
ஒருகாலத்தில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டுமே பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தன. இரண்டுமே காலை வாரின. அவர்களுடன் கூட்டுசேர்ந்தது தார்மீக அடிப்படையில் சரியே அல்ல. இந்த நிலையில் அமித் ஷாவின் மிகப்பெரிய சோதனைக்களமாக தமிழ்நாடு இருக்கும்.
.
//ஒருகாலத்தில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டுமே பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தன. இரண்டுமே காலை வாரின. அவர்களுடன் கூட்டுசேர்ந்தது தார்மீக அடிப்படையில் சரியே அல்ல. இந்த நிலையில் அமித் ஷாவின் மிகப்பெரிய சோதனைக்களமாக தமிழ்நாடு இருக்கும்.//
தமிழக்த்தைப் பிடிப்பது மிகச்சுலபம் பாஜகவுக்கு. பாஜக ஓர் இலக்கண சுத்த அரசியல் கட்சி. எங்கு எதைச்செய்ய வேண்டுமோ அதைச்செய்வார்கள்; கட்டுப்பாடே அவர்களுக்கு இல்லை. கிருத்துவர்களை வைத்தே கிருத்துவர்களை திரிப்புராவைத் தவிர்த்து மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும், திருப்புராவில்ன் காங்கிரசுக்காரர்களைத் தம் பக்கம் இழுத்து காங்கிரசை அடியோடு ஒழித்து கம்யூனிஸ்டுகளை விரட்டிவிட்டார்கள்.
தமிழகத்தில் எவருமே பாஜவுக்கு எதிரிகள் கிடையாது – பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பைத் தவிர. ஆனால் தி க அரசியல் கட்சியன்று. அதன் துணையை எக்கட்சிகளும் நாடாது. நாடிவர்களும் வெறும் உதட்டளவில்தான். பார்ப்பன எதிர்ப்பு என்பது இன்று அரசியலில் வாக்கு வங்கியாக இல்லை.
அதிமுக என்ற கட்சி ஜயலலிதாவோடு ஒழிந்துவிட்டது. இன்றிருப்பது ஒரு பதவிக்காக ஒட்டிக்கொண்டு வாழும் ஓர் கூட்டம். பாஜகவின் கைப்பாவை. மோடி சொல்லித்தான் செய்தேன் என்று ஓபனாக ஓபிஎஸ் போட்டுக்கொடுத்த பின்னர் வேறென்ன பேச?
இரஜினி ஒரு ஸ்லீப்பர் செல். கமல் இங்குமில்லை; அங்குமில்லை. பேசியடங்கிவிடுவார்.
தி மு கவின் ஸ்டாலினிடம் பார்ப்பன மற்றும் இந்து எதிர்ப்பே இல்லை. மதிமுக, பா ம க – முன்பே பாஜவிடன் தோழமையுடன் இருந்தவர்க்ளே. அன்புமணிக்கு ஒரு பதவி நிச்சயமென்றால் இராமதாசு பாஜகவிடன் சரண்டையத்தயார். திருமாவளவனை ஏறகனவே அண்ணன் என்றழைக்கும் கட்டுரை இங்கேயே வந்திருக்கிறது. தாராளமாக இழுத்துக்கொள்ளலாம். புதிய தமிழகம் கிருஸ்ணசாமி ஏற்கன்வே பாஜவிடன் வந்து விட்டார். ஆக, தலித்துகள் பிரியவேயில்லை. சீமான் நடத்துவது ஓரங்க நாடகம். அவர் ஒரு ஸ்லீப்பர் செல். தமிழன் மட்டுமே என்று சொல்வது பாஜகவுக்குச் சாதகமே. பாஜகவின் அவர் ஏற்கும் தமிழர்கள் நிறைய பேர் இருக்க, திராவிடர்கள் (தெலுங்கர், கன்னடியர்) வேண்டாமென்பது ஒரு பெரும் இழப்பு பாஜவுக்கு இல்லை. அவர் தனிநாடு கேட்கவில்லை எனபதைத் தெரிக.
ஆக, ஒட்டுமொத்தம் தமிழகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜவை ஆதரிக்கும். அடுத்த தேர்தலில் ஓர் கூட்டணி நாடகம் நடாத்தி ஆட்சியில் ஒரு கை வைத்து அதற்கடுத்த தேர்தலில் தனியாகவே ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். தமிழகம் பாஜகவுக்கே. சோதனைக்களமே தமிழகம் கிடையாது. It will be a cakewalk.
என இப்போதே என்னென்ன் செய்ய வேண்டும் ஆட்சிவந்து என்று பரையாரிட்டு லிஸ்ட் போடலாம்.
ஐயா நஞ்சப்பா அவர்களின் கருத்து உண்மை.மக்களை மொழி அடிப்படையில் ஆழமாக பிரித்து வைத்து அரசியல் செய்து மக்களை அடிமைப்படுத்தி விட்டாா்கள் என்றே நினைக்கின்றேன். மக்களை தமிழ்-திராவிட கோஷங்களில் இருந்து பிரிப்து கடினமான பணியாகும்.தமிழ் கோஷத்தோடு இவர்கள் மக்கள் மனதில் கொள்ளைக்காரர்கள் என்றே பெயர் பெற்றுள்ளார்கள்.ஒருவனையாவது கண்ணியமானவனாக தியாகியாக பண்பட்டவனாக உண்மையானவனாக மக்கள் காணவில்லை.திராவிடம் தமிழ் கோசம் எல்லாம் இவர்கள் அடிக்கும் கொள்ளையில் இருந்து மக்களின் கவனத்தை வேறு திசைக்கு திசை திருப்பும் ஒரு தந்திரம்தான்.
இது மக்களுக்கு நன்கு தொியும்.ஆகவே பாரதிய ஜனதா சிரமம் எடுத்துக் ககொண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.தமிழ்நாட்டில் காவிக் கொடி பறக்கும்.நாம் கண்டு ஆனந்த கண்ணீர் வடிக்கலாம்.
த்ரிபுராவில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க கார்யகர்த்தர்கள் கொடுத்த பலிதானம் மற்றும் கட்சி விஸ்தரிப்புப் பணிகளை அயராது திட்டமிட்டபடி மேற்கொண்டு அடிமட்டத்தொண்டர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றிய சங்க ப்ரசாரக் ஸ்ரீ சுனில் தேவ்தர், வடகிழக்கு மாகாணங்களின் பொறுப்பை சிறப்புற வகிக்கும் ஸ்ரீ ஹிமந்த பிஸ்வ சர்மா போன்றோரின் தொடர்ந்த பங்களிப்பினால் த்ரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாகாணங்களில் பாஜக வினரால் ஆட்சிக்கு வர முடிந்துள்ளது.
\\ மோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு, அதன் தலைவரான அமித் ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி. \\
ஜனசங்க காலத்திலிருந்து…………. ஒவ்வொரு வருஷமும் ………..மற்றைய க்ஷேத்ரங்களில் சங்கப்பங்களிப்பு மற்றும் வளர்ச்சி எப்படி அகிலபாரத கார்யகாரிணி சபாவால் தொடர்ந்து ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட்டு வருகிறதோ அவ்வாறே “அரசியல்” என்ற அரங்கிலும் நமது செயற்பாடு எப்படி என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெற்றியை அடுத்தும் தோல்வியை அடுத்தும் …………. வெறும் பேச்சுக்காக வெற்றி தோல்விகள் விவாதிக்கப்படாமல் ………… வெற்றி தோல்விக்கான காரணிகள் கார்யகாரிணி சபாவிலும் கட்சியிலும் செம்மையாக விவாதத்துக்கு உள்ளாகி……….. அடுத்த தேர்தலை குறைகள் களையப்பட்ட திட்டங்களுடன் தொடர்ந்து பாஜக சந்தித்து வந்துள்ளது.
நரேந்த்ரபாய் மற்றும் அமித்பாய் இவர்களின் ஜோடி இந்த செயற்பாட்டை இன்னமும் செழுமைப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. அடுத்த தலைமுறையை இவர்கள் பாஜக விற்கு தயார் செய்கிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலும் சங்க கார்யகர்த்தர்களுக்கும் பாஜகவினருக்கும் ஒரு பரீக்ஷையே. அவ்வாறே அதையடுத்து அமையும் அரசாங்கமும். ராமஜென்ம பூமி இயக்கத்துக்குப் பிறகு பாஜக ஆட்சிகள் பல மாகாணங்களில் அமைந்த போது இடதுசாரியினர் அதைக் கேலி செய்தனர். வெறும் அதிர்ஷ்டத்தின் மூலம் அடைந்த வெற்றி இது; ஒரு முறை பதவிக்கு வந்துள்ளனர்; மேற்குவங்காளம் மற்றும் த்ரிபுரா போன்ற மாகாணங்களில் நாங்கள் ஆட்சி செய்து அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவது போன்று பாஜகவினரால் என்றும் அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று எள்ளி நகையாடினர். அந்த நகையாடலையும் தவிடு பொடியாக்கி மத்யப்ரதேசம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மாகாணங்களில் அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் தன்னை நிரூபித்துள்ளது பாஜக.
சங்கப் பின்னணி உள்ள சில பொறுப்பாளர்கள் சறுக்கியதும் சங்கப்பின்னணி இல்லாதவர்கள்……… ஆனால் பாஜக வில் இணைந்து சங்க கார்யகர்த்தர்களொடு ஒருங்கிணைந்து லக்ஷ்யத்திற்காகப் பாடுபடுதலும்………….என இந்த நீண்ட பயணத்தில் ஜனசங்கம் மற்றும் பாஜக கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய. இந்தப் பயணம் இன்னமும் நிறைய வெற்றிகளைப் பெற்று பாரதமாதாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்.
வெற்றிவேல்.
தமிழ்நாட்டில் காவிக் கொடி பறந்து நல்லகாலம் பிறந்து விடுமே என்ற பயத்தினால் ராகுல் காந்தி அரசியல் கோமாளியாக மாறி உளறி கொட்டுகிறார்.
BJP can definitely not become a force to reckon with in TN, forget about coming to power. Even if they align with either of the 2 Dravidian parties, they will not win even a few seats.
Also most of the dravidian parties will hesitate to align with the BJP now (though they have done so earlier) for fear of losing the minority vote bank, however small it may be.
State BJP unit does not have a charismatic/effective BJP leader who can function effectively. Also, the BHP has a tag of a “north indian party” which they will find difficult to shake off.
Of late, the BJP has earned a very bad name for opposing TN’s interests – cauvery water, methane, farmers’s suicide, NEET etc.,
\\ BJP can definitely not become a force to reckon with in TN, forget about coming to power. Even if they align with either of the 2 Dravidian parties, they will not win even a few seats. \\
த்ரிபுரா மற்றும் ஆஸாமிலும் அப்படித்தான் ஊடகங்களும் அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கணித்தன. அவ்வாறே தமிழகத்திலும். ஊடகத்தினர் பரப்புரை செய்யும் செய்தி அல்லது 200 ரூபாய்க்கு சமூஹ ஊடகங்களில் மீம்ஸ் பரப்புபவர்களின் செயற்பாடு என்பது வேறு. களத்தில் நேர்மையாகச் செய்யப்படும் பணி என்பது வேறு. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற லக்ஷ்யத்தில் கட்சி செயற்படுகிறது. செயற்பாடுகளில் குறைகள் நிச்சயம் இருக்கலாம். அவை களையப்படும்.
\\ BJP can definitely not become a force to reckon with in TN, forget about coming to power. Even if they align with either of the 2 Dravidian parties, they will not win even a few seats. \\
இந்த குறைகளெல்லாம் பாஜக ஆட்சிக்கு வராத மற்றைய மாகாணங்களிலும் இருந்தது. அதையும் மீறியே அங்கு பாஜக ஆட்சிக்கு வந்தது. மற்றைய கட்சிக்கு இல்லாத ஆனால் பாஜகவிடம் மட்டிலும் இன்றைக்கு இருக்கும் பெரும் சொத்து முனைப்புடன் களப்பணி செய்யத் தயாராக எப்போதும் சன்னத்தமாக இருக்கும் ஒரு பெரும் இளைஞர் படை. இந்த ஒரு சொத்து முறையாக வழிகாட்டப்பட்டு லக்ஷ்யத்தை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. த்ராவிடக் கட்சிகளில் ஒரு நாப்பது ஐம்பது வருஷம் முன்னர் இருந்தது போல இப்போது கட்சிக்காக வேலை செய்ய யாரும் தயாராக இல்லை. க்வார்ட்டருக்கும் பிரியாணிக்கும் மட்டிலும் வேலை நடக்கிறது.
\\ Of late, the BJP has earned a very bad name for opposing TN’s interests – cauvery water, methane, farmers’s suicide, NEET etc., \\
மறுபடியும் ஒரு பிரச்சினையை ஊடகம் எப்படி பரப்புரை செய்கிறது. எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து காசுக்காக எப்படி வேலை செய்கிறார்கள் என்பது வேறு. நிதர்சனம் முற்றிலும் வேறு. மீத்தேன், ந்யூட்ரினோவுக்காக பிரியாணிப் போராளிகளின் போராட்டம் வேறு நிதர்சனம் வேறு. தேவையற்ற பயபீதி களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அ கு அய்யாக்கண்ணுப் போராட்டமெல்லாம் வெறும் நாடகம் என்பது தமிழக பொது ஜனங்களுக்கு நன்றாகவே தெரியும். த்ராவிடர்களால் நாசம் செய்யப்பட்ட கல்வித்துறையால் கசடாக்கப்பட்ட மக்கு மாணவர்கள் நீட்டுக்கு எதிராகத் தான் குரலெழுப்புவார்கள். எல்லா மாணவர்களும் நீட்டுக்கு எதிராக இல்லை என்பது நிதர்சனம்.
TN’s interest
தமிழர்கள் இந்தியனாக இருக்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு வெறுப்பின் மீது உருவாக்கபட்ட திராவிட பிரிவினைவாதிகளின் பிரசாரமே தமிழ்நாட்டு நலன்கள் என்கின்ற நிலஅதிபதி ஆடி கார் அய்யாக்கண்ணுவை திரு மோடி அவர்கள் சந்திக்கவில்லை
நீட்தேர்வு இல்லாமல் தகுதியற்ற தமிழ் மருத்துவர்கள் உருவாக வேண்டும் நிலத்தடி நீரை எடுத்து தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றுகிறார்கள் என்று நல்ல பல திட்டங்களை எதிர்த்தல் போராட்டம்… இப்படி பல.
ஒரு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை இயற்பியல் ஆசிரியா் தோ்வு செய்ய நோ்முகத்தோ்வு நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 12 . அவர்களிடம் குருவிவார்ஃslingshot/caterpelt செயல்படும் விதத்திற்கு இயற்பியல் கோட்பாடுபடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டேன். 11 பேர்கள் முழித்தார்கள். ஒரு கல்லை ரப்பா் கயிறுகள் வேறு வேறு வேறு திசைகளில் இழுக்கும் போது கல்resultant force எங்கே போகும் ? விசைகளின் இணைகரவிதி என்று 11 வகுப்பு பாடத்தில் உள்ளது.இதைச் சொல்ல 11 பேருக்கு தகுதியில்லை. எம்எஸ்சி பிஎட் பட்டம் பெற்ற இவர்களது இயற்பியல் அறிவின் ஆழ்ம் என்ன ? NEET தோ்வு முதுகலை பட்டபடிப்பிற்கும் வேண்டும். தகுதியை போற்றாவிட்டால் தகுதியானவர்கள் பதவிக்கு வரவில்லையெனில் மாணவர்களின் தரம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும். அரசு பள்ளிகளில் வேலைஆசிரியா் பணிக்கு வாய்ப்பு பதிவு முன்னுரிமையை கைவிட்டு போட்டி தோ்வு மூலம் ஆள் தோ்வு செய்ய அரசு துவங்கியது அதிக நன்மையை கொடுத்து வருகின்றது.ஆசிரியா் தொழிலுக்கு நன்கு படித்த இளைஞா்கள் முன் வருவார்கள்.நல்லஅறிவு படித்த மாணவனை பொறியாளா் ஆகு மருத்துவா் ஆகு என்ற கருத்தை முன்னிலை படுத்துவதைப் போல் ஆசிரியா்ஆகு.நன்கு படித்து தோ்வு எழுதினால் உடனே வேலை கிடைக்கும் என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும். அப்போதுதான் நல்ல தகுதியான ஆசிரியா்கள் கிடைப்பார்கள். தமிழகம் உருப்பட கிடைக்க வேண்டும்.
கல்லூரிகளில் இயற்பியல் மாணவர்கள் Linear dynamics , rotational dynamics என்று விரிவாக படிக்கத்தான் செய்கின்றார்கள்.படித்ததை அப்ளை செய்து விளக்க தொியவில்லை.ஆனால் NEET/JEE நுழைவு தோ்வுகள் சம்பந்தமான புத்தகங்களை படித்த ஆசிரியர்கள் இது போன்ற கேள்விகளை சுலபமாக கையாள முடியும்.குருவிவாருக்கு சரியான விளக்கம் அளித்த நபர் அப்படி கூடுதல் புத்தகங்களை சொந்த ஆா்வம் காரணமாக படித்திருந்தார். அவரையே தோ்வு செய்தேன். புகுமுக வகுப்ப திருச்செந்துர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தேன். ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் திரு நாராயணன் அவர்கள் மாணவர்கள் பேரவையை துவக்கிவைத்து அருமையாக உரையாற்றினார்கள். 1975ல் நான் கேட்ட அந்த உரையில்
”One who does not read has mo more advantage than one who cannot read ”
தொடா்ந்து படிக்காதவனுக்கும் தற்குறிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
”தொடா்ந்து படிக்காதவனும் தற்குறிதான் ”
என்று அருமையாக உரையாற்றினார்கள்.
என்மனதில் இந்த கருத்து ஒரு வரி இன்றும் அழியாமல் verbatim நினைவில்
உள்ளது.
அதை நான் இன்றும் பின்பற்றி வருகின்றேன் என்பது மனதிற்கு மகிழ்ச்சியை
அளிக்கின்றது.
Krishnakumar,
On the NEET issue, yes it is essential but why has the central govt not come out with a clear cut clarification in whether it is going to be there or not?
As for the farmers agitation, what is the problem in meeting them for a few mins & accepting the memorandum?. Of course, the PM is going to ignore it (like he usually does) but when he has the time to meet actress gautami for 20 minutes, surely I think this is a bigger issue.
On cauvery, it is as clear as water that BJP is supporting Karnataka since the assy elections are round the corner.
As for methane project, there is no convincing explanation from the central govt.
On the excavation done in kathirmanagalam, what was the need to shift the director & suddenly stop the work? There is no answer.
Simply blaming the media is not going to work.
Modi is hardly in India & even when he is here, he hardly attends Parliament. If this is the respect he is going to show to the house, then GOD save India.
\\ Simply blaming the media is not going to work. \\
sanjay, it does not stop with blaming the media. It has been made highly irrelevant. Media is nothing more than just another entertainment. Its trustworthiness has nosedived after the popularity of social media.