தாமிரபரணி புஷ்கரம் என்கிற மகத்தான நிகழ்வுக்கு முட்டுக்கட்டைகள் திடீரென தமிழ்நாடு அரசுத்தரப்பிலிருந்து முளைக்கின்றன. இது மிகவும் கண்டனத்திற்கும் வெட்கத்திற்கும் அருவருப்புக்கும் உரிய விஷயமாகும்.
இந்த நிகழ்வானது பாரத நாடெங்கும் தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு புனிதநீராடல் விழாக்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல. கும்பமேளா, புஷ்கர மேளா, உஜ்ஜயினி மாக மேளா, நர்மதை அர்த்த கும்பமேளா, கோதாவரி புஷ்கரம் ஆகிய அண்மைக்கால நிகழ்வுகளின் போது உத்திரப்பிரதேச, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச, குஜராத், ஆந்திரப் பிரதேச மாநில அரசுகள் (எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும்) மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி என்று பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து தந்தன. இஸ்லாமிய தாஜாவாதத்தில் (appeasement) ஊறிய கேடுகெட்ட மம்தா பானர்ஜி அரசு கூட மேற்கு வங்கத்தில் கங்கா சாகர் மேளாவின் போது ஓரளவு சுமாராகவே ஏற்பாடுகளை செய்தது. இந்த அனைத்து மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கோயில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள கூடிப் பேசி பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த விழாக்கள் நடந்தேறுகின்றன. முதலமைச்சர்களே கூட கலந்து கொள்கிறார்கள். அத்தகைய நல்ல முன்னுதாரணத்தை கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தின் போது தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்தது. இப்போது என்ன ஆயிற்று?
இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் கோயில்களின் வருமானத்தைக் கொள்ளையடித்து வரும் தமிழ்நாடு அரசுக்கு இந்தப் புனித நீராடல் விழாவைத் தான் முன்னின்று நடத்தவேண்டும் என்ற பிரக்ஞையும் முனைப்பும் சிறிது கூட இருக்கவில்லை. இதற்காகவே இ.அ. துறையைக் கட்டிவைத்து உதைக்கவேண்டும். அந்த மெத்தனத்தையாவது பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பல்வேறு திருமடங்களும் ஆன்மீக அமைப்புகளும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து விழாவை சிறப்பாக நடத்துவதற்கு “அனுமதி” கேட்கும்போது, அதைக்கூட நொள்ளையான காரணங்களைக் காட்டி திருநெல்வேலி ஆணையாளர் மறுத்திருக்கிறார். கொடுமை.
இணை ஆணையரின் அந்த “ஆணையை”ப் பார்த்தேன். அதில் வெளிப்படும் கேனத்தனமும் திமிரும் எரிச்சலூட்டுகிறது.
“குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகமான பக்தர்கள் செல்ல பாதைவசதி இல்லை; இடவசதியும் இல்லை” என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார் ஒரு அரசு அதிகாரி. கந்த சஷ்டி, வைகாசி விசாக விழாக்களின் போது திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகமாகக் கூடும் நெல்லை மாவட்டக் கோயில் இது தான். 1990களில் கூட கோயிலுக்கு முன்பாக மனதைக் கொள்ளை கொள்ளும் மணல்மேடு இருந்தது. அதனை முழுவதுமாகத் தோண்டி மணல் கொள்ளையர்கள் அழித்த பிறகு, இப்போது சேறும் சகதியும் முட்புதர்களும் பரவிய குப்பை மேடாக ஆகி விட்டிருக்கிறது. அட, இந்த விழாவை முன்னிட்டாவது அதைத் தூய்மை செய்து பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஆக்கலாம் என்று இந்த ஆணையருக்கு புத்தி போகவில்லை. அரசின் கையாலகாத் தனத்தை முரசறைவது தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது.
இதே போன்ற காரணம் கொக்கிரகுளம் பிள்ளையன் படித்துறை விஷயத்திலும் சொல்லப் பட்டுள்ளது. அங்கு நீர்ச்சுழலில் ஏற்கனவே பலர் மூழ்கி விட்டார்களாம், அதனால் பாதுகாப்பு இல்லையாம்.. ஆமாமாம், கங்கையையும் கோதாவரியையும் நர்மதையும் விட 4 மடங்கு பெரிய நதியில்லையா தாமிரபரணி? 🙂 இந்த மானங்கெட்ட ஆட்சியாளர்களை ஏன் தர்ம ரூபிணியான தாமிரபரணி இன்னும் ஒரேயடியாக மூழ்கடிக்கவில்லை?
“புஷ்கர விழாவிற்காக சுவாமியை எழுந்தருளச் செய்வது ஆகம விதிகளுக்கு மாறானது; எனவே அதைச் செய்யக் கூடாது” என்று நினைவூட்டுகிறார்களாம். நல்ல வேடிக்கை. பாதைவசதி கூட செய்துதரத் துப்பில்லாத அரசுத் துறைக்கு ஆகம விதிகளைப் பற்றி என்ன கவலை? இது ஆணையரின் வேலையா? அதை அர்ச்சகர்களும் பக்தர்களும் பார்த்துக் கொள்ளட்டும். நீங்கள் உங்கள் வேலையை முதலில் ஒழுங்காகச் செய்யுங்கள்.
நெல்லைவாழ் மக்களும் ஆன்மீக அமைப்புகளும் இணைந்து ஆணையர் தனது உத்தரவைத் திரும்பப் பெறச்செய்ய வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் நீராடி மகிழ்ந்த நதியின் படித்துறைகளில் நாம் இறங்குவதை யாரும் தடுக்க முடியாது.
அக்டோபரில் தாமிரபரணி புஷ்கரத்திற்கு குடும்பத்துடன் வருவதற்கு ஏற்கனவே பயண முன்பதிவுகள் எல்லாம் செய்துவிட்டேன். குறுக்குத்துறையில் தான் முதல் குளியல், பிறகு சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருப்புடைமருதூர், பாபநாசம் என்று நீராடத் திட்டம். காவல்துறை தடுத்தால், குடும்பத்துடன் கைதாவதற்கு நான் தயார்.
அறம் வெல்லும், பாவம் தோற்கும். சத்யமேவ ஜயதே.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
Ishwara’s blessings to you Shri Jadayu sir. Great article. Prayers for you and your family. Thamirabharani Mata Ke Jai
ஆதீனகர்த்தா்கள் ஜியா்கள் அனைவரும் கிராமங்கள் தோறும் சென்று அந்தா்யோகம் நடத்தட்டும்.தாமிரபுஷகரணி என்பதெல்லாம் வீண் பண நேர விரயம். நாட்டில் உள்ள அனைத்து குளம் ஆறுக்கெல்லாம்புஷ்கரணி நடத்த முடியாது.எனவே தாமிரபரணிக்கும் தேவையில்லை. நதிபாயும் வழிகளில் காவலாளிகளை நியமித்து நதிக்கரைகளில் மலம் கழிப்பது ககழுவுவது போன்ற அசுத்தமான செயல்களை தடுத்தால் போதும்இஅதைவிட்டுவிட்டு புக்களைப்போட்டு அசுத்தப்படுத்துவானே ? சுடனை கொளுத்தி காற்றை மாசுபடுத்துவானே ?
இதை உடனே நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இது மிகவும் மனவருத்தம் தரும் செய்தி. விழாவிற்கு வரும் கூட்டத்திற்குத் தகுந்தவாறு முன்னேற்பாடுகள் செய்யுங்கள் என சம்பந்தப் பட்டவர்களுக்குச் சொல்லலாம்; அறநிலயத்துறை அரசின் வசமே இருப்பதால், அவர்களும் வசதி செய்துதர கடமைப்பட்டுள்ளார்கள். தடுப்பது சுத்த அயோக்யத்தனம்.
நமது நதிகள் ஜீவ சக்தியுள்ளவை. கோவில்களுக்கு குறித்த சமயத்தில் கும்பாபிஷேகம் செய்வது போல, இந்த நதிகளுக்கு உரிய சடங்குகளும் செய்யப்படவேண்டும். அதற்குப் பலன் உண்டு. சமீபத்தில் காவேரி புஷ்கரத்தின்போது, ‘நதியில் நீரில்லை, புஷ்கரம் செய்கிறார்களாம்’ எனச் சிலர் கேலி செய்தனர். ஆனால் புஷ்கரத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு அபரிமிதமாக நீர் வந்தது! கர்னாடகா நினைத்தாலும் தடுக்கமுடியாத அளவு, அவர்களையும் மீறி நீர் வந்தது! இதுவே புஷ்கரத்தின் மஹிமை! அரசு கபோதி போலும்!
தமிழ் நாட்டில் நீர் வளம் பற்றி ஒரு வழக்கு உண்டு. அரசன் செங்கோலுக்காக ஒரு மழை என்பார்கள்! இந்த அரசின் வக்கிர புத்தியினால் வரும் நீரும் மழையும் வராமல் வளம் குன்றுமோ?
இயற்கை சக்திகளும், ஆறு, மலை போன்ற இயற்கை வளங்களும் ஜீவனுள்ளவை, உணர்ச்சியுள்ளவை. They are conscious Beings, not inanimate material features. அவற்றை அவமதித்தால், அதனால் நமக்குத்தான் கேடுவிளையும்!
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். குறள் 559
நமது நதிகள் ஜீவ சக்தியுள்ளவை. கோவில்களுக்கு குறித்த சமயத்தில் கும்பாபிஷேகம் செய்வது போல, இந்த நதிகளுக்கு உரிய சடங்குகளும் செய்யப்படவேண்டும். அதற்குப் பலன் உண்டு.
——————————–
கும்பாபிஷேகம் செய்யாத கோவில்களுக்கு எந்த குறையும் ஏற்பட்டது கிடையாது. 1978 ஆண்டுகளுக்கு முன்புவரை பார்ப்பனா்கள் பிற்பட்ட இந்து ஆதிதிராவிடா் ஆலயங்களுக்குச் சென்றால் தீட்டு என்று வரமாட்டாா்கள்.மேற்படி ஆயிரக்கணக்கான கோவில்கள் எல்லாம் சக்தியற்றவையாக என்றும் இருந்ததில்லை. முறையான பராமரிப்பு என்ற கருத்தில் கும்பாபிஷேகம் வராது.வரக் கூடாது. இன்றும் பனைஒலை அல்லது ஒரு மட்டை ஒரு மரம் ஒரு சிறு பீடம் அதில் ஒரு விளக்கு வைத்து வழிபாடு செய்து கொண்டு அருள் பெற்றுதான் வாழ்ந்து வருகின்றாா்கள். கும்பாபிஷேகம் செய்தால்தான் கோவிலுக்கு கடவுள் வருவாா் என்றால் கும்பாபிஷேகம் செய்யாத கோவில்கள் அருளாற்றவையா ? ஒருபோதும் இல்லை. கும்பாபிஷேகம் என்பது ஒரு சடங்கு விரும்பினால் செய்யலாம் என்ற ஒரு சடங்கு. கும்பாபிஷேகம் செய்யாவிட்டால் கடவுள் கோவிலுக்குள் வரமாட்டாா் என்பது பச்சை நாத்திகம். ஏமாற்று வேலை.
Why are RSS and its TN outfits silent on this issue? Why are they not agitating?
ஒருசனி பெயா்ச்சியின் போது திருநள்ளாரு நண்பர்களோடு சென்றிருந்தேன். கூட்டமோ கூட்டம் பெருங்கூட்டம்.கோவிலுக்கு 2 கிலோ மீ தூரத்தில் காவல்துறை வாகனங்களுக்கு தடை விதித்ததால் நடந்து திருக்கோவிலுக்கு வந்தோம். குளத்தில் குளித்து விட்டுதான் வரவேண்டும் என்றார்கள்.கோகும் வழியில் சட்டையை கழற்றி விட்டு நல்லெண்ணெய்யை வாங்கி உடல் முழுவதும் தடவிக்கொண்டேன். தலையிலும் நிறைய தேய்த்தக் கொண்டேன். குளத்தைப் பார்த்ததும் அது ஒரு சாக்கடை போல் எனக்கு தோன்றியது. ஒரே நேரத்தில் 100000 பேரக்கு மேல் குளித்துக்கொண்டேயிருக்கின்றாா்கள். விளைவு தண்ணீா் தண்ணீராக இல்லை. நல்லெண்ணெய் கசடு பொங்கி வழிகின்றது. தண்ணீா் வெள்ளை நிறம் கலந்து அருவருப்பாக மாறியிருந்தது. மிகக்குறைந்த அளவில் சுத்தம் சம்பந்தப்பட்ட விதிகளை கடைபிடிப்பவா்கள் கூட அந்த தண்ணீரில் குளிக்க மனம் வராது.
உடல் முழுவதும் எண்ணெய் தடவவில்லையெனில் நான் என் உயிா்போனால் கூட அந்த அழுக்கு சாக்கடை தண்ணீரில் குளிக்க மாட்டேன். விதியே என்று நானும் குளத்தில் இறங்கினால் குளம் முழுவதும் துணிகள் …………கால்பட்ட இடமெல்லாம் துணிகள் —– துணிகள்….துணிகள். என்ன அருவெறுப்பு.அசிங்கம்.அசுத்தம். துணிகளை குளத்தில் விட்டுவிட்டுச் சென்றால் குளத்தின் சுத்தம் கெடுமே என்று யாரும் நினைக்கவில்லை. நான் எதையும் வி்டவில்லை. உடலை அந்த அசுத்தமான நீரில் கழுவிவிட்டு வெளியே வந்து விட்டேன். என் மனம் மிகவும் வேதனைப்பட்டது.
மகிச்சிறிய அளவில் மக்கள் குளிக்கும் போது எந்த அசுத்தமும் தெரியாது.ஆனால் அதீகமாக எண்ணிக்கையில் மக்கள் குளிக்கும் போது அங்கே சாக்கடையாக குளம் மாறிவிடும். 10000 பேர்கள் குளித்த அசுத்தமான தண்ணீரில் அடுத்த 10000 பேர்கள் குளிப்பதும் ….. இந்த நிலை தொடருவதும் எவ்வளவு அசிங்கம்.
—————————————————————————-
குளத்தினுள் குளிக்கக் கூடாது என்றும் வெளியே நின்று கொண்டு குளத்து நீரை வாளி போன்ற ஒரு சாதனத்தில் மோண்டு குளிக்க அனுமதிக்க வேண்டும். அதுமட்டும்தான் சுத்தமாக குளத்தை வைக்க முடியும்.
——————————————————————–
தாமிரபரணி புஷகரமும் அப்படித்தானே இருக்கும்.
ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்களை திரட்டி குளிக்க வைப்பதால் யாருக்கும் என்ன நன்மை விளையாது. அழுக்கு தண்ணீரில் குளிப்பது எப்படி புனிதமாகும் ? தொலைந்து போன சடங்குகளை மீண்டும் உயிர்ப்பிப்பது மூடத்தனத்திற்கும் விரயத்திற்கும் வழி வகுக்கும்.
தசரா திருவிழாவிற்கு குலசை திருச்செந்தூா் பகுதிக்கு நிருபா்களை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டுகின்றேன்.
இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆரம்ப நிலைகளில் அது மிகத்தூய்மையாக இருக்கலாம்.ஆனால் சற்று விரியும் போது அதன்நிலை மிகவும் பரிதாபம் என்றுதான் சொல்கின்றனா். இன்றும் கங்கையை தூய்மைப்படுத்த பல ஆயிரம் கோடி செலவிட்டதாக செலவிடப்போவதாக அரசு அறிக்கைகள் பத்திரிகைகளில் வருகின்றது. புனித நிராடலுக்கு தகுதியான தண்ணீா் அதில் ஒடுகின்றது என்றால் ஆயிரக்கணக்கான கோடி செலவிட தேவையில்லையே!
புனித நீராடல் என்ற கருத்து ஒரு ஏமாற்ற வேலை.புனித நிராடுவது ஒரு சடங்கு.ஆனால் அதன் ஆன்மீக பயன் எதும் இல்லை.சுவாமிவிவேகானந்தா் கூட கங்கை நதி நீா் புனிதமானது என்கிறாா்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை.
பாமரர் வழிபாடு என்ற பட்டியலில் தீமிதிப்பது தீச்சட்டி எடுப்பது சாமி ஆடுவது வேப்பிலை கட்டி ஆடுவது மண் சோறு சாப்பிடுவது தசரா ஆடுவது தலையில் தேங்காய் உடைப்பது அலகு குத்தி ஆடுவது இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் பட்டியலில் புனித நீராடலும் சேரத்தகுதியானது. பிறாமணா்கள் மேற்படி வழக்க வழக்கங்களைச் செய்ய மாட்டாா்கள். முறையான சமய கல்வி பெறாத பார்பனா் அல்லாத மக்கள்தான் இப்படி தரங்கெட்ட சமய அனுஷ்டானங்களில் தங்கள் வாழக்கையை இழந்து கொணடிருக்கின்றாா்கள் என்பது உண்மை.
நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த முடியாது,எனவே தாமிரபரணிக்கும் தேவையில்லை-அ.அன்புராஜ். நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய படங்கள் திரையிடப்பட முடியாத்தால் நகரங்கள், பெரு நகரங்களிலும் திரையிடப்படக்கூடாது. அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களிலும் திருவிழாக்கள் நடத்த முடியாதென்பதால் எந்த வழிபாட்டு ஸ்தலத்திலும் திருவிழாக்கள் கூடாது! என்ற முடிவுக்கு வந்து விடுவோம், சரியா?
அவர் பதிவின் 2 ஆம் பகுதியில் தெரிவித்திருப்பது போல் நீர்நிலைகளை (மட்டுமல்ல சுற்றுப்புறத்தையும்) சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்; காவலர்களை வைத்து மட்டுமல்ல, காவல் இல்லாமலே மக்கள் அதைச். செய்ய வேண்டும், விழிப்புணர்வுடன்! சரியான தாவர எரிபொருளுடன் சுடலை கொளுத்தினால் தவறில்லை. ஆற்றில் தண்ணீர் போதுமான அளவு இருந்தால் பூக்களை அதில் சேர்க்கலாம். நன்றி.
சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில் யஹீதியாக பிறந்து வாழ்ந்து இசுலாமிய காடையா்களால் முஸ்லீம் அல்லாதவா் என்ற ஒரே பாவத்திற்கு கைது செய்யப்ட்டு செக்ஸ்அடிமையாக 19 வயதில் இருந்து 5 ஆண்டுகள் காடையா்களின் முகாமில் தொலைத்து அமெரிக்க படையால் மீட்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நோபல் பரிசில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. போர் காலங்களில் பெண்களுக்கு எதிராக செய்யப்படும் வக்கிரகங்களுக்கு எதிராக ஒர் இயக்கத்தை அப் பெண் நடத்தி வருகின்றாா். அதை குறித்து விரிவான கட்டுரை எழுதலாம்.
N Swaminathan அவர்களுக்கு தங்கள் விமா்சனத்திற்கு நன்றி. திரைப்படங்கள் அனைத்து தியேட்டா்களிலும் வெளியிடுவதையும் தாமிரபரணிபுஷ்கரத்திற்கும் என்ன சம்பந்தம்.
அனைத்து தியேட்டா்களிலும் புதுப்படங்கள் வெளியிட வேண்டாம் என்பது தயாரிப்பாளரின் முடிவு.முடிவு செய்தால் அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள்.அதற்கு நானே நீங்களோ பொறுப்பில்லை.புஷ்கரம் வரும் பக்தர்களில் ஒரு தேவாரம் பாடல் தெரிந்தவா்கள் எத்தனை பேர்கள் என்று புள்ளிவிபரங்கள் எடுத்துப பாருங்களேன். 10 நிமிடங்கள் அமைதியான அமா்ந்து மௌனமாக இருக்கச் சொல்லுங்களேன். எத்தனை போ்களால் இருக்க முடியம் என்பதைப் பாருங்கள். நமது இந்து சகோதரா்களின் லட்சணம் தங்களுக்கு புரியும். எனக்கு அதுதான் வருத்தமாக உள்ளது. 1000 ஆண்டுகள் அடிமையாக இருந்து நமது கலாச்சார அமைப்புகள் பாழாகியது. அதை பழுது பார்க்கும் ஆா்வம் யாருக்கும் இல்லை. மடாதிபதிகள் அனைவரும் சாதி வரம்பிற்குள் தான் இருக்கின்றாார்கள். அவர்களின் செல்வாக்கு இருக்கும் சாதியில் ஒரளவிற்கு சமய அனுஷ்டானங்கள் உள்ளது.மடம் மற்றும் மடாதிபதிகள் இல்லாத சாதிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றாா்கள் என்பது மட்டும் உண்மை அல்ல.மனித வளமில்லாத விரயமான பழக்கவழக்கங்களில் தொடா்ந்து பாமர இந்துக்களை பிடித்து வைக்க நடக்கும் சுதாட்டமே தாமிரபரணி புஷ்கரம். பழைய சமயசம்பிராதங்களை நிறைய மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஸ்ரீநாராயணகுரு ஒருவா்தான் சரியான வழிகாட்டியாக உள்ளாா்.
அன்பர் அன்புராஜ்ஜின் வேண்டுகோள் சரியானதே. முஸ்லிம் மத இயக்கத்தினால் கொடுமை படுத்தபட்ட ஈராக் பெண் நோபல் பரிசுக்கு அறிவிக்கபட்டவர் அவருக்கு நடந்த கொடுமைகளை எழுதினால் முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என்பதினால் தமிழ் பத்திரிக்கைகள் எழுதபோவது இல்லை.முடிந்தவரை இருட்டடிப்பு செய்வார்கள்.
கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்றுஒய்வு பெற்ற IIT பேராசிரியா் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து உயா் தியாகம் செய்துள்ளாா். விபரம் அதிகம் தெரியவில்லை. வாசகர்கள் அறிவது அவசியம் என்றால் பதிவு செய்யலாம்.
இரண்டாம் நாளான இன்று அதிகாலை பிரம்ம மூர்த்தத்தில் பாபநாசம் நதியில் நீராடி சிவ தரிசனமும் முடித்தாயிற்று. மருந்துக்குக் கூட காவலர்களைக் காணோம். நாகர்கோவிலிலிருந்து இரண்டு மணிக்குக் கிளம்பி என்னால் பிரம்ம மூர்த்தத்திற்குள் வர முடிகிறது. அங்கேயே டேரா அடித்திருக்கும் காவலர்களைக் காணோம். அதிகாலை 5 மணிக்கே 2,000 க்கும் அதிகமான பக்தர்கள் நீராடினர். தொடர்ச்சியாகக் கூட்டம் வந்த வண்ணமிருந்தது. அரசின் மெனக்கெடல்கள் என பெரிதாய் எதுவும் தென்படவில்லை. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி , திருப்புடைமருதூர் ஆகிய ஸ்தலங்களிலும் பக்தர்கள் கூட்டம். அரசு இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். நதி மாசடையும் எனக் கூவிய பதர்களும் ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போதுதான் நதி மாசடைகிறதா அல்லது மனமாசு அகல்கிறதா எனத் தெரியும். நன்றி ஜடாயு.
தாமிரபரணிபஷகரம் சிறப்பாக நடைபெற்று நிறைவேறி விட்டது என்று சொல்லலாம். மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது சிறப்புதான். நதிகளின் தூய்மையை பாதுகாக்க இது எவ்வளவு தூரம் உதவும் என்பதை வருங்காலம் காட்ட வேண்டும்.இந்துசமய அறநிலையத்துறை தனது ஒத்துழைப்பை அளிக்கவில்லை.அரசின் இதர துறைகள் நன்கு ஒத்துழைத்ததாகவே அனைவரும் கருத்து சொன்னாா்கள்.
நான் கலந்து கொள்ள வில்லை.