தரையைத் தொடாமல் வரும் கங்கை

kanwariyas-2ங்கள் இல்லத்திலிருந்து முருகன் கோவில்களுக்கு காவடி சுமந்து வந்து வழிபடும் வழக்கம் பற்றி நமக்கு தெரியும். இதைப்போல வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் சிவ பக்கதர்கள் சிவனுக்கு காவடி எடுக்கிறார்கள். மிக கடினமான நீண்ட நடைப்பயணத்துடன் கூடிய இந்த வழிபாட்டில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து கொண்டேயிருக்கிறது. ஸ்ராவண மாதத்தில் திஙகள் கிழமைகளில் உபவாசமிருந்து, பல மைல்கள் நடந்தே செல்லும் இந்த பிராத்தனை பயணத்தில் பங்கு கொள்ளுபவர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே போகிறார்கள். கடந்த ஆண்டு பஙகு பெற்றவர்கள் 50 லட்சத்திற்கும் மேல். இந்த ஆண்டு அதையும் தாண்டும் என்று சொல்லுகிறார்கள்.

நீணட காலமாக சாதுக்களும் சில பக்தர்களும் சென்று கொண்டிருந்த இந்த பயணம் இப்போது ஒரு முக்கிய வழிபாடாகவே ஆகிவிட்டது. டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற இடங்களிலிருந்து அணிஅணியாக இவர்கள் வருவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. கடந்த சில வருடங்களாக பிஹார், ஜார்கண்ட் சட்டீஸ்கர் மாநிலங்களிலிருந்தும் வர ஆரம்பித்திருகிறார்கள்.

ஒரு நீண்ட மெல்லிய மூங்கிலில் இரண்டுபுறமும துணியில் தொங்கும் துளிகள் அதனுள் ஒரு சிறிய பித்தளை குடஙகள். இந்த காவடியை இவர்கள் கான்வர் அல்லது கான்வட் என அழைக்கிறாகள். இப்படி பயணம் செல்பவர்கள் கான்வரியா (काँवरिया) அல்லது கான்வடியா (काँवडिया) என்று அழைக்கப் படுகின்றனர்.

kanwariyas-3

இந்த ஹிந்திச் சொல் “காவடி” என்ற தமிழ்ச் சொல் போலவே இருப்பதால் இரண்டு வழிபாட்டு முறைகளுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. தமிழகக் காவடியில் உள்ளது போலவே, ஆண்கள் மட்டுமே இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

தங்கள் கிராமத்திலிருந்து ஹரித்துவாருக்கு நடந்தே போய் வழியிலேயே காவடி தயாரித்து அதில் ஹரித்துவாரில் நிரப்பிய கங்கை நீரை சுமந்து வந்து அதில் தங்கள் ஊரிலிருக்கும் சிவனுக்கு அமாவாசை அன்று அபிஷகம் செய்கிறார்கள். அப்படி செய்தவர்கள் அன்று வேண்டுவது நடக்குமென்பது நம்பிக்கை. டெல்லியை தாண்டி பஞ்சாப் கிராமங்களிலிருந்தும், மத்திய பிரதேச நகரங்களிலிருந்தும் கூட வருகிறார்கள். 150 மைல் தொலைவிலிருந்து வந்த கிராம மக்களைக்கூட பார்க்க முடிந்தது.

ganga_dashara_at_haridwar2

காவி உடையில் நீண்டவளையக்கூடிய மூங்கில் கம்புகளின் முனைகளில் தொங்கும் பித்தளை பாத்திரங்களில் நிரப்ப பட்ட கங்கைநீருடன் சாரிசாரியாக பயணிக்கிறார்கள். இளைஞர்கள், முதியவரகள், குழந்தைகள் என எல்லா வயதினரும் காவடியுடன் நடந்து வரும் அந்த சீஸனில் இவர்களுக்காக ஹரித்துவாரிலிருந்து டெல்லி வரும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் ஒதுக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்கபட்டு வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க நேரிடகிறது.. சில் நாட்களில் அவை மாற்று பாதையில் திருப்ப படுகிறது. ஹரித்வாரில் இப்போது கும்பமேளா போல இதை கான்வாரி மேளா என அழைகிறார்கள். நிர்வாகம் நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளைச்செய்கிறது.

shiva-statue-in-ganga

சாதரண சிம்பிள் காவடிகள், அலங்காரம் செய்யப்பட்ட ஆடம்பரமான பெரிய காவடிகள், தோளில் சுமக்கும் கங்கை பானைகளை அலங்கரிக்கும் மண்டபங்கள் என பல வகையிலிருக்கும் இவைகளை சுமந்துவரும் பக்கதர்களின் “ஹர ஹர மகாதேவா” கோஷத்தினால் அந்த தேசிய நெடுஞ்சாலையே அதிர்கிறது.

ஊர் போய்சேரும் வரை கங்கை தரையில் படக் கூடாதென்பதால் எந்த காரணம் கொண்டும் காவடியைத் தரையில் வைக்க கூடாது. சுமக்கும் போதும் கங்கை நீர் சிந்தக்கூடாது என்பதை கவனமாக கடைப்பிடிக்கும் இந்த கான்வாரிகளுக்கு உதவியாக ஒருவரும் பயணத்தில் வருகிறார். காவடி எடுப்பவர் ஒய்வு எடுக்கும்போதும் உணவு கொள்ளும்போதும் உறங்கும்போதும் இவர் காவடியை சுமக்கிறார். பயணத்தில் காலணி அணிய அனுமதியில்லை. சிலர் சாக்ஸ் அணிந்திருக்கிறார்கள்.

kanwariyas-4

பக்தர்களில் கிராம மக்கள் மட்டுமில்லை. படித்த நல்ல பணியிலிருக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். முதல் முறை வருபவர்கள் மறு ஆண்டு கட்டாயம் வர வேண்டும் என்பதாலும், வேண்டுவது கிடைத்திருப்பதாலும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிகமாகி கொண்டே போகிறது என்கிறார் டெல்லியில் பணிசெய்யும் ஆசிரியர் சீதாராம சர்மா. இவர் பத்து ஆண்டுகளாக கான்வாரியாய் இருப்பவர். வழியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல இந்து அமைப்புக்கள் உணவு, நீர், மருந்துகள் இலவசமாக் வழங்க ஸ்டால்கள் அமைத்திருகின்றனர். சில் இடங்களில் அடுத்த ஊர்வரை பயணத்தில் பங்கு கொள்கின்றனர்.

சில ஊர்களிலிருந்து பெரிய அணியாக வருவபர்களின் பின்னால் ஒரு பஸ்ஸில் அவர்களுடைய பொருட்களும் உறவினர்களும் வருகின்றனர். ஸ்பீக்கர்களில் பாட்டுகளுடன் அதிரடி நடனங்களுடன் பந்தாவாக வரும் பக்தர்கள் கூட்டத்தையும் அதே நேரத்தில் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் தனது சிறிய மகனை ஒருபக்க காவடியில் உட்காரவைத்து சுமந்து கொண்டு போகும் ஒரு பக்தரையும் பார்க்க முடிந்தது.

கங்கை புனிதமானது என்பதை நாம் அறிவோம். அதை போற்றி சுமந்து தங்கள் ஊருக்கு கொண்டுவந்து ஈஸ்வரனுக்கு அர்ப்பணிக்கும் இவர்களின் பக்தி அதைவிட புனிதமானது.

படங்கள்: வி.ரமணன்

3 Replies to “தரையைத் தொடாமல் வரும் கங்கை”

  1. நர்மதா யாத்திரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சிவனுக்குக் காவடி எடுப்பது பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன். இதை அனைவரும் அறிந்து கொள்ளச் செய்த ரமணன் அவர்களுக்கும் தமிழ்ஹிந்து-வுக்கும் நன்றிகள்.

    இப்போது பக்தர்கள் பசியாற்றுவது புண்ணியம் என்ற எண்ணத்தோடு மக்கள் அன்னதானங்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை என பல லட்சம் மக்கள் கூடும் விழாக்களில் கூட பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. சில பக்தர்கள் அன்னதானமாகப் பெறப்படும் உணவின் அருமை தெரியாமல் வீணாக்குவது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் வருமானத்தில் இத்தனை சதவீதத்தை கோவிலுக்கு செலவழிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதும் இந்துவுக்கு இல்லை.

    ஆனால் ஆபிரகாமிய மதங்கள் 10, 20 சதவீத வருமானத்தை சர்ச், மற்றும் மசுதிக்கு கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி பெறும் வருமானத்தை மத மாற்றங்களுக்கும், ஜிகாதிகளுக்கும் செலவழித்துக் கொண்டு இருக்கின்றனர். இது தான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

  2. இந்த அரிய தகவலை வழங்கிய ரமணன் அவர்களுக்கு நன்றி. இது போன்ற நடை பாதை மிகவும் இனிமையான அனுபவம். நான் மும்பையில் இருந்து நாசிக் செல்லும் பொழுது கூட இது காவி கோடி, அலங்கரிக்க பட்ட சப்பரம் மற்றும் பூஜை பொருட்களை எடுத்து கொண்டு மக்கள் சாரை சாரையாக பல கிலோ மீட்டர் சென்று கொண்டு இருந்ததை பார்த்தேன். அனைவரும் கிராம மக்கள். இந்தியாவின் ஆன்மிகமும் சரி வளர்ச்சியும் சரி கிராமத்தில் தான் உள்ளது. தற்பொழுது உள்ள அரசாங்கங்கள் வளர்ச்சி என்ற பெயரில் கிராமத்தை நகரமக்க முயல்கின்றனர்.

  3. திரு ரமணன் அவர்களின் கங்கைக் காவடி பற்றிய கட்டுரை கண்டேன். ஹர ஹர என்ற முழக்கம் தமிழகத்தில் மட்டுமன்று வடனாட்டிலும் உண்டு என்பது நல்ல செய்தி தான். காவடியைத்தொடக்கி வைத்த இடும்பன் வடக்கிருந்து தான் வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது வழக்கமாயினும் சிவபெருமானுக்கும் அத்தகு வழிபாடு தென் கயிலாயமாக விளங்கும் வெள்ளியங்கிரி மலையில் நடைபெறுகிறது. காவடிகளில் பலவகை மயில் பீலி, தேன், பன்னீர், பால் என. அவற்றுள் தீர்த்தக்காவடியும் உண்டு. காவிரியிலிருந்து பழனி மலைக்கு பங்குனி உத்திரம் சமயத்தில் தீர்த்தக்காவடிகள் செல்கின்றன. காவடிகள் வரும் போது எழுப்பபப் படும் ஹர ஹர முழக்கம் இன்னும் நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.
    நம பார்வதி பதயே ஹ்ர ஹர மஹாதேவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *