தமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்

துரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி அனைத்து திக்கிலும் சுற்றி வளைத்தது போல சர்ச்சுகள் வந்துவிட்டன என்று கூகிள் வரைபடத்தைப் பல நண்பர்கள் பகிர்ந்து ஆவேசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது திடீரென்று நடந்து விட்ட ஒன்றா என்ன? உள்ளூர் மதுரைக்காரர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தானே இது? இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட இந்து புனித பூமியில் மதம், கல்வி, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் படிப்படியாக கிறிஸ்தவத்தின் ஆதிக்கம் பேய்த்தனமாக வளர்ந்து வருவதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்போது குய்யோ முறையோ என்று புலம்பினால்?

மதுரை மட்டும் தானா? திருச்சியில் என்ன வாழ்கிறது? தேவாரத்திலேயே உள்ள திருச்சிராப்பள்ளி என்ற அந்தப் பெயருக்கு இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய தலங்களின் சங்கமம் (திரு + சிரா + பள்ளியாம்..) என்று ஒரு கேனத்தனமான செக்யுலர் விளக்கத்தை அங்குள்ள டாக்சி ஓட்டுனர் உட்பட பொதுமக்கள் மனதிலெல்லாம் பதிய வைத்து விட்டார்கள். தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் ஊர்வலத்தை சர்ச் காரன் தடுத்து நிறுத்துகிறான். நாகர்கோவிலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் – பாவியாகிய உங்களை ஏசு அழைத்து மனந்திரும்பச் சொல்லாத ஒரு குட்டிச்சுவரைக் கூட அங்கு பார்க்கமுடியாது. திருநெல்வேலி – திருச்செந்தூர் – தூத்துக்குடி வழித்தடமே ஒரு வெறிபிடித்த கிறிஸ்தவ corridor ஆகி விட்டது.. சென்னையைப் பொறுத்தவரையில் அங்குள்ள சாந்தோம் என்ற சர்ச் கட்டிடம் 300 ஆண்டுளே முன்பு அங்கு நின்ற கபாலீஸ்வரர் ஆலயத்தை இடித்து அதன்மீது கட்டப்பட்டது என்ற பிரக்ஞை கூட அதைக் கடந்து போகும் ஒருவருக்கும் இல்லை. திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் சுற்றுப்புறமெல்லாம் கிறிஸ்தவ கூடாரமாகிக் கொண்டிருக்கின்றன. சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழகத்தின் ஒவ்வொரு சிறு/பெரு நகரத்திலும் ஊர்களிலும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு துல்லியமாக திட்டமிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களே திமிர்பிடித்து ஆரம்பித்து வைத்த 1980களின் மண்டைக்காடு கலவரத்திற்கான இந்து எதிர்வினையைத் தாண்டி, இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து எங்காவது ஒரு போராட்டமோ எதிர்ப்போ அல்லது அதைத் தடுப்பதற்கான குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த முயற்சிகளோ நடந்துள்ளதா என்றால் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மாறாக, இப்படி ஒவ்வொன்றிலும் நிகழும் கிறிஸ்தவ ஊடுருவலை இன்னும் மிச்சமிருக்கும் தமிழ் இந்துக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும், மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற “செய்தி” தொடர்ந்து சினிமா, ஊடகங்கள், கல்வி நிலையங்கள் வாயிலாக தரப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இது இப்படியே போய்க்கொண்டிருக்க அனுமதிக்கப் பட்டால் இன்னும் சில பத்தாண்டுகளில் அந்த மதுரை சர்ச்சுகளுக்கு இடையில் பொருத்தமே இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் மீனாட்சி என்ற பழைய பாகனிய பெண் தெய்வத்தின் பழைய கோயில் அதே வடிவில் ஏன் அங்கு இருக்கவேண்டும் என்பதை விவாதிக்கும் கருத்தரங்குகள் அந்த சர்ச்களை சுற்றியுள்ள கிறிஸ்தவ பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் நடக்கும். அப்போது அங்கே மிச்சமிருக்கும் தமிழ் இந்துக்கள் திக்பிரமை பிடித்து முழித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்துக்கள் ஒன்றிணைந்து அங்கங்கு நிகழும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைத் தம்மளவில் தடுத்து நிறுத்த இப்போதே முனைந்து செயல்படாவிட்டால் மேலே சொன்னது ஒவ்வொரு ஊரிலும் நிகழும். உங்களுடன் இப்போது இளித்தும் சிரித்தும் பேசிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் சந்ததிகள் வெறிபிடித்து வந்து உங்கள் கோயில்களை இடிப்பார்கள், சிதைப்பார்கள், இந்துவாக நீங்கள் வாழவே முடியாது என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

அதற்கு முன்பு விழித்துக் கொள்ளுங்கள்.

*****

“இப்படி மதம் மாறும் அளவில் ஒருவரின் மன நிலை இருக்கிறது என்றால் நாம் என்ன செய்ய முடியும்? பீடைகள் நம்மை விட்டு ஒழிந்தது என்று இருக்கலாம்” என்று கோபப்படுகிறார் ஒரு நண்பர்.

அப்படியெல்லாம் நாம் விட்டுவிட முடியாது.. விஷயத்தை முழுதாக அறியாமல் ஒழிந்தது என்று கைகழுவுவது இந்து சமுதாய தற்கொலைக்கு ஒப்பானது, அது தர்மமும் அல்ல, ஆன்மநேயமும் அல்ல. தற்போதைய சூழலில் குடும்ப உறவுகளும் பாரம்பரிய இந்து சாதி/சமய அமைப்புகளும் வலுவிழந்து கொண்டு வரும் நிலையில், பல்வேறு குடும்ப/தொழில்/உடல்நல பிரசினைகளில் சிக்கியுள்ளவர்கள் பலவீனமான மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களைக் குறிவைத்து இழுப்பதற்கென்று ஒரு பெரிய படையையே கிறிஸ்தவ அமைப்புகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.. நேரடியான மதமாற்றம் நிகழ்வதற்கு முன் பலவிதங்களில் சமூக, பொருளாதார, உளவியல் அழுத்தங்கள் தரப்படுகின்றன.. ஆசைகாட்டப் படுகிறது. அவற்றை அந்தக் குறிப்பிட்ட நபரை அல்லது குடும்பத்தை சுற்றியுள்ளவர்கள் தான் கண்டுபிடித்து கிறிஸ்தவம் என்ற பிணந்தின்னிக் கழுகின் வாய்க்குள் போகாமல் காப்பாற்ற வேன்டும். சிறிய ஊர்களில் ஒன்றிரண்டு குடும்பங்களை இப்படி ஆக்கி விட்டால், அது ஒரு சங்கிலி விளைவு போல ஆகி மற்றவர்களை எல்லாம் இழுத்துவிடும் நிலை ஏற்படுகிறது. இது குறித்த நேரடியான விழிப்புணர்வை நாம் உண்டாக்க வேன்டும். சும்மா ஆன்மீக ரீதியில் பக்திக் கதைகள் மட்டும் சொல்லிக் கொண்டு, பக்திப் பாடல்கள் மட்டும் பாடிக் கொண்டிருப்பதால்  இதைத் தடுக்க முடியாது. கிறிஸ்தவ தாக்கம் உங்கள் குடும்பத்தில், வீட்டில், சுற்றுப்புறத்தில், ஊரில் வருகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், தடுப்பதற்குமான பயிற்சி தரப்படவேண்டும். ஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு இந்துக் குடும்பங்களிலும், இந்து சமய ஆன்மீக மையங்களிலும், சாதி சமுதாய அமைப்புகளிலும் இந்தப் பயிற்சி தரப்பட வேண்டும். அதுதான் வழி.

******

யிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும் என்று ஆங்கிலத்தில் உள்ள சொலவடைக்கு இந்தப் படம் ஒரு நல்ல சான்று.

ஆதியிலிருந்தே பஜனைக் கோயில் தெருவில் அந்த வீதிக்குப் பேர்கொடுத்த பஜனைக் கோயில் இருந்தது. பின்னர் அத்தெருவில் அப்புராணியாக கிறிஸ்தவர்கள் குடியேறியதையோ நிலம்/மனை வாங்குவதையோ, பின்பு தடாலடியாக கிறிஸ்தவ “வழிபாட்டிடம்” முளைப்பதையோ அங்கு குடியிருந்த இந்துக்கள் ஒருவரும் கண்டுகொள்ளவே இல்லை, அதைப் பற்றிய சொரணை எதுவும் அவர்களுக்கு இல்லை. செக்யுலரிசக் களிமண் மண்டையில் ஏறிய சில இந்துக்கள் ஆகா சர்ச் வரட்டும் என்று அதை வரவேற்றுமிருக்கலாம்.

ஆனால், ஊடுருவும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. மாதாகோவில், பஜனை கோயில் தெரு என்று முகவரியில் இந்து அடையாளம் இருப்பது கூட அவனுக்குக் கடும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் சிலுவையை நாட்டிவிடுவோம் என்று துணிந்து தெருவின் பெயரையே மாற்றி விடுகிறான். இது பழகும் வரை இன்னும் கொஞ்சநாளைக்கு இருக்கட்டும் என்று பழைய பெயர் கீழே அடைப்புக் குறிக்குள் போகிறது. பஜனைக் கோயில் தெரு என்ற பெயர் பலகையிலிருந்து அழிய இன்னும் அதிக நாள் ஆகாது. அதற்கு முன்பே அங்குள்ள பஜனைக் கோயில் அழிந்திருக்கும்.

முதலில் தெருவில் ஒரு சர்ச் கட்டிவிட்டு, பிறகு தெருப்பெயரையே அதைவைத்து மாற்றவேண்டும் என்ற மனநிலைக்குப் பின்னால் உள்ள மதவெறி, ஆக்கிரமிப்பு மனப்பான்மை, இந்து வெறுப்பு எப்படிப் பட்டது என்பதையாவது புரிந்து கொள்கிறார்களா? கேவலம், ஓரு தெருப்பெயரை அராஜகமாக மாற்றுவதைக் கூட தட்டிக் கேட்கக் கூட துப்புக் கெட்டுப் போயிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இந்துக்கள். வெட்கம்!

இந்தத் தெருவில் நடந்ததை அப்படியே கிராமம், ஊர், நகரம், சமூகம் என்ற அளவில் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

*****

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

12 Replies to “தமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்”

 1. கிறிஸ்தவர்கள் ஒரு மனசிந்தனையோடு தங்களின் மதத்தைப் பின்பற்றுபவா்களின் எண்ணிக்கையை ” பழகி, விளக்கம் அளித்து, பிரசாரம்,கல்வி மருத்துவ உதவிகள் செய்து” பரப்பி வருகின்றனா். நாம் பெரிய அளவில் தோற்றுக்கொண்டிருக்கின்றோம்.1000ஆண்டுகளாக சமய கல்வி மறுக்கப்பட்டது.சமூக அமைப்புக்கள் நலிந்தது.ஆனால் அதற்கு எந்த பரிகாரமும் காணவில்லை. காண வேண்டும் என்ற துடிப்பும் இல்லை.குடம் குடமாக பால அபிஷேகம் அது இது என்று வைதீக சடங்கில் ஜமாய்த்துக் கொண்டிருக்கின்றோம்.நமது மனித வளத்தை இழந்து வருகின்றோம்.ஸ்ரீநாராயணகுரு சுவாமி சித்பவானந்தா் வழியில் ஏதேனும் செய்தால் இந்துசமயம் பிழைக்கும். இல்லையெனில் வெகுசீக்கிரம் கிறிஸ்தவர்கள் பெரும் பான்மை பெற்று இந்துக்களை நசுக்கி விடுவார்கள்.
  மேகலயாவில் 85 சதம் கிறிஸ்தவர்கள்.புதிய முதல்வா் பதவியேற்பு விழா அல்லேலூயா முழங்கு நடைபெற்றது. எந்த கழுதையும் அதை தப்பு என்றோ மதசார்பற்றத் தன்மைக்கு எதிரானது என்று விமா்சனம் செய்யவில்லை. 15 சதம் இந்துக்களின் நலன் கௌரவம் காற்றில் போனது. இந்துக்களுக்கு அநாதை நாய்களுக்குள்ள மரியாதை கூட இருக்காது.நமக்கென்ன ரத யாத்திரை அபிஷேகம் என்று தூள் பரத்துவோம்.

 2. ஓரு தெருப்பெயரை அராஜகமாக மாற்றுவதைக் கூட தட்டிக் கேட்கக் கூட துப்புக் கெட்டுப் போயிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இந்துக்கள். வெட்கம்!
  ——————
  மனிதனாக வாழ கற்றுக் கொடுக்கப்படாத சமூகம் இந்து சமூகம்.இந்த அவலநிலைக்கு வெட்கப்பட வேண்டியவா்கள் மடாதிபதிகள்தானே தவிர 1000 ஆண்டுகால கொடுமையை தாங்கிக் கொண்டு இன்றும் இந்துவாக வாழ்கினறார்களே அதை பாராட்ட வேண்டும். சங்கர பீடாதிபதிகள் வைணவ மடாதிபதிகள் ஆதீனங்கள் வேண்டுமானால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்.

 3. ஐயா அன்புராஜ் சொல்லுவது முற்றிலும் தவறு – அது என்ன 1000 – 2000 – 5000 – 10000 ஏலம் விடுவது போல் மனம் போன போக்கில் திராவிடம் பேசுபவர்கள் போல் சொல்லுவது. நமது பாரதத்தில் வெள்ளையர் வருவதற்கு முன்வரையில் சமயம் – சமூக கல்வியும் சேர்ந்த ஒரே கல்விதான் ஜாதி வேறுபாடு இன்றி எல்லோருக்கும் அளிக்கப்பட்டுது. தயவு செய்து தரம்பால் அவர்களின் புத்தகத்தை நூலகம் சென்று படித்துத் தெரிந்து கொள்ளவும். முடிந்தால். அதைப்போல் மடாதிபதிகளைக் குற்றம் சொல்லுவதில் எந்நத நியாயமும் இல்லை. மறைந்த ஜெயேந்திரர் – தயானந்த சுவாமிகள் – அமிர்தானந்தமயி – ஜக்கிவாவுதேவ் – ரவிசங்கர் – என்ற பலர் மதமாற்றத்தைத் தடுக்க பலவழிகளில் பாடுபடுகிறார்கள். ஆனால் அவர்களை ஆக்கப்பூர்வமாக செயல்படவிடாமல் தடுத்துவருவது இந்தத் திராவிட-கிருஸ்துவ கூட்டு என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லா உயர் ஜாதி ஆதீனமடங்கள் திராவிட கட்சிகளுக்கு சலாம் போடும் வேலையைத்தான் செய்கிறார்கள்
  மதமாற்றத்தைத் தடுக்க என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவும்

 4. ஆன்மீக கல்வியை, பள்ளி கல்லூரி மற்றும் ஆலயங்களில் கற்றுத்தரும் ஏற்பாடு உருவாகவேண்டும். அப்பொழுதுதான் நம் சமயத்தை பற்றிய பிடிப்பு மக்களுக்கு ஏற்படும். அத்தகைய சமய பிடிப்பு கொண்டோரை யாரும் மதமாற்ற முடியாது. அதற்கு முன்பு , ‘அடுத்தவர்கள் மதமாறுகிறார்களே’ என்று ஆதங்க படுவதற்கு முன்பு நமது வீட்டை கவனிப்போம். நமது குழந்தைகளுக்கு நம் சமயத்தை பற்றி அறிய தருவோம். ‘யூ டியூப்’ போன்ற காட்சி வலைத்தளங்கள் இந்துக்களுக்கு வரப்பிரசாதம். எல்லோர் வீட்டிலும் ஸ்மார்ட் போன் உள்ளது . அதனை இத்தகைய நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துவோம் . தினமும் 15 நிமிடமாவது அத்தகைய (சேலம் ருக்மணி, தேச மங்கையற்கரசி, இளம்பிறை மணிமாறன், வாரியார் ஸ்வாமிகள், இலங்கை ஜெய ராஜ் , RBVS மணியன் ஜி , வேளுக்குடி கிருஷ்ண சுவாமி , ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமி , மணிகண்டன் ஜி போன்ற எண்ணற்ற சொற்பொழிவாளர்கள்) பக்தி சொற்பொழிவுகளை ஓரிடத்தில் அமர்ந்து நாமும், நம் மனைவி மக்களும் கேளுங்கள் . குடும்பங்களில் சண்டையும் சச்சரவும் வராது. நம் குழந்தைகளிடமும் மகத்தான மாற்றத்தை நாம் கண்கூடாக காண முடியும். இதனை நான் கடைபிடிக்கின்றேன். என் அனுபவத்தையே பகிர்கின்றேன். ஐயா தாணுலிங்க நாடார் சொன்னது போல , ‘இருக்கிறவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக அமையும்’. எங்கள் ஊரில் ஒரே ஒரு ஆலயம் , 13 சர்ச்சுக்கள் . எவனாவது ஒரு கிறிஸ்தவன் எங்களை அணுகி விடட்டும் பார்ப்போம். அவனுக்கு தெரியும், யார் பலகீனர்கள் என்று . கிறிஸ்தவனின் நரித்தனத்தை அத்தகைய ஏமாளிகளிடம் மட்டுமே காண்பிப்பான். துரதிர்ஷ்ட வசமாக நம்மில் அநேகம் பேர்கூட , நம் புத்திரர்களுக்கு எந்திர கல்வியை மட்டும் கொடுத்தால் போதும் என்று இருக்கிறார்கள். இத்தகைய எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். மாற்றத்தை நம் வீட்டிலிருந்து தொடங்குவோம்.

 5. Kanchi Sankara Madathipathi Sri Chandrasekara Saraswathi Senior Guru to Sri Jeyendra Saraswathi, never welcomed Harijans to temples.He was against the admission of all caste people to Major temples. He tried to confuse Mahatma Gandhiji in this regard.
  Sri Jeyendrar ventured to mingle with all shades of Hindu society.But he paid heavily for that.

  Our Madathipathigal must emulate the example of Sri Narayana Guru and Swami Chidbhavananda .But I am sure they would never. Ass may be forthcoming to plough the paddy field, but Our Madathipathigal would never change their attitude. A Muslim Leader invites his fellow Muslim to do prayer/Namas.A christian Leader always invites his fellow men and women to do prayer/Jebam. But OurMadathipathigal would demand salutations on their feet.

 6. முன்வரையில் சமயம் – சமூக கல்வியும் சேர்ந்த ஒரே கல்விதான் ஜாதி வேறுபாடு இன்றி எல்லோருக்கும் அளிக்கப்பட்டுது. தயவு செய்து தரம்பால் அவர்களின் புத்தகத்தை நூலகம் சென்று படித்துத் தெரிந்து கொள்ளவும்.
  ——————————————————————————
  Great lie
  ——————————————————————————–
  எல்லா உயர் ஜாதி ஆதீனமடங்கள் திராவிட கட்சிகளுக்கு சலாம் போடும் வேலையைத்தான் செய்கிறார்கள். They have affinity with a particular caste.They are like a Frog in a well. they do not think about the welfare of other caste Hindus.Sri Ramakrishna Math & Tapovanam has been doing a lot in restoring the confidance and self-respect of downtrodden Hindus. Presidents of Sankara Math of
  Srigeri has done a yeomen service to Tiruchendur Sri Murugan Temple. He has packed the door of the Moolavar with GOLD plates at a cost of Rs.30 lakhs.Is it service ? How Long will the gold plate exist ? If the Gold plates are broken in small pieces and stolen, How to account for that . Let them emulate Sri Narayana Guru and Sri RamakrishnaMath and Tapovanam.

 7. சென்ற வாரம் நடந்ததை முன்னுரையாகக் கூறி விஷயத்திற்கு வருகிறேன்.

  நான் தங்கியுள்ள வீட்டில் தெரிந்தவருடைய பையன் ஒருவனும் தங்கியுள்ளான். விவேகானந்தர் கல்லூரியில் (அக்கல்லூரியின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து) இளங்கலைப் படிப்பை முடித்து சென்னைப் பல்கலையில் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கிறான். ராமகிருஷ்ணர் மீதுள்ள பக்தியினாலும் அம்மடத்தைச் சார்ந்த கல்லூரியில் தங்கிப் படித்ததாலும் அவன் சமயம் கிடைக்கும் போது மடத்திற்குச் செல்வது வழக்கம். அவ்வாறே, சில நாட்களுக்கு முன் சாரதா தேவியார் பிறந்த தினத்தன்று மடத்திற்குச் சென்றான்; வீட்டிற்கு வந்து என்னிடம், “பெரியப்பா, மடத்தில் கிறுஸ்துமஸ் அன்று யேசு படத்திற்கு ஆரத்தி எடுத்தார்களாம்; சர்ச்சில் ஐந்து மெழுகுவத்திகளைத் தாங்கும் விளக்கு மாதிரி ஒரு விளக்கை வைத்து அதில் மெழுகுவத்தி ஏற்றி ஆரத்தி எடுத்தார்களாம். இதோ வீடியோ” என்று எனக்கு வீடியோவையும் காட்டினான். நான் அவனிடம், “டேய், உங்க மடத்திலேயே பல வருஷங்களுக்கு முன் “Why a Hindu accepts Christ but rejects Christianity” என்ற நூல் வெளிவந்தது. இருந்தாலும் இது (ஆரத்தி சமாசாரம்) கொஞ்சம் மிகைப்பாடு தான்” என்றேன். புத்தகத்தை வீட்டில் கண்டுபிடிக்க முடியாததால், அவன் மாலை மடத்திற்கு மீண்டும் சென்ற போது நூல் விற்பனை நிலயத்தில் விசாரித்தான். அவர்கள் கம்ப்யூடரைப் பார்த்து “அந்த தலைப்பில் புத்தகமே இல்லை” என்று கூறிவிட்டார்கள்.

  வீட்டிற்கு வந்ததும் என்னிடம் அவன் விஷயத்தைச் சொல்லவே, எனக்கு அந்நூல் ஸ்வாமி அபேதானந்தர் எழுதியது என்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் அதைச் சொன்னவுடன், அவன் “நான் ஜனவரி 1-ம் தேதி, கல்பதரு தினம் முன்னிட்டு நடக்கும் பூஜைக்குச் செல்வேன். அப்போது கேட்கிறேன்” என்று கூறி 1-ம் தேதி அங்கே மீண்டும் இப்புத்தகத்தைப் பற்றிக் கேட்டுள்ளான். நூலாசிரியர் பெயரையும் நூல் தலைப்பையும் கேட்ட பின், அங்கே பணிபுரியும் பிரம்மசாரிக்கும் இந்நூலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாம். எனவே இருவரும் *** மஹாராஜிடம் (பெயர் கூற விரும்பவில்லை) சென்று விசாரித்தனர். பையன் மடத்தில் படித்ததாலும் ஆரத்தி சமயத்தில் பாடும் பழக்கம் இவனுக்கு இருந்ததாலும் அவர் இவனை அடையாளம் கண்டு கொண்டு “என்ன வேண்டும்” என்று கேட்டிருக்கிறார். இவன் நூல் தலைப்பைச் சொன்னதுமே அவர், “உஷ், சத்தமாகச் சொல்லாதே” என்று சிரித்து, “உனக்கு எதற்கு இந்த புத்தகம்?” என்று கேட்டார். இவனும் “என் பெரியப்பா என்னை இப்புத்தகத்தைப் படி என்று சொன்னார்” என்று என்னை மாட்டி விட்டான். அதற்கு அவர் கூறியது: “இந்த புத்தகத்தை நாங்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டோம். உனக்கு வாங்க வேண்டும் என்றிருந்தால் நீ ஹைதராபாத் மடத்திற்குப் போ. ஒரு வேளை அங்கே கிடைக்கலாம்.” அஞ்சாமையைப் பற்றி அவ்வளவு பேசிய விவேகானந்தரைக் கொண்டாடும் ராமகிருஷ்ணா மடத்தின் இன்றைய அவதாரம் இது!ஏன் இப்படி?

  முன்னுரை நீண்டு விட்டது. விஷயத்தை அடுத்த பதிவில் கூறுவேன்.

 8. Several years back Catholic Arch Bishop Arulappa addressed a meeting at Sri Ramakrishna Math , Mylapore. I visited the Math on that day. I was shocked . For me it is abject cowardice.How can the Swamiji’s of RK Math prevent conversion of Hindus to Christianity ? They give publicity,dignity , respect social status and esteem to chrisitianity and Jesus. Several Christian fanatics pervert the teaching of Swami Vivekananda and quote Swamiji to justify the superiority of Jesus above Indian saints and seers.
  After patition of India into Pakistan, Swami Ranganathananda , famous swamiji, was the president of Sri RK Math Karachi. Swamij was a erudite scholar whose Love for humanity the sky is the limit.But the Pak Government ordered the Math to vacate.Swamiji of rK Math earn money by Selling the work, and pictures of Swami Vivekananda and have taken rest on their oars.The Swamiji expect Hindus to celebrate their presence in public places. They expect respect from the public.Hence they are unable to do more service.
  However they are far more better than any religious Organisations. Let us pray for their change of attitude towards ????

 9. Hello கவுணியன் I thank you very much for your forthright comments on Sri RK Math. Please continue posting your feelings.Swami vivekananda works contain a story about a gentleman who was so rapidly enjoying the beauty of the Moon stars and fell down into a well. That Gentle man is none But Swamiji of RK math.

 10. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் ௯௪௮)

  கிறித்துவம் பரவியதும் பரவுவதும் உயர் (அ-து பார்ப்பன) ஜாதியரின் ஆதிக்கத்தினால் மட்டுமே என்ற ஆங்கிலேய ஆதிக்க / கிறித்துவ வாதத்தை நாம் அனைவரும் நன்கு உள்வாங்கியுள்ளோம். இது சற்று சிந்திக்கப்பட வேண்டியது. பானை களிமண்ணால் ஆனது என்று எப்படி தெரிகிறது? பானை உள்ளது என்றால் களிமண் இருக்க வேண்டும்; எதிர்மறையாக, களிமண் இல்லையென்றால் பானையும் இருக்கக் கூடாது அல்லவா? பார்ப்பனீய ஆதிக்கம் என்கிற களிமண் இல்லாத இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள், வட கோரியா, ஃபிலிபைன்ஸ் முதலான நாடுகளில் கிறித்துவப் பானை கிடைக்கவில்லையா என்ன? ஒரு கற்பனை செய்வோம். தமிழகத்தில் ஜாதிகளே இல்லை என்று வைத்துக் கொள்வோம். மதம் மாற்றம் நடக்காது என்று சொல்ல முடியுமா? கோரிய நாட்டு பௌத்தர்களைக் கேளுங்கள், விடை கிடைக்கும்!

  இது புது வாதம் என்று எண்ண வேண்டாம். “உயர் ஜாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற தாகம் கீழ் ஜாதியினருக்கு மிகவும் தீவிரமாக இருந்தது. அதனால் தான் தான் முகம்மதியம் இந்தியாவில் பரவியது” என்ற வாதத்தை எதிர்த்து ரிச்சர்ட் ஈடன் (அரிஸோனா பல்கலைக் கழக்கத்தில் வரலாற்றியல் பேராசிரியர்) போன்ற பல ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எழுதியுள்ளனர். இவர்கள் ஹிந்து அபிமானிகளும் அல்லர். இவர்கள் கூறுவது என்ன? ஜாதி ஆதிக்கம் மத மாற்றத்திற்குக் காரணம் என்றால் ஜாதி ஹிந்துக்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் முகம்மதியம் வேகமாகப் பரவியிருக்க வேண்டும். ஆனால் முகம்மதியம் விரைவில் பரவியது மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்கத்திலும் தான். இது எப்படி நடந்தது? இன்றைக்கு கிழக்கு வங்க தேசம் முகம்மதிய நாடாக இருப்பதற்குக் காரணம் முகாலய அரசு. முகாலயர், அங்கிருந்த பழங்குடியினருக்குப் (பெரும்பாலும் மீனவர், சிறு பயிர் செய்து உய்ந்தவர்கள்) பணமாகவும், வீடு முதலிய வசதிகளைச் செய்து கொடுத்தும் முகம்மதியர்கள் ஆக்கினர். இதை “The rise of Islam and the Bengal Frontier 1204-1760” என்ற நூலில் ஈடன் புள்ளி விவரங்களுடன் ஆராய்ந்துள்ளார். பணமும், அதிகார வர்க்கத்தின் (முகாலயரின்) ஆதரவுமே முகம்மதியம் வங்கத்தில் பரவியதற்கு முக்கிய காரணங்கள் என்பது இந்நூலிலிருந்து அறிகிறோம் (இதை ஈடன் இப்படிப் பச்சையாகச் சொல்லவில்லை!)

  விஷயத்திற்கு வருகிறேன். இது போன்ற ஆய்வுகள் இன்று நமக்கு மிகவும் தேவை என்பது என் கருத்து. நோயின் காரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிடில், நோய்க்கு மருந்து சரியாக அமையாது. மதுரை, சென்னை போன்ற நகரங்களில் உள்ள ஏழைகள் குடியிருப்புகளில் கிறித்துவ மதமாற்றம் இன்றைக்கு மிகுந்த வேகத்துடன் நடைபெறுகிறது என்பதைச் செவிவழிச் செய்திகளின் மூலமாகவும், நம் கண்களில் படும் சர்ச்சுகளின் எண்ணிக்கையினாலும் ஊகிக்கிறோம். கடன் தொல்லை, நோய், முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களே மதம் மாற்றுபவர்களின் முதல் குறி என்பது வெளிப்படை. ஆனால், இதைப் பற்றி விவரமாக எந்த ஆராய்ச்சியும் நடப்பதாக / நடந்ததாகத் தெரியவில்லை. பணப் போக்குவரத்து எங்கிருந்து எப்படி இயங்குகிறது? ஆதிக்க வர்க்கம் (அரசியல் கட்சிகள்) இதற்கு துணை போவது எப்படி? இதில் ஜாதி ஆதிக்கத்தின் பங்கு என்ன? போன்ற கேள்விகளை ஒரு குடியிருப்பை “case study” ஆக எடுத்துக் கொண்டே செய்யலாம். இன்னும் முன்னூறு ஆண்டுகள் கழித்து ஒரு அமெரிக்கப் பேராசிரியர் இந்த ஆராய்ச்சியைச் செய்வார் போலும்.

  அடுத்த பதிவில் மேலும் கூறுவேன்.

 11. Christians/ Muslim fanatics would always support Hindus who has inclination to convert.But let down after conversion. Christians and Muslims society teems with poor men and women.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *