கொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?

மூலம்: கலவை வெங்கட்
தமிழில்: க்ருஷ்ணகுமார்

உள்நாட்டிலேயே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்றபோது தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத்துவங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே இவை பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெகுஜனங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தினைப் பற்றி, பாரத அரசாங்கத்தில் வேலையில் இருக்கும் ஒரு அன்பருடன் நான் உரையாடினேன். அவர் என்னுடன் பகிர்ந்த தகவல்கள் இந்த விஷயமாக மிகுந்த தெளிவை அளிக்கிறது. அவை கீழே பகிரப்பட்டுள்ளன.

(1) ஆபத்து கால நடவடிக்கையாக பாரதத்திலேயே நமது நாட்டு விஞ்ஞானிகளின் பெருமுயற்சியால் உள்நாட்டிலேயே துரித கதியில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தடுப்பூசியாக இருந்தாலும் அது புதியதாக வெகுஜனங்களுக்குப் போடப்படுமுன் பயனாளிகளின் உடலில் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமா என்பதற்கான விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே எந்த ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தாலும் இது போன்ற ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாகத் தான் தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க முயலும். இது போன்ற எச்சரிக்கை மிகுந்த செயற்பாடுகள் அனைத்தும் மற்றெந்த தடுப்பூசிகளை வெகுஜன உபயோகத்துக்கு கொணரும் போது எவ்வளவு தேவையோ அதே அளவு கோவிட் தடுப்பூசிக்கும் முழுமையாகப் பொருந்தும். முன்னாள் அதிபர் ட்ரம்பின் கீழ் செயற்பட்ட அமேரிக்க அரசாங்கத்தின் தடுப்பூசி நிர்வாக எந்திரம் கூட இந்த விஷயத்தில் தனது நடவடிக்கைகளை தடாலடியாக செயற்படுத்தாது கவனத்துடன் பொறுமையாக கட்டம் கட்டமாகத் தான் முன்னெடுத்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

ஒருக்கால், தடுப்பூசிகள் பயனுக்கு வந்த பின்னர் பயனாளிகளின் உடலில் பாதகமான எதிர்விளைவுகள் உண்டாயின என்ற ஒரு சூழ்நிலை வந்துவிட்டது என்றால் நிலைமை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

அதுவும் ஆரம்ப கட்டத்திலேயே வெகு விரைவாக முழுமையான பரிசோதனைகளுக்கு முன்னால் கோடிக்கணக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அவை கோடிக்கணக்கான மக்களுக்கு போடப்பட்ட பின்னர் பாதகமான எதிர்விளைவுகளை எதிர்கொண்டால் என்ன ஆகியிருக்கும்?

பயனுக்கு இன்னமும் வராத உற்பத்தி செய்யப்பட்டுள்ள எஞ்சியுள்ள கோடிக்கணக்கான தடுப்பூசிகளையும் குப்பைத்தொட்டியில் போட வேண்டியிருந்திருக்கும்.

அதுமட்டுமா? தன் குப்பைக்குடையில் போடப்பட்ட தடுப்பூசிகளால் அவற்றை உற்பத்தி செய்வதற்காக தன் கைவசம் இருந்த மூலப்பொருட்களையும் நாடு வீணடித்திருக்கும்.

ஒருபுறம் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி எதிர்விளைவுகளால் பயனற்ற்ப்போய் மேலும் மூலப்பொருட்களும் வீணாகிவிட்டன என்ற நிலையில், எதிர்விளைவுகளை விலக்கும் வண்ணம் மாறுதல் செய்யப்பட்ட புதிய தடுப்பூசியினை எஞ்சியுள்ள மூலப்பொருட்களின் உதவியுடன் கண்டுபிடிப்பது பதட்டம் நிறைந்த வேலையாய் விடும்.

அதுவும் பொதுதளத்தில் கடுமையான எதிர்மறை விமர்சனத்தின் மத்தியில் மாறுதல் செய்யப்பட்ட புது தடுப்பூசியினை மீண்டும் அமலுக்குக் கொணருதல் என்பது கடும் சவால் நிறைந்த செயற்பாடாக ஆகிவிடும்.

எனவே, இது போன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தடுப்பூசி உற்பத்திக்கான ஆர்டர்களைப் பெறுதல்; தடுப்பூசிகளை உற்பத்தி செய்தல் மற்றும் அவற்றை பயனாளிகளுக்கு செலுத்தல் என தனது செயற்பாடுகளை கட்டம் கட்டமாக சிறிது சிறிதாக பாரத அரசாங்கம் பெருக்கிக் கொண்டு சென்றது.

தடுப்பூசிக்கு எதிரான போக்கிரிப் பன்முனைக்குழுக்களின் துஷ்ப்ரசாரத்தின் விளைவால் பயனாளிகளின் தயக்கம் மற்றும் பயனாளிகளின் மனதில் விளைவிக்கப்பட்டிருந்த அச்சம் காரணமாக, ஜனவரி முத்ல் மார்ச் வரை விநியோகம் செய்யப்பட்டிருந்த தடுப்பூசிகள் பெருமளவில் வீணடிக்கப்பட்டன என்பதனையும் நாம் அறிவோம்.

நாம் மேலே பார்த்த தடுப்பூசியினை கட்டம் கட்டமாக செயற்பாடுக்கு கொணர்தல் என்ற கவனமான செயல் முறைமையின் மூலம் – விநியோகிக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டன் எனினும் பெருமளவில் ஆரம்ப காலகட்டத்தில் அவை விநியோகம் செய்யப்படவில்லை என்பதால் வீணடிப்பும் பெருமளவில் நிகழ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பொறுமையான எச்சரிக்கை மிகுந்த செயற்பாடு எவ்வளவு அவசியம் என்பது இதன் மூலம் துலங்குகிறது.

(2) ஒரு பெரும் ஜனத்தொகையைக் கொண்ட ஒரு தேசத்தில் பயனாளிகளுக்கு தடுப்பூசியைச் செலுத்தும் அந்த நாட்டின் திறன் என்பது அந்நாடு எந்த அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து / கிரயம் செய்து திட்டமிட்ட படிக்கு விநியோகம் செய்யுமள்வு தன் கையிருப்பை வைத்துக்கொள்ளும் திறன்பெற்றது என்பதுடன் நேரடித் தொடர்பு கொண்ட விஷயம்.

இந்த விஷயத்தில் தான் அமேரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பாரதத்தை மிகக் கடுமையான காலகட்டத்தில் மூலப்பொருள் ஏற்றுமதித் தடை என்ற ஆயுதத்தின் மூலம் தாக்கி அவலத்துக்குள்ளாக்கியது என்பதை நாம் மறக்கலாகாது.

இது போன்ற ஒரு நிலைமையை எதிர்கொண்ட பாரத அரசாங்கம் தனது ஆர்டர்களைப் பெற்று உற்பத்திசெய்யும் செயற்பாடுகளில் முன்னிருந்ததை விட அதிகமான கவனத்துடனும் திட்டமிடலுடனும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இனவெறியும் நிறவெறியும் மிகுந்த அமேரிக்க மேற்கத்திய அரசாங்கத்தினது இப்படிப்பட்ட மூலப்பொருள் ஏற்றுமதித் தடை என்ற சதி நடவாதிருந்தால், பாரதத்தில் இரண்டாம் கொரோனா அலையில் நெருக்கடியையும் பெருமளவில் பொதுமக்களின் சாவுகளையும் நாம் எதிர்கொள்ளத் தேவையே இருந்திருக்காது.

(3) தடுப்பூசி உற்பத்தி செய்முறைகளின் போது உயிருள்ள வைரஸை கையாளுதல் என்ற விஷயத்திற்கு அளவு கடந்த திறன் தேவைப்படும். ஒரு சிறிய தவறு நிகழ்ந்தாலும் கூட மிக பயங்கரமான நோய்த்தொற்று பொதுவெளியில் ப்ரும்மாண்டமான அளவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். இவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு தடுப்பூசி உற்பத்திப்பணியில் ஈடுபடும் நபர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமாகிறது. இவ்வாறான பயிற்சி அளிப்பதற்கு முக்கியமான ஒரு கூறு தேவையான கால அவகாசம்.

(4) இவ்வளவு கடுமையான பயங்கரமான பரவலான ஒரு நோய்த்தொற்றை உலகம் கடந்த பல தசாப்தங்களாக கண்டதில்லை என்பதை நாம் மறக்கலாகாது. ஆயினும் நிகழ்காலத்தில் பாரதத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறைப் பின்னணியை கணக்கில் எடுத்துக்கொண்டால் மாதம் ஒன்றுக்கு பத்து கோடி தடுப்பூசிகளை பாரதத்தால் உற்பத்தி செய்ய இயலும் என்பது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பு ஆகும். அப்படி என்றால் தனது ஒட்டு மொத்த ஜனத்தொகையினருக்கும் பாரதத்தால் தடுப்பூசியினை அடுத்த ஆண்டிற்குள் செலுத்த இயலும் என்று கணிக்கலாம்.

ஒட்டு மொத்த ஜனத்தொகைக்கும் தடுப்பூசி எனும் பெரும் இலக்கினை ஒருபுறம் வைத்துக்கொண்டாலும், பாரதத்தில் அதிக அளவு நோய்த்தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களின் எண்ணிக்கை என்று கணக்கிட விழைந்தால் அது இருபது – முப்பது கோடி என்ற அளவில் இருக்கும். அதிக அளவு பாதிப்புக்குள்ளாகக் கூடிய ஜனத்தொகையினருக்கு முன்னுரிமையளித்து அவர்களுக்கு முதலில் தடுப்பூசியினை செலுத்தி விட்டால் நோய்த்தொற்றுக்குள்ளாகிய மேலும் இண்டன்ஸிவ் கேர் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க முடியும்.

அதன் மூலம் பாரத மருத்துவமனைகளில் இண்டன்ஸிவ் கேர் யூனிட்டில் அட்மிட் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும். நோய்த்தொற்றினால் ஏற்படும் சாவுகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறையும். இது போன்ற ஒரு செயல்திட்டத்தின் படி செயல்படுவதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் பாரத அரசாங்கத்தின் ஒவ்வொறு துறையும் முழுமையாக எடுத்து ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுள்ளது என்பதை நாம் மறக்கவியலாது.

அடுத்த மூன்று மாத காலகட்டத்தில் கோவேக்ஸின், கோவி ஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பாரதத்தின் பெரும் ஜனத்தொகைக்கு செலுத்தப்பட்டு விட்டால் நோய்த்தொற்றினால் ஏற்படக்கூடிய பேராபத்துகளிலிருந்து பாரதம் தப்பிக்க முடியும்

(5) இவ்வளவு முஸ்தீபுகளை எடுத்து பேராபத்துகளிலிருந்து தன்னை பாரதம் காப்பாற்றிக் கொள்ள இயலும் என்றாலும் அப்பாடா தப்பித்தோம் என்று ஓய்வு ஒழிவெல்லாம் இருக்கவொண்ணாது இருக்கவும் கூடாது. ஏனெனில் இந்த வைரஸ் தன்னை தொடர்ந்து உருமாற்றித் தொல்லை கொடுக்கும் இயல்புள்ளது என்பதை நாம் மறக்க இயலாது. இரண்டாம் அலைக்குப் பின்னர் இன்னமும் எவ்வளவு அலைகள் தொடரும் என்பதனை எதிர்காலமே நிர்ணயம் செய்யும். ஆயினும் நோய்த்தொற்றினால் பேராபத்துக்குள்ளாகி உயிரிழக்க வாய்ப்புள்ள பெரும் ஜனத்தொகையினருக்கு தடுப்பூசியை செலுத்தி விட்டால் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேர்ந்தாலும் நோயின் தீவிரமும் கட்டுக்குள் இருக்க வாய்ப்புண்டு. உயிர் இழப்புகளுக்கான சாத்தியக் கூறுகளும் பெருமளவு குறைய வாய்ப்புண்டு.

என்னிடம் இவ்வளவு விபரமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அன்பரிடம், “தன்னுடைய நாட்டு மக்களுக்கான உரையில் பாரத ப்ரதமர் மோதி இந்த சாத்தியக்கூறுகளை விளக்கமாகப் பகிர்ந்திருக்கலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், ” மோதி ஒருக்கால் இப்படியான விளக்கமான தகவல்களை முன் கூட்டியே பொது மக்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தால் துஷ்ப்ரசாரத்துக்கெனவே முனைப்புடன் செயற்படும் பன்முனைக்குழுக்கள் தடுப்பூசியைப் பற்றிய எதிர்மறைக்கருத்துக்களை ஊதிப்பெரிதாக்கி மக்களிடம் தடுப்பூசியினைப்பற்றிய அச்சத்தையும் தயக்கத்தையும் பெருமளவு வளர்த்திருக்கவும் வாய்ப்புண்டு என்பதை நாம் மறக்கலாகாது” என்றார். நாம் இதுவரை எதிர்கொண்ட ப்ரச்சினையை விட பன் மடங்கு அதிகமான ப்ரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் என தெரிவித்தார்.

தூஷணங்களையும் துஷ்ப்ரசாரங்களையும் கசப்பு கஷாயமாக திடமான மனத்துடன் உள்வாங்கி சோர்வுறாமல் மேற்கொண்டு முனைப்புடன் செயற்படுவதல்லால் பாரத அரசாங்க எந்திரத்திற்கு வேறு வழிவகைகள் ஏதும் கைவசம் இருந்திருக்கவில்லை.

ஆனால் இந்த அரசாங்கம் மக்கள் நலன் பேண விழையும் அரசாங்கம் என்ற நம்பிக்கை உள்ள உங்களைப் போன்றவர்கள், இந்தத் தகவல்களை பெருமளவு பொதுமக்கள் முன் வைப்பதற்கு விழைதல் நன்று என்று சொன்னார்.

(நண்பர் கலவை வெங்கட் அவர்கள் கேட்டுக்கொண்ட படி நான் புரிந்து கொண்ட அளவு இந்த பதிவினை மொழியாக்கம் செய்திருக்கிறேன். கருத்துக்களின் ஆழத்தையும் அதன் வெளிப்படைத்தன்மையையும் புரிந்து கொள்ளும் அன்பர்கள் தங்கள் நண்பர்களிடம் இதை அவசியம் பகிரவும் – மொழிபெயர்ப்பாளர்)

6 Replies to “கொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?”

 1. நிராசை நிறைந்த காலத்தில் சலிப்பூட்டும் மற்றுமோர் சப்பைக்கட்டுக் கட்டுரை.
  1. இதுவரை வந்த எல்லா கோவிட் தடுப்பூசிகளும் நெருக்கடி கால அனுமதி பெற்றவை. அதனால் அவை எதிர்மறை ஐயங்களுக்குட்பட்டவையே. அரசின் தயக்கம் உண்மையில் இதுவானால் மூன்றாம் கட்டசோதனை முடியுமுன் covaxin ஐ அங்கீகரிக்க என்ன அவசரம்? கோவிட்ஷீல்டு மட்டும் போதுமே. இது நிறைய குழப்பத்தை உருவாக்கியது. ஐயம் கூறிய எல்லோரையும் ஏசியே தீர்த்தது ஆளுங்கட்சி. அவ்வளவு தயக்கம் இருந்தால் மருத்துவர் அனைவருக்கும் முதலில் செலுத்த முடிவெடுப்பீர்களா?
  டிரம்ப் அரசு 10, டிசம்பர் 2020 லேயே pfizer ஐ அறிமுகம் செய்தது. விமர்சனங்களைத் தவிர்க்க பல நாடுகளின் பிரதமர்கள் தாமே செலுத்துக்கொண்டார்கள். டிசம்பர் இறுதியிலேயே பிரிட்டன் அங்கீகரித்தது. இந்நாடுகளெல்லாம் இந்தியாவின் பாதுகாப்பு பங்காளிகள்.
  2. எல்லா நாடுகளும் தம் தேவையை முதலில் கருத்தில் கொண்டே செயல்பட்டன. நிற வெறி என்று பேசுவது அபத்தமானது. அந்நிறவெறி நாடுகளில் சில இப்போது உதவுகின்றன. முன்னர் ஏற்றுமதி செய்த நாம் நிறுத்திவிட்டோம். (உண்மையில் சிறு அளவில் பல நாடுகளுக்கு மோடி ஏற்றுமதி செய்தது பெருமைக்குரிய விஷயம். அது அந்நாடுகளின் மருத்துவர் பாதுகாப்பு பணியாளர்களுக்கு தேவையானது. உலகம் ஓங்க ஓதும் இந்தியா நிச்சயமாக செய்ய வேண்டியது. நிறுத்தியது தவறு; இந்து, ஜைன, புத்த மாதங்களுக்கு எதிரானது.) தான் பயன்படுத்தாத கோவிட்ஷீல்டை எட்டு கோடி மருந்தலகுகள் (doses ) வாங்கி வைத்துருந்தது அமெரிக்கா. கனடா, ஐரோப்பிய நாடுகளும் வாங்கி குவித்தன. ஐரோப்பா astrazeneca மேல் தாமதத்திற்கு வழக்கே போட்டிருக்கிறது. வாங்குவது வேறு; விநியோகம் வேறு. இவ்வரசு கோட்டை விட்டது.
  3.”உலக பார்மசிக்கே” பாடமா?
  4. இது போன்ற யூகக் கணக்குகள் அரசினுடையதா? எல்லா பத்திரிக்கைகளும் தத்தமதை வெளியிட்டாகி விட்டது. அரசு அதிகாரியின் கிசுகிசுத்து வேண்டாம்.
  5. என்ன விபரம் அது. பத்திரிக்கை செய்தியை விட விவரக்குறைவானவையே.
  மோடி நாடு மக்களுக்கு விவரங்கள் சொல்ல வேண்டாம். குறைந்த பட்சம் தம் அமைச்சரைவை சகாக்களுக்கு சொல்லட்டும். நிதின் கட்கரி இது பற்றி மே மாத இறுதியில் சொன்னதை நினைவு கூறுங்கள். அவருக்கே அரசின் முயற்சிகள் தெரியவில்லை. இவ்வரசின் மூத்த செயல்பாடு மிகுந்த அமைச்சர் அவர். அவரைக் குறை கூறவில்லை. ஆனால் இவ்வரசு சரியாக இவ்விஷயங்களை அமைச்சரவையில் கூட விவாதிக்கவில்லை என்பது தெளிவு.

  மோடிக்கு முட்டுக்கு கொடுக்காதீர்கள். அவர் பேசட்டும். துதிபாடிகளிடமிருந்து அவர் வெளிவரட்டும். இல்லையெனில் இந்து விரோதிகளிடம் மகிழ்ச்சியாக மடிவோம்.

 2. ஏங்க ராம்கி, இவனுகிட்ட போய் மோடிக்கு முட்டு குடுக்காதே என்று சொன்னால் எப்படி! இவனுவ பொய் பிரசாரத்திலேயே ஆட்சியை பிடித்த கும்பல். அவனுங்களே ஒத்துக்கிட்டானுவொ, எங்கள் தலைவரும் ட்ரும்பும் ஒன்னு!
  நல்லா நடந்தால் மோடியால், பிரச்சினை வந்தால் எதிர் கட்சிகளால்??
  முசொலினியின் fascist கட்சியை பின்பற்றுவர்களாயிற்றே, ஹிட்லரின் கோயபல்சே இவர்களிடம் பொய் சொல்வதில் பிச்சை எடுக்கனும்

 3. மோடியை விமர்சிப்பதில் உள்ள மிகப் பெரிய சங்கடம் சாம்பசிவன்களுக்கு இணை நிற்பது போன்ற தோற்றம். நான் செய்தது சான்றுகள் அடிப்படியில் இவ்வரசு கோவிடைக் கையாண்ட விதம் அல்லது கையாளத் தவறியதை சுட்டுவது. என் அருகில் நின்று ஒருமையில் ஏசுகிறார் தேய்ந்து போன சொற்றொடர்களால். பொய் சொன்னதற்காக உச்ச நீதி மன்றத்தில் மன்னிப்புக் கோரிய ராகுலை நினைத்து ஏசுகிறாரோ! அவ்வேச்சையும் வெளியிட்ட ஆசிரியர் குழுவின் பெருந்தன்மைக்கு நன்றி.

 4. பழைய படத்து நம்பியார் போல கடுமையாக கண்களை உருட்டி கொண்டிருக்கின்றார் சீன அதிபர் ஷின்பெங் காரணம் நடந்திருக்கும் விஷயம் சீனாவுக்கு நல்லதல்ல‌

  சீனாவின் உளவுதுறை பெயர் குவான்பூ. இது மிக மர்மமான உளவுதுறை சீன ரகசியமெல்லாம் இவர்களுக்கு அத்துபடி அப்படியே சீனாவுக்குள் யார் என்ன செய்கின்றார்கள்? உலகில் சீனா செய்யும் காரியங்களை வெற்றியாக்குவது எப்படி என எல்லாமே இவர்கள் கைங்கரியம் தான்

  அந்த உளவுதுறை மேல் சீனா கடும் கண் வைத்திருக்கும், காரணம் 1989ல் ஒரு சீன உளவுதுறை அதிகாரி அமெரிக்காவுக்கு தப்பி விஷயம் பெரும் விஷயமானது, தினான்மென் சதுக்க படுகொலை காலம் அது என்பதால் சீனா பல சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது

  அப்படி ஒரு சிக்கல் இப்பொழுது எழுந்துள்ளது

  ஆம் சீன உளவுதுறை முக்கிய அதிகாரி அமெரிக்காவுக்கு அழகாக தப்பியிருகின்றார், அவர் சாதாரண ஆசாமி அல்ல‌

  அவர் பெயர் டெங் ஜிங்வெய், சீனாவில் வெளிநாட்டு உளவாளிகள் செய்யும் உளவு வேலைகளை கண்காணிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது

  இப்பொழுது அவரையேதன் நாட்டு உளவாளியாக மாற்றி அமெரிக்காவுக்கு இழுத்து சென்றிருக்கின்றது சி.ஐ.ஏ

  வழக்கம் போல் முதலில் அமைதி, பின் அப்படி ஒரு நபர் எங்கள் உளவுதுறையில் இல்லை என சமாளிப்புகளை சீனா சொன்னாலும் விஷயம் சிக்கலே

  ஆம் இவர் சீன அதிபரின் வலது கரமாக இருந்த முக்கிய அதிகாரி

  சீனாவின் கொரோனா வைரஸ் உற்பத்தி முதல் உலககெல்லாம் சீனா என்னெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது, எந்தெந்த நாட்டில் என்னென்ன வடிவில் சீன உளவாளிகள் உண்டு என்பதுவரை அவர் சொல்லலாம்

  அமெரிக்கா அவரை ரகசிய இடத்தில் பெரும் பாதுகாப்புடன் வைத்து விஷயங்களை கறக்கின்றது

  இந்திய அரசு கொஞ்சம் ராஜதந்திரமாக அமெரிக்காவுடன் சேர்ந்து அன்னாரை விசாரித்தால் சீனாவின் கைகூலிகள் தமிழகத்தில் யார்? என்னென்ன வடிவில் சுற்றுகின்றார்கள் என்பது ஆதாரமாக தெரியவரும்

  இதை இந்திய அரசு இப்பொழுதே விசாரிக்க தொடங்கியிருக்கும் என நம்புகின்றோம், தமிழகத்தில் இருக்கும் சீன கைகூலிகளும் இப்பொழுது சீன அதிபர் நிலையில்தான் இருக்கின்றார்கள்

 5. ஒளிக்கீற்றா! ஹர்ஷவர்தன் சதானந்த பதவி விலகல்.
  அல்லது பொறிப்புத் துறப்பா. என் உள்ளக்குமுறல் சிறிது தணிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *