ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி

மெலிந்து காய்ந்த உடல். மூக்குக் கண்ணாடிக்குப் பின் ஒளிரும் இடுங்கிய கண்கள். ஹரித்வாரில் உள்ள சாந்தி சதன் ஆசிரமத்தில் மூன்று மாதங்களாக உண்ணா நோன்பு இருக்கிறார் அந்த 81 வயது முதிய துறவி சுவாமி ஞான ஸ்வரூப் ஸானந்த். ஒரே விஷயத்திற்காக அவர் அறிவித்திருக்கும் ஐந்தாவது கால வரையற்ற உண்ணா நோன்பு இது.

Courtesy: Tehelka
Courtesy: Tehelka.com

மத்திய அரசு கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 600 அணைகளையும் மின் உற்பத்தி நிலையங்களையும் கட்டுவதற்காக மாபெரும் திட்டத்தை அறிவித்தது முதல் தனது போராட்டத்தை இந்த சாது தொடங்கி விட்டார். பாகீரதி, மந்தாகினி, அலகநந்தா ஆகிய கங்கையின் முக்கிய துணை நதிகளை மறித்து 70 நீர்மின் திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இதில் 14 மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.

சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர். கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உத்தராகண்ட் மாநிலத்தின் நதிகளையும், அதன் இயற்கைச் சூழலையும் அறிவியல் பூர்வமாக நன்கு அறிந்தவர். அன்னை கங்கையை நேசிப்பவர்.இந்த அளவுக்கு கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும்  மின் உற்பத்தி நிலையங்களும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார். சமீபத்தில் கேதார் நாத்தை மையம் கொண்டு ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்கள் சமாளிக்க முடியாத அளவு பெருகும் என்று எச்சரிக்கிறார். இந்த சூழலியல் அழிப்பைத் தனது உயிரைக் கொடுத்தாவது தடுப்பது என்று அவர் உறுதி பூண்டுள்ளார்.

செப்டம்பர்-21 அன்று தனது போராட்டத்தின் இறுதி ஆயுதமாக தண்ணீர் உட்கொள்ளப் போவதையும் நிறுத்தி விட்டார். உத்தராகண்ட் மாநில அரசு உடனடியாக முனைப்படைந்து செப்டம்பர்-24 அவரை வலியக் கொண்டு சென்று தேஹராதூன் டூன் மருத்துவமனையில் சேர்த்தது. அப்போது முதல் திரவங்கள் அவரது உடலுக்குள் வலுக்கட்டாயமாக செலுத்தப் பட்டு வருகின்றன.

Swami-Gyan-swroop-Sanand“எங்களது கோரிக்கைகளுக்கு தேசிய அளவில் 35 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளனர். ஆயினும் மத்திய, மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை நிறுத்தவில்லை, மறுபரிசீலனையும் செய்யவில்லை. தேஹ்ரி பள்ளத்தாக்குக்கு மேலாக, பாகீரதி நதியில் எந்த அணைக்கட்டுகளும் கட்டக் கூடாது என்பதே எனது கோரிக்கை. 2010ம் ஆண்டு எங்களது தொடர்ந்த போராட்டத்தால் மூன்று அணைக்கட்டுத் திட்டங்கள் நிறுத்தப் பட்டன. ஆனால் இப்போது அலகநந்தா நதியில் 5 மின் திட்டங்களை மறுபடியும் அறிவித்துள்ளனர். அன்னை கங்கை கட்டற்றுப் பாய்பவள். அவளது பிரவாகத்தை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது” என்கிறார் சுவாமி ஸானந்த்.

இந்த மண்ணையும், அதன் நதிகளையும் நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் இப் போராட்டத்தில் இந்த இந்துத் துறவிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும். அவரது கோரிக்கையை ஏற்று அரசு இப்பிரதேசத்தில் தேவைக்கு அதிகமான, இயற்கைக்குப் புறம்பான நதி நீர்த் திட்டங்களைக் கைவிட வேண்டும்.

சுவாமி ஸானந்த் அவர்களின் போராட்டம் கங்கையிலிருந்து காவிரி வரை உள்ள நதிகளின் மடியில் பிறந்து, உண்டு வாழ்ந்து மடியும் மக்கள் திரளனைத்திற்கும் உத்வேகம் அளிக்கட்டும். நம் தேசத்தின் நதிகளை மாசுகளில் இருந்து, சீர்கேடுகளில் இருந்து, அழிவிலிருந்து மீட்போம்.

11 Replies to “ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி”

 1. Take my word! No one will listen nor care for the public interest!! Everyone is busy in getting elected in the coming election by hook or crook!!!. It is pity. This swami ji will become unsung hero!!!! God has to come to incarnate to save this Swami ji.

 2. In Jun 2011, Swami Nigamananda died in Dehradun, Uttarakhand. for What?
  He went in Satyagraha path, urging the governments not to polute River Ganga. He did his fasting for 114 days and died. The then State Government, headed by BJP, did not do anything to address Swami Nigamananda.

  The author of this article, Shri jadayu, did not write anything on Swami Nigamananda, who gave his life for River Ganga. Perhaps, author, would have forgotten to write because BJP was ruling the Uttarakhand then.

 3. // The author of this article, Shri jadayu, did not write anything on Swami Nigamananda, who gave his life for River Ganga. Perhaps, author, would have forgotten to write because BJP was ruling the Uttarakhand then. //

  அன்புள்ள R NAGARAJAN, இது ஒரு வீண்பழி. நான் தொழில்முறை பத்திரிகையாளனோ எழுத்தாளனோ அல்ல. எனது பணிகளுக்கு நடுவில் எனக்கு நேரம் கிடைப்பதைப் பொறுத்து சமூக பிரசினைகள் மற்றூம் என்னைப் பாதிக்கும் விஷயங்களைப் பொறுத்து கவனப் படுத்தல் செய்து வருபவன். அவ்வளவே.

  சுவாமி நிகமானந்தா போராட்டம் குறித்தும் அவர் உயிர் நீத்தது குறித்தும் அறிவேன்.. அப்போது கூகிள், பேஸ்புக் குழுமங்களிலோ வேறு எங்காவதோ சுருக்கமாக அது பற்றி எழுதியிருக்கக் கூடும்.

  நான் பாஜக ஆதரவாளன் தான். ஆனால் கட்சியின் ஊதுகுழல் அல்ல, எந்தக் கட்சிப் பொறுப்பிலும் நான் இல்லை. பாஜகவின் சில நடவடிக்கைகளை விமர்சித்து நான் எழுதியுள்ளவை இந்த தளத்திலேயே வந்துள்ளன.

 4. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது நவீனர்களுக்கான மிகப்பெரிய சவால். சில கருத்துகளை இங்கு கூறித்தான் ஆக வேண்டும். சிலருக்கு கசக்கத்தான் செய்யும்.

  (1) அடிப்படையில், நாம் எப்படிப்பட்ட சமூக அமைப்பில், எப்படிப்பட்ட வாழ்க்கை தரத்தில் வாழ விரும்புகிறோம்? என்ற கேள்விக்கான விடையை யோசித்தாக
  வேண்டும். அதற்கான விடை சுலபமானது. மிகப் பெரும்பாலானோர் நவீன வாழ்க்கையை அதன் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடிக்கிய வசதிகளுடன்
  வாழவே விரும்புகிறார்கள்.

  (2) அடுத்து, கிராமங்களைத் துறந்து நகரங்களுக்கு மக்கள் குடிபுகுவது உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக மாற்றம். ஆகவே மிகப்பெரிய
  மக்கள் தொகைக் கூட்டங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நகரத்திற்குள் “குவிக்கப்பட்ட” வசதிகளை (இயற்கையிலிருந்து) அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

  (3) மூன்றாவது அடிப்படை- இன்றைய மக்கள் தொகை 700 கோடி. இது 2050 வாக்கில் 900 கோடியாக உயரப்போகிறது. இதை பேசக்கூட தயாராகாதவர்களுடன்
  எவ்வாறு விவாதிக்க முடியும்?

  (4) அடுத்த அடிப்படை விஷயம் 3 வழிகளை உள்ளடிக்கிய தீர்வு சாத்தியம் கொண்டது.
  (அ) முதலில் கபில் சிபலைப் போல் கூறினால், Zero Percent Loss to Environment என்ற ரீதியில் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்களை எந்த நாட்டாலும்
  முன்னெடுக்க முடியாது. இதற்கான தொழில்நுட்பமே நம்மிடம் இல்லை.

  (ஆ) அடுத்து, பெரிய அளவில் தொழில்நுட்பமோ, முதலீடோ இல்லாத இந்தியா போன்ற நாடுகளால், சுற்றுச்சூழலுக்கு “குறைந்த சேதத்துடனேதான்”
  திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

  (இ) அமேரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளால் சுற்றுச்சூழலுக்கு “மிகக்குறைந்த சேதத்துடன்” திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

  மேற்கண்ட நடைமுறை எதார்த்தங்களை ஒப்புக்கொண்ட பிறகே நான் எழுதப்போகும் இக்கட்டுரைக்கான மறுமொழியை உள்வாங்க முடியும். இல்லையேல்
  விவாதித்து உபயோகம் இல்லை.

  முதலில் இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் குறித்த ஒரு பார்வை. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் தவ்லீன் சிங்க் என்னும்
  பெண்மணியின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். இந்தியாவிலுள்ள பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களை (90 சதவிகிதம்) கீழ்க்கண்டவாறு அழைக்கிறார்.
  5 Star Environmental Activists, Hysterical Environmentalists, Environmental Fraudsters, Environmental Fundamentalists. நான் இதைத்தாண்டி இந்த பொய்யர்களை Environmental
  Terrorists என்று அழைக்க விரும்புகிறேன்.

  காரணம் என்ன? இந்தியாவில் எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் எதிர்ப்பதை மட்டுமே தர்மமாகக் கொண்டவர்கள் இவர்கள். வளர்ச்சி இல்லாமல் நவீன
  வாழ்க்கை இல்லை என்பதை உணராத / உணர விரும்பாதவர்கள் அல்ல காரணம். இவர்களுக்கு வரும் வெளிநாட்டு பணம் வளர்ச்சி திட்டங்களுக்கான
  எதிர்ப்பிற்காகவே வழங்கப்படுகிறது. மேலும் இதில் பெரும்பாலானோர் நம் நதிகளை தூய்மைப் படுத்தும் முயற்சிகளுக்காக எதுவும் செய்வதில்லை.

  சரி. இவர்கள் முன்வைக்கும் வாதம் எத்தகையது?
  – ஆற்று மணலை அள்ளுவதை உடனே நிறுத்த வேண்டும். (வீடு, தொழிற்சாலைகளை எவ்வாறு கட்டுவது?)
  – பூமியை நோண்டக்கூடாது (இரும்புத்தாது, அலுமினியத் தாது, பிற கனிமங்களுக்கு என்ன செய்வது?)
  – காடுகளை அழிக்கக் கூடாது (வீட்டிற்கான, தொழிற்சாலைகளுக்கான கதவு சன்னல்களுக்கு என்ன செய்வது?)
  – மலையை குடையக்கூடாது-ஒரிஸாவில் நியாய்கிரி மலையை தெய்வம் என்றழைக்கிறது அங்குள்ள பழங்குடி இனக்குழு. இதை ஒப்புக்கொண்டு விட்டால்,
  ஹிந்து பாரம்பர்யப்படி இந்தியாவின் எந்த இயற்கை வளத்தையும் தொடக்கூட முடியாது. மலை, கடல், நதிகள், காடுகள், விலங்குகள் என்று அனைத்துமே
  இயற்கை அன்னையின் ஒரு வடிவமே என்னும் பழங்குடி எண்ணங்களின், தொகுப்புதானே நம் பாரம்பர்யம்.
  Bla..Bla..Bla

  அடுத்து இவர்களின் பொய் புரட்டு வாதம்-இயற்கையை சிறிது கூட சேதப்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளுடன் கூடிய
  வாழ்க்கையை இன்றே நம்மால் வாழ முடியும். அதற்கான தொழில்நுட்பம், முதலீடு போன்றவை இருக்கின்றன. ஆனால் ஊழலுக்காக உலகில் எந்த ஒரு
  அரசாங்கமும், இந்தியா உட்பட இந்த வழிமுறையை நாடுவதில்லை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பாஷையில் கூறினால், “இது ஒரு Nonsense”. பேசுவதற்கு
  கூட லாயக்கில்லாத, குப்பையில் தூக்கி எறிய வேண்டிய வாதமிது.

  சரி, இப்பொழுது கட்டுரைக்கு வருகிறேன்.
  இந்த பொய் புரட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மத்தியில், நதிநீர்நிலைகளை காக்க வேண்டும் என்று கூறும் இந்த சாதுவின் நோக்கம் உயரியதே.
  நடைமுறைக்கு சாத்தியமான பல விஷயங்களை நம் அனைவராலும் செய்ய முடியும். நாம் அனைவருமே ஒவ்வொரு நிலையில் நதிநீர்நிலைகளை
  அசுத்த படுத்துகிறோம். அரசாங்கம் மட்டுமே இதற்கு காரணமல்ல. நாம் நம்மையும் சீர்படுத்திக் கொண்டு நதிநீர்நிலைகளையும் ஓரளவிற்காவது
  தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்.

  இக்கட்டுரையில் ஒரு அறிவியல் உண்மை தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
  “இந்த அளவுக்கு கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார். சமீபத்தில் கேதார் நாத்தை மையம் கொண்டு ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்கள் சமாளிக்க முடியாத அளவு பெருகும் என்று எச்சரிக்கிறார்.”
  இக்கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. அசுரத்தனமான அணைத்திட்டங்கள் என்று பொத்தாம் பொதுவாக rhetoricஆக எழுதுவது இன்று Fashionஆகி விட்டது.
  உதாரணமாக உத்தர்காண்டில் ஒரு அணை, “அசுரத்தனமான அணை” என்றே வைத்துக் கொள்ளலாம். 250 டி.எம்.சி தண்ணீரை சேகரித்து வைத்துக்
  கொள்ளக்கூடிய அணை என்றும் வைத்துக் கொள்ளலாம். சமீபத்தில் பெய்த பெரு மழையில் ஒரு பகுதியை அதாவது 250 டி.எம்.சி தண்ணீரை, இதே
  அசுரத்தனமான அணைதான் சேகரித்து வைத்துக் கொண்டது. மழையால் பெருக்கெடுத்த தண்ணீருடன், இந்த அணை இல்லாத பட்சத்தில், இந்த 250 டி.எம்.சி
  தண்ணீரும் சேர்ந்தே மேலும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும். இது Simple Logic. பெரிய அணைகளை கட்டக்கூடாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
  தொடர்ந்து பரப்பும் அசல் பொய் பரப்புரை இது. ஆகவே பெரிய அணைகளை நாம் கட்டுவதால், குடிநீருக்கும், பாசனத்திற்கும் மட்டுமல்ல, வெள்ள அபாய
  காலத்தில், சேதத்தை மட்டுபடுத்தும் வேலையையும் இதே அணைகள் செய்யும். அணை நிரம்பிய பின்னர் அதிகப்படி நீர்தான் வெளியேற்றப்படும்.

  மேலும் சமீபத்திய உத்தராகண்ட் வெள்ள சேதத்தில் ஒரு விஷயம் பெரியதாக கவனிக்கப்படவில்லை. நதிநீர் நிலைகளுக்கு அருகாமையில், தவறு என்று
  நன்றாக தெரிந்தும், ஹோட்டல்கள் போன்ற கட்டுமானப் பணிகள், வீடுகள் கூட கட்டப்பட்டன. அரசுத்துறை தவறிழைத்துள்ளது என்று மட்டும் நாம்
  தப்பிக்க முடியாது. வெள்ளம் வந்தால், இந்த கட்டுமானங்கள் அடித்து செல்லப்படும் என்று தெரிந்தே பலர் இத்தவறை செய்துள்ளனர். நாம் அவர்களுக்காக
  கருணையை வீணடிக்க வேண்டாம். அவர்கள் கஷ்டப்படட்டும். அதுதான் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாடம்.

  அடுத்து, மின் உற்பத்தி திட்டங்கள்.
  நம் நாட்டில் பல்துறைகளில் உள்ள ஊழலும், நம்பகத்தன்மையும் அற்ற நிலைதான் நம்மை சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கிறது. அறிவியல்
  அடிப்படையில், ஒரு நிபுணர் குழு, குறிப்பிட்ட நதி பாயும் இடங்களில் அணைகளை கட்டி, மின் உற்பத்தி செய்ய பரிந்துரை செய்தால் நாம் ஏற்றுக்
  கொண்டுதான் ஆக வேண்டும்.

  இந்த Project Feasibility Studyகள் நம்பகத்தன்மையுடன், வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால்,
  மின் உற்பத்திக்கான முயற்சிகளே நடக்கக் கூடாது என்று கூறினால். Sorry என்னை யாரும் DAM-999 படம் போல் பயமுறுத்த முடியாது.

  எனக்கு நவீன வாழ்க்கை வேண்டும். என் தாத்தாவைப் போல், அவருக்கும் முன்னால் வாழ்ந்தவர்களைப் போன்று வசதிகளே இன்றி என்னை வாழச்
  சொல்லாதீர்கள். நான் அந்த வாழ்க்கைக்கு தயாரில்லை.

  கடைசியாக இப்படி முடிக்கிறேன்.
  (1) பெரிய அணைக்கட்டு திட்டங்களும், மின் உற்பத்தி திட்டங்களும் இந்தியாவிற்கு வேண்டும். சுற்றுச்சூழல் சிறிதாவது மாசுபடத்தான் செய்யும். வேறு
  வழியேயில்லை. இதை ஏற்றுக் கொள்ளாது போனால் மிகப்பெரிய மானுட துயரங்களை நாம் ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும்.

  (2) அரசாங்கமும், அரசியல்வாதிகளும், பெரும் தொழிற்சாலைகளும் மட்டுமே நதிகளின் மாசுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளச்செய்வது தவறானது.
  பொது மக்களுக்கும் பெரிய அளவில் பொறுப்பு உண்டு. ஓரளவிற்கேனும் சுத்தப்படுத்துவதற்கு கூட பெரிய அளவில் செலவு பிடிக்கும். அதை பகிர்ந்து
  கொள்ளவும் நாம் அனைவரும் தயாராக வேண்டும். காசில்லாமல் அணுவும் அசையாது.

 5. \\\ இந்த Project Feasibility Studyகள் நம்பகத்தன்மையுடன், வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்\\\

  புனல் மின்சாரம் சம்பந்தப்பட்ட விபாகத்துடன் சம்பந்தப்பட்டவன் என்பதால் சொல்கிறேன் -நம்பகத்தன்மையுடனான Project Feasibility Study மற்றும் DPR — இவையெல்லாம் நிஸ்ஸம்சயமாய் Oxymoron. Target Dates- ஐ chase செய்து வேண்டியவர்களுக்கு வேண்டப்பட்ட படி சமைக்கப்படுபவை இந்த ரிபோர்ட்டுகள். எந்த அளவுக்கு அக்ரமம் செய்ய முடியும் என்பதற்கு ஹ்ருதயம் ப்ரமாணம். பணத்தாசை ப்ரமாணம்.

  அமேரிக்காவிலிருந்து இங்கு வந்து கூத்தடித்து பின் காணாமல் போன Enron நினைவுக்கு வருகிறது.

  Execution – ஊழல் ஒரு புறம். Unimaginable Geological Challenges which hamper the progress of a project resulting in time and cost overruns. ஹிந்துஸ்தானத்தில் எனக்குத் தெரிந்து இது வரை இரண்டு TBM மிஷன் கள் டன்னல் போட்டுக்கொண்டிருக்கையில் புதைந்து சமாதி ஸ்திதிக்குப் போய் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் bla bla ஆனது மட்டுமல்ல. எத்தனை காலம் கடந்து இந்த ப்ராஜக்டுகள் முடிக்கப்பட்டன எத்தனை ஆயிரம் கோடி மேலும் கொட்டப்பட்டது ப்ராஜக்டை முடிக்க என்பவை மலைக்க வைக்கும்.

  பத்ரிநாத்திலிருந்து ரிஷிகேஷ் வரை எத்தனை அணைகள் கட்டப்போகிறார்கள். அதில் எவ்வளவு ஜலம் தேக்கப்படும்? அதனால் Environment – க்கு என்ன பாதிப்பு வரும் என்பதை நாணயமாக Assess செய்வார்களா என்பதே கேழ்விக்குறி தான். போதாதற்கு கர்நாடகா போல காவிரியின் குறுக்கே முடிந்த வரை அணைகளாய்க் கட்டி சொட்டு ஜலம் தமிழகத்திற்கு போய் விடாது பார்த்துக்கொள்ளும் கண்றாவிகள் ஒருபுறம்.

  ஜம்மு காஷ்மீரத்தில் பக்லிஹார் ஜலாசயத்தின் ( ஜில்லா படோட்) வாய்க்கால் (Power Channel) (முறையாகக் கான் க்ரீடிங்க் செய்யப்படாது என நினைக்கிறேன்) பக்கத்தில் இருக்கும் இளமலையை அரித்து அரித்து அஸ்ஸர் (Assar) அருகே 2008ல் பெரும் மலைச்சரிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஜம்மு – டோடா போக்கு வரத்து ஸ்தம்பித்தது.சரிந்த மலை மீது பேருக்கு ரோடு போடப்பட்டுள்ளது. உத்தம்பூருக்கு சற்று மேலே உள்ள குத் (Qud) என்ற இடத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட அஸ்ஸருக்கும் மேலே உள்ள டோடா வரை முழுமையாக Road Realign செய்வது நிரந்தரத் தீர்வு என்று சொல்லப்படுகிறது. அதற்கு எவ்வளவு செலவு. அதை செய்வார்களா? அவ்வாறு செய்யாவிடில் இன்னும் எத்தனை மலைச்சரிவுகள் ஏற்படும். அதற்கு என்ன செலவு? கேழ்விகள் மட்டும் தான் உண்டு. இதற்கெல்லாம் பொறுப்பு என்பது லவலேசமும் இல்லாத சர்க்காரிடமிருந்து பதில்கள் என்பது இருக்கவே முடியாது.

  புனல் மின்சாரம் வேண்டாம் என்று சொல்லவே மாட்டேன். ஆனால் முறையான Cost Assessment ஹிந்துஸ்தானத்தில் நிகழ வாய்ப்புண்டு என்று நம்பவே முடியவில்லை.

 6. Enron தெர்மல் பவரில் இருந்தது என சொல்ல வேண்டாம். அக்ரமத்துக்கு ஒரு அடையாளமாயிற்றே enron.

 7. நர்மத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவத்த அறிவு ஜீவிகள் இப்போது எங்கே ? கங்கை போராட்டம் வெற்றி அடைய பிரார்த்திப்போம்
  பரமசிவம்

 8. உத்தர காண்ட் துயரத்துக்கு மற்றும் ஒரு காரணம் “நதியின் போக்கை அணை கட்ட மாற்றி அமைத்தது” என படித்த ஞாபகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *