ஆபிரகாமிய மதங்களும் ஆன்மீகமும்

தாமஸ் பெய்ன் (Thomas Paine) ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், சிந்தனையாளர். அமெரிக்காவின் தேசிய உருவாக்கத்தில் அவரது சிந்தனைகள் பெரும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இவர் மதங்களுக்கு எதிரானவர் என்பது பொதுவான கருத்து, ஆனால் இவர் இறைமறுப்பாளர் இல்லை. இவர் எழுதிய ஏஜ் ஆஃப் ரீஸன் எனும் நூலில் இதனை மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறார். “நான் ஒரே கடவுளை நம்புகிறேன். அதற்கு மேல் எதுவும் இல்லை. இந்த உலகியல் வாழ்வைத் தாண்டிய இன்பம் ஒன்று உள்ளது, அதனை அடைய இயலும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.

அப்படியானால், அவர் எதிர்த்தது எதை? அவர் ஏற்றுக்கொண்ட ஒரே இறைவன் (One God), யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதநூல்களில் விவரிக்கப்படும் இறைவன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தாமஸ் பெய்ன் ஹிந்து தர்மத்தைப் பற்றி எழுதியதாவோ, அதுபற்றிய அறிவு அவருக்கு ஏற்பட்டதாகவோ தெரியவில்லை. ஒருவேளை, சனாதன ஹிந்து தர்மத்தின் மெய்யியல் கொள்கைகளை அவர் படித்திருந்தால், நிச்சயமாக அவர் அதனை ஒப்புக்கொண்டு இருப்பார் என்று தோன்றுகிறது. சனாதன தர்மத்தில் அடிப்படையாக இருக்கும் இறைஒருமைக் கொள்கையும் (Oneness of God), அது சார்ந்து விரியும் தத்துவார்த்தச் சிந்தனைகளும் அறிவுக்கு ஏற்புடையவை என்பதே இதற்குக் காரணம். இக்கொள்கை ஆபிரகாமிய மதங்களின் ஓரிறைக்கொள்கையில் (Monotheistic God) இருந்து வேறுபட்டது.

“My own mind is my own church.” என்கிறார். அதாவது, “உள்ளம் பெரும் கோவில்”. “இறைவன் எனும் கருத்தியல் ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வுக்கு உட்பட்டது. அதனை யாராலும் முழுமையாக வரையறுத்து இன்னொருவருக்குக் கூற இயலாது.” என்பது சனாதனத்தின் அடிநாதம். இதனை ஒற்றியே, சாதன தர்மத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் ஒரே கருப்பொருள் பற்றி, வெவ்வேறு நோக்குகளில் எழுதப்பட்டுள்ளன. “இவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு உள்ளனவே?” என்று கேட்டால், “அவை அனைத்தையுமே ஒன்றாகக் கூட்டினால் கூட, பிரமம் எனும் மெய்பொருளின் மொத்த இயல்பை அறுதியிட இயலாது” என்று சனாதன அறிஞர்கள் பதிலளிக்கின்றனர்.

அனைத்து மதங்களிலும் சடங்குக்கும் சம்பிரதாயங்களுக்கும் இடமுண்டு. இதற்கு சனாதன தர்மமும் விலக்கல்ல. ஆனால், அவற்றால் அடையும் பலன் என்ன என்ற கேள்விக்கு, முழுமுதற்பொருளாகிய மெய்பொருள் என்று விடைபகர்வது சனாதனம் மட்டுமே. மற்றைய மதங்களில், மதநூல்களில், சொல்லப்பட்ட தெய்வம் எதுவோ, அதுவே அடைவதற்கு உரிய பொருள். அந்த உருவக இறைவன் கையில்தான் நமது மறுமை வாழ்வு உள்ளது. அபிரகாமிய மதங்களின் விதிமுறைகளை மீறினால், அந்த உருவக இறைமை தண்டனை கொடுத்துவிடும்.

“யூதர்கள் ஏகோவா எனும் இறைவன் மோஸஸிடம் நேடரியாக விதிமுறைகளைக் கொடுத்தார் என்கிறார்கள். பரிசுத்த ஆவியால் கை நகர்த்தப்பட்டு எழுதினோம் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள். ஜிப்ராயேல் எனும் தேவதை மூலம் நபிகள் பெற்றார் என்கிறார்கள் இஸ்லாமியர்கள். ஒவ்வொருவரும் மற்ற இரண்டு மதங்கள் (ஒரே இறைவனிடம் இருந்து) பெற்ற விதிமுறைகளை ஏற்க மறுக்கின்றன. நான் மூன்றையுமே ஏற்க மறுக்கிறேன்” என்கிறார் பெய்ன். இந்தக் கருத்தியலை ஒட்டி, நம் நாட்டில் இருக்கும் நாத்திக சிகாமணிகள் சிலர் “இஸ்லாமியர்கள் ஏசுவையும் சிவனைமும் கடவுள் இல்லை என்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாவையும் சிவனையும் கடவுள் இல்லை என்கிறார்கள். ஹிந்துக்கள் அல்லாவையும் ஏசுவையும் கடவுள் இல்லை என்கிறார்கள். நாங்கள் மூன்றையுமே கடவுள் இல்லை என்கிறோம்.” என்பார்கள்.

இதனை மேலோட்டமாகப் பார்த்தால் சரியான வாதம் என்று தோன்றலாம். ஆனால், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தல், இரண்டு உண்மைகள் புலனாகும்.

 1. இப்படிப் பேசும் நாத்தீகர்கள் மேலைநாட்டு இறைமறுப்புக் கொள்கைகளைப் படித்துள்ளனர். அதே சமயம், ஹிந்து ஆன்மீகத்தைத் துளிகூட உணரவில்லை. சனாதன தர்மத்தின் கொள்கைப்படி, சிவன், திருமால், முருகன் என்று எந்தப் பெயரைச் சொன்னாலும், அது உள்ளார்ந்த பொருளில் பிரமத்தையே குறிக்கும். மேற்கண்ட அனைத்தும் ‘நாம ரூபம்’ அதாவது ஒரு குறிப்பிட்ட உருவத்துக்கான பெயர்.
 2. ஹிந்து மதம் எந்தக் காலத்திலும் மற்றொரு மதத்தின் இறைமையை இல்லை என்று சொல்லியது கிடையாது. அதுவும் பிரமத்தின் இன்னொரு வடிவம்தான் என்று கூறுவது சனாதனம்.

மிகவும் எளிமையாக,

“ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி “ஓம் நமச் சிவாய”வென்பர்
“ஹரி ஹரி” என்றிடினும் அஃதே “ராம ராம”
“சிவ சிவ” என்றிட்டாலும் அஃதே யாகும்;
தெரிவுறவே”ஓம் சக்தி” என்று மேலோர்
ஜெபம் புரிவது அப்பொருளின் பெயரே யாகும்.”

என இதனை பாரதியார் கூறியுள்ளார். இந்த வரிசையில்

“பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்”

என்றும் பாரதி அறிவுறுத்துகிறார். இந்த சர்வ மத சமபாவம் பின்னாளில் மகாத்மா காந்தி, ஸ்ரீ அரவிந்தர் போன்றோர் கொண்டுவந்த கருத்தியல் என்று கூறுவோரும் உண்டு. ஆனால், அந்தக் கருத்தியலுக்குக் கருப்பொருளாக விளங்குவது சனாதன தர்மத்தின் அடிப்படைக் கொள்கைகள்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

“ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி”
“உண்மை ஒன்றுதான், அதனை அறிஞர்கள் பலவாறு பேசுகிறார்கள்”

இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளப் பெரிய அளவில் தத்துவ நூல்களைப் படிக்கவேண்டாம். நாம் தினமும் சொல்லும் “ஓம் நம சிவாய” அல்லது “ஓம் நமோ நாராயணாய” அல்லது “ஓம் சரவணபவாய நம” என்று எந்த மார்கத்தின் வார்த்தையை எடுத்துக்கொண்டாலும், அதனை மூன்று பகுதியாகப் பிரிக்கலாம்.

ஓம்- நாமரூபம் இல்லாத பிரமம்
சிவ, நாராயண, சரவணபவ- நாமரூபம்
நமோ/நம- வணங்குகிறேன்

“நாமரூபம் இல்லாத பிரமத்தினை, இன்ன நாமரூபமாக வணங்குகிறேன்” என்பதே இதன் பொருள்.

அடுத்து தாமஸ் பெய்ன் “REVELATION அதாவது, வெளிப்படுத்திய வார்த்தைகள் என்பவை, யாருக்கு அவை சொல்லப்பட்டதோ, அவருக்கு மட்டுமே “வெளிப்பட்டது” இரண்டாவது நபருக்கு அவர் சொல்லும்போது அது “சொல்லக் கேள்வி” என்று ஆகிறது. இதனை நம்பவேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. மோஸஸுக்கு இறைவன் பத்து கட்டளைகளைக் கொடுத்தார் என்று இஸ்ரேலிய மக்களுக்கு மோஸஸ்தான் சொல்கிறார். அவை தெய்வீகமாக வார்த்தைகள் என்பதற்கு எந்த அகச்சான்றும் இல்லை. அவற்றில் மனிதன் வாழ்வதற்கு சில நீதி போதனைகள் உள்ளன. அவற்றை எந்த ஒரு அறிவுள்ள மனிதனும் எழுதிவிடலாம்.” என்று கூறுகிறார்.

“இறைவன் எனக்குத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார். உங்களிடம் எல்லாம் பேச மாட்டார். அதனால் நீங்கள் நான் சொல்வதைக் கேட்டே தீரவேண்டும்” என்று மூன்று அபிரகாமிய மதங்களும், அவரவர் கொள்கைகளை வலியுறுத்துகின்றன. மோசஸ், சுவிசேஷ எழுத்தாளர்கள், முகம்மது நபி ஆகியோரிடம் சென்று யாரும் “நீங்கள் எப்படி இறைவனின் வார்த்தைகளை கேட்க முடிந்தது (அ) உங்கள் மூலம் அவை எப்படி வெளிப்பட்டன? அதேபோல் நாங்களும் உணர என்ன வழி? எங்களுக்கும் இறைவனிடம் நேரடியான தொடர்பு வேண்டும்.” என்று கேட்க முடியாது. அப்படி ஒருவேளை, எனக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்று யாரவது சொன்னால், அது படுபாதகமான செயல். அத்தகையவர்கள் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். ஒருவரியில் சொன்னால், அபிரகாமிய மதங்கள் “கேள்விகேட்காதே, உடனே, அப்படியே, முழுமையாக நம்பு!” என்று கழுத்தைப் பிடித்து வற்புறுத்துபவை.

அவ்வாறு நம்ப மறுத்தால், முடிவில்லா நரக நெருப்பு. இந்த நெருப்பில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி, அபிராகாமிய மதங்கள் சொல்லும் இறைவனை நம்ப வேண்டியது மட்டுமே. அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ மதம் இந்த அடிப்படையை வைத்துகொண்டு, “உன்னை நீ இருக்கும் மதத்தில் இருந்து கிறிஸ்தவத்துக்குத் திருப்புவது உனக்கு நான் செய்யும் மிகப்பெரிய நன்மை” என்று அழிச்சாட்டியம் செய்கிறது.
ஏசுவைப் பற்றிக் கூறும்போது தாமஸ் பெய்ன், அவர் போல ஒரு மனிதர் வாழ்ந்தது உண்மை என்றால், அது ஒரு உன்னதமாக நிலை. அந்த நிலையில் அவர் மட்டுமே வாழ்ந்தார் என்று ஒப்புக்கொள்ள முடியாது. அவருக்கு முன்னும், பின்னும் பல மனிதர்கள் அவரைப்போல வாழ்ந்தனர். அவர் கூறிய உயர்ந்த கருத்துகளுக்கு இணையான கருத்துகளையும் பலர் கூறியுள்ளனர். புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் பகுதியில் ஒரே ஒரு வரியைக்கூட ஏசு சொந்தமாக எழுதவில்லை. மாறாக, அவருக்குப் பல ஆண்டுகள் பின் வந்தவர்கள் எழுதினர் என்று கூறத்தான் ஆதாரம் அதிகரிக்கிறது.

“குறைந்தது, அத்தகைய ஒரு நல்ல மனிதரின் வாழ்வைப் பற்றிய பரப்புரை செய்திருந்தால் கூட, கிறிஸ்தவ மதம் மானுடத்துக்கு சில நன்மைகளை விளைவித்து இருக்கும். அவரது வாழ்வையும் வாக்கையும்விட கிறிஸ்தவ மதம் அவரது பிறப்பின் மீதும், மரணத்தின் மீதுமே அதிகக் கவனம் செலுத்துகிறது” என்று கூறுகிறார் தாமஸ் பெய்ன். இவர் கிறிஸ்தவக் கருத்தியலை மூன்று கூறுகளாகப் பகுக்கிறார். ஏசுவின் பிறப்பு, அது சம்மந்தப்பட்ட அதிசயங்கள். ஏசுவின் மரணம், அதன் தொடர்பான கொடூர தண்டனைகள், மரணத்துக்குப் பின் நிகழ்ந்ததாக சொல்லப்படும் அதிசயங்கள்.

எல்லா சுவிசேஷங்களும் ஒரே நேரத்தில் எழுதப்பட்டவை அல்ல. ஒன்றின் பின் ஒன்றாக அமைந்த வரிசையில் பிறப்புடன் தொடர்புடைய அதிசயங்கள் எவ்வளவு விரிவடைகிறதோ, அதே அளவு மரணத்தின் முன் நடந்ததாக விவரிக்கப்படும் துன்பங்களின் கொடூரத்தன்மையும் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அதிகரிக்கிறது. அதே சமயம், அவரது மரணத்தின் பின் நடந்ததாக விவரிக்கப்படும் அதிசயங்களின் கற்பனை வளமும் அதே அளவு அதிகரிக்கிறது. ஒருவர் வாழ்கையை அவரது செய்தியாக எடுத்துக்கொள்ளாமல், அவரது மரணத்தை பெரிதுபடுத்துவதுதான் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைச் சிக்கல் என்கிறார்.

பிறப்பு விஷயத்தில், கன்னி கர்பம் அடைவது என்பது எந்த விதத்திலும் யாராலும் நிரூபிக்க இயலாத ஒன்று. அதை அன்னை மேரியே நினைத்தாலும் அந்நாளில் நிரூபிக்க இயலாது. ஆனால், உயிர்த்தெழுதலின் விவரணம் அத்தகையது இல்லை. ஒருவர் சாவில் இருந்து உயிர்ப்பதும், காற்றில் ஏறி வானம் செல்வதும் பலரால் பார்க்க முடிந்த சம்பவம். இது நடுப்பகலில் நடந்துள்ளது. அதனால் குறைந்தபட்சம் ஜெருசலேம் நகரத்தில் உள்ள அனைவரும் இதைப் பார்த்திருக்க முடியும். இதற்குச் சரியான, அசைக்க இயலாத சரித்திர ஆதாரம் கொடுக்கப்பட வேண்டும். இயற்கைக்கு மாறான மரணம் என்பது நிரூபிக்கப்பட்டால், இயற்கைக்கு மாறான பிறப்பு என்பதையும் ஒப்புக்கொள்ள இடமுண்டு. இதற்கு இன்றுவரை சரியான ஆதாரம் இல்லை எனும் காரணத்தால் பிறப்பு அதிசயமும் அர்த்தமற்றுப் போகிறது. இதற்கு ஆதாரம் கொடுக்கக்கூடிய ஒரே மக்கள் யூதர்கள்தான். அவர்கள்தான், அந்தக் காலத்தில், அதே பகுதியில் வாழ்ந்தவர்கள். ஆனால், துரத்ருஷ்டவசமாக, யூதர்கள் இந்த சம்பவத்தைப் பொய் என்று கூறுகிறார்கள்.

இத்தகைய வலுவில்லாத அஸ்திவாரத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அமைப்புதான் கிறிஸ்தவ சர்ச். பிற மதங்களின் நம்பிக்கைகளைக் கட்டுக்கதை, கற்பனைகள் என்று சொல்லும் இவர்கள் நம்புவது மேற்கண்ட கருத்துகளைத்தான். அவை மட்டும் எப்படி ‘புனித நம்பிக்கை’களாக மாறுகின்றன என்பது ஆச்சரியம்.

கிரேக்க மதப் புராணத்தில் ராட்சசர்கள் ஜூபிடர் கடவுளுடன் போரிட்டனர். அவர்களில் ஒரு ராட்சசன் நூறு கற்களை ஒரே வீச்சில் ஜூபிடரை நோக்கி எறிந்தான். ஜூபிடர் தனது மின்னலை வைத்து அந்தக் கற்களை உடைத்தார்.டைபூன் எனும் அந்த ராட்சசனை எட்னா மலையின் கீழ் சிறைப்படுத்தினார். இது கிறிஸ்தவமோ யூதமோ தோன்றுவதற்கு சில நூறு ஆண்டுகள் முன்பே புழக்கத்தில் இருந்த ஒரு புராணம்.

கிறிஸ்துவப் பௌராணிகர்கள் “சாத்தான் கடவுளை எதிர்த்துப் போரிட்டான். அவனை கடவுள் தோற்கடித்து, ஒரு குழியில் சிறை வைத்தார்” என்கிறார்கள். பாவம் சாத்தானுக்கு ஒரு மலை கூடக் கிடைக்கவில்லை. முதல் கதையில் இருந்து இரண்டாம் கதை வந்தது என்று சொல்லத்தேவையில்லை. இந்தப் புள்ளிவரை, கிறிஸ்தவ மதமும், அதற்கு முந்தைய கால மதங்களின் கருத்தியலையே தானும் சொல்கிறது.

ஆனால், இதற்கு மேல் நடந்த விஷயங்களில்தான் மிகப்பெரிய மாறுபாடு துவங்குகிறது. கதையின் இரண்டாம் பகுதியாக, சாத்தான் Vs கடவுள் பார்ட் 2 பழைய ஏற்பாட்டில் நடக்கிறது. ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஏமாற்ற வருகிறான் சாத்தான். ஒரு ஆப்பிளை உண்ணவைத்து விடுகிறான். அந்த ஆப்பிளை உண்டதால் மொத்த மானுடமும் நாசமாகப் போனது. என்பதுதான் இரண்டாம் பாகம்.

மொத்த மானுட இனத்தையுமே பாவத்தில் தள்ளிய சாதனைக்குப் பிறகாவது, சாத்தனை இவர்கள் ஓய்வெடுக்க விட்டு இருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகும், பல இடங்களில் சாத்தனை வேலைவாங்கி இருக்கிறார்கள். ‘ஒருவேளை, சாத்தான் இல்லை என்றால், இவர்களுக்கும் வேலை இல்லையோ?’ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால்தான், உலகில் இருக்கும் கிறிஸ்தவர்களைத் தவிர, யூதர்கள், இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள், நாத்தீகர்கள் என்று எல்லோரையும் தருவதாகச் சொல்லி, இன்றும் சர்ச்களில் சாத்தானை இருக்க வைத்துள்ளனர்.

மேற்கண்ட நிகழ்வில் கடவுள் எந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டு உள்ளார் என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் சொல்லும் கடவுளின் சேவகனாக இருந்த ஒருவன், கடவுள் அவனைத் தள்ளிய குழியில் இருந்து, தானே வெளியே வர முடிகிறது. வந்து, கடவுளின் திட்டத்தையே முறியடிக்கவும் அவனுக்குச் சக்தி இருக்கிறது. இதன் இடையில், “நீங்கள் இந்தக் கனியை உண்டால் மரணமடைவீர்கள்” என்று இறைவன் பொய் சொல்வதாக வேறு ஒரு தகவல்.

இறைவன் நேரடியாக “நீங்கள் இந்தக் கனியை உண்டால், எனது அன்பையும் ஆதரவையும் இழந்துவிடுவீர்கள்.” என்று உண்மையைச் சொல்லி இருக்கலாம். அப்படிச் சொன்னதையும் மீறி, அவர்கள் உண்டிருந்தால், கடவுளின் உண்மையான வார்த்தையை மீறிய ‘பாவம்’ அவர்களை சேர்வது நியாயம். கடவுளும் பொய் சொல்லி, இவர்களும் அதை மீறி, இடையில் சாத்தான் உண்மையை சொல்லி… என்ன குழப்பமாக கதை இது?

இதை அறிவுள்ள யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், இந்த விசித்திரக் கதையை நம்புவது குற்றம் இல்லை (முட்டாள்தனத்தைக் குற்றம் என்று சொல்வது தவறு). ஆனால் அதே இறைவன் மீண்டும் வந்து, தானே உருவாக்கிய பாவத்துக்காக, தானே தனக்கு பலியாக ஆனார் என்று அடுத்த கட்ட சம்பவம். இந்தச் சம்பவத்தில், இறைவன் நம் மீது வைத்துள்ள அபாரக் கருணை தெரிவதாக ஒரு மாயை கட்டமைக்கப்பட்டுள்ளது. இறைவன் இல்லை என்றோ, அல்லது அவருக்குக் கருணை இல்லை என்றோ நினைக்கவேண்டாம். ஆனால், தானே உருவாக்கிய ஒரு சிக்கலுக்கு, தானே தீர்வு சொல்லும் இறைவன், அத்தோடு கதையை முடித்திருப்பார்.

மேலும், “உங்களுக்குப் பாபம் வருவதற்கே நான்தான் காரணம். அதை நீக்க நானே பிராயச்சித்தம் செய்தேன். ஆனால், நீங்கள் தொடர்ந்து அதை ஒப்புக்கொண்டு என்னை வணங்க வேண்டும். இல்லையென்றால், நான் உருவாக்கிய சிக்கலில் இருந்து நீங்கள் விடுபெற முடியாது.” அந்தக்கதையை நீட்டிக்கச் செய்தது அபத்தத்தின் உச்சம். ஆனால், இந்தக் கதை சொல்லப்படும் விதமும், அதில் உள்ள வர்ணனைகளும் பல மனிதர்களை கட்டிப்போடும் தன்மை கொண்டது. அதை மீறிச் சிந்திப்பவர்களை, அல்லது கேள்வி கேட்பவர்களை அழிக்கும் பலமும் இதனை நம்புவோருக்கு உண்டு.

ஆட்சி, அதிகாரம், பணம் என்று நீளும் இந்த பலத்தை நீக்கினாலொழிய மானுடம் உய்வது கடினம். இறைவனுக்கு ஆபிரகாமிய மதங்களில் சொல்லப்பட்ட குணங்கள் இருந்தால், அவர் இறைவனாகவே இருக்க முடியாது. ஒரு சக்திவாய்ந்த மனிதன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அத்தகை இறைவனை வணங்கும் மனிதனும் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது மனித இயல்பை இழந்துவிடுவான். அளவுக்கு மேல் அபிரகாமிய மதங்கள் எப்போதெல்லாம் சக்தி பெற்றனவோ, அப்போதெல்லாம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுகொண்டனர் என்பதுதான் வரலாறு. இதிலே ஆன்மிகம் எல்லாம் சம்மந்தமே இல்லாத விஷயம்.

2 Replies to “ஆபிரகாமிய மதங்களும் ஆன்மீகமும்”

 1. பெந்தகோஸ்ட் எனும் கொடிய பேய்கள் ஜாக்கிரதை !!

  பேய்களை ஆங்கிலத்தில் “கோஸ்டுகள்” என்று சொல்வார்கள்.

  அந்த கோஸ்டுகளே பயப்படுவது “பெந்தகோஸ்டை” பார்த்துதான்.

  உங்கள் பக்கத்து வீட்டில் பெந்தகோஸ்டுகள் வந்து விட்டால் உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று வீட்டை காலி செய்து செல்வது, இல்லை விட்டை தீ வைத்து கொளுத்துவது. இந்த இரண்டையும் செய்யாமல் நீங்கள் இருக்க விரும்பினால் உங்களை படைத்த இறைவன் தான் உங்களை காப்பாற்ற வேண்டும்.

  பெந்தகோஸ்டுகள் கிறிஸ்துவ மதத்தில் ஒரு பிரிவு. ஆனால் தங்களை கிறிஸ்துவர்கள் என்று பெரும்பாலும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். தாங்கள் யேசுவிடம் எந்த இடைத்தரகர் இல்லாமல் நேராக பேசும் வல்லமை உடையவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.

  பெரும்பாலும் இவர்கள் உங்கள் வீட்டுக்குள் ஒரு சிறு புத்தகத்தோடு நுழைவார்கள். சாந்தமான முகத்தோடு “நமக்கு ஏன் வாழ்க்கையில் இத்தனை பிரச்சினைகள்” என்ற கேள்வியோடு ஆரம்பிப்பார்கள். நீங்கள் சராசரி நடுத்தர வர்க்கமாய் இருந்தால், அப்பாவியாய் ஒரு விநாடி யோசித்தால் போதும். உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் இலவசமாய் தீர்க்க கூடிய தீர்வுகளை சொல்ல தொடங்கி விடுவார்கள்.

  இந்த பெந்தகோஸ்டுகள் அதிகமாக பாமர மக்களையே குறி வைப்பார்கள். ஒவ்வொரு பெந்தகோஸ்டும் ஒரு ட்ராகுலாவை ஒத்தவர்கள். அதாவது ஒரு ட்ராகுலா ஒரு மனிதரை கடித்து விட்டால், கடிபட்டவர்களும் ட்ராகுலாவாக மாறிவிடுவார், பிறகு பல ட்ராகுலாக்கள் சேர்ந்து பலரை கடிக்க தொடங்கிவிடும். அது போல் பெந்தகோடுகளால் மூளைச் சலவை செய்யப் பட்டவர்களை மீட்பது கடினம். மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் மற்ற பலரை செய்யத் தொடங்குவார்கள்.

  இவர்களோடு நீங்கள் தத்துவ ரீதியாக எத்தனை விவாதித்தாலும் கடைசியில் இவர்கள் சொல்வது. “நீங்கள் ஆண்டவரின்
  “மிராக்கில்களை “அனுபவத்தில் உணர்ந்ததில்லை, அதனால்தான் இப்படி பேசுகிறீர்கள் என்பார்கள். பெந்தகோஸ்டுகளின் அடிப்படையாக இரண்டு வார்த்தைகள் முக்கியம். ஒன்று “மிராக்கிள்” மற்றது “பேய் பிசாசு”. பேய் மட்டும் இல்லையென்று நிரூபிக்கப்பட்டால் பெந்தகோஸ்டு சித்தாந்தமே இல்லாமல் போய்விடும்.

  இவர்களிடம் யாராவது உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தால் போதும், அவர்களை ஜெபம் (ஜபம் அல்ல)
  செய்து சரியாக்குகிறேன் என்று கூட்டமாக வந்து கத்த தொடங்கிவிடுவார்கள். இந்த மனநோயாளிகள் ஹிஸ்டீரியா வந்தவர்கள் போல் கத்தி செய்யும் ஆர்பாட்டத்தில் சிலருடைய உடல்நிலை மோசமாககூடிய வாய்ப்புகள் அதிகம். தப்பித் தவறி அந்த நபர் மருந்துகளால் குணமாகினால் கூட, அது இறைவனின் மகிமை என்று சொல்லி அவர்களை மதமாற்றி விடுவார்கள்.

  பெந்தகோஸ்டுகளின் வலைகளில் விழுந்தவர்களின் துயரக் கதைகள் பலவிதம். முதலில் சாதாரணமாய் தொடங்கும் இவர்கள் போதனைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விஷமாக ஏற்றப்படும். நம்முடைய பண்பாட்டு பழக்க வழக்கங்களான கோலமிடுவது, பொட்டு வைப்பது, நகை அணிவது, நம் தெய்வங்களை வணங்குவது என்று ஒவ்வொன்றையும் களைவார்கள். இறுதியில் முழுக்க முழுக்க மூளை சலவை செய்யப்பட்ட பிணங்களை போல், திரும்ப திரும்ப தங்கள் போதனைகளையே சொல்லும் மனநோயாளிகள் போல் மாறிவிடுவார்கள்.

  தனிமையில் இருப்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், ஏழைகள், நோயாளிகள், உலக அறிவு இல்லாத அப்பாவிகள் ஆகியோர் இவர்களின் எளிதான இலக்கு. பெந்தகோஸ்டுகள் அதிகமாக ஆசிரியர்களாகவும், மருத்துவமனைகளில் நர்சுகளாகவும் இருந்து கொண்டு எளிதாக மாணவ மாணவிகளையும், நோயாளிகளையும் தங்கள் வசமாக்குகிறார்கள்.

  பெந்தகோஸ்டுகளுக்கு நிதியுதவி பெரும்பாலும் அமேரிக்கா, ஸ்பெயின் மற்றும் சில ஐரோப்ப நாடுகளில் இருந்தும் வருகிறது. இந்த நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை இயேசுவின் கொள்கையை பரப்புவதற்காக என்று நினைத்துக் கொண்டு பலர் வழங்குகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த வருமானத்தை இலக்கு வைத்து குடிசை தொழில் போல மூலை முடுக்குகளில் எல்லாம் “ஜெப வீடுகள்” பெருகி விட்டன. பால் தினகரன், தயிர் தினகரன் என்று பலர் இந்த வருமானத்தால் பல கோடிகள் சம்பாத்தித்து விட்டனர். பல தொலைக்காட்சிகளில் இவர்களின் பிரசங்கங்கள் முக்கிய நேரங்களிலும் தினந்தோறும் ஒளிப்பரப்பாகின்றன. எல்லா நகரங்களிலும் “சுவிசேஷக் கூட்டங்கள்” என்று பல கோடிகள் செலவு செய்து மக்களை கலாசார ரீதியாக மாற்றும் கேடித்தனம் நடந்துக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டை கலாச்சார ரீதியாக மாற்றிவிட்டால், நாட்டையே தங்கள் ஆளுமைக்கு கொண்டு வருவதற்கு ஈடாகும் என்பதை மேற்கத்திய சதிகாரர்கள் கணக்கு போடுகிறார்கள்.

  இவர்களை பற்றி விவரம் அறியாமல் தங்கள் மகன்களையும், மகள்களையும் இழந்த (கலாச்சார மற்றும் பண்பாடு ரீதியாக) குடும்பங்களின் சோகக் கதைகள் ஆயிரம்.

  இந்த கொடிய “கோஸ்டு” களிடம் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள விழிப்போடு இருங்கள், மற்றவர்களையும் விழிப்படைய செய்யுங்கள்.

 2. பாஜக இறங்கி அடிக்க தொடங்கி விட்டது. நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் இனி வரிசையாக வரத் தொடங்கும்.

  இளங்கலை வரலாறு (B.A. History) பாடத்திற்கான புதிய பாடத்திட்டத்தை (சிலபஸ் என்பது எளிய தமிழ் வார்த்தை) வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு.(UGC)

  ♦️ முதல் பேப்பரின் தலைப்பே “Idea of Bharat” – பாரதம் என்ற கருத்து! சிக்ஸர். வசுதைவ குடும்பம், பண்டைய பாரதம் விஞ்ஞானம் மற்றும் கலாசாரத்தில் அடைந்திருந்த உச்சங்கள் என சகலமும் உள்ளன – தனித்தனி அலகுகளாக.

  ♦️ சிந்து சமவெளி நாகரிகம் என்று இதுவரை வழங்கப்பட்டு வந்த மோசடித்தனம் சரி செய்யப்பட்டுள்ளது. இனி அது தனது இயற்பெயரான சிந்து சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

  ♦️ “ஆரியப் படையெடுப்பு என்ற கட்டுக்கதை” (Myth of Aryan Invasion Theory) என்ற தனியாக பாடமே உள்ளது….. (ராட்சத சிக்ஸர்.பந்து இப்போது பூமிக்கு வெளியே சென்று விட்டது.)

  ♦️ “சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் முக்கிய அம்சங்கள், அதன் தொடர்ச்சி, வீழ்ச்சி மற்றும் நீடித்து இயங்கும் தன்மை” என ஒரு பாடம். நன்கு கவனிக்க. நமது இன்றைய பண்பாடு என்பது ஒரு தொடர்ச்சியே என்பதை வலுவான ஆதாரங்களுடன் நிறுவி மாணவர்கள் இனி கற்பார்கள். படையெடுத்து வந்தவனும் பின்வாசலில் வந்து ஆண்டவனும் வந்து தான் நமக்கு “நாகரிகம்” கற்றுக் கொடுத்தான் என்றால் இனி வாய்க்கு பதிலாக ஆசனவாயால் சிரிப்பார்கள் வருங்கால இளைய தலைமுறை.

  ♦️ இந்தியாவின் ஒவ்வொரு பகுதியின் அரசுகள் குறித்து பேசப்படுகின்றன. விஜயநகர பேரரசு குறித்து தனியாக பிரிவே உண்டு. ரஞ்சித் சிங் (பஞ்சாப்), வங்க அரசுகள், அவத் பேரரசு என சகலமும் தனித்தனி பாடங்களாக உள்ளன. இதுநாள் வரை அறியவே அறியாத மௌகரி வம்சம், கஹதவாலா வம்சம் ஆகியவை குறித்து விரிவாக பேசப்படுகிறது.

  ♦️ கிழக்கிந்திய கம்பெனியின் ஒவ்வொரு அம்சமும் விரிவாக அலசப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பம்சம். வெள்ளையர் அல்லாதவர்களை ஆள்வது வெள்ளையர்களின் கடமை, அது வெள்ளையர்களின் சுமை என்ற அயோக்கியத்தனம் அலசப்படுகிறது.

  ♦️ இந்திய வரலாற்றாசிரியர்கள் குறித்து முதன்முறையாக விரிவான தொகுதிகள் உள்ளன.

  முழுதுமாக தரவிறக்கம் செய்து படித்தால் இன்னும் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.

  இனி பாருங்கள், சகல மிருகங்களும் ஓசை எழுப்பும். வெளிநாட்டில் இருக்கும் மலம் துடைக்கும் காகிதங்கள் கட்டுரைகளாக எழுதித் தள்ளும். தெள்ளத்தெளிவான ஆங்கிலத்தில் அந்நிய கைக்கூலிகள் ஆங்கிலத்தில் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் வரை கத்துவார்கள். நமக்கெல்லாம் நல்ல தரமான பொழுதுபோக்குகள் கிடைக்கும்.

  கனவிலும் நிகழ இயலாததை நிஜ உலகில் சாத்தியமாக்கும் மோதி தலைமையிலான பாஜக அரசிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *