தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – I

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர்ந்தவுடன், தங்களது பிரிவினைவாதத்தை செயல்படுத்த வார்த்தை விளையாட்டை விளையாட முனைந்துள்ளார்கள்.   1949-லிருந்து  தி.மு.க.வின் தலைவர்கள் பயன்படுத்தாத  ஒன்றியம் என்ற ஒரு வார்த்தை தற்போது அரசாங்க ஆவணத்தில் முன் மொழியப்படுகிறது.   தற்போது   பயன்படுத்தப்படும் யூனியன் என்ற வார்த்தைக்கு உள்ளார்த்தம் என்னவென்றால், தனி தேசியமான நான்,  அதாவது தமிழ்நாடு விருப்பப்பட்டு, ஒரு சவுகரியத்துக்காக உன்னோடு இருக்கிறேன்.  இந்தியாவோடும் இருக்கிறேன்.  எந்நேரமும் நான் உடைத்துக் கொண்டு தனியே போகலாம்.  சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்தது போல என்பதாகவே பார்க்கப்படுகிறது  தி.மு.க. பயன்படுத்தும்.  ஒன்றியம் என்பது பிரிவினை சிந்தனையின் வித்து.  தேசிய சிந்தனையும், தேசநலனுமே பெரிதென்று கருதும் தமிழ்நாட்டில், அதன் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பயன்பாடே ஒன்றியம் என்ற சொல்.   இந்நிலையில் இது பற்றி ஒரு முழு விவாதம் நடத்தப்பட வேண்டும்.    பல்வேறு தனிதமிழ்நாடு கோரும் அமைப்புகள் பற்றி விவாதிப்பதற்கு முன்  தி.மு.க.வின் உள்நோக்கம்  தனி தமிழ்நாடு என்ற சிந்தனை உண்டு என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

                1967க்கு பின்னர், தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துகள்,  தற்போது பல மடங்கு  அதிகரித்துள்ளது.  இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு, பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது.   தமிழர் என்றொரு இனமுன்டு,  அதற்கென ஒரு தனி குணம் உண்டு என் போர் பரணி பாடியவர்கள்,  பிரிவினையை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுகிறார்கள்.    மத மாற்றம் என்ற பெயரில் ,  இந்த மண்ணின் கலாச்சாரம்,  பண்பாட்டை சீரழிக்கும் விதமாக  செயல்படும் கிறிஸ்துவ மிஷனரிகள்,  முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள்.   இவர்களை மிஞ்சும் வகையில்  மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன.   இதுவே தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்களாகும்.

             தனிநாடு கோரிக்கை  –  திராவிட நாடு திராவிடருக்கே,  அடைந்தால் திராவிட நாடு இல்லையோல் சுடுகாடு ,  தனித் தமிழ்நாடு,  போன்ற கோரிக்கைகள் தமிழகத்தில்  அவ்வப்போது எழுப்படுகிறது.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தனிநாடு கோரிக்கையும்,  நாட்டை பிளவுப்படுத்தும் சிந்தனையும் வெளிப்படுகிறது.  பல மேடைகளில், தமிழர்கள் இல்லாத நாடுமில்லை,  தமிழருக்கு என்று ஒரு நாடுமில்லை  கோஷமிடுவது உண்டு.   2018 மார்ச் மாதம், ஈரோட்டில் திரு. ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசும் போது.  தென் மாநிலங்கள்  தனிநாடு கோரிக்கை  வைக்குமானால் அதை வரவேற்பதாக தெரிவித்தார். (  he would welcome any attempt by the South Indian States to make a demand for a separate country)   1963-ல் பிரிவினைவாத தடை சட்டம் கொண்டு வந்தவுடன், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, “ கோரிக்கைதான் கைவிடப்பட்டது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” , எனவே திராவிடநாடு கோரிக்கையை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது  என அண்ணாதுரை  கூறினார்.   தமிழகத்தில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கு நேரடியாகவும். மறைமுகமாகவும் தி.மு.க. ஆதரவு அளித்து வருகிறது.  1949-ல் தி.மு.க. தோன்றிய  சமயத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய  நான்கு தென் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம்  திராவிட நாடு என்ற பெயரில், முழு இறையான்மையுள்ள தனி நாடாக இந்துஸ்தானத்திலிருந்து பிரிந்து இயங்க வேண்டும் என்ற கொள்கை முழு  மூச்சுடன் வலியுறுத்தப்பட்டு வந்தது  என்பதை மறந்து விட இயலாது.

                திராவிட முன்னேற்ற கழகம்  தோன்றுவதற்கு முன்பே, 1926 பிப்ரவரியில் மாநிலங்கள் அவையில்,  சி.சங்கரன் நாயர் மற்றும் பி.சி.தேசிகாச்சாரி என்பவர்கள் , சென்னை மாகாணத்தில் அடங்கியுள்ள தமிழ் பேசும் மாவட்டங்களை மட்டும் தனியாகப் பிரித்து முழுத் தன்னுரிமை உள்ள தனி மாநிலமாக இயங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் (Constitution of Tamil Districts in the Madras Presidency into a province with complete Self-Government )  என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.  15.3.1926-ல் மாநிலங்கள் அவையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ( கோப்பு எண் இந்திய அரசு உள்துறை எண் 241- 1926 பொது )

                ஐந்தாண்டு கழித்து 1931- டிசம்பரில் சி.சங்கரன் நாயர் மீன்டும் ஒரு தீர்மானத்தை மாநிலங்கள் அவையில் கொண்டு வந்தார்.  ” இந்திய கவர்னர் ஜெனரல்  அவர்களுக்கு இந்தப் பேரவை பின் கண்ட முடிவை இந்திய விவகாரங்களுக்கான செயலாளருக்குப் பரிந்துரை செய்து இந்தியாவில் உள்ள எல்லா மாகாணங்களும் முழுத் தன்னுரிமை பெற்றவையாக அமைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன் அல்லது குறைந்தபட்சம் எந்த எந்த மாநிலங்கள் அதற்குத் தகுதி வாய்ந்தனவையாக இருப்பதாக இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் முடிவு செய்கிறாரோ அவற்றுக்கு முழுத்  தன்னுரிமை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். .   மேற் கண்ட தீர்மானத்தை 16 பேர்கள் எதிராக வாக்களித்து தோற்கடித்தார்கள்.   

                தனித் தமிழ்நாடு கோஷம் எழுந்த சமயத்தில்,  சென்னை அடையாறு பகுதியில் உள்ள செட்டிநாடு மாளிகையில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.  அதில் பங்கேற்ற தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் பலரும், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் எங்கள் கதி என்ன? என்று கேள்வியை கேட்க துவங்கியதின் காரணமாகவே திராவிட நாடு திராவிடருக்கே என்ற புதிய கோஷம் எழுந்தது.   இந்நிலையில்  1942 மார்ச்சு மாதம் இந்தியாவில் வகுப்புவாரியாக சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைப் பிரித்துக் கொள்வதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு குழு இந்தியா வந்தது.   30.3.1942-ல் திராவிட கழகத்தவர்கள் இந்த குழுவைச் சந்தித்து, ,  சென்னை மகாணத்தை மட்டும் தனி மாகாணமாகப் பிரித்து, மாட்சிமை தாங்கிய ஆறாம் ஜார்ஸ் மன்னரின் நேரடி ஆளுமையின் கீழ் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள்.   இது இவர்களின் அடிமை புத்தியை காட்டுகிறது.   

               1938 செப்டம்பர் 11ந் தேதி தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் ஏற்பட்டது.   அதே ஆண்டு டிசம்பர் மாதம் 27ந் தேதி வேலூரில் நடந்த தமிழர் மாநாட்டில் தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றி பேசப்பட்டது.  அதாவது தனிதமிழ்நாடு ஒன்றே தீர்வு என முடிவு எடுக்கப்பட்டது.   1938  டிசம்பர் மாதம் 29ந் தேதி ஜஸ்டிஸ் கட்சியின் சென்னை மாகாண மாநாட்டில் தமிழ் நாடு தனி நாடாக வேண்டும் என வலியுறுதப்பட்டது.   1939 டிசம்பர் 10 ந்தேதி தமிழ்நாடு தமிழருக்கு என்ற திட்டத்தை விளக்கி விழா எடுக்கப்பட்டது.    1942-ல் கிரிப்ஸ் குழுவின் முன், பெரியார்,  ஊ.பு.அ. சௌந்தரபாண்டியன், முத்தையா, சாமியப்பன் ஆகியோர்   திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினர்கள்.  ஆனால், அத்தகைய கோரிக்கையைச் சட்ட மன்றத்தில் தீர்மானமாகவோ அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாகவோதான் எழுப்ப முடியும் என்று கிரிப்ஸ் குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. பெரியார், திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு கேட்டு முகமது அலி ஜின்னாவைச் சந்தித்தார். திராவிடஸ்தான், இந்துஸ்தான், பாகிஸ்தான், பெங்களிஸ்தான் என்று நாடு நான்காகப் பிரிக்கப்பட வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். .  ஜின்னாவின் கருத்துக்கு ஆதரவாகவே பெரியார் நடந்து கொண்டதாக பின்னர் கூறப்பட்டது. 

                தனித் தமிழ்நாடு கோருபவர்கள், வன்முறையை தூண்டும் விதமாக பல மேடைகளில் பேசுகிறார்கள்.  ஆனால் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுவதில்லை.   இலங்கைத் தமிழர் சிக்கல் அனைத்துலகப் பார்வைக்கு வளர்ந்துவிட்ட நிலையில், தமிழ்த் தேசிய இனம்ஒரு புதிய எழுச்சி பெற்றுத், தமிழர்களுக்கென ஒரு தனிநாட்டைச் சமைத்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.  எனவே இந்தக் கால நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத் தமிழர்களும், என்றோ எழுப்பப்பட்டுப் பலவகையான அரசியல் சட்டச் சூழல்களால் கைவிடப்பெற்ற அல்லது தள்ளி வைக்கப் பெற்ற, தனித்தமிழ்நாடு கோரிக்கையை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது என்றே நாம் கருதுகிறோம் ( ஆதாரம் வேண்டும் விடுதலை பக்கம் 192,  தமிழ்நிலம், இதழ் எண் 30, சனவரி 1984)   என வெளிப்படையாக பிரிவினையை முன் வைத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த பின்னர் கூட, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் கருணாநிதி தி.மு.க. ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இது பிரிவினைவாதிகளுக்கு துணை போகும் அரசாகவே  தி,மு.க. இருந்தது.

                ஒரு மாநாட்டில் கோவை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கஸ்தூரி,  தனித் தமிழ் மட்டும் வந்து விட்டால் போதுமா என்று கேட்டார்கள்.  அவரகட்குச் சொல்வேன், சான்றாகத் தினமணியில்” கல்வி வசதிகளை விஸ்தரிக்க முடிவு என்று போடுகின்றான்.  பார்ப்பான் எழுதுகிறான்.   இப்படி விடுதலை ஏன் அப்படி எழுத வேண்டும்?  தினமணி அலுவலகத்திலிருந்தே தனித்தமிழ்க் கொள்கையைப் பற்றித் தெரிந்து போக நான்கு பேர்கள்  வந்தனர் .  அவர்கள் போகும் போது,  ” இதைச் சொல்லுங்கள்” என்று சிவராமனுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தனுப்பினேன்.  இன்னும் கொஞ்ச நாட்களில் தன் போக்கைத் தினமணி மாற்றிக் கொள்ளவில்லையானால் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் போகும்.  இன்று சொன்னால் தினமணி அலுவலகம் நாளை இல்லாமல் போய்விடும்.  ஒற்றர்கள் குறித்துக் கொள்ளலாம் தினமணி மட்டுமன்று , வேறு எந்த அலுவலகமும் இருக்காது  ( ஆதாரம் வேண்டும் விடுதலை பக்கம் 121)  என்ற  வன்முறை பேச்சு  பற்றி கருத்துக்கள் சொல்லக் கூட தி.மு.க.வினர் எவரும் முன்வரவில்லை.   இதைப் போலவே,  தனி்த்தமிழ்நாடு கோருபவர்களின் பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக பல இடங்களில் பேசப்பட்டது.   இதற்குரிய நடவடிக்கை எடுக்காததின் விளைவு,  தமிழகத்தில் பல பகுதிகளில் பிரிவினைவாதிகளின் கொட்டம் கொடி கட்டி பறக்கிறது. 

தனித் தமிழ்நாடு கோரிக்கை என்பது தமிழகத்தில் தி.முக. ஆட்சிக்கு வந்த தினத்திலிருந்து  பல்வேறு திசைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் பிரிவினையை கோரும்  அமைப்பையோ அல்லது அதன் தலைவர்கள்  மீது சட்டம் பாயவில்லை.   10.6.1972 மற்றும் 11.6.1972 –ல் திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்,  தமிழகப் பிரிவினைக் கொள்கையை வலியுறுத்துவதற்கும், செயற்படுத்துவதற்கும்  தமிழக விடுதலை இயக்கம்  எனுமோர் இயக்கத்தை அமைப்பது  என்று கூறப்பட்டது  ( ஆதாரம் வேண்டும் விடுதலை பக்கம் 109)   பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்கள் வன்முறையை தூண்டும் விதமாக பேசினார்கள்.   .

1975-ல் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனப்படுத்திய போது,  தமிழகத்தில்  கருணாநிதியின்  ஆட்சியிருந்த  தொழில் துறை அமைச்சரான க.ராஜராம் ,  அமெரிக்க தூதரகத்தின்  மூத்த அதிகாரியை சந்தித்தாகவும்,   தற்போது உள்ள சூழ்நிலையில்,  இந்திரா காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால்,  தமிழ்நாடு தனியாக பிரிந்து போக , அமெரிக்க உதவி புரியுமா என கேட்டதாகவும்,  அதற்கு  முடியாது என பதில் கொடுத்தாகவும்,  விக்கிலீக்ஸ் இணைய தளம்  செய்தி வெளியிட்டது.  இந்த செய்திக்கு  தி.மு.க. சார்பாக எவ்விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை.    கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமல் அமைச்சர் ராஜாராம் சந்தித்திருக்க மாட்டார் என்பது மட்டும் உண்மையாகும். 

தமிழகத்தில்  தனி நாடு  கோருபவர்கள்  இரண்டு  முக்கியமான விஷயங்களை மக்கள்  முன் வைத்து,  தங்களது  பிரிவினைவாதத்தை  விதைப்பார்கள்.   ஒன்று மொழிக்  கொள்கையில்,  இந்திக்கு எதிராக போர் கொடி உயர்த்துவது,  இரண்டாவது  விடுதலை புலிகளை முன்னிலைப்படுத்தி,  தமிழ் ஈழம் மலர்ந்திடும், அச்சமயத்தில்  தமிழகமும் பிரிந்து ஈழத்துடன் இணைந்து விடும் என்ற கருத்தையும் விதைப்பார்கள்.  பெரும்பாலான  தனி தமிழ்நாடு கோருபவர்கள்  மேற்கூறிய இரண்டு விஷயங்களையே  முன்னிலைப்படுத்துகிறார்கள். 

தனி தமிழ்நாடு கோரிக்கை வைப்பதற்கு முன் சுய நிர்ணய உரிமை பற்றிய விவாதம் நடைபெற்றது.   நாடாளுமன்றத்திலும்,  சட்ட மன்றத்திலும்  திருவாளர் அண்ணாதுரை ஆற்றிய உரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.   சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையில் நாங்கள் தனி நாடு அமைய வேண்டும்.  நாம் தனிப்பட்ட பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற றேரத்தில் பிரிவினை என்று நீங்களாகத் தப்பு  அர்த்தம் எடுத்துக் கொண்டு ஐயையோ  உள்ளதிலிருந்து பிரிக்கலாமா? என்று நீங்கள் எடுத்துக் கொண்டு அடிப்படையை ஆராய மறுக்கிறீர்கள்.   ( ஆதாரம்  இராஜ்ய சபையில் இன முழக்கம்  பக்கம் -53)

பொதுப்படையாக பேசும் போது  கொச்சை மொழியில் பிரிவினை என்று சொல்லப்பட்டாலும்,  இருப்பதிலிருந்து பிரிந்து எடுப்பது அல்ல.  தனியாக இருந்ததை, யாரோ எடுத்துக் கொண்டு போய் இணைத்து விட்டிருக்கிறார்கள்.  ,  இந்த இணைப்பு நல்லதல்ல என்று தோன்றியிருப்பதால் அதிலிருந்து விலக வேண்டும், தனித்து இயங்க வேண்டும், தனி அரசாக வேண்டும் என்ற சொல்கிறோம்.  ( ஆதாரம் இராஜ்ய சபையில் இன முழக்கம்  பக்கம்  53 )  

மேலும் அண்ணாதுரை பாகிஸ்தான் பிரிவினையின்  போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணத்தை கூறியுள்ளார்.  ” பிரிவினையினால் ஏற்பட்ட பாகிஸ்தானைப் பார்ப்போம் என்று சொல்லுகிறார் நிதி அமைச்சர், பாகிஸ்தானைத்தான் பார்ப்போம்.  பாகிஸ்தான்  பிரிவினையினால் ஏற்பட்ட பயங்கர சம்பவத்திற்குக் காரணம்,  ஏற்பட்ட சோகத்திற்குக் காரணம், பிரிவினையினால்  ஏற்பட்டதல்ல – பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருக்க வேண்டிய இந்துக்கள் பாகிஸ்தானத்திலும்,  பாகிஸ்தானுக்குச்  சொந்தக்காரர் என்று நீங்கள் சொல்லுகிற முஸ்லீம்களும்,  இந்தியாவில் இருந்த காரணத்தினால் இந்த கலவரங்கள் ஏற்பட்டன.  அங்கு ஏற்பட்டது பிரதேசப் பிரிவினையே தவிர மக்கள் பிரிவினை அல்ல.  ( ஆதாரம்  இராஜ்ய சபையில் இன முழக்கம்  பக்கம்  53 )

தி.மு.க. பிரிவினையை கைவிடவில்லை,  அதற்குறிய வழிகளில் முயலுவோம் என அண்ணாதுரை நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டுள்ளர்.  ” இனி பிரிவினை இல்லை என்று சொன்னார்.  அப்படி அவர் சொன்னதிலிருந்து பார்க்கும் போது  முன்பு ஏதோ ஒரு பிரிவினைக்கு வழி இருந்தது  போலவும், அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஊகிக்க முடிகிறது.   எது எப்படியிருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள்ஈ சூழ்நிலை இவர்களை நிச்சயம் இணங்க வைக்கத்தான் போகின்றது.  நாங்கள் அந்தச் சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டு வருகிறோம்.  நேரம் வருகின்ற காலத்தில் அது தானாகவே பயனைக் கொடுக்கும்”.  என கூறியுள்ளார்.   (ஆதாரம் – இராஜ்ய சபையில் இன முழக்கம்  –  பக்கம்  57)  மேற்படி கருத்துக்களை திரு. அண்ணாதுரை அவர்கள் இராஜ்ய சபையில் பேசியது,  இந்த பேச்சு,  அவர்களின் பிரிவினை மனப்பான்மையை காட்டுகிறது.                

தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தும் அமைப்புகளில் முதன்மையானது தமிழ்த் தேசியப் பேரியக்கம்.   இதன் தலைவர் பெ.மணியரசன்.   இவர் முன்னாள் கம்யூனிஸ்ட்,  சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றியவர்.   இவருடன்  கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிய கி.வெங்கட்ராமன்  பொதுச் செயலாளராக  இருக்கிறார்.  தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தும்,  இந்திய இறையான்மையை எதிர்த்தும் பேசி வருபவர்.   இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர்.   சி.பி.எம்.  கட்சியிலிருந்து வெளியேறி  ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி எம்.சி.பி.ஐ.  என்ற பெயரில் பீகாரைச் சார்ந்த சிறீவஸ்த்தவ தலைமையில் இயங்கிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டார்.   பின்னர் எம்.சி.பி.ஐ.  என்ற கட்சியின் பெயர் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியாக பெயர்  மாற்றம் செய்யப்பட்டது.  ஆனால்  தமிழ் தேசியம் என்ற கருத்தை ஏற்க மறுத்ததால், அதிலிருந்து வெளியேறி 1990 பிப்ரவரி 25ந் தேதி சென்னையில் பெரியார் திடலில் நடந்த மாநாட்டில்,   இந்தியத் தேசியத்தை முற்றிலுமாக மறுத்து  தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது,  பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை (  )  தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும் தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல், தமிழ்த் தேசம் என்று அழைக்க வேண்டும்  என்றும் இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும்  என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.        

இந்த தீர்மானத்தை வலியுறுத்தி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்,  சாலை இளந்திரையன், சுப.வீரபாண்டியன்,  வழக்கறிஞர் அருள்மொழி,  கவிஞர் இன்குலாப் போன்றவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  ஆனால் மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக் கூட்டத்தில் இம்மாநாடு குறித்து விளக்கம் தறுமாறு, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி நேரில்  அழைத்து விசாரிக்கப்பட்டார்.  இதன் காரணமாக  பெ. மணியரசன் சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டார்.  வழக்கு 8 ஆண்டுகள் நடந்தது.    இவர்களின் துணை அமைப்பானது,  தமிழக இளைஞர் முன்னணி,  தமிழக மாணவர் முன்னணி,  தமிழ் கலை இலக்கியப் பேரவை,   மகளில் ஆயம்,  இளந்தமிழர் இயக்கம்,  தமிழக உழவர் முன்னணி  போன்ற அமைப்புகளும்  தனி தமிழ்நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கும் இயக்கமாகும்.  மேலும்   தமிழ் தேசிய பேரியக்கத்தின் உட் பிரிவுகள்.

            நாம் தமிழர் கட்சி –   திரு.ஆதித்தனார் அவர்கள் 1958-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முக்கிய நோக்கமே ஒன்றுபட்ட தனித்துவமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். அப்போதைய தமிழகத்தின் மிக முக்கியமான கட்சியாக விளங்கிய திராவிடர் கழகத்தின் கொள்கைகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் கட்சியின் கொள்கைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்து வந்தன. 1960-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியானது மாநில அளவிலான போராட்டத்தை நடத்தியது. அப்போராட்டத்தில் இந்திய வரைபடத்தை எரித்து(தமிழக பகுதியை தவிர்த்து) தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் கட்சியின் நிறுவனர் திரு.ஆதித்தனார் கைது செய்யப்பட்டார். திரு. சிவஞானம் அவர்கள் மெட்ராஸ் மாகாணம் என்னும் பெயரை தமிழ் நாடு என பெயர் மாற்றக்கோரி மேற்கொண்ட போராட்டங்களில் நாம் தமிழர் கட்சியும் பங்கு கொண்டது.

                   மதுரையில் மே 18, 2009-ம் ஆண்டு திரு. சீமான் அவர்கள் நாம் தமிழர் இயக்கத்தை ஏற்படுத்தினார்.       அன்றிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து மே 18, 2010-ம் ஆண்டு அதாவது தமிழர் இனப்படுகொலை நாளான அன்று நாம் தமிழர் இயக்கமானது நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. சீமான் பொறுப்பேற்றார். தமிழகத்தில் மாற்று அரசியலுக்காகவே நாம் தமிழர் கட்சி தொடங்கப்பெற்றதாக திரு,சீமான் தெரிவித்திருந்தார். தனித் தமிழ் ஈழம் அமைப்பதே அக்கட்சியின் முதல் மற்றும் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், “நாம் கட்சியை தாங்கள் தொடங்கவில்லை என்றும், திரு.ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய கட்சியை எடுத்து நடத்தி அவர் வழியில்   பயளிப்பதாக  கூறினார்.  

முதன்மைக் கொள்கைகள்   1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்!  2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ! தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்!   3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்!  அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட  போராடுவதே நமது இலட்சியம்!  4)தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!  எனவே  சீமானின் நாம் தமிழர் கட்சியும்,  தனி ஈழம் என்பது  தனி தமிழ்நாடு என்ற நோக்கத்தின் முதல்படி என  பலர் தெரிவித்தார்கள்

.  தமிழகத்தில் நீதி கட்சியிலிருந்து, தி.க.வில் தொடங்கி, தி.மு.க.வும்,  பாரதி ராஜா துவங்கியுள்ள தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை வரை தமிழ் பிரிவினைவாத கோஷங்களை எழுப்ப தயங்குவதில்லை. இவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு பிரிவினைக்கு வித்திடுகிறது என்பதையும்  பார்க்க வேண்டும்.  இன எழுச்சி கருத்தரங்கம் என்ற பெயரில், சீமானின் நாம் தமிழர் கட்சி கடலூரில் நடந்த மாநாட்டில், காஷ்மீரின் பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக்கை கலந்து கொள்ள வைத்தார்கள்.  1963 அக்டேபார் 3ந் தேதி அரசியல் ஷரத்து 19-ல் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்துவது சட்டப் படி குற்றம் என திருத்தம் செய்த பின்னரும் கூட தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். 1967க்கு பின்னர் பிரிவினை கோரிய அரசியல் கட்சிகள் தமிழகத்தில் அதிகாரத்திற்கு வந்ததால், பிரிவினைவாதிகள் எவ்வித அய்யப்பாடும் இல்லாமல் உலா வருகிறார்கள்.   தமிழ் பிரிவினைவாதத்திற்கு கிறிஸ்துவ நிறவனங்கள்தான் காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.  ஐரேப்பிய கிறிஸ்துவ மிஷனரிகள் தமிழக மண்ணில் கால்வைத்த போதே தமிழ் பிரிவினைவாதம் விதைக்கப்பட்டது.   அதாவது ஆரிய – திராவிட இன வாதத்தை பரப்பி தமிழர்களை தனி இனமாக கட்டமைத்தவர்கள் கிறிஸ்துவ மிஷனரிகள்.  இதனால் தமிழர் என்ற ஒரு இனம் உண்டு, அதற்கு என தனி குனம் உண்டு என பிரச்சாரம் செய்ய முற்பட்டார்கள்.  தமிழர்களை தூண்டி விட்ட நரகாசூரர்கள் கிறிஸ்துவ மிஷனரிகள்.

மே 17 இயக்கம் இதுவும் ஒரு பிரிவினைவாத அமைப்பு.  இதன் அமைப்பாளர் திருமுருகன் காந்தி என்று வெளியே தெரிந்தாலும், ஒரு கிறிஸ்துவர்.  இந்திய இலங்கை நட்புறவை சீர்குழைத்து, இலங்கையிலிருந்து தனி ஈழத்தை பிரித்தெடுக்க வேண்டும்.  பாரத தேசத்திலிருந்து தமிழகத்தையும் தனியாக பிரித்து,  பின்னர் ஈழத்துடன் தமிழகத்தை இணைத்து தனித் தமிழ்நாடு என ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான் முதன்மையான நோக்கமாகும்.  இவர்கள் பல்வேறு மத பிரிவினைவாதிகளுடன் தொடர்ப்பு கொண்டுள்ளார்கள்.  இந்த அமைப்பினருக்கு மதர் தெரசா அறக்கட்டளையிலிருந்து கோடிக் கணக்கான ரூபாய் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  தமிழ், தமிழர் , தனித் தமிழ்நாடு என்ற போர்வையில் செயல்படும் அமைப்புகள்.   மக்கள் அதிகாரம்,  புரட்சி  மாணவர் இளைஞர் முன்னணி,  மக்கள் கலை இலக்கிய சங்கம்,  புரட்சி மாணவர்கள் முன்னணி,  புதிய ஜனநாயக மையம்,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,  பூவுலகின் நன்பர்கள்,  எதேச்சதிகார எதிர்ப்பு இயக்கம்,  பெண்கள் எழுச்சி இயக்கம்,  அரசு ஒடுக்கல் எதிர்ப்பு கூட்டமைப்பு,  சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி,   சமூக நல மாணவர்கள் எழுச்சி இயக்கம்,   பி.யு.சி.எல்.,  சமநீதி வக்கீல்கள் சங்கம்,  சிவில் உரிமைகள் பாதுகாப்பு மையம்,  சட்டப் பஞ்சாயத்து,   சமூகக் காடு,  சேலம் மக்கள் ஃபோரம்,  உக்கடம் மக்கள் உரிமை பாதுகாப்பு இணைப்பு மையம்,  தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி,  தமிழ் நீதிக்கட்சி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,  தமிழ் தேசிய மக்கள் கடசி,  தமிழ் தேசியப் பாதுகாப்பு இயக்கம்,  தமிழ் தேச விடுதலை இயக்கம்,  சாதி ஒழிப்பு பொதுவுடமை முன்னணி,  தமிழ்ப் பேரரசு கட்சி,  மே-17 இயக்கம்,  ஈழத் தமிழகம் இயக்கம்,  இளம் தமிழகம்,  தமிழ் தேசிய முன்னணி,  தமிழக வாழ்வுரிமை கட்சி,  தமிழர்கள்  இலக்கிய பண்பாட்டு பேரவை,  தமிழ் மையம்,   தமிழ்ப் புலிகள்,  போன்ற  அமைப்புகள் தமிழகத்தில் உலா வருகின்றன.   இவையெல்லாம்,  தமிழ்நாடு பிரிவினையை முதன்மையான கொள்கையாக கொண்டு இருக்கின்ற அமைப்புகளாகும்.

                தற்போது தமிழ் ,தமிழர், தமிழ்நாடு என்ற கோரிக்கையை அவ்வப்போது எழுப்பும் அமைப்புகளில்,  சீமானின்  நாம் தமிழர் கட்சி,  திருமுருகன் காந்தி என்கின்ற டேனியல் நடத்தும் மே17 இயக்கம்,  திராவிட கழகத்தில் பிரிந்த பல அமைப்புகள், இவர்களுடன்  முஸ்லீம், மற்றும் கிறிஸ்துவ அமைப்புகள் கைகோர்த்து கொண்டு பிரிவினையை மட்டும் பேசுகிறார்கள்.   இவர்களின் கோரிக்கைக்கு அவ்வப்போது ஆதரவு கரம் நீட்டுவது, தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்   

                தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான    தமிழ்நாடு விடுதலைப் படை (Tamil Liberation Army) ஐ  சேர்ந்த கலை லிங்கம் என்பவர்,  மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெடிகுண்டு வைத்ததற்காகவும் தற்போதைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது காரில் குண்டு வைத்ததற்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன்   தேசிய புலனாய்வு பிரிவினர், சில  துண்டு பிரசுரங்கள் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அவற்றைப் பார்த்தபின், NGOக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போர்வையில் தமிழகத்தில் தான் அதிக அளவில் அரசு சாரா அமைப்புகள் செயல்படுவதாகவும், இவை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து மக்களை போராட்டத்திற்கு தூண்டி, அச்சம் மற்றும் வெறுப்பை பரப்பி தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று நீதிபதி கூறியுள்ளார். ஜாமீன் மனுவை நிராகரித்து வெளியிட்ட 48 பக்க தீர்ப்பில், பல அரசியல் கட்சிகள் அரசியல் லாபத்துக்காக மொழிவாதத்தை ஊக்குவிப்பதாகவும் பஞ்சாப், திரிபுரா, அசாம் மற்றும் மணிபூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் காலிஸ்தான் போன்ற பிரிவினைவாத அமைப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்த மத்திய அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை என்றும் குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லை பகுதிகள் நக்சல் அமைப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது என்று அச்சம் தெரிவித்து இருக்கிறார்.

                மேலும்  தேசிய புலனாய்வு பிரிவினர்  நீதிபதியின் முன் தாக்கல் செய்த அபிடவிட்டில்,  தமிழ்நாடு விடுதலைப்படை தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவற்றின் போர்வையில் கலவரங்கள் செய்துள்ளது என்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி உள்ளது என்றும் கூறி தேசிய புலனாய்வு முகமையின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜாமீன் கொடுக்க கூடாது என்று கோரி இருக்கிறார். மேலும் கலை லிங்கம் “ஏகாதிபத்திய இந்தியாவைத் தகர்த்து தமிழ்நாட்டை மீட்போம்! புரட்சி செய்வோம்! தமிழ்மொழி, தமிழ்தேசியம் வீரவணக்கம்!” என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

           தற்போது எதிரி நாடுகளை விட நம் நாட்டுக்குள்ளேயே இருக்கும் சிலரிடமிருந்து தான் இந்தியாவுக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, அண்மையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவம் நம் நாட்டை விட அண்டை நாட்டை அதிகமாக நேசிப்பவர்களைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டி விட்டது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இத்தகையோர் ஊடகங்களில் அதிகம் இருப்பதை பற்றி நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். ஊடகத்தினர் “நேரிடையாக செய்திகளை வழங்காமல் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செய்தி என்ற பெயரில் அவர்களது கருத்துக்களையே பரப்பி வருகிறார்கள். இவர்கள் நமது தேசத்திற்கு ஆபத்தானவர்கள்” என்று நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைகள் அமைப்புகள் என்ற பெயரில் பல தேச விரோத சக்திகள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ள அவர், “அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக போராடுவதற்கும் நாட்டுக்கே எதிராக போராடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இத்தகைய அமைப்புகள் நமது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் கேடு விளைவிப்பதால் மக்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

                இந்தியாவை கூறு போட முயலும் செயலுக்கு அனுமதி தர முடியாது  இவ்வாறு கூறியது,  தமிழக அரசு கிடையாது.   சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு. என்.ஆனந்த் வெங்கடேஷ்  ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுக்கும்  போது கூறிய வார்த்தைகள்.  நாகை மாவட்ட தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் நிர்வாகிகள்,  பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்காக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.  இந்த வழக்கில் தான் நீதிபதி  அவ்வாறு கூறினார்.

           தமிழினம், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றை ஆயுதங்களாக பயன்படுத்தி சிலர் தங்களது பிரிவினைவாத கொள்கைகளை நிறைவேற்ற நினைக்கிறார்கள் என்று எச்சரித்த நீதிபதி, ஒரு குறிப்பிட்ட மொழியை புறக்கணிக்கும் வகையிலான எந்த செயலும் இத்தகைய அமைப்புகளின் பிரிவினைவாத கருத்தாக்கத்திற்கு வலு சேர்த்து நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். இறுதியாக நீதிபதி கிருபாகரன் அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரிவினைவாத சக்திகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

              சமூக சேவை என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து நிதியை பெற்றுக்கொண்டு தொண்டு நிறுவனங்கள் தொடங்கி அரசு திட்டங்களுக்கு எதிராக தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களை போராடத் தூண்டும் செயலில் பல சமூக செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக People’s Watch, மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு அடிக்கடி பொது நல மனுக்கள் தாக்கல் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. ஹென்றி டிபக்னே என்ற வழக்கறிஞரால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. Centre for Promotion of Social Concerns (CPSC) என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பின் ஒரு குழு/அலகு தான் மக்கள் கண்காணிப்பகம். வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக CPSCன் FCRA உரிமம் கடந்த 2016ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. எனினும் தங்களது உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது மட்டுமே இந்த அமைப்பின் உண்மையான பெயர் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டது

                இன்று பூதாகரமாக வளர்ந்து நிற்கும் தமிழ் பிரிவினைவாதத்திற்கும் கிறிஸ்தவ நிறுவனங்கள்தான் காரணம். ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழக மண்ணில் கால்வைத்த அன்றே தமிழ் பிரிவினைவாதம் விதைக்கப்பட்டுவிட்டது என்றால் அது மிகையாகாது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் காலூன்றி ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பி தமிழரை தனி இனமாக கட்டமைத்தனர் கிறிஸ்தவ மிஷனரிகள். 
அவர்கள் கட்டமைத்த இனவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட திராவிட இனவெறி இயக்கங்கள் கிறிஸ்தவ நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு “திராவிட நாடு” என்கிற கோட்பாட்டை உருவாக்கினர். பின்னர் நாளடைவில் திராவிட இயக்கங்கள் பலவாறாகப் பிரிந்து போய் திராவிட பிரிவினைவாதம் மங்கிப்போனாலும், கிறிஸ்தவ நிறுவனங்கள் திராவிடக் கட்சிகளின் மீதான தங்களுடைய பிடியை விடாமல் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் பிரிவினைவாதத்தைத் தூபம் போட்டு வளர்த்து வருகின்றன.  அடுத்த கட்டுரையில்  தமிழகத்தில் முஸ்லீம் பிரிவினைவாத சக்திகள் எவ்வாறு உருவாகின என்பதை பார்ப்போம்.

2 Replies to “தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – I”

 1. திமுக வின் கிறிஸ்தவ இசுலாமிய பாசத்தின் காரணம்
  மைனாரிட்டி திமுக – ஒரு எளிய விளக்கம்

  1990 க்கு முன்பு தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம். அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.

  தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்…? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் இன்று எப்படி ஹிந்து விரோதிகளாக மாறினார்கள்? அனைத்தும் திமுகவின் திருவிளையாடல்கள் தான்.

  அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல் முதலமைச்சரான கருணாநிதி லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான். 1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.

  இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான். இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த திமுக வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.

  வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் விழா,… இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர். கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.

  அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

  பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தார். இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம்.

  பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது. அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.

  அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்… என வசூலை வாரி குவித்தனர். இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது. லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள் மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.

  சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்…. இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரம் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.

  சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது. லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம். இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல் பணத்தை என்ன செய்தார்கள்? இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.

  வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும். முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில் இந்தியாவில் மதம்மாற்றி பிழைப்பு நடத்த வந்த கிறித்தவர்களும், முஸ்லீம்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ். மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா? இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுகவும் கிவ் அன்ட் டேக் (Give and Take) என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.

  திமுக வின் ஊழல் பணம் இந்தியாவில் உள்ள மெஷினரிகளிடமும், மதராசாக்களிடமும் கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே திமுக வினரின் பணம் முதலீடு செய்யப்படும். இதனால் ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. திமுக வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

  இது தான் திமுக தலைமைக்கு “மைனாரிட்டி” மதங்களின் மேல் பாசம் ஏற்பட காரணம். வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும். ஆனால் உண்மை காரணம் இது தான்:

  அதிமுக விற்கும் திமுக விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது. இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.

  திமுகவின் உதவி மதத்தை பரப்ப மைனாரிட்டிகளுக்கு அவசியம். அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி திமுக விற்கு அவசியம். கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், அல்லாவிற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான். திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.

  80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகராறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கிளம்பினர். இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.

  இது படிப்படியாக வளர்ந்து திமுக வின் அனைத்து மேடைகளிலும் “மதச்சார்பற்ற அமைப்புகள்” என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்றனர். மதசார்பற்ற மாநாடு என்று திமுக கூட்டம் போடும், ஆனால் அதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.

  சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா? என அப்பாவி இந்துக்கள் கேட்கலாம். கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.

  இங்கு திமுக தலைவர் ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் ஸ்டாலினின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.

  பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின் ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் போடும் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்கு இந்துக்களின் ஓட்டு அவசியம். இதனால் ஒவ்வொரு தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம் அனுமதி பெற்று – விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்… போன்ற காமெடிகள் நடக்கும்.

  இந்து மக்களுக்கு திமுக கட்சி செய்த நன்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் திமுக என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள். இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும் துண்டு சீட்டில் எழுதி வைத்து, சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச ஸ்டாலின் கிளம்பி விடுவார்.

  இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக போகிறீர்களா…? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா? மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும், மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது. சிந்தித்து செயல்படுவீர்.

 2. சிங்களவன்….

  புத்த மதம் ,
  சிங்கள மொழி …
  என்ற ஒற்றை புள்ளியில் கடைசி வரை ஒற்றுமையாய் துணிந்து நின்றான் ….
  வென்றான்…..

  ஆனால்..

  தமிழன்…..

  தமிழன் என்பதற்க்கு எது அடிப்படை அடையாளம் என்பதை இதுவரை வரையறை செய்ய முடியாதபடி அரசியல் செய்யும் திராவிட நாத்திக கோஷ்டி….

  தமிழனுக்கு மதம் கிடையாது என வாதிடும் தமிழ் தேசிய காமெடி கோஷ்டி….

  இந்து மதம் வேறு, சைவம் வேறு குழப்பத்தை விதைத்த மிஷநரி கைகூலி கோஷ்டி,

  தமிழ் பேசி கொண்டே…
  நாங்கள் தமிழர் கிடையாது என்று சிங்களவனிடம் காட்டி கொடுத்த சோனகர்(முஸ்லீம்) கோஷ்டி…

  மதம் மாற்றுவதற்காக
  தமிழ் மொழியின் அடிப்படை இதிகாசங்களையும்…
  புராணங்களையும் மாற்றி வாடிகனுக்கு அடிமையாக்க துடிக்கும் பாவாடை கிறிஸ்துவ கோஷ்டி..

  தமிழருக்குள் சாதி பிரிவினையை ஊதி பெரிதாக்கும் சாதிய கட்சிகளின் இம்சை கோஷ்டி….

  இவ்வளவு முரண்பாடுகளை வைத்து கொண்டு …
  தமிழன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்…
  எந்த நாட்டிலும் ஒரு கூந்தலையும் பிடுங்க முடியாது….

  தமிழனா? இந்துவா? என்று கேட்டால் இந்து என்று நிமிர்ந்து சொல்லுங்கள்……

  இந்து மதத்தை இங்கே அழித்து விட்டால் தமிழக காப்பியங்கள் இங்கு ஏதாவது மிஞ்சுமா?

  இந்து என்ற பிடிப்பை நீக்கவே உன்னை தமிழனா? இந்துவா? என்று கேட்கிறான்.
  இந்து கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து வாழும் அனைவரும் இந்து தானடா……..

  விபூதியை பூசிய முன்னோன்…., இன்று அதை கடைபிடிப்பவன் தானடா இந்து…….
  மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தியவன் முன்னோன்….. அதை இன்று செய்பவன் தானடா இந்து…….

  வைகறை யாமம் துயிலெழுந்து என்று சொன்னவன் முன்னோன்….. அதை கடைபிடிப்பவன் தானடா இந்து……..

  மூத்த தமிழன் சொன்னதை இன்று இந்துவைத் தவிர எவன்டா கடை பிடிக்கிறான்?

  தமிழன் என்றால் அவன் இந்து மட்டுமே……..

  தமிழனா? இந்துவா? என்றால் இந்து என்று சொல்லுங்கள்………

  ஏனெனில் எந்த இந்துவும் இங்கே தமிழை அழிக்க முனைய மாட்டான்……. தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முற்பட மாட்டான்……..

  இந்துவா? தமிழனா?

  இந்து தான்டா நான்…………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *