சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்

கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களின் பணிகள் இந்தியாவில் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை விழிப்புணர்வு கொண்ட இந்துக்கள், அதனைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். இந்து ஆன்மீகத் தலைவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் தொடர்ந்து விவாதித்தும், கிறிஸ்தவ மதக் கொள்கைகளைக் கண்டனம் செய்து நிராகரித்தும் வந்துள்ளனர். ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் எழுதிய கிறிஸ்துமதச் சேதனம் என்ற நூல் சிவஸ்ரீ.விபூதிபூஷண் மொழியாக்கத்தில் கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் என்ற பெயரில் இந்தத் தளத்திலேயே தொடராக வந்துள்ளது நினைவிருக்கலாம்.

இந்த மோதல்களின் வரலாற்றை சிறந்த வரலாற்றாசிரியரான சீதாராம் கோயல் History of Hindu Christian Encounters என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இந்த நூலில், 1990களில் அருண் ஷோரி – கிறிஸ்தவ மிஷனரி மோதல் குறித்த அத்தியாயங்களை முன்வைத்து ஜடாயு எழுதிய கட்டுரையும் இத்தளத்தில் வெளிவந்துள்ளது.

சீதாராம் கோயில் அவர்களின் இதே நூலில் சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல் குறித்த பகுதிகளை முன்வைத்து, தமிழ்ஹிந்து தளத்தின் கட்டுரையாளர் எஸ்.எஸ்.ராகவேந்திரன் எழுதியுள்ள நூல் இப்போது வெளிவந்துள்ளது.

இந்த நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்.

கிறிஸ்தவத்தின் மீது உலக சிந்தனையாளர்களும் அறிவியலாளர்களும் கூறிய விமர்சனங்கள் “டா வின்சி முதல் டார்வின் வரை” “விவிலியமும் விஞ்ஞானமும்” ஆகிய அத்தியாயங்களில் உள்ளன. “ராமகிருஷ்ண பரமஹம்சர் கிறிஸ்தவரா” என்ற கேள்விக்கு, குருதேவரின் ஆதாரபூர்வமான வாழ்க்கைச் சரிதங்களின் அடிப்படையில் விளக்கங்கள் தருகிறார். ஏசுவின் அரசியல் சரித்திரம், ஏசு பிறந்தாரா, பைபிளில் ஆபாசம்?, பிணம்தின்னும் பித்தர்கள், தீமையின் ஆணிவேர், பறிபோன கொலையுரிமை போன்ற அதிரடி தலைப்புகளில் கிறிஸ்தவம் குறித்து அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள சூடான விமர்சனங்களைத் தொகுத்துத் தருகிறார். இந்து சமுதாயத்தின் ஜாதி விவகாரங்களில் மிஷனரிகளின் தலையீடு, கிறிஸ்தவர்களின் இந்திய தேசிய விரோத போக்குகள், அமெரிக்க பாடநூல்களில் ஹிந்து வெறுப்பு ஆகியவற்றைப் பற்றிய அத்தியாயங்களும் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் மிஷனரி மோதல்: ஹிந்து உணர்வின் தொடக்கம்
வெளியீடு: பதிவகம் பதிப்பு, சென்னை.
பக்கங்கள்: 200
விலை ரூ. 150 (தமிழ்நாட்டுக்கு வெளியே அனுப்ப தபால் செலவு ரூ. 100 கூடுதலாக).
நூலைப்பெற 91761-26644 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இதே எண்ணுக்கு G-Pay, Phone Pe செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம்.

One Reply to “சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்”

 1. திருந்தவே திருந்தாமல் ஒழுக்கங்கெட்டு தீய எணணங்களுடன் சுற்றியதால் பெற்றோர்களால் வீட்டை விட்டே அடித்து விரட்டப்பட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே அன்னசத்திரங்களில் லாட்டரி அடித்த *ஈவெரா வெள்ளைகார ஆட்சியாளர்கள் துணையோடு மிகப்பெரிய கோடீஷ்வரன் ஆனான்.*( தற்போதைய சொத்து மதிப்பு *1½ லஷம் கோடி.*)

  அந்த சொத்துக்களை கூடயிருந்தே கொள்ளையடிக்க முயன்ற *அண்ணா,நெடுஞ்செழியன், மதியழகன் ,நடராஜன், கருணாநிதி கோஷ்டிகளை பழிவாங்கி சொத்துக்களுக்கு வாரிசு உருவாக்க தன்னுடைய 72-ஆவது வயதில் அவர் வளர்த்த மகள் 26 வயது மணியம்மையை அவரே திருமணம் செய்துக் கொண்டான்.* அதன் பிறகு சொத்துக்கு வழியில்லாமல் போன அண்ணா கோஷ்டியினர் பெரியாரை பழிவாங்க திகவில் இருந்து வெளியேறி திமுகவை உருவாக்கினர்.அதுவ ரை திகவுக்கு மட்டும் நன்கொடைகளை வழங்கிவந்த கிருசவ மதம்மாற்றும் இங்கிலாந்து மிஷநரிகள் திமுகவுக்கும் நன்கொடைகளை வழங்கி பல உதவிகளை செய்துவந்தன.

  திக, திமுக இருவருக்கும் முதலாளி இங்கிலாந்து மிஷநரிகள் தான் என்றாலும் *பெரியாருக்கும் – அண்ணா கோஷ்டிக்கும் இடையே இருந்த தனிப்பட்ட பகை 1949-1967 வரை சுமார் 18 ஆண்டுகள் காரசாரமாக ஒருவருக்கு ஒருவர் வார்த்தை மோதல்களில் மிகவும் தரக்குறைவாக ஈடுபட்டனர்.* பின்னர் 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெரியாரின் இயல்பான ஆள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களோடு ஒட்டிக்கொள்வது என்ற நகர்வாக சமரசம் ஏற்பட்டு திக -திமுக மோதல் முடிவுக்கு வந்தது.

  *ஒரு நாட்டின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீகத்தை அழித்து கிருசவத்தை திணித்துவிட்டால் அந்த நாடும்,அந்த நாட்டு மக்களும் நிரந்தரமாக நமக்கு அடிமையாக இருப்பார்கள் என்பதும் இங்கிலாந்து கிருசவ மிஷநரிகளின் உறுதியான நம்பிக்கை. மேலும் மதம் மாறிகளிடமிருந்து அவர்கள் வருமானத்தில் ஒன்றில் பத்து ⅒ தசம பாகம் வசூலிப்பதால் பாதிரிகள் உட்கார்ந்தே சாப்பிடலாம். இதை பல நாடுகளில் செயல்படுத்தி வெற்றியும் அடைந்துள்ளார்கள்.*

  கிருசவத்தை திணித்து நிரந்தரமாக அடிமை நாடுகளை பிடிக்கும் முயற்சியில் *இங்கிலாந்து கிருசவ மிஷநரிகள் தோற்றுப்போன ஒரே நாடு நம் இந்தியா தான்* . அதற்கு காரணம் நம் பாரத மண்ணின் மரபான இந்து தர்மமும் அதை ஒட்டிய பண்பாடுகளும், கலாச்சாரங்களும் ,பழக்க வழக்கங்களும் தான். இவற்றை அழித்து *கிருசவத்தை திணிக்க சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு பிஷப் கால்டுவெல் வகுத்த சூழ்ச்சிகள் தான் இன்று திராவிட கொள்கை, பெரியாரிசம் என்ற பெயரில் திக, திமுகவினரால் சொல்லப்படுகிறது.*

  இந்து தர்மத்தின் ஆன்மீகத்தை பலமிழக்க செய்யவே கோயில்களில் வேத மந்திரங்கள் ஓதும் சமஸ்கிரதத்தை அந்நிய மொழி, ஆரிய மொழி, செத்த மொழி என்றெல்லாம் நாவல் எழுதினான் கால்டுவெல். அதுதான் பெரியாரிசம்.

  கோயில்களை பலமிழக்க செய்யவே கோயில் ஐயர்களை, பிராமண பூசாரிகளை ஆரியர்கள் என்றும், கைபர் கணவாய் வழியாக ஆடுமேய்த்துக் கொண்டு மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் நாவல் எழுதினான் கால்டுவெல். அதுதான் பெரியாரிசம்.

  கல்சிலைகளை வணங்குவது மூடநம்பிக்கை ,பைத்தியக்கார தனம் என்று நாவல் எழுதினான் கால்டுவெல். *ஆனால் அவனுங்க மரக்கட்டையில் பொம்மையும் ,கிராசும் செய்துவைத்து ஏசு ,சிலுவை என்று வணங்குவார்கள். அது மூடநம்பிக்கை, பைத்தியக்காரத் தனம் கிடையாது. அதுதான் பெரியாரிசம்.*

  இந்துமதத்தை பலமிழக்க செய்யவே, வெள்ளைகாரன் ஆட்சிகாலத்தில் அவனுடைய ஆதரவாளர்களாக இருந்த ஜமீன்தார்களும், ஆண்டேக்களும் செய்து வந்த அடக்குமுறைகள், தீண்டாமை கொடுமைகள் என எல்லா சமுக குற்றங்களையும் இந்து மதத்தின் மீது பழியை போட்டு அதற்கு காரணமே பிராமணர்கள் தான் என்று நாவல் எழுதினான் கால்டுவெல், அதுதான் பெரியாரிசம்.

  ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி தடுக்க வேண்டிய சமுக சீர்கேடுகளை எல்லாம் இந்து மதத்தின் மீது பழியை போட்டு நம் நாட்டு மக்களை கிருசவத்துக்கு மதம் மாற்ற மாஸ்டர் பிளான் போட்டு நாவல் கதைகளை எழுதினான் கால்டுவெல். அந்த நாவல் கதைகள் தான் பெரியாரிசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

  *நம் நாட்டுக்கும், நம் மக்களுக்கும், நம் மண்ணின் மரபுக்கும், நம் நாகரீகம், நம் பண்பாடு, நம் கலாச்சாரம், நம் வழிபாடு, நம் ஆன்மீகத்துக்கும் எதிராக வெள்ளைகாரன் ஒருவனால் எழுதப்பட்ட அந்த பெரியாரிசம் என்ற திராவிட கொள்கை நம் நாட்டுக்கு எதற்கு.? இப்படி நம் வாழ்கைக்கே எதிரான அந்த பெரியாரிசத்தை தமிழ்நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கே நாடுகடத்த வேண்டும் என்ற பாஜகவின் லட்சிய போராட்டத்துக்கு தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பேராதரவை தரவேண்டும்.*

  “திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம்” என்று சொன்ன இவனுடைய கொள்கை எந்த அளவுக்கு நாற்றம் பிடித்ததாக இருக்கும் என்பதை மக்கள் அறிவதற்கு உங்களிடம் உள்ள அனைத்து நண்பர் மற்றும் உறவினர் வட்டத்தோடு இந்த பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்.

  *உண்மையை உலகம் அறிந்து கொள்ளட்டும்.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *