நான் பொதுவாக தொலைக்காட்சியோ, திரைப்படங்களோ பார்ப்பதில்லை. சமீபகாலமாக குறியீடுகள், சாதீய வன்மங்கள் நிறைந்து கிடப்பதால் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஒரு வன்மம் பிடித்த இயக்குனர், தன் புழுத்துப்போன, சிந்தனையை (என் செலவில்) என் மீது திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வரலாற்றை படிக்க எனக்கு ஆயிரம் நல்ல வழிகள் உண்டு. பிரஹதீஸ்வரர் கோவிலைப்பற்றி படிக்க குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய புத்தகம் இருக்கிறது, சோழர்கள் பற்றி நீலகண்ட சாஸ்திரி எழுதிய “சோழர்கள்” இருக்கிறது. எனக்கு சாதீய வன்மம் பிடித்த ரஞ்சித்துகள் தேவையில்லை, ராஜராஜனின் வரலாற்றைப் படிக்க.
The Edge of tomorrow படம் பார்த்திருந்தால் இந்தப்படம் ஆச்சு அசல் அதே. படத்திலும் இது, நேர்மையாக, சொல்லப்படுகிறது. எனவே இது copy அல்ல, another instance of The Edge of tomorrow. சமீபத்தில் வந்த படங்களில் எந்த “குறியீடும்” இல்லாத படம் என்று கேள்விப்பட்டு, சரி பார்க்கலாம் என்று திரையரங்கில் பார்த்தேன்.
இருபது நிமிடங்களில் என் மீது திணிக்கப்படும் கருத்து என்னவென்று தெரிந்துவிட்டது. சிம்பு, என்ற அப்துல் கலீக், “எங்கள் சமுதாயம்” மீது கறை படிந்திருக்கிறது, அது எங்கள் தவறு இல்லை, எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். Actually we are innocent என்கிற கருத்தை வைத்து கதை பயணிக்கிறது.
1998 குண்டு வெடிப்பில் “தவறாக” கைது செய்யப்பட்டவரின் குடும்பம் கொஞ்சம் சோதனைகளுக்கு உள்ளாகிறது. “என் தந்தை குற்றமற்றவர்” என்கிற மகனின் வாதம். ரஃபிக் என்கிற பாத்திரத்தை வைத்து (infamous 1998 blasts) கோயம்புத்தூரில், ஒரு முதலமைச்சரின் அரசியல் கூட்டத்தில், குண்டு வெடிக்க வைத்து மதக்கலவரம் உண்டு பண்ண ஏற்பாடு செய்கிறார் பரந்தாமன் என்கிற அரசியல்வாதி, தனுஷ்கோடி என்கிற காவல் அதிகாரியுடன் சேர்ந்துகொண்டு. அந்த பழியை ரஃபிக் மீது சுமத்தி அந்த சமுதாயத்தின் மீது “களங்கம்” ஏற்படுத்தும் திட்டமாம்.
குண்டு வெடிக்கவைப்பது பரந்தாமன். ஆனால் அவர் அந்த “சமுதாயத்தின்” மீது பழி சுமத்தி அறுவடை செய்கிறாராம். எப்படி இருக்கிறது பாருங்கள்! பாஷா என்ற பெயரை யாரும் உச்சரிக்கவில்லை. கடைசியில் அப்துல் ரஃபிக் எல்லாவற்றையும் காப்பாற்றுவதுதான் கதை.
திருபுவனம் ராமலிங்கம் சோகம் மனதில் கனன்று கொண்டிருக்கும் யாருக்கும் இது முகம் சுளிக்க வைக்கும்.
படத்தில் இது பற்றி பேசப்படும் இடங்கள் மிகவும் குறைவானவை என்றாலும், that is the agenda. “எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று ஆதங்கப்படும் அவர்கள் “ஏன் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று கேள்வி கேட்காமல் இருப்பது விந்தையே. நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சமுதாயத்திலும் இருக்கிறார்கள். ஆனால் சதவிகிதம் matters a lot. உண்மையை உணராத சமுதாயம் என்றும் தன்னைத் திருத்திக் கொள்ளாது.
மாநாடு படத்தில் வரும் “correcting the faults as you find out is the key to perfection” என்ற தத்துவத்துக்கு அடிப்படையே “எங்கே தவறு” என்ன என்று தெரிந்துகொள்வது. ஆனால் படம் சொல்வதோ “தவறு என் மீது இல்லை” என்பது.
சொன்னதற்கும், சொல்ல வந்த கருத்துக்கும் இவ்வளவு முரண் கொண்ட ஒரு நல்ல படத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் மகனிடம் “என்ன நினைக்கிறாய், இது பற்றி” என்ற கேட்டபொழுது “ஆமாம்பா. Poor they are. They are being crucified. பாவம் அவுங்க” என்று சொன்னபொழுது தான் என் பயம் அதிகமாகியது. The agenda works.
The Family Man, குருதி (மலையாளம்) , Trance என்று மற்ற மொழிகள் உண்மையைப் பேசிக்கொண்டிருக்கும் வேலையில் தமிழ் மட்டும் பொய் பேசிக்கொண்டிருக்கிறது.
(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
Very nice review of a crap movie. I also fear fro the youngsters , they are being influenced by the propaganda of Jihadis and commie mob!
உண்மையை உணராத சமுதாயம் என்றும் தன்னைத் திருத்திக் கொள்ளாது. Absolutely correct.
Thanks for a great review.
தமிழரின் கலாச்சாரமும் பண்பாடும் என்ன?
எது செய்தாலும் இறைவனை வணங்கிவிட்டு தொடங்குவதுதான் தமிழர் பண்பாடு. தமிழனின் விவசாயம் சூரியதேவனை வணங்கிவிட்டு தொடங்கியது
அவனின் சிற்ப தொழில் முதல் எல்லா தொழிலும் தெய்வத்தை வேண்டித்தான் தொடங்கிற்று, மடியேறும் கடல் தொழிலாளி கூட கடலை வணங்கிவிட்டுத்தான் படகேறுவான்
இங்கு கல்வி கண் என போற்றபட்டது, இதனால்தான் எல்லா நூல்களும் கடவுள் வாழ்த்தோடு தொடங்கின. கடவுள் வாழ்த்து இல்லா ஒரு தமிழ் இலக்கியத்தை காட்டமுடியாது திருகுறள் உள்பட
அப்படிபட்ட தமிழகத்தில் இளம் தமிழ் குழந்தைகளுக்கு பள்ளியில் கடவுள் வாழ்த்துபாட தடை என்பது திமுகவின் தமிழ் உணர்வு கொள்கையிலே மண் அள்ளி போடுவதற்கு சமம்
இதனால் திமுக அரசு அத்தவறை செய்திருக்காது, அப்படி செய்திருந்தால் ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்குமான வித்தியாசத்தை சொல்லமுடியும்
கருணாநிதிக்கும் சில தேசவிரோத இயக்கங்களுக்கும் தொடர்பு உண்டு, ஆனால் தன் அரசியலுக்காக அவர்களை எப்படி பயன்படுத்தவேண்டுமோ அப்படி பயன்படுத்துவார்
ஆனால் ஸ்டாலினை தேசவிரோதிகள் எப்படி பயன்படுத்தவேண்டுமோ அப்படி பயன்படுத்துகின்றார்கள்
இப்படித்தான் பெரும் வீழ்ச்சியினை அவர் சந்திப்பார், இதனால் அரசு அப்படி அறிவித்திருக்க நியாமில்லை
ஒருவேளை விஷயம் உண்மை என்றால் பள்ளி குழந்தைகளை வீட்டு வாசலில் வைத்து இறைவணக்கம் பாடவைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டியது பெற்றோர் கடமை
அதை தனியாக அல்லது தெருவில் உள்ள குழந்தைகளோடு சேர்ந்து இறைவணக்கமாக பாடலாம்
“நமக்கு நாமே” என்பது இதுதான், இனி நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாமேதான் காத்துகொள்ளவேண்டும்
ராம்சாமியும் அம்பேத்கரும் வெள்ளையன் காலத்தில் சாதி ஒழியவும் சமதர்மம் நிலைக்கவும் போராடினார்கள்?
யாரிடம் போராடினார்கள்?
வெள்ளையனிடம் போராடினார்கள்?
எந்த வெள்ளையன்?
கருப்பின மக்களை அடிமையாக்கி வாய்பேசும் மிருகங்களாக்கி வைத்து, உலகின் பல நாடுகளை அடிமைகளாக வைத்திருந்த அந்த வெள்ளையனிடம்
சிங்கத்திடம் சென்று உயிர்கொலைக்கு தடை கேட்ட கதை இதுதான், இவர்களெல்லாம் ஒருமாதிரி ஆசாமிகளாக இருப்பார்கள் போலிருக்கின்றது
மொத்த இந்திய மக்களையும் அடிமையாக வைத்திருந்தவனிடம் சாதிக்கு விடுதலைகொடு என கேட்டது எம்மாதிரி புரட்சி என்பதுதான் இன்றுவரை புரியவே இல்லை
அம்பேத்கர் சுமார் 50 ஆயிரம் பேரோடு தழுவிய புத்தமதத்தில் இப்பொழுது பார்.ரஞ்சித் மட்டும் இருப்பார் போலிருக்கின்றது
அம்பேத்கர் காலத்திலே 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புத்தமதத்துக்கு மாறினார்கள் என்றால் இன்று எத்தனை லட்சமாக அவர்கள் பெருகியிருக்கவேண்டும், ஆனால் பெருகவில்லை ஏன்?
அவர்களில் ஒருவரை கூட காணவில்லை என்பதுதான் ஆச்சரியம்
ஆம், அவர்கள் இன்று இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம் என்கின்றன தரவுகள்.
திராவிடம், பெரியாரிசம், அம்பேத்கரிசம் என எல்லா இம்சை கொள்கைகளும் இந்துக்களுக்கு எதிரான மதமாற்றத்தில்தான் முடிகின்றது, அவை அந்த ஒன்றுக்காகத்தான் உருவாக்கவும்பட்டது
என்னுடைய மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடியவோ, அவற்றைத் துல்லியமாக எழுதியுள்ளார் பதிவர். நானும் இது ஒரு வித்தியாசமான, குறியீடுகள் இல்லாத படம் என்ற பரிந்துரையில் என்னுடைய 2 மணி நேரத்திற்கும் நேரத்தை வீண் செய்தேன்.. படமாக்கப்பட்ட விதமும், தனிப்பட்ட நடிப்புகளும், தொகுக்கப்பட்ட விதமும், தொய்வில்லை என்றாலும், உள்ளுரைப் பரப்புரை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. கோவை, வெடிக்குண்டு கலவரம், இஸ்லாமிய கதாநாயகன், சுமத்தப்படுகிறக் குற்றச்சாட்டு என்று எல்லாமே இஸ்லாமியரை அப்பாவி மதமாக, கட்டம் கட்டப்படும் மதமாகக் காட்டுவதற்கே என்று தெரிகிறது.. கங்கை அமரனின் மகன் வெங்கட் எடுத்தத் திரைப்படம் என்பது கூடுதல் வியப்பு.. இவர்களுக்கு முதுகெலும்பில்லாக் கோழைத்தனம் மண்டியிருக்கிறதா? அல்லது வியாபாரத்துக்காக விலைபோனவர்களா? தமிழ் நாட்டின் திராவிட ஸ்டாக்கின் பரப்புரைக்களுக்குத் தெரிந்தே துணைபோகிறார்களா? இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.. இது எந்த வெற்றி? பரப்புரைகளுக்குக் கிடைத்த வெற்றியா? அல்லது பணத்தாசை திரைக்கலை வியாபாரத்துக்குக் கிடைத்த வெற்றியா? எப்படி இருந்தாலும் உண்மைக்கும், நம்பி நம்பி மீண்டும் மீண்டும் மாயையில் ஆழ்த்தப்பட்டு ஏமாற்றப்படும் பொது மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிற தற்காலிகத் தோல்வி. சத்யமேவ ஜயதே என்பதில் என்றும் நம்பிக்கையோடு!