சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்

சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டியின் இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் வி.காமகோடி அவர்களின் தமிழ் நேர்காணலை யதேச்சையாக காண நேர்ந்தது. இவரைப்பற்றிய செய்திகள் மற்றும் இவரது ஆங்கில உரைகள், உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பதால் நன்கு அறிந்திருந்தாலும், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் செய்துள்ள இந்த 2020 நேர்காணல் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. தமிழ் ஊடகங்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி வருவதற்கு பொதிகை டிவியாவது உள்ளதே என்பது சற்று ஆசுவாசம் அளிக்கிறது.

சுட்டி: https://youtu.be/T7vk3dCbJiM

காமகோடி அவர்களின் மகத்தான உலகத்தரம் வாய்ந்த அறிவியல், தொழில்நுட்ப சாதனையான “சக்தி” ப்ராசஸர் குறித்த விஷயங்கள், காஞ்சிப் பெரியவர்கள் மீது பெரும் பக்தியும், பாரம்பரிய ஆன்மீகச் செழுமையும் கொண்ட அவரது குடும்பப்பின்னணி, சங்கீத ஆர்வம், மிக எளிமையான வாழ்க்கை, அவரது சொந்த கிராமத்தில் செய்யும் இயற்கை விவசாய முன்னெடுப்புகள், தொழில்நுட்பம் குறித்த அவரது தீர்க்கமான கருத்துக்கள் என பல பரிமாணங்களை 50-நிமிடத்தில் காட்டியிருப்பது அருமை.

குறிப்பாக நேரம் 33:25ல் வரும் இந்தப் பகுதி:

“இப்பேர்ப்பட்ட ஆளுங்கல்லாம் இருக்க வேண்டிய இடம் இது (இந்தியா) இல்லை என்று சொல்லியிருப்பாங்களே..” என்ற கேள்விக்கு, காஞ்சிப் பெரியவர் (ஸ்ரீ ஜெயேந்திரர்) “நீ இந்த நாட்டுக்காக பெரிய செயல்களை செய்து இங்கேயே புகழ்பெறுவாய்” என்று சொன்னதை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டதைச் சொல்லி “என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது” என்று மிக இயல்பாக, சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

என்ன ஒரு தெளிவு. என்ன ஒரு தன்னம்பிக்கை.

இந்திய இளைஞர்கள் அனைவருக்குமான ஒரு ஒளிவீசும் ஆதர்சம் டாக்டர் வி.காமகோடி அவர்கள்.

பி.கு:

எனது பொறியியல் கல்வியின் போது 1992ம் வருட கோடை விடுமுறையில், இவரிடம் 2 மாதம் Data Structures பாடம் படித்திருக்கிறேன். அப்போது எங்கள் SVCE கல்லூரியின் கணினித்துறையில் இருந்த பேராசிரியர் வெங்கடேஸ்வரனின் ப்ராஜெக்டில் நானும் இருந்தேன் என்பதால் அவரது மாணவரான காமகோடியின் வகுப்பில் உட்கார்ந்தேன். இப்போது அதைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன். ஒருவகையில் சிப் டிசைன் தொழில்நுட்பம் என்ற துறையில் நான் நுழைந்து இன்றுவரை அதில் பணியாற்றிக் கொண்டிருப்பதற்கு அடித்தளம் அமைத்ததில் அந்த ப்ராஜெக்டிற்கு முக்கியப் பங்கு உண்டு.

5 Replies to “சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்”

  1. //செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
    தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

    வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
    வாழும் குமரிமுனை பாப்பா,
    கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
    கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

    வேத முடையதிந்த நாடு, – நல்ல
    வீரர் பிறந்த திந்த நாடு,
    சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
    தெய்வமென்று கும்பிடடி பாப்பா.///

    ஒவ்வொரு நாடும் சுதந்திரம் அடைவதே தங்கள் அடையாளங்களை காக்கவும் தங்கள் மதத்தை தங்கள் கலாச்சாரத்தை காக்கவும் தங்களை தாங்களே ஆண்டு நாட்டை முன்னேற்றவும் என்பதன்றி வேறல்ல‌

    அவை இல்லாவிட்டால் சுதந்திரம் வாங்க அவசியமே இல்லை, அந்நிய ஆட்சியினை அனுமதித்துவிட்டு சோறும் தூக்கமும் முக்கியம் என வாழ்ந்துவிடலாம், சுதந்திர போராட்டமே ஒரு நாட்டின் கலாச்சாரமும் மதமும் இதர அடையாளமும் அழியாமல் காக்க அன்றி வேறு அல்ல‌

    எங்கிருந்தோ தாங்கள வாழ இங்கு ஆயுதமுனையில் மிரட்டி குடியேறும் கூட்டம் இங்கே சகலத்தையும் அழித்து மதம் முதல் செல்வம் ஆட்சி வரை இந்நாட்டு மக்களை அடிமைகளாக்க முயலும்

    அதுவன்றி அவை ஆளமுடியாது, இதை எதிர்த்துதான் அடிமைபட்ட இனம் விடுதலை கோரி போராடும், உலகெங்கும் காணபடும் காட்சி இது

    அப்படி அருமை இந்தியாவும் அழியதொடங்கியிருந்த இந்துமதம் வாழ, அதன் அடையாளங்கள் மீளெள, இந்திய கலாச்சாரமும் தாத்பரியமும் மீட்டெடுக்கபட, இந்தியர் தங்களை ஆள , அந்நியர் சுரண்டலின்றி வாழ ,இந்திய மக்கள் அனைவரும் எல்லாம் பெற்று வாழத்தான் அரும்பாடுபட்டு சுதந்திரம் வாங்கிற்று

    ஆப்கானியரிடம் இருந்து விடுதலைபெற தொடங்கிய போராட்டம் 12 நூற்றாண்டில் இங்கு தொடங்கியது அது 17ம் நூற்றாண்டில் திசைமாறி தேசம் ஆங்கிலேயரிடம் சிக்கி அடுத்த போராட்டம் தொடங்கி அது 1947ல் வெற்றியாய் முடிந்தது

    1947ல் இந்நாட்டுக்கு சுதந்திரம் என வெள்ளையன் அறிவித்து ஒரு பக்கம் பாகிஸ்தானை வெறும் 70 நாட்களில் உருவாக்கி இஸ்லாமிய பூமியாக அங்கீகரித்து இந்தியாவுக்கு மதமே இருக்க கூடாது என சொல்லிவிட்டு கப்பலேறி சென்ற நேரம் இந்திய திருநாட்டுக்கான சட்டதிட்டம் என எதுவுமில்லை

    சுமார் ஆயிரமாண்டு அந்நிய ஆட்சி சட்டங்களில் சிக்கியிருந்த இந்த பூமிக்கான சட்டங்கள் அப்பொழுதுதான் எழுதபட்டன, மக்களாட்சியாய் மாறியபின் எழுதபட்டன‌

    அதை எழுதி முறைபடுத்த ஒரு குழு அமைக்கபட்டு அம்பேத்கர் அவர்கள் பெரும்பங்கு ஆற்றினார், அவரின் தலமையில் அல்லாடி கிருஷ்ணசாமி, முன்ஷி, முகமட் சாதுல்லா, கோபாலசாமி அய்யங்கார், பி.எல் மிட்டர் மற்றும் டி.பி கய்த்தான் என 6 பேர் கொண்ட குழு இருந்து உதவிற்று

    அம்பேத்கர் தலமையில் இந்த குழு உருவாக்கிய சட்டதிட்டங்களின் அடிப்படையில் உலகின் மிகபெரிய ஜனநாயக குடியரசாக 1950ல் இதே நாளில் இந்தியா மலர்ந்தது

    இன்று உலகின் மிகபெரிய ஜனநாயக நாடாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றது, இந்திரா காந்தி ஆட்சியின் சில மாதங்கள் தவிர ஒருகாலமும் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்ததே இல்லை, வரவும் வராது

    ஒருவகையில் இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள், அங்கு சீனா போல மாற்றமுடியாத ஆட்சி இல்லை. அரேபியா போல அரசர்கள் இல்லை, ரஷ்யா போல பெயருக்கு ஜனநாயகம் இல்லை, பாகிஸ்தான் பர்மா போல ராணுவ மிரட்டல்களும் இல்லை

    எந்த ஆட்சி என்றாலும் 5 வருடத்தில் மாற்றும் மாபெரும் பாதுகாப்பு இந்தியர்களுக்கு கொடுக்கபட்டிருக்கின்றது, இதனால்தான் இந்தியா இதுகாலமும் ஆட்சி விஷயத்தில் பாதுகாப்பாய் நிற்கின்றது
    அந்த பாதுகாப்பில்தான் இந்தியாவில் அமைதி நிலவுகின்றது, பெரும் குழப்பமோ அடக்குமுறையோ அங்கு இல்லை , அப்படி முடியவும் முடியாது

    72 ஆண்டு காலமாக மிகபெரிய ஜனநாயக பெருமையுடன் நிற்கும் இத்தேசம் இன்று அந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடுகின்றது

    இந்நாளில் அம்பேத்கருடன் சட்டமியற்றிய சட்ட வல்லுநர்கள் முதல் இது காலம் வரை அதை காத்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி கலந்த வணக்கம் செலுத்துதல் வேண்டும்

    முன்னாள் ஆட்சியாளர் முதல் இக்கால மோடி வரை, ஜனநாயகத்தினை காத்து நிற்கும் ராணுவத்தின் முதல் தளபதி கரியப்பா முதல் இன்றைய நர்வாணே வரை எல்லோருமே நன்றியோடு நினைக்க வேண்டியவர்கள்

    இந்தியா எனும் பெரும் நாடு உலகுக்கே ஜனநாயகம் சொல்லி கொடுக்கின்றது, வழிகாட்டுகின்றது என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளல் வேண்டும்

    அவ்வகையில் தேசம் மாபெரும் உற்சாகத்துடன் இந்நாளை கொண்டாட தொடங்கியிருக்கின்றது

    இன்று பாரத தலைநகரில் மாபெரும் கொண்டாட்டமும் இந்த குடியரசை காத்து நிற்கும் ராணுவ அணிவகுப்பும் இன்னும் பலவும் நடைபெறும்

    தேசமெங்கும் தேசபற்றினை வளர்க்கும் நிகழ்வுகளும் நடைபெறும், நடைபெற்றாக வேண்டும்
    பள்ளிகளுக்கு கொரொனா கால தடை இருக்கும் இந்நேரம் ஒவ்வொரு மாணவனும் வீட்டில் தேசிய கொடியேற்றி நாட்டுக்கு மரியாதை செலுத்துதல் வேண்டும், அதற்கு உதவ வேண்டியது பெற்றோரின் கடமையாகும்

    பாரத தலைநகரில் உயர பறக்கின்றது தேசியகொடி, அதை பின்பற்றி நாடெல்லாம் கம்பீரமாக பறக்கின்றது அந்த புனிதமான கொடி

    அதை நோக்கி பாரதியின் வரிகளுடன் பெரும் மரியாதை செலுத்தபடுகின்றது
    “தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
    தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்”
    ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
    உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
    பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
    பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்
    கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும்
    காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
    நம்பற்க் குரியர் அவ்வீரர் – தங்கள்
    நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

    ஆம், ஒவ்வொரு இந்தியனும் உயிரையும் கொடுத்து தேசிய கொடியினை காக்க உறுதியேற்க வேண்டிய நேரமிது

    எனினும் குடியரசு தினம் வரும் பொழுதெல்லாம் இங்கு ஒரே ஒரு ஏக்கமும் வரும்

    ஆம், இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்றானது, அதே காலங்களில் இஸ்ரேல் யூத குடியரசு என்றானது

    பிரிட்டனின் ஆட்சியில் இருந்து விடுதலைபெற்ற நாடுகளெல்லாம் இஸ்லாமிய குடியரசு, பவுத்த குடியரசு, கிறிஸ்தவ குடியரசு என அடையாளங்களோடு குடியரசாக அறிவித்து கொண்டன‌

    அருமைபாரதம் இஸ்லாமியருக்கு ஒரு இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசை அனுமதித்துவிட்டு தான் மட்டும் “மத‌
    சார்பற்ற” குடியரசு எனும் ஒரு அனாதை கோலம் பூண்டு கொண்டது

    வரலாறு கண்ட மாபெரும் மோசடி இது, வெள்ளையன் சென்றாலும் அவன் அடிவருடிகளே ஆண்டார்கள் எனும் மிக பெரிய சாட்சி இது

    ஏன் இந்நாடு இந்து குடியரசு ஆக கூடாது என்றான் வெள்ளையன்? விஷயம் இல்லாமல் இல்லை

    இங்கு அவன் சந்தித்த பெரும் ஆபத்தெல்லாம் பெரும்பாலும் இந்துக்கள் கொடுத்ததே, இந்து நாடாக இது மலர்ந்து நிற்க வேண்டும் என்ற இந்துக்களின் போராட்டத்தில்தான் அவன் பெரும் மிரட்டல்களை சந்தித்தான்

    இந்தியா இந்துநாடு என அறிவிக்கபட்டால் நாடெல்லாம் ஒரே மதம் என்ற கோட்பாடு பெருகும் அப்படி பெருகினால் ஒற்றுமையும் பிணைப்பும் அதிகரிக்கும், அப்படி அதிகரித்தால் இந்தியா எனும் பெருநாடு மாபெரும் உச்சத்தை அடையும் என அவன் அஞ்சினான்

    அவன் அஞ்சியதில் அர்த்தம் இருந்தது, பலம்பெற்றுவிட்ட இந்தியா எனும் யானை பிரிட்டன் எனும் கோழி குஞ்சினை என்றாவது போட்டு சாத்திவிடும் எனும் சுதாரிப்பும் அவனுக்கு இருந்தது

    இந்தியா “மதசார்பற்ற” நிலையில் இருந்தால்தான் சாதி, திராவிடம், கம்யூனிசம், தலித்தியம் இன்னும் ஏகபட்ட விஷயங்களில் இந்தியா குழம்பியே நிற்கும் என சரியாக சிந்தித்தான்

    சரியான தண்டனை இல்லா சட்டங்களை வைத்து உரிமைகளை அள்ளி வீசினால் சமூகத்தில் எளிதில் குழப்பம் விளையும் என்பது அவன் அறியாதது அல்ல.

    அதில்தான் இந்தியா மதசார்பற்ற குடியரசாக மலர்ந்து பல வகை சிக்கல்களை சந்தித்தது, ஆயினும் மீண்டெழுந்து வந்து கொண்டிருகின்றது

    அம்பேத்கர் சட்டம் படித்தவர் நல்லது, ஆனால் அவர் சட்டமியற்றிய குழுவில் ஒரு இந்து ஞான‌ அபிமானி கூட இல்லை ஒரு இந்து தத்துவ ஞானி கூட இல்லை

    பாகிஸ்தான் பிரிந்து முல்லாக்களும் இமாம்களும் மார்க்க அறிஞர்களும் சட்டம் இயற்றியபொழுது இந்தியாவில் இந்த தர்ம பூமிக்கு சட்டம் இயற்றும்பொழுது ஒரு முழு இந்து ஞானியும் இந்திய சட்டகுழுவில் இல்லவே இல்லை

    ஏன் என்றால் அதுதான் வரலாற்று சதி, இந்துக்களுக்கு இழைக்கபட்ட மாபெரும் அநீதி

    இந்த குடியரசு தினம் என்பது கொண்டாடபட வேண்டியது சந்தேகமில்லை, ஆனால் என்றேனும் ஒருநாள் இது “இந்து குடியரசு” என மாறும், நிச்சயம் மாறும்

    அப்பொழுது கருத்துரிமை, பேச்சுரிமை, இன்னும் பல உரிமைகளை தேசவிரோதத்துக்கும் பிரிவினைக்கும் இந்துமத நிந்தனைக்கும் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டதிருத்தமும் கொண்டுவரபடும்

    அப்பொழுதுதான் முழு அர்த்தமுள்ள கொண்டாட்டமாக இந்நாள் அமையும், அதுவரை ஒரு சிறு வலியோடு கொண்டாடலாம்

    இந்த பரந்த உலகில் இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லை, முன்பு உலகின் ஒரே இந்துநாடு என அறிவிக்கபட்டிருந்த நேபாளமும் கம்யூனிசத்தில் சிக்கி தன் அடையாளத்தை இழந்துவிட்டது

    இந்த உலகில் இந்துக்களின் பூமியாக‌ , இந்து ஆலயங்களும் மக்களும் வாழும் மிகபெரிய நாடு இந்த இந்தியா, உலகின் ஒரே இந்து குடியரசு என அறிவிக்கபட அதற்கு எல்லா தகுதியும் பாரம்பரியமும் முழு உரிமையும் உண்டு

    அது “இந்து குடியரசு” என அறிவிக்கபட்டு உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு ஒரு “இந்து குடியரசு” என அறிவிக்கபடும் நாளே முழு உண்மையான குடியரசு தினம், அது விரைவில் வரும், வந்தே தீரும்

    வந்தே மாதரம், ஜெய் ஹிந்துஸ்தான்

  2. “தம்பி ரொம்ப நேரமா சுத்தி சுத்தி வரீங்க ஆனா ஒரு புக்கும் எடுக்குற மாதிரி தெரில என்னதான் தேடுறீங்க ”

    “இல்ல இன்னைக்கு குடியரசு தின ஊர்தில சுதந்திரத்துக்கு படுபட்டவங்களோட சேத்து பெரியாரை பாத்தேன்…… அதான் சுகந்திர போராட்டத்தில் பெரியாரின் பங்கு அப்படினு ஏதாவது புக் இருக்கானு பல புக் ஸ்டால்ல கேட்டேன்……. அப்படி எதுவும் இல்ல…. நீ வெனா பெரியார் திடல்ல பொய் பாரு அங்க ஏதாவது இருக்கும் சொன்னாங்க…….. அதான் இங்க வந்தேன் ஆனா இங்கையும் ஒன்னும் கிடைக்கல ”

    “தம்பி இப்படி தனியா வாங்க…….. காத கொடுங்க………… அவரு என்னைக்கு போராடுனாரு தம்பி….. அவரே சுகந்திரமே வேணாம்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு….. ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்பதான் மெதுவா குடியரசு தின ஊர்வல ஊர்தில அவரை நிப்பட்டிருக்கோம் …… அப்படியே கொஞ்சம் கொஞ்சம்மா ஸ்கூல் டெக்ஸ்ட் புக்ல போடுவோம் அப்புறம் பெரியாரின் சுதந்திர தின போராட்டம்னு யாராவது ஒருத்தரு ஒரு பிஹச்டி பண்ணி டாக்ட்ரேட் வாங்குவாரு அதுக்கப்புறம் நிறைய புக்கெல்லாம் வரும்…. இன்னும் நாலஞ்சு வருசத்துல வந்துடும் கவல படாதீங்க ”

    “ஹ்ம்ம் அப்ப அடுத்து ஒரு யுனெஸ்கோ கதைய ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க இருந்துட்டு போகட்டும் சரி இந்த கம்யூனிஸ்டு அடக்கு முறைக்கு எதிரா பொங்குறானுகளே அவங்க சுதந்திர போராட்ட பங்க பத்தி ஏதாவது புக் இருக்கா”

    “நீங்கவேற தம்பி இன்னைக்குக்கூட சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பிரச்னை வந்த சீனா வோட சேந்துக்கிட்டு இந்தியாவை இழிவா பேசுற ஈன பசங்கதம்பி இந்த கம்யூனிஸ்டு…. இவனுங்க என்னைக்கு சுதந்திரத்துக்கு போராடுறது எங்க பெரியாரே சொல்லிருக்காரு இந்த கம்யூனிஸ்ட் பயலுங்களா ஒருநாளும் நம்ப கூடாதுனு ”

    “ஹ்ம்ம் நீங்க ஒரு மண்ணும் இந்த சுதந்திரதிற்காக பண்ணல. ஆனா அதுக்கு போராடி ஜெயிலுக்கு போனவங்களையும் உயிர்விட்டவங்களையும் வேகமில்லாம கிண்டல் பண்ணுவீங்க… ”

    “அப்புறம் நமக்கும் பொழப்பு ஓடணுமில்ல தம்பி”

    “எப்படியா உங்களையெல்லாம் நம்புறானுங்க”

    “அதுதான் தம்பி பகுத்தறிவு பாசறை பயிற்சின்னு சொல்லுறது….. இப்ப எங்க பயலுவகிட்ட RSSகரனுங்க சுதந்திரத்துக்கு போராடலைனு சொன்னாலும் நம்புவனுக அதே சமயத்துல சாவர்க்கர் ஆங்கிலேயனுக்கிட்ட மன்னிப்பு கேட்டுத்தான் அந்தமான் தீவுல இருந்து வெளிய வந்தார்னு சொன்னாலும் நம்புவான்…… ஒரு பயலும் RSSச சேர்ந்த சாவர்க்கர் என்ன போலீஸ்கரர் பொண்ண கைய புடிச்சி இழுத்துக்காகவா ஜெயிலுக்கு போனாரு அவர் சுதந்திரத்துக்கக போராடித்தானே ஜெயிலுக்கு போயிருப்பாருனு கேட்கமாட்டான்….. அந்த அளவுக்கு பகுத்தறிவு ஊட்டிருக்கோம் ”

    “என்ன ஒரு திருட்டுதனம் ஹ்ம்ம் நீங்க சுடுற வடையெல்லாம் சாப்பிடுறதுக்கு ஆள் இருக்கும்போது உங்களுக்கு என்னா கவலை என்ஜோய் பண்ணுங்க நான் மோதல இடத்த காலிபறேன் ”

    “கொஞ்சம் இருங்க தம்பி இந்தா பாருங்க ‘இன்ப நிதி என்னும் இனிய மனிதர்’னு ஆசிரியர் வீரமணி எழுதின புக் இருக்கு வேணுங்களா …………….
    எங்க இங்க இருந்த தம்பிய காணோம்”

  3. Thanks Sri Saravanan for views and I pretty much agree with everything you have said except the bit about Sri Ambedkar. Indian constitution has been only copy pasted from Indian act of Britain 1919, passed by the British parliament with absolutely no inputs from any Indians. Ambedkar was only the head of the drafting committee and made few drafting corrections. The constitution was written by Benegal Rao, a loyal servant of Britain and he was knighted for his efforts. The whole constitution is about CONTROL of the population and favours the rulers. It is not a constitution for the people, keeping in mind the very idea of the Indian act of 1919. It was a mean to control Indians from top down.
    It is high time we have our own DESI, people friendly constitution with inputs from our patriotic lawyers and of course from our own Hindu Dharma Acharyas and Math heads. It is high time we free ourselves from the colonial shackles.
    I also would like India resign from the Commonwealth.

  4. ஆளாளுக்கு கிறிஸ்தவ கல்வி நிறுவணங்களின் சேவை என திராவிட கும்பல் ஊளையிட தொடங்கிவிட்டன‌

    கொஞ்சம் கடுமையாக சொல்வதாக இருந்தால் இப்படி சொல்லலாம்

    அன்று வெள்ளையன் காலத்தில் இவை படையெடுத்து வந்து பெருகியபொழுது ஆட்சி வெள்ளையனிடம் இருந்தது அதன் அஸ்திவாரமான வரி இந்தியரால் கட்டபட்டது அல்லது வெள்ளையனால் சுரண்டி எடுக்கபட்டது

    இன்று அரசு உதவிபெறும் நிறுவணங்களாக அவை செயல்படும்பொழுதும் இந்நாட்டு வரிபணமே சம்பளம் என கொடுக்கபடுகின்றது அதிலும் அவர்கள் சிறுபான்மை என அவர்கள் தரப்பையே நியமணம் செய்வதெல்லாம் அடுத்த அழிசாட்டியம்

    ஆக ஏதோ இந்த கோஷ்டிகளெல்லாம் தங்கள் நாட்டு சொத்தை கொண்டு இந்தியாவில் கல்வி நிலையம் கட்டியதை போல ஏகபட்ட கொந்தளிப்புகள்

    அவர்கள் இலக்க்கு எப்பொழுதுமே துல்லியமானது, வசதியான வீட்டு இந்தியர் வந்தால் சத்தம்காட்டாமல் காசுக்கு கல்வி கொடுப்பார்கள், ஏழைகள் வந்தால் தங்கள் விருப்பத்துக்கு வளைப்பார்கள்

    இது அன்றும் நடந்தது இன்றும் நடக்கின்றது அதில் ஒன்றும் ரகசியமில்லை

    உண்மையில் இந்தியாவின் மிகபெரிய பணக்காரர் அம்பானியோ, டாடாவோ, மாறன் பிரதர்ஸ்ஸொ அல்ல சில சபைகளின் மாவட்ட சொத்துமட்டும் பல்லாயிரம் கோடி தேறும்

    அம்பானி மாறன் பிரதர்ஸ்வாது வரி என கட்டுவார்கள் இந்த சபைகள் வரும் வருமானத்துக்கு வரியும் கட்டாது அதை வெளியேயும் சொல்லாது

    இதெல்லாம் வெள்ளையன் இங்கு விட்டு சென்ற வேர்கள், விரைவில் இவையெல்லாம் ஒழுங்குபடுத்த தனி ஆணயம் அமைக்கபடவேண்டும் அதுதான் சரி

    அன்றே கல்வி வளர்க்க தன் சொத்துக்களை கொடுத்த ஆதீனங்களும் மடங்களும் மன்னர்களும் செட்டிநாட்டு தனவான்களும் தங்கள் கைபொருளை கொடுத்த தேசம் இது

    இங்கே எதுவும் கிறிஸ்தவம் சும்மா கொடுக்கவில்லை, இந்நாட்டு நீரினை எடுத்து இந்தியருக்கே விற்கும் வெளிநாட்டு குளிர்பான வியாபாரத்தைத்தான் அன்றும் செய்கின்றார்கள் இன்றும் செய்கின்றார்கள் அதையும் யோசனையின்றி ஊளையிட்டு கத்திகொண்டிருக்கின்றன உபி கோஷ்டிகள்

  5. இந்திய ராணுவத்தின் தனிபெரும் அடையாளம் ஜெனரல் கரியப்பா, 1920களில் இந்தியா நவீன ராணுவ உலகில் காலடி எடுத்து வைத்தபொழுது அவரின் ராணுவ வாழ்வு தொடங்கிற்று

    பிரிட்ட்டிஷ் இந்தியாவின் ராணுவ வீரனாக பணியினை தொடங்கினார் அவர், பிரிட்டானியர் நடத்திய ஆப்கன் போர் முதல் இரண்டாம் உலகப்போர் வரை அவரின் பங்களிப்பு இருந்தது

    சுதந்திரம் வாங்கியபொழுது அவர்தான் இந்தியாவின் குறிப்பிடதக்க தளபதியாக இருந்தார், அவர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தளபதியுமானார்

    சுதந்திரம் பெற்றவுடன் இந்தியா காஷ்மீரில் முதல் போரை சந்தித்தது அதை அவர்தான் நடத்தினார், அவருக்கு முழு காஷ்மீரையும் கைபற்றும் வேகம் இருந்தது, அப்பொழுது காஷ்மீருக்கு வந்தது பாகிஸ்தான் ராணுவம் அல்ல மாறாக காட்டுமிராண்டி முரட்டு கூட்டமான ஆப்கானிய பழங்குடியினர்

    அவர்கள் காஷ்மீரில் செய்த அனைத்து கொடுமைகளையும் கரியப்பா அடக்கினார், கன்னியாஸ்திரிகள் கற்பழப்பு என மானிடம் நடுங்கும் கொடுமைகளை அந்த கூட்டம் செய்தபொழுது கரியப்பா களமிறங்கி அவர்களை ஒடுக்கினார், முழு காஷ்மீரும் கைபற்றபடும் வாய்ப்பு வந்தது அதை நேரு தடுத்தார்

    கரியப்பா நேரு மவுனயுத்தம் இதில்தான் தொடங்கிற்று

    கரியப்பா ஒரு ராணுவ வீரனாக காஷ்மீரில் சீனா செய்யும் அடாவடிகளை பற்றி கவலை கொண்டார். அதாவது 1960களில் சீனா பற்றி நேருவிடம் எச்சரித்தனர் ராணுவத்தார்

    அதில் கரியப்பாவும், திம்மையாவும் முக்கியமானவர்கள்

    ஆனால் நேரு அந்த விவகாரத்தை கையாள கிருஷ்ணமேனன் எனும் திமிர்பிடித்த அதிகாரியினை நியமித்தார். கிருஷ்ணமேனன் படித்தவரே தவிர் கொஞ்சமும் உருப்படியான திட்டம் இல்லாதவர்

    அவர் தனக்கு கைகட்டி நின்ற கவுல் என்பரை வைத்து ஆடிய ஆட்டம்தான் சீன போர், அதனால் கிடைத்ததுதான் படுதோல்வி.

    சீனபோர் தோல்விக்கு முதல் காரணம் கிருஷ்ண மேனன் என்பவரும் அவரை முழுக்க நம்பிய நேருவும் என்பதுதான் உண்மை. அது போர் அல்ல சும்மா வெறும் குழப்பம் என நேருவினை நம்ப வைத்து ஏமாற்றியது அந்த கிருஷ்ண மேனனே.

    சீனா போருக்கு தயாராகின்றது, நாமும் தயாராக வேண்டும் என்றார் கரியப்பா, நேரு காதில் வாங்கவில்லை, ரஷ்யா வரும் என்ற மிதப்பில் இருந்தார்

    ரஷ்யா கியூப ஏவுகனை சர்ச்சையில் கென்னடியுடன் உரசிகொண்டிருந்த நேரத்தில் மிக சரியாக இந்தியாவோடு யுத்தம் தொடங்கினார் மாவோ

    விளைவு ரஷ்யா வரவில்லை ,மாறாக “சீனா தம்பி இந்தியா நண்பன்” என சொல்லிவிட்டது. அதனால் இந்தியாவிற்கு கிடைத்ததுதான் மாபெரும் தோல்வி

    ராணுவ வீரனான கரியப்பாவும் திம்மையாவும் நேருவிற்கு எதிரான மனநிலையில் பேசினதால், அவர்கள் காங்கிரஸ் எதிர்கள் ஆயினர்

    ஆனால் 1965ல் பாகிஸ்தான் போரில் கரியப்பாவின் பங்களிப்பு ஓய்வுபெற்ற நிலையிலும் இருந்தது, 1972ல் அவரின் மகன் கே.சி கரியப்பா பாகிஸ்தானுக்கு குண்டுவீச சென்று சிக்கி கொண்டார்

    அப்பொழுது பாகிஸ்தான் தளபதியாக இருந்த நியாசி பிரிட்டிஷ் காலத்தில் கரியப்பாவுடன் நட்பாக இருந்தவர் அவர் கரியப்பாவினை தொடர்பு கொண்டு அவர் மகனை விடுவிப்பதாக சொன்னார்

    “என் மகன் என்பதற்காக அவனை விடுவித்தால் நானே அதை எதிர்ப்பேன், ஒரு போர்கைதியினை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்துங்கள்” என்றார் கரியப்பா

    அதுதான் கரியப்பா

    இந்திய ராணுவத்தில் மிக சிறந்த ஜெனரல்களாக கருதபடுபவர்கள் கரியப்பாவும், மானெக்ஷாவும்.
    இருவர்தான் இன்றளவும் பீல்டு மார்ஷல் என்ற தகுதியினை பெற்றவர்கள், வேறு யாரும் பெறவில்லை

    அந்த பெரும் பெருமையினை பெற்ற கரிப்பாவினை, பல போர்களில் நாட்டினை காப்பாற்றிய அந்த மாவீரன் கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கபடுகின்றது

    கரியப்பாவிற்கு ஏன் பாரத ரத்னா வழங்கபடவில்லை

    இந்தியாவில் காங்கிரஸை அல்லது நேருவினை எதிர்த்த யாருக்கும் பாரத ரத்னா கிடைக்காது அது இந்திய விதி

    அம்பேத்கருக்கு 1990ல்தான் வழங்கினார்கள், பட்டேலுக்கு அதற்கும் பின்புதான் காங்கிரஸ் வீழ்ந்தபின்புதான் கிடைத்தது

    ஆனால் அந்நிய தெரசாவுக்கு வழங்கினார்கள் இந்திய தளபதி கரியப்பாவிற்கு வழங்கபடவே இல்லை

    பாஜக அரசாவது கரியப்பாவிற்கு உரிய மரியாதையினை கொடுக்கட்டும் அல்லது தெரசா போன்றோருக்கு கொடுத்த விருதை திரும்ப பெறட்டும்

    அப்படி செய்தால் மட்டுமே கரியப்பாவிற்கு செய்யும் மிக பெரும் மரியாதையாகும்

    இந்தியாவின் தன்னிகரற்ற தளபதிக்கு, இந்திய ராணுவத்திற்கு பலமான அஸ்திவாரத்தை கொடுத்த அந்த சேனாதிபதிக்கு அவர் பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துகின்றது தேசம்

    கரியப்பாவுக்கு பாரத ரத்னா வழங்கபடவேண்டும் என்ற கோரிக்கையினை மோடி அரசு ஏற்கும் என நம்புகின்றது தேசம்

    ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *