வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி

‘பாரத் மாதா கி ஜே’ எனும் கோஷங்களுடன் மோகன் சந்த் சர்மாவின் உடல் இன்று எரியூட்டப்பட்டது. டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க சென்ற போது பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு பலியான காவல் துறை அதிகாரிதான் மோகன் சந்த் ஷர்மா. அவரது பதினான்கு வயது மகன் திவ்யன்ஷு டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் இருப்பதால் தன் தந்தையின் சிதைக்கு எரியூட்ட அவனால் வரமுடியவில்லை.

அன்று மருத்துவமனையில் இருக்கும் தன் மகனுடன் இருக்க விடுப்பு எடுக்க இருந்த சர்மா பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்ததும் அங்கே விரைந்தார். பயங்கரவாத எதிர்ப்பு அணியின் முன்னால் இருந்து செயல்பட்ட சர்மா பல குண்டு காயங்களை மார்பில் தாங்கி பின்னர் அறுவை சிகிச்சையின் போது இறந்தார்.

இதுவரை தமது கடமையில் 35 பயங்கரவாதிகளை உயிரிழக்க செய்த இந்த மாவீரர் தேசத்துக்காகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்காகவும் தமது சொந்த குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தனது உயிரை பலிதானமாக்கியுள்ளார்.

நமது போலி மனித உரிமை வாதிகள், விலைக்கு போன ஊடகங்கள் பொதுவாக குண்டு வைத்தவர்களை, அல்லது குண்டுவைத்தலின் பின்னால் மூளையாக செயல்பட்டவர்களை ஏதோ அப்பாவிகளாக சித்தரிப்பதில் பெயர் பெற்றவர்கள். மதானி, அப்சல் போன்றவர்களின் மகன்கள் மனைவிகள் உருக்கமாக காட்டப்படும் அதே நேரத்தில் வெடிகுண்டுகளால் சிதறி இறந்தவர்களின் உறவினர்கள், அல்லது நம்மை – இந்த மனித உரிமையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட- நம் அனைவருடையவும் பாதுகாப்புக்காக உயிர் துறந்தவர்களின் தியாகத்தின் கனத்தை, அவர்கள் குடும்பங்களின் சோகங்களை அவை நம் பிரக்ஞையில் பதிய வைப்பதே இல்லை.

இந்நிலையில் தமிழ் இந்து.காம் நம் அனைவருடைய பாதுகாப்புக்காகவும் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் தன்னை பலிதானமாக்கிய இந்த வீரத்திருமகனுக்கு அஞ்சலி செய்கிறது. அதே நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் அவரது மைந்தனுக்கும், இரத்த அழுத்ததத்தால் மயக்கமடைந்து இருக்கும் அவரது மனைவிக்கும், அவரது உடலை பெற்றுள்ள அவரது தந்தைக்கும் – அவர்களின் இந்த தாங்க இயலாத சோகத்தில் பங்கு கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்:

5 Replies to “வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி”

 1. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி. இந்த பயங்கரவாதத்துக்கு இன்னும் எத்தனை காலம் தான் வெறும் அனுதாப பஜனை பாடிக்கொண்டிருப்பது? மோகன் சர்மா போல் இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கபபோகிறோம்? செகுலர் பஜனை பாடியது போதும். ஆனால் ndtv aaj தக போன்ற ஊடகங்கள் எப்போதும் இந்து விரோத கோட்பாடுகளையே கொண்டுள்ளன . 355 வது சட்டப்பிரிவை உபயோகிக்க போவதாக கர்நாடக அரசை மத்திய அரசு மிரட்டுகிறது. அப்சல் குருவை தூக்கில் போட தைரியமில்லாத அரசு , காஷ்மீர் பண்டிட்களை காப்பாற்ற வக்கில்லாத அரசு கடுகி ஒழிக,

 2. இன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி:

  மோகன் சந்த் சர்மா தமிழகத்திலும் பயங்கரவாத எதிர்ப்பு பணியில் தீவிர
  ஈடுபாடு காட்டியுள்ளார். டெல்லி பாராளுமன்றத்துக்கு திருநெல்வேலியின் ஒரு
  இண்டர்நெட் மையத்திலிருந்து மிரட்டல் அனுப்பப்பட்ட போது அவர் தமிழ்நாடு
  வந்து மதுரை திருநெல்வேலி ஆகிய இடங்களில் இரண்டு வாரங்கள்
  தங்கியிருந்தார். அனுப்பியவன் யாரென்று தெரியாத நிலையிலிருந்தது. ஆனால்
  தீவிர விசாரணை மூலம் அவனது கணினி மூலமான அடையாள வரைப்படத்தை மோகன் சந்த் சர்மா உருவாக்கினார். இதன் மூலம் அவன் யாரென்பது தெரிந்ததுடன் அவனது பல நடவடிக்கைகளை காவல் துறை தொடர்ந்து கவனிக்கவும் முடிந்தது. இது குறித்த விவரங்களை சர்மா அவர்கள் டெல்லி சென்ற பின்னும் தொடர்ந்து தமிழக காவல்துறையினரிடம் கேட்டு அறிந்து வந்தார். தமிழ்நாடு ஸ்பெஷல் போலிஸ் (எட்டாவது பட்டாலியன்) கமாண்டண்ட் மகேஷ்வர் தயாள் தமிழ்நாடு காவல் துறை சார்பாக அவர் உடலில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

  இவர் போன்ற பல சர்மாக்கள் தோன்றி பயங்கரவாதத்தை நம் நாட்டை விட்டு விரட்டும் நாளை எதிர்நோக்குவோம்!

 3. வீரர் திரு.மோகன் சந்த் சர்மா அவருக்கு எனது வீர வணக்கங்கள்…

  எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு (விடை) உண்டு..சில நேரங்களில் எளிதாக கிடைத்துவிடும்..சில சமயம் காலதாமதமாகும்..ஆனால் அதன் விலை உயிர்கள் மட்டுமே.இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினால் மட்டும் போதாது இனிமேல் நடக்கபோகும் சம்பவங்களுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும்.(அரசியல்வாதிகள் தான் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா..அதுஎப்படி ஒரு அரசியல்வாதியும் சாவதில்லை வெடிகுண்டு விபத்தில் மிகச் சிலரை தவிர ஏனெனில் இறந்த அரசியல்வாதிகள் நன்மை செய்ததினால் இறந்தார்கள்)

 4. வணக்கம்.
  போலி அரசியல்வதிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்நாட்டை வீரர்களின் திலகம் திரு சர்மா போன்றவர்களால் தான் காப்பாற்ற முடியும். அவருக்கு என் இதயபூர்வமான அஞ்சலிகள், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது உளப் பூர்வமான அனுதாபங்கள், அவர் மனைவி, மற்றும் மகன் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். திரு சர்மா அவர்களை நாடு மறந்து விடக் கூடாது
  கண்ணீருடன்
  நந்திதா

 5. Please read this ! This can happen only in India !

  https://www.rediff.com/news/2008/sep/29inter1.htm

  If the encounter was fake then what do you have to say about the death of M C Sharma?

  It is pretty clear that Sharma was killed by his own men at very close range from behind. It was the mistake of the police to rush 2500 policemen into the narrow lanes of Batla House. They were deployed on various floors and rooftops of the same building as well as on the adjoining buildings. Such a mishap was bound to happen in such a situation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *