இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனிதவாழ்க்கை நெருக்கடி (humanitarian crisis) என்ற நிலையை எட்டிவருகிறது. உணவுப் பொருள், எரிபொருள், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்து நுகர்பொருள்களுக்கும் தட்டுப்பாடு, பயங்கரமான உணவுப்பொருள் விலையேற்றம், மருத்துவமனைகள் இயக்கம் நிறுத்தம், முதலீடுகள் முடக்கம், அமைதியிழந்து வீதிக்கு வந்து போராடும் மக்கள்..
இலங்கை அரசிடம் இப்போது கையிருப்பில் உள்ள பணம் மொத்தமே 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தான் என்கிறார்கள் (ஒரு ஒப்பீட்டுக்காக, ஹாலிவுட் நடிகர்கள், சில அமெரிக்க மாடல் அழகிகளின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இதைவிட அதிகம்). நாடு திவாலாகி விட்டது. உலக வங்கியின் கடைக்கண் பார்வையை நோக்கிக் காத்திருக்கிறது.
இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதுகுறித்த எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் அன்று இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதிகள் நிகத்திய பெரும் குண்டுவெடிப்புத் தாக்குதல் இந்த சீரழிவுத் தொடரின் முதல்கண்ணி. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் இயங்கும் சுற்றுலாத் துறை (இலங்கையின் பொருளாதாரத்திற்கு 15%க்கும் மேலாக பங்களிக்கும் துறை இது) இதனால் முற்றிலும் முடங்கிப்போய், அடுத்தடுத்து வந்த கோவிட் தொற்று அலைகளால் மரண அடி வாங்கியது. அதே ஆண்டில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ராஜபக்சே சகோதர்களின் அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது – வரி விகிதங்களை அபாயகரமான அளவுக்குக் குறைத்தல், விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்கள் சலுகைகள், அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம் என்ற குறுகிய நோக்கில் உரங்களின் இறக்குமதிக்குத் தடை, அதனால் ஏற்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தி வீழ்ச்சி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல, இந்தியாவுடனான நெருக்கமான உறவிலிருந்து விலகி விலகி, பகாசுர சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி பிதுங்கி நிற்கிறது. ஆரோக்கியமான வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து அதீதமான சலுகைப் பொருளாதாரம் (extreme welfare economics) என்பதை நோக்கிச் சென்ற ராஜபக்சேக்களின் கேனத்தனத்திற்கு இலங்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய விலை இது.
இலங்கையின் இந்த நெருக்கடியை எதிர்பார்த்த சீனா, திவாலாகும் கடன்காரனைப் பார்த்து கிளுகிளுக்கும் ஈட்டிக்காரனைப் போல இப்போது குரூர புன்னகையை வீசிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய தங்களது ஏவலாள் போல ஆட்சிபுரிந்து கொண்டிருந்த ராஜபக்சேக்கள் பதவியிழக்கும் சாத்தியம் உள்ளதால், இலங்கைக்கு எந்தவிதமான “கருணை”யையும், சலுகைகையும் அளிக்க சீனா தயாராக இல்லை. ஆனால் ராஜபக்சேக்களால் திமிராக உதாசீனம் செய்யப்பட்ட இந்தியா, நீண்டகால நட்புறவையும், மனிதாபிமானத்தையும் கருதி இந்த துயர சூழலில் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது. இனி இலங்கையின் பொருளாதாரம் உலக வங்கியின் தயவினால் மட்டுமே மீண்டெழ முடியும் என்ற நிலையில், உலக வங்கியின் எந்தவிதமான கிடுக்கிப்பிடி நிபந்தனைகளையும் சிறிதுகூட மறுக்க இயலாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது. சீனாவின் எரிகொள்ளியிலிருந்து உலகவங்கியின் எஜமானர்களான மேற்கத்திய நாடுகளின் அக்னி குண்டத்தை நோக்கிச் செல்வதைத் தவிர இப்போது இலங்கைக்கு வேறு வழியில்லை 🙁
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களான நமக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் முக்கியமானவை. மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சி புரியும் திருணமூல், மார்க்சிஸ்டு, திமுக, ஆம் ஆத்மி கட்சிகளின் அபத்தமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் பல ராஜபக்சேக்களின் கொள்கைகளை ஒத்துள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால், இந்த மாநிலங்களுக்கு இலங்கை போன்ற ஒரு நிலைமை எந்தக் காலத்திலும் ஏற்படப் போவதில்லை, ஏனென்றால் உலக அளவில் ஆறாவதாக உள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரம் இத்தகைய சில மாநிலங்களின் சில்லறைத் தனங்களைத் தாண்டி மிக வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவின் தலைமை நரேந்திர மோதி என்ற மகத்தான தலைவரின் கையில் உள்ளது. அதன் கீழ் இயங்கும் மத்திய அரசும் அதன் அனைத்துத் துறைகளும் மிகுந்த தீர்க்கதரிசனத்துடனும், நிர்வாகத் திறமையுடனும் இந்த தேசத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
இலங்கை மக்களுக்காக நமது பிரார்த்தனைகள். அன்னை பராசக்தி அந்த நாட்டைக் காத்திடுக.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
பண்டைய வரலாற்றை தெரிந்து கொள்ள கல்வெட்டுகளை படித்தால் ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அன்று எல்லோரும் வாசிக்கும் வண்ணம்தான் எழுதியிருக்கின்றார்கள், அம்மக்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது
அதாவது நம் முன்னோர்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது, நம்மால் முடியவில்லை
ஓலை சுவடிகளை படித்தாலும் அதே நிலைதான், அட ஓலை சுவடி என்ன? 100 வருடத்துக்கு முன் எழுதிய நிலம், வீடு பத்திரங்களே புரிவதில்லை. அவற்றை வாசிக்க தமிழ்நாட்டில் 90 வயது தாண்டியர்களை தேடி ஓட வேண்டி இருக்கின்றது
ஒரு ஆங்கிலேயனால் அவன் மொழியில் 700 வருடங்களுக்கு முன்பு எழுதபட்டதையும் படிக்க முடிகின்றது, ஒரு இத்தாலியனால் 1000 வருடத்துக்கு முற்பட்ட அவன் மூதாதையர் எழுத்தை படிக்க முடிகின்றது
யூதனால் 2000 ஆண்டுக்கு முற்பட்ட ஹீப்ரு மொழியினை படிக்க முடிகின்றது, ஒரு அரேபியனால் 1400 வருடத்துக்கு முற்பட்ட குரானை எளிதாக படிக்க முடிகின்றது
சீனருக்கோ எத்தனை நூற்றாண்டுகளை கடந்த தங்கள் முன்னோர் குறிப்பையும் படிக்க முடிகின்றது.
ஆம் அவர்கள் தங்கள் மொழியினை கவனமாக காத்திருக்கின்றார்கள், ஒரு எழுத்து தவறி எழுதினாலும் வருங்கால சந்ததி குழம்பி தவிக்கும் என்பதில் கவனமாய் இருந்திருக்கின்றார்கள்.
ஆனால் தமிழனால் அவன் மூதாதையர் வரிகளை வாசிக்க முடியவில்லை, 100 வருடத்துக்கு முந்தைய தமிழ் பத்திரங்களை கூட அவனால் வாசிக்க முடியவில்லை
எப்படி இந்த அவலநிலை உண்டாயிற்று?
கல்லூரிகள் வெள்ளையனால் அமைக்கபட்டபொழுது கூட செய்யுளும் ஓலை சுவடிகளும், அதன் சாயலான காகித எழுத்தும் சரியாக தொடரபட்டிருக்கின்றன
குழப்பம் ஈரோட்டு ராம்சாமி கோஷ்டி தமிழ் எழுத்து உலகுக்குள் வந்தபின் தொடங்கிற்று, தமிழை திருத்துகின்றேன் பேர்வழி என எதனையோ அக்கோஷ்டி செய்து எல்லாவற்றையும் மாற்றிற்று
புதிய எழுத்துக்கள் உருவானால் வரும் சந்ததி பண்டைய தமிழை எப்படி படிக்கும்? முன்னோர் மொழியினை எப்படி வாசிக்கும் என்ற தீர்க்கதரிசனமோ சிந்தனையோ கொஞ்சமும் இல்லை
ஆம், இப்படி எல்லாம் யோசிக்க அறிவு வேண்டும், பண்டைய மொழிவடிவம் தொடர்ந்தால்தான் பழம் விஷயங்களை அறியமுடியும் எனும் சிந்தை வேண்டும்
தமிழ் அப்படியே தொடரபட்டால் தமிழனை எப்படி ஏமாற்றமுடியும்? உனக்கு மதமில்லை அறிவில்லை நீ காட்டுமிராண்டி என எப்படி சொல்லமுடியும்?
இதனால் தமிழின் எழுத்துவடிவம் மாறினால் பண்டைய தமிழுக்கும் வரும் தலைமுறைக்குமான சங்கிலி உடைபடும் என திட்டமிட்டு செய்தார்கள்
விளைவு இன்று முன்னோரின் எழுத்துக்களை அறியமுடியாத முட்டாள் தலைமுறை, அறிவு முடக்கபட்ட தமிழ் பரம்பரை,குருட்டு பரம்பரை உருவாகிவிட்டது.
அந்த குருடர்களில் நாமும் சிக்கிவிட்டோம்
பழைய தமிழ் எழுத்துக்களை பார்க்க முடிகின்றதே தவிர, புரிந்து கொள்ளமுடியவில்லை
ஆம், தமிழை திருத்தியது மிகபெரும் கொடுமை , புதுவடிய தமிழை படித்துவிட்டு ஓலை சுவடிகளையும் பழைய பத்திரங்களையும் கல்வெட்டுகளையும் நோக்கினால், காட்டில் மான்கன்று தாயினை பிரிந்து கதறி திரிவது போல் மனம் திரிகின்றது
எழுத்தை மாற்றுகின்றோம் என தாய்க்கும் பிள்ளைக்குமான உறவை வெட்டிவிட்டார்கள் கொடியவர்கள்
சீனனுக்கும், அரேபியனுக்கும், ஆங்கிலேயனுக்கும், யூதனுக்கும் இருக்கும் தொடர்ச்சி தமிழருக்கு இல்லை, காரணம் அவர்கள் பூமியில் அவர்கள் கலாச்சாரத்தை பாரம்பரியத்தை கெடுக்க வந்த திராவிட காட்டுமிராண்டி கும்பல் இல்லை
அதனால் அவர்களால் அவர்கள் மொழியினை தொடர்ந்து பாதுகாத்து தலைமுறை தலைமுறையாய் கொண்டு சேர்க்க முடிகின்றது, இக்கால தலைமுறையும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல்களை எளிதாய் படிக்க முடிகின்றது.
தமிழனுக்கு இருந்த அந்த வாய்ப்பினை சில கும்பல்கள் மண் அள்ளி போட்டன
தமிழகத்தின் இக்கால தலைமுறையினை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும், 100 வருடத்துக்கு முற்பட்ட தமிழ் அவர்களுக்கு தெரியாது
சரி, ஆங்கிலத்தில் புலிகளாயிற்றே என 100 வருடத்துக்கு முற்பட்ட ஆங்கில கடிதங்களை வாசிக்க கொடுத்தால் வாசிக்க முடியாது
இந்த மண்ணில் தொடர்பட்ட பாரத பொதுமொழியாக சமஸ்கிருதமும் தெரியாது
ஆம் பண்டைய தொடர்ச்சியாக ஏதுமில்லா, பழம் பெருமைகளை படிக்க கூட முடியா ஒரு பரிதாப சமூகமாக இது மாறிவிட்டது
காலம் கடந்துவிட்டாலும் , மெல்ல முயன்றால் அதை மீட்டெடுக்கலாம். இன்றும் கல்வெட்டு நிபுணர்கள் உண்டு, ஓலை சுவடி படிப்பார் உண்டு
இதை இன்னும் விரிவுபடுத்தி பழம் தமிழை எல்லோரும் கற்கவைத்தால் இடையில் வந்த குழப்பங்களை சரி செய்யலாம்
ஒரு தலைமுறை இழந்ததை அடுத்த தலைமுறைக்கு சரியாக சொல்லிகொடுத்து அவர்களுக்கும் பண்டை தமிழ் வடிவங்களுக்குமான தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்
ஒழிந்தது திரும்பும், திரும்பியது ஒழியும் என்பது காலத்தின் விதி
அப்படி ஒரு காலம் பழைய நல் தமிழ் இங்கே மீண்டெழும், அப்பொழுது மொழியின் தொடர்பறுத்தவன் “தமிழர் தந்தை” அதை பற்றி கவலையே படாதவர் “முத்தமிழ் அறிஞர்” எனும் பொய்பிம்பங்களெல்லாம் உடைந்து சிதறும்
அதுவரை விடியா இருட்டில் இருந்து பழம் ஓலைசுவடிகளையும் கல்வெட்டுகளையும் தடவிகொண்டே இருக்க வேண்டியதுதான், ஒன்றும் புரியாது.
நமக்கு தெரியாமலே காலடியில் பள்ளம் தோண்டி தமிழை புதைத்திருகின்றார்கள் என்பது பழைய தமிழ் எழுத்துக்களை படிக்கும் பொழுதுதான் புரிகின்றது
இந்த திராவிட கும்பலால் எவ்வளவு இழந்தோம் என சிந்தித்தால் முதலில் இழந்தது பண்டைய தமிழ் மரபு தொடர்ச்சியும் , தமிழுக்கும் நமக்குமான தொடர்பினையே என்பதுதான் பெரும் சோகம், அவர்கள் மேல் பெரும் ஆத்திரம் வரவைக்கும் காரியமும் அதுவே.
கம்பனும் சேக்கிழாரும் எழுதிய தமிழ் நமக்கு புரியவில்லை என்பதை விட 80 வருடங்களுக்கு முந்தைய எழுத்து தமிழ் கூட புரியவில்லை என்பது பெரும் சோகம்
இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 100 ஆண்டில் இந்த தமிழும் நாம் எழுதும் தமிழும் வருங்கால தலைமுறைக்கு நிச்சயம் புரியாமல் போகும் ஆபத்து வந்தாலும் வரலாம், அவர்கள் “சதக் சதக்” “குபீர்” போன்ற தமிழ் வார்த்தைகளுக்கு அகராதியில் அர்த்தம் தேடி மண்டையினை உருட்டலாம்
அந்த அளவு தமிழ் இங்கு “வளர்க்கபட்டிருகின்றது” என்பதுதான் பெரும் வேதனை
ஏற்கனவே தமிழை முழுக்க கொன்றுவிட்டு இனி இந்திவந்தால் தமிழ் அழியும் என்பதெல்லாம் சீரியசான காமெடி, அந்த கோஷ்டிகளால் மட்டுமே செய்ய கூடிய வலி நிறைந்த காமெடி
♦️இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் மோடி ஜியை நீக்க விரும்புகிறார்கள் …
ஆனால் அவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைக் பாருங்கள்.
♦️ஒரு இந்து பெட்ரோல் விலையைப் பார்க்கிறான்.
♦️முஸ்லிம்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களைப் பார்க்கிறார்கள்!
♦️இந்துக்கள் ஜிஎஸ்டி மீது கோபமடைந்து காங்கிரஸை கொண்டு வர விரும்புகிறார்கள்.
♦️முஸ்லிம்கள் இந்தியாவை ஒரு இஸ்லாமிய தேசமாக மாற்ற விரும்பி காங்கிரஸை கொண்டு வர விரும்புகிறார்கள்!
காரணம் எதுவாக இருந்தாலும் …
அனைவருக்கும் ஒரே நோக்கம் இருக்கிறது!
ஊழல் செய்யும் தலைவர்களாக, நரேந்திர மோடியை எதிர்க்கும் பலர் இந்தியாவில் உள்ளனர்! நல்லது!!
இது ஜனநாயகம் … எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது! இது உங்கள் உரிமை !!
♦️ஆனால் …. மோடியை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் ?
இது மிகவும் தீவிரமான கேள்வி !!!
எனவே …. முடிவையும் தீவிரமாக எடுக்க வேண்டும்!
முலாயம், லாலு, அகிலேஷ், தேஜஸ்வி யாதவ், மாயாவதி, சோனியா, ராகுல், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, யெச்சூரி போன்ற இடதுசாரி அரசியல்வாதிகள்.
இவர்கள் நரேந்திர மோடியை விட சிறந்தவர்களா ???
அவர்களின் செயல்பாடுகள் ஏதேனும் சிறந்ததா ???
நரேந்திர மோடியின், குஜராத் முதலமைச்சர் பதவிக்காலத்தை விட மம்தா பானர்ஜி, அகிலேஷ் போன்றோரின் பதவிக்காலம் சிறப்பாக இருக்கிறதா?
நீங்கள் ஒப்பிட விரும்பினால் ….
குஜராத்தின் ஒரு சிறிய நகரத்திற்குச் சென்று பிற மாநிலங்களின் தலைநகரத்தைப் பார்வையிடவும்!
லாலு & முலாயம் அரசியலில் நுழைந்தபோது… அவர்களின் வீட்டு நிலை பரிதாபமாக இருந்தது.
மிதிவண்டிகள் மற்றும் விளக்குகளை
வாங்கக்கூட அவர்களிடம் பணம் இல்லை! இந்த தலைவர்கள் …
சாதி என்ற பெயரில் ஓடியவர்கள் …
இன்று கோடீஸ்வரர்கள்!!!
ராம்கோபால் யாதவ் ஒரு சார்ட்டர்ட் விமானத்தில் சுற்றித் திரிகிறார்,
சிவ்பால் யாதவ் ஆடி காரில்.
எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது ?
நரேந்திர மோடியை விட இந்த மக்கள் சிறந்தவர்களா ?
மோடிஜியின் வங்கி இருப்பு குறித்து எந்த வங்கியாளரிடமும் கேளுங்கள்,
அவர்கள் ஸ்டேட் வங்கியில் உள்ள ஒரு கணக்கை சுட்டிக்காட்டுவார்கள். அகமதாபாத்தில் ஒரு இரண்டு படுக்கையறை பிளாட் வைத்திருக்கிறார்.
சோனியாவின் மகன்-மகள் மற்றும் மருமகன் இன்று கோடீஸ்வரர்கள்!
அவர்கள் நரேந்திர மோடியை விட சிறந்தவர்களா இடதுசாரிகள் …
35 ஆண்டுகளாக வங்காளத்தை ஆட்சி செய்து அழித்தவர்கள் …
நரேந்திர மோடியை விட சிறந்தவர்களா ???
ஐந்து ஆண்டுகளாக …
கெஜ்ரிவால் விளம்பரங்களால் ஆட்சி நடத்தி, டெல்லி மக்களுக்கு வைஃபை, 5000 சிசிடிவி, 150 கல்லூரிகள், 500 பள்ளிகள் போன்றவற்றுக்கு உறுதியளித்தார்.
அந்த ஐ.ஐ.டி அறிஞர் என்று அழைக்கப்படுபவர் நரேந்திர மோடியை விட சிறந்தவரா ?
மாயாவதி தோழர் கன்ஷிராமுடன் அரசியலில் இறங்க விரும்பியபோது … அவர் வீட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்க பணம் இல்லை. அவர் சைக்கிள் மூலம் பிரச்சாரம் செய்தார்!
இன்று …
அவரது செருப்பும் விமானத்தில் வருகிறது … அவரது சகோதரர் தனது பெயரில் 497 நிறுவனங்களை வைத்திருக்கிறார்…
அவர் நரேந்திர மோடியை விட சிறந்தவரா ???
மோடியை எதிர்ப்பவர்கள் … எதிர்க்கட்டும்.
ஆனால் … அதற்கு முன் முடிவு செய்யுங்கள் … மாற்றாக யாரை ஆதரிப்பது !!
ஒரு சிறந்த மாற்று வழி இருந்தால் சொல்லுங்கள் !!
நாட்டைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் !!
அழிக்க இன்னும் எவ்வளவு ??
கொள்ளையடிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் இன்னும் எவ்வளவு?
நான் ஏன் மோடியை விரும்புகிறேன்
என்று எனக்குத் தெரியவில்லை,
ஆனால் மற்ற கட்சிகளை விரும்பாததற்கு எனக்கு பல காரணங்கள் உள்ளன…
நல்ல நாட்கள் வருமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் வேறு எந்த அரசியல்வாதியையும் என்னால் பார்க்க முடியாது… மோடி ஜி தவிர …
இந்தியாவின் நல்ல நாட்களுக்காக கடுமையாக முயற்சி செய்கிறவர்!
மோடி ஜி இந்தியாவை ஒரு இந்து தேசமாக மாற்ற முடியுமா என்பது கூட எனக்குத் தெரியாது, ஆனால் அவர் மீண்டும் பாரத்-மாதாவுக்கு விஸ்வகுரு என்ற அந்தஸ்தை வழங்க முயற்சிக்கிறார் என்பது எனக்குத் தெரியும்!
மோடி ஜிக்கு வரலாறு குறித்த அறிவு இருக்கிறதா என்பது எனக்கு கவலையில்லை, ஆனால் எதிர்காலத்திற்கான முழு தயாரிப்புகளும் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன்!
முழு நேர்மையுடன் சிந்தியுங்கள்!
உங்களுக்காக மட்டுமல்ல …
உங்கள் நாட்டிற்காகவும்..‼️
நீங்கள் ஒப்புக்கொண்டால், நாட்டின் நலனுக்காக தயவுசெய்து இந்த செய்தியை பிறருக்கு அனுப்பவும் …‼️
பாரத் மாதா கி ஜெய் ‼️