(மே-28 வீர சாவர்க்கர் பிறந்த தினம்)
இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த வீரர்களுள் மிக அதிகமாக தியாகங்களை செய்தவர், வலிகளையும், இழப்புகளையும் அனுபவித்தவர் வீர சாவர்க்கர். இத்தனையும் அனுபவித்து விட்டு பின் அதற்கேற்ற அளவு அங்கீகாரம் பெறாமல் வாழ்ந்தவர்.
சாபேக்கர் சகோதரர்களும்,மகாதேவ் ரானடேவும் ஆங்கில அதிகாரியை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட காலம். அவர்கள் விட்டுசென்ற பணியை தொடர மித்ர மேளா என்ற அமைப்பை தன் நண்பர்களை கொண்டு துவக்கினார் சாவர்க்கர். இதுவே பின்னாளில் அபினவ் பாரத் என்றாகியது. ஆயுத புரட்சி மூலமே அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி சுதந்திரத்தை விரைவில் பெற முடியும் என்று நம்பிய அவர் இதனை துவங்கும் போது வயது 15.
ஆயுத புரட்சி என்றால் போராளி வேடம் பூண்டு நம் மக்களையே கொல்வதல்ல. மாறாக, காவல் துறை மற்றும் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்களை போராட வைப்பது. ஆயுத புரட்சி,கொரில்லா போர்முறை போன்றவற்றை கற்றுக்கொடுத்து இளைஞர்களை காவல் துறைக்கும் ராணுவத்திற்கும் சேர வைப்பது. மற்றநாடுகளுடன் நட்புறவு பூண்டு அவர்களின் உதவியோடு ஆயுதம் பெற்று இங்கே புரட்சியை செய்வது. இதில் இறுதி வெற்றி கிட்டும் வரை போராட்டத்தை கைவிடாமல் தொடருவது என்பதே அவருடைய எண்ணம்.
ஆனால், இங்கே அரசியலில் 1800களின் இறுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் அவருக்கு யாருக்காக நாம போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. காங்கிரசின் (அக்கால) தேசியவாதம் ஹிந்தி, ஹிந்து ஆகிய அடையாளங்களை பின்னியே இருந்தது. அப்போது அதில் வெறுப்படைந்த அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை தோற்றுவித்த சர் சையத் அஹமத் காங்கிரசின் தேசியவாதத்தை மறுத்து இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு நாடுகள் தேவை,இவர்கள் இணைந்து வாழ்வது என்பது இயலாது என்ற கோஷத்துடன் முஸ்லீம் லீக் அமைப்பை துவக்கினார். அது துவக்கப்பட்ட போது சாவர்க்கருக்கு வயது 5. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நிலைப்பாடு மத அடிப்படைவாதத்தை மட்டுமே முன்வைத்து இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழவே முடியாது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து இஸ்லாமியர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் செய்து கொண்டு இருந்தது. காங்கிரசிலும் இதனால் பெரிய பிளவு செயல்பாட்டு அளவில் வந்தது.
அப்பொழுது தான் சாவர்க்கருக்கு ஹிந்து என்பவன் யார் என்ற சிந்தனை எழுந்தது. அந்தமானில் சிறைதண்டனை அனுபவித்து கொண்டிருக்கும்போது அவர் சிந்து நதியின் மறுபுறம் இருக்கும் நிலப்பரப்பை தன்னுடைய புண்ணிய பூமியாக தாய் நாடாக யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்ற கோட்பாட்டை எழுதினார். இதன் விரிவாக்கம் பின்னாளில் மிகப் பிரபலமாக இந்துத்துவம் என வளர்ச்சி அடைந்தது.
இது அந்நாளைய காங்கிரசின் தேசியவாதத்திற்கு எதிரானது. மத அடிப்படைவாதிகளின் பிடியில் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருந்த இஸ்லாமியர்களை தேசியத்தின் பக்கம் இது இழுக்க உதவவில்லை. காரணம், நம்முடைய சமுதாயத்தில் இருந்த சில இறுகிப்போன நடைமுறைகள்.
ஒரு பக்கம் கலாச்சார தேசியம் என்ற கருத்தாக்கத்தை பரப்பிக்கொண்டிருந்த சாவர்க்கர் அதற்கு இருந்த முட்டுகட்டைகளான சாதீயம், தீண்டாமை ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். மதம் மாறி போனவர்களை திரும்ப இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கு இது மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
சாவர்க்கரின் இந்த முயற்சிக்கு அன்று பெருமளவில் ஆதரவு இருந்திருந்தால் பின்னாளில் பல மீனாட்சிபுரங்ககள் தவிர்க்க பட்டிருக்கும். அவருக்கு ரத்தினகிரியை தாண்டி வெளியே செல்ல கூடாது என்ற தடை இல்லாதிருந்தால் அவர் தாய் மதம் திரும்ப விரும்புவோர் திரும்புவதையும் ஹிந்து மதத்தின் சமூக பிரச்சினைகளையும் தீர்க்க தேசிய அளவில் இயங்கி இருப்பார்.
(வி.வி.பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
என்னுடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன் தீவிரமாக மத்திய அரசை எதிர்ப்பவன். எப்பொழுதும் எதாவது ஒரு செய்தியை என்னிடம் காட்டி விமர்ச்சித்துக்கொண்டே இருப்பான். அவன் என்னிடம் காட்டும் ஒவ்வொரு செய்திகளுக்கும் எனது பதில், “இதற்கு ஆதாரம் என்ன?” இதை நீ எப்படி உண்மை என்ற முடிவுக்கு வருகிறாய்? இந்த கேள்வியோடு நிறுத்திக்கொள்வேனே தவிர தர்க்கம் செய்ததில்லை. எனது இந்த இரு கேள்விகளால் நாட்கள் செல்லச் செல்ல அவனது விமர்சனங்கள் குறைந்து கொண்டே வந்தது…!
சிறிது நாட்களுக்கு முன்பு அண்ணாமலை எனது கட்சியையோ கட்சிக்காரனையோ தொட்டால் திருப்பி அடிப்பேன் என்றும் அது எனது தர்மம் என்றும் கூறிய பேட்டியின்போதும், இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறைப்பு கண்டனப் பேரணியின்போதும் லைவ் எப்படி பார்ப்பது என்று என்னிடம் கேட்டு உயிரை வாங்கிவிட்டான். காரணம் என்னனா இந்திய அரசியலையும் தமிழக அரசியலையும் சமீப காலமாக கூர்ந்து கவனித்து வருகிறான் என்பதை அவ்வப்போது K.Annamalai பேட்டி, Maridhas M வீடியோ, B R Sreenivasan அவர்களின் விவாதங்கள் போன்றவற்றை அவன் பார்க்கும் காணொலியின் ஒலிகளை வைத்து புரிந்துகொண்டேன்…!
இன்று அவன் கூறுகிறான் “தமிழக அரசியலில் இத்தகு ஆற்றல் மிக்க தலைவரை நான் இதுவரை கண்டதில்லை” அவரின் தன்னம்பிக்கையும் தைரியமான பேச்சும், தான் பேசும் ஒரு விசயத்தில் உள்ள “விசய ஞானமும்” என்னை வியக்க வைக்கிறது என்கிறான். இன்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்கத்தான் பேரணி நடக்கிறது என்று நான் கூறியதும் என்னை தடுத்து இன்றைய ஆளும் அரசு தேர்தல் வாக்குறுதியில் தந்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் இந்த பேரணி நடக்கிறதே தவிர புதிதாக எதுவும் குறைக்கச் சொல்லி பேரணி நடக்கவில்லை என்று எனக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழக அரசியலை கூர்ந்து கவனிக்கிறான்…!
ஊருக்கு சென்றதும் “அண்ணாமலை” பெயரில் ஒரு இளைஞரணி ஆரம்பிக்க வேண்டும் என்று அவன் கூறியதும் எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் அவன் வெறும் முகநூல் யூடியூபில் வரும் செய்திகளை வைத்து மத்தியை கடுமையாக விமர்ச்சனம் செய்தவன் குடும்ப பாரம்பரியமாக ஒரே கட்சியை சேர்ந்தவனிடமிருந்து இப்படி ஒரு பதிலை கேட்டதும் எனக்கும் சற்று வியப்பாகத்தான் இருந்தது…!
தமிழகம் மத்தியை நோக்கி இவ்வளவு கடன் பாக்கி இருக்கிறது என்று சுட்டிக்காட்டியதை எதிர்த்து மத்திக்கும் தமிழகம் தரவேண்டிய கடன்தொகையைப் பற்றி கூறிய அண்ணாமலையின் நியாயமான வாதத்தை அவ்வப்போது என்னிடம் கூறிக்கொண்டே இருக்கிறான். தமிழக வரலாற்றில் “வலிமையான தலைவன்” ஒருவன் உருவாகிறான் என்று கூறியவன் இறுதியாக பாரத பிரதமர் சென்னை வந்தபோது நிகழ்ச்சி நடந்த மேடை அண்ணாமலைக்கு மட்டும் கிடைத்திருந்தால் காட்சி வேறாக இருந்திருக்கும் என்று கூறிக்கொண்டே இன்றைய பேரணி காணொளிகளை பார்க்கச் சென்றுவிட்டான். காலம் மாறுகிறது, காட்சியும் மாறுகிறது, நாம் எப்போது மாறுவோம்? என்ற சிந்தனையில் நான்…!
சுயமரியாதைக்கு இலக்கணம் இசைஞானி இளையராஜா
தமிழகத்தில் திராவிட கட்சியான திமுகவின் அரசியல் என்பது பிராமணர் மேலாதிக்க எதிர்ப்பு என்று சுயமரியாதை என்றும் சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் திமுக அமைச்சர்கள் நேரு சாமியார் முன்பு தரையில் அமர்ந்துக்கொள்வதும் அன்பில் மகேஷ் பிராமண சாமியாரை பல்லக்கு தூக்குவதும் என சிறப்புற பிராமண சாதிய கலாச்சாரத்தை காப்பார்கள்.சாதிஇந்துக்களுக்கான அரசியல் பதவிகளுக்கு மட்டுமே பிராமண எதிர்ப்பை திமுக பின்பற்றும் கட்சியாகும்.ஆனால் பிராமணர்களுடன் அரசியல் ரீதியாக கைகோர்த்து செயல்படவும் இந்து மத கலாசாரத்தை முன்னின்று நடத்தும் கட்சியாகவே திமுக உள்ளது
சுயமரியாதைக்காரர்கள் என்றும் பிராமண எதிர்ப்பையும் பேசுவதாக சொல்லும் திமுகவினரால் செயல்படுத்த முடியாத ஒன்றை இசைஞானி இளையராஜா செய்துக்காட்டுகிறார்.அது காஞ்சி சங்கராச்சாரியுடன் நாற்காலியில் ஆளுமையுடனும் சுயமரியாதையுடன் அமர்வதாகவும் ஆகட்டும் மற்ற பிராமண குருக்களை தன் கீழே அமர வைப்பதுமாக சுயமரியாதையின் இலக்கணமாக இசைஞானி இளையராஜா உள்ளார்.இதனை அரசியல் அதிகாரத்தில் உள்ள திமுகவினரால் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றாகும்
சங்கராச்சாரியார் முன்பு ஜனாதிபதிகளும் பிரதமர்களும் கீழு உட்காரும்பொழுது சரிக்கு சமமாக உட்கார்ந்து சுயமரியாதை பேணிய இசைஞானி இளையராஜாவை விமர்சிக்க சூத்திரர்களுக்கு அறுகதை இல்லை
“செய்தியாளர்களை அணுகிய விதம் தான்
பலரை மேதாவியாகவும், சிலரை கோமாளியாகவும் மாற்றியது தமிழக அரசியல் களம்
என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.”
செய்தியாளர் சந்திப்பின் போது அண்ணாமலை அவர்கள் செய்தியாளர் ஒருவரை அவமரியாதையாக பேசி விட்டதாக கூறி
மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள்
நடத்திய போராட்டத்தில் உதிர்க்கப்பட்ட வரிகள் இவை.
“இதை தான் இவர்கள் இவ்வளவு காலமும் செய்து வந்துள்ளனர், இனிமேலும் இப்படி தான் செய்வார்கள்.”
பத்திரிகையாளர்களிடம் கோபத்தை வெளிக்காட்டிய விஜயகாந்தை இவர்கள் எப்படி கையாண்டார்கள், அவரை எப்படி காமெடின் போல காட்சிபடுத்தினார்கள் என்பதை தமிழகமே அறியும்.
அன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக திமுக அரசிற்கு எதிராக பல்வேறு முக்கிய புள்ளி விவரங்கள் உடன் கடுமையாக குற்றம் சுமத்தி பேசி வருகையில்
வேண்டும் என்றே அண்ணாமலையின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக சாதாரண பேனர் விசயத்தை பற்றி திரும்ப திரும்ப கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தார், அந்த குறிப்பிட்ட செய்தியாளர்.
அதை உணர்ந்த அண்ணாமலை அவரை கவுண்டர் செய்யும் விதமாக உங்களது 200 வந்து விடும் என்று சொன்னார்.
ஆனால் அந்த செய்தியாளர் திரும்ப திரும்ப இடையூறு செய்யும் விதமாக பேசவே அண்ணாமலை ஏலம் போடுவது போல பேசினார்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் போதே,
ஒரு மணிநேரம் நான் பேசி இருக்கிறேன், உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறேன். யாரையாவது தவறாக பேசியிருக்கேனா? என்று கேட்டு விட்டு
பேனர் அனுமதி பெறாமல் வைத்த ஆதாரம் உங்க கிட்ட இருந்தால் காவல்துறையிடம் புகார் செய்யுங்கள் என்று பேசினார்.
ஆனால் இதில் நாம் கற்று கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்
“ஒரு சிறு தவறு, பெரிய நோக்கத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுகிறது.”
அதைபோன்ற நிகழ்வு தான் அன்று நிகழ்ந்தது.
உணர்ச்சி வசப்பட்டு அண்ணாமலை பேசிய சில வார்த்தைகள், திமுகவிற்கு எதிராக அண்ணாமலை அடுக்கிய புள்ளிவிவரங்களை வீழ்த்திவிட்டது.
பரவாயில்லை. இது அவருக்கும் தெரியாமல் இருக்காது.
ஆனால் பத்திரிகையாளர்கள் வானிலிருந்து குதித்து வந்தவர்கள் கிடையாது.
அவர்கள் நவீன யுகத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூணும் கிடையாது.
ஏனெனில் இன்று பணநாயகத்துடன் கைகோர்த்து
உள்நோக்கத்துடன் செய்திகளை திரித்து பரப்பும் ஊடகவியலாளர்கள் பெருத்துவிட்டனர்.
அண்ணாமலையின் ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் பங்கேற்ற செய்தியாளர்களில் 90 சதவீதம் பேர் அவரது பேட்டி பற்றிய செய்திகளை இம்மியளவு கூட பதிவிடாமல் தவிர்த்து விட்டது ஏன் என்பது பற்றிய விளக்கத்தை பத்திரிகையாளர் சங்கம் வெளியிடுமா?
அண்ணாமலை பட்டினபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து எந்த செய்திகளையும் வெளியிடாதது ஏன்?
பாஜகவின் திருவாரூர் போராட்டம் பற்றிய எந்த தகவல்களும் ஊடகங்களில் வெளியிடப்படாதது ஏன்? தினமலர் கூட இரண்டு நாட்கள் கழித்த பிறகு தான் செய்தி வெளியிட்டது.
ஏன் இந்த ஓரவஞ்சனை?
பாஜக நிர்வாகி ஒருவர் பெண் நிருபரிடம் தவறாக நடந்து கொண்டதாக கண்டன போராட்டத்தில் கூச்சலிட்ட எவரும் ஆதாரம் சமர்பிக்காதது ஏன்?
சில தினங்களுக்கு முன் செய்தி சேகரிக்க சென்ற ரிபப்ளிக் டிவி நிருபர்கள் சிலரை கேரளாவில் பிஎப்ஐ உறுப்பினர்கள் சிலர் தாக்கினர்.
இது குறித்து தமிழக செய்தி நிறுவனங்கள் ஏதாவது ஒன்று செய்தி வெளியிட்டீர்களா?
பத்திரிகை சுதந்திரம் பறிபோகிறது என்று தமிழக பத்திரிகையாளர் சங்கங்கள் எதுவும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே அது ஏன்?
இது போன்று யாரையோ திருப்தி படுத்தும் வகையில் தானே உங்களது செயல்கள் வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கிறது.
இந்த பதிவின் முதல் பாராவும், உங்களது நடத்தையும்
ஊடகவியலாளர்கள் அல்ல ஏவலாளிகள் போல தான் இருக்கிறது.
“ஊடக தர்மத்தை காக்க
ஒளிவு மறைவின்றி
விருப்பு வெறுப்பின்றி
நடுநிலையுடன் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பத்திரிகை நண்பர்களே.”
வணக்கம் நண்பர்களே
ஒருவர் தென்னக ரயில்வேயில் டில்லி செல்வதற்கு முன்பதிவு செய்கிறார் அதற்கு தென்னக ரயில்வே ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறது
அது ஹிந்தியில் இருப்பதை பார்த்த அந்த நபர் உடனே பொங்கி எழுந்துவிட்டார் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கூட
(அவர் எப்போதுமே விமானத்தில் போக கூடியவர் ஏன் ரயிலில் போனார் என்பதற்கு கடைசியில் வருகிறேன் )
உடனே டில்லி போனவுடனே ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார் அது என்னவென்றால் அது எப்படி ரயில்வே குறுஞ்செய்தி ஹிந்தியில் வரலாம் எனக்கு ஹிந்தி தெரியாது
அதனால் இனைப்பு மொழியான ஆங்கிலத்தில் தானே அனுப்ப வேண்டும் இப்ப புரிகிறதா ஒன்றிய அரசு ஹிந்தியை எப்படி தினிக்கிறது என்று அதனால் நாங்கள் இதை சும்மா விடபோவது இல்லை என்று ஒரே கூச்சல்
அவருக்கு துணையாக இன்னொறு பாராளுமன்ற உறுப்பினர்
இந்த செய்தி எல்லோருக்குமே ஓ அப்படியா அப்ப அண்ணாமலை சொல்வது பொய்யா ஹிந்தி தினிப்பு எல்லாம் இல்லை விருப்பபட்டால் படிக்கலாம் என்பதெல்லாம் பொய்யா என்று நமக்கு மட்டும் இல்லாமல் எல்லோருக்குமே தோன்றும் இது எதார்த்தம்
அதனால் உடனே இது எல்லா மீடியாக்களிலும் செய்தியாகியது
அடுத்து உடனே தென்னக ரயில்வே வெளியிட்ட தகவல்களினால் தான் உண்மை என்ன என்று தெரிய வந்தது
அது இதுதான் முன்பதிவு செய்ய ஒரு கூப்பன் வழங்குவோம் அதில் விருப்பபட்ட மொழியை தேர்வு செய்க என்று குறிப்பிட்டுள்ளோம்
சம்மந்த பட்ட நபர் ஹிந்தி என்று இருக்கும் கட்டத்தில் டிக் செய்து இருந்ததால் அவருக்கு ஹிந்தியில் குறுஞ்செய்தி அனுப்பபட்டது என்று விளக்கம் தந்த உடன்
யாருடைய பேச்சு மூச்சையும் கானோம்
வரிந்துகட்டிகொண்டு வந்த மீடியாக்கள்
இந்த உண்மை தெரிந்த உடன்
தென்னக ரயில்வே சொன்ன தகவல்களை வெயியிடவும் இல்லை
மீடியாக்களின் எவ்வளவு பெறிய ஏமாற்று தனம்
சரி நண்பர்களே இந்த பிரச்சினையை உண்டு பண்ணியது யார் தெரியுமா
சாச்சாத் தமிழச்சி தங்க பாண்டியன்
அவருக்கு துணை போனது கனிமொழி
எப்போதுமே விமானத்தில் போக கூடியவர்கள்
ரயிலில் முன்பதிவு செய்து அதிலும் ஹிந்தி ஆப்ஷனுக்கு டிக் கொடுத்து
ஹிந்தியில் குறுஞ்செய்தி வரும் என்று தெரிந்தே அரசியல் நாடகம் எப்படி செய்கிறார்கள் பாருங்கள்
இதுதான் திமுகவின் பித்தலாட்டம்
இந்த நவீன காலத்திலேயே இவ்வளவு தில்லுமுல்லு அரசியல் என்றால்
முன்பு எப்படியெல்லாம் ஏமாற்றி இருப்பார்கள் இந்த அப்பாவி தமிழர்களை
இன்னும் இந்த திமுகவை நம்பும் பாவம் அப்பாவிகள் உபிக்கள்
இன்னும் வரும்….
ஜெய்ஹிந்
ஐயா, ஒரு ஐடியா. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கார் டிரைவரின் லைசென்ஸ் அடுத்த மாதம் முடிவுக்கு வருதாம். நாம் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்து, காரை சீஸ் பண்ணக்கூடாது?????
வாட் எ பிரில்லியண்ட் ஐடியா. மேல் சொல்லு மேன்.
ஐயா, கடந்த வாரம் அவரோட பிரஸ்மீட்டில் வழங்கப்பட்ட டீயில் சற்று உப்பு சேர்த்து இருந்ததாக ஒரு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு. முன்களப்ஸ் குடிக்கும் டீயில் உப்பு சேர்த்து அவர்களுக்கு சுரணை வரவழைக்க முயற்சி செய்தார் என்று அந்த சமையல்காரரை கைது செய்யலாம்.
எக்ஸலண்ட். மேல் சொல்லு.
கமலாலயத்தின் வாட்ச்மேன் நேற்று ஒரு நாயை ச்சூன்னு சொல்லி விரட்டியடிக்கும் காரு. பருப்புகளை வன்கொடுமை செய்ததாக அவர் மேல் ஒரு கேஸை போட்டு அவரை தூக்கி உள்ளே போட்டுடலாம்.
மார்வலஸ். மேல் சொல்லு.
கமலாலயத்தை கூட்டி, தொடைக்கிற ஆயா, வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை போடுது. அது மேல் போதை மருந்துகள் உபயோகித்ததா ஒரு வழக்கை போட்டு, உள்ள வச்சிடலாங்கையா.
ஓஹோ. மேல சொல்லு.
கமலாலயம் வாசலில் நின்ற தொண்டர் ஒருத்தர் பிச்சைக்காரன் ஒருத்தனுக்கு பத்து ரூபாய் பிச்சை போட்டு இருக்கிறார். அந்த நோட்டு மூலையில் கிழிந்து போயிருக்கு. அவர் மேல ஒரு சீட்டிங் கேஸை போட்டு உள்ளே தள்ளி விடலாம்.
சூப்பரோ, சூப்பர். உன் ஐடியாவெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதனால் நமக்கு என்ன நன்மை?????
ஐயா, அவருக்கு வேண்டியவர்கள் மீதெல்லாம் இந்த மாதிரி ஏதாவது ஒரு கேஸை போட்டு உள்ளே தள்ளரிட்டா, அவங்களை வெளியே எடுக்குறதுலேயே அவரு பிஸி ஆயிடுவாரு. நம்மள பத்தி பேச, ஏன் சிந்திக்கவே நேரம் இருக்காது.
கான்ஸ்டபிள் கந்தசாமி, உன்னை மாதிரி ஒரு ஆஃபிஸரை தான் நான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தேன். இத்தனை நாளாய் எங்கய்யா இருந்தே????? நீ பெரிய மூளைக்காரன்தான். உன்னை இப்போதே ஐஜியா பிரமோட் பண்றேன்.
அண்ணாமலையின் ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் பங்கேற்ற செய்தியாளர்களில் 90 சதவீதம் பேர் அவரது பேட்டி பற்றிய செய்திகளை இம்மியளவு கூட பதிவிடாமல் தவிர்த்து விட்டது ஏன் ? இதுதான் உங்கள் நடு நிலமையா ?
இதுதான் உங்கள் பத்திரிகை தர்மமா ?
இதற்கான விளக்கத்தை பத்திரிகையாளர் சங்கம் வெளியிடுமா?”
இவர்கள் இதுவரை என்னவோ மிகவும் நடு நிலையாக நடந்தது போலவும் அண்ணாமலையின் கருத்துக்களையும், கேள்விகளையும் அப்படியே வெளியிட்டது போலவும், அண்ணமலை இவர்களை கேவலபடுதியது போலவும் குதிக்கிறார்கள்.
இவர்களின் கண்ட போராட்டத்தினாலோ, இவர்கள் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணிப்பதாலோ அவருக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. இதுவரை அவர் எப்படி பிரபலமானாரோ, அப்படியே மென்மேலும் பிரபலமாகிக்கொண்டே இருப்பார்.
இவர்களுக்கு அண்ணாமலையை எதிர்கொள்ள வக்கில்லை என்பது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம், கோபாலபுரத்தின் அதிகார மிரட்டலை எதிர்கொள்ளும் வக்கும் இல்லை. இப்படி நாடகம் ஆடுவதை விட, எங்களால் கோபாலபுரத்தை எதிர்த்து எழுத திராணி இல்லை என்று வெளிப்படையாக சொல்லுங்கள், மீதியை மக்களும், அண்ணாமலையும் பார்த்து கொள்வார்கள்.
உங்கள் கைய்யாலாகத்தனத்தை மறைக்க, அண்ணாமலையை எதிர்த்து கண்டன போராட்டம், கழுதை போராட்டம் என மக்களை ஏமாற்றாதீர்கள். உங்கள் முகமூடி கிழிந்து வெகு நாளாகிவிட்டது. இன்னும் உள்ளாடை மட்டும் பாக்கி. அதையும் இழந்து அசிங்கப்படாதீர்கள்
டிராவல்ஸூக்கு: பாஜக போராட்டத்துக்கு சிறுபான்மையினர் வண்டி குடுக்க மாட்டாங்க அத சர்ச்சும், மசூதியும் பார்த்துக்கும் மிச்சமிருக்க வண்டிகள் போக கூடாது..மீறி போனா கட்சி நிர்வாகிகள் அந்த வண்டிகளை அடுத்த நம்ப கட்சி ஆர்டர் வராதுன்னு மிரட்டனும்.
.
காவல் துறைக்கு: கூட்டம் கூடறதுக்குள்ள அரஸ்ட் பண்ணி போராட்டத்தை முடிச்சிறனும்.
.
மீடியாக்களுக்கு: ரொம்ப கூட்டம் சேர்ந்து மாஸாகிட்டா பத்திரிக்கைகள் அண்ணாமலை செய்திகள் புறக்கணிப்புங்கிற போர்வையில அந்த காட்சி/செய்திய யாரும் போட கூடாது. கூட்டம் கம்மியா இருந்தா எல்லா சேனலும் ஓடி போய் அங்க உக்காந்துகிட்டு போராட்டம் பிசுபிசுத்தது..போடனும்.
.
# 60 ஆண்டுகால சாக்கடையை அத்தனை எளிதாக சுத்தப்படுத்திவிட முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதுக்காக விட்ற முடியுமா!?