திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு

தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010). இதன் ஆங்கிலப் பதிப்பு The Dravidian Maya என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த நூல் புத்தக வடிவம் பெறுவதற்கு முன் தமிழ்ஹிந்து இணையதளத்தில் தொடராக வெளிவந்தது என்பதை வாசகர்கள் அறிவார்கள்.

அண்ணாமலை ஜி சில நாட்கள் முன்பு ம.வெங்கடேசன் எழுதிய இந்துத்துவ அம்பேத்கர் நூலைப் பற்றி ஒரு விவாதத்தில் குறிப்பிட்டுப் பேசினார். அந்த நூல் வெளியீட்டு விழா தமிழ்ஹிந்து சார்பில் நடத்தப்பட்டது, அதனுடன் வெளியிடப்பட்ட ம.வெ.யின் மற்ற இரு நூல்களும் தமிழ்ஹிந்து தளத்தில் தொடர்களாக வந்தவை தான். ஒருவகையில், இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. அந்த இணையதளத்தின் ஆசியர் குழு உறுப்பினர் என்ற முறையில் இது எனக்கு மிகவும் பெருமிதம் அளிக்கிறது.

இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் அண்ணாமலை ஜி ஆற்றிய உரை அட்டகாசம். ஜெயகாந்தன், சோ ராமசாமி, நெல்லை ஜெபமணி போன்ற பழைய தலைமுறை பேச்சாளர்கள் இது குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் தான். ஆனால் இந்தத் தலைமுறையில், கடந்த 10 வருடங்களில், திராவிட அரசியலின் பொய்மைகளை, அபத்தங்களை, அசிங்கங்களை இவ்வளவு துல்லியமாக, அழுத்தமாக, அறிவுபூர்வமாக இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையில் தோலுரித்துக் காட்டுகின்ற தலைவர் என்றால் அண்ணாமலை ஜி தான். திராவிட அரசியல் வெங்காயத்தை லேயர் லேயராக உரித்துப் போட்ட அந்த உரை லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களிடம் போய்ச்சேர வேண்டும். பாஜக கட்சியும் தொண்டர்களும் அதைச்செய்வார்கள் என்று நம்புவோம்.

The Dravidian Maya (Part 1) புத்தகத்தை இங்கே வாங்கலாம் .

One Reply to “திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு”

 1. நாங்கள் ஆரியத்தின் வேரை புடுங்க வந்திருக்கோம் ப்ரோ

  சரி ப்ரோ.! நீ வேரை அறு இல்லைனா புடுங்கு. அதுக்கு முன்னாடி நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு ப்ரோ. ஆரியர்கள்னா யாரு ப்ரோ?

  ஆரியர்கள் என்றால் பிராமணர்கள். தெரியாதா ப்ரோ?

  அப்படி நீ எங்க படிச்ச ப்ரோ?

  அது வந்து தம்பி நீங்க நல்லா விளங்கிக்கிடணும் அப்படிதான் சொல்லச் சொன்னாங்க ப்ரோ

  சரி அவங்க எங்க இருந்து வந்தாங்க?

  மத்திய ஆசியாவில் இருந்து. அதாவது இன்றைய ஈரான்.

  சரி இதையாவது எங்க படிச்சனு சொல்லு. உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி தந்தது? அதையாச்சும் சொல்லு.

  இதுதான் வரலாறு ப்ரோ நீங்க படிக்கலியா?

  எந்த வரலாறு டா? எதை படிக்கணும் சரியா சொல்லுடா…! பதட்டமா இருக்கு

  அதுதான் தம்பி இந்த பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக ஆடுகளை மாடுகளை மேய்த்துக்கொண்டு நம்மை அடிமைப்படுத்த வந்தாங்க.

  ஓ…! பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு அடிமைப்படுத்த வந்தாங்கனு எங்க எழுதி இருக்கு? நீ படிச்ச நூலின் பேரச் சொல்லு ப்ரோ..

  அதான் யூடியூப் முகநூல்னு எல்லா இடத்துலயும் இருக்கே… வேணும்னா லிங்க் தரேன் படிக்கிரீங்களா ப்ரோ?

  சோதிக்காதீங்கடா என்னய …

  அது சரிடா பெரும் படையோடு கூடிய “அலைக்சாண்டர்” மற்றும் “செங்கிஸ்கான்” கைபர் போலன் கணவாயை தாண்டி சிந்து நதியை கடக்க சிரமப்பட்டபோது, படைபலம் இன்றி ஆடு மாடுகளை மேய்க்க கைபர் கணவாய் வழியாக சிந்து நதியில் ஆடு மாடுகளை இறக்கி பாரதத்திற்குள் “ஆரியர்கள்” நுழைந்தார்கள் என்பதை நீ எப்படி நம்புற? நீ புகுத்தறிவு வாதி தானே?

  அது அப்படி இல்ல தம்பி உங்களுக்கு வரலாறு தெரியல. சங்க இலக்கியங்களிலேயே ஆரியர்களை எதிர்த்து தமிழர்கள் போர் செஞ்சிருக்காங்க. தெரியுமா?

  அட டப்மாஷ் மண்டையா தமிழர்கள் ஆரியர்களுடன் மட்டுமாடா போர் செஞ்சாங்க? மூவேந்தர்களுக்கு உள்ளேயே அடிச்சிக்கிட்டாங்களேடா? அதுசரிடா சங்க இலக்கியங்களில் வரும் ஆரியர்கள் யாரு?

  அவங்கதான் பிராமணர்கள். அவங்கதான் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள்….!

  டேய் பனங்கா மண்டையா சங்க இலக்கியங்களில் வரும் ஆரியர்கள் தான் பிராமணர்கள் என்று எங்கேயாவது இருக்கா டா? எதாவது ஒரு மேற்கோள் காட்டுடா…

  அது வீட்ல இருக்கு ப்ரோ.

  டேய் நீ தானே சங்க இலக்கியங்களில் ஆரியர்கள் தான் பிராமணர்கள்னு போட்ருக்காங்கனு சொன்ன? நீ படிச்சிருக்கியா இல்லியா?

  நான் படிக்கல ப்ரோ

  அப்புறம் எப்படி ஆரியர்கள் தான் பிராமணர்கள் னு சொல்ற?

  அப்படிதான் சொல்லச்சொன்னாங்க அண்ணே என்ன விட்ருங்க அண்ணே.

  யாருடா சொல்ல சொன்னது?

  யூடியூப்லயும் முகநூல்லயும்

  ஏன்டா ஆரியன் ஆரியன் னு கத்துற உனக்கு ஆரியர்கள் என்றால் யார் னு தெரியல எந்த ஆதாரமும் இல்லாமல் பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்று ஊரு ஊரா போஸ்டர் அடிக்குற உனக்கெல்லாம் வெட்கமே இல்லியாடா?

  அண்ணே நான் பாவம் அண்ணே! இப்படியெல்லாம் பேசணும்னும், இப்படி பேசினால்தான் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கைகளை சிதைக்க முடியும்.

  ஓ…! அதுனால நீயும் சிதைக்க ஆரம்பிச்சிட்டியா?

  அது வந்து இனி அப்படி பேசமாட்டேன் ப்ரோ. எனில் ஆரியர்கள் என்பவர்கள் பிராமணர்கள் இல்லையா ப்ரோ?

  ஆரியர்கள் தான் பிராமணர்கள் என்பதற்கு எந்த இலக்கிய தொல்லியல் சான்றுகளும் இல்லை. ஆரியர்கள் தான் பிராமணர்கள் என்பது கால்டுவெல் மற்றும் மேக்ஸ் மில்லரின் காலத்திற்கு பின்பு தோன்றிய ஒரு தியரி. இந்த தியரியை குப்பைத் தொட்டியில் தூக்கி வீச வேண்டும் என்றவர் அண்ணல் அம்பேத்கர்.

  ஓ.. அவரே சொல்லிட்டாரா ப்ரோ? அப்புறம் கைபர் கணவாய் வழியாக வந்த கதையெல்லாம் எங்க இருக்கு ப்ரோ?

  எனக்கு தெரிஞ்சு 1940 களுக்கு பிற்பாட்டில் ராகுல் சாங்கிருத்தியான் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நாடக வடிவிலான வரலாற்று புனைவு நூலில் தான் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்றை இப்படி நாடக நூலை மையமாக கொண்டு பேசுவதெல்லாம் தமிழனுக்கு அழகா ப்ரோ?

  இல்ல ப்ரோ..தப்புதான் ப்ரோ. சரி ப்ரோ ஆரியர்கள் என்றால் யார் ப்ரோ? அதுக்கு அர்த்தம் என்ன?

  எனக்கு தெரிந்ததை சொல்றேன் ப்ரோ, பொதுவாக இந்த பாரத நிலப்பரப்பில் “ஆரியர்” என்ற சொல் எந்த பொருளில் பயன்படுத்தப்பட்டதோ அதற்கு எதிர் பொருளாக “பூரியர்” என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆரியன் என்ற சொல் யாரை குறிக்கும் என்ற கேள்விக்கு பதிலாக ஆரியன் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று தேடினால், கல்வியிற் சிறந்தவன் என்றும், குணத்தில் உயர்ந்தவன், என்றும் மேம்பட்ட பண்புடையோன், என்றும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. அதுபோல ஆரியன் (பண்புமிக்கவன்) என்ற சொல்லுக்கு எதிர் பொருளாக “பண்பற்றவன்” என்ற பொருளில் “பூரியன்” என்ற சொல்லாடலை நம் முன்னோர்கள் பயன்படுத்தியே வந்துள்ளனர்…!

  புரியுதா ப்ரோ?

  ஆமா ப்ரோ.

  இனி எதாவது வேர புடுங்கணுமா ப்ரோ?

  அதான் புடுங்கிட்டீங்களே… இனி இந்த பக்கமே வரமாட்டேன் ப்ரோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *