ம(மா)ரியம்மா – 9

This entry is part 9 of 14 in the series ம(மா)ரியம்மா

பிறகு அனைவரும் விவாத அரங்குக்கு வந்து சேருகிறார்கள்.

லயோலா சேனல் குழு கேமராவைப் பொருத்துகிறது.

ஒரு இந்து எழுந்து நின்று பேசுகிறார்:

முதலில் அவர்கள் அந்தக் கோவிலின் அருகில்

ஒரு சர்ச்சைக் கட்டினார்கள்.

சில நாட்களில் கழித்து

கோவில் நந்தியின் தலையில்

சாணிக்கரைசல் ஊற்றப்பட்டது

சில நாட்கள் கழித்து

பிரகார வலம் வருபவர்கள் மேல்

மலக் கரைசல் ஊற்றப்பட்டது

(லயோலா பார்ட்டி பாதிரியாரைப் பார்த்து முழிக்கிறார்கள். அவர் கவலைப்படாதே. ஷூட் பண்ணு என்று சைகை காட்டுகிறார். இந்து தொடர்ந்து பேசுகிறார்)

சர்ச்சை ஒட்டிய கோவில் மதில் உடைக்கப்பட்டது

ஒரு நாள் நான்கு வாசல்களில் காவலர்கள் வந்து நின்றனர்

உள்ளே சென்றவர்கள் மூல விக்ரஹங்களை உடைத்தனர்

மூத்த பாதிரி மூல விக்ரஹத்தை ஷூ காலால் உதைத்தான்

இசை வேளாளர்கள் மீது எச்சில் உமிழ்ந்தான்

எஞ்சிய சர்ச் எடுபிடிகள்

கோவில் நந்தவன மரங்களை வெட்டி வீழ்த்தினர்

கோவில் வாகனங்களை உடைத்தனர்

தானியக் குதிர்களை எரித்தனர்

இது எங்கு, யாரால், ஏன் நடத்தப்பட்டது தெரியுமா?

தெரியவில்லையே.

பாண்டிச்சேரியில் வேதபுரி ஈஸ்வரர் கோவிலில் கருணையே உருவான பாதிரிகளும் எடுபிடிகளும் செய்தவை இவை. எளியோரையும் பாவிகளையும் ரட்சிக்க வந்தேன் என்றவர்கள் செய்ய வேண்டிய செயலா இது? உலகைக் காலனியாக்கிய வந்தேறிகள், சென்று சேர்ந்த தேசங்களின் பூர்வ குடி மதங்களையும் கலாசாரத்தையும் இப்படி வன்மத்துடன் அழிக்க வழிகாட்டிய மதம் உலகை ரட்சிக்க வந்த மதமா..? அழிக்க வந்த மதமா?

ஹஜ்ஜியார் கோபத்தில் பாதிரியை நெருங்குகிறார்.

பயப்பாடாதீங்க பாய்… உள்ள வரவிட்டுத்தான் அடிக்கணும். மேல ஏற விட்டுத் தள்ளினாத்தான் அடி பலமா இருக்கும் என்று சமாதானப்படுத்துபவர் தன் திட்ட்த்தை மெள்ள அவர் காதில் சொல்கிறார். அதைக் கேட்க கேட்க ஹஜ்ஜியரின் முகம் மெள்ள மெள்ள பிரகாசமடைகிறது. முழுவதையும் கேட்பவர் பாதிரியைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். துணை பாஸ்டரும் உதவி ஹஜ்ஜியாரும் அந்தக் காட்சியைக் கண்டு சற்று அதிர்ச்சியடைந்து கேமராவை வேறு பக்கம் திருப்பச் சொல்கிறார்கள்.

*

விவாதம் தொடர்கிறது

இயேசு என்று ஒருவர் உண்மையில் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

பைபிளில் சொல்லப்பட்டிருப்பதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

கருணாநிதி உலகின் மகத்தான தலைவர்ங்கறதுக்கு ஆதாரம் எதுன்னு கேட்டா நெஞ்சுக்கு நீதியை எடுத்துக்காட்டறமாதிரி இருக்கு இது. யூதர்கள் மத்தியில இயேசுன்னு ஒருத்தர் இருத்தாகவோ அவரை ரோமானிய அரசர் சிலுவைல அடிச்சுத் தொங்கவிடச் சொன்னதாகவோ யூதர்களின் எந்த வரலாற்று நூலிலும் சொல்லப்படவே இல்லை. ரோமானியர்கள் எழுதின வரலாற்று நூல்கள்லயும் இல்லை. யூதர்களுக்கு கலை அறிவியல் எல்லாம் கற்றுத் தந்த கிரேக்கர்கள் எழுதின வரலாற்று நூல்கள்லயும் இல்லை. இதைவிட வேடிக்கை என்னன்னா இயேசு சொன்னதாகவும் செஞ்சதாகவும் சொல்ற பல விஷயங்கள், கிறிஸ்தவர்கள் கொண்டாடற விழாக்கள் எல்லாம் இயேசு பிறந்ததா சொல்லப்படற காலத்துக்கு முந்தியே யூதர்கள் மத்தியில பல காலமா இருந்திருக்கு. ஆக இன்னிக்கு மத்திய அரசுத் திட்டங்களையெல்லாம் தன்னோடதா ஸ்டிக்கர் ஒட்டும் இந்த திராவிட மாடலுக்கு முன்னோடி கான்ஸ்டண்டைன் கிறிஸ்தவ க்ரூப்புதான். ஒண்ணுமே செய்யாதவனுக்கு ரொம்பவே வசதி. எல்லாத்தையும் தானே செஞ்சதா சொல்லிக்க முடியும்.

மத்தேயு, மாற்கு, லூக்கா, ஜான் எல்லாரும் எழுதினதெல்லாம் பொய்யா..?

அதெல்லாம் இயேசு சொன்னதாவும் செஞ்சதாவும் அவர் இறந்ததுக்கு ரொம்ப காலத்துக்கு அப்பறம் எழுதிக்கொண்டவைதான.

ராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல் புராணம் எல்லாமும் கூட ரொம்ப பின்னால எழுதப்பட்டவைதான? அது மட்டும் வரலாறையா பேசுது? இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா விஷ்ணு பத்து அவதாரம் எடுத்ததா சொல்றாங்கள்ல… அதுக்கு என்ன காரணம் சொல்றாங்க?

அதர்மம் தலை தூக்கி பூமி அழியற நிலைவரும்போது தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் செய்யறாரு.

சரி… அதுல மச்யத்துக்கு கூர்மத்துக்கு வராகத்துக்கு எங்கயாவது தனிக் கோவில் உண்டா? எல்லாருமே இறைவனின் அவதாரம்னா எல்லாருக்கும் ஒரே முக்கியத்துவம் இருக்கணும்ல. அது ஏன் இல்லை? சாமிலயே மேல் கீழ்னு சாதிப் புத்தியா? விலங்குகள்னா இளக்காரமா?

அப்படி இல்லையே. கிறிஸ்தவத்துல நியாயத் தீர்ப்பு நாள்ல மனுஷ ஆத்மாக்களை மட்டும்தான் எழுப்புவாரு. இந்து மதத்துல கடவுளோட அனைத்துப் படைப்புகளுக்கும் முக்தி கிடைக்க வழி உண்டு.

ஆனால், உங்க கடவுள் மீனா வந்து உலகத்தைக் காப்பாத்தினாருன்னா

(குறுக்கிட்டு) உங்களுக்கும் அவர்தான் கடவுள்.

அதான் வேண்டாம்னு வெளிய வந்துட்டோமே. மச்யமா வந்து கடவுள் உலகத்தைக் காப்பாத்தினார்ன்னா மீனைக் கும்பிடல்ல வேண்டும். அதை ஏன் சாப்பிடுறீங்க?

இப்ப நீங்க எதை தப்புன்னு சொல்றீங்க. இந்துக்கள் மீன் சாப்பிடறதையா… இந்து மதம் மீனை தெய்வமா வணங்கச் சொல்றதையா? தௌ சேல் நாட் கில்ங்கறது கர்த்தர் சொன்ன பத்து கட்டளைகள்ல ஒண்ணு. நீங்க மாமிசம் சாப்பிடறதும் தப்புதான.

அது மனுஷங்களைக் கொல்லக்கூடாதுன்னு அர்த்தம். அப்படின்னா தெள் சேல் நாட் மர்டர்ன்னுல்ல சொல்லியிருக்கணும். அப்பறம் அதையும்தான் நீங்க கேட்கலை. சிலுவைப்போர்ல கொல்லாத முஸ்லிமா. ஆஸ்திரேலியா அமெரிக்கால 90% பூர்வகுடிகளைக் கொன்னுதான அந்த கண்டங்களை கைப்பற்றியிருக்கீங்க?

அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்தியாவுக்கு கிறிஸ்தவம் மீட்பராகத்தான் வந்திருக்கு. அவதார விஷயத்துக்கு வர்றேன். குறிப்பிட்ட அவதார நோக்கத்தோட பிறக்கறவங்க அது முடிஞ்ச பிறகும் பூமியிலயே இருந்துட்டே இருக்காங்களாம். பரசுராமர் அவருக்குப் பின்னால வந்த ராமரையும் தாண்டி மகாபாரதத்துல வர்ற கர்ணனுக்கு பாடம் சொல்லித் தர்றாராம். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? பலராமர் எந்த நோக்கத்துல அவதாரம் பண்ணினாருன்னு அவருக்கே தெரியாது. கிருஷ்ணர் தான் பிறந்திருக்காருல்ல… கூடவே பலராமர் எதுக்கு? அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆர்.ஆர். படத்துல வர்ற மாதிரி பறந்து பறந்து ஏதாவது சண்டை போட்டாங்களான்னா அதுவும் இல்லை.

ராமருக்கும் கிருஷ்ணருக்கும் அதிக கோவில்கள் இருக்குன்னா அந்த அவதாரங்களின் வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் அந்த அளவுக்கு மக்களுக்கு நெருக்கமா இருக்கு. அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிகள், சொன்ன நீதிகள் எல்லாம் மனிதர்களுக்கு அவசியமா இருக்கு. அதனால கூடுதல் முக்கியத்துவம் தரப்படுது. மற்ற அவதாரங்களை மதிக்கலைன்னு அர்த்தமில்லை. கர்த்தருக்கு உருவமோ கோவிலோ எதுவுமே கிடையாது. அப்ப அவரை மதிக்கலைன்னு அர்த்தமா?

ஒரு கடவுள் பல அவதாரம் அதாவது பிறவி எடுக்கறார்னா அவருக்கு பலம் இல்லைன்னுதான் அர்த்தம். கடவுள்ன்னா ஒரே அவதாரத்துலயே எல்லாத்தையும் சரி பண்ணணும். மறுபடியும் மறுபடியும் பிறப்பேன் அப்படின்னா ஒரு வேலையை ஒழுங்க முடிக்கத் தெரியலைன்னுதான் அர்த்தம். மொதல்ல இந்த பல பிறவி அப்படிங்கற கதையே மடத்தனமா இருக்கு. இந்தப் பிறவில செஞ்ச நல்லதுக்கும் கெட்டதுக்கும் இந்தப் பிறவிலயே பலன் தரணும். அடுத்த பிறவின்னு சொன்னா அது அடுத்த மனுஷர்தான். ஒருத்தர் செஞ்ச தப்புக்கு இன்னொருத்தருக்கு தண்டனை தர்ற மாதிரிதான் அது.

கிறிஸ்தவம் இந்த விஷயத்துல என்ன சொல்லுது?

அது இறந்து போற ஆத்மாக்கள் எல்லாம் நியாயத் தீர்ப்பு நாள்ல கர்த்தரால் எழுப்பப்படும். இயேசுவை நம்பினவர்களுக்கு இயேசு நல்ல தீர்ப்பு வாங்கித் தருவார். நம்பாதவங்களுக்கு நிரந்தர நரகத்தை விதிப்பார்.

இது மட்டும் மடத்தனமா இல்லையா?

இதுல என்ன மடத்தனம் இருக்கு?

இதுல இருக்கற எல்லாமே மடத்தனம் தான். நியாயத் தீர்ப்பு நாள் என்னிக்கு வரும்?

அது கர்த்தருக்குத்தான் தெரியும்.

அப்படின்னே வெச்சுப்போம். இன்னும் ஒரு ஆயிரம் வருஷங்களுக்கு அப்பறம் நியாயத் தீர்ப்பு வழங்க ஒருவழியா ரெடியாகறார்னு வெச்சுப்போம். ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால இறந்தவரையும் கர்த்தர் அன்னிக்குத்தான் எழுப்பப்போறாரு. நியாயத் தீர்ப்பு வழங்கறதுக்கு முந்தின நாள் இறந்தவங்களையும் கூடவே எழுப்பிடுவாரு இல்லையா?

ஆமாம்.

ஆக, ஒரு சில ஆன்மாக்களுக்கு மட்டும் உடனே நியாயத் தீர்ப்பு கிடைச்சுடும். மத்த ஆன்மாக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா கல்லறைக்குள்ளயே கெடக்கணும் அப்படித்தான. இது நம்ம நீதிபதிகளைவிட மோசமான நீதிமானா இருப்பார் போலிருக்கு.

அதனால என்ன? அவர் வழங்கற தீர்ப்புதான் முக்கியம்.

என்ன பெரிய தீர்ப்பு? கிறிஸ்துவை நம்பி ஏத்துக்கிட்டவங்களுக்கு சொர்க்கம். ஏத்துக்காதவங்களுக்கு நிரந்தர நரகம். இதுதான? இது மாதிரி அநியாயத் தீர்ப்பு உலகத்துலயே இருக்கமுடியாது. ஒருத்தர் கிறிஸ்துமேல் நம்பிக்கை வெச்சிருக்காரு. ஆனா எல்லா தப்புக்களையும் செய்யறாரு. இன்னொருத்தருக்கு கிறிஸ்து மேல நம்பிக்கை கிடையாது. ஆனால் நல்லவரா நடந்துக்கறாரு. உங்க கர்த்தரோட நியாயப்படி நல்லவருக்கு நிரந்தர நரகம். தப்பு பண்ணினவனுக்கு கிறிஸ்தவன் அப்படிங்கறதுனால சொர்க்கம். இதுதான. இது ஆன்மிக தீர்ப்பு இல்லை. அரசியல் தீர்ப்பு.

மெய்யான இறைவனை நம்புபவர்களுக்கு மெய்யான விடுதலை. நானே வழியும் சத்தியமுமாக இருக்கிறேன்னுதான வசனம் சொல்லுது.

உங்களை நீங்களே சத்தியம், வழின்னு சொல்லிக்கிட்டா போதுமா? திமுக தலைவருக்கு கும்பிடு போட்டா வாரியத் தலைவர் பதவி. போடலைன்னா ஜெயில்னு நடந்துக்கற மாதிரியான கேவலமான அரசியல். இப்படியானவரை நாலாந்தர அரசியல்வாதின்னு சொல்லலாமே தவிர ஆண்டவர்னு சொல்லவே முடியாது. ஆமா புரியாமத்தான் கேட்கறேன்… முஸ்லிம்கள் கிறிஸ்துவை கடவுளா ஏத்துக்கலை. அப்ப அவங்களுக்கும் நிரந்தர நரகம் தானா..? என்ன பாய் கூடவே சுத்தறீங்க… கடைசில உங்களுக்கும் ஆப்புதானா.

அதெப்படி எங்களுக்கு 72 கன்னிகள் கிடைப்பாங்கன்னு எங்க நபிகள் சொல்லியிருக்காரே.

பாய் நீங்க இந்தப் பாதிரியை நம்பி கூடவே சுத்தினா இயேசு தன் கையில இருக்கற ஆட்டுக்குட்டி கூடக் கொடுக்கமாட்டாரு. முழிச்சுக்கோங்க. இதுல இன்னொரு விஷயம் இருக்கு. ஃபாதர். உங்க கணக்குப்படி கிறிஸ்துவை நம்பாதவருக்கும் நியாயத் தீர்ப்புநாளை நம்பாதவர்களுக்கும் நிரந்தர நரகம்தான் இல்லையா? நான் ஐஞ்சாறு பேரோட பெயரைச் சொல்றேன். அவங்களுக்கு சொர்க்கமா நரகமான்னு சத்தமா சொல்லுங்க பார்ப்போம். ஈ.வெ.ரா.

பாதிரியார் சற்று அதிர்ந்துபோய் அமைதியாக நிற்கிறார்.

கருணாநிதி…

மௌனம்.

அண்ணாத்துரை…

மௌனம்.

காந்தி…

மௌனம்.

அம்பேத்கர்; அவருக்காவது கிறிஸ்தவ சொர்க்கத்தின் கதவுகள் திறக்குமா?

இறுகிய மௌனம்.

இந்து மதம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நிறைய வாய்ப்புகளைத் தருது. நிறைய பிறவிகளைத் தருது. எல்லா உயிர்களும் முக்தியை அடைய இந்தியாவில் பிறவி எடுக்கும் அப்படின்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. ஒரு பிறவில செஞ்ச நல்லது கெட்டதுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையுது. நியாயத் தீர்ப்பு நாளுக்காக ஆத்மாக்கள் காத்துக்கிட்டு இருக்கவேண்டிய அவசியமே இல்லை. இது ஒவ்வொருத்தரும் அவரவரோட வாழ்க்கைல நடக்கற நல்லது கெட்டதுக்கு அவங்களே காரணம்னு சொல்லுது. தீதும் நன்றும் பிறர் தரவாரா… முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். ஆனால், கிறிஸ்தவம் என்ன சொல்லுது?

இயேசு நம்ம பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்னு சொல்லுது.

அவரு யாரு எனக்காக சாக? அவரு தியாகம் செஞ்சா அவருக்கு முக்தி கிடைக்கும். எனக்கு எப்படிக் கிடைக்கும்? ஊருக்கு எப்படிக் கிடைக்கும். உலகத்துக்கு எப்படிக் கிடைக்கும்? நான் ஒவ்வொரு பிறவி எடுத்து பாவங்களைக் குறைச்சுட்டு புண்ணியத்தைப் பெருக்கிட்டு இறைவன் கிட்ட போய்ச் சேருவேன். இதுதான் உண்மையான நியாயத் தீர்ப்பு. இதுதான் பகுத்தறிவுக்கு ஏற்ற தீர்ப்பு.

இந்த விவாதங்கள் தொலைகாட்சி சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. விவாதம் நாலைந்து நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நிறைய சேனல்கள் அந்த குக் கிராமத்துக்கு வந்து குவிகின்றன. பாதிரியார் தன் முதல் துருப்புச் சீட்டை இறக்குவது பற்றி தன் உதவியாளர்களிடம் பேசுகிறார்.

நாலு சினிமாக்காரங்களை வரச் சொல்லியிருக்கேன் மக்களே.

Series Navigation<< ம(மா)ரியம்மா – 8 ம(மா)ரியம்மா – 10 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *