ம(மா)ரியம்மா – 13

This entry is part 12 of 14 in the series ம(மா)ரியம்மா

ஓரமாக அமர்ந்திருக்கும் உதவி பாஸ்டர் சலிப்புடன் கேட்கிறார்: என்ன அச்சோ… இவனும் பேசிக்கிட்டே இருக்கான். இவன் சொல்லி யாரு கேட்கப் போறாங்க.

கொஞ்சம் பொறுடே. கடைசில இவன் ஒண்ணு சொல்லுவான் பாரு. அதை எல்லாரும் கேட்டே ஆகவேண்டியிருக்கும்.

அப்படி என்ன மந்திரம் சொல்லப்போறான்.

ஒரு பேரைச் சொல்லப்போறான். அதைக் கேட்டு ஊரே உலகமே அதிரப்போகுது. ஒரு ஆவியை வரவைக்கப்போறான்.

ஆவியா… பிதா சுதன் பரிசுத்த ஆவியா அச்சா. அதை வெச்சு ஒத்தை இட்லியைக் கூட வேக வைக்கமுடியாதே அச்சா.

இல்லை மனுஷ ஆத்மாதான்.

யாரு அச்சோ… ஈ.வெ.ரா.வோட ஆவியா?

அவன் நேர்ல வந்துசொன்னதையே எவனும் கேட்கலை. ஆவியா வந்து சொல்றதையா கேட்கப்போறானுவ.

பின்ன யார் அச்சோ…

அதாண்டே இவனுங்களோட நேதாவு… பேரு சட்டுனு வாயில நுழைய மாட்டேங்குது. பீமனோ மாமனோ என்னவோ வருமேடே.

பீம ராவா.

ஆமா மக்ளே. அவரேதான்.

அய்யோ… அவர் வந்து என்ன பண்ணப்போறாரு.

இவனுங்க மட்டுமில்ல; இந்த நாடே அவர் சொன்னாக் கேட்கும்டே.

ஆனா அவரு வில்லங்கமான ஆளாச்சே அச்சோ. எல்லாரையும் பௌத்தத்துக்கு மாறுன்னுல்லா சொல்லுவாரு.

அங்கதான் நிக்கறான் இந்த அச்சனுக்கெல்லாம் அச்சன். வரப்போற அம்பேத்கர் ஆவி அம்புட்டு பேரையும் கிறிஸ்தவத்துகோ இஸ்லாத்துக்கோ மாறுன்னு சொல்லும்.

அதெப்படி அச்சா எழுதிக் கொடுத்தமாதிரியே சொல்றீங்க.

அதாக்கும் சங்கதி. அம்பேத்கர் ஆவி அவன் உடம்புல இறங்கியிருக்கறதாட்டு அவன் நடிக்கப்போறான். டயலாக் எல்லாம் முந்தியே எழுதிக் கொடுத்தாச்சு.

ஆசானே சூப்பர் ஐடியா. வேற யாரும் நம்பறாங்களோ இல்லியோ இந்த ஊர்க்காரனுங்க நம்புவானுங்க. இவனுங்க மொத்தமா மாறினாலே பெரிய விஷயம் தான்.

ஃபாதர் திட்டமிட்டதுபோல் திடீரென்று மின் விளக்குகள் விட்டுவிட்டு எரிகின்றன. பேய்க்காற்று வீசுவதுபோல் ஸ்பீக்கரில் பெரும் சத்தம் கேட்கிறது. அதோடு நிஜமாகவே பேய்க்காற்று வீசவும் செய்கிறது. அரங்கில் கூடியிருப்பவர்கள் அனைவரின் ஆடைகளும் படபடவென பறக்கின்றன.

ஃபாதர் சொன்ன லிஸ்ட்ல இதெல்லாம் இல்லையே; கரெண்ட் விளையாட்டும் மை செட் மாயங்களும் தான இருந்தது. சினிமாக்காரன்னா சினிமாக்காரந்தான்; தத்ரூபமா செட்டிங் போட்டிருக்கானுங்க என்று ஹஜ்ஜியார் பெருமிதப்படுகிறார். மேடையில் இருக்கும் நடிகர் தனக்குள் அம்பேதக்ரின் ஆவி இறங்கியதாக நடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதைப் புரிந்துகொள்கிறார். இனியும் தரையில் நின்று நடித்தால் பின்வரிசையில் இருப்பவர்களுக்குத் தெரியாதென்பதால் மேஜையில் ஏறி நிற்கலாம் என்று முடிவுசெய்கிறார்.

இடிச்சத்தம் உச்சத்தை எட்டுகிறது. மின் விளக்குகள் அணைந்து அணைந்து எரிகின்றன. மின்னல் வெட்டத் தொடங்குகிறது. கிராம மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பதற்றத்தில் ஆழ்கிறார்கள்.

விஷயம் தெரிந்த சேனல் பிரமுகர்கள் சிலரும் ஹஜ்ஜியாரும் உதவி பாஸ்டரும் மேஜை மேல் ஏறி நின்று சூர்யா, அம்பேத்கரின் குரலில் பேசப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து நிற்கிறார்கள். அப்போது மேஜையில் ஏறிய நடிகரைக் கீழே பிடித்துத் தள்ளியபடி மேடையில் பாய்ந்து ஏறுகிறார் பாதிரியார்.

அச்சோ என்ன ஆச்சு என்று அனைவரும் பதறுகிறார்கள்.

நிறுத்தி நிதானமாக பாதிரியாருக்குள் இறங்கிய ஆவி பேசத்தொடங்குகிறது.

பீமராவ் அம்பேத்கராகிய நான்…

*

பாதிரியாரின் உடம்புக்குள் பாபா சாஹேப் ஆவியாக இறங்கிய செய்தி கேட்டதும் தேசம் முழுவதிலும் உள்ள சேனல்கள் அனைத்தும் அதை பிரேக்கிங் நியூஸாக லைவாக ஒளிபரப்ப ஆரம்பிக்கின்றன. பி.பி.சி., அல் ஜஸீரா முதலான சர்வ தேச தொலைகாட்சி நிறுவனங்களும் ஒரு பாதிரியார் உடம்பில் இறங்கியிருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் அதை ஒளிபரப்புகின்றன. அண்ணல் கம்பீரமாக முழங்க ஆரம்பிக்கிறார்.

பீம்ராவ் அம்பேத்கராகிய நான் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மகாபலிச் சக்கரவர்த்தி தன் மக்களைப் பார்க்க ஆண்டுதோறும் வந்து போவதுபோல் உங்களைப் பார்க்கவும் வந்துபோக விரும்புகிறேன். மகாபலியின் வருகையின்போது அவருடைய நாட்டு மக்கள் அவரைப் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்பதுபோல் நீங்களும் என்னை அன்புடன் வரவீற்பீர்கள் தானே.

கூட்டத்தினர் உற்சாகத்தில் வரவேற்போம் வரவேற்போம் என்று முழங்குகிறார்கள்.

நல்லது. அரசியல் சாசனம் உருவாக்கி நம் தேசத்தின் ஆட்சி நிர்வாகத்துக்கு என்னாலான பங்களித்திருந்தேன்.

பாரத் மாதாகி ஜே என்று முழங்குகிறார்கள்.

(அந்த வாழ்த்துக்கு தலைவணங்கி மரியாதை செய்துவிட்டு) அதுபோலவே சமூக மாற்றத்துக்கு ஓர் நல் வழியைக் கண்டு சொல்லியிருந்தேன்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று கூட்டத்தினர் முழங்குகிறார்கள்.

(கைகளால் அனைவருக்கும் ஆசி அளிப்பதுபோல் வாழ்த்து தெரிவித்துவிட்டு)

மனு ஸ்ம்ருதி கோலோச்சிய காலம் போய் மக்களின் ஸ்ம்ருதி கோலோச்சும் காலம் வந்துவிட்டிருக்கிறது.

ஜெய் பீம் ஜெய் பீம் என்ற கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன.

என் மறைவுக்குப் பின் நடந்துவரும் விஷயங்கள் எனக்குப் பாதி மகிழ்ச்சியையும் பாதி வருத்தத்தையும் தருகின்றன. நான் உங்களுக்கு உருவாக்கியளித்த அரசியல் சாசனம் முடிந்தவரை சிறப்பாக அமலாகிவருவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் உயிருடன் இருந்தபோது என்னை எதிர்த்த காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்களும் தங்கள் தலைவர்களில் ஒருவராக என்னையும் சொல்லிக் கொள்வதைப் பார்க்கும்போது அந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கிறது. ஆனால், நானுமொரு சங்கத்தையே முன்வைத்தேன். சங்கத்தைச் சேர்ந்தவர்களைச் சங்கி என்று பழிப்பவர்கள் நான் சொன்ன சங்கத்தையும் சேர்த்துத்தான் பழிக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் நாம் இந்தியர் என்று தேச பக்தியுடன் செயல்பட்டாக வேண்டிய அவசியம் இன்று மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த தேசத்துக்கு இந்தியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது நிறைவேறவில்லை. நான் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் இந்திய ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற இடைச்செருகல் எனக்கு ஏற்புடையது அல்ல. எனினும், கலப்புத் திருமணமே ஜாதியை ஒழிப்பதற்கான ஒரே வழி என்ற என் கருத்துக்கேற்ப இன்றைய அரசு அத்தகைய திருமணங்களுக்கு சலுகை அளித்திருப்பதைப் பார்க்கையில் மனம் நிறைகிறது.

பட்டியலினத்து இளைஞர்களின் தொழில் வளர்ச்சிக்கு வழங்கும் கடனுதவிகள் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பதை உணர்த்துகின்றன. என் எதிர்ப்பையும் மீறிக் கொண்டுவரப்பட்ட ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்டு இனி காஷ்மீரிலும் பட்டியலினத்தினரின் நலன் காக்கப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது.

ஆனால், சமூக அளவில் இன்று நடந்துவரும் மாற்றங்கள் என்னைப் பதற்றமடையச் செய்கின்றன. நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த பௌத்தத்துக்கு என்னுடன் மதம் மாறிய மஹர்கள் மத்தியிலேயே பெரும் வரவேற்பு இல்லை என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. அதோடு எந்த கிறிஸ்தவ ஆதிக்கமும் இஸ்லாமிய ஆதிக்கமும் உருவாகிவிடும் என்று அஞ்சி நான் பௌத்தத்துக்கு மாறச் சொன்னேனோ அதை கேட்காமல் கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாமுக்கும் சாரைசாரையாக மாறிவருவதைப் பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. இதுவா நான் உங்களுக்குக் கற்றுத் தந்தது? இதுவா என் சொற்களுக்கு நீங்கள் தரும் மரியாதை?

கூட்டம் மௌனமாகத் தலை குனிந்து நிற்கிறது.

இந்துவாகப் பிறந்தவர்கள் இந்துவாக இறக்கக்கூடாதென்று சொன்னீர்களே அண்ணலே. கிறிஸ்தவமும் இஸ்லாமும் மட்டும் தானே இங்கு இயங்கிவருகின்றன. பௌத்த நிறுவனங்கள் இங்கு பெரிதாக இல்லையே அண்ணலே.

வேறு தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், சாக்கடை நீரை எடுத்துக் குடித்துவிடலாமா? அதோடு பௌத்தத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன். அது இந்து மதத்தில் இருந்து இந்திய கலாசாரத்தில் இருந்து அதிகம் விலகியிருக்கவில்லை என்பதால்தானே. ஒருவகையில் இந்துக்கள் உங்களை அரவணைத்துக் கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ஜாதி இந்துக்களிடையே ஒரு பயம் கலந்த புரிதலை உருவாக்கவும்தானே அதை முன்வைத்தேன்.

எங்கள் தாகம் பெரிது அண்ணலே. உங்களுக்குத் தெரியாததா என்ன? இந்து மதத்தை விட்டு வெளியேறியாக வேண்டிய அதி அவசியமிருந்ததே அண்ணலே.

இந்து மதத்தில் நீங்கள் இருக்கவேண்டும் என்று நானும் சொல்லவில்லை. ஆனால் இந்திய அரசியல் சாசனம்தானே இன்றைய வேதம். அதோடு இந்துத்துவமும் செல்வாக்கு பெறத் தொடங்கிவிட்டிருக்கிறதே.

என்ன சொல்கிறீர்கள். இந்துத்துவம் எங்களுக்கும் இந்த தேசத்துக்கும் எப்படி நன்மையளிக்க முடியும்?

ஏன் முடியாது. ஒரு இஸ்லாமியர் அடைப்படைவாதம் நோக்கி நகர்ந்தால் அவர் மதவாதியாவார். ஒரு கிறிஸ்தவர் அடிப்படைவாதம் நோக்கி நகர்ந்தால் அவரும் மத வெறியராவார். ஆனால், ஒரு இந்து அடிப்படைவாதம் நோக்கி நகர்ந்தால் அவர் இந்து அடிப்படைகளில் இருந்து வெளியேறுவார். லிபரலாக இருந்த ஜின்னா முஸ்லிம் லீகின் தலைவரானதும் குல்லா அணிந்துகொண்டார். இந்து மகாசபையின் தலைவரானதும் நெற்றித்திலகத்தைத் தவிர்த்தார் சாவர்க்கர். எனக்கு முன்பே சம பந்த போஜனம் ஆரம்பித்து, தீண்டாமையை ஒழிக்க முன்வந்தது இந்துத்துவர்கள் தானே. அவர்களை நான் என் நண்பர்களாகத்தானே கருதினேன்.

என்ன இந்துத்துவர்களை நண்பர்களாகக் கருதியிருந்தீர்களா?

பின்னே. நான் போட்டியிட்ட ஒரே தேர்தலில் எனக்கு ஆதரவாக நின்றது அவர்கள்தானே. கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் என்னைத் தோற்கடிக்கத்தானே களம் கண்டன. 1990களுக்குப் பின்னர்தானே இந்த கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் திராவிட இயக்கத்தினரும் என் பெயரைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். 1960களில் இருந்தே தமது அன்றாடப் பிரார்த்தனையில் மகத்தான மகரிஷிகள் தொடங்கி மகாத்மாக்கள் வரை வணங்கித் துதிக்கும் பட்டியலில் என் பெயரையும் அல்லவா இந்துத்துவர்கள் சேர்த்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ போரில் தலித்களை பகடைக்காய்களாக ஆக்கிக் கொள்வதுதானே இந்துத்துவர்களின் அஜெண்டா.

நான் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களுடன் பழகியிருக்கிறேன். அப்படி அவர்கள் நினைத்ததே இல்லை. என் காலத்துக்குப் பின்னர் அவர்கள் அளவுக்கு தலித்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டவர்களும் தலித்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்தக் கட்சியினரும் செய்யவில்லை. கம்யூனிஸ ஆட்சிகளிலும் காங்கிரஸ் ஆட்சிகளிலும் அதை எதிர்பார்க்கவும் முடியாதுதான். திராவிட ஆட்சியிலும் அது நடந்திருக்கவில்லை.

கட்சிகளைப் பற்றி நாம் அதிகம் எதையும் எதிர்பார்க்க முடியாதே. இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் முழுவதும் பட்டியலினத்தினரின் மேம்பாட்டுக்குத்தானே பாடுபடுகின்றன.

அப்படி அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையில் இந்து மதத்தை அழிக்கும் போரில் தலித்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவது இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள்தான்.

தலித்துகளுக்குக் கிடைத்திருக்கும் சேவைகளில் பெரும்பாலானவை கிறிஸ்தவர்களின் மூலம் கிடைத்தவையே.

கிறிஸ்தவர்களின் சேவைகளில் பெரும்பாலானவை அரசியல் சாசனமும் அதன்படி நடக்கும் அதிகாரவர்க்கமும் நடத்திக் கொடுத்தவையே.

நீங்கள் அரசியல் சாசனம் வகுத்திருந்தாலும் ஒரு பாதிரி தானே எங்களுக்கு உதவுகிறார். எங்கள் ஊரில் பட்டப் படிப்பு முடிந்த ஒரு இளைஞருக்கு வாடகை ஆட்டோ ஓட்டிப் பிழைக்கவேண்டுமென்றால் பாதிரியின் உதவியால்தானே அது நடக்கிறது.

கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதா? அரசியல் சாசனம் தந்திருக்கும் நல உதவியை வாங்கிக் கொடுத்துவிட்டு மதம் மாறச் சொல்கிறாரா? கேவலம். என் அரசியல் சாசனம் அனைவருக்கும் சம வசதி வாய்ப்புகளை உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் நீங்கள் பௌத்தத்துக்கு மாற விரும்பவில்லையென்றால் கூடப் பரவாயில்லை. கிறிஸ்தவ, இஸ்லாமுக்கு ஏன் மாறுகிறீர்கள். அதோடு மதம் மாறிவிட்டு சான்றிதழில் இந்து என்று காட்டிக்கொண்டு ஏன் ஒரு தலித்தின் வயிற்றில் அடிக்கிறீர்கள்?

Series Navigation<< ம(மா)ரியம்மா – 12<< ம(மா)ரியம்மா – 11

4 Replies to “ம(மா)ரியம்மா – 13”

 1. இருக்கிற கட்சிகள் எல்லாத்தையும் அலறவிடுகிறார் தலைவர் K.Annamalai

  பா.ம.க.,வை பொறுத்தவரை, களத்தில் பா.ஜ.,தான் எதிரி. பா.ம.க.,வில் இருந்தோ, வன்னியர் சங்கத்தில் இருந்தோ, வேறு கட்சிகளுக்கு சென்றால்கூட, ஒருநாள் பா.ம.க.,வை நோக்கி வருவர் என நம்பலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க என்பது ஒருவழிப்பாதை சென்றால் இளைஞர்கள் திரும்ப மாட்டார்கள். #அண்ணாமலை யின் செயல்பாடுகளும் இளைஞர்களை ஈர்த்து வருகிறது.

  வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.,வில் சேருவதை தடுக்க, பா.ம.க., நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். – ராமதாஸ்

 2. இந்தியாவிலேயே கோவில்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் 79154 கோவில்களைக் கொண்டு தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று மும்பையில் உள்ள ஐஐடி ல் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டை “ஆன்மீக பூமி” என்கிறோம். எங்கு நோக்கினும் கோவில்களே. தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்த பாரத நிலப்பரப்பே கோவில்களின் கூட்டுத்தொப்புதான். இதற்கு பின்பு மிகப்பெரிய வரலாறுகள் உண்டு…!

  கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்று முத்தமிழ் மூதாட்டி ஏன் சொன்னாள்? முற்காலங்களில் அனைத்து சமூக மக்களும் கோவிலைச் சுற்றி ஏதேனும் ஒரு வகையில் தொழில் செய்து தனது குடும்பத்தை நடத்தும் விதமாகவே கோவில்கள் இருந்தது. கோவில்களில் அன்றாடம் நடைபெறும் அன்னதானம், அபிஷேகம், அலங்காரம், பிரசாதம், கோவிலை சுத்தம் செய்தல், என அனைத்துப் பணிகளும் அந்தந்த ஊரைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்து அவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும்….!

  இது தவிர்த்து அரசர்கள், செல்வந்தர்கள் கோவிலுக்கு விளக்கு எரிக்க தானம் வழங்குவர். இதில் தானமாக ஆடு, நிலம் போன்ற பொருட்களை கோவிலுக்காக அளிக்கும்போது அவற்றை பார்த்துக்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகள் பல குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். இப்படி மக்களின் பொருளாதாரங்கள் கோவிலைச் சுற்றியே இருந்தது என்பதை மறுக்க முடியாது. இராஜராஜ சோழன் காலத்தில் அவரது சகோதரி “குந்தவை பிராட்டியாரால்” நடத்தப்பட்ட இலவச மருத்துவமனை ஒன்று சிறப்பாக செயல்பட்ட செய்தியை பாபநாசம் வட்டம் இராஜகிரிக்கு அருகிலுள்ள கோயில் “தேவராயன்பேட்டை சிவாலய சாசனத்தின் மூலம் அறிய முடிகிறது. இந்த மருத்துவமனைக்கு “சுந்தர சோழ விண்ணக ஆதுலசாலை” என்ற பெயர் இருந்ததை அந்த சிவாலய சாசனத்தின் மூலம் அறிய முடிகிறது. குந்தவை தனது தந்தையின் நினைவாக இந்த இலவச மருத்துவமனையை தோற்றுவித்துள்ளார்…!

  ஆதுலசாலை அல்லது ஆதுரசாலை என்று அழைக்கப்படுவது நோய்வாய்ப்பட்டோர் சிகிச்சை பெறும் இடமாகும். இங்கு மருந்துகள் அளிப்பதோடு “சல்லியகிரியை” எனும் அறுவை சிகிச்சை முறைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சோழர்காலத்தில் திருமால் கோயில்களில் ஆதுலசாலைகள் இயங்கி வந்த செய்தியை திருமுக்கூடல் எனும் ஊரிலுள்ள வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டு செய்தி ஊர்ஜிதமாக்குகிறது. வீரராஜேந்திரன் கிபி1063 முதல் 1070 வரை சோழ மண்டலத்தை ஆட்சி செய்தவராவார். இவர் “திரிமுக்கூடலில்” இருந்த மருத்துவமனைக்கு அளித்த அறக்கட்டளை பற்றிய செய்திகளையும் கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன..!

  திரிமுக்கூடலில் இருந்த விஷ்ணு ஆலயத்தில் இருந்த ஜனநாத மண்டபத்தில் ஒரு பள்ளியும் ஒரு ஆதுல சாலையும், மாணவர்கள் தங்குவதற்கு ஒரு விடுதியும் இவ்வறக்கட்டளையால் செயல்பட்டன. இவ்வாறு அம்மண்டபத்தில் செயல்பட்ட மருத்துவமனைக்கு “வீரசோழ ஆதுலசாலை” என்ற பெயர் இருந்ததையும் கல்வெட்டுகள் பதிவு செய்கிறது. இந்த ஆதுலசாலையில் அறுவை சிகிச்சை மற்றும் நோயாளிகள் தங்கி சிகிட்சை பெற 15 படுக்கை அறை வசதிகளும் இருந்தன. இங்கு இன்று இருப்பதுபோல் பெண் செவிலியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…!

  அதோடு பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள் காலத்தில் இருந்த கல்வி நிலையங்களையும் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. மடங்கள், கோவில்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன. மன்னர்களும், மக்களும், கிராமசபைகளும், கோவில் நிர்வாகங்களும் கல்வி நிலையங்கள் செயல்படத் தானங்களும், மானியங்களும், நன்கொடைகளும் அளித்தனர். கற்றவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும் பெரிதும் மதிக்கப்பட்டனர். பொதுகல்வி, மருத்துவம், ஜோதிடம், கணிதம், வானவியல், வேதகல்வி ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்டன. கல்வி நிலையங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கி இருக்க விடுதிகளும் இருந்தன. விடுதிகளில் தங்கி இருப்போருக்கு இலவசமாகத் தங்கும் இடங்களும், உணவும், உடையும், பிற தேவைகளும் வழங்கப்பட்டன….!

  “எண்ணாயிரம்” என்ற ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று ரிக் வேதம், அதர்வண வேதம், பிரபாகரம், வேதாந்தம் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. 300 மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கற்றதாகக் கூறப்படுகிறது. ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துக் கிராமசபை 45 வேலி நிலத்தை இக்கல்வி நிலையத்துக்கு வழங்கியது. இந்நிலத்தில் பயிரிட்டு கிடைக்கும் வருமானம் விடுதி மாணவர் உணவுக்காகவும், உடைக்காகவும் செலவு செய்யப்பட்டன. ராஜாதிராஜன் காலத்தில் திரிபுவனி என்ற ஊரில் இருந்த கல்வி நிலையத்துக்கு 72 வேலி நிலம் வழங்கப்பட்டது. 260 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் இங்கு இருந்தனர். மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு வாரியங்களில் பணி செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது…..!

  கல்வி, மருத்துவம், பொருளாதாரம் என்று கோவில்களைச் சுற்றியே நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் இருந்தன. இதனால்தான் வாழ்க்கை செழிக்கவேண்டுமாயின் கோவில் உள்ள ஊரில் தனது குடிகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். இதுபோல் தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் தொல்காப்பியம் முதற்கொண்டு புறம் அகம் என்று பெரும்பாலான இலக்கியங்களில் இந்த கோவில்களில் வீற்றிருக்கும் இறை தெய்வங்களின் புகழ்களை பாடியே வந்துள்ளனர். இறைவனின் முக்கியத்துவம் பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகையில்,
  “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடிசேரா தார்” என்கிறார். அதாவது இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர்களால் பிறவியாகிய பெருங்கடலை கடக்க முடியாது என்கிறார். இதன் காரணமாகவே இறைவனுக்கு கோவில் கட்டி வழிபட்டார்கள் நம் முன்னோர்கள்…!

 3. Kashmir ல ஒரு மாசமா தாக்குதல் நடக்குதாம்…

  அதனால பழையபடி பண்டிட் கள்லாம் ஊரை காலிபண்ணிட்டு போறாங்களாம்..

  இவனுங்கள எதால அடிச்சா தகும்னு தெரியல . ?

  இவனுங்களுக்காக கஷ்டப்பட்டு உழைச்சு அதிகாரத்துக்கு வந்து போராடி 370 cancel செஞ்சு மீண்டும் வாழ வழி செஞ்சா இவனுங்க கோழையாட்டம் திரும்பி ஒடி வருவானுங்களாம்…

  திரும்பி போறதுனா எங்கடா போவீங்க ? ..போற இடத்துலயும் அடிச்சா திரும்ப வேற எங்கடா போவீங்க ?..

  தன் மண்ணுக்காக இழந்த வாழ்க்கைக்காக கொஞ்ச நாள் துணிஞ்சு அங்கயே நின்னுதான் பாருங்களேன்..

  உயிரே போனாலும் பரவாயில்லனு திருப்பி அடிங்க…

  அவனுங்களுக்கு புரியிர ஒரே பாஷை அடிக்கு அடிதான்

  என்ன ஆனாலும் இங்கதான் இருப்பேன் னு உறுதியா நின்னாதானே அரசும் உங்க பின்னாடி நிற்கும்…

  ஒரு தேனீகூட உயிருக்கு ஆபத்துனா தன் சக்திக்கு ஏற்ப போராடத்தானே செய்யுது?

  அதைவிட்டு இப்படி பயந்து ஒடுனா இன்னும் வேகமா விரட்டதாண்டா செய்வான்..

  எதிர்த்து நின்ன குஜராத்ல இன்னைக்கு அமைதியா அடங்கி போறான்…

  அடிவாங்கிட்டு ஒடுன வங்காளத்துல இன்றைய வரைக்கும் அடிவாங்கிட்டேதான் இருக்கான்..

  இது புரியாத வரைக்கும் இந்துக்களுக்கு விடிவுகாலம் கிடையாது..

  இதில் சிலர் நேரடியா அமித் ஷா வ ராஜினாமா செய்யசொல்லி …

  கஷ்டம்டா சாமி..

 4. #அன்பு_மகன்_ஸ்டாலினுக்கு
  உன் தந்தை நரகத்தில் இருந்து எழுதும் கடிதம் இத்தனை நாட்களாக ஏன் எழுதவில்லை என்று கேட்காதே
  நான் செய்த பாவத்துக்கு நகக்கண்ணில் ஊசியை சொருவிட்டார்கள் இப்போதுதான் வீக்கம் வடிந்தது

  எப்படியோ என் பாணியில் பொய் பேசி ஆட்சிக்கு வந்து விட்டாய் வாழ்த்துக்கள் இனிதான் நீ கவனமாக இருக்க வேண்டும்

  ஊழல் உன் ரத்தத்திலேயே உள்ளது ஆனால் மாட்டிக் கொள்ளாமல் செய்ய வேண்டும்

  இந்த உபிக்களுக்கு 200 ரூபாய்க்கு மேல் கூலி கொடுக்கவேண்டாம்
  ஆட்சி நம்மிடம் இருக்கு அவரவர் தகுதிக்கு கடப்பாகல் திருடியோ கஞ்சா விற்றோ பிழைத்துக் கொள்வார்கள்

  வீரமணிக்கும், சுபவீக்கும் ஓசி சோறு போடும் போது மறந்தும் கூட உப்பு போட்டு விடாதே

  இந்த வைரமுத்து பய எதையாவது கிறுக்கிட்டு வந்து கவிதைன்னு கதை சொல்லுவான் அவனுக்கு 50 ரூபா மட்டும் குடு அதுவே அதிகம்

  இந்த எஸ்.ரா.சற்குணம்ன்னு ஒருத்தன் வருவான் அவனுக்கு காசுலாம் குடுக்காதே அவன் கூட ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கோ அவன் அதை காட்டி எங்கியாவது வசூல் செஞ்சி பொழச்சிக்குவான்

  இந்த சவுக்கு பியுஸ்மானுஸ், மனுஷ்யபுத்திரன், லியோனி இவனுங்களுக்கெல்லாம் மறக்காமல் அப்பப்ப பொறையும் பிஸ்கட்டும் போடு

  பத்திரிக்கை காரங்களுக்கு எவனோ அண்ணாமலைன்னு ஒருத்தன் மூவாயிரம்ன்னு ரேட்டை ஏத்திட்டானாமே அதெல்லாம் முடியாது அவனுங்களுக்கும் 200 ரூபாய்தான்னு கண்டிச்சி சொல்லிடு

  அப்புறம் என்னை அப்பான்னு சொல்லிட்டு தமிழன் பிரசன்னான்னு ஒருத்தன் வருவான்
  அவனுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்னை நம்புடா மகனே அவங்க வீட்டுக்கு நான் போனதே இல்லை

  அப்புறம் நம்மை கொள்கைகளை மறந்துடாதே
  #திருட்டு_இருட்டு_உருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *