ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்

(ராகுல் காந்தியின் சமீபத்திய “வாக்குமூலம்” குறித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு எதிர்வினைகளைத் தொகுத்து அளிக்கிறோம் – ஆசிரியர் குழு)

ச.சண்முகநாதன்:

“My name is not Savarkar, it is Gandhi and Gandhi never offers apology” என்கிறார் ராஹுல் காந்தி.

முதலில் clemency, apology இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை தங்கபாலுவிடமோ, சசி தரூரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் காந்தியாரே.

வரலாறு: 1874ல் remission system ஒன்றைக் கொண்டு வருகிறது பிரிட்டிஷ் அரசு. அதன் படி ஆயுள் கைதிகளின் தண்டனை, நன்னடத்தையின் பேரில் 20 வருடமோ 25 வருடமாகவோ குறைக்கப்படலாம். 1910ல் கைது செய்யப்பட்ட சாவர்க்கர் இதன்பேரில் தான் clemency விண்ணப்பம் செய்து விடுதலைக்கு வழி தேடினார். பிரிட்டிஷ் அரசு செவி சாய்க்கவில்லை.

“தாய்திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?”

என்று வெகுண்டெழுந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்து, அருகாமையில் இருந்த, பிரான்ஸ் எல்லைக்கு சென்றவர் சாவர்க்கர். விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தவர் அல்ல சாவர்க்கர். So, A Gandhi can never become a Savarkar.

உலகில் உள்ள கொடூரமான சித்திரவதை அனுபவித்தும், தன்னுடைய எழுத்துக்களில் “சாவர்க்கரைபோல துயரத்தை அனுபவிக்க வேண்டாம்” என்ற எண்ணத்தை இந்தியர்களிடம் விதைக்கவில்லை. மாறாக “சாவர்க்கரைப் போல நாட்டுக்கு உழைக்க வேண்டும்” என்ற எண்ணத்தை விதைத்தவர் சாவர்க்கர். A Gandhi can never become a Savarkar.

தினமும் சாளரம் வழியே சூரியோதயம் கண்டு மகிழும் காந்திகளுக்கு, தன் சாளரம் வழியே காணக்கிடைக்கும் ஒரே காட்சி, சக இந்தியன் தூக்கில் தொங்கி சாகும் காட்சி தான். அதுதான் சாவர்க்கருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. டில்லி பங்களாவில் இருக்கும் சுகம் காலாபானியில் இல்லை காந்தியாரே. உன் பெயர் காந்தி என்பதில் நீ பெருமை கொள்ளலாம். ஆனால் இந்திய சுதந்திர வரலாற்றின் முதல் பக்கத்தில், 10 வருஷம், அந்தமான் சிறையில் இருந்த, சாவர்க்கர் பெயர் இடம் பெறுகிறது.

தின்னும் சோற்றில் பல்லி இருக்குமா பூரான் இருக்குமா என்று தெரியாமல் பயத்தோடு என்றாவது உணவு உட்கொண்டதுண்டா காந்தியே? சாவர்க்கருக்கு வழங்கப்பட்ட உணவில் தினமும் பல்லியும் பூரானும் இல்லையென்றால் அது அதிசயமே. You were Born with an Italian silver spoon. பாவம் சாவர்க்கர்! இந்த தேசத்துக்காக ஒருவேளை உணவு கூட நிம்மதியாக உண்ணவில்லை 15 வருடங்களாக. So, a Gandhi can never become a Savarkar.

தானும் தன் சகோதரனும் அந்தமான் சிறையில் 10வருடங்கள் தனித்தனியே தண்டனை அனுபவித்தனர். ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக் கூட முடியாது. ஆனால் எந்த பதவியிலும் இல்லாத சகோதரியின் மாமியாருக்கே அரசாங்க செக்யூரிட்டி கொடுத்து சுகபோகத்தில் திளைத்த காந்திக்கு சாவர்க்கர் சகோதரர்களின் தியாகம் புரியுமா? You can never come closer to Savarkar.

பதவிக்காலம் முடிந்த பின்னும் அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில், வெட்கமேயில்லாமல், வசித்து வந்த ஒரு காந்திக்கு, சாவர்க்கர், அந்தமான் சிறையில் 13×7அறையில் 10 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்த வேதனை புரியுமா?

சிறையில் செக்கிழுக்க வைத்தனர் சாவர்க்கரை. தினமும் 15 கிலோ எண்ணெய் ஆட்டி எடுக்கவேண்டும். மாடுகள் செய்யும் வேலையை ஒரு தேசாபிமானியை செய்ய வைத்தனர். எதற்காக? இந்த தேசத்தை காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டதற்காக. தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்று எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளும் கேடு கேட்ட ஜென்மங்களுக்கு இந்த கொடுமை புரியுமா, இல்லை இந்த தியாகம் தெரியுமா?

சாவர்க்கருக்கு கொடுத்ததே போல சக சிறைக்கைதிகளுக்கு கொடூரமான வேலை கொடுத்தபொழுது சிலர் அந்த கொடுமையை தாங்க முடியாமல் சிறையிலேயே தூக்கில் தொங்கிய கதை தெரியுமா காந்தியாரே. இந்து பூஷன் ராய் என்ற சிறைக் கைதி, அந்தமான் சிறையில், எப்படி மாண்டு போனான் என்று யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கண் முன்னால் சக இந்தியர்கள் சாவதைக் கண்டும், அந்தக் கொடிய துயரங்களை அனுபவித்தும், தற்கொலை எண்ணம் தவிர்த்து நெஞ்சில் உரத்தோடு வாழ்ந்து காட்டியவர் சாவர்க்கர். ஆம், A Gandhi can never become a Savarkar.

டெல்லி தர்பாரை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் “சிறைக்கைதிகள் அனைவரும் விடுதலை கோரி விண்ணப்பிக்கலாம்” என்ற அறிவிப்பு வருகிறது. உங்கள் தேசத்துரோக பாஷையில் “மன்னிப்பு”. விநாயக் தாமோதர் சாவர்க்கரும் விண்ணப்பிக்கிறார். ஆனால் அவரது விண்ணப்பத்துக்கு ஒற்றை வரியில் “நிராகரிக்கப்பட்டது” என்று பதில் வருகிறது பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து. இது 1911ல். சிலரின் தண்டனைக்காலம் குறைக்கப்படுகிறது, ஆனால் சாவர்க்கரின் தண்டனையில், சிறைவாசத்தில், எந்த மாற்றமும் செய்யவில்லை பிரிட்டிஷ் அரசு. இறுதியில் 1924ல், கட்டுப்பாடுடன் கூடிய, விடுதலை பெறுகிறார். 1910 – 1937 அவர் பிரிட்டிஷ் அரசின் பிடியில் இருந்தார்.

மனித வரலாற்றின் கொடூரமான சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் அந்தமான் செல்லுலர் சிறைக் கைதிகள். அனைவரும் clemency விண்ணப்பம் செய்தவர்கள் தான், அதில் சாவர்க்கரும் ஒருவர். நீங்கள் “மன்னிப்பு கேட்டார் சாவர்க்கர்” என்று எள்ளி நகையாடுவது சாவர்க்கரை மட்டும் அல்ல, அவருடன் செல்லுலர் சிறையில் இருந்த அனைத்து தேசபக்தர்களையும் தான். உணர்வில், உதிரத்தில் இந்திய ரத்தம் இருக்கும் எவனும் அந்த செல்லுலர் சிறைக்கைதிகளை இப்படி கேவலப்படுத்தமாட்டான்.

புழுக்களுக்கு புலியின் வலிமை தெரியாது. புழுக்களின் உலகமே வேறு.

அடுத்தமுறை விடுமுறைக்கு தாய்லாந்து, இத்தாலிக்கு செல்லும்பொழுது கொஞ்சம் சாவர்க்கரைப் பற்றி படித்துப் பாருங்கள். இந்தியக்காற்றில் இருக்கும் தேசப்பற்று உங்களுக்கு அவரைப்பற்றி ஏதாவது புரியவைக்கும்.


அரவிந்தன் நீலகண்டன்:

’வீர’ எனும் பட்டத்துக்கு தகுதியான வேறொரு நபரும் உண்டா?

அந்தமான் சிறை சாலை, அதுவும் 1910களில், மிகப் பெரிய சித்திரவதை கூடம். அங்கே அனுப்பப்படுவது ஒரு மனிதனை அவன் இறுதி துளி உணர்வையும் இல்லாமலாக்கி நடைபிணமாக்கிடத்தான். விநாயக தாமோதர சாவர்க்கரின் தொடக்க ஐந்தாண்டுகள் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள் மிக மிகக் கொடுமையானவை. எந்த மனிதனாலும் தாக்குபிடிக்க முடியாதவை. எனவே அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவர் கருணை மனு அனுப்பியிருந்தால் கூட தவறில்லைதான்.

ஆனால் உள்ளே அடைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் மிகக் கடுமையான சித்திரவதைகளையும் அவமானங்களையும் சந்தித்து, இன்னும் 46 ஆண்டுகள் இதே நிலை என்கிற எதிர்காலம் கொடுமையாக முன்னே நிற்கும் சூழலில் தான் அனுப்பும் ‘கருணை’ மனுவில் , என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிற அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவியுங்கள் என ஒருவரால் எழுத முடிகிறதென்றால்?

ஒருவாரம் அப்படிப்பட்ட சிறையில் உங்களால் என்னால் இருக்க முடியுமா? அதே போல செக்கிழுத்து தேங்காய் நார் உரித்து மலக்குழியைவிட கேவலமான அறையில் தரையில் படுத்து தனிமை சிறையில் தங்கி இருக்க முடியுமா? 50 ஆண்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சூழலில் நான்கு வருடங்கள் மிகக் கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஒருவர், என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறர் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என எழுதுகிறார்.

இந்த தியாகத்தை கிண்டலடிப்பவன் மனிதர்களில் சேர்த்தியா? அப்படி கிண்டலடிப்பவன் பின்னால் செல்பவர்கள் இந்திய ரத்தம் கொண்டவர்களா?

4 Replies to “ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்”

 1. நேரு குடும்பம் ஒன்றுதான் நாட்டுக்காக உழைத்து நிறைய இழந்தது போலவும் மற்ற தியாகிகள் குடும்பமெல்லம் பொழுது போகாமல் செத்தது போலவும் ராகுலாரும் பிரியங்காவும் பேசுவதெல்லாம் அரசியல் முதிர்ச்சியின்மையினை காட்டுகின்றது

  இந்த தேசததின் ஆயிரமாண்டு விடுதலைபோரில் எத்தனையோ பேர் பெரும் தியாகம் புரிந்தார்கள், அவர்கள் வாரிசுகளெல்லாம் ஆளவந்ததா? அரசியல் செய்ததா?

  வீரசிவாஜியின் வாரிசுகள் எங்கே? அவர் தொடங்கி ஜான்சிராணி வரையிலான வீரபோரை செய்த வாரிசுகள் எங்கே?

  புலிதேவன் தொடங்கி மருதுபாண்டியர் வரை அவர்கள் வாரிசு எங்கே?

  தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி கிருபாளினி வரை அந்த பெரும் பாரம்பரிய வாரிசுகள் எங்கே?

  படுகொலை செய்யபட்டது அரசியல் தகுதி என்றால் பகத்சிங், நேதாஜி முதல் எத்தனையோ பெரும் தியாகிகளை காட்டமுடியும் , அந்த சூர்யாசென் முதல் பெரும் பலிகளை காட்டமுடியும் , வாஞ்சிநாதன் கூட அவ்வகைதான் அவர்கள் வாரிசுகள் எங்கே?

  காந்தி கூட கொல்லபட்டார், அவரின் வாரிசுகள்தான் ராஜாஜியின் வாரிசுகளாக கூட அடையாளம் காட்டபட வேண்டும் அவர்கள் எங்கே?

  பட்டேல் வாரிசோ இல்லை அம்ப்தேகர்வாரிசோ, மாவீரன் நேதாஜியின் வாரிசோ எங்கே?

  வ.உ.சி வாரிசுகளைவிடவா நேருவின் வாரிசுகள் உயர்ந்தவை?

  ஆக நாட்டுக்கு யார் என்ன செய்தார்கள் என்பத்தான் பார்க்கவேண்டிய விஷயமே தவிர எங்கள் தாத்தா அப்பா பாட்டி அப்படி செத்ததால் நாங்கள் வாரிசு என்பதெல்லாம் நகைப்புகுரிய விஷயம்

  மிக மிக குழம்பி அல்லது தவறாக பயிற்றுவிக்கபட்டு இந்தியா நாங்கள் ஆளவேண்டிய நாடு எங்களுக்க்கான நாடு என ராகுலும் பிரியங்காவும் நம்புவார்களென்றால் காலம் மிகபெரிய படிப்பினையினை கொடுக்கும், மீள முடியாதபடி கொடுக்கும்

 2. ராகுலார் விவகாரத்தில் மேலை நாடுகள் தலையிடவேண்டும் என காங்கிரஸ்காரர் திக் விஜய் சிங் டிவிட்டரில் அழைப்பு விடுத்திருப்பது பெரும் சலசலப்பாகின்றது

  ராகுலார் இந்திய சட்டபடி தண்டிக்கபட்டிருக்கின்றார், இந்தியாவின் உள்நாட்டு சட்டம் என்பது அதன் இறையாண்மையில் இயற்றபடுவது இங்கு இன்னொரு நாடு தலையிட கோருவது ஏற்றுகொள்ளமுடியாதது

  பொதுவாக இப்பொழுதெல்லாம் இந்தியாவினை பகைக்க மேற்கு நாடுகள் தயாரில்லை அதுவும் ராகுலுக்காக பகைப்பதெல்லாம் நடக்காத விஷயம், மண் படகை நம்ப அவர்கள் ஒன்றும் காங்கிரசார் அல்ல‌

  ராகுல் விவகாரத்தில் சீனா கூட வாய்திறக்கவில்லை அப்படியே அமெரிக்காவோ பிரிட்டனோ அதன் அடிபொடிகளோ யாருமே கண்டுகொள்ளவில்லை

  ஜெர்மன் அமைச்சர் ஒருவர் “நிலமையினை பார்த்துகொண்டிருக்கின்றோம்” என்பதோடு நிறுத்தி கொண்டார்

  அதாவது எல்லோரும் பார்ப்பதை போல ஜெர்மனும் பார்த்துகொண்டிருக்கின்றது என அவர் சொன்னதுதான் தாமதம் இந்த திக் விஜய்சிங் ஒடி சென்று டிவிட்டரில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என சொன்னார் விளைவு இந்தியர்களால் வாங்கி கட்டிகொண்டிருக்கின்றார்

  வெளிநாடு தலையிட்டு இந்திய சட்டம் சரியில்லை என்றும் ராகுலை விடு என என்றும் சொல்லுமானால் எதற்கு சுதந்திரம்? எதற்கு இந்திய ஆட்சி? என ஆளாளுக்கு விளாசுவதில் திக் விஜய் சிங் மவுனமாகிவிட்டார்

  இப்போதுள்ள சூழலில் முன்பெல்லாம் மிரட்டியது போல் மேலை நாடுகள் இந்தியாவினை மிரட்டமுடியாது, உலகின் ஐந்தாம் பொருளாதார பலமான நாடு, மிக பலமான காவல் கொண்ட நாடு என மேலை நாடுகளே காஷ்மீர் விவகாரம் முதல் பல விவகாரங்களில் ஒதுங்கி கொண்டன‌

  உலக சூழலில் இந்தியாவின் தயவு அவசியம் என கெஞ்சாத குறையாக கதறிகொண்டிருக்கின்றது அமெரிக்கா

  இந்நிலையில் பழைய 1940களின் நினைப்பிலே காங்கிரசார் இருப்பது நல்லதல்ல‌

  சீனா, வடகொரியா, சில அரபுநாடுகள் என பல நாடுகளில் நடக்கா சலசலப்புகள் இல்லை, அங்கெல்லாம் பேசமுடியா மேலை நாடுகள் இந்தியாவில் மட்டும் தலையிட முடியுமா என்ன?

  சரி, சீனாவில் ஏன் மேலை நாடுகளால் பெரிதாக தலையிட முடியவில்லை தலையிட்டாலும் ஒரு பலனுமில்லை

  விஷயம் எளிது, அங்கு பிரிட்டிசார் ஆளவில்லை அதனால் காங்கிரஸ் போன்ற கைகூலி இயக்கங்கள் இல்லை,எங்கள் நாட்டில் தலையிட வாருங்கள் எனும் தேசதுரோக சத்தம் அங்கு இல்லை

  ஹாங்காங் எனும் முன்னாள் பிரிட்டன் காலணியில் மட்டும் இந்தியா போல சலசலப்பு உண்டு என்றால் அந்நியர் விதைத்த விதை எப்படியானது, காங்கிரஸின் மூலமும் நோக்கமும் திட்டமும் என்ன என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல‌

  ராகுல் என்றல்ல மொத்த காங்கிரசாரையும் பிடித்து அடைத்தாலும் உலகில் யாரும் இந்தியாவினை கேள்வி கேட்க மாட்டார்கள் அதுதான் இன்றைய நிலவரம், மோடியின் இந்தியா அடைந்த பலம் அது

 3. அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம்

  ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று

  அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த திராவிட பெரும் சதிக்கு அவனும் தப்பவில்லை

  பிராமணன் எல்லோரும் சாதிவெறியர்கள் என்ற ஈரோட்டு ராம்சாமியின் பொய்க்கு அவரும் தப்பவில்லை

  வ.வே.சு அய்யர் எனப்படும் வ.வே.சுப்பிரமணிய அய்யர். அவருக்கு வர்னாஸ்ம வெறியர் என ஈரோட்டு ராம்சாமி எனும் தேசவிரோதி பட்டம் சூட்டியது அவரின் அந்திம காலத்திலே

  ஆனால் ஈரோட்டு ராம்சாமி இங்கு மைனராகவும் ஒரு மாதிரி ஆசாமியாகவும் சுற்றி கொண்டிருந்த பொழுதே இந்நாட்டுக்கு போராடி முடித்துவிட்டுத்தான் சேரன்மகாதேவி குருலத்துக்கு வந்தார் அய்யர்

  அவரை குற்றம் சொல்லும் தகுதி கொஞ்சம் கூட ஈரோட்டு ராம்சாமிக்கோ அவரின் கோஷ்ட்டிகளுக்கோ அறவே கிடையாது

  வ.வேசு அய்யர் திருச்சியில் 1881ல் பிறந்தார், அங்கே பள்ளி முடிந்து மணமும் செய்துவிட்டு பின் ரங்கூனில் சில காலம் இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்

  அவருக்கு கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் என 6 மொழிகள் தெரிந்திருந்தது

  லண்டன் அவரின் வாழ்வினை மாற்றியது, மிக பெரும் தேசபக்தர்களும் போராளிகளுமான சாவர்க்கர், திங்காரா, பிபின் சந்திரபால் போன்ற பெரும் பிம்பங்களோடு பழகினார், இவர்கள் தங்கியிருந்த வீட்டில் லண்டனில் அபிநவபாரத் சங்கம் தொடங்கபட்டது.

  இந்தியாவினை வெள்ளையன் ஆள்கின்றான், அவன் வழியில் அவனை ஒழிக்க வேண்டும் என்ற முடிவில் துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் போன்ற போர் பயிற்சிகள் அந்த சங்கத்தால் வழங்கபட்டன, 30 பேர் அதில் இருந்தார்கள்

  ஒருபக்கம் ஆயுத பயிற்சி என்றாலும் இன்னொரு பக்கம் எழுத்தாற்றல் அய்யருக்கு அழகாய் வந்தது, அங்கிருந்து பாரதியாரின் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதினார். அதற்கு பெரும் வரவேற்பும் இருந்தது

  1909 அவரின் வாழ்வில் திருப்புமுனையான ஆண்டு, முதன் முதலாக இந்திய தேசிய விழா என ஒன்றை தொடங்கி அதை தசரா அன்று கொண்டாடினார், இந்தியா இந்துநாடு என்பதில் மாற்றமே இல்லை அக்காலமுமில்லை இக்காலமுமில்லை

  அதைத்தான் அன்றே கொண்டாடினார் அய்யர், அதற்கு பேச அழைக்கபட்டார் காந்தி. அய்யரின் புகழ் பரவியது

  இதே ஆண்டில் இன்னொரு வீரசம்பவம் நடந்தது, ஆம் கர்சான் லில்லி என்றொரு ஆங்கில கமாண்டர் இருந்தான் கொடுங்கோலன், 1900 வங்க பஞ்சத்தில் அவனால் செத்த இந்தியர் ஏராளம். அவனால் அழிந்த குடும்பங்கள் ஏராளம், ஜெனரல் டயர் போன்றவன் அவன்

  அவனை லண்டனில் அசால்ட்டாக போட்டு தள்ளினான் மதன்லால் திங்காரா, பிரிட்டிஷ் தளபதியினை லண்டனிலே நாயினை போல் சுட்டு கொன்றதில் அதிர்ந்த பிரிட்டன் அபிநவபாரத் சங்கத்தை தேடி ஒழிப்பதில் இறங்கியது

  சாவர்க்கர் கைதானார், அய்யர் பெயர் பட்டியலில் இல்லை ஆனால் பிரிட்டிஷ் எதிர்ப்பினை கைவிட்டு வாய்மொழியும் கைசாத்தும் வைத்தால் மட்டுமே “பாரிஸ்டர்” பட்டம் என பிரிட்டன் சொன்னது

  அதை ஏற்க மறுத்து பட்டம் முக்கியமல்ல நாடு முக்கியம் என பட்டம்பெறாமலே வெளியேறினார் அய்யர், இவர் மிக ஆபத்தானவன் என முத்திரை குத்தி தேடதொடங்கியது பிரிட்டன்

  பின் சீக்கியர் போல் வேடமிட்டு பிரான்சுக்கு தப்பி கொழும்பு வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு 1910ல் வந்தார், பிரிட்டன் கைது செய்யும் அபாயம் இருந்ததால் பாண்டிச்சேரியில் தங்கினார்.

  ஆம் பிரிட்டிஷாரை எதிர்க்கமாட்டேன் என சொல்லியிருந்தால் பாரிஸ்டர் பட்டத்தோடு வந்து கோடி கோடியாக சம்பாதித்திருக்க கூடிய அய்யர், தேசத்துக்காக தலைமறைவாய் அனாதையாய் திரிந்து பாண்டிச்சேரியில் சாமான்யனாய் நின்றிருந்தார்

  அங்கும் குருகுலம் ஆரம்பித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார், அதில் ஒருவன் வாஞ்சிநாதன், ஆஷ்துரையினை சுட்ட வாஞ்சிநாதனின் துப்பாக்கி பிரான்ஸ் தயாரிப்பு,அதை கொடுத்தது அய்யர் என்றாலும் பிரிட்டனிடம் ஆதாரமில்லை என்பதால் அவர்மேல் நடவடிக்கை இல்லை

  இந்நிலையில் முதல் உலகப்போர் தொடங்கிற்று, அய்யரை ஆப்ரிக்காவின் அல்ஜீரியாவுக்கு நாடு கடத்த சொன்னது பிரிட்டன், பிரான்ஸ் மறுத்தது. அய்யர் பாண்டிச்சேரியிலே தங்கினார்

  பாரதியார் பத்திரிகை, திருவிக பத்திரிகை என தொடர்ந்து எழுதினார், பின்னாளில் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் என அறியபட்ட அய்யரின் எழுத்துக்கள் அங்குதான் சீரடைந்தன‌

  முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டன் வெற்றிபெற, யாரும் அசைக்கமுடியா சாம்ராஜ்யமான ஓட்டொமன் துருக்கி ராஜ்ஜ்ஜியமே சிதற பிரிட்டன் எதிர்ப்பாளர்களுக்கு பெரும் சோகமும் சலிப்பும் உண்டாயிற்று

  நிச்சயம் ஒரு போர் வரும் பிரிட்டன் மண்ணை கவ்வும் என்றுதான் ஆயுத வழியில் சாவர்க்கர் , அய்யர், திங்காரா, வாஞ்சிநாதனெல்லாம் வந்தார்கள் ஆனால் காலம் கைவிட்டபின் மனம் நொடிந்தார்கள்

  அவர்களுக்கு கொஞ்ச நாளில் இரண்டாம் பெரு யுத்தம் வருவதோ நேதாஜி எழும்புவதோ தெரியாது தெரிந்திருந்தால் அந்த முடிவுக்கு வந்திருக்கமாட்டார்கள்

  ஆம், இரண்டாம் உலகபோரில் ஜெர்மனோடு சேர்ந்து நேதாஜி செய்ததைத்தான் முதல் உலகபோரில் இந்த கோஷ்டி ஆட்டோமன் சாம்ராஜியம் ஜெர்மனுடன் சேர்ந்து ரகசியமாக செய்ய பார்த்து தோற்றது

  ஆனால் அவர்களின் முயற்சியும் தியாகமும் வீரவரலாறு, வாழ்த்துகுரியது

  இப்படி மனமுடைந்த நிலையில்தான் இனி ஆயுதபோராட்டம் சாத்தியமில்லை என அமைதிவழிக்கு திரும்பினார்கள், சாவர்க்கரின் மன்னிப்பு கடிதமெல்லாம் இக்காலத்தில் நடந்ததே

  அய்யரும் அப்படி பொது மன்னிப்பு பெற்று பிரிட்டிஷ் இந்தியாவின் திருச்சிக்கு வந்தார், ஆம் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து , நாட்டு விடுதலைக்காய் பரதேசியாய் திரிந்த அவர் 15 வருடம் பின்புதான் தோற்றுவிட்ட கணவனாய் மனைவியினை பார்த்தார்

  பாரிஸ்டர் பட்டமுமில்லை, கையில் காசுமில்லை ஆனால் விடுதலை கனவு மட்டும் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்தது, அந்த அற்புதமான எழுத்தாளனின் எழுத்து அணலை மூட்டி கொண்டே இருந்தது

  ஒரு கட்டத்தில் சில கட்டுரைகளுக்காக அவரை பெல்லாரி சிறையில் அடைத்த பிரிட்டன் அரசு அவரை பழி தீர்த்து ரசித்தது

  பின் வெளிவந்த அய்யர் பாரதியாருடன் பல புரட்சிகளை செய்தார்

  அய்யர் பாரதியாருடன் சேர்ந்து கனகலிங்கம் எனும் தலித்துக்கு பூனூல் அணிவித்து நீ இந்தியன் என கட்டி தழுவிய காட்சிகளெல்லாம் வரலாற்றில் உண்டு

  ஆம், அவர் சாதிவெறியர் என்பதெல்லாம் ராம்சாமி சொன்ன பச்சைபொய்.

  பாரதியின் கடைசி காலங்களில் அவரோடு இருந்தவர் அய்யர், “பாரதி, மருந்தை எடு. நாட்டின் சுதந்திரத்தை பார்க்க உயிரோடு இரு, அதற்காகவாது எழு” என தழுதழுத்த குரலில் அடிககடி சொன்ன அய்யர் பாரதியின் கடைசி கால பக்கங்களில் கண்ணீர் நினைவாய் நிற்கின்றார்

  கதர் வேட்டியும் மேலே கதர் துண்டுமாக போர்த்தி கொண்டு நடந்த‌ அந்த அய்யர், பெரும் நண்பனும் அறிவாசானுமான பாரதியின் மறைவுக்கு பின் சென்னையில் இருக்க முடியாமல் தவித்தார்

  ஒரு நல்ல இடம் , தனிமையான இடம் பரபரப்பில்லா இடம் அவருக்கு தேவைபட்டது, அப்படித்தான் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு வந்தார், அங்கு ஒரு குருகுலம் அமைத்தார்

  அந்த தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், தொழிலும் உடல்வலிவுப் பயிற்சிகளும் அழகு ஆங்கிலமும் இதர மொழிகளும் போதிக்கப்பட்டன.

  தேசபற்றும் பன்மொழி புலமையும் மிக சிறந்த சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்களை அவர் உருவாக்கி கொண்டிருந்தார்

  அவர் கையில் காசு இல்லை, மாணவர்களின் பெற்றோரும் மற்றவர்களும் கொடுக்கும் காசில்தான் குருகுலம் இயங்கிற்று, அதில் பிராமண மாணவர்களுக்கு சைவமும் இதர மாணவர்களுக்கு அசைவமும் கொடுக்கபட்டது அது தனி தனியாக கொடுக்கபட்டது

  பெற்றோர் விருப்படிதான் கொடுக்கபட்டது, இதில் தவறேதுமில்லை எல்லா பள்ளி கல்லூரிகளிலும் இன்றளவும் சைவ அசைவ மெஸ்கள் தனி தனியேதான் உண்டு.

  ஆனால் தேசபற்று மிக்க மாணவர்களை அய்யர் உருவாக்குகின்றார் , அவர் குருகுல மாணவர்களுக்கு தேச உணர்வு வருகின்றது என்ற கவலை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டாயிற்று

  ஏற்கனவே லண்டனில் கர்ணல் கர்சன் கொலை, ஆஷ்துரையின் கொலையில் அவர்மேல் சந்தேகம் இருந்ததால் ரகசிய கண்காணிப்பும் இருந்தது, அய்யர் குருகுலத்தில் இன்னொரு வீரன் உருவாகிவிட கூடாது எனும் அச்சமும் பிரிட்டன் அரசுக்கு இருந்தது

  ஆனால் அவனால் குழப்பமுடியாது, சட்டத்தில் இடமில்லை. என்ன செய்யலாம் என யோசித்த அவனுக்கு தன் அடிப்பொடி ஈரோட்டு ராம்சாமியின் நினைவு வந்தது

  அவன் கண் காட்டியதும் ஈரோட்டு ராம்சாமி சேரன்மகாதேவி ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் என பெரும் ஆர்ப்பாட்டம் செய்து, பிராமண வெறி அது இது என குதித்து குத்தாட்டம் போட்டது

  சேரன்மகாதேவியில் இருந்து 20 கிமீ தொலைவில் வடக்கன்குள கிறிஸ்தவ ஆலய சாதி சண்டைக்கு ராம்சாமி செல்லவில்லை ஏனென்றால் அது வெள்ளையன் ஆசிபெற்ற இடம் அங்கு செல்லமாட்டார்

  இப்படி தன் ஏவலாளை வைத்து அய்யரை பழிவாங்கினான் பிரிட்டிஷ்காரன், ஆனாலும் அய்யர் மனம் தளரவில்லை

  அவருக்கு அப்பொழுது 44 வயதுதான் ஆகியிருந்தது. அதற்குள் பெரும் காரியங்களை செய்திருந்தார்

  திருகுறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், கீதைக்கு ஆங்கில உரை, கம்பனை ஆங்கிலத்துக்கு மாற்றியது என ஏராளம் , அவர் கம்பனை வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தோடு ஆய்வு செய்து அதை நுணுக்கமாக எழுதினார்

  மிக சிறந்த ராமயண ஆய்வு அதுவே

  நெப்போலியன் வரலாற்றையும் கரிபால்டி வரலாற்றையும் இங்கு கொண்டு வந்தவர் அவரே, தமிழ் இலக்கிய உலகின் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவர்தான்

  ரவுத்திரம் பழகிய அய்யராக, ஆயுதம் தாங்கிய அய்யராக, பக்தி இலக்கியம் தேசபற்று என பல் முகங்களுடன் வலம் வந்த அய்யருக்கு விதி மகள் வடிவில் வந்தது

  அய்யர் பெண்ணுரிமைக்கு பாரதி போல் முன்னுரிமை கொடுத்தார், இதனால் செல்லும் இடமெல்லாம் தன் மகளை அழைத்து சென்றார்

  பாபநாசம் அருவி பக்கம் ஒரு சிற்றோடையில் மாணவர்களுக்கு தாண்டு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார், அந்த பயிற்சியினை மகளுக்கும் கொடுத்தார்

  அந்த சிறுமி தாண்டும் பொழுது தவறி அருவியில் விழுந்தார், மகளை தாங்கிபிடிக்க விழுந்த அய்யர் அங்கே பலியானார்

  திருச்சியில் பிறந்து லண்டனுக்கு சென்று அங்கு பிரிட்டிஷ்காரனை அலறவிட்டு வாழ்வினை தொலைத்து பின் தாயகம் திரும்பி எழுச்சியும் தேசபற்றுமிக்க ஒரு தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட அந்த மாமனிதன் பாபநாசம் அருவியில் 44ம் வயதில் மகளோடு செத்து கிடந்தான்

  அவன் செய்த தவறு என்ன? பிரிட்டிஷ்காரனை எதிர்ப்பேன் என உறுதியாய் சொன்னது நாட்டுக்காய் கடைசிவரை பாடுபட்டது

  அந்த மாமனிதனைத்தான் ஈரோட்டு ராம்சாமி எனும் தேசத்வேஷி வர்னாசிரம வெறியன் என திட்டி தீர்த்தார், தீரா பழிசுமத்தினார்.

  இன்று அந்த வ.வே.சு அய்யரின் பிறந்த‌ நாள்,
  இந்தியாவின் மிக சிறந்த விடுதலை போராட்ட வீரரும், மிக சிறந்த எழுத்தாளரும் தேசத்துகாக வாழ்வினை அர்பணித்த அந்த மாமனிதனுக்கு அஞ்சலிகள்

  ஆயுதம் அறவழி என எல்லா வழிபோராட்டத்திலும் அவர் பெயர் இருக்கும். சாவர்க்கர், திங்காரா, வாஞ்சிநாதன் போன்றோர் பெயர் இருக்கும் வரை அய்யரும் இருப்பார்

  பாரதிபெயர் ஒலிக்குமிடமெல்லாம் அவரும் இருப்பார்

  நிச்சயம் அவர் தேசபற்றும் மதபற்றும் உணர்ச்சியுமிக்க ஒரு நல்ல தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட்டார், அவரின் கனவு இப்பொழுது நிறைவேறி கொண்டிருக்கின்றது

  மத அபிமானமும் தேசாபிமானமும் கொண்ட மாபெரும் இளைய தலைமுறை உருவாகி கொண்டிருக்கின்றது

  ஒரு நாள் விரைவில் வரும் அன்று அவரை விமர்சித்து பழிசுமத்தியோர் அடையாளம் கடலில் எறியபடும், மாமனிதனும் தேசபற்றாளனும் தேசத்தின் குரலுமான வ.வே.சு அய்யரின் புகழும் அடையாளமும் அழியா இடம்பெறும்

  பாபநாசம் மலையிலோ இல்லை சேரன்மகாதேவி பக்கமோ அவருக்கு நினைவிடம் ஏதுமில்லை, விரைவில் மிகபெரிய அடையாளம் அம்மாமனிதனுக்கு அமைக்கபடும், காலம் அதை செய்யும்

 4. உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு

  தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது

  ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட‌

  சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா மகா புண்ணிய ஷேத்திரமுமானது அந்த ஆரூர்.

  சர்வதோஷங்களுக்கும் பரிகார தலம் அதுவே

  63 நாயன்மார்களில் அந்த ஆலயம் தொழாத நாயன்மார்கள் மிக மிக குறைவே, அவர்கள் வாழ்வின் அதிசயமெல்லாம் அங்குதான் நடந்தது

  கைலாயத்தை அடுத்து சிவனுக்கு பிரசித்தியான இடம் அதுதான் என்ற அளவில் அதன் பெருமை உண்டு, சிவபெருமான் எக்காலமும் வாழும் ஆலயம் அது

  “திருவாரூரில் பிறந்தாலே முக்தி” என்பார்கள் ஆன்றோர்கள்

  அந்த ஆலயத்தின் பெருமையினை போலவே மிக பிரசித்தி பெற்றது அந்த ஆழிதேர், அதன் வரலாறும் தொன்மையும் பிரமாண்டமானது

  இன்றும் உலகின் மிகபெரிய தேர் அதுதான், ஆசியாவின் மிகபெரிய தேர் அது என சொல்வதில் நியாயமில்லை, பாரதம் தாண்டி எங்கே தேரோட்டம் உண்டு? தேர் வழிபாடு உண்டு?

  ஆக அந்த தேரினை உலகின் மிகபெரிய தேர் என்றே ஏற்றுகொள்ளலாம் உண்மையும் அதுவே

  அந்த தேர் எப்படி செய்யபட்டது என்பதற்கு முன் அந்த திருவாரூரின் பொற்காலம் அறிதல் அவசியம்

  ராஜ ராஜ சோழனுக்கு பெரியம்மா செம்பியன் மாதேவிதான் இங்கு செங்கல் ஆலயத்தையெல்லாம் கற்றளி எனும் கல் ஆலயமாக மாற்றினாள், அவள் வழி வந்த ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அந்த திருவாரூர் ஆலயத்தையே மாற்றி வைத்தார்கள்

  அதுவும் ராஜேந்திர சோழன் அந்த கருவறையினையும் கோபுரத்தையும் தங்கத்தாலே அலங்கரித்து மகிழ்ந்தான்

  ஆம் தஞ்சை பெரியகோவில் கோபுரம் முழுக்க தங்கத்தால் வேயபட்டது போல் திருவாரூர் கோவிலிலும் இருந்தது

  “உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய்
  மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான்” எனும் அவன் கீர்த்தி அதை சொல்கின்றது இது கல்வெட்டிலும் உண்டு.

  ராஜேந்திரனின் நாயகி பரவை அந்த ஊரை சார்ந்தவள் எனும் வகையில் அவளும் ராஜேந்திரனும் ஏற்றிவைத்த விளக்கு இன்றும் அங்கு உண்டு

  உண்மையில் சோழர்களின் வரலாற்றை சொல்வது திருவாரூர் ஆலய கல்வெட்டுகளே, ராஜராஜன் ஐப்ப்சி சதயத்திலும், ராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரையிலும் பிறந்தான் என்பதை அதுதான் சொல்லிற்று,

  அக்கல்வெட்டுகள் இன்றும் அங்கு உண்டு

  ஆப்கானிய கில்ஜியின் ஆப்ரிக்க கொள்ளையன் மாலிக்காபூர் காலத்தில் அந்த ஆலயத்தின் தங்கமெல்லாம் சுரண்டபட்டு வெறும் கற்சுவர் மட்டும் இப்பொழுது நிற்கின்றது, சோழர்கள் இப்படி பல ஆலயங்களை பொன்னால் வேய்ந்தார்கள், அதில் இன்று சிதம்பரம் ஆலயம் மட்டும் தப்பி நிற்கின்றது

  பெரிதிலும் பெரிது இறைவனுக்கு கொடுத்து வந்த சோழ இனம் அதை தஞ்சை கோவிலில் செய்தது, அங்கே லிங்கத்தில் செய்தது, அப்படியே இங்கே திருவாரூர் தேரிலும் செய்தது

  அந்த பழைய தேர் அக்கால பிரமாண்ட வாகனங்களின் சாயலாய் இருந்தது, தஞ்சை கோவிலை கட்டவும் பிரமாண்ட ஆலயங்களை கட்டவும் இப்படியெல்லாம் வண்டி இருந்திருக்கலாம் என்பதை அதுதான் சொல்லிற்று

  ஆம் அந்த தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன, இடபுறம் 5 வலபுறம் ஐந்து என பெரிய சக்கரங்கள் இருந்தன

  இந்துக்களின் விஷேஷ எண்ணும், சிவ வழிபாட்டில் ஒரு சுழற்சியினை சொல்லும் 108 எனும் எண்ணை குறிப்பதாக 108 அடி உயரம் வரை இருந்தது

  மிக உறுதியான மரங்களாலும் இரும்பு உள்ளிட்ட வார்ப்பு பொருட்களாலும் அது மகா உறுதியாய் இருந்தது

  சோழநாட்டு இந்துக்களின் சிவபக்தியினை உலகுக்கு சொல்லும் மாபெரும் அடையாளமாய் அதிசயமாய் அது விளங்கிற்று , ஒரு வகையில் அது உலக அதிசயமுமாயிற்று

  சுமார் 500 டன் எடையில் 108 அடி உயரத்தில் பத்து சக்கரங்களுடன் வலம் வந்த, பெரும் யானைகளால் இழுக்கபட்ட அந்த தேர் அன்று அதிசயமே

  அவ்வளவு பெரும் தேரை எப்படி இழுத்தார்கள், எப்படி திருப்பினார்கள் என்பதெல்லாம் இன்றுவரை அதிசயமே

  அரண்மையும் தேரும் என்பது அரச அடையாளம் என கருதபட்ட காலத்தில், அரசனனுக்கெல்லாம் அரசன் சிவனுக்காய் பெரும் ஆலயம் அமைத்த அந்த இந்து அரசர்கள் அந்த தேரினையும் அமைத்தார்கள்

  பொதுவாக நகர்வலம் என்பது மன்னன் மக்களின் சுபிட்சத்தை காணவும், நடக்க முடியாதோர் நோயுற்றோர்களுக்கு காட்சி தந்து நம்பிக்கையளிக்கவும் செய்யபட்ட ஏற்பாடு

  அதை தெய்வத்துக்கும் கொடுத்தார்கள் இந்துக்கள், கோவிலுக்குள் வரமுடியாதவர்களெல்லாம் தெருவில் வணங்க அதை இழுத்து வந்தார்கள்

  அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கோவிலுக்குள் நுழையத்தான் சிலருக்கு சில கட்டுபாடுகள் உண்டே தவிர, தேரில் வரும் தெய்வத்தை வணங்க யாருக்கும் எந்த கட்டுப்பாடும் அன்று இல்லை

  தேர் இழுப்பு என்பதை ஊர் ஒற்றுமையாகவும் செய்தமதம் இந்துமதம், ஊர் கூடி தேர் இழுத்தல் என்பது மிகபெரிய உளவியல் மகிழ்வும் மக்களிடம் ஒற்றுமையும் பக்தியும் ஏற்படுத்தும் விஷயமாயிற்று

  பெரும் பக்தியும் அப்பகுதி முழுக்க ஒற்றுமை ஏற்படவுமே அந்த பிரமாண்ட தேரை செய்தார்கள் மன்னர்கள், ஆம் சோழநாடே கூடி இழுத்த தேர் அது

  “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடியது அந்த தேரை கண்டே.

  மகா உற்சாகமாக அந்த விழா அன்று தொடங்கிற்று, பல காலம் தொடர்ந்தும் வந்தது, சில நூறு ஆண்டுகளில் சோழ வம்சம் வீழ்ந்து டெல்லி சுல்தானிய கொள்ளையர்களால் சில பாதிப்புகள் வந்தன, பின் நாயக்க மன்னர்கள் காலத்தில் அதன் உலா தொடங்கிற்று

  பின் வெள்ளையன் காலத்திலும் நடந்தது

  சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஓடிய அந்த தேருக்கு முதல் சோதனை 1926ம் ஆண்டு வந்தது, ஆம் ஒரு பங்குனி உத்திரத்தில்தான் வந்தது

  அது என்னவோ தெரியவில்லை பல நூறு ஆண்டுகள் எரியாமலும் உடையாமலும் இருந்த இந்து ஆலயங்களெல்லாம் 18ம் 19ம் நூற்றாண்டில் திடீர் திடீரென எரிந்தன‌

  தென்காசி கோவில் முதல் பல கோவில்கள் அப்படி எரிந்தன‌

  எவ்வளவுதான் இந்துக்களை ஒழித்தாலும் கோவிலும் தேரும் அவர்களை மீண்டெழ வைக்கின்றது என சில சக்திகள் கவலைபட்ட காலங்கள் அவை

  அந்த கொடிய காலங்களில் தான் 1926ம் ஆண்டு ஒரு தேரோட்டத்தின் பொழுது எரிந்தது, ஆம் முற்றிலும் எரிந்தது

  கீழரத வீதிவழியாக கிளம்பிய தேர் தேர் கமலாலயம் கரையில் மாற்றுரைத்த விநாயகர் கோவில் கடந்து சென்ற பொழுது தீ பற்றி எரிய துடங்கியது

  அந்த தேர் இரு நாட்களாக எரிந்தது, பெரும் நகரம் தீபற்றி எரிவது போல் எரிந்தது, பல கிமி தொலைவில் இருந்தும் பார்க்கும் படி எரிந்தது

  காணகிடைக்காத அந்த தேர் எரியும் பொழுது இந்துக்கள் கண்ணீர் விட முடிந்ததே தவிர அதை காக்க முடியவில்லை, அந்நாளைய பிரிட்டிஷ் அரசும் அதற்கு பெருமுயற்சி எடுக்கவில்லை இன்றுள்ள தொழில்நுட்பமுமில்லை

  கிட்டதட்ட 3 நாட்களாக எரிந்து முடிந்தது அந்த கலை பொக்கிஷம், அக்னி தேவனுக்கு அந்த தேரை அவ்வளவு பிடித்து போயிற்று எடுத்து கொண்டான்

  இந்துக்கள் மனம் தளரவில்லை, சோழநாட்டு தனவான்களெல்லாம் கூடி மறுபடியும் தேரை செய்தார்கள் 1928ல் தொடங்கி 1930ல் அது முடிந்தது, அதுவும் 10 சக்கரம் கொண்ட தேர்

  ஆனால் 1948க்கு பின் அது ஓடவில்லை, இந்தியாவில் நடந்திருந்த அரசியல் மாற்றம், உலக குழப்பம், வறுமையான இந்தியா, அதை தாண்டி அந்த தேரால் ஏற்பட்ட உயிர்பலி என பல விஷயங்கள் அதை நிறுத்தின‌

  அப்பொழுது திருவாரூர் பகுதியில் பரவியிருந்த கம்யூனிச திக கருத்துக்கள் அதை இன்னும் முடக்கின‌

  ஆளில்லா வீடும், ஓடாத கப்பலும் தேரும் வீணாகும் என்பதை போல் பூட்டி வைக்கபட்ட அந்த தேர் 1975 வரை ஓடவிலை பழுதடைந்தது

  சுமார் 28 ஆண்டுகாலம் தேர் இல்லாமலே திருவிழா நடந்தது

  அதை ஓடவைத்திருக்கலாம், ஆனால் நடக்கவில்லை ஏன் என்றால் காங்கிரஸின் காமராஜரும் நேருவும் ஒரு நாத்திக கோஷ்டி, பசும்பொன் தேவர் போன்றவரெல்லாம் தேரோட்டம் வேண்டுமென்றால் அதை வேண்டுமென்றே தவிர்த்த கோஷ்டி

  இதனால் தேரோட்டத்தில் அரச தலையீடும் இல்லை மக்கள் சொன்னாலும் அவர்கள் கேட்கவுமில்லை

  இடையே நாத்திக திராவிடம் வேறு வந்து நிலமையினை மோசமாக்கிற்று

  “ஏரோட்டும் மக்கள் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் உனக்கு தேவையா” என திருவாரூர் நாதனையே பேசிய கோஷ்டி, திருவரங்க நாதனையே பீரங்கி வைத்து பிளப்போம் என்ற கோஷ்டி எப்படி ஓடவிடும்

  அப்படியே 1970ம் வருடமாயிற்று, திருவாரூர் பக்கம் வடபாதிமங்கலத்தில் தியாகராசர் என்றொரு பக்திமிக்க பணக்காரர் இருந்தார் அவர்தான் இத்தேர் மறுபடி ஓட ஆசை கொண்டார், அப்பொழுது மாநில முதல்வர் கருணாநிதி

  அவருக்கும் தன் நாத்திக இமேஜை மாற்றவேண்டும் என்ற ஆசை இருந்தது, கூடவே தன் முன்னோர்கள் வழிபட்ட ஆலயம் எனும் ஒரு பக்தியும் மனதில் இருந்தது

  உண்மையில் அவரும் திருவாரூர் தேரின் ரசிகன், தன் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல இடங்களிலும் பள்ளி பாடபுத்தகத்திலும் அந்த தேர்படம் வருமாறு கவனமாக பார்த்துகொள்வார்

  அவருக்கு தேர் ஓடவேண்டும் எனும் ஆசை இருந்தது, அப்பொழுது திருச்சி பெல் நிறுவணமெல்லாம் தலையிட்டு பிரேக் சிஸ்டமெல்லாம் மாற்றி, 10 சக்கரம் 4 சக்கரமாக குறைக்கபட்டு இன்றிருக்கும் தேர் வந்தது

  அதிலிருந்து அது ஓடிகொண்டிருக்கின்றது, நிச்சயம் இது ஆதிகால தேர் அல்ல அது இதைவிட பெரியது. இத்தேர் 96 அடி உயரமும் சுமார் 300 டன்கள் எடையும் கொண்டது

  இந்த 3ம் தேரின் தேரோட்டம் இப்பொழுது வருடா வருடம் நடக்கின்றது, ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது

  அதாவது ஆகம விதிபடி அந்த தேர் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் ஓடி 3 நாட்களில் அதாவது பங்குனி உத்திரம் அன்று நிலைக்கு வரவேண்டும் அப்பொழுது உத்திரம் கொண்டாட்டம் நடக்கும்

  ஆனால் 30 ஆண்டுக்கு மேலாக அது அந்த முறைபடி நடக்கவில்லை, பக்தர்கள் கத்தினாலும் அரச காதுக்கு எட்டவில்லை

  கருணாநிதியோ பார்ப்ண கோரிக்கை என அவர்போக்கில் இருந்தார், ஜெயா அரசும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை

  பள்ளி தேர்வுகள் உள்பட பல காரணங்களை சொல்லி தவிர்த்தார்கள்

  கடந்த வருடம் அது மிக சரியாக ஆயில்ய நட்சத்திரம் அன்று ஓட இருக்கின்றது, உத்திரம் அன்று மிக பிரசித்தி பெற்ற அந்த தேர் வீதிக்கு வந்தது

  இந்தவருடம் எப்படி இழுத்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை

  அந்த தேர் அவ்வளவு அழகு, கயிலாயமே அசைந்து ஆடிவருவது போல் வரும் அந்த தேரை காண கண்கோடி வேண்டும், அதுவும் போதாது

  அந்த தேரில் சோழர்களும், நாயன்மார்களும், மாபெரும் சிவபக்தர்களும் அது மீண்டெழ காரணமான தியாகராஜ முதலியார் மட்டுமல்ல இன்னொருவரும் தெரிவார்

  அவர் பெயர் முத்து கொத்தனார்

  கொத்தனார் என்றால் தேரின் மேல் கூரையினை கட்டி அலங்கரிக்கும் கொத்தனார், 1926ல் அவர்தான் அந்த கூரையினை அமைத்திருந்தர்

  அந்த கொடிய தீ ஏற்பட்டபொழுது உயிருக்கு அஞ்சாமல் துணிந்து ஏறி புனிதமான தியாகேஸ்வர சிலையினை காப்பாற்றியவர் அவரே

  மிக கனமான அந்த சிலையினை நகர்த்தி தனி மனிதனாக அவர் போராடி காத்தது வரலாறு, அந்த தேரின் வரலாற்றில் அவருக்கும் இடம் உண்டு

  இன்றும் தேர் கட்டும் பணியினை அவரின் வாரிசுகளே செய்கின்றார்கள்

  தஞ்சை கோவில் போல அந்த தேரும் ஒரு கம்பீர அடையாளம். செழித்திருந்த தமிழகத்தில் ஓங்கியிருந்த சைவத்தின் தனிபெரும் அடையாளம்

  திருவாரூர் எனும் சிவனின் பிரசித்தி பெற்ற தலத்தின் கம்பீரமுமான அந்த தேரினை தரிசித்து பலன் பெற போகும் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்

  உலகின் மிகபெரிய தேர் இறைவனை சுமந்து ஆடி அசைந்து வந்து அருள் கொடுக்கபோகும் காட்சியினை ஒவ்வொரு தமிழக இந்துவும் மிக பெருமையாகவும் நன்றியோடும் வணங்குதல் வேண்டும்.

  இந்த பெருமை உலகில் எந்த இனத்துக்கும் இல்லை, நம்மை தவிர எவனுக்குமில்லை

  ஒரு காலம் வரும் அன்று அந்த தேர் சோழமன்ன காலம் போல 10 சக்கரத்துடனும் 108 அடி உயரத்துடனும் மிக பிரமாண்டமாக மறுபடியும் உலா வரும், நிச்சயம் வரும்

  வரலாறு என்பது எப்பொழுதும் சுழல்வது, இந்துக்கள் ஒடுக்கபட்டு தாழ்த்தபட்ட இந்த ஆயிரம் ஆண்டுகளில் அந்த தேர் சுருங்கியிருக்கலாம்

  இப்பொழுது நடக்கும் இந்து எழுச்சியில் அந்த தேர் மறுபடி தன் அதிஉன்னத நிலையினை அடைந்தே தீரும் இது சத்தியம்

  “ஆரூர் தியாகேசா” என்ற கோஷம் முழங்க உலகின் மிகபெரிய தேரும், இந்துக்களின் மிகபெரிய அடையாளமும், தமிழக இந்துக்களின் வரலாற்று பெரும் பெட்டகமுமான அந்த தேர் இன்று அசைகின்றது

  அது வெறும் அசைவல்ல, திருவாரூர் நாதன் பவனிவரும் அழகு மட்டுமல்ல, அது இந்து தமிழர் பெரும் வரலாறும் பக்தியும் கண்முன் அசைந்து வரும் பெரும் அடையாள வடிவம், அந்த தேரை வணங்கி உலகில் எவனுக்கும் இல்லா பக்தி கலாச்சார பெருமை எங்களுக்கு உண்டு என கம்பீரமாக சொல்கின்றது பாரதத்தின் தமிழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *