யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்

யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசரைக் குறித்து கேள்விபட்டிருப்பீர்கள். ’ஜாம் ஸாகேப்’ என அழைக்கப்பட்ட குஜராத்தின் நவாநகர் சார்ந்த சமஸ்தான அரசர் திக்விஜய்சிங் ரஞ்சித்சிங் என்பவரே அந்த அரசர்.

1939 இல் சோவியத் யூனியனும் நாஸி ஜெர்மனியும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டன. உலகின் மிகவும் கொடூரமான கொலையாளி சர்வாதிகாரிகளான ஹிட்லரும் ஸ்டாலினும் போலந்து தேசத்தை கபளீகரம் செய்தனர். உலகம் முணுமுணுப்புகளுடன் அதை கடந்து சென்றது. போலந்தின் நிர்வாகம் நாஸிகளை அடைந்த போது விரைவில் ஆயிரம் குழந்தைகள் யூதர்கள், யூத வம்சாவளியில் வந்தவர்கள் என ஆயிரம் குழந்தைகள் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டனர். சோவியத் – நாஸி உறவின் பிணைப்பு அப்படி இருந்தது. போலந்தின் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த அதிபர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் கெஞ்சினார். இந்த குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுங்கள். அவர்களுக்கு புகலிடம் கொடுங்கள். சர்ச்சில் மனம் இரங்கவில்லை.

1942 இல் ஸ்டாலின் இந்த குழந்தைகளை சைபீரியாவிலிருந்தும் வெளியேற்றினார். கப்பலில் அனாதைகளாக ஆயிரம் குழந்தைகள். இந்தியாவின் பம்பாய் துரைமுகத்தை வந்தடைந்தது கப்பல். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துவிட்டனர்.

இதை அறிந்தார் ராஜா. அப்போது அவர் வைஸிராயின் போர் குழுவில் உறுப்பினர். தன்னுடைய சமஸ்தானத்தில் இந்த குழந்தைகளுக்கு அடைக்கல இல்லம் ஒன்றை ஏற்படுத்தி ஏற்பதாக கூறினார். செலவு தம்முடையதில்லை என்றால் பிரிட்டிஷாருக்கு பிரச்சனை இல்லை. தன் தலைநகரிலிருந்து 25 கிலோமீட்டர்களே தூரத்தில் இந்த அகதி குழந்தைகள் பாதுகாப்பாக வாழ , உறைவிடமும் உணவும் அளித்து கல்வி கற்க ஏற்பாடுகள் செய்தார் இந்த இந்திய அரசர்.

இந்த விடயங்களை நீங்கள் இணைய பக்கங்களில் இப்போது படித்திருக்கலாம். ஆனால் இதை சொல்லும் போது இவர் குறித்து பிறிதொரு விடயம் சொல்லப்படுவதில்லை. தெரியாததால் இருக்கலாம். தெரிவிக்க வேண்டாமென்பதாலும் இருக்கலாம்.

இந்த அரசர் எப்படிப்பட்டவர்? அவர் தீவிரமான இந்துத்துவர். உண்மையான இந்துத்துவர்.

இந்திய சமஸ்தான அரசர்கள் கூட்டமைப்பில் தலைவராக டெல்லி இந்து மகாசபையில் அவர் ஆற்றிய உரையிலிருந்து:

”ராஜபுத்திரர்களின் வரலாற்று தோற்றம் எதுவானாலும் இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் எப்போது நம் தர்மத்துக்கே முதலிடம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் இந்துக்கள். இந்து சமயத்துக்கு ஆபத்தென்றால் நானும் என்னைப் போன்ற எம் சகோதரரான இதர சமஸ்தான அரசர்களும் இறுதி வரை இந்து தர்மம் காக்க போராடுவோம். . … இன்று இந்திய மாகாணங்கள் தாக்கப்படுவது போலவே ஹிந்து தர்மமும் உள்ளேயும் வெளியேயும் எதிரிகளால் தாக்கப்படுகிறது. சமஸ்தான அரசர்கள் எல்லாவித தியாகங்களையும் செய்து இந்து தர்மத்தின் எதிரிகளை புறங்காண்போம்.”

சுதந்திர பாரதத்தில் இவர் சௌராஷ்ட்ர மாகாணத்தின் ராஜ பிரமுக் எனும் பொறுப்பில் இருந்தார், எனவே சோமநாத் ஆலய புனரமைப்பில் அவர் முதன்மை பொறுப்பில் இருந்தார். எனவே ஆலய புனரமைப்பு யக்ஞத்தின் யஜமான ஸ்தானம் அவருடையது. சோமநாத ஆலய புனருத்தாரணத்தை சர்வதேச அளவிலான ஆன்மிக மறுமலர்ச்சியாக அவர் கருதினார். உலகமே ஓர் குடும்பம் எனும் ஹிந்து தரிசனத்தை பிரகடனம் செய்யும் ஒரு தருணம். உலகெங்கும் அப்போதுதான் செயல்பட தொடங்கியிருந்த இந்திய தூதரகங்களின் அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். நீங்கள் இருக்கும் நாடுகளின் மண், அங்குள்ள நதி நீர், அங்குள்ள மரம் ஒன்றின் தளிர் கொம்பு ஆகியவற்றை அனுப்புங்கள். அவை சோமநாத புர ஆலய புனருத்தாரணத்தில் பயன்படுத்தப்படட்டும். சர்வதேச ஐக்கியமும் மானுட சகோதரத்துவமும் இங்கு மிளிரட்டும்.

பாரம்பரிய சடங்குகள் எதையும் அவர் மாற்றவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரில் காயங்களடைந்த மானுடம் அனைத்துக்கும் வைத்தீஸ்வரனாக மீண்டெழுந்த சோமநாத ஆலயத்தின் சிவபெருமானை கண்டார் ‘ஜாம்-சாகேப்’. அப்படியே அந்த மூர்த்தியை உலகம் தரிசிக்க விரும்பினார் அவர். ஆனால் பாரத பிரதமராக விளங்கிய பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு இது ரசிக்கவில்லை. மதம் சார்ந்த ஒரு விழாவுக்கு சர்வதேச இந்திய தூதரகங்களை பயன்படுத்துவதா? கண்டித்து கே.எம். முன்ஷிக்கு நேருஜி கடிதம் எழுதினார்.

ஜாம் நகர் அரசரின் வாழ்க்கையும் பார்வையும் உலகளாவியது. வேர் கொண்டிருந்ததோ இந்துத்துவத்தில். போலந்தின் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்த மனிதநேய வாழ்க்கை அவருடையது. சோமநாத சிவனின் ஆலய புனரமைப்பில் உலகனைத்தையும் ஒரே குடும்பமாக பார்த்த இந்துத்துவ பார்வை அவருடையது. இரண்டையும் பிரிக்க இயலாது. ஒன்று மற்றொன்றைச் சார்ந்தது. இன்று நமக்கு தேவையும் இதுவே.

இது குறித்த எனது விரிவான ஆங்கில கட்டுரை இங்கே.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

One Reply to “யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்”

  1. Gandhi beleived in Hinduism.While dieing he said Hey Ram. Similarly Nathuram Gotse doesnot want mixing Hinduism with other religiens. Please remember Naukali incidence .Gandhi was responcible. Thousands of Hindus butchered. On the incistance of Md Ali Jinna Pakistan was born. Nehru conseded for for the partition. When Sardhar Patel was trying to capture the Pakisthan occupied Kashmir Mr.Nehru prevented it. People should know this . School boys should be made to learn real history of India. When I went to Allahabad to see the Anandha bhavan Locals did not want me to visit Nehru’s residence I was prevented by the locals. It was unfortunate Sardhar Patel could not become the PM of India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *