சர்க்கஸில் கோமாளிக் கூத்துகள் கண்டிருப்போம். அவற்றை எல்லாம் விஞ்சிவிட்டன கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியலும் அங்கு நடத்தப்படும் ஆட்சிக்கவிழ்ப்பு நாடகங்களும். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த தேவே கவுடாவின் கட்சியும் காங்கிரசும் திரைமறைவில் நடத்திய சதிகளைக் கைவிட்டுவிட்டு, நேரடியாகவே களமிறங்கி நடத்திய கூத்துக்கள் நமது மக்களாட்சி முறையின் அவலங்களை வெளிச்சம் போட்டன. அவற்றை கவுடா பாணியிலேயே முறியடிக்க எடியூரப்பா நடத்திய எதிர்வினைகளும் கண்டிப்பாக பாராட்டத் தக்கவை அல்ல.
அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே கர்நாடகா அரசியல் நிலவரம் சரியில்லை. முதல்வர் எடியூரப்பா மீதான அதிருப்தியில் இருந்த 14 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், ஆட்சியை ஆதரித்த 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திடீரென மாயமானார்கள். உடனே மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க. பலவகைகளில் முயன்றது.
ஒருவழியாக, அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஸ்ரீராமுலுவை தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் அவரது கோரிக்கைகளை கேட்டனர். ஸ்ரீராமுலுவோ, எடியூரப்பா பதவி விலகாமல் சமரசம் சாத்தியமில்லை என்றார். அப்போதுதான், கவுடா கட்சி ஆதரவில் சென்னை ஓட்டலில் அதிருப்தியாளர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் எடியூரப்பா ஆட்சிக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அதிருப்தியாளர் குழுவில் இருந்த இரு அமைச்சர்களை பதவிநீக்கம் செய்தார் எடியூரப்பா.
224 பேர் கொண்ட கர்நாடகா சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் (சுயேச்சைகள் உள்பட) 123 ஆக இருந்தது. இதில் 19 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனிடையே அதிருப்தி பா.ஜ.க.வினரை மதச்சார்பற்ற ஜனதாதளமே இயக்குவது வெளிப்படையாகத் தெரிய வந்தது. சென்னை, மகாபலிபுரம், கோவா என்று பல இடங்களுக்கு அதிருப்தி பா.ஜ.க.வினரை அழைத்துச் சென்ற ம.ஜ.தளம் கட்சியினர், அவர்களுக்கு தேவையான அனைத்து உல்லாச ஏற்பாடுகளையும் செய்தனர். கோவாவில் அவர்களை நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கோவா காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.களுக்கு விலை (ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ. 50 கோடி) நிர்ணயிக்கப்பட்டது. அதன் முடிவில், அதிருப்தியாளர்கள் இருவர் பெங்களூர் சென்று, ஆளுநர் பரத்வாஜிடம், அதரவு வாபஸ் கடிதத்தை அளித்தனர்.
இதற்காகவே காத்திருந்த ஆளுநர், கர்நாடகா சட்டசபையில் அக். 11 ம் தேதிக்குள் பலத்தை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பத்து நாட்கள் முன்னதாகவே ஆளுநர் மாளிகையில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டி இருந்தனர். இதுகுறித்த பத்திரிகை செய்திகளை இவர்கள் மூவரும் மறுக்கவே இல்லை.
ஆளுநரின் உத்தரவை அடுத்து எடியூரப்பாவும் அதிரடியில் இறங்கினார். தனது அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற அனைவருக்கும் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பிய அவர், கட்சித்தாவல் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டசபை சபாநாயகர் போப்பையாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே சபாநாயகருக்கு பிரத்யேகக் கடிதம் எழுதிய ஆளுநர், ”சட்டசபையில் யாரையும் பதவிநீக்கம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார். இது சபாநாயகரின் உரிமையில் தலையிடுவதாகும் என்று பா.ஜ.க.வும் சபாநாயகரும் கண்டித்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க ஒப்புக்கொள்ளாத அமைச்சர் ஸ்ரீராமுலுவும், இரு எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வுக்கு திரும்பினர். மற்றவர்கள் வேறெங்கோ அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரையும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேரையும், ஆளுநரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தனது ‘வானளாவிய அதிகாரத்தைப்’ பயன்படுத்தி, கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர் போப்பையா (அக். 9 ).
இதன்மூலம், கர்நாடகா சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 ஆகக் குறைந்தது. இதில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை 106 என்பதால் நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி உறுதியானது. அக்.10ம் தேதி நடந்த குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா ஆட்சி தப்பியது. அதற்கு முன்னதாக பதவி நீக்கம் செய்யப்பட எம்.எல்.ஏக்களும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் நடத்திய ரகளையால் மாநிலத்தின் மானம் கப்பலேறியது.
மீனுக்கு காத்திருந்த கொக்கு போல, உடனடியாக கர்நாடகா அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். ஆளுநர் பரத்வாஜ். ஆனால், எதிர்க்கட்சியினரின் பித்தலாட்டம் மாநிலத்தில் பரவலாக வெளிப்பட்டிருந்த நிலையில் எடியூரப்பா ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு தயங்கியது. தவிர, பதவிநீக்கம் செய்யப்பட 16 எம்.எல்.ஏக்களும் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பைப் பார்த்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு பொறுமை காத்தது.
இதனிடையே மத்திய அரசின் கட்டளையை அடுத்து, மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை ‘ஓட்டெடுப்பு முறையில்’ நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார். அதை ஏற்று, அக். 13ல் மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா. அதற்குள் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சியினருக்கு, வழக்கு விசாரணையை அக். 18க்கு ஒத்திவைத்து, முகத்தில் கரி பூசியது உயர்நீதிமன்றம்.
நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் அளிக்கப்படும் தீர்ப்பு, எடியூரப்பா அரசுக்கு சோதனையாகவும் இருக்கலாம். நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பிறகே கட்சித்தாவல் சட்டம் பாய முடியும் என்பது காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் வாதம். ஆனால், யாரையும் பதவிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உரிமை உள்ளது என்கிறது பா.ஜ.க.
பத்து நாட்களுக்கு மேலாக நாட்டு மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த கட்சித்தாவல் நாடகங்களுக்காகவே சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எடியூரப்பா நிலைப்பாடு. இரண்டு தரப்பினரும் தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் சிக்கலான விஷயம், 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் பற்றியது அல்ல. அரசுக்கு ஆதரவளித்த 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பதவி நீக்கியது நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்படலாம். அப்போது, மூன்றாவது முறையாக சட்டசபையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியிருக்கலாம்.
இடையில் தன் தரப்பிலும் சில எம்எல்ஏக்கள் கட்சி மாற திகைப்பில் ஆழ்ந்த காங்கிரஸ், எடியூரப்பா ஆட்சியை நீக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் அட்டூழியத்தை அவர்கள் பாணியிலேயே கிள்ளும் எடியூரப்பாவுக்கு வலுத்துள்ள மக்கள் ஆதரவைக் கண்டு மத்திய அரசு மிரண்டது. ஏற்கனவே தவறான அரசியல் நடவடிக்கைகளால் காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமைதி குலைந்திருக்கும் நிலையில், கர்நாடகாவிலும் கைவைத்து பாடம் கற்க பிரதமர் மன்மோகன் சிங் தயாரில்லை. தேன்கூட்டைக் கலைத்தவன் கதை ஆகிவிடக் கூடாது என்று மத்திய அரசு மௌனம் காத்தது. தவிர உயர்நீதிமன்ற விசாரணையில் வெளியாகும் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கும் என்று மத்திய அரசு கருதியது.
இந்நிலையில் அக். 18ல் உயர்நீதிமன்ற பென்ச் அளித்த தீர்ப்பில் இரு நீதிபதிகளும் எதிரெதிராக தீர்ப்பளித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால், பதவிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் நிலை குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. எடியூரப்பா மீதான் அதிருப்தியால் எதிரணிக்கு விசுவாசமாக மாறிய பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு ஆதரவாகத் திரும்புவதாக அறிவித்தனர். அதை கட்சி நிராகரித்தது.
நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் கரம் வலுப்பெற்று வந்த நிலையில், பா.ஜ.க.வின் தொடர் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க, வருமான வரித் துறையை ஏவியது மத்திய அரசு. பா.ஜ.க. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், ஸ்ரீராமுலு மற்றும் சில எம்.எல்.ஏக்களின் வீடுகளில் அக். 26ல் திடீர் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினரை சொல்ல வைத்தது. ஆனால், இதுவரை சோதனைக்கு உள்ளானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்தே அந்த சோதனை, பா.ஜ.க.வை மிரட்டவே நடத்தப்பட்டது உறுதியாகிறது.
வருமான வரித் துறையை சொந்த லாபங்களுக்காக காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவது புதிதல்ல. வழிக்கு வராத கூட்டணிக் கட்சியினரைக் கட்டுப்படுத்தவும், எல்லை மீறும் சொந்தக் கட்சியினரைக் கட்டுக்குள் வைக்கவும், அரசுக்கு எதிரான அதிகாரிகளை கேவலப்படுத்தவும், பிரபலங்களை கட்சியில் சேருமாறு நிர்பந்திக்கவும், வருமான வரித் துறையை வேட்டை நாயாக காங்கிரஸ் பயன்படுத்தி வந்துள்ளது. அண்மையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல் அம்பலமானவுடன், குற்றவாளிகளை விட்டுவிட்டு, 20 லட்சம் மதிப்பிலான பணியைச் செய்த பா.ஜ.க. பிரமுகர் சுதான்ஷு மிட்டல் வீட்டில் சோதனை நடத்தி பிரச்னையை திசை திருப்பியது மத்திய அரசு. அதே நாடகத்தை கர்நாடகத்திலும் அரங்கேற்றினார், ‘மிஸ்டர் கிளீன்’ மன்மோகன்.
இதனிடையே, தற்போது (அக். 29 ), பெங்களூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கர்நாடகா அரசைக் கவிழ்க்க சதி செய்தவர்களுக்கு சாட்டையடியாக வந்துள்ளது. சட்டசபைக்கு வெளியே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதைக் கொண்டு அவர்களை பதவியில் இருந்து சபாநாயகர் நீக்கியது சரியே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், எடியூரப்பா அரசு தப்பியுள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பு வெளியானாலும் கூட, இனிமேல் ஆட்சி கவிழும் நிலை ஏற்படாது. இந்தத் தீர்ப்பால், தேவே கவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் ஆடிப் போயிருக்கிறார்கள். மத்திய அரசு கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறது. மொத்தத்தில், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை முறியடித்து நாடு முழுவதும் பிரபலம் ஆகியிருக்கிறார் எடியூரப்பா.
ஆயினும், பா.ஜ.க.வின் வெற்றி சற்று நெருடலாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. நமது மக்களாட்சி முறை எவ்வளவு தூரம் சீரழிந்துள்ளது என்பதற்கான சான்றாக கர்நாடகா விளங்குகிறது. நல்லாட்சி நடத்த எண்ணுபவரும் கூட, இந்த சாக்கடை அரசியலில் எதிரிகள் மட்டத்துக்கு தரமிழந்து போரிட வேண்டியிருப்பது காலத்தின் கோலம் தான். சதிகளை சதிகளால் தான் வெல்ல முடியும் என்று எடியூரப்பா நிரூபித்திருக்கிறார். ஆனால், ‘ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்க மாட்டேன்’ என்று சொன்ன (1998 ) அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கிடைத்த நற்பெயர் எடியூரப்பாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
எனினும், எதிரிகளின் சதிக்கு எதிராக நேர்மைத் தத்துவம் பேசிக் கொண்டிருந்திருந்தால், இந்நேரம் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்து பதவிப் பித்தர் குமாரசாமியின் ஆட்சியோ, மத்திய அரசின் கைப்பாவையான பரத்வாஜின் ஆட்சியோ அங்கு வந்திருக்கும். அப்போது, ஆட்சியைக் காக்கத் துப்பில்லாத கட்சி என்று ஊடகங்கள் புழுதி வாரித் தூற்றி இருக்கும். மக்களும் கூட, ஆட்சியைக் காக்கும் திறனற்றவர் என்று எடியூரப்பா மீது நம்பிக்கை இழந்திருப்பர். அந்த நிலை வாராமல் எடியூரப்பா காத்திருக்கிறார். பா.ஜ.க.வின் அரசியலில் தூய்மை என்ற தத்துவம் நிலைகொள்ள இன்னும் பல்லாண்டு காலம் பொறுத்திருக்க வேண்டும் என்பதையும் அவரது வெற்றி காட்டி இருக்கிறது.
வெற்றி பெற்றவருக்கே உபதேசம் செய்யும் தகுதி வாய்க்கிறது. மகாபாரத்தில் கண்ணன் காட்டிய வழி, அதர்மத்தை அதன் வழியிலேயே தோற்கடிக்கலாம் என்பது தான். இப்போதைக்கு பா.ஜ.க. கர்நாடகாவில் அதை செய்து காட்டி இருக்கிறது. ஆனால், ராமராஜ்யமே பா.ஜ.க.வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதை இந்நேரத்தில் பா.ஜ.க.வுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
நன்றி சேக்கிழான்! நல்ல கட்டுரை!
நேர்மையானவர்களை நேர்மையாக வெல்லுதல் வஞ்சகமானவர்களை வஞ்சகத்தால் வெல்லுதல் என்பது கண்ணன் காட்டிய வழி. இத்தாலிய வெள்ளை சர்ச் நரிகளுக்கும் அவர்களுடன் இனைந்து ஆடிய கோவேறு கழுதைகளுக்கும் எடயுரப்பா மற்றும் நிதிமன்றம் சுவையாக புகட்டிய பாடம் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொரிக்க தக்கது. அரசியல் சாக்கடையில் நீந்த கற்றுக்கொண்ட பா ஜ கா வுக்கு சபாஷ்.
எந்தக் கட்சிக்கும் சரியான மெஜாரிட்டி இல்லாததால்தான் இப்படிப்பட்ட குழப்பங்கள் நேரிடுகின்றன.கவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது.இதற்கு முன்பும் சில மாநிலங்களில் இந்த அவலங்கள் நடந்தன.எதிர்காலத்தில் இன்னும் பல குட்டி மாநிலங்கள் வரும்போது (inevitable) இந்தப் பிரச்சினை இன்னும் பெரிதாக வளரும்.இதற்க்கு அரசியல் சட்டத்தை திருத்தி அமெரிக்காவில் உள்ளது போல் ஆட்சிமுறை கொண்டுவருதலே சிறந்தது.ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு இப்படிப்பட்ட அரசியல் வாதிகள் முன்வரமாட்டார்கள்!
எல்லாம் சரி . ஆனால் இன்று இந்தியா உள்ள நிலையில் ராமபிரான் பாதை நமக்கு சரி வராது. கிருஷ்ணா பரமாத்மாதான் சரி
there is no strong media support or own media for our hindus in south india or in south indian languages. no good media asks or arise critiques on Mr.Manmohan effectively or analyse the UPA Govt.’s mistakes and activities as they are already boot cleaners of Raul. Why not BJP or such strong Hindu supported party should start a TV Channel or Strong Media that reaches mainly remote areas of Andhra,Tamilnadu and especially Kerala-TN Border??? Also young and charismatic leaders like Varun Gandhi must plan a long tour in and around TN and Andhra.
எட்டியூரப்பாவைக் குற்றம் சொல்பவர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும். இந்துக்கள் இளிச்சவாயர்கள் என்ற பொதுக்கருத்தை மாற்ற சில அணுகுமுறை மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்.
ஆயுதங்களைக் கொண்டு செல்லாமால் அப்சல்கானைத் தம் புலிநகங்களாலேயே கீறிக்கிழித்த சிவாஜி மஹராஜ் வஞ்சகமானவரா?
ஸ்ரீ கார்த்திக் வாலி, மாரிசன், ராவணன் இவர்கள் அனைவரையும் ஒரு போல ராமபிரான் வதம் செய்யவில்லை. அவரவர் வீரம் மற்றும் வஞ்சக தன்மையை பொறுத்து வதத்தின் விதம் வேறு பட்டது. இன்றைய ஹிந்துக்களின் கீழ் நிலைமைக்கு நேற்றைய ஹிந்து அரசர்கள் மிலேச்சர்கள் மற்றும் புல்லுருவிகளுக்கு காட்டிய தயவும் ஒரு காரணம். எதிரியை எதிரியின் போக்காலேயே எதிர் கொள்வது புத்திசாலி தனம். உயர் நிதிமன்ற தீர்ப்பு வரும் வரை வெள்ளை சர்ச்சுக்கு வால் பிடிக்கும் மீடியா பா ஜ கா வை தூற்றி அடித்த கூத்து செம காமடி. இப்படி ஒவ்வொரு ஊடக சக்திகளும் ஹிந்து சக்திகளை மட்டம் தட்ட தட்ட இவர்களின் விலா எலும்பு முறியும் படி திறமை வாய்ந்த மீடியாவை நிறுவ எத்தனிக்க துணியாது இது போல் நம் கருத்துகளை சில நூறு பேர் படிக்கும் இணைய தளத்தில் பதிவு செய்து பிறகு நாம் குறட்டை விட போய் விடுவது அதை விடவும் பெரிய காமடி. அந்த எல்லாம் வல்ல ராம பிரான் திறமை மற்றும் சக்தி வாய்ந்த ஹிந்து சார்பு மீடியாவை நிறுவ ஹிந்துக்களுக்கு புத்தி மற்றும் சாதுரியம் வழங்க வணங்குகிறேன்.
what a stupid article supporting Yediyurappa activities.. itharku Bhagavad gitai merekole veru…. what’z your opinion on Operation Lotus… Reddy’s brothers bellariyil nadathatha atharmama.. antha atharmathai kakum thalaivanaka yeduyarappa… first as an true hindu we need to cleanse ourself later we can point others to clean…
காங்கிரஸ் எதிர்க்கட்சி அரசுகளைக் கலைப்பதை ஒரு கலையாகவே மாற்றியிருக்கிறது.
பாஜக நேர்மையான அரசியலைத் தர வேண்டும் என்றாலும், இதில் தோற்றுப் போனால் புலி மீதிருந்து இறங்கியது போலவாம்.
மீண்டும் தலை தூக்கவே முடியாத படி காங்கிரசும்,குமாரசாமி கும்பலும் செய்து விடும்.
எதிராளி எந்த ஆகிரமத்துக்கும் துணிந்தவராக இருக்கும் போது,அல்லது தர்மம் என்ற வார்த்தையின் அர்த்தமே தெரியாமல் இருக்கும் போது, அல்லது அவர்களை தப்பிக்க விட்டால் சமுதாயத்துக்கே ஆபத்து எனும்போது சிறிது இவ்வாறு செய்துதான் ஆக வேண்டும்.
பிறகு தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும்.
பாம்பின் விஷத்தை முறிக்க அதையே உபயோகப் படுத்துவது போல.
நம்ம ஊர் திராவிடக் கட்சிக்கும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் பங்கு இருந்ததாக பேசப்பட்டது.
வாடிகனும் விளையாடியதாகக் கேள்வி.
எனவே ஹிந்து விரோத சக்திகளை சாதுர்யமாக முறியடித்த எட்டியூரப்பாவைப் பாராட்டத் தான் வேண்டும்.
இதை படிக்கும் பொது சுஜாதாவுடைய
பதவிக்காக நோவல் தான் நீயாபகம் வருகிறது
காங்கிரசின் கலாச்சாரம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது. அவர்களது முதல் பலி ஈ.எம்.எஸ்.நம்பஊதிரிபாடு. பின்னர் பற்பல ஆட்சிகள். இவர்கள் பேசுவது ஜனநாயகம், செய்வது ஜனநாயக படுகொலை. இதில் புதிய இணைப்பு குமாரசாமியும் அவரது அருமை தந்தையும். இவருக்கு பிரதமர் பதவி போனதிலிருந்து ஒரே குறி யாரையாவது கவிழ்த்து அதில் இன்பம் காண்பது. கவர்னர் என்ற பதவி கௌரவமானது. அதில் சிறு கறைகூட படக்கூடாது என்று பலரும் நினைப்பார்கள். எத்தனை பெரியோர்கள் அலங்கரித்த பதவி அது. அதில் கர்நாடகாவில் இப்போது ஒருவர். நினைக்கவே குமட்டுகிறது. இப்படியா அசிங்கமாக நடந்து கொள்வார்கள். “நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைந்து விட்டால்” . கம்ப ராமாயணத்தில் ராவணன் அவையில் கும்பகர்ணன் சொல்வான் “பேசுவது மானம், பேணுவது காமம்” என்று. இங்கு பேசுவது “ஜனநாயகம், பேணுவது ஜனநாயகக் கொலை”.
ஹிந்துக்களுக்காக என்று ஒரு தனியாக புதிதாக பத்திரிகையோ T V சேனலோ ஆரம்பிப்பதைவிட already பிரபலமாக உள்ள பத்திரிகையையோ T V சேனலையோ வாங்குவது சரியாக இருக்கும். Existing readership and viewership ஒரு asset.
சூழ்ச்சியை புரிந்து கொண்டு அதே சூழ்ச்சியால் எதிரியை வீழ்திய எடயுராப்பா பாராட்ட்க்கு உரியவரே ,அதே நேரத்தில் கட்டுரையில் சொன்னபடி ராமராஜ்யம் என்பதே இலக்காக இருக்கவேண்டும் .
ஜெய் பவானி
வந்தே மாதரம்
பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்
The rebel group leader name is renukacharya not sriramulu.Sriramulu is close associate of reddy.But as pointed out renukacharya returned back.He is now the exercise mister in state.
Murali –
what a stupid article supporting Yediyurappa activities.. itharku Bhagavad gitai merekole veru…. what’z your opinion on Operation Lotus… Reddy’s brothers bellariyil nadathatha atharmama.. antha atharmathai kakum thalaivanaka yeduyarappa… first as an true hindu we need to cleanse ourself later we can point others to clean…
My Reply :
What is operation Lotus ? BJP lack the numbers in the assembly after the elections in 2008. To increase the numbers, Operation lotus was conducted. Whoever (legislators) wishes to come to the BJP from Congress or JD (S) were invited to the party fold. Those who accepted Operation Lotus resigned their MLA positions, recontested in the BJP party ticket and got re-elected to the assembly. This has to be conducted to get majority in a fractured mandate. What is wrong in it ? Tell me which political party is very ideal in India ? BJP is getting the very first chance to rule a south indian state and these operations may be termed “immoral”. These are absolute neccesities to come to power and the important reason for this is “Fractured mandate”.
Congress embraces every other party in any state to keep BJP out of power. Is this Moral or ethical ?
Murali –
Reddy’s brothers bellariyil nadathatha atharmama
Why don’t you put your point clearly. Reddy brothers are into mining business in Andhra Pradesh- karnataka border. Most of their business is in A.P. They were small time miners 4 years ago. Due to the sudden increase in demand during Beijing olympics, the Iron ore price has increased enormously and they had a good profit in their business. Now they are building a large steel plant in Andhra. Now the export of iron ore is a normal business.
Why don’t you blame the Marans with your “nadathatha atharmama”. They too are businessmen getting helped by the ruling establishment. They buy all the movies in Kollywood, they own TV channels in all south Indian languages. Do you mean their business is illegal or legal.
Why don’t Congress party use all it’s mighty power in Andhra to put the Reddy’s behind bars if they are doing illegal business.
Yeddyurappa government banned iron ore exports recently (few months before). Those who went to the court for lifting the ban are all Congress and JD(S) party men only. Reddy brothers did not want the ban to be lifted.
Murali –
first as an true hindu we need to cleanse ourself later we can point others to clean
Let us all work for cleansing the politics in whole of India. Why blame BJP for the bad state of politics in India. Congress party is the “Mother of corruption”, sorry “god of corruption”.
If we wait to cleanse politics, then BJP will never come to power.
நான் இந்து என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுகிறேன். குஜராத்தில் மோடி . இங்கே இடியுரப்பா. வரும் தேர்தலில் சொல்வோம் நாம் யார் என்று.
ஒரு பழமொழி; உனக்கு ஒரு கண் போனா எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்;
குமாரசாமி போன்றே அயோகியர்களை தடுக்க சிறு தவறுகளை செய்வது தவறாகாது. குமாரசாமியும் காங்கிரஸ் சேர்ந்து காமராஜர் ஆட்சியா நிறுவ போகிறார்கள்? இந்த அயோகியர்களுக்கு பாஜக பல்லாயிரம் மடங்கு மேல். அதுமட்டும் இல்லாமல் குமாரசாமியும் காங்கிரஸ் சேர்ந்து அரசை கலைக்க நினைத்ததை பாஜக தடுத்தது. இதில் என்ன தவறு. மக்கள் ஒட்டு போட்டு தானே பாஜக ஆட்சியை தேர்தெடுத்தார்கள். அதை காப்பது பாஜகவின் கடமை. அதை காப்பற்ற தவறினால் அது பாஜக செய்த துரோகமாக இருக்கும். பிறகு மக்கள் அவர்களுக்கு ஓட்டே போட மாட்டார்கள். இந்த பிரச்சனையை காங்கிரஸ் வழியிலேயே பொய் அவர்கள் வாயில் மண்ணை போட்ட எடயுராப்பா மற்றும் ரெட்டி சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த விஷயத்தால் பாஜக மக்களிடம் கெட்ட பெயர் வாங்கி விட்டது என்று யாரும் நினைக்கே வேண்டாம். மேலும் ரெட்டி சகோதர்கள் ஊழல் ஒரு பொருட் கிடையாது. ஊழல் பற்றி மக்கள் நினைத்து பாஜகக்கு ஒட்டு போட மாட்டார்கள் என்று யாரேனும் நினைத்தாள் அது கடைந்து எடுத்த முட்டாள்தனம். எங்களுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கு. 100000 கோடி ஊழல் செய்த ராஜா வெற்றி பெரும் பொழுது நாங்களும் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்
மிகவும் அபத்தமான கட்டுரை. அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு ஓசன்னா பாடுவதன் நோக்கத்தில், மற்றவரை வசை பாடியதாகிவிட்டது. அடல் பிஹாரி வாஜ்பாயி, பிரதமரானது, அவர், “சோனியா காந்திக்கு ஆட்சேபனையில்லை’ “சோனியா காந்தி ஒத்துக்கொண்டார்’ என்பதனால் ஏற்பட்டது. மேலும், அடல் பிஹாரி வாஜ்பாயியின், வைகோ மற்றும் ஜார்ஜ் பெர்னான்டெஸ் மீதிருந்த அளவுக்கதிகமான நம்பிக்கையினால்தான், சூழ்ச்சியினால்தான், ராமர் பாலம் இடிக்கும் திட்டம் கொடியசைத்து, ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அது சரி. பா.ஜ.க தான், இந்த விளையாட்டை தன்னுடைய ஆபரேஷன் கமலா என்ற பண விளையாட்டின் மூலம் தொடங்கியது என்பதை தெளிவாக மறைத்து விட்டதன் காரணம் என்னவோ.? இது என்ன கண்ணன் விளையாட்டா அல்லது ராமன் விளையாட்டா ????
ஆபரேஷன் கமல் என்பது பணத்தை வைத்து செய்யவில்லை.
நல்ல ,நேர்மையான, நிலையான ஆட்சி தர, வெளிப்படையாக ஆதரவு கேட்கப்பட்ட ஒன்றுதான்.
நண்பர் திரு ஹரிக்கு நன்றி/ பிழைத் திருத்தம்.
கர்நாடக பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்ட அதிருப்திக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ரேணுகாச்சார்யா தான்; ஸ்ரீராமுலு அல்ல. இந்தத் தவறை சுட்டிக்காட்டிய நண்பர் திரு ஹரிக்கு நன்றி.
இக்கட்டுரையில் மூன்று இடங்களில் இந்தப் பிழை வந்துள்ளது:
//ஒருவழியாக, அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஸ்ரீராமுலுவை தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் அவரது கோரிக்கைகளை கேட்டனர். ஸ்ரீராமுலுவோ, எடியூரப்பா பதவி விலகாமல் சமரசம் சாத்தியமில்லை என்றார்//
//இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க ஒப்புக்கொள்ளாத அமைச்சர் ஸ்ரீராமுலுவும், இரு எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வுக்கு திரும்பினர்//
மேற்படி இடங்களில் (ஸ்ரீராமுலு என்பதற்கு பதிலாக) ரேணுகாச்சார்யா என்று திருத்திக்கொள்ளுமாறு தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவை கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறுக்கு எனது கவனக் குறைவே காரணம். அதற்காக வருந்துகிறேன்.
நன்றி.
-சேக்கிழான்
எடியூரப்பா இனி நீங்கள் ஹெட் யூப்பா .வாழ்த்துக்கள்.
………………………………………………………….ஈஸ்வரன்,பழனி.
முதல்ல இந்த நல்லவன் வேஷம் போடறத முதல்ல விடுங்க சார்.. அரசியல்ல நல்லது கெட்டது பார்க்கக்கூடாது.. தர்மம் அதர்மம்தான் பார்க்கணும்.. அதுல கூட, அதர்மத்தை அதர்மத்தால் வெல்லனும்..
நம்ம நாடு ஆயிரம் ஆண்டு காலம் அடிமை பட்டுக் கிடந்ததற்கு முதற் காரணம், காட்டுமிராண்டிகளுக்கு நாம் யுத்த தர்மத்தை கடைபித்ததுதான்.. ஷத்திரியர்களால, காட்டுமிராண்டிகளின் அளவுக்கு இரங்கி வர முடியவில்லை.. வெறும் வெத்து கௌரவத்திலேயே வாழ்ந்துவிட்டார்கள்..
கடைசியில், கட்டுமிராண்டிகளின் வழியிலேயே திருப்பி பதிலடி தர மாவீரர் சிவாஜியினால் மட்டுமே முடிந்தது.. சொல்லப்போனால், முகலாயர்களின் வஞ்சகத்தை அவர்களை விட அதிக வஞ்சகத்தால் முறியடித்ததும், கொரில்லா யுத்த முறையை உருவாக்கி முகலாயர்களை சின்னாபின்னமாக்கியதும் வரலாற்றில் இந்து சமுதாயத்தின் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம்.. இதையில்லாம் புரிந்து கொள்ள சிவாஜியின் சுய வரலாறை படிக்கவேண்டும்..
சரி.. விஷயத்துக்கு வருவோம்.. சாணக்கியர் பண்ணியது நூறு சதவிகிதம் சரி என்று ஒத்துக்கொள்ளும் உங்களால், எடியூரப்பாவை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. எதற்கு ஒரு தெவையில்லாத அறிவுரை கட்டுரை முடிவில் நுழைத்திருக்கிறீர்கள்..
ராம்ராஜ்யம் த்ரேதாயுகத்தில் மட்டுமே சாத்தியம்.. என்னை பொறுத்த வரையில் இன்றைய நிலைமைக்கு தகுந்த ஆட்சி முறை வேண்டும்.. அது சாணக்கியரின் ஆட்சியாக இருக்கட்டும்..
மத்தியில் உள்ள சில பா.ஜ.க தயிர் வடை தலைவர்கள் (அத்வானி போல), நான் நல்லவன் நான் நல்லவன்னு சொல்றத விட்டுட்டு, ஆட்சிய பிடிக்கறதுக்குண்டான வழிய பார்க்கசொல்லுங்க..
என்னை பொறுத்தவரையில பா.ஜ.க வில் மோடிதான் முதல் சகல கலா வல்லவன்.. அதற்கு பின், எடியூரப்பாதான் எதற்கும் துணிந்த தலைவராக தெரிகிறார்..