சக்கரவர்த்தியின் மனைவி

 

பெங்களூரில் இருந்து மெட்ராஸ் போகிற வழியில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்கிற ஊர் ஒன்று இருக்கிறது. இப்போதும் ரயிலில் பிரயாணம் செய்யும் போது இந்த ஊரில் சில வினாடிகள் ரயில் நின்று விட்டுச்  செல்லும் போது பார்க்கலாம். இந்த ஊருக்கு அருகே உள்ள லட்சுமிபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தவள் அவள். பெயர் அலர்மேலு மங்கம்மாள் (1887 – 1916). சுருக்கமாக அலமேலு என்றோ மங்கா என்றோ அழைப்பார்கள். பெயரும் ஊரும் லட்சுமிகரமாக இருந்தாலும் அவள் பிறந்த குடும்பம் என்னவோ ஏழைக் குடும்பம்.

ங்காவின் தந்தையார் திருமலை சம்பங்கி அய்யங்கார் ஊர் ஊராகச் சென்று ஹரி கதைகள் சொல்லுபவர். இப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மங்கா தான் ராஜாஜி என்று நாடே புகழும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் மனைவி.

ராஜாஜி - இள வயதில்

ங்கா” வாகிய அலர்மேலு மங்கம்மாளுக்கும், ராஜாஜி ஆகப்போகிற “ராஜனுக்கும்” திருமணம் நடக்கும் போது, பிள்ளைக்கே இருபது வயது கூட ஆகவில்லை. பெண்ணுக்கு பத்து வயது தான். அக்கால கட்டத்தில் ராஜனது குடும்பம் மங்காவின் குடும்பத்தை விட சற்றே வசதி ஆனது என்றே சொல்ல வேண்டும். வசதி என்றால் இந்த காலத்தில் பார்க்கிற வசதி எல்லாம் இல்லை. ஏனெனில் வரலாற்றில் பதிவாகி உள்ள கொடுமையான பஞ்சங்களிலும் மோசமானது என 1876 முதல் 1878 வரை இரு ஆண்டுகள் நிலவிய பஞ்சத்தைச் சொல்லலாம். அப்போதையை வைஸ்ராய் லார்ட் லிட்டன், இந்தப்  பஞ்சத்தில் பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், கொள்ளை நோய் என்று பலவகையிலும் 1,36,941 மரணங்கள் சேலம் ஜில்லாவில் மட்டுமே நிகழ்ந்ததாகப்  பதிவு செய்திருக்கிறார். அதன் பிறகு வந்த வருடங்களில் நிலைமை சற்று சீரானது என்றாலும் மக்கள் பெரும்பாலும் வறுமையிலேயே இருந்தனர்.

ராஜாஜியின் தகப்பனார் வேங்கடார்யா என்று பெயர். ஆனால் அவரை சக்கரவர்த்தி அய்யங்கார் என்றே அழைப்பார்கள். அவர் ஓசூரில் முன்சீப்பாக மாதம் ஐந்து ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தார். இந்த பதவியில் வருமானம் ஒன்றும் இராது, கௌரவம் தான்.  அதனால் வீட்டில் கடும் சிக்கனத்தைக் கடை பிடிப்பாராம். ஒரு சமயம் சிக்கனம் எல்லை மீறிப் போக, ராஜாஜியின் தாயார் தன் நகைகள் அனைத்தையும் துறந்து அவர் முன் வந்து அவருக்கு “அதிர்ச்சி வைத்தியம்” கொடுத்தார்களாம். வறுமை, அதனால் சிக்கனம் என்று அவர்கள் வாழ்க்கை ஒட்டினர். அதே சமயம் வெறும் பணம் வருவாய்க்காக வெள்ளையரிடம் வேலை பார்த்தார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அக்காலங்களில் அரசு ஆள்பவர், வெள்ளையாராக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, அரசரிடம் விஷ்ணுவின் அம்சம் இருப்பதாகவே மக்கள் நினைத்தார்கள். அதனால் அவர்களிடம் அண்டி வேலை பார்ப்பது தவறல்ல என்று நினைத்தார்கள்.

ப்படி அரசு அதிகாரியின் பிள்ளை என்று கனமான கௌரவம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ராஜாஜி, தன் தாயின் பிறந்த ஊரில் இருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஏழைக் குடும்பமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மங்காவைத் திருமணம் செய்து கொள்ள எண்ணினார். அதன்படி லட்சுமிபுரத்தில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் போது, “பெண்” பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டது. பெண்ணைப் பிடித்துப் போக, 1897-ம் வருடம் குப்பம் கிராமத்தில் அக்கால வழக்கப்படி ஐந்து நாள் விமரிசையாக ஆனால் அடக்கமாக திருமணம் நடந்தது. திருமணம் ஆனபின்னும் இன்னும் குழந்தையாகவே இருந்த பெண், அவள் பெற்றோருடனேயே வசித்தாள். பிள்ளையோ சட்டம் படிக்கச்  சென்னைக்குப்  போய் விட்டார். சென்னையில் சட்டப்படிப்பில் ஸீ.ஆர் (ராஜாஜி) தேறி, வக்கீலாகவே ஆஜராகும் நிலை அடைந்த நிலையில் மங்கா, தன் கணவர் வீட்டைத் தனது பனிரெண்டாவது வயதில் சேர்ந்தாள். அடுத்த வருடம் அவளது பதிமூன்றாவது பிறந்தநாளைக்கு மறுதினமே ஓர் ஆண் குழந்தை பிறந்து விட்டது. கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார்கள். அடுத்து இரு ஆண்டுகளுக்குள்ளேயே இன்னொரு பிள்ளை ராமசாமி பிறந்தான். அவ்வளவு சின்ன வயதில் பிள்ளை பெறும், பிரசவ வேதனைகளை தன் மனைவி அனுபவித்ததை எண்ணி எண்ணி, வாழ்நாளெல்லாம் தன் மனது குடைவதாக ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜாஜி காந்தியுடன்

க்காலத்தில் ராஜாஜி வக்கீல் தொழிலில் புகழ்பெற ஆரம்பித்தார். நிறைய வழக்குகளில் வாதாடினார். விளைவாக குடும்பத்துக்கும் செல்வம் சேர்ந்தது. தொழில் ரீதியாகவே ராஜாஜி அரசியல் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தைத் துவங்கிய தாதாபாய் நௌரோஜி, ஹ்யூம், வெட்டர்பர்ன் ஆகியோரின் நட்பைப் பெற்ற, சேலம் வழக்கறிஞர்களில் முக்கியமானவரான,  ஸி.விஜயராகவாசாரியாரின் நட்பு ராஜாஜிக்குக் கிடைத்தது. அதன் மூலம் காங்கிரஸ் இயக்கம் பற்றி ராஜாஜிக்கு பரிச்சயம் ஏற்பட்டது. இதன்
பிறகு சில வருடங்களிலேயே காங்கிரஸ் பேரியக்கமாக வளர்ந்து விட்டிருந்தது. திலகர், அரவிந்த கோஷ் போன்றோர் செயலில் இருந்த காலகட்டம் அது. 1906ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காட ராஜாஜி பதிவு செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒரு பெண் குழந்தை நாமகிரி பிறந்தாள். இதன் பிறகு 1909ல் நரசிம்மன் மற்றும் 1912ல் லட்சுமி ஆகிய குழந்தைகள் பிறந்தன.

வ்வாறு ராஜாஜி – மங்கம்மா தம்பதியினருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.  இக்காலகட்டத்தில் ராஜாஜி பெரும்புகழ் பெற்ற வக்கீலாக ஒரு வழக்குக்கு ஆயிரம் ரூபாய் வாங்கும் அளவுக்கு வளர்ந்தார். வீட்டில் சாரட் வண்டியும் அதில் பூட்ட வெள்ளைக் குதிரை ஒன்றும் கூட இருந்தது. ராஜாஜியின் வீட்டில் எப்போதும் விருந்தினர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். எந்நேரமும்
சாப்பாடு கிடைத்தது. இதற்காகவே வீட்டில் இரண்டு சமையல்காரர்களை அமர்த்தி இருந்தார். அது மட்டும் அல்லாது பொது காரியங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் ராஜாஜி வாரி வாரி வழங்கினார்.

வ்வளவு சம்பாதிக்க ஆரம்பிக்கும் முன்னரே, ஒரு முறை வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தேசிய கப்பல் நிறுவனத்துக்காக தான் சேர்த்து வைத்திருந்த பணம் ஆயிரம் ரூபாயை அப்படியே, தகப்பனார் தடுத்தும் கேளாமல் கொடுத்து விட்டாராம். தன் குழந்தைகளிடம் மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார் ராஜாஜி. அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு, இதைப் பார், அதைப் பார் என்று காட்டுவாராம். இது குறித்து 1907ல் இவ்வாறு எழுதி இருக்கிறார் “என் குழந்தையிடம் ஒரு பொருளைக் காண்பிக்கும் போது, அவன் வேறு ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு கூறுவதைக் கண்டிருக்கிறேன். இதனை நமது ஆசிரியர்கள்
தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தினர் குழந்தை ஏதோ உளருகிறது  என்றே கருதுவார்கள். ஆனால் குழந்தை தனது வியப்புக்குரிய ஞாபக சக்தியை வெளியிடுகிறது என்பதே உண்மை.”. “ஒன்றுக்கொன்று தொடர்பான அவனது சிந்தனைப் போக்கைக் காணாது, அதற்கு பதில் மனத்தைத் திரியவிடுகிறான் என்பதற்காக அவனை நான் கோபித்துக் கொண்டிருந்தால், அந்த இளம் மூளை சரியான பாதையில் செல்வதிலிருந்து எப்படி பலமாக முறித்துத் திசை திருப்பப் பட்டிருக்கும்!”

ராஜாஜி தனக்குப் பிறந்த நான்கு குழந்தைகள் மட்டும் அன்றி, அவரது சகோதரன், மனைவியின் சகோதரன் ஆகியோரின் பிள்ளைகளையும் கூடச் சேர்த்து ஏழு குழந்தைகளை வீட்டில் வளர்த்து வந்தாராம். அக்காலத்தில் இது ரொம்ப சாதாரணம். பிள்ளைகள் மட்டும் அல்லாது பல குடும்பங்களில் தூரத்துச் சொந்தமாக இருந்தாலும், வயதான பெரியவர்களை வீட்டில் வைத்துக் கொண்டு ரட்சித்து வந்தனர். ராஜாஜி பிள்ளைகளிடம் பழகும் முறையே வித்தியாசமாக இருக்கும். 1909ம் வருட வாக்கில், மங்காவுக்கே இருபது வயது தான். அக்காலத்தில் பிள்ளைகளில் மூத்தவருடன் மங்காவையும் சேர்த்து ஒருவர் மாற்றி ஒருவராக வீட்டின் எஜமானர் பொறுப்பை எடுத்து நடத்தச் சொல்லுவாராம். இக்காலகட்டத்தில் ராஜாஜியின் சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகளும்

ராஜாஜி பேரக்குழந்தைகளுடன்

அதிகரித்தன. ஒருமுறை ஐந்தாவது வர்ணம் என்று சொல்லப்பட்ட நிலையில் இருந்த
இரு சிறுவர்களை முனிசிபல் பள்ளியில் சேர்க்கப் போராடினார். பள்ளி நிர்வாகிகள், இந்த இரு மாணவர்களைச் சேர்ப்பதானால் மற்ற இருநூறு மாணவர்களும் வெளியேறி விடுவார்கள் என்று கூறினர். வேறு சிலரும் ராஜாஜிக்கு நெருக்கடிகொடுத்தனர். ஆனாலும் ராஜாஜி வெற்றி கண்டார். அவரே அந்தப் பிள்ளைகள் படிக்கச் சம்பளம் கட்ட, அந்த இரு சிறுவர்களும் பள்ளியில் சேர்ந்தனர். பிரச்னை ஒன்றும் இல்லாமல் தேறினர். இது மாதிரி இன்னொரு சமயத்தில், விதவைப் பெண்ணுக்குத் திருமணம் நடத்தி வைப்பதிலும் ராஜாஜி ஈடுபட்டார். இது அக்காலத்தில் பெரிய செய்தியாகிப் பத்திரிக்கைகளிலும் வந்தது. கணவர் பிரபலமடைந்து கொண்டிருந்த காலத்தில் மங்கா வளர்ந்த பெண்ணானாள். அவளது புகைப்படம் ஒன்றே ஒன்றுதான் கிடைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அது கூட க்ரூப் போட்டோவில் இருந்து தனித்து பிரித்து எடுத்து வைக்கப் பட்டதாம். ராஜாஜிக்குத் தன் மனைவியின் நெற்றியில் தினமும் தன் கையாலேயே திலகம் இடுவது மிகவும் பிடிக்குமாம். அவர் இடும் திலகத்தை நாள் முழுவதும் அழியாமல் பார்த்துக் கொள்ளுவதில் மங்கா கவனம் செலுத்துவாளாம். இது தவிர வேறு பெரிய அலங்காரம் ஒன்றும் இல்லை. தலையை வாரிப் பின்னிக் கூந்தலை ஒரு நாரினால் கட்டி முடிந்திருப்பாள் அவள்.

ன்னதான் கணவர் தாராளமாகச் செல்வம் ஈட்டி வந்தாலும் எளிமையாகவே வாழ்ந்தனர். கணவர் பலநாள் சேமித்து ஏதாவது நகை வாங்கித் தருவதே அவளுக்கு போதுமாக இருந்தது.
அக்கால வழக்கம், சனிக்கிழமை தர்மம் செய்யும் நாளாக கருதினார்கள். அன்று தர்ம காரியமாக மங்கா தகர டப்பாக்களில் அரிசி, தானிய வகைகளை நிரப்பி வாசல் கதவருகே வைத்து விடுவாள். பிராமணர்கள் மட்டும் அல்லாது அனைத்து சாதியைச் சேர்ந்த ஏழைகளும் அதனை பெற்றுச் செல்லுவார்கள். அக்காலத்தில் இது போன்ற எளிய தருமங்கள் செய்யும் வழக்கம் நிறைந்திருந்தது. இப்போது இருப்பது போல வீட்டு வாசலில் கிரில் கதவுகள், “நாய் ஜாக்கிரதை” போர்டுகள், “வியாபாரிகள் உள்ளே வரக் கூடாது” வாசகங்கள், “வாகனத்தை நிறுத்தாதே” கண்டிப்புகள் அப்போது இல்லை. பெரும்பாலான வீடுகளில் வாயில் திண்ணைக் கதவு போட்டு மூடாமல் இருக்கும். நீண்ட தூரம் பிரயாணம் செய்வோர் இரவு எவர் வீட்டுத்  திண்ணையிலாவது தங்கித்  தூங்கி விட்டு செல்வர். பல சமயங்களில் வீட்டுக்குச் சொந்தக்காரரே உள்ளே அழைத்துச் சாப்பாடும் போடுவார்.

ங்காவுக்குத் தன் குழந்தை, பிறரது குழந்தை என்று வித்தியாசமே இல்லாமல் தன் வீட்டில் வளர்ந்த எல்லாச் சிறுவர்களையும் அன்போடு நடத்தினாள் என்பது தெளிவு. குழந்தைகள் விஷயத்தில் ராஜாஜிக்குக் கோபமே வராது. மங்காவே ஒரு சமயம் கோபித்துக் கொண்டு குழந்தைகளை அடிக்கப் போக ராஜாஜி அவள் கையைப் பிடித்துத் தடுத்துத் தர தரவென்று அழைத்துப் போய் அந்த இடத்தில் இருந்து விலக்கினாராம். மங்கா குழந்தைகளைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தாள். பல் தேய்க்காமல் காபி – டிபன் கிடையாது என்பது அவள் போடும் கண்டிசன்களில் ஒன்று. மங்காவின் குரல் எப்போதும் அடக்கமாக ஒலிக்கும், கணவருடன் வாதம் செய்வது மிகவும் அரிது. இருந்தும் ஏதாவது ஒரு சமயம் அவர்களுக்குள் ஊடல் வராமல் இல்லை.

ராஜாஜியின் மகன் கிருஷ்ண சாமி சொல்கிறார், “அப்பா சில சமயம் ரொம்ப நேரம் கழித்து வருவதுண்டு. அன்றைக்கு அப்படித்தான் நண்பர்களுடன் நீண்ட பேச்சு அளவளாவல் முடித்து நேரம் கழித்து வந்தார். அம்மா அவரை உள்ளே விடவில்லை. கிருஷ்ணன் (அவர் நண்பர்) வீட்டுக்குப் போய் தூங்குங்கள் என்று கூறி விட்டாள்” என்று நினைவு கூர்கிறார். ராஜாஜி கேஸ் விஷயமாக வெளியூர் செல்லும் போது, தன் மனைவிக்கு தமிழில் தான் கடிதம் எழுதுவாராம். இப்போது அந்தக் கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ராஜாஜி செல்வாக்கில் மேலும் வளர்ந்தபோது ஒரு கார் வாங்கி வைத்துக் கொண்டார். அதற்கு கௌஸ் என்ற ஒரு இஸ்லாமியரை ஓட்டுனராக அமர்த்திக் கொண்டார். மங்காவின் பெற்றோர்கள் ஆசாரம் பார்ப்பவர்கள் என்றாலும் மங்கா கணவர் வழியில் எல்லோரிடமும் சகஜமாகப் பழகினாள்.
கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது, அவர்கள் வைணவக் குடும்பமாக
இருந்தாலும், மாரியம்மன் கோவிலுக்கும் காணிக்கை கொடுத்து அனுப்புவாள். அதே போல கௌஸிடம் பணம் கொடுத்து மசூதிக்கும் காணிக்கை கொடுப்பாள். தெலுங்கு பேசும் பெண்ணான மங்காவுக்கு ராஜாஜியே தமிழ் கற்றுக் கொடுத்தார்.

ண்ணவண்ணமாகக்  கோலங்கள் போடுவதில் மங்காவுக்கு ஆர்வம் அதிகம். நவராத்திரி
தினங்களில் தன் குழந்தைகள் எழுந்ததும் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் எழுந்திருக்கும் முன்னரே ராஜாஜி கொலு பொம்மைகளை அடுக்கி வைப்பார். அன்பான குடும்பம். கடைசிக் குழந்தை பிறந்த பின் மங்காவின் உடல் நிலை மோசமடைந்தது. அதே சமயம் ராஜாஜிக்கும் ஆஸ்துமா போன்ற வியாதிகளால் பலவீனம் அடைந்தார். கணவனுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டி, மங்கா ஏழை சுமங்கலிகளுக்குப்  பூ, சீப்பு, தங்கத் தாலி ஆகியவற்றைத் தானம் செய்தாள். இருந்தும் கணவன் மனைவி இருவருமே உடல்நலம் குன்றி இருந்தனர். 1915ம் வருடம் ராஜாஜி மிகவும் உடல்நலம் குன்றிப் போன நிலையில், அவர்களது குடும்ப டாக்டர் மத்தையஸ் ஏறக்குறைய கை விரித்து
விட்டார். மங்காவும் உடல் நலம் அற்று இருந்தாலும், குளித்து முடித்து அவர் இருந்த அறையை சுத்தம் செய்து பணிவிடை செய்தாள். தன் நகைகள் அனைத்தையும் எடுத்துப் போட்டுக் கொண்டு, நல்ல புடவை ஒன்றை கட்டிக் கொண்டு திருப்பதி வெங்கடாசலபதி படத்தின் முன் நின்று “கணவர் பிழைத்து எழுந்தால் நான் அணிந்திருக்கும் நகைகள்  அனைத்தையும் உனக்கே காணிக்கை செலுத்துகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள். மங்காவின் பிரார்த்தனை ஏற்கப்பட்டதாகவே தெரிகிறது – ராஜாஜி பிழைத்து விட்டார்.

னினும் மங்காவின் உடல்நிலை மோசமாகவே இருந்து வந்தது. இதனால் சேலத்துக்கு அருகே சூரமங்கலத்தில் சற்றே பெரிய காற்றோட்டமான வீட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அந்த வீட்டில் இருந்த அறைகளில் ஒன்று மங்காவின் படுக்கை அறை ஆயிற்று. இரவு பகலாக மங்காவுக்கு பணிவிடை செய்வதற்கே தனது வக்கீல் தொழிலை மூட்டை கட்டி வைத்து விட்டார் ராஜாஜி. சேலம் வைத்தியர்கள் ஏறக்குறைய கை விரித்து விட, பெங்களூரில் இருந்து நஞ்சப்பா என்கிற மருத்துவரை வரவழைத்தார். அவர் வந்து பார்த்தும் பயனற்று போனது. அப்போதெல்லாம், உறக்கமின்றி பல இரவுகளை ராஜாஜி கழித்திருக்கிறார். 1916ம் வருடம் ஒரு நாள் அந்த ஊர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று மங்கா ஆசைப் பட்டாள். மாலையில் ராஜாஜி அவளை எழுப்பி பார் கோவில் பிரசாதம் வந்திருக்கிறது என்று சொல்ல அவள் வெற்றுப் பார்வை பார்த்ததால் வீட்டில் எல்லோருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. தாங்கமுடியாத வலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த மங்காவை ஆறுதல் படுத்த எண்ணி ராஜாஜி அவள் தலையை தம் மடியில் எடுத்து வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, கால்கள் மரத்துப் போகவே, அவள் தலையை எடுத்து படுக்கையில் கிடத்தினார். அடுத்த பத்து நிமிடத்தில் அவள் மூச்சு விடுவதை நிறுத்தி விட்டது போல தெரிந்தது. ஆமாம், அவள் உயிரை விட்டிருந்தாள்.

பிற்காலத்தில் ராஜாஜி எவ்வளவு சாதனைகள் செய்யப் போகிறார் என்று மங்கா கனவில் கூட கற்பனை செய்திருக்க நியாயம் இல்லை. சிப்பாய் கலகம்  முடிந்த சில வருடங்களுக்குப் பிறகு பிறந்த ராஜாஜி சுதந்திரப் போராட்டம் முழுவதும் கண்டு, அதன் பின்னரும் நீண்ட நாட்கள் வாழ்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் வரை வாழ்ந்தவர். மங்காவின் மரணம் அவரைக் குடும்ப வாழ்வில் ஈடுபாட்டைக் குறைத்து, பொது வாழ்வுக்கே தம்மை அர்ப்பணிக்கச் செய்தது என்றால் மிகையில்லை. மங்கா மறைந்த போது, ராஜாஜிக்கு வயது குறைவு தான். அக்காலத்தில் மறுமணம் செய்து கொள்வதும் சகஜம். இருந்தும் ராஜாஜி இன்னொரு துணையைத் தேடவில்லை. ராஜாஜியை எல்லாருக்கும் தெரியும். ஆனால் ராஜாஜியின் வாழ்க்கியில் சிறிய முக்கிய பங்கு எடுத்துக் கொண்ட மங்காவின்  வாழ்க்கையை எல்லோரும் அறிய வாய்ப்பில்லை. அதுவே இக்கட்டுரை வடிக்கத் தூண்டியது.

குறிப்புகள்:
திரு. ராஜ்மோகன் காந்தி அவர்கள் எழுதிய ராஜாஜி வாழ்க்கை வரலாறு, வானதி
பதிப்பகம்

24 Replies to “சக்கரவர்த்தியின் மனைவி”

  1. எல்லா வீடுகளிலும் இதுபோல் இருக்கின்றனர் .அது தெரிய இந்த கட்டுரை ஒரு நல்ல
    தொடக்கம்

  2. அவர் அந்தணராகப் பிறந்த ஒரே காரணத்துக்காக திராவிட இயக்கங்களினால் வெறுக்கப் பட்டார். சீர்திருத்தங்களில் நம்பிக்கை உடையவராக இருந்ததால் அவருடைய இனத்தவரே அவரை ஏற்கவில்லை. அவருடைய அச்சங்கள், அவை குறித்த அவரது எச்சரிக்கைகள் எல்லாமே பின்னாட்களில் உண்மையாகி அவருடைய தொலை நோக்கினை மக்கள் உணர்ந்தனர். சுதந்திர இந்தியாவில் இன்னும் சில காலம் அவர் பதவியில் நீடித்து இருந்திருப்பாரேயானால் நம் த்லஎழுத்தே மாறி இருக்கும்! நல்ல தலைவர்கள் பலர் சீக்கிரம் காலம் ஆனார்கள் அல்லது காங்கிரசை விட்டு விலகி எதிர் கட்சியில் சேர்ந்து கரைந்து போனார்கள். ” நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடக்க மாட்டேன் என்கிறது இந்த நாட்டிலே” என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் என்றுமே நமக்கு பொருந்தும் !

  3. ராஜாஜி அவர்களைப் பற்றித் தெரிந்தது கூட அவருடைய குடும்பத்தார் பற்றி நம்மவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்றை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்ச்சி செய்யக்கூடிய மக்கள், நம் நாட்டுக்காகப் பாடுபட்ட பெருந்தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இவர் போன்ற பெரிய மகான்களைப் போற்றாமல் போனோமானால், இனி வருங்காலங்களில் நடிக, நடிகைகள்தான் அதிகம் தோன்றுவார்களே தவிர மகான்கள் தோன்ற மாட்டார்கள்.

  4. சிறப்பான பதிவு. அனேகமாக பின்னாலேயே இருக்கும் பெண்ணைப் பற்றி எழுதியது வரவறேக்கப்பட வேண்டிய முயற்சி.

    கிருஷ்ணசாமி, ராமசாமி, நரசிம்மன், நாமகிரி, நரசிம்மன், லட்சுமி என்று ஐந்து குழந்தைகளின் பேரைக் கொடுத்திருக்கிறீர்கள், ஆனால் இவ்வாறாக இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே?

    மதுவுக்கு வாழ்த்துக்கள்!

  5. //பிற்காலத்தில் ராஜாஜி எவ்வளவு சாதனைகள் செய்யப் போகிறார்//

    1952 இல் ராஜகோபாலாச்-சாரியார் சென்னை மாநிலத்-தின் முதலமைச்சராக வந்தார். வந்ததும், வராததுமாக அவர் செய்த ஒரு காரியம் அரை நேரம் படிப்பு; அரை நேரம் அவரவர்களின் குலத்தொழில் என்ற ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினார்.

    1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதல-மைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இதோபதேசம் செய்தார்.
    ——————————————————————————————————————

    இதுதான் சாதனைகளா, தமிழகளுக்கு வந்த சோதனைகள்….

    மது தெரியாமல் சில கருத்தை பதிவிட வேண்டாம் எல்லோரும் விழிப்புடன் உள்ளார்கள்

    சின்னவன்

  6. சின்னவன் வெறும் கேள்விப்பட்டதைச் சொல்கிறார்.

    ராஜாஜியின் கல்வித்திட்டத்திற்குக் ‘குலக் கல்வித் திட்டம்’என்று பெயர் இட்டது அவருடைய அரசியல் எதிரிகளே தவிர அவர் அந்தப்பெயரைக் கூறவில்லை.

    அன்று நாடு இருந்த நிலையில் புதிய பள்ளிகள் கட்டவும் ,புதிய ஆசிரியர்கள் நியமிக்கவும் வசதி இருக்கவில்லை.ஆகவே ஷிஃட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி, இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அதிகப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க எண்ணி அரை நாள் படிப்பு அரைநாள் பள்ளி என்று திட்டம் கொணர்ந்தார்.

    ‘மீதி அரைநாள் பிள்ளைகள் என்ன செய்வார்கள்’ என்ற போது அருகாமையில் உள்ள தொழில் கூடங்களில் தொழில் பழகட்டும் என்றார்.

    மேலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாததற்குக் கிராமங்களில் சொல்லப் பட்ட காரணம் அவர்கள் பள்ளிக்குச் சென்றால் தங்கள் தொழிலுக்கு ஒரு கை குறைந்துவிடும் என்பதுதான்.அப்படிப்பட்ட பெற்றொருக்கு ‘சிறிது நேரம்தான் பள்ளி’மீதி நேரம் பிள்ளை உங்கள் தொழிலில் உதவிக்கு வருவான்
    என்று நம்பிக்கை ஏற்படுத்தவும் செய்தார்.இது சம்பந்தமாக ஒரு பேட்டியில்
    ‘தகப்பன் தொழிலில் உதவியாக இருக்க‌லாமே’ என்று கூறியதை அரசியல் ஆதாய‌ங்களுக்காகத் திரித்து ‘குலக்கல்வி’ என்று பிரச்சாரம் செய்தார்கள் அவருடைய அரசியல் எதிரிகள்.ஆசிரியர்களுக்கு அதிக வேலை என்பதால்
    அவர்களும் எதிர்த்தார்கள்.அவர்களை ராஜாஜி கலந்து ஆலோசித்தாரா என்று தெரியவில்லை.

    கீழே கொடுத்துள்ள சுட்டியில் அவர் கொணர்ந்த கல்வித்திட்ட வரைவு உள்ளது
    படித்துப் பார்க்கவும். எங்கும் குலக்கல்வி பற்றி பேசப்படவில்லை என்பது விளங்கும்.
    https://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm
    https://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm

  7. 6000 பள்ளிகளை இழுத்து மூடினார் என்பது பிரச்சாரமே.சின்னவன் ஏதாவது ஆவணங்களைச் சுட்ட முடியுமா?

  8. உண்மைக்கு மாறான கருத்துக்களை காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சொல்லிக் கொண்டு திரிவதால் பொய் என்றும் உண்மையாகிவிடுவதில்லை. ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டம் பற்றி பலரும் பல நேரங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் “எனது போராட்டம்” எனும் நூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இவை எதையும் படிக்காமல், புரிந்து கொள்ளாமல், சிலர் அரசியல் ஆதாயம் தேடிய அதே பழைய பல்லவியை மீண்டும் பாடி பெருந்தகையாளர்களைச் சிறுமைப் படுத்தி, கொச்சைப் படுத்தி வரும் சிலரது போக்கு அருவறுக்கத் தக்கது. ராஜாஜியின் மேன்மையை அறியாதவர்களின் வாதங்களைப் புறந்தள்ளுவது ஒன்றே நாம் செய்ய வேண்டிய கடமை.

  9. அன்புள்ள திரு முத்துராமகிருஷ்ணன் ,

    தாங்கள் கொடுத்த லிங்கில் படிக்க முடியவில்லை.

    ஆனால் ராசாசி மீது இந்த விஷயத்தில் கழகங்கள் பொய் குற்றச்சாட்டு கூறின என்பதே உண்மை.

    தங்கள் பேரன்களையும், கொள்ளுப்பேரன்களையும் , சி பி எஸ் ஈ மூலம் அல்லது ஐ சி எஸ் ஈ போன்ற பாடத்திட்டங்களில் படிக்க வைத்து , இந்தி உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்க வழிசெய்து, பிறரை மட்டும் தமிழை தவிர எதையும் படிக்காதே என்று சொன்ன புண்ணியவான்கள் தானே.?

  10. whatever you can say, he is the traitor. He is like Jayachandra of Muslim Invasion. Because of personal enmity on Kamaraj, he betrayed Tamil nadu to Dravidan parties. Hinduisam fallen in Tamil Nadu becasue of him. But, by Baghavan’s grace, MGR came. He paved way for revivial of Hinduisam in Tamil Nadu. Praise Kamaraj and MGR.

    Please donot praise Rajaji, Gandhi and Nehru like persons.

    Praise like vallabhi pater,Ambedkar,Bose

  11. அந்த காலத்தில் இந்த Condom மை கண்டுபிடித்திருக்கலாம் ! 16 வருஷத்துல நாலு குழந்தைங்க… எங்க தாத்தா பாட்டியும் இப்படிதான்….

  12. @K.Muturamakrishnan

    //‘தகப்பன் தொழிலில் உதவியாக இருக்க‌லாமே’ என்று கூறியதை அரசியல் ஆதாய‌ங்களுக்காகத் திரித்து ‘குலக்கல்வி’ என்று பிரச்சாரம் செய்தார்கள் அவருடைய அரசியல் எதிரிகள்.ஆசிரியர்களுக்கு அதிக வேலை என்பதால்
    அவர்களும் எதிர்த்தார்கள்.அவர்களை ராஜாஜி கலந்து ஆலோசித்தாரா என்று தெரியவில்லை//

    அப்பன் தொழிலை மகன் அரைநாள் கற்றுக் கொள்ள வேண்டும். மீதி அரைநாள் பள்ளிக்குப் படிக்க வர வேண்டும் எனபதுதான் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமாகும் விளங்கச் சொல்வதானால் செருப்புத் தொழிலாளியின் மகன் செருப்புத் தைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பள்ளிக்கு செல்ல வேண்டும். சலவைத் தொழிலாளியின் மகன் அரைநாள் துணி வெளுக்கப் போக வேண்டும். பின்னர் பள்ளி. இந்தக் குலக்கல்வித்திட்டம் ஜாதீய அமைப்புகளுக்கு உரம் போட்டு வளர்பதாகும்.

    துணி வெளுப்பவன் மகன் துணி வெளுக்கவும், பிணம் புதைப்பவன் மகன் பிணம் புதைக்கவும், மீன் விற்பவன் மகன் மீன் விற்கவும்,விவசாயம் செய்பவனின் மகன் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும்.
    என்ன Muturamakrishnan sir அப்படிதானே

    //சின்னவன் வெறும் கேள்விப்பட்டதைச் சொல்கிறார்.//

    அதே காலத்தில் தானே காமராஜர் இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார்

    உங்களால ஒரே நகைச்சுவை தான் போங்க

    அன்புடன்
    சின்னவன்

  13. Mr.Mani, Your opinion is prejudicial. Just because he was instrumental in bringing in DMK to power joining hands with Annadurai, he cannot be branded as traitor. Kamaraj also joined hands with Dravidian parties in opposing Rajaji’s education policy with wrong notion. Was he responsible for protecting hinduism? No, he was also an athiest. While using such harsh words on towering personalities, we should show some respect to their sacrifice and contribution to the society. Just because either Nehru or Rajaji does not follow the hindu sectarian path, their patriotism and sacrifice cannot be underestimated. With due respect to your opinion, I differ from your point of view.

  14. Mr.VGopalan,

    I thought you read Indian History in School and college Text Books.These text books all written by congress people.

    First Rajaji,
    In independence, the main Indian leaders wanted to be prime minister For Eg. Nehru , Vallabhai patel and Rajaji.

    But, Because of influence of Gandhi, Nehru became prime minister. Even so, thirst on power not gone from Rajaji.

    In 1952 Tamil Nadu elections,congress party won.In chief ministral race, Dheerer Sathya murthi(Guru of Kamaraj),prakasm are all in. But, by back door, Rajaji became chief minister of Tamil Nadu. That’s why, kamaraj turned against Rajaji.But kamaraj never want to allow Dravidian parties would come to power because these drividian parties are all robbery group as well as inimical to hinduisam even though he had personal friendship with E.V.Ramaswamy Naicker.Even he added Subramanium who is his opposite group. Kamaraj went for larger good.

    But, what Rajaji did. He was the primary cause of Drividian parties caputure power in Tamil Nadu.

  15. Next Nehru,

    we all knew his foriegn polices. He is very naive and also egoistic person. He never heed to other’s good advices. He blindly believed on china eventhough repeatedly warned by united states, Britian , RSS and great partiort Ambedkar.

    United states and Britian wanted to join India in UN as permenant member. But, he refused to join and public repubic of china became permenant member because of HIm. price is china war against India. china had vietto power that’s why nothing can done against her.

    Nehru very much inimical to HIndusam. Because of him, many concessions given to miniorities.
    Even Nehru clamied only by birth he is hindu.

  16. அன்பு மணி அவர்களே,
    தீரர் சத்தியமூர்த்தி 1942 வெள்ளையனே வெளியேறு போராட்ட காலத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும்போதே மரணமடைந்தார். 1952இல் அவர் எந்தப் பதவிக்கும் போட்டியில் இல்லை. 1952 தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் காமராஜ் உட்பட அப்போதைய பெரிய கட்சியான கம்யூனிஸ்டுகளைத் தாக்குபிடிக்க ராஜாஜி வந்தால்தான் சரியாக இருக்கும் என நினைத்து, சி.சுப்பிரமணியத்தையும், பொள்ளாச்சி மகாலிங்கத்தையும் டில்லிக்கு அனுப்பி பிரதமர் நேருவின் சம்மதத்தை வாங்கும்படி பணித்தார். அப்போது நேரு காமராஜ் விரும்பினால், ராஜாஜி வருவதில் எனக்கும் சம்மதம் என்று சொன்னார். அனைத்துத் தரப்பாரின் சம்மதத்தோடுதான் ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக வந்தார் என்பது வரலாறு. ராஜாஜிக்கும் காமராஜுக்குமிடையிலான மோதல் 1940இல் ஏற்பட்டது. அதற்கு முந்தைய தமிழ் மாகாண காங்கிரஸ் தலைமைக்கு தீரர் சத்தியமூர்த்தி போட்டியிட்டபோது அவர் ஜாதி காரணமாகத் தோற்கடிக்கப்பட்டார். அப்போது அவர் காமராஜிடம் சொன்னது, காமராஜ், அடுத்த முறை உன்னை தலைவர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெறச் செய்வேன், நான் உன்னிடம் செயலாளராக பணியாற்றுவேன் என்றார், அப்படியே செய்தார். 1940 காங்கிரஸ் தலைமைப் போட்டியில் ராஜாஜியின் ஆதரவு பெற்றவர் தோற்றார், சத்தியமூர்த்தி நிறுத்திய காமராஜ் வெற்றி பெற்றார். நிழல்போர் தொடங்கியது அப்போதுதான். 1952இல் அல்ல.

  17. தி. க.விலிருந்து தி.மு.க. பிரிந்த பிறகு, அவர்களைக் கண்ணீர் துளிகள் என்று அழைத்து வந்த ஈ.வே.ரா. காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று சொல்லி ஆதரித்து வந்தார். 1957 தேர்தலில் ஈ.வே.ரா. காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கும்பகோணத்தில் என்.காசிராமனும், தஞ்சையில் பரிசுத்த நாடாரும் ஈ.வே.ரா. தங்களுக்குப் பிரச்சாரம் செய்ய வரவேண்டாம் என்று சொல்லி விட்டனர். காங்கிரஸ் மீதும், நேருவின் போலி சோஷலிசக் கொள்கைகள் மீதும் வெறுப்புற்ற ராஜாஜி காங்கிரசைத் தோற்கடிக்க சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்தார். காங்கிரசை தோற்கடிக்க தி.மு.க. ஒரு ஆயுதமாக அவருக்குப் பயன்பட்டது. சில ராஜ தந்திர நிகழ்சிகளை நாம் இப்போது கொச்சைப் படுத்த முடியாது. பிறவி மேதைகளை நாம் இப்போது இன்றைய எடைக்கல் கொண்டு எடை போடக்கூடாது.

  18. சின்னவன் அந்தக்காலத்தில் செய்த அதே அரசியலைத்தான் இப்போது செய்கிறார்.
    என் முதல் பின்னூட்டத்தில் மக்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பாததற்குக் காரணம் தங்கள் பணிக்கு ஒரு கை குறைவதுதான் என்பதை குறிப்பிட்டு இருந்தேன். இது இன்றளவும் உண்மை. அப்படிப்பட்ட பெற்றோருக்கு அரைநாள் பள்ளியால், உங்கள் பிள்ளை உங்களுக்கு உதவக் கிடைக்கக்கூடும் என்ற பொருளிலேயே ராஜாஜி கூறினார். தகப்பன் வேலையைக் கட்டாயம் மகன் செய்ய வேண்டும் என்றோ, அதுதான் அவர்கள் தலை எழுத்து என்றோ அவர் நினைக்கவும் இல்லை பேசவும் இல்லை.அவர் பிராமணர்களுக்கு எந்தச் சலுகையும் காட்டவும் இல்லை.

    ராஜாஜியை அமைச்சு அமைக்க காமராஜ் உட்பட எல்லோரும் வருந்தி அழைத்தனர்.மைனாரிடி காங்கிரஸை அவர் நிமிர்த்தி அமைச்சு அமைத்தவுடன்
    காங்கிரஸுக்குள்ளேயே இருந்த அவரது பின்னிழுப்பவர்கள் அவருக்கு அவப்பெயரை உண்டாக்க குலக்கல்விப் பிரசாரத்திற்கு மறைமுக ஆதரவு அளித்தனர். காமராஜும் அதில் அடக்கம்.

    ராஜாஜி வெளியேறிய பின்னர், கல்வி சம்பந்தமான விஷயத்தில் அவரை வீழ்த்தியவர்களுக்கு, அதே கல்வியை வைத்து நற்பெயர் எடுக்க வேண்டிய நிர்பந்தம். எனவே எந்த திட்டமிடலும் இல்லாமல் பள்ளிகள் துவக்கப்பட்டன.
    கல்விக்கான செலவுகளும், அலுவலகங்களும் பெருகினவே தவிர கல்வியின் தரம் அரசுப் பள்ளிகளில் மேம்படுத்தப் படவில்லை.அதைப் பற்றியாரும் கவலையும் படவில்லை.இன்றளவும் பிள்ளைகள் இல்லாத பஞ்சாயத்துப் பள்ளிகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் என்று சிக்கலுக்கு மேல் சிக்கல்தான். ஏழைப் பிள்ளைகளும் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் நிலைதான்.

    ஜனரஞ்சக அரசியல் செய்யத் தெரியாத ராஜாஜியைத்தான் உங்களால் பழிக்க முடியும். பழித்து விட்டுப் போங்கள்.

  19. ஆங்கிலேயனிடமிருந்து பெற்ற அரசியல் பாடத்தால் பிரித்தாளும் தந்திரத்தை 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆண்ட காங்கிரஸ் கற்றுக் கொண்டது.எதிர் கட்சிகளையும் தங்கள் எதிர்ப்பாளர்களையும் பிரித்து, அவர்களுடைய ஒற்றுமை இன்மையில் குளிர் காய்ந்தது காங்கிரஸ்.காங்கிரஸ் பெற்ற வாக்குகளை கூட்டினால் எதிர்கட்சிகள் பெற்ற வாக்குகளைவிட மிகக் குறைவாக இருந்தது.30% பெற்ற காங்கிரஸ் மெஜாரிடி பலத்துடன் அரசாண்டது. சோஷலிசம் என்ற போர்வையில் லஞ்ச லாவண்யத்தினை வளர்க்கும் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா முறைகளைக் கையாண்டு கொள்ளையில் ஈடுபட்டது. இதற்கெல்லாம் மாற்றாக ராஜாஜி ஆங்காங்கு கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா முழுதும் காங்கிரசுக்கு முறையான எதிர்ப்பைக் காண்பித்தார்.அந்த வகையில்தான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார்.

    ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்ற காங்கிரசுக்குப் பாடமாக அமைந்தது
    1967 தேர்தல். 1971ல் காமராஜும், ராஜாஜியும் சேர்ந்தும் கூட திராவிடக் கட்சிகளைத் தோற்கடிக்க முடியவில்லை என்பதும் உண்மைதான்.
    ஆனால் 1967ல் இருந்த காங்கிரசின் மமதைக்கு ராஜாஜி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் அன்றைய காலத்தின் கட்டாயம்தான்.

  20. Dear Muthu,

    For this, I am going to tell one panchatantra story. In wall, all frogs living peacefully. suddenly,king of frog lose his respect among his subjects.Getting very much anger by this incident, he bought one cobra into wall.
    The cobra destroyed all frogs and finally killed king of frog.

    Here, Rajaji is like king of frog. Because of personal enmity, he had alliance with Dravidian parties . Then ,all knew what happened.

  21. ராஜாஜிக்குத் தனிப்ப‌ட்ட காழ்ப்பு இருந்தது என்று பேசுவது மிகவும் கொச்சையான வாதம் மணி அவர்களே! அவர் அப்படிப்பட்ட காழ்ப்புக்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவ‌ர். இந்தியா ஜனநாயக வழிமுறைகளில் ஆரம்ப கால கட்டத்தில் இருந்த சமயத்தில் வாழ்ந்த‌வர் ராஜாஜி என்பதை மறந்துவிடக் கூடாது.அப்போது ஓட்டளிக்கும் மக்களுக்கும் இப்போது போல் அல்லாமல் கல்வியறிவு குறைவு. ஊடகங்களூம் அதிகம் இல்லாத கால கட்டம்.

    நேரு குடும்பத்தினர் மீது கவர்ச்சியும்,காந்தி காங்கிரசின் தியாகங்களையும் மறக்காத மக்கள் கூட்டம். மக்களின் அறியாமையைப் பயன் படுத்தியும், எதிர் கட்சிகளின் உதிரி நிலையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்யும் காங்கிரஸை எதிர்ப்பது எப்படி என்று கூட அறியாத ஒரு சூழலில், ஜன‌நாயக அரசியலை நடத்துவது எப்படி என்று பாடம் சொல்வது போல
    ராஜாஜி செயல்பட்டார். எமெர்ஜென்சிக்கு முன்னும் பின்னும் ஜே பி அதனை முன்னெடுத்தார்.

    உங்களுக்கு திராவிடக் கட்சிகளை இப்போது பிடிக்கவில்லை என்பதற்காக ராஜாஜியை குறை சொல்ல வேண்டாம்.’தம்பிகள் மாறி விட்டார்கள்’ என்று அவர் கூறியதுபோலத்தான் அண்ணாத்துரையின் செயல் பாடு இருந்தது.பின்னர்
    வந்தவர்கள் நடந்து கொண்டதற்கெல்லாம் ராஜாஜியைத் தூற்றக் கூடாது.

  22. Dear Muthu,

    we knew Mr.RAjaji translated both Ramayana and Mahabharatha from Sanskrit into Tamil. Again, I am going to one incident which happened between Bhishma and father of sathyawathi from same Mahabharata. .Bhishma very much put plea before father of Sathyawathi for marrying his father Sanathu with sathawathi and even he was ready to relinquish his right for kingdom.
    But, father of Satawathi said that he knew about Bhishma but he cannot know about future descendants
    of Bhishma . What wisdom he had. He was firm on about right on kingdom for Sathyawathi’s generations.

    Rajaji knew about annadurai. But, what Grantee about annadurai’s counterparts. Even Rajaji was the intimate friend of E.V.Ramaswamy Naickar. E.V.R fully aware of that robbery group and even told this group are not hesitate to put their hand on public money.

    Such a statesmen and considered to be very intelligent man what was supposed to done by RAjaji

    Tell me.

  23. ராஜாஜியின் நோக்கம் இந்திய அரசியலில் (‘போலரைசேஷன்’) மையப்படுத்துதல் என்பதாக அப்போது இருந்திருக்கிறது. காங்கிரசின் நோக்க‌ம் தனக்கு எதிரான சக்திகளை சிதற அடித்தல் என்பதாகும்.காங்கிரசின் தந்திரங்களுக்கு மாற்றான தந்திரங்களை செய்ய வேண்டிய முறைப்படிச் செய்தார்.

    இந்தியா போன்ற ஒரு கூட்டமைப்பில் பிராந்திய அபிலாட்சைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது என்பதை ராஜாஜி எல்லோரையும் விட முன்னதாகப் புரிந்து கொண்டார்.பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாத‌து என்று முன்னரே கூறி அவப் பெயரைச் சம்பாதித்துக் கொண்டது போல‌.

    திராவிடக் கட்சிகள் மட்டுமே ஊழல் செய்கிறார்கள் , மற்றவர்கள் சத்ய சந்தர்களாக இருக்கிறார்கள் என்பது சரியான பார்வையாகாது. அரசியல் வாதிகள் எல்லோருமே சேவை என்பது போய், அரசியல் ஒரு பணம் பண்ணுவதற்கான தளம் என்பதாகக் கண்டு கொண்டுவிட்ட‌னர்.அரசியல் என்பது ஒரு கரியுள்ள அறை. உள்ளே போனால் ஆடையில் கரியுடனேதான் வெளி வருவோம்.

    அன்றைய சூழலில் தனக்குச் சரி என்று பட்டதை துணிந்து செய்தார் ராஜாஜி.
    பெரியார் அவ்வப்போது ஆட்சிக்கு வருபவர்களை ஆதரிப்பார். அந்த வகையில்
    திராவிடக்கட்சிகளையும் ஆதரித்தார்.ஆனால் ராஜாஜிக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பவாதம் கிடையாது. 67ல் ஆதரித்தவர்களை 71ல் எதிர்த்தார். ஆதரித்ததற்கும் எதிர்த்ததற்கும் சரியானா கார‌ணங்களை மக்களிடம் சொன்னார். எந்தக் காங்கிரசை எதிர்த்து திமுக வை ஆதரித்தாரோ அதே காங்கிரசை திமுக ஆதரித்தவுடன் எதிர் அணியை நிறுவினார்.

  24. /”பிறவி மேதைகளை நாம் இப்போது இன்றைய எடைக்கல் கொண்டு எடை போடக்கூடாது.”/
    மேதைகள் பிறப்பதில்லை. உருவாகிறார்கள்; உருவாக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *