தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் அப்பத்திரிகையில் பணி புரிந்து வந்த இளம் பெண் பத்திரிகையாளர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாற்றப் பட்டு கைது செய்யப் பட்டிருக்கிறார்.
இந்தக் கைதுக்கு முன்பு, இந்தத் தாக்குதலைக் குறித்து துணிந்து புகார் செய்த அந்தப் பத்திரிகையாளரின் நோக்கங்கள் குறித்தே ஊடகங்கள் கேள்விகள் எழுப்பின. அப்போது அவர் தனது நிலைப்பாட்டையும் உள்ளக் குமுறலையும் தெளிவாக வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பாரதி கனவு கண்ட பாலியல் சமத்துவத்தில் நம்பிக்கை உள்ள காரணத்தால், தருண் தேஜ்பாலுக்கு எதிராக புகார் கொடுக்கத் துணிந்த அந்த இளம் பத்திரிகையாளரின் அசாத்திய துணிச்சலின் ஊடாகத் தெரியும் சமுக விழிப்புணர்வு என்னை நெகிழச் செய்ததால், அவரது உள்ளக் குமுறலை சமுதாயத்தின் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் கடமை வழக்கறிஞராகிய எனக்கு இருப்பதால், இதோ அந்த அறிக்கையின் முழுமையான மொழிபெயர்ப்பு:
கடந்த இரண்டு வாரங்களாக எனக்குப் பரவலாகக் கிடைத்து வரும் ஆதரவால் நெஞ்சம் நெகிழ்கிறேன். ஆயினும் எனது புகார் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சதியின் பகுதியென வரும் நலமற்ற குறிப்புகளால் எனக்கு உள்ளார்ந்த வருத்தமும் சஞ்சலமும் ஏற்பட்டுள்ளது.
நான் அத்தகு நலமற்ற மறைமுக தாக்குதல்களை வன்மையாக மறுப்பதோடு கீழ் காணும் வாதங்களை முன்வைக்கிறேன்.
தங்கள் வாழ்க்கை மற்றும் உடல்களை தாமே அழுத்தந்திருத்தமாக அடக்கியாளும் உரிமையும் ஆற்றலும் பெற வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சி நிச்சயமாக அரசியல் தன்மை உடையது தான். ஆனால் பெண்ணீய அரசியலும் அதன் தன்மைகளும் நமது அரசியல் கட்சிகளின் குறுகிய உலகத்தை விட பரந்தது . எனவே பால் பாகுபாடு, அதிகாரம், மற்றும் வன்முறை ஆகியவை குறித்த மிக முக்கியமான விவாதத்தை, தமக்குள்ளே நிகழும் உரையாடலாக மாற்ற விரும்பும் தம் தவறான சபலத்தை தடுக்க அரசியல் கட்சிகள் முனைய வேண்டும் என நான் அறைகூவல் விடுக்கின்றேன்.
நான் வேறு எவருக்கு வேண்டியோ செயல்படுகின்றேன் என்கிற பிரேரணைகள் எல்லாம், நீண்ட கருத்தார்ந்த விவாதங்களில் பங்கு கொள்ளும் நம் சமூகத்தின் ஒரு சாரார், இன்னமும் பெண்கள் தமக்காக தமக்குத் தாமே முடிவெடுக்க வல்லவர்கள் தாம் என்பதை அங்கீகரிக்கவில்லை, என்பதை புலப்படுத்துகின்ற தளர்ச்சியை ஏற்படுத்தவல்ல குறியீடுகளாகத் தான் நான் பார்க்கிறேன்.
கடந்த வாரத்தில் தொலைக் காட்சி விமர்சகர்கள், இதை விட பக்குவம் பெற்றவர்களாக , திரு தேஜ்பால் என்னை பாலியல் பலாத்காரம் செய்த போது எனக்கு இருந்த மனநிலை மற்றும் நோக்கங்கள் குறித்த கேள்விகளை முன் வைத்திருக்க வேண்டும். சிலர் புகார் செய்ய நான் எடுத்துக் கொண்ட கால அவகாசத்தை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளனர். அறிவார்வம் கொண்ட இன்னும் பல விமர்சகர்கள் பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தைக்கு எதிராக கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இத்தகு பொருள்களை வகைபடுத்த நான் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் தான், எனது தளராத வலி மிகுந்த அனுபவத்தின் கடுமையான பகுதியாகும். என்னை கற்பழிக்கப் பட்டவளாக என்னை பார்க்கத் தயாராக இருக்கிறேனா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.அல்லது என்னுடன் பணி புரிபவர்களோ, நண்பர்களோ, ஆதரவாளர்களோ, விமர்சகர்களோ என்னை அவ்வாறு பார்க்க விரும்புகிறார்களா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. குற்றங்களை வகைபடுத்துவது பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, குற்றங்களை வகைப்படுத்துவது சட்டமே. இந்த வழக்கைப் பொறுத்த வரையில் சட்டம் தெளிவாக உள்ளது.திரு தேஜ்பால் எனக்கு இழைத்தது,கற்பழிப்பு குற்றத்தின், சட்டப் பொருள் விளக்கத்திற்கு உட்பட்டதே.
இப்போது நமக்கு, கற்பழிப்பிற்கு விரிவான பொருள் விளக்கம் தரும் புதிய சட்டம் நம்மிடம் உள்ளது. நாம் எதற்காகப் போராடினோமோ அதற்காக நாம் நிற்க வேண்டும். கற்பழிப்பு என்பது காமம் அல்லது கலவியைக் குறித்த விஷயம் அல்ல. மாறாக அது பெண்களின் ஆற்றல், சிறப்புரிமை மற்றும் அதிகாரபூர்வமான உரிமை ஆகியவற்றை பாதிக்கக்கூடியது என்பது குறித்து நாம் காலம் காலமாக பேசி வந்துள்ளோம். அங்ஙனம் இப்புதுச் சட்டம் அனைவருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்_முகமற்ற புதியவர்களுக்கு மட்டுமல்லாது, செல்வந்தர்கள், அதிகாரம் மிக்கவர்கள், செல்வாக்கு மிகுந்தவர்கள் என அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
இவ்வழக்கிற்கு கிடைத்துள்ள சில எதிர்விளைவுகளைப் பார்க்கும் போது, குடும்பங்களுக்குள் மற்றும் போலீஸ் காவல் கஸ்டடியில் நடக்கும் கற்பழிப்பு நிகழ்வுகள், மிகை உறுதி நிலைப்பாடுடைய பெண்ணீயவாதிகளுக்குக் கூட கலவையான சவாலாக இருக்கும் என்பது புரிகிறது.
திரு தேஜ்பாலைப் போல நான் மிகுந்த செல்வம் உடைய நபர் அல்ல. எனது தாயின் தனிநபர் வருமானம் கொண்டு வளர்க்கப்பட்டவள் நான்.எனது தந்தை நெடுங்காலமாக சுகவீனமாகப் படுத்த படுக்கையாக உள்ளார்.தனது செல்வத்தையும்,செல்வாக்கையும்,தனிச்சிறப்பையும் பாதுகாக்கப் போராடும் திரு தேஜ்பால் போல் அல்லாமல், நான் எனது நாணயத்தைப் பாதுகாக்கவும், “எனது உடல் என்னை பணியில் அமர்த்தியிருப்பவரின் விளையாட்டுப் பொருளல்ல மாறாக எனக்கு உரியது” என்ற எனது உரிமையை அழுத்தந்திருத்தமாக நிலைநாட்டவுமே நான் போராடுகின்றேன். இந்த புகாரை கொடுத்த காரணத்தால் நான் மிகவும் நேசித்த எனது வேலையை மாத்திரம் இழக்கவில்லை, மாறாக எனக்கு அத்தியாவசியமான பொருளாதார பாதுகாப்பு,எனது ஊதியத்தினால் எனக்கிருந்த சுயசார்பு ஆகியவற்றையும் நான் இழந்துள்ளேன். என்னை நானே தனிப்பட்ட அவதூறுகளுக்கு ஆளாக்கியுள்ளேன். அது இலகுவான போராட்டமாக இருக்கப்போவதில்லை.
எனது வாழ்க்கையிலும் எனது எழுத்துகளிலும் தொடர்ந்து நான் பாலியல் குற்றங்களை சூழ்ந்திருக்கும் உடன்பட்ட பேரமைதியை உடைத்துக்கொண்டு பேச பெண்கள் முன் வர வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளேன். இந்த பிரச்சனை எஞ்சியிருப்பவர்கள் சந்தித்து வரும் எண்ணற்ற துன்பங்களை உறுதிசெய்கிறது. முதலில் எமது கருத்துகளுக்கு எதிராக கேள்வி எழுப்பப்பட்டது. பின் எமது நோக்கங்கள்,இறுதியாக எமது வல்லமை எமக்கு எதிராகத் திருப்பப்பட்டது. ஒரு அரசியல்வாதி, “பாலியல் வன்முறைக்கு எதிராகப் பேசினால் ஒருவரது தொழில் ரீதியான வாய்ப்புகள் பாதிக்கப்படும்” என்று அறிக்கை விடுவார். தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு “ஏன் பாதிக்கப்பட்டவர் இயல்பாக இருந்தார்?” என்று கேள்வி கேட்கும்.
இத்தருணத்தில் மௌனமாக வாளாவிருக்க நான் விழைந்திருந்தால்,என்னால் என்னையே நேரிட்டிருக்க முடியாது என்பது மாத்திரம் அல்ல, தலைமுறைகளாக முழு முனைப்புடன் செயல்பட்டு பெண்ணீய இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று புதுப்பிக்கும் அந்த நெஞ்சுரம் கொண்ட பெண்களையும் எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கும்.
இறுதியாக, தெஹல்கா என்ற ஸ்தாபனம் இத்தகு பின்னடைவை எதிர் கொள்ள நேரிட்டு விட்டதே என்று, அங்கலாய்த்துக் கொள்ளும் பெருந்தொகுதி ஆண்கள் தம் வருத்தத்தைப் தெரிவித்துள்ளார்கள்.
அத்தகு ஆண்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.இந்த பிரச்சனைக்கு அப்பத்திரிகை ஆசிரியரின் வன்சொற்கள் நிரம்பிய வன்கொடுமை தான் காரணமே அன்றி,பாதிக்கப்பட்டதால் பேசத் துணிந்த பணியாளர் அல்ல.
அனைவரது ஆதரவுக்கும் நன்றி.
கட்டுரை ஆசிரியர் திருமதி. விக்டோரியா கௌரி பா.ஜ.க மகளிர் அணியின் தேசிய செயலர்.
இன்றைய தேதியில் சிரித்து BP குறைக்க வேண்டுமா?. நம் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்கள் இந்த விசயத்தை அணுகுவது, எழுதுவதை படியுங்கள். இலவசமாக உங்கள் BP ஓடிப்போகிவிடும்.
There should be impartial enquiry/ investigation /Judgment in this case. However the reaction of people are based on their SELECTIVE Bias. This wll be evisdent from the mute/ low profile reactions of the same ABVP /BJP and MS.Victoria Gowri towards (Sri) Asaramji Bapu. we can recall the Mr.Subramaniam Swamy direct support to Asram Bapu. If any one gives neutral view, the person is branded as Male chauvanistic and as if the woman character is questioned.The valuable lesson may be both genders should be more cautious in handling opposite sex (especially when inebriated and both are together) and there is always a (mutually agreed! )Lakshman Rekha.
While there is a huge probability of misbehaviour by the accused, there is also a probability of master plan by the complainant and political conspiracy.
பெண்ணியவாதிகள் அனைவரும் இந்தப் பெண்ணுக்கு ஆதரவாய்க்குரல் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அனைவருமே அரசியலாக்கப் பார்க்கின்றனர். 🙁
காமகளியாட்டம் செய்பவர்களை அவர்கள் முகத்தில் காரி உமிழவேண்டும். இதற்கு சட்டம் வேண்டும் இவர்களை சமுகம் ஒதுக்கவேண்டும். தற்போது உள்ள தண்டனை போதாது. அரசியல் கட்சிகள் இவர்களுக்கு துணை போகிறது. அமைசர் ஆகிறார்கள். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை யார் காப்பாற்றுவது? கற்பு இரு பாலர்களுக்கும் பொது. ஆண் மறுமணத்தை சமுகம் ஏற்றுகொள்கிறது பெண் மறுமணத்தை மனபூர்வமாக ஏற்கவில்லை ஏன்?
Mr. KMV WANTS TO BELIEVE THERE IS A PROBABILITY OF MASTER PLAN OF COMPLAINANT
AND POLITICAL CONSPIRACY.
I AM SUSPECTING THERE IS MASTER PLAN AND CONSPIRACY OF THE SUPPORTERS OF TEJPAL, WHO WANTS TO THROW MUD ON THE VICTIM. BECAUSE TO SUPPORT THEPAUL, THESE PEOPLE ARE READY TO GO TO ANY EXTENT. I AM VERY SORRY TO SAY IF THE BEHAVIOUR OF THEIR FAMILY MEMBERS ARE LIKE THAT, THEN THEY ARE HAVING RIGHT TO SUSPECT THE VICTIM.
THERE WAS A NEWS ABOUT THE SHARES OF TEHELKA. I HOPE KME WILL NOT ATTRIBUTE THE REASON TO THE VICTIM OF RAPE.
THERE WAS A NEWS ABOUT ABOUT TALIBAN LEADER PARTICIPATING IN THINK FEST. WAS THERE ANY MASTER PLAN AND CONSPIRACY WITH THAT MAN?
IT WAS VERY CLEAR THAT TEJPAL WAS ACTING ON BEHALF OF CONGRESS.
HE NEVER BROUGHT ANY OF THE CORRUPTION CHARGES AGAINST CONGRESS. AGAINST ROBERT HE DID NOT WRITE ANYTHING.
HIS ATTACK WAS ALWAYS AGAINST BJP, ARMY AND POLICE.
I NEVER SAW A REPORT AGAINST ISLAMIC FUNDAMENTALISTS AND TERRORISTS.
EVEN IN RECENT ARTICLE, TEHELKA SUPPORTED POLICE FAKRUDDIN AND QUESTIONED ABOUT TAMIL NADU POLICE ACTION. TEHELKA WAS NOT READY TO MENTION ABOUT THE POLICE OFFICER WHO WAS ATTACKED BY BILAL AND CO.
FROM WHERE HUGE MONEY CAME TO SPEND IN THINK FEST?
WHAT IS THE PURPOSE OF “PRUFROCK”. IS IT NOT A SHAMEFUL PROJECT?
I HAVE REASON TO BELIEVE THE PEOPLE WHO ARE SUPPORTING TARUN TEJPAUL ARE AGAINST INDIA.
I REQUST TAMIL HINDU TO WRITE A DETAILED ARTICLE ABOUT TARUN WHO WAS AGAINST INDIA, AND HOW HE AMAZED HUGE WEALTH?
RIGHT THINKING PEOPLE SHOULD SUPPORT THE VICTIM. .
My search on Delhi gang rape or Rape / murder happened in the running train Kerala / killing of a girl after the rape on the railwaytracks TN / newsreader Akila harassment………….. in the website https://www.tamilhindu.com turned futile. what could be the reason?
Only a learned judge can examine the evidences and pass judgment. media should not try to become the judge.
Hope somene had seen the tamil movie 100/100 (KBalachandar).First defence by the Tejpal advocate will be in the same lines.
By raising a question, i am not supporting anyone or harrasment to women.