அரசியல் கட்சிகள் சில திட்டமிட்டே தொடங்கப்படுகின்றன. ஏதாவது ஒரு துறையில் புகழ்பெற்று மேலும் வளர்ச்சி பெற அந்தத் துறையில் வாய்ப்புகள் இல்லையென்றால், அப்படிப்பட்ட நபர்கள் தேர்ந்தெடுப்பது அரசியல். அதிலும் முந்தைய துறையில் கணிசமான செல்வாக்கு ஏற்பட்டு இவரைப் பின்பற்றுவோர் அதிகம் இருந்தால் நிச்சயம் ஒரு புது கட்சி துவங்கிவிடும். சில நேரங்களில் ஒரு கட்சியில் இருந்து கொண்டே அங்கு மேலும் உயர் பதவிக்கு வழியில்லாத இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர தலைவர்கள் தாங்களே தலைவர்களாக ஆகவேண்டுமென்ற எண்ணத்தில் ஏதாவதொரு சாக்கை வைத்துக் கொண்டு புதிய கட்சி துவங்குவார்கள். இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு.
டெல்லியில் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியபோது இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கை இழந்த, ஊழலைக் கண்டு மலைத்துப் போய், இவைகளை இந்த நாட்டைவிட்டு ஒழிக்கவே முடியாது எனும் நிலையில் செயலற்றுப் போய் இருந்த மக்கள் இந்த போராட்டத்தைக் கண்டு நம்பிக்கை அடைந்தார்கள். இதோ ஒரு காந்தியத் தொண்டர், இவர் உண்மையாகவே ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர், இவரை ஊக்கப்படுத்தினால் ஓரளவுக்காவது ஊழல் தடுக்கப்படும் என்று நடுத்தர, ஏழை, எளிய, ஊழைப்பாளி மக்கள், மாணவர்கள் நம்பினர். அதன் பயனாய் மக்கட் கூட்டம் பெருமளவில் அவரைப் பின்பற்றத் தொடங்கியது. அவரும் தன்னைப் பின்பற்றும் தொண்டர்களிடம் தன்னால் போராட முடியும், தனக்கு மன வலிமையோடு உடல் வலிமையும் இருக்கிறது என்பதைக் காட்ட ஊர்வலம் நடத்தி அதில் ஓடவும் செய்து காட்டினார். எப்போதுமே இவரைப் போன்ற ஒருவருக்கு செல்வாக்குப் பெருகுகிறது என்றதும், எதிர்காலத்தில் நல்ல அறுவடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பல சுயநலப் பேர்வழிகள் இவரோடு கைகோத்துக் கொள்வது எப்போதும் நடப்பதுதான். அதுபோலத்தான் இவர் போராட்டங்களில் பங்குகொண்ட கேஜ்ரிவால் அண்ணாவோடு இருந்து பின்னர் தனிக்கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். அரசியல் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தில்தான் டெல்லி தேர்தல் வந்தது. தேர்தல் களத்தில் குதித்துத்தான் பார்ப்போம், கிடைத்ததைப் பீராய்ந்து கொண்டு முடிந்தால் அரசியல் இல்லையேல் இருக்கவே இருக்கிறது பொதுத் தொண்டு எனும் பெயரில் மீண்டும் போராட்டங்கள் என்று ஆம் ஆத்மி எனும் பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார், டெல்லி தேர்தலிலும் போட்டியிட்டார்.
தேர்தல் தொடங்கிய நேரத்தில் டெல்லியில் பாஜகவா ? காங்கிரசா ? என்றுதான் தொடங்கியது. போகப்போக மூன்றாவதாக வந்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி திடீரென்று முன்னேறத் தொடங்கியது. ஊடகங்கள் அனைத்துமே ஒருமுகமாக ஆம் ஆத்மி இந்த தேர்தலில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டப்போகிறது என்று ஆரூடம் சொல்லின. மற்ற கட்சியினர் எகத்தாளமாக சிரித்து ஆம் ஆத்மியாவது ஆட்சிக்கு வருவதாவது, இதெல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்று அதை பொருட்படுத்தாமல் ஒதுக்கினர். ஆனால் அந்த அதிசயம் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்று இரண்டாமிடம் பெற்றுவிட்டது. பாஜகவுக்கும் பெரும்பான்மை இல்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அரசியல் கட்சிகள் என்ன செய்வார்கள், குதிரை பேரம் நடத்துவார்கள். அல்லது மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்துக் கொள்வார்கள். எப்படியாவது ஆட்சி அமைப்பதில் ஊக்கம் காட்டுவார்கள். டெல்லி அரசியலில் இப்போது ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியா எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேள்விகளை நீ கேட்கிறாயா, நான் கேட்கட்டுமா என்பார், தருமி வேண்டாம் வேண்டாம் எனக்குக் கேட்கத்தான் தெரியும், நானே கேட்கிறேன் என்பார். அதைப்போல அரவிந்த் கேஜ்ரிவால் எதிரணியில் இருந்து கேள்விதான் கேட்பேன், ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தான் சுட்டிக் காட்டிய தவறுகளைத் திருத்தவும், ஊழல் இல்லாமல் ஆட்சி புரியவும் இப்போது இருக்கின்ற அதிகார அமைப்பை வைத்துக் கொண்டு நடத்திக் காட்ட முடியுமா என்கிற அச்சம் அவருக்கு இருப்பதால் ஆட்சி செய்ய ஒப்பவில்லை.
இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது. அங்குகூட இப்போதைய அமைப்பில் கட்சிகள் எதுவும் அப்போதும் இல்லை. அங்கு செனட் எனும் அமைப்பும் அதில் பிரிவுகளும் இருந்திருக்கின்றன. சாதாரண பொது மக்களின் பிரதிநிதிகள் அதில் அங்கம் வகித்திருக்கின்றனர். செல்வச் சீமான்களுக்கும் பிரதிநிதிகள் அந்த அவையில் இருந்தனர். வணிகர்கள் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர். இப்படி வெவ்வேறு குழுவினராக இவர்கள் செயல்பட்டது ஓரளவுக்கு இப்போதைய ஆளும் கட்சி எதிர்கட்சி போலத்தான் அமைந்திருந்தது.
ரோமாபுரியின் வீட்சிக்குப் பிறகு ஐரோப்பா அரசியல் கூச்சல் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1678க்குப் பிறகு இங்கிலாந்தில் மறுபடி இந்த அரசியல் பிரிவுகள் தோன்றின. அது என்ன 1678ஆம் வருஷம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம்! அந்த ஆண்டில் இங்கிலாந்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ரோமன் கேதலிக்கர்கள் இரண்டாம் சார்லஸ் மன்னனைத் தீர்த்துக் கட்டிவிட்டு அவர்கள் பிரிவைச் சேர்ந்த சார்லசின் தம்பி டியூக் ஆப் யார்க் ஜேம்ஸை அரசனாக்க முயல்வதாக ஒரு பரபரப்புச் செய்தி உலவியது. அப்படி அவர்கள் எதையும் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதும் இங்கிலாந்து பாராளுமன்றம் எல்லா ரோமன் கேதலிக்கர்களையும் ஒதுக்கிவிட்டு டியூக் ஆப் யார்க் ஜேம்சை அரசு கட்டிலுக்கு உரிமையில்லாதவராகவும் ஆக்கிவிட்டார்கள். அரசர் இரண்டாம் சார்லசுக்கோ இங்கிலாந்து நாடாளுமன்றம் அரச வம்சத்தாரின் விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதி நாடாளுமன்றத்தையே கலைத்து விட்டார். இப்போது ‘செகூலர்’ எனும் சொல் இந்திய அரசியலில் அதிகமாக ஈடுபடுகிறதல்லவா? பாஜக என்றால் மதவாதிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஜனதாதள் போன்றவர்கள் செகூலரிஸ்ட் என்கின்றனர். மதமே அரசியலை நிர்ணயிப்பதற்கும், ஒரு மதத்தில் இருப்பவர்கள் அரசியலில் வருவதற்கும் வித்தியாசமில்லையா என்ன? நம் செகூலரிஸ்டுகள் ஒருவன் ‘இந்து’ என்று சொல்லிவிட்டாலே அவன் மதவாதி. ஆட்சிபுரிபவன் ஒரு அவன் மதப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டாலே அவன் மதவாதி. அப்படியில்லாமல் இந்து பண்டிகைகள் எல்லாவற்றையும் குறைசொல்லி எதிர்த்துவிட்டு, மற்றெல்லா மதங்களின் பண்டிகைகளிலும் கலந்து கொள்பவந்தான் செகூலரிஸ்ட். இந்த செகூலரிசம் ஏற்பட்டது இங்கிலாந்தில் நடந்ததுதான், இங்கு நடப்பது கேலிக்கூத்து.
இங்கிலாந்து மக்கள் இரு பிரிவாக பிரிந்தனர். ஒரு பிரிவு சார்லஸ் மன்னனுக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு அவருக்கு எதிராகவும் திரும்பினர். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும்படி கேட்ட எதிர் பிரிவினர் ‘பெட்டிஷனர்கள்’ எனப்பட்டனர். மன்னனுடைய ஆதரவாளர்கள் அரசனுடைய கட்டளைக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்ததனால் ‘எதிர்ப்பாளர்கள்’ “Abhorrers” என வழங்கினர். ராஜாவின் கட்டளையை மாற்ற நினைப்பவர்களை இவர்கள் எதிர்த்தார்கள். இப்படி இவர்கள் எதிரெதிராக இருவேறு கட்சியினராகப் பிரிந்தனர். பிறகு ராஜாவின் ஆதரவாளர்கள் “Tories” என வழங்கப்பட்டனர். இந்த சொல் புராட்டஸ்டண்ட் ஆட்சியை எதிர்க்கும் அயர்லாந்து ரோமன் கேதலிக்கர்களைக் குறிக்கும். இந்த பழைய பெயர்கள் புதிய சொற்களைத் தாங்கி வரத் தொடங்கின.
அரசருக்கு சர்வ வல்லமையுள்ள அதிகாரங்கள் இருக்கவேண்டுமென்பது ‘டோரிக்களின்’ விருப்பம். இன்னொரு கட்சியினருக்கு சாதாரண மக்களின் செல்வாக்கு ஆட்சியில் இருக்கவேண்டுமென்பது. இவ்விரண்டு கட்சிகளும்தான் இங்கிலாந்தில் இருவேறு கட்சிகளாக உருவெடுத்தன. இப்போது இங்கிலாந்தில் டோரி என்பது கன்சர்வேடிவ் கட்சியாகவும், மற்றொரு கட்சி லேபர் கட்சியாகவும் இருந்து வருகின்றன.
பின்னாளில் உருவான ஐக்கிய அமெர்க்க நாட்டிலும் இருவேறு கட்சிகள் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று உருவாகி ஆளத் தொடங்கின. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இவ்விரு பெரிய கட்சிகள் தவிர ஓரிரண்டு குட்டிக் கட்சிகளும் உண்டு. ஆனால் இந்தியாவில் அப்படி இரு கட்சி என்பது இல்லாமல் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகி பல்வேறு கட்சிகள், தேர்தல் என்று வந்தால் இந்த குட்டிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கட்சியோடு கூட்டணி அமைத்து முற்போக்கு கூட்டணி, ஜனநாயகக் கூட்டணி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு தேர்தல் முடிந்தபின்னர் அவரவர் கட்சியை வைத்துக் கொண்டு போராட்டம், அது இது என்று காலத்தை நடத்துகின்றனர்.
எத்தனை கட்சிகள் இருக்கின்றனவோ, அத்தனை கட்சிகளுக்கும் கொள்கை என்று ஒரு விளக்கப் புத்தகம் உண்டு. அந்த கொள்கைகளைத்தான் அவர்கள் கடைபிடிக்கிறார்களா என்றெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு நாம் பார்க்கக் கூடாது. அந்தந்த சமயத்தில் எது சாத்தியமாகிறதோ, பெரிய கட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்வதோ அல்லது எதிர்ப்பதோ அதெல்லாம் அவரவர் சேர்ந்த கூட்டணிகளைப் பொறுத்து அமையும். இந்த சமரசத்துக்குக் “கூட்டணி தர்மம்” என்று பெயர். பிரதமர் ஒரு திட்டத்தை முன்மொழிந்து செயல்படுவார். அவர் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சிக்கு அதன் கொள்கைப் பிரகடனத்தின்படி ஏற்புடையது இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக அதை ஏற்றுக் கொள்வர். இது பரஸ்பரம் இரு கட்சிக்கும் பொருந்தும்.
இந்திய அரசியல் எங்கே போகிறது? மக்கள்தான் சிந்தித்து இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
ஜனநாயகம் என்ற ஒன்று ரோமானிய நாகரீகத்துக்கு முன்னரே இந்தியாவில் இருந்தது. பெயர்கள் தான் வேறு. தமிழ்நாட்டில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த குடவோலை முறை, எண்பேராயம் ஆகியவை அப்படி வந்தவை தான். கிராமங்களில் கிராம சபா என்று சொல்லுவார்கள். ஆனால் நம் நாட்டில் சரித்திரம் எழுதும் பொய்ப்பழக்கம் கிடையாது. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் தன்னுடைய பெயரை அதில் எங்கும் எழுதவில்லை. வரலாறு என்று ஒன்று எழுதப்படவில்லை என்பதால், இங்கு ஒன்றுமே கிடையாது என்று சொல்லிவிடுவதா ? ஜனநாயகம் என்பது ஒரு அணையாத விளக்கு. அது எப்போதும் மக்களின் இதயத்தில் உலகில் எல்லா நாடுகளிலும் குடியிருக்கும். ஏனெனில் உலகில் இருக்கும் ஆட்சி முறைகளில் அதுவே , மிக குறைந்த தீங்கு பயப்பது ஆகும். நமது வேதங்களின் அடி நாதமே , சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம் என்பவை தான். எனவே தான் நம் தமிழ் மூதுரைகளில் ” யாதும் ஊரே, யாவரும் கேளிர் ” ” தீதும் நன்றும் பிறர் தர வாரா” , ” உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே ” ஆகிய உயரிய கருத்துக்கள் வந்தன.
மக்கள் நடக்கும் தவறுகளை தட்டிகேட்கவேண்டும் இந்திராகாந்தி சுட்டு கொல்லப்பட்டார் அப்போது திருச்சியில் சில வெறியாளர்கள் தெருக்களில் உள்ள மின் கம்பங்களை உடைத்து சென்றார்கள் மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்
நடக்கவிருக்கும் 2014- மே மாத பாராளுமன்ற மக்களவை தேர்தலில் , தமிழக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து, கருத்துக் கணிப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.
1. முதலில் பொங்கலுக்கு முதல்நாள் அதாவது 13-1-2014 திங்கள் அன்று வெளிவந்த ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில், தமிழகம் முழுவதுமே சுமார் 48.49 சதவீதம் பேர் நரேந்திரமோடி பிரதமர் ஆவதை விரும்புவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கருத்துக்கேட்ட சாம்பிள் மொத்தம் 9174 வாக்காளர்கள் ஆகும்.
2. இன்று வெள்ளிக்கிழமை 17-01-2014 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பில் , தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் , ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 2000 பேர் வீதம் சுமார் 64,000 பேரிடம் கருத்துக் கேட்டு , கருத்துக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.இது ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பை விட, சுமார் 54800 பேரிடம் அதிகம் கருத்துப் பெறப்பட்டு ஆராயப்பட்டுள்ளது . அதாவது சுமார் 7 மடங்கு ஆகும் . குமுதம் ரிப்போர்ட்டர் விவரம் வருமாறு:-
கட்சி விழுக்காடு ( சதவீதம்)
அதிமுக 33.1
திமுக 26.5
பாஜக 17.8
விஜயகாந்த் 7.3
பாமக 5.1
காங்கிரஸ் 4.3
வைகோ 2.3
ஆமாத்மி 0.1
மற்றவர்கள் 3.5
ஆகமொத்தம் 100
இந்த சர்வே முடிவுகள் வெளியான இந்த வாரத்தில் , இதனை அலசி ஆராயும் அனைவரும் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வதுடன், பல விஷயங்களை நம்ப மறுக்கிறார்கள்.
அனைவரும், இதுவரை தமிழகத்தில் பாஜகவுக்கு 2 சதவீத ஆதரவு மட்டுமே இருந்தது ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த பின்னர், பாஜகவின் சாதனைகளைவிட , நரேந்திரமோடி என்ற குஜராத் முதல்வரின் பண்பு, நிர்வாகம் ஆகியவற்றால் கவரப்பட்டும் , காங்கிரசாரின் இமாலய ஊழல் , தீவிரவாதிகளை ஆதரிக்கும் காங்கிரசின் போக்கு, ஆகியவற்றால் வெறுப்பு அடைந்து, பாஜகவின் 2 சதவீதம் என்பது 30 சதவீதத்திற்கும் மேல் பெருகியுள்ளது என்று கூறுகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் என்ன கூட்டணிகள் அமைந்தாலும் , ஓட்டுப் பிரிவதால், எம் ஜி ஆர் கட்சிக்கு 30- எம் பிக்கு மேல் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு அதிக பட்சமாக போனாலும்,9 இடங்கள் தான் கிடைக்கும் என்று கருதுகிறார்கள்.
சர்வே புள்ளி விவரங்களை அவர்கள் நம்ப மறுப்பதற்கு முக்கிய காரணம்-
பிணத்துக்கு யாரும் ஓட்டுப் போடமாட்டான் . தமிழன் அவ்வளவு கேடுகெட்டவன் அல்ல. காங்கிரஸ் எப்படி 4.3 சதவீதம் பெறமுடியும் ? வாக்கு அளிக்கும் இயந்திரத்தில் கண் தெரியாமல், கை சின்னத்தில் இவ்வளவு பேர் ஓட்டுப் போடும்,அளவுக்கு தமிழகத்தில் பார்வை இல்லாத வாக்காளர்கள் இல்லை. தமிழகத்தில் கண் பார்வை அற்றோர் அனைவரும் தவறுதலாக காங்கிரசின் கை சின்னத்தில் வாக்களித்தாலும், ஒரு சதவீதம் தான் வரும். மேலும் கண் பார்வை அற்றோரிலும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒட்டுக்கிடையாது. எனவே, இந்த சர்வேக்களை நம்பாதீர்கள் என்று சொல்கிறார்கள்.
இந்திரா கட்சியின் உண்மை நிலை என்னவென்றால், அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு பிறகு மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் தான் இருந்து வந்தது. விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் காங்கிரஸ் வாக்கில் பெரும் சரிவு ஏற்பட்டு, அது நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. டூ ஜி முதலான பெரிய ஊழல்கள் வெளிப்பட்டு, இலங்கை சிவிலியன் தமிழர்களை காங்கிரஸ் கட்சிதான் கொன்று குவித்தது என்ற உண்மை தெரியவந்தபின்னர் ,திமுக மற்றும் காங்கிரசின் வாக்கு வங்கி சின்னாபின்னமாகி விட்டது. எனவே தான் இன்று தமிழகத்தில் அதன் வாக்கு வங்கி பாமக , சரத்குமார் ஆகியோருக்கு பின்னே போய்விட்டது.
ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 40 தொகுதியிலும் போட்டி போட்டாலும், அது இந்த கருத்துக்கணிப்பின் முடிவை பெரிய அளவில் மாற்றாது. வேண்டுமானால், காங்கிரசின் 4.3 என்பது 1.3 ஆக மாறும். மொத்தத்தில் நரேந்திரமோடியின் தேர்வு பாஜக வுக்கு தமிழகத்தில் நல்ல ஆதரவு வட்டத்தை பெருக்கியுள்ளது என்பது யாரும் இனி மறைக்க முடியாத உண்மை.
அம்மா உணவகம், மலிவு விலை குடிநீர், ஆந்திராவுக்கு போய் இஸ்லாமிய தீவிரவாதிகளை வேட்டையாடிப் பிடித்தது ஆகியவற்றின் விளைவாக அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை என்பதும், சிறிதளவு உண்மையே. ராமநாதபுரத்தில் சில இஸ்லாமிய அன்பர்களும், தூத்துக்குடியில் ரோமன் கத்தோலிக்க கிரித்தவரில் சிலரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது, அவர்களிடம் ஏற்பட்டுவரும் நல்ல மாறுதல்களை காட்டுகிறது. இந்த மாறுதல்கள் பாஜக என்ற கட்சிக்கு வளரும் ஆதரவு என்று கொள்வதைவிட, எல்லா மதத்தினரும் வளர்ச்சிப்பாதையில் செல்லவே விரும்புகின்றனர் என்பதையே குறிகாட்டுகிறது.
காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னரே விரட்டப்பட்டுவிட்ட கட்சி என்ற உண்மை நிதர்சனமாக தெரிகிறது. அடுத்த அதிர்ச்சி, நாடு முழுவதும், காங்கிரசின் ஓட்டுவங்கியில் ஆம் ஆத்மி ஓட்டை போட்டு, காங்கிரசை சாப்பிட்டுவிட்டது என்பது தான். இந்த பாராளுமன்ற தேர்தலில் , லோக்சபாவில் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஏதாவது ஒரு டம்மி தான் இருப்பார். காங்கிரஸ் இதுவரை முதல் இரு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த மே-2014 மாத தேர்தலுக்கு பின், பாராளுமன்றத்தில் 6-இலிருந்து 9-ஆவது இடத்துக்குள் தான் காங்கிரஸ் வரும். அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் நிச்சயம் இழக்கும். பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
காங்கிரஸ் ஒழிவது நம் நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். தமிழினத்தினை வைத்து , தங்கள் குடும்பத்தையும், வெளிநாட்டு வங்கிகளில் தங்கள் திருட்டுக் கணக்குகளில் , வங்கி இருப்பை உயர்த்திக்கொண்டோருக்கும், லட்சக்கணக்கில் தமிழன் பிணம் இலங்கையில் விழ ஆயுதமும், பணமும் கொடுத்த சோனியா கட்சிக்கும் தமிழன் இனி ஓட்டுப் போட மாட்டான். இந்த தைப்பூச திருநாளில், பாஜகவினரும் மத்திய அரசில் திறம்பட ஆட்சிபுரிய ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். நம் நாட்டில் வாழும் மைனாரிட்டி மக்களில் சிலர் மட்டுமே தீவிரவாதிகள், அனைவரும் அல்ல. மைனாரிட்டி மக்களுக்கு தனிமை உணர்வை ஊட்டிவிட்ட இந்திரா காங்கிரசை விட நம் நாட்டுக்கே பெரிய எதிரி யாரும் இல்லை. வரும் தேர்தல் ஒரு சூரசம்ஹாரமாக அமையும். காங்கிரஸ் அரக்கனும் அவனுக்கு சொம்புதூக்கிய இனத்துரோகிகளும் அழிவார்கள்.
இந்தியா வாழ்க. இந்தியா உயர்க , இந்தியா வெல்க.
வரலாறு திரும்புகிறது. டூஜீ நாயகி கனி திருச்சி திமுக மாநாட்டில் இன்றுபேசியபோது மக்கள் புரட்சி செய்யவேண்டும் என்றும், இந்தி எழுத்துக்களை அண்ணா அழித்தார், கருணாநிதி அழித்தார் என்று பழைய ஊசிப்போன கதைகளை சொல்லிப்பேசி உள்ளார். திமுகவுக்கு ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் மேலும் மேலும் ஓட்டு குறைந்து கொண்டே போகிறது. கனியின் தேவை இல்லாத இந்த பேச்சினால் , திமுக இனி நாலாவது இடம் போனாலும் ஆச்சரியப்பட வேண்டாம். நிச்சயம் ஐந்தாவது இடம் போக முடியாது. ஏனெனில் நாலு அணி தான். எனவே சுயேச்சைக்கு கீழே போக நேரிடாது. நாட்டில் கலகத்தை உருவாக்க நினைக்கும் இந்த அம்மையாரை தேசப்பாதுகாப்பு கருதி மீண்டும் திகார் விருந்தாளியாக ஒரு நீண்டகாலம் வைத்திருப்பது நாட்டுக்கு நல்லது. கலைஞருக்கு இப்படி மக்களாலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. என்ன செய்வது ? திமுகவின் கடைசி அத்தியாயம் இம்முறை எழுதப்படும். இனத்துரோக இயக்கம் திமுக என்பதை தமிழன் புரிந்து கொண்டுவிட்டான். இம்முறை திமுகவை துடைத்து எறிந்து விடுவார்கள். ஒரிஸ்ஸாவில் மருத்துவக்கல்லூரி , கர்நாடகத்தில் ஏராளமான சொத்துக்கள், உலக நாடுகளில் கிழக்கு மேற்கு என்று எல்லா திக்கிலும் உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ள குடும்பம் வாய்க்கு வந்தபடி பேசுவதை மக்கள் கேட்டு ஏமாற மாட்டார்கள். துலாத்தில் செவ்வாய் புகுந்தவுடன் பேச்சில் சனியன் தாண்டவமாடுகிறான். ராகு செவ்வாய் சனி சேர்க்கை திமுகவுக்கு பெரிய ஆபத்து.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை இன்றைய தேதியில் சுமார் 120 கோடியை தொட்டுள்ளது. இதில் இந்தியை தாய் மொழியாக கொண்டோரும், மற்றும் இந்தியில் பேச எழுத படிக்க தெரிந்தோரும் இன்றைய தேதியில் 110 கோடி ஆவார்கள். உலகில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட , இந்தியாவுடன் வர்த்தக உறவுகள் கொள்வதற்காக , தங்கள் கம்பெனி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு செயல்முறை இந்தி கற்பித்து , இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். தமிழகம் மட்டும் இந்தியை கற்காததால், தமிழர்களாகிய நமக்கு மட்டுமே நட்டம். தமிழகத்திலும் சுமார் இரண்டு கோடிப்பேர் ,
சி பி எஸ் ஈ பள்ளிகள் மூலமும், தட்சினபாரத் இந்தி பிரச்சார சபா மூலமும் இந்தி கற்றுவிட்டனர். இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தன தாய் மொழியை தவிர மேலும் ஒரு மூணு அல்லது நாலு முக்கிய மொழிகளில் பேச, படிக்க தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது.
உண்மை இப்படி இருக்க, நேற்று திமுக மாநாட்டில் உரை ஆற்றிய கனிமொழி அவர்கள் , அண்ணா கலைஞர் நாவலர் நெடுஞ்செழியன் இன்னபிற முன்னாள் மற்றும் இந்நாள் திமுக தலைவர்கள் இந்தி எழுத்துக்களை 1965- லே அழித்ததை 49 ஆண்டுகள் கழித்து நினைவு கூர்ந்துள்ளார். திமுக திசை மாறி செல்ல ஆரம்பித்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. தமிழன் இனிமேலும் திமுக பின்னால் செல்லமாட்டான். சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக்கொள்கிறார் கனிமொழி. இது தேவையா ? எல்லாம் தலைவிதி தான்.
1. அண்ணா கலைஞர் நாவலர் பேராசிரியர் போன்ற திமுக தலைவர்கள் 1965-ஆம் ஆண்டு இந்தியை அழித்ததை கனிமொழி தனது திருச்சி திமுக மாநாட்டு உரையில் மேற்கோள் காட்டி பேசி உள்ளார். இந்த மாநாட்டில் அதனைபேச வேண்டிய தேவை எதுவும் இல்லை.
2. இந்தி 80 கோடி மக்களின் தாய்மொழி ஆகும்.
3. மேலும் இந்தியை தாய் மொழியாக கொண்டிராத பிற இந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழி பேசுவோர் அனைவரும் தங்கள் பள்ளிகளில் தாய்மொழி, ஆங்கிலம், மற்றும் கூடுதலாக இந்தியை கற்கின்றனர்.
4. அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய வணிக சந்தையினர் இந்தியாவுடன் தங்கள் வணிக தொடர்பினை பராமரிக்க , தங்கள் கம்பெனிகளின் இந்திய வியாபாரத்தை விரிவு படுத்தவும் , விற்பனையை அதிகரிக்கவும் , தங்கள் கம்பெனி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் , செயல்முறை இந்தி கற்பித்து இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.
5. தமிழகத்தில் மட்டும் திமுக 1965-லே செய்த சதியால், தமிழன் கடந்த 50 வருடமாக ஏராளமான நல்ல வாய்ப்புக்களை இழந்துள்ளான். கலைஞரின் அக்காள் பேரனை மட்டும் இந்தி படிக்கவைத்து , பேரனுக்கு இந்தி தெரியும் எனவே அவனை எடுத்த எடுப்பிலேயே கேபினெட் மந்திரி ஆக்குகிறேன் என்று சொன்னார் மஞ்சளார் அவர்கள்.
6. கனிமொழியின் இந்த பேச்சு , திமுக மீண்டும் அழிவுப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது என்பதனை தெளிவாக்குகிறது. ஏனிந்த உளறல் ? மேடைக்கு எதிரே டாஸ்மாக் போதையில் குத்தாட்டம் போட்ட கழகக் கண்மணியினரை விடவும் , மேடையில் பேசிய கனியின் உரை மிக மோசமானதாக இருந்தது. இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் பேச்சுக்களை எமெர்ஜென்சி காலத்துக்கு பிறகு இப்போது தான் திமுகவினர் பேச ஆரம்பித்துள்ளனர். திமுகவினரை மக்களிடம் இருந்து சுத்தமாக விலக்கிவைக்கவே இதுபோன்ற பேச்சுக்கள் வழி வகுக்கும். 13- ஆண்டு வனவாசம் முடித்த கலைஞருக்கு இது நிச்சயம் தெரியும். அய்யா மீண்டும் ஒரு வனவாசம் வேண்டாம். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. நம் மக்கள் நல்ல தீர்ப்பு அளிக்க இருக்கிறார்கள்.
அத்விகா…
//இந்தி 80 கோடி மக்களின் தாய்மொழி ஆகும்.//
அதனால் தமிழர்களும் இந்தியை கற்று கொள்ள வேண்டும் என்று ஏதாவது கட்டாயமா என்ன. 1965ஆம் ஆண்டு நடந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம் அல்ல, அது இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம். ஒருவர் எந்த மொழியை கற்க வேண்டும் என்பது அவரவரின் சொந்த விருப்பங்களை பொருத்தது. எந்த மொழியையும் யார் மீது திணிக்க எவருக்கும் இங்கு உரிமை இல்லை. ஒருவருக்கு தேவைபட்டால் இந்தி என்ன பிரெஞ்சு.இலத்தின், சீனம்,உருது, அரபி,கிரேக்கம் என்று எந்த மொழிகளை வேண்டுமானாலும் கற்று கொள்ளட்டும். அதை விடுத்து, இந்திய மக்களின் தொகையில் 80 கோடி பேர் இந்தியை தாய்மொழியை கொண்டவர்கள் அதனால் இந்தியை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் அனைவரும் இந்தியை கட்டாயம் கற்று கொள்ள வேண்டும் என்று சொல்வதெல்லாம் ஏற்கவொண்ணா நகைப்பிற்குரிய கருத்தே.
தாயுமானவன் இந்த விஷயத்தில் நான் எழுதியதை தாங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. விரும்புவோர் கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும். ஒரு விருப்பப்பாடமாக இந்தி போதிக்கப்படவேண்டும். இதில் திணிப்பு எதுவும் இல்லை. கற்க விரும்புவோர் கற்பார்கள். எல்லோரும் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. மேலும் இந்தியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் அனைவரும் இந்தி கற்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. தமிழகத்தின் 8 கோடி மக்கள் தொகையில் , தமிழகத்தை விட்டு வெளியே செல்லாமல் உள்ளூரிலேயே வியாபாரம் அல்லது தொழில் அல்லது வேளாண்மை செய்து பிழைப்போர் சுமார் 2 கோடிப்பேர்தான். எஞ்சிய ஆறு கோடிப்பேர்கள் தங்கள் வேலை, தொழில் நிமித்தம் வெளிமாநிலத்தாருடன் தொடர்பு கொள்ளவேண்டிய தேவை உள்ளது. அதற்கு பேச்சு இந்தி ( spoken hindi ) மிகப் பயன்படும்.
ஹிந்தி என்ற முழு மொழியையும் கற்கத்தேவை இல்லை. அன்றாடம் பயன்படும் சுமார் 200 வாக்கியங்களை கற்பது மிகவும் தேவையானது. மந்தாரின், காண்டனீஸ், இந்தி ,ஸ்பானிஷ், ஆங்கிலம், ஆகிய ஐந்து மொழிகளில் அன்றாடம் உபயோகப்படும் சுமார் 200 வாக்கியங்களை பேசக் கற்பது நல்லது. பிறந்தது முதல் இறுதிக்காலம் வரை உள்ளூரிலேயே நாம் வாழ்வை ஒட்டிவிடமுடியும் என்ற நிலை இருப்போருக்கு இந்த கருத்து சொல்லப்படவில்லை.
திருமதி அத்விகா,
உங்கள் கருத்தைத் திரு தாயுமானவுடன் சேர்ந்து மறுதளிக்கிறேன்.
நானாகவே விரும்பி 15 வயதிற்குள் என் தாய்மொழி தமிழுடன், ஆங்கிலம், சமஸ்கிருதம், மற்றும் இந்தி மொழிகளைக் கற்றேன். இந்தியில் விசாரத் தேர்விலும் தேறி உள்ளேன்.
தாயுமானவன் குறிப்பிட்டுள்ள இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1965ல் நடந்தபோது நானும் ஒரு மாணவனாக இருந்தேன். அப்பொழுது உங்களைப் போன்றே ‘இந்தியைக் கற்றுக்கொண்டால் என்ன?’ என்றுதான் என் உடன் மாணவர்களைக் கேட்டேன். நகைப்புக்கும், அதட்டலுக்கும் உள்ளானேன்.
ஆனால், அமைதியான் அறப் போராட்ட ஊர்வலம் நடத்திய மதுரை மாணவர்கள் மீது அரிவாள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, ஊர்வலம் மேற்கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு மாணவரின் உயிரைக்குடித்து, இன்னொரு மாணவரைக் குற்றுயுராக்கியதை நேரில் கண்டபோதுதான், “தொண்ணூறு ஆண்டுகள் நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயருக்கும், வடக்கிலிருந்து அவர்கள் மொழியைத் திணிக்க முயலும் இந்தி வெறியர்களுக்கும் என்ன வேறுபாடு?” என்று என் மனதிற்குள்ளாகவே புழுகினேன். அந்த ஊர்வலத்தில் மனமில்லாமல், கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைக்கப்பட்டு எனக்கு,அச்சம்பவம் இன்னும் என் நெஞ்சில் ஆறாத குழிப்புண்ணாக இருந்து வருகிறது.
உப்புச் சத்தியாக்ரகத் தொண்டர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்த, ஜாலியன்வாலா பாக்கில் 450 தோட்டக்களைக் கொண்டு 400 குற்றமற்றவரின் உயிரைக்குடித்த ஆங்கிலேயரை ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதானே கருதுகிறோம்? ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் மூலமே, இந்தியர்களின் உயிரைக் குடித்தார்கள். இந்தி வெறியர்கள், தமிழர்கள் மூலமே தமிழ் மாணவனின் உயிரைக் குடித்தார்கள். இந்திய மாணவர்களுக்கு (தமிழர்களுக்கு), இந்தியாவில் அமைதியாக் ஊர்வலம் நடத்தி, தங்கள் பேச்சுரிமையை வெளிப்படுத்த உரிமை இல்லை என்றால், வெள்ளையருக்கும், இந்தி வெறி பிடித்த அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
ஆங்கிலம் உலக மொழி ஆகி விட்டது. அதைக் கற்றால், உலகெங்கிலும் சென்று வெற்றி பெறலாம். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிராசத்தின் ஒரு ஒட்டு மூலம் நுழைந்தது இந்தி. அது பெரும்பான்மை மொழியும் அல்ல. அது ஒரு பெரிய சிறுபான்மை (major minority) மொழியே ஆகும். அதனுடைய பல்வேறு கூற்று மொழிகளில் இருக்கும் வேறுபாடு, தமிழுக்கும், மலையாளத்திற்கும் இருக்கும் வேறுபாடை விட அதிகமானது. இவற்றையெல்லாம் இந்தி என்று கணக்கில் சேர்த்துதான் இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்தியாவின் அரசு மொழியாக நான் வடமொழியை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால், எல்லோருக்கும் தெரியாத மொழி அது. எனவே, உயர்வு தாழ்வு மனப்பான்மை தோன்ற வழியில்லை. ஆனால் இந்தி அரசு மொழி ஆவதன் மூலம், அந்த மொழி பேசுபவர்கள் உயர்வு மனப்பான்மையும், மற்றவர் தாழ்வு மனப்பான்மையும் கொள்ள வழி இருக்கிறது. உயர்வு மனப்பான்மை மற்றவரைக் கீழானவர் என்று நினைக்கவும் வழி வகுக்கும்.
திருமதி அத்விகா, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பொது நீங்கள் பிறந்து இருந்தீர்களா என்றுகூட எனக்குத் தேரியாது.
திரு ரூபன் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எழுதி, உண்மை வரலாற்றை நம் முன் வைப்பதால்தான், இனி இந்துக்களுக்கு அநீதி விளைவிக்கப்பட முடியாமல் பாதுகாத்துக்கொள்ள வழி வகுக்க முடியும். அதே போல, இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தப் பற்றி அறிந்து கொண்டால்தான், தமிழ் அழிந்து போகாமல் காத்துக்கொள்ள முடியும்.
நான் தமிழ் வெறியன் அல்ல. எனக்கு ஆறு மொழிகள் தெரியும். ஆனால், எந்த ஒரு மொழியையும் என்மீது திணிப்பது என் உரிமையைப் பறிப்பதற்கு ஈடாகும் என்றே நம்புகிறேன்.
அமரகவி பாரதி சொன்னான்: “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்; இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.” மேலும் சொன்னான்:
“தமிழ் இனி மெல்லச் சாகும், அந்த
மேலை நாட்டு மொழிகள் இப்புவிதனில் மேவும்
என்றொரு பேதை சொன்னான்..ஆ!
இவ்வசை என் செவிக் கெட்டலாமோ?”
இப்பொழுதே தமிழ் நாட்டில் தமிழ் அழிநது வரும் கேவலமான நிலையை நாம் பார்க்கிறோம். மதிப்பென்களுக்காக, மாணவர்கள் தமிழைக் கற்க மறுத்து ஒதுக்கும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம். இதைச் சரி செய்ய முற்படாமல், இந்தியைக் கற்க வேண்டும் என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை. இந்தியைத் தாரமாக வரியுங்கள். ஆனால் தாய் தமிழ்தான். தாய்க்குப்பின் தாரம் என்ற மூதுரையை மறக்க வேண்டாம்..
நான் கூறியது, உங்கள் மனத்தை வருத்தினால், அருள்கூர்ந்து அதைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் ‘தமிழ்’ இந்துக்களாக இருந்து விட்டுப் போவோமே?
திருமதி அத்விகா,
இன்னும் ஒன்று, வேலை செய்யத் தமிழ் நாட்டில் ஆள்கள் கிடைப்பதில்லை என்று அறிகிறேன். வெளிமாநிலத்தார் எத்தனை ஆயிரம் பேர் தமிழ் நாட்டிற்கு வேலை தேடி வந்திருக்கிறார்கள்? அப்படி இருக்கையில், அந்த வெளிமாநிலத்தாரை தமிழைக் கற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தாது, அவர்களுடன் இந்தியில் பேச முற்படும் தமிழரைப் பற்றி என்ன சொல்வது? நாம் மட்டும் வெளி மாநிலத்திற்குப் போகும்போது இந்தியில் பேச வேண்டும், அவர்கள் இங்கு வரும்போது தமிழ் கற்றுக்கொள்ள வேண்டாம்என்றால் அது என்ன நியாயம்?
திருமதி அத்விகா,
முதலில் தி.மு.கவுக்கு ஓட்டுப் போடச் சொன்னது யார். மூதறிஞர் இராஜாஜிதான். பிற்காலத்தில் அதற்காகத் தானே வருந்தி இருக்கிறார். ஒட்டகத்தை கூடாரத்தின் உள்ளே நுழைய உதவி செய்துவிட்டு, விஷத்தைக் கக்கும் பாம்பிற்குப் பால் வார்த்து விட்டு, பிறகு வருந்தி என்ன செய்வது. தன்னமில்லாத் தலைவர் காமராஜரே அந்த அலையில் தோற்கடிக்கப் பட்டு விட்டார். காங்கிரசை அழிக்க, தி.மு.வை உள்ளே கொண்டு விட இராஜாஜியும் ஒரு ,முக்கியமான காரணமாக இருந்தார். அரசியல் சாணக்கியரான,மகாமேதையான அவர் செய்த தவற்றின் பலனை இன்னும் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். இந்தி எதிர்ப்புப் போராட்ட துப்பாக்கிச் சூடு எண்ணற்ற பெற்றோருக்கு காங்கிரஸ் மேல் வெறுப்பை உண்டாக்கியது. இதனுடன் தி.மு.கவைப்பற்றிய இராஜாஜியின் நல்மொழிகள் தி.மு.க எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை 45 லிருந்து மும்மடங்கு உயர்த்தியது.
I quote Lord Mecaulay about Anti-Hindi imposition (not Anti-Hindi) agitations and the beginning of DMK legacy so that we all learn everything correctly.
“A little learning is dangerous, drink deep.”
அத்விகா அவர்களுக்கு, உங்கள் கருத்துக்களுக்கு வரிசைக் கிராமமான பதில்கள்:
1. கனிமொழி பேசக் காரணம் அரசியல். அது அவர்களின் அரசியல் பதை, அதில் அவர்கள் பயணிப்பதில் என்ன தவறு? ஜனநாயக நாட்டில் இந்தக் கருத்தைக் கூடச் சொல்லக் கூடாதா?
2. இந்தி எத்தனைக் கோடிப் பேரின் தாய் மொழியாகவும் இருந்து விட்டுப் போகட்டும், அதானால் நான் அதைப் படிக்க வேண்டும் என்று சொல்வது தாயுமானவன் சொல்வதுபோல நகைப்புக்குரியது.
3. மராத்தி, குஜராத்தி மொழிகள் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவர்கள் ஹிந்தி படிப்பது பெரிய விஷயம் இல்லை. உண்மையில் மராத்தியர்களும் குஜராத்திகளும் கிராமப்பக்கங்களில், இந்திக் கல்வியை முன்னிலைப்படுத்துவதை விரும்பவில்லை.எனது பயணங்களில் நான் இதை அனுபவப் பூர்வமாகக் கண்டிருக்கிறேன். பால் தாக்கரெயுடைய கருத்துக்களில் இதுவும் ஒன்று. நிற்க, கர்நாடகாவில் கற்கிறார்கள், ஆந்திராவில் கற்கிறார்கள் என்பதால் நாமும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
4. அமெரிக்கர்களோ, ஐரோப்பியர்களோ வணிக ரீதியில் செய்வதற்காக நாம் பள்ளிகளில் இந்தி கற்கவேண்டும் என்பது சரியா என யோசியுங்கள். நமது திருப்பூர்/ ஈரோட்டுக் காரர்கள் தமது வணிகத்துக்காக இந்தி பேசுகிறார்கள். அவர்கள் என்ன பள்ளியிலா படித்தார்கள்? வணிகத்துக்காக என்று வரும்போது அவரவர் வசதிப்படி கன்னடம் தெலுங்கு, மராத்தி, சவுராஷ்டிரம் என்று கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். என் திருப்பூர் நண்பர் ஒருவர் போஜ்புரி கூடப் பேசுகிறார் என்றால் பாருங்களேன். இதற்காக எல்லாரும் இந்தி கற்க வேண்டும் என்பது சரியல்ல.
5. தமிழகத்துக்குத் திமுக செய்த மிகப் பெரிய ேவை ஒன்று உண்டென்றால் அது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான். அதனாலும்தான் (இந்த ‘உம்’ விகுதியைக் கவனத்தில் கொள்க) தமிழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. ஏனைய இந்திய மொழிகளில் இல்லாத அளவுக்குத் தமிழில்தான் திரைப்பட, தொலைகாட்சி, கலை, இலக்கிய முன்னேற்றங்கள் கண்டிருக்கிறோம் என்பது மிகை அல்ல. ஆனால் இந்தப் பலன்களை அறுவடை செய்தது கருணாநிதியும் அவரது குடும்பமும் மிக அதிக அளவில் என்பது வருந்தத் தக்கது. அது ஊழலின் ஊற்றுக் கண். ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது குடும்பத்தின் குற்றங்களுக்காக ஒரு மொழியை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழுக்குப் பாதுகாப்பு இந்தித் திணிப்பை எதிர்த்ததே. அந்த நிலை வந்ததால்தான், இன்று தமிழ் இந்து என்ற ஒரு தளம் ஆரம்பிக்கப்பட்டது. வேறு எங்கும் இது போல கன்னட இந்து, தெலுங்கு இந்து மலையாள இந்து என்றெல்லாம் ஆரம்பிக்கும் அவசியம் ஏன் வரவில்லை என யோசியுங்கள். தமிழ் எனது தாய்மொழி என்று அறுதியிட்டுக் கூறாததன் விளைவை நம்மில் பலரும் அனுபவிக்கிறோம்.
// தமிழகத்தின் 8 கோடி மக்கள் தொகையில் , தமிழகத்தை விட்டு வெளியே செல்லாமல் உள்ளூரிலேயே வியாபாரம் அல்லது தொழில் அல்லது வேளாண்மை செய்து பிழைப்போர் சுமார் 2 கோடிப்பேர்தான். // இந்தத் தகவல் சரியல்ல.
5. தமிழை முன்னிறுத்தியதால் தமிழன் ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளான் என்பதே உண்மை. நான் மேலே சொல்லியபடியான முன்னேற்றம் தவிரவும், இந்தியாவில் அரசியல் ரீதியாக நமக்கு எதனால் சிறப்பு இடம் என யோசியுங்கள். நம்மிடம் 40 தொகுதிகள்தான், நம்மை விடவும் மகாராஷ்டிரா, ஒன்றிணைந்த மத்தியப்பிரதேசம், ஒன்றிணைந்த பிஹார், ஒன்றிணைந்த ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகியவை அதிகத் தொகுதிகள் கொண்டவை. ஆனாலும் தமிழ்நாட்டின் திமுகவும் அதிமுகவும் எதனால் மத்திய ஆட்சியில் 1990கலில் இருந்து முக்கிய இடத்தைப் பிடித்தன? காரணம் இந்தி மூலம் வட இந்திய அரசியல்வாதிகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. நமது மொழிக்குப் பாதுகாப்பு ஏன் வேண்டும் என்பதற்கு இது ஒன்றே போதும்.
6. கனிமொழியின் இந்தித திணிப்பை எதற்கும் பேச்சு திமுகவை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் என்பது மேலெழுந்த வாரியானது. அதுதான் அவர்களின் அரசியல் அடித்தளம். அதனால்தான் வட இந்திய அரசியல்வாதிகள் அவர்களை மதிக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு வாக்கு சேகரிக்கும் மந்திரம். இதனால் வாக்கு கிடைக்கிறதென்றால் இந்தக் கருத்துக்கு மக்களிடையே ஆதரவு உண்டென்பது உறுதியாகிறது.
இவை எல்லாவற்றையும் விட, தமிழ்நாட்டுக் கிராமங்களில் சிறுவயதிலேயே ரளவு இந்தி பேசவாவது கற்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு முக்கிய இன்றியமையாத காரணம் உள்ளது. கடத்தப் படும் பருவப் பிராயச் சிறுமிகள் வட நாட்டிற்குக் கொண்டு போய்விட்டால் மொழி அறியாமையால் பாலியல் அடிமைகளாக நேரிடுகிறது. இதைத் தடுக்க அவர்களுக்கு சிறிது அறிவு அவசியம் என்பது மட்டும் என்ன நெடு நாளாக உறுத்துகிறது. மொழி அறியாத இடங்களுக்குக் கடத்தித்தான் பாலியல் தொழிலில் சிறுமியர் புகுத்தப் படுகிறார்கள். அப்படியானால் வட இந்தியச் சிறுமியர் தமிழ் போன்ற மொழிகளை அறிவதும் அவசியம் ஆகிறது.
கனி மொழி எப்போதுமே தனி வழிதான். இன்றைய கால கட்ட பிரச்சனைகளை பேசு என்றால் தேவை அற்றதை பேசுவார். 1965 ல் வணிக விளம்பர பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழித்ததாக பெருமைப் பட்டு கூறும் அந்த சீமாட்டிக்கு எனது ஒரே கேள்வி. திமுகவினரின் ஜேபிகளில் (Pocket ) வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களில் இந்தி எழுத்துக்கள் இல்லையா? அதை தார் கொண்டு வேண்டாம் கருப்பு மசி (ink ) கொண்டு ஆத்திரத்தோடு அழிக்கலாமே! அதை இதுவரை செய்தீர்களா? அப்படி நீங்கள் செய்யமாட்டீர்கள். ஏனென்றால் அந்த நோட்டுக்கள் செல்லாததாகிவிடும். உங்களுக்குத்தான் நஷ்டம் அதனால் அதை செய்யமாட்டீர்கள்.இதுதான் உங்கள் கொள்கை பிடிப்பா? வணிக விளம்பர பலகைகளை அழித்தால் எவனுக்கோதானே நஷ்டம்? நமக்கு என்ன வந்தது என்று புகுந்து விளையாடுகிறீர்கள்? அது சரி சீமாட்டி! நீங்கள் தமிழே பாட மொழியாக இல்லாத Church park convent ல் தானே நீங்கள் படித்தீர்கள்? உங்களுடைய வகுப்பு தோழி Jeppiyar ன் மகள்தானே!உங்கள் அன்பு அப்பாவின் பேத்தி செந்தாமரை சபரீசன் சென்னை வேளச்சேரியில் “சுன்ஷினெ மாண்டிசேரி மழலையர் & தொடக்கப் பள்ளிக்கு இயக்குனராக இருக்கின்றார். அங்கு ஆங்கிலம் மற்றும் இந்தி கற்று கொடுக்கப் படுகிறதே! அந்த பள்ளிகூடத்தை போய் கடப்பாரை கொண்டு இடிப்பாயா?
திரு தாயுமானவன்
“ஒருவர் எந்த மொழியை கற்க வேண்டும் என்பது அவரவரின் சொந்த விருப்பங்களை பொருத்தது. எந்த மொழியையும் யார் மீது திணிக்க எவருக்கும் இங்கு உரிமை இல்லை”.
ஆம் சரிதான் அந்த உரிமை அரசுப்பள்ளிகளில் ஒரு பாடமாக ஹிந்தி இருந்தால் தான் மக்களுக்குப்பயன்படும். ஹிந்தி வேண்டுமானால் காசுகொடுத்துக்கற்றுக்கொள்ளுங்கள் என்பது நியாயமில்லை. ஹிந்தியை அரசுப்பள்ளிகளில் கற்பிக்கமறுப்பது மக்கள் விரோதம் அதுவும் ஏழைமக்களுக்கு விரோதம்.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஹிந்தி மட்டுமல்ல சமஸ்கிருதம், தெலுகு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படவேண்டும். அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை விருப்பபாடமாக கற்க வாய்ப்பளிக்கப்படவேண்டும்.
UPTO 1967, HINDI WAS ONE SUBJECT IN GOVT SCHOOLS. THERE WAS EXAMINATION IN HINDI ALSO. BUT THAT MARKS WILL NOT BE CONSIDERED FOR PROMOTION. EVEN IF WE GET ZERO, WE WILL BE PROMOTED TO NEXT CLASS. AFTER 1967, HINDI WAS ABOLISHED FROM SCHOOLS. STILL SO MANY PEOPLE ARE BOASTING THIS AS A VICTORY. AS ON TODAY, ALL MATRICULATION, CBSE SCHOOLS ARE HAVING HINDI AS ONE SUBJECT. BUT THE POOR STUDENTS WHO COULD NOT JOIN PRIVATE SCHOOLS ARE NOT ALLOWED TO STUDY HINDI. IF ANYBODY TELLS THEM THEY CAN STUDY PRIVATELY BY PAYING MONEY, IS A CRUEL JOKE. IF THEY HAVE MONEY WHY THEY CAMTO GOVT SCHOOLS. I WAS ALSO A STUDENT IN 1965 DURING HINDI AGITATION. ONE SUBSTATION ALSO WAS BURNT TO DEATH. WHEN SOME AGITATION IS TAKING PLACE, WHEM MOBOCRACY TAKING OVER THE SITUATION, LAW AND ORDER TO BE MAINTAINED. I THINK THERE IS NO CONFUSION ABOUT IT.
FINALLY I WANT TO SAY, BRING BACK THE SAME SITUATION BEFORE 1967. THOSE WHO WANT TO STUDY LET THEM STUDY. THOSE WHO DONT WANT TO STUDY, LET THEM GET ZERO. IT WILL NOT AFFECT YOUR CARRIER. BUT WE CAN NOT DENY ONE OPPORTUNITY TO POOR.
I WAS ALSO A GOVT SCHOOL STUDENT. AT HAT TIME, NO PRIVATE SCHOOLS IN MY ENTIRE TALUK.
ஹிந்தி படிப்பதால் எப்படி தமிழ் அழியும் என்பது புரியாத புதிர். பல மொழிகளை இளமையிலேயே கற்பவனுக்கு மொழி அறியும் திறன் இயல்பாகவே அதிகமாகிறது என்பது மொழியியல் வல்லுனர்களின் ஆராய்ச்சி முடிபு.
கொஞ்சம் யோசித்தால் ஒன்று விளங்குகிறது சமஸ்கிருதம் தமிழுக்கு எதிரானது என்று இரண்டுக்கும் பூசல் கதைகட்டிய இவாஞ்சலிகல் கிறிஸ்தவ இறையியல் மதமாற்றிகளின் முயற்சியின் விளைவே இந்த இந்தி எதிர்ப்பு சித்தாந்தம்.
இன்னும் சொல்லப்போனால் ஹிந்தியை எதிர்த்த அந்த அளவுக்கு இவர்கள் ஆங்கிலத்தினை ஆதரித்தார்கள். அந்த கலாச்சாரத்துக்க்கு அடிவருடிகளாக் இன்னமும் இருக்கிறார்கள். ஆங்கிலப்பள்ளிகளை ஆதரித்தும் இவர்களே. இவர்கள் வாரிசுகள் ஆங்கிலப்பள்ளியிலேயே படித்தது இவர்களின் தமிழ் பற்றின் தரத்தினைக்காட்டும்.
தமிழ் மட்டுமல்ல பல்வேறு பாரத மொழிகள் செழிக்கவேண்டும். தாய்மொழிக்கல்வி முக்கியத்துவம் பெறவேண்டும். தாய்மொழியை உயர்வாக எண்ணி அதில் பேசுவதில், எழுதுவதில் மக்கள் மகிழ்ச்சி அடைபவர்களாக இருக்கும் வரை அவை வாழும். அதைவிட்டு தாய்மொழியைத்தாழ்வாக எண்ணி மற்ற மொழிகளை வீட்டில் பேசுவோர் பெருகப்பெருக தாய்மொழி அழியும். ஆக அனைவரும் செய்யவேண்டியது தாய்மொழி பேணுதல். மற்றமொழிகளை கற்காமல் ஒதுக்குதல் அல்ல.
திரு சிவஸ்ரீ விபூதி பூஷன் அவர்களுக்கு,
இன்னொரு சிவபக்தன் என்ற முறையில் சிவனடியாரான உங்களுக்கு என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
//ஹிந்தி படிப்பதால் எப்படி தமிழ் அழியும் என்பது புரியாத புதிர்.//
தற்காலத்தில், தமிழை விடுத்து, இந்தியைக் கற்றுக்கொள்வததால்தான் தமிழ் அழியும் அன்பதே எங்கள் கூற்று. சென்னையில் தற்போழுதைய தமிழ் மாணவர்களை எத்தனை பேருக்கு தமிழ் எழுதப், படிக்கத் தெரியும்? எனக்குத் தெரிந்த வரை, பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதைப் பெருமையாக ‘என் பையனுக்கு/பெண்ணுக்கு தமிழே தெரியாது’ என்றுவேறு சொல்லிக் கொள்கிறார்கள். ஒருதடவை அதைகேட்ட, அமெரிக்காவில் வளர்ந்த என் மகன் திருப்பி அவர்களிடம், “நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், அமெரிக்கவில் வளர்ந்த ஒருவன், எனக்கு ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாது என்று சொல்வது போல இருக்கிறது. அங்கு அப்படிச் சொல்வதை, எந்தப் பெற்றோரும் அவமானமாக நினைப்பார்கள். அதை உங்களால் எப்படி பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது?” என்று வியப்புடன் கேட்டான்.
நீங்கள் திரு தாயுமானவன் எழுதியதையும், நான் எழுதியதையும் ஊன்றிப் படித்தால், நாங்கள் வெறும் இந்தி எதிர்ப்பாளர்கள் அல்ல என்றும், இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம் என்று புரிந்து கொள்வீர்கள். நான் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய நான்கு மொழிகளையும் கற்றவன் என்று முதலிலேயே குரிப்பிட்டிருந்தேன். திரு தாயுமானவனும் சரி, நானும் சரி, எந்த மொழியையும் கற்றுக் கொள்வது தவறல்ல என்றுதான் சொல்கிறோம்.
தாய் மொழியாம் தமிழைத் துறந்து விட்டு, மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
முதலில் இந்திய அரசு மும்மொழித் திட்டத்தைச் செயலுக்குக் கொணர்ந்த பொது, தாய் மொழி, ஆங்கிலம், மற்றும் இந்தியைக் கற்க வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தி பேசும் மாநிலங்களில் எப்படி மும்மொழித் திட்டத்தைச் செயல் படுத்துவது என்ற கேள்வி வந்தபோது இந்தி, ஆங்கிலம் இந்த இரண்டு மொழிகளுடன், மற்ற மொழி (இந்திய அரசியல் சாசனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு மொழி) ஒன்றையும் கற்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப் பட்டது.
தென் மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தைச் செயலுக்குக் கொணர்ந்தன.
ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி-இந்தி-இந்தி மட்டுமே அமுல் படுத்தப் பட்டது. நம்மை அடக்கி ஆண்டவர்களின் மொழியை ஏன் கற்க வேண்டும் என்று ஆங்கிலத்தை பிடிவாதமாகக் கற்க மறுத்தார்கள். வடநாட்டிலிருக்கும் ஆங்கிலம் அறிந்த படித்தவர்கள் கூட, இந்தி அறியாத தென்னிந்தியருடன் ஆங்கிலத்தில் உரையாட மறுத்து வந்தார்கள். இதை மும்பை முதல் தில்லி வரை நேரில் அறிந்தவன் நான்.
தாங்கள் பேசிவரும் இந்தி அரசு மொழி என்பதால் ஏற்பட்ட ஒரு செருக்குடனே அவர்கள் ‘மதராசி ஹை’ என்று நகைக்கவும் செய்தார்கள். மொழி மூலம் உயர்வு-தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்த அது உதவியது. இந்தியத் துணைக்கண்டம், பாரத பூமி, ஒரு விதத்தில் பார்த்தால், ஐரோப்பாவை ஒத்தது என்று நாம் நினைவில் வைக்க வேண்டும். ஐரோப்பாவில் உள்ளது போல, இந்தியாவிலும் 14 வளர்ச்சி அடைந்த மொழிகள் பேசப் பட்டு வருகின்றன. ஆகவே இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கப் பட வேண்டும்.
அதைதான், நானும், திரு. தாயுமானவரும் கூறுகிறோம். எங்களை திராவிடக் கழகத்தினரின் அடிவருடிகளோடு ஒப்பிடுவது மனதைப் புண் படுத்துகிறது.
//தாய்மொழிக்கல்வி முக்கியத்துவம் பெறவேண்டும். தாய்மொழியை உயர்வாக எண்ணி அதில் பேசுவதில், எழுதுவதில் மக்கள் மகிழ்ச்சி அடைபவர்களாக இருக்கும் வரை அவை வாழும். அதைவிட்டு தாய்மொழியைத்தாழ்வாக எண்ணி மற்ற மொழிகளை வீட்டில் பேசுவோர் பெருகப்பெருக தாய்மொழி அழியும். ஆக அனைவரும் செய்யவேண்டியது தாய்மொழி பேணுதல். //
இது உங்கள் கூற்று. இதை நானும், தாயுமானவரும் நூறு விழுக்காடு (%) ஒப்புக் கொள்கிறோம். இதுவே என்னுடைய கூற்று. இது தாயுமானவரின் கூற்றும் கூட. நாங்கள் எழுதி இருப்பது தாய் மொழியைத் தவிர்த்து விட்டு, மற்ற மொழிக் கல்விக்கு வாழ் பிடிப்பவர்களைப் பற்றித்தான்.
In a way, we are singing the same choir, albeit to a different tune.
Ham ek hi geeth gathe hain, magar hamaara sruthi tho alag padaa hai.
Mr. Gopalasamy,
I was also a student of a school under private management, but funded partially by government. Hindi was taught, you can get zero, and pass. But, I paid my own money, and learnt Hindi, and passed exams upto Visharad. My quest to study more language pushed me to that level. I was not a rich boy. I was from a lower middle class family. I had to forego many little things like movies, ocassional hotel tiffins, pocket money, etc., to pay for that extra-curricular study. Since I knew what sacrifices I had to make, I studied Hindi with focus. Whatever I am now, it is my personal effort. I took loan scholarship for my engineering education, and paid back in full to the government. I even walked five miles to save 10 np at one time. Please do not talk about cruel joke to me. I know what cruel joke is. I was denied admission in Madras University, since I belonged to the so-called upper class in a district with so many backward students, in spite of my good marks. I was told so in face by the then Director of Technical Education Mr.xxx (I do not want to mention the name).
You were talking about the buring of sub-station during Anti-Hindi imposition agitation. It all happened after the shooting death of a student in Annamalai University. Until hooligans attacked the peaceful student procession in Madurai with sickles, and police shot to kill at Annamalai University, all the agaitation was peaceful. These two incidents were the spark that lit the fire all over Tamilnadu. Improper handling of peaceful agitations by police, and the then Govt. of Madras under Baktavatsalam, lead to large scale violence. If you want, I can give you records about that agaitation.
Please show me one North-Indian, who is holding the torch for Tamil, or any other language, to be taught in North-Indian schools. That will show their fairness. Hindi imposition was opposed in Bengal, too. If India were not partitioned, it would have been Bengali, that would have been the main minority language. No language in India is a majority language. A language, Hindi, with so many very different dialects that does not even resemble it, was chosen as a language spoken by many people — not majority of the people. Hence, a language spoken by less than 30% of the people at that time was imposed on rest of the other people of India. Moreover, north Indians did not like the upper hand South Indians were having in government service, because of their mastery of English. That is the bitter truth.
I am not a D.M.K., or any other Dravida Party supporter. Hence, please do not bunch me as their supporter in any of your response.
அமெரிக்காவில் அரிசோனாவில் வாழ்ந்தாலும் தமிழோடும் சிவத்தோடும் இணைந்திருக்கும் நண்பருக்கு. இன்னும் கூட ஹிந்தி கற்பதால் தமிழ் அழியும் என்ற வாதம் வலுவற்றதாகவே தோன்றுகிறது. தாய்மொழியை தமிழ் மொழியை தாழ்வாக எண்ணுதல் ஆங்கிலத்தினை உயர்வாக எண்ணுதலே அடிப்படைத்தவறு. அதற்கு உரமிடும் அரசுக்கொள்கைகள் தவறானவை.
தமிழ்கத்தில் மட்டுமல்ல பாரத நாடுமுழுதும் பெற்றோர்களிடம் ஆங்கில வழிப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப்படிக்கவைக்கவேண்டும் என்ற மோகமே ஓங்கியுள்ளது. மனைவியும் கணவனும் ஆங்கிலம் கற்றவர்களாக இருக்கும் குடும்பங்களில் ஆங்கிலமே பேச்சுமொழியாகிவரும் அவலம் பெருகிவருகிறது. தமிழில் என்ன இருக்கிறது எல்லாம் உள்ள ஆங்கிலத்தினை பேசுதலே நல்லது என்று ஈவெரா நாயக்கரும் சொன்னார் என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டும். அவர் காட்டிய வழியில் மேற்கத்தியவயமாகிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.
அரிசோனன் வட நாட்டவர்கள் தென்னகத்தவர்களை மதிக்க்கவில்லை என்று. நிச்சயம் இல்லை அடியேன் வடகிழக்கு மாநிலமொன்றில் பணியாற்றுகின்றேன். பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராஜ், பிகார் போன்ற மானிலத்திலிருந்து வந்து உடன் பணியாற்றும் நண்பர்கள் பலர் அடியேனுக்கு உண்டு. அவர்கள் எல்லாம் தென்னகத்திலே செழித்து இருக்கும் சமய்த்தினையும் பண்பாட்டினையும் போற்றுகிறார்கள். அதிலும் தமிழ்கத்திற்கு ஒருமுறையேனும் வந்து சென்றவர்கள் நமது கட்டிடக்கலை, சமயம், பண்பாடு ஆகியவற்றை வியந்து பாராட்டுகின்றனர்.
வடக்குக்கும் தெற்குக்கும் மோதலை உருவாக்குதல், தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பூசல் உருவாக்குதல் இவையெல்லாம் இவாஞ்செலிக்கல் தியாலஜியர்களின் மதமாற்றத்தந்திரம் அன்றிவேறில்லை.
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்பர் நம் சமய் குரவர் அவர் வழி நடப்போம்.
மொழிபல கற்போம் கலை பல அறிவோம் தொன்மையோடு புதுமையும் படைப்போம்.
சிவசிவ
திரு.சிவ ஸ்ரீ. விபூதி பூஷன்
//ஹிந்தி படிப்பதால் எப்படி தமிழ் அழியும் என்பது புரியாத புதிர். பல மொழிகளை இளமையிலேயே கற்பவனுக்கு மொழி அறியும் திறன் இயல்பாகவே அதிகமாகிறது என்பது மொழியியல் வல்லுனர்களின் ஆராய்ச்சி முடிபு.//
உண்மைதான்… மொழி என்றில்லை எந்த கலைகளாக இருப்பினும் அது அவரவர் விருப்பத்துடன் பயிலும் போது தான் அதில் நன்கு திறன் மிகு தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். வலிந்து திணிப்பதனால் அல்ல. இந்திய நாடு விடுதலை பெற்ற நாள் முதலே இந்தி பேசும் ஆளும் கும்பல் அவ்வண் மொழியை தமிழர்கள் மீது திணிப்பதில் தான் வெறி கொண்டு அலைகிறது. தேசிய ஒற்றுமை என்பது எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நாட்டை வளர்ச்சி பாதைக்கிட்டு செல்வதில் தான் இருக்க வேண்டுமே ஒழிய, பெரும்பான்மையோரின் மொழியை,பண்பாட்டை சிறுபான்மையோரின் மீது திணிப்பதில் அல்ல. அவ்வாறு செய்வது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு தான் ஊறு விளைவிப்பதாக அமையும்.
//கொஞ்சம் யோசித்தால் ஒன்று விளங்குகிறது சமஸ்கிருதம் தமிழுக்கு எதிரானது என்று இரண்டுக்கும் பூசல் கதைகட்டிய இவாஞ்சலிகல் கிறிஸ்தவ இறையியல் மதமாற்றிகளின் முயற்சியின் விளைவே இந்த இந்தி எதிர்ப்பு சித்தாந்தம்.//
அல்லவே அல்ல … வடமொழியாம் சமற்கிருதத்தின் மீதான சீற்றம் ஏதோ இப்போது தோன்றியது அல்ல. அது சங்க புலவர் நக்கீரர் காலத்திலேயே உருவான ஒன்று. எப்போது வடமொழி வல்லார்கள் தமிழின் மீது சமற்கிருதத்தின் சொற்களையும் ஒலிப்புகளையும் திணித்தார்களோ அப்போதே இந்த பூசல் தொடங்கிவிட்டது. மணிப்ரவாளம் என்னும் அருவெறுக்கதக்க ஒரு கொடுந்தமிழ் நடையை எப்பொழுது தனித்தன்மை வாய்ந்த செம்மொழியாம் தமிழின் மீது உலவ விட்டார்களோ அப்பொழுதே இந்த பூசல் உச்ச கட்டத்தை அடைந்து விட்டது. அதன் பயனாய் தனி தமிழ் இயக்கம் தோன்றி தமிழின் தூய்மையை, தனித்தன்மையை குலைக்கும் வடமொழியின் கேட்டினின்று காத்தது என்பதே வரலாற்று உண்மை.
இன்று மட்டும் இல்லை எக்காலத்திலும் இரு மொழி கொள்கை மட்டுமே இந்திய நாட்டிற்க்கு சிறந்தது. அவ்வண் மாநிலங்களில் உள்ள மொழியும் ஆங்கிலமும் மட்டுமே கற்று தர படல் வேண்டும். பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்திய தேயத்தில் ஆங்கிலம் மட்டுமே பொதுமொழியாகவும் தொடர்பு மொழியாகவும் இருந்திடல் வேண்டும்.
திரு சிவஸ்ரீவிபூதி பூஷன் அவர்களுக்கு, தங்கள் தெளிவான கருத்துக்களுக்கு நமது நன்றிகள்.
1. தாய் மொழி தமிழை நன்கு கற்காமல் மற்ற அந்நிய மொழிகளை மட்டும் கற்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. பிற மொழிகளை கற்பது என்பது அவற்றின் இலக்கியம் இலக்கணம் மற்றும் ஆராய்ச்சிப்பட்டம் வாங்குவதற்கு அல்ல. பிற மொழி பேசுவோருடன் அன்றாடம் உரையாடவும், அந்த வெளியூர்களுக்கு செல்லும் போதும், அங்கு தங்கும்போதும் நமது தேவைகளை பெறவும் இந்த பயிற்சி,
அதாவது , அன்றாடம் பயன்படும் சுமார் 200 வாக்கியங்களை கற்பது ஆகும். இது ஒரு மொழியை முழுவதும் கற்பது அல்ல. ஒரு செயல்முறை பேச்சுக்கல்வி மட்டுமே.
2. திருப்பூரில் ஒரு வியாபாரி வடநாட்டினருடன் தொடர்பு கொண்டு வியாபாரம் செய்பவர் , அந்த வடஇந்திய மொழியை பேச கற்றுள்ளார் என்பது அவரது தேவை காரணமே ஆகும்.
3. வட இந்தியாவில் இருந்து தமிழகத்தில் வந்து பணி ஆற்றும் பல அன்பர்கள் தமிழர்களை விட தெளிவாக தமிழ் பேச விரைவில் கற்றுவிடுகிறார்கள். அதே வேகத்தில் , வெளிமாநிலங்களில் பணியாற்றும் தமிழர்கள் பிறமொழிகளை பேச கற்க மிக சிரமப்படுகிறார்கள் என்பதே உண்மை. பள்ளியில் பயிலும் போதே , பிற மொழி பரிச்சயம் ஏற்பட்டால் , அவர்கள் எளிதில் பயன் பெறுவார்கள் என்பதே உண்மை.
4. இந்தி திணிப்பு என்பது வேறு, நாம் இந்தியை நமது தேவை கருதி கற்பது என்பது வேறு . தமிழகத்தில் இந்தி கட்டாயப்பாடமாக , சுதந்திரத்துக்கு பின்னர் என்றுமே இருந்ததில்லை. விருப்பப்பாடமாக மட்டுமே இருந்துள்ளது. அந்த விருப்பப்பாடத்தினையும் 1968- ஜனவரி மாதத்திலிருந்து திமுக அரசினர் நீக்கி விட்டனர்.
5. தாய்மொழி தமிழை தாழ்வாக எண்ணி, எழுதியும் பேசியும் வந்ததுடன், ஆங்கிலத்தினைப் பற்றி மிக உயர்வாக பேசி , வெள்ளை எஜமானர்களின் கால்கழுவி வாழ்ந்தவர் பெரியார் ஈ வே ரா. தமிழா , தமிழ் படிக்காதே, தமிழ் படித்தால் நாசமாய்ப் போவாய் என்று சொன்னதுடன், உன் வீட்டு வேலைக்காரியுடன் கூட ஆங்கிலத்தில் பேசு, அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்றால் , அவளுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடு என்று சொன்ன மேதை அவர். அவரது அடியொற்றி வந்த கழக அரசுகள், தமிழைக் கைவிட்டு நாடு முழுவதும் புற்றீசல் போல, ஆங்கில வழி பள்ளிகளை வளர்த்து, தங்கள் தாச மனப்பான்மையை காட்டின.
6. மத்திய அரசு 1956-ஆம் ஆண்டிலிருந்து , மாநில மொழிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு , தமிழில் பாடப்புத்தகங்களை மலிவு விலையில் வெளியிட கொடுத்துவரும், மான்யத்தினை தமிழக அரசு , கழகங்களின் ஆட்சியில் தொடர்ந்து , முழுவதும் பயன்படுத்தாமல், மிக குறைந்த அளவே பயன்படுத்தியும், சில ஆண்டுகளில் அந்த நிதியை முற்றிலும் பயன்படுத்தாமலும் , நிதி ஆண்டுகளின் கடைசி மாதத்தில் சரண்டர் செய்து, மத்திய அரசுக்கே திரும்ப வழங்கி யுள்ளது என்பது கடந்த கால வரலாறு. இது தான் கழகங்களின் தாய் மொழிப்பற்றின் லட்சணம்.
தமிழ் வழிக்கல்விக்கு வித்திட்டவர் முன்னாள் தமிழக கல்வி அமைச்சர் திரு சி சுப்பிரமணியம் அவர்கள். அவர் பாவம் காங்கிரஸ் என்ற கட்சியில் இருந்தவர். அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது தான், தமிழகத்தில் ஆங்கில மீடியம் அகற்றப்பட்டு , தாய்மொழி வழியாக கல்விகற்க வழி ஏற்படுத்தப்பட்டது. கழகங்கள் வந்தபிறகு, ஆங்கிலம் அரியணை ஏறியது. தமிழ் வெளியேற்றப்பட்டது, இது தான் உண்மை. எதிர்காலத்தலைமுறை தமிழை பேச மட்டுமே செய்யும். எழுதவோ, படிக்கவோ செய்யாது என்று பலரும் அஞ்சும் சூழ்நிலை வந்துள்ளது. மோசடிக்காரர்கலான திராவிட இயக்கத்தவரை உண்மையான தலைவர்கள் என்று நம்பி ஏமாந்த தமிழனின் தலையில், பெரிய பாறாங்கல்லை போட்டு ஆழ்கடலுக்குள் அழுத்தி விட்டனர்.
பிற மொழி கற்பதால் தமிழும், தமிழனும் மேலும் வளர்வார்கள். ஆதிக்கம் என்றும் எங்கும் வராது. பிற மொழிகளை கற்பதால், தமிழர்களின் ஆதிக்கம் தான் கூடும். இதுவே உண்மை.
பெருமதிப்பிற்குரிய திரு சிவஸ்ரீ விபுதிபூஷண் அவர்களே,
நான் 25 ஆண்டுகளாக அமெரிக்கக் குடிமகனாக இருந்து வருகிறேன். எனவே, என்னை ‘இந்திய அமெரிக்கன்’ என்றுதான் இங்கு குறிப்பிடுவார்கள். நான் என்னை ‘அமெரிக்கத் தமிழன்’ என்று பெருமையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நான் எங்கு சென்றாலும் தமிழன்தான். அதில் என்ற மாற்றமும் இல்லை. நான் ஒரு இந்துதான், அதில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் என் நெற்றியில் ஒரு சிறிய திருநீற்றுக் கொடு இருக்கும். அது எனது அடையாளம். பலமுறை இங்கு இருப்பவர்களுக்கு அது என் சமய அடையாளம் என்று விளக்கி இருக்கிறேன். நான் சென்ற பல நாடுகளிலும் என் சிவச் சின்னத்தைப் பெருமையுடன் அணிந்துகொண்டுதான் வந்திருக்கிறேன்.
“அமெரிக்காவில் பலகாலமாக வாழ்ந்துவரும் நீங்கள் இந்தி பேசுபவர்களுக்கு உயர்வு மனப்பான்மை இருக்கும் என்று சொல்கிறீர்களே, இந்தியாவில் வடநாட்டில் இருப்பவர்களிடம் அப்படிப்பட்ட மனப்பான்மையை நான் காணவில்லையே?” என்று கேட்டிருக்கிறீர்கள். அந்த ஒரு வினாவுக்கு விடை அளித்துவிட்டு இந்த விவாதத்தை நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு வட இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் ஏற்பட்ட சொந்த அனுபவத்தின் வயிலாகவே, இந்த முடிவுக்கு வந்தேன். கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கவில் இருந்துவரும் எனக்குப் பலமுறை ஏற்பட்ட அனுபவங்களில் ஒன்றை உங்களுக்குத் விவரிக்கிறேன். அது என் கூற்றை உறுதிபடுத்தும்.
ஒருநாள் நான் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொழுது நான்கு இந்திய வம்சத்தைச் சேர்ந்த நால்வரைக் கண்டேன். அவர்கள் உணவக அலுவகரிடம் ஆங்கிலத்தில் உரையாடிவிட்டு என்னருகில் வந்தனர். என்னைப் பார்த்து, நானும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டு புன்னகைத்தனர். நானும் மரியாதைக்குப் புன்னகைத்தேன். உடனே என்னுடன் இந்தியில் பேச ஆரம்பித்தனர். எனக்கு இந்தி நன்றாகத் தெரிந்திருந்தாலும், இங்கு நான் இந்தி அறிந்தவன் என்று யாரிடமும் காட்டிக் கொள்வதில்லை, ஆங்கிலம் தெரியாது, இந்தி மட்டும்தான் தெரியும் என்றால் மட்டுமே, இந்தியில் பேசுவேன். அதுவும் என் அடையாளம். எனவே, இந்தி தெரியாத மாதிரி அவர்களை உற்றுப் பார்த்தேன். இதற்குப் பின் ஆங்கிலத்தில் நடந்த உரையாடலை அப்படியே ஆங்கிலத்திலேயே தருகிறேன்.
First person: “Don’t you understand me?”
I: “No. What language are you speaking?”
Second person: “You are an Indian. Don’t you know Hindi?”
I: “Should I have to?”
Third person: “As an Indian, we all need to know Hindi. It is our national language.”
I: “I beg to differ from you. Why do you assume everyone from India should know Hindi. I may be not be from India. I may be a person of Indian race from Malaysia, Singapore, Sri Lanka, or any other places on this earth.”
First person: “I see basma (indicating my vibuthi) on your forehead. You are a Madrasi. Are you not ashamed that you don’t know Hindi, being an Indian?”
This really irritated me to no end.
I: “Dear friends. I don’t have to either speak with you, or answer your useless questions. Still I will. I am an American citizen of Indian Origin. Even if I came from India, it is not a pre-requisite in USA that I should know Hindi to become a US citizen. Having said that…” I turned around, pointing at the first person, “Khem-cho, you look like a Guajarati.” Pointing at the second person, “, Kai, kasa kai, you look like a Maratti.” Looking at the third person, “You are from Andhra. Bavanaara. Other gentleman, who has not yet spoken with me, is a Sardarji. sat-sri-akal, Sardarji. So, Hindi none of yours mother tongue. If you want me to speak with you in your mother tongue, I will understand it. This is America. English is spoken here. Why do you want me to speak in Hindi? Will you please leave me alone. I do not want to continue this conversation.”
என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே அடுத்த மேஜையை சுற்றி உள்ள நாற்காலிகளை அமர்ந்து கொண்டு, எனக்கு இந்தி தேராது என்றே முடிவு கட்டிவிட்டு, ‘மதராசி’ என்று கேவலமாகக் குறிப்பிட்டு, இங்கு எழுத்தத் தகாத வார்த்தைகளால் என்னைப்பற்றிப் பேச ஆரம்பித்தனர். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். ஐந்து நிமிடங்கள் என்னைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். நான் அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவர்கள் அருகில் சென்று ‘தாருகானா’ (கள்ளுக்கடை) இந்தியில் பேச ஆரம்பித்தேன். இந்தி தெரியவில்லை என்ற ஒரே ஒரு காரணத்திற்காக என்னைப் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசுகிறீர்களே? இது அமெரிக்கா. இங்கு இந்தி அரசாட்சி நடக்கவில்லை. இந்தியாவிலும் நடக்கவில்லை. எனக்கு போலீசில் நண்பர்கள் இருக்கிறீர்கள். என்னைப்பற்றி அவதூறாகப் பேசினீர்கள் என்று புகார் கொடுக்கட்டுமா என்று கேட்டேன். மன்னிப்புக் கேட்டுவிட்டு வாயை மூடிக் கொண்டார்கள். என் நெற்றியில் உள்ள திருநீற்றுக் கீற்றைப் பார்த்து, என்னை ‘மதராசி’ என்று இழிவாகவும் குறிப்பிட்டார்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்குப் பலதடவை இங்கே அமெரிக்காவில் நடந்திருக்கின்றன. இந்தி பேசும் மாநிலக்காரர்ககளும் அதில் அடக்கம். ஒரொரு தடவையும் ‘மதராசி’ என்பதால்தான் எனக்கு இந்தி தெரிவதில்லை என்று ‘மதராசி’யாக இருப்பவான் ஒரு இழிகுலத்தான் என்பதுபோலப் பேசுவார்கள். உங்களுக்கு அப்படி நடக்கவில்லை என்றால் அது நீங்கள் வட இந்தியாவில் இந்தி பேசியதால்தான். அங்கு ஆங்கிலத்தில் பேசிப் பாருங்கள், உங்களுக்கு எப்படிப் பட்ட மரியாதை கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அமெரிக்காவில் இருக்கும் ஒரு இந்தியா வம்சாவழிக்காரன் இந்தியை அறிந்திருக்கவேண்டும் என்று நினைத்தால், அதை என்னவென்று எடுத்துக் கொள்வது?
என்னைப் பொறுத்தவரை, எனக்கு இந்தி மீதும் வெறுப்பில்லை, இந்தி பேசுபவர்கள் மீதும் வெறுப்பில்லை. இங்கு எனக்கு இந்தி பேசும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் இன்றுவரை எனக்கு இந்தி தெரியும் என்று தெரியாது. இந்தி மட்டுமே தெரிந்த முதியவர்களிடம் மட்டுமே இந்தியில் பேசி வருகிறேன்.
என் மனதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
ஓம் நமச்சிவாய!