தியாகி வெள்ளையப்பன்ஜி பலிதானம் – ஓராண்டு நினைவேந்தல்

இன்று ஜூலை 1. திரு.வெள்ளையப்பன்ஜி அவர்களின் பலிதானத்தின் ஒன்றாம் ஆண்டு நிறைவு. என்ன நடந்திருக்கிறது இதுவரை? கொலை செய்யப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் இஸ்லாமிய அமைப்பினர் இந்த கொலை தனிப்பட்ட விரோதங்களால் நடந்ததாக பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். தீவிர இடதுசாரிகள் உடனடியாக அந்த பிரச்சாரத்தை மேலெடுக்க ஆரம்பித்தனர். கொலைகள் தொடர்ந்தன. வெள்ளையப்பன்ஜி அவர்களின் உதிரம் காயவில்லை,அவரை இழந்து அழுத கண்ணீர் உலரவில்லை. morning_hindutvaஅதற்கிடையே ஜூலை 19 ஆம் தேதி ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்டார் – மிகக் கொடூரமான விதத்தில். இப்போது காவல்துறையின் சிறப்பு அதிகாரி கூட இந்த தொடர் கொலைகள் எல்லாம் தனிப்பட்ட விரோதம் என்கிற தொனியில் ஒரு அறிக்கை விட்டார். ஆனால் என்ன ஆயிற்று? இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலரை காவல்துறை கைது செய்தது. ஒரு சதி வலைப்பின்னல் இருப்பது கண்டறியப்பட்டது. 2011 இல் மதுரை, திருமங்கலத்தில், திரு. அத்வானி அவர்கள் வருகையின் போது அவரை கொல்ல பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர். இவர்களுடன் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில், நாகூர் அபுபக்கர் சித்திக் ஆகியோரும் உண்டு. இவர்கள் தேடப்பட்ட உடனேயே தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு இந்த தொடர்கொலைகளுக்கும் தொடர்பு உண்டு என புலனாய்வு துறை சந்தேகித்தது. இதே காலகட்டத்தில் நெல்லை மேலப்பாளயத்தில் 17 கிலோ வெடி மருந்துகளுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். மட்டுமல்ல கட்டை சாகுல் என்பவரின் வீட்டிலிருந்து ரூ 6 இலட்சம் கண்டெடுக்கப்பட்டது. இந்து அமைப்பினரை கொலை செய்ய பண உதவி திரட்டப்பட்டு இவை செயல்படுத்தப்படுவது தெரிந்தது. இதற்கு பின்னர்தான் ஆந்திரா எல்லையில் போலீஸ் பக்ருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இனிதான் ஆரம்பமாகிறது மிகவும் வேதனையான ஒரு விளையாட்டு. இந்த வழக்கு ஆமை வேகத்தில் நகரும். அரசியல் நிர்பந்தங்களுக்கு ஏற்ப இந்த வழக்கு பலவீனமாக்கப்படும்.  எல்லா இந்து அமைப்புகளும் அரசாங்க இயந்திரம் தனது கடமையை செய்யும் என நினைத்து ஒருவித அலட்சியத்தை காட்ட ஆரம்பிப்பார்கள். அல்லது வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் இந்த கொலைகளை செய்த கும்பல் திட்டமிட்டு ஒரு பிரச்சாரத்தை பரப்பும். போலீஸ் பக்ருதீனின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஊடகங்களில் ஆரம்பித்து ஒரு அறிவுஜீவி குழு ஒரு வழக்கறிஞர் குழு என அந்த கொலைகாரனை ஒருவித அப்பாவியாக காட்டும் முயற்சி இப்போது தொடங்கிவிட்டது.  the_hindu_oneஉதாரணமாக போலீஸ் பக்ருதீன் கைது செய்து சில நாட்களில் ‘மவுண்ட்ரோடு மாவோ’ என அழைக்கப்படும் ‘தி இண்டு’ என்கிற சீன-சிங்கள மார்க்சிய பிரச்சார நாளேடு ஒரு நெஞ்சை உருக்கும் காதல் கதையை வெளியிட்டது. அதில் போலீஸ் பக்ருதீன் என்கிற கொலைகாரனின் உள்ளே எத்தனை நல்ல காதலன் ஒருவன் இருக்கிறான் என அது கூறியது. காவல்துறை அந்த காதலை பயன்படுத்தி அவனுக்கு வலை விரித்தது. அவனது காதலியும் மனைவியுமான இளம் பெண் படும் கஷ்டத்தை நெஞ்சுருக விவரித்தது.  இனி என்ன! போலீஸ் பக்ருதீன் பெயரில் காதல் கதை எடுக்க கோடம்பாக்கத்திலிருந்து அமீரும் அங்கே மும்மரமாக இயங்கி வரும் மதமாற்ற கும்பலும் வர வேண்டியதுதான் பாக்கி. போலீஸ் பக்ருதீன் குறித்து ஹிந்து விரோத பிரச்சார நாளேட்டில் சொல்லப்படுவதை கவனியுங்கள்: “கல் நெஞ்சையும் கரைத்த காதல் கதையை அறிய மதுரையில் நாம் விசாரணையை துவக்கினோம். “அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று திரும்பியபோது, பக்ருதீனுக்கு ஏரியாவுக்குள் ஹீரோ இமேஜ் உருவானது. அப்போது மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைக் காதலித்தார். வயதில் பாதிதான் இருக்கும் அந்த பெண்ணும் விரும்பியிருக்கிறார். … இஸ்லாம் முறைப்படி, மகராக (பணம், பொருள்) அந்தப் பெண்ணுக்கு பக்ருதீன் 2 பவுன் சங்கிலி கொடுத்தான். ஒரு பைசா கூட வரதட்சணை வாங்கவில்லை. ஏரியாவே அவன் கல்யாணத்தைப் பற்றித்தான் பேசியது” என்றார்கள் ஏரியாவாசிகள். யார் கண்பட்டதோ அந்த புதுவாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இதுகுறித்து அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் கூறுகையில் “திருமணத்தின் போது அந்தப் பெண்ணுக்கு வெறும் 14 வயது தான். பாவம், குடும்பம் நடத்தும் அளவுக்கு பக்குவமும் இல்லை. பக்ருதீனுக்கு மனைவி மீது அளவுகடந்த பாசம். ஆனால், தீவிரவாதத் தொடர்பு மற்றும் போலீஸ் தொந்தரவு காரணமாக அவனால், நிம்மதியாகக் குடும்பம் நடத்த முடியவில்லை. ” வார்த்தைகளை கவனியுங்கள்.  படிக்கும் போது உங்களுக்கு நாயகன் திரைகதை நினைவுக்கு வந்தால் கூட ஆச்சரியமில்லை.  14 வயது பெண்ணை சட்டவிரோதமாக பால்ய விவாகம் செய்திருக்கிறான் ஒரு கொலைகாரன். ஆனால் தி இண்டு பத்திரிகைக்கோ அவனை ஒரு ஹீரோவாக காட்டுவது நியாயமாக இருக்கிறது. யார் கண்டது நிர்ப்பந்தமாக கூட இருக்கலாம்!

’தி இந்து’ இதை வெளியிட்டது ஒன்றும் தற்செயலான அல்லது இயல்பான ஒரு பத்திரிகை செய்தி அல்ல. மாறாக மக்கள் மனதில் அவனைக் குறித்து ஒருவித இணக்கத்தை இப்போதே விதை தூவுகிறார்கள்.  அடுத்தது சில ஆண்டுகள் காத்திருப்பார்கள். அதுவரை பிரியாணி சாப்பாட்டுடன் போலீஸ் பக்ருதீன் மாப்பிள்ளையாக சிறைக்குள் இருப்பான். சகல தகவல் தொடர்புகள் வசதிகளுடன்.  madhani1மெல்ல அறிவுசீவி கூலி போராளிகள் ’சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய’ இளைஞர்கள் குறித்து ஆரம்பிப்பார்கள்.  காவல்துறைக்கு நிர்ப்பந்தங்கள் ஏற்படும். இதை ஏற்கனவே இவர்கள் செய்து வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.  70 பேருக்கு மேல் காவு வாங்கிய இஸ்லாமிய பயங்கரவாத வெறிச்செயலான கோவை குண்டு வெடிப்பில் இதை இவர்கள் செய்தார்கள். இன்றைக்கும் பெங்களூர் குண்டு வெடிப்பில் கைதாகி உச்சநீதி மன்றத்தால் பிணை கூட மறுக்கப்பட்ட மதானி கோவை குண்டு வெடிப்பு சிறை கைதியாக பல்லாண்டு இருக்க வைக்கப்பட்டான். அவனது விசாரணை வேண்டுமென்றே கால தாமதமாக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. பின்னர் சிறை சாலையிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டான். அவனது குடும்பத்தினரின் சோக கதைகள் பத்திரிகைகளில் எழுதப்பட்டன.  free_madhaniஅறிவுசீவி கும்பல்கள் 2004-2006 வரை தீவிரமாக அவனை விடுவிக்க ஒரு  கையெழுத்து இயக்க நாடகத்தை நடத்தின. அவனுக்கு அரசு செலவில் ஆயுர்வேத மசாஜ் அறிவிக்கப்பட்டது.  பின்னர் கோவை குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அவன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டான்.  பின்னர் அவனேதான் பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டான். இவனது விடுதலையை எதிர்த்து தமிழக அரசோ காவல்துறையோ மேல் முறையீடு செய்தனவா? குறைந்த பட்சம் கோவை குண்டு வெடிப்பில் பலியான 70க்கும் மேற்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க இந்து இயக்கங்கள் செய்தனவா? அவை மேல் முறையீடு செய்ய முடியுமா? இந்த கேள்விகள் அப்படியே நிற்கின்றன. இதற்கிடையில் 1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை அடைய செய்யப்பட்ட மதானி 2008 பெங்களூர் குண்டு வெடிப்பு சதியில் கைதானான்.  அவனுக்காக வாதாடுகிறவர் வேறு யாருமில்லை. பரம சுத்தமான ஆம் ஆத்மி கட்சியில் பூஷண் வக்கீலேதான். 2012 இல் நீதியரசர் சதாசிவம் தலைமையிலான உச்ச நீதி மன்றம் பிணைக்கான கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இப்போது மீண்டும் பூஷண் மதானியின் உடல்நிலை அடிப்படையில் பிணை கேட்க, உச்ச நீதிமன்றம் தேவையாக இருக்கும் பட்சத்தில் மணிபால் மருத்துவமனையில் அவனுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமென்றும் அப்போது உற்றார் உடனிருக்கலாம் என்றும் ஆனால் பிணை கொடுக்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறது. இதை பயன்படுத்தி மதானி மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்பதால் இவனுக்கு உண்மையிலேயே மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என்பதை தேசிய நலனில் அக்கறை உள்ள வழக்கறிஞர்கள் அமைப்புகள் கண்டறிய வேண்டும்.

போலிஸ் பக்ருதீனுக்கும் இதே நடைமுறையை இங்குள்ள அறிவுசீவி கூலிப்படையும் ஊடக ஜிகாதிகளும் மேற்கொள்ளக் கூடும்.  இது குறித்து தமிழ்நாட்டின் தேசிய நலன் சார்ந்த அமைப்புகள் கவனமாக இருக்க வேண்டும். பயங்கரவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்காக செயல்படுவோர் இயக்கமாகவும் அமைப்புகளாகவும் மாற வேண்டும். பேராசிரியர் பரமசிவம் அவர்கள் கொலை தொடங்கி வெள்ளையன்ஜி , ஆடிட்டர் ரமேஷ் கொலை என செய்த போலீஸ் பக்ருதீனின் மூளையாக செயல்பட்ட அமைப்புகள் ஆட்கள் எவர் என்பது முக்கியமான கேள்வி. இதற்கான கனத்த பண உதவி செய்யப்படுவது இது ஒன்றும் ஏதோ தனிப்பட்ட கொலையாளிகளால் செய்யப்பட்டது அல்ல என்பதையும் இதற்கு பின்னால் மிகப் பெரிய வலைத் தொடர்பு உள்ளது என்பதையும் காட்டுகிறது.  நம் செயலின்மைக்கும் உணர்வின்மைக்கும்  நாம் கொடுக்கும் விலை பயங்கரமானது என்பதை நம் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். கோவை குண்டு வெடிப்பு ஏதோ முடிந்து போன விஷயம். அதில் ஈடுபட்டவர்கள் ரொம்ப காலம் சிறையிலிருந்து விடுதலையாகி இன்று சமரசமாகி வாழ்கிறார்கள்  என நினைத்தால் அதைவிட பொய்யான விஷயம் இருக்க முடியாது. 2010 அக்டோபரில் சென்னையை சார்ந்த வாடகை கார் டிரைவர் ஜான் ஆரோக்கியதாஸ் சங்ககிரி அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கார் கடத்தப்பட்டிருந்தது.  போலீஸ் விசாரணையில், செயின்பறிப்பு மற்றும் காவலரை கொலை செய்ய முயன்ற வழக்குகளில் தேடப்படும் பெரம்பலூர் மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த விமல்ராஜ் இதில் தொடர்பு உள்ளது தெரிந்தது. இவனுக்கும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான, கரும்புக்கடையைச் சேர்ந்த அஷ்ரப்பிற்கும் தொடர்பு தெரிந்தது. இவரை தேடியபோது தலைமறைவாகி இருந்தார். இவரது கூட்டாளிகள் காதர், அப்பாஸ், ஜாகீர்உசேன், பைசல் ரகுமான் என தெரிந்தது. அனைவரும் தலைமறைவாகினர். இவர்களில் காதர், அப்பாஸ் கொலை வழக்கில் தண்டனை முடிந்து வெளியில் வந்தவர்கள். இந்த கொலைகள் வெறும் பணத்துக்காக செய்யப்பட்டவையா அல்லது மிகப் பெரிய திட்டத்தின் ஒரு அம்சமா என்பது யோசிக்கப்பட வேண்டியது. veliayanji2014 ஜூன் இல் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்ஜி அவர்களை கொடூரமாக கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் என்கிற பழனி பாபு  1998 கோவை குண்டு வெடிப்பில் கைதானவன்.  27 ஜூன் 2006 தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் (நீதியரசர் கற்பகவிநாயம் & ராமலிங்கம்) இவன் மற்றும் எட்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறை நீதிமன்றத்துக்கு திருப்திகரமாக நிரூபிக்கவில்லை என ஐயத்தின் பலனால் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டான். தமிழ்நாடு காவல்துறையும் உளவுத்துறையும் கோவை குண்டு வெடிப்பின் பிரதான குற்றவாளி மதானி தொடங்கி அப்துல் கரீம் வரை என அனைவரையும் இத்தனை பலவீனமான குற்றச்சாட்டில் கைது செய்யும் திறமையற்றவர்கள் அல்ல என்பதும் உலகத்தரம் கொண்டவர்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அரசியல் நிர்ப்பந்தங்கள். சமூகத்தின் அக்கறையின்மை. இதற்கு நாம் கொடுக்கும் விலை இது.  வெள்ளையப்பன்ஜி  எனும் தேசபக்தரின் பலிதானத்தின் ஒன்றாம் ஆண்டு நினைவேந்தல் இன்று. இன்று இந்துக்களாகிய நாம் ஒரு உறுதி ஏற்கவேண்டும். இயக்க ரீதியாக அமைப்பு ரீதியாக இந்த வழக்குகளின் போக்குகளை தொடர்ந்து கண்காணிப்போம். ஊடகங்கள் மூலம் தொடர்ந்து  நம் பலிதானிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். அந்த உணர்வை மறக்காமல் முன்னெடுப்போம்.  வந்தே மாதரம்!

 

6 Replies to “தியாகி வெள்ளையப்பன்ஜி பலிதானம் – ஓராண்டு நினைவேந்தல்”

  1. வெள்ளையப்பன் என்று பதிவிடவும் வெள்ளையன் அல்ல கட்டுரை அருமை நன்றி

  2. ஹிந்து இயக்க செயல்வீரர்களை மிகக் கொடுமையான முறையில் கொலை செய்த படிக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விட……..

    குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பற்றி போலி அனுதாபம் பொங்க ஊடகங்களில் கதைகள் எழுதுபவர்களும் அதே சமயம் கொலை செய்யப்பட்ட நபர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான செய்திகளைப் பரப்பி அவர்களை இழிவு செய்வதை தொடர்ந்து செய்து வரும் ஊடக ஜிஹாதிகளும் …………….

    மிக பயங்கரமான சமூஹ விரோத சக்திகள்.

    ஒவ்வொரு சமூஹ விரோத பிரிவினைவாத ஆப்ரஹாமிய மதவெறி மற்றும் ஜிஹாதி செயல்பாடுகளுக்கும் அறிவு சீவி வாதம் பூச முனையும் இடதுசாரி சக்திகள் இந்த சமூஹ விரோத சக்திகளின் போஷகர்கள்.

  3. தமிழ்ஹிந்து நிர்வாகிகளுக்கு….

    இந்து அமைப்பின் நிர்வாகிகளை படுகொலை செய்ய பட்டது மிகவும் வன்மையாக கண்டிக்க பட வேண்டியது தான்.. உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்கள் கடுமையாக தண்டிக்க பட வேண்டும். ஆனால், தயவு செய்து இணையத்தின் முகப்பில் உள்ள ரிஷியை இரண்டாக பிளப்பது போல் உள்ள படத்தை உடனடியாக அகற்றவும். மிகவும் கொடூரமாக இருக்கின்றது. மென்மையான உணர்வு கொண்டவர்களை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது. இது போன்று உண்மையாக நடந்ததா என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத பட்சத்தில், இப்படி வெளியிடுவது தேவை இல்லாத ஒன்று.

  4. தாயுமானவன்
    “இணையத்தின் முகப்பில் உள்ள ரிஷியை இரண்டாக பிளப்பது போல் உள்ள படத்தை உடனடியாக அகற்றவும். மிகவும் கொடூரமாக இருக்கின்றது. மென்மையான உணர்வு கொண்டவர்களை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது. இது போன்று உண்மையாக நடந்ததா என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத பட்சத்தில், இப்படி வெளியிடுவது தேவை இல்லாத ஒன்று”.
    தாயுமானவரே உங்கள் தாயுள்ளத்தைப்பாராட்டுகின்றேன். உண்மையாக நடந்ததைத்தான் இப்போதும் நடப்பதைத்தான் தமிழ் ஹிந்து வெளியிட்டுள்ளது. இடைக்காலத்தில் முகலாய அரசர்கள் குருகோவிந்த சிம்ஹனின் இருமகன்களை உயிரோடு சமாதிவைத்தார்கள். சுதந்திர்ப்போராட்டக்காலத்தில் மதவெறியர்கள் சுவாமி சிரத்தானந்தரை வெட்டிக்க்கொன்றார்கள்.

  5. தாயுமானவன் அவர்களுக்கு,

    முகப்பில் உள்ள படத்தில் இருக்கும் நிகழ்வு உண்மையாகவே நடந்திருக்க வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இன்னமும் கூட இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நீங்கள் நமது மத்தியில் வாழுகின்ற துறவி ராம.கோபாலன் அவர்கள் வெட்டப்பட்ட நிகழ்வு தாங்கள் அறியவில்லை போலும். அவரது தலையை அவர் சட்டென்று இழுத்துக் கொண்டதால், கழுத்தில் விழ இருந்த வெட்டு தலையின் உச்சிப் பகுதியைச் சீவியது. நுங்கு சீவுவது போல அவரது தலைச் சிகரம் சீவப்பட்டது, இன்னமும் அவரது அன்றாட வாழ்வு உங்களுடையதும் என்னுடையதும் போல உடல்நலம் மிக்கது அல்ல என்பதை நீங்கள் அறியவில்லை போலும்.

    இதோ, இந்தக் கட்டுரையைப் படியுங்கள். அண்மைக் காலத்தில் சுவாமி லட்சுமணானந்தா அவர்கள் வெட்டுண்டு கொலையானது குறித்த பதிவு இது.

    https://tamilhindu.com/2008/08/orissa-swamiji-shot-by-maoist-anjali/

    இதில் அவரது உடல் காயங்களின் படங்கள் இல்லை. அப்படிப்பட்ட படங்கள் இல்லாவிட்டால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பதற்காக இந்தத் தொடுப்பையும் பாருங்கள்.

    https://hindutva97.blogspot.in/2008/08/christist-terrorists-murdered-swami.html

    வன்முறையால் இந்துக்கள் இறப்பதும், கோரப் படுகொலை செய்யப்படுவதும் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் அவை செய்திகளாக வெளிவராமல் இருட்டடிப்புச் செய்யப் படுகின்றன. அண்மைக்காலங்களில்தான் செய்திகள் வெளி வருகின்றன. அதுவும் கூட சில இந்து அமைப்புகள் முன்னெடுத்து செய்திகளை வெளியிடுவதால் வருகின்றன.

    சாத்வீக மதமான இந்துமதத்தால் எதிர்வினைகள் இல்லாத காரணத்தால் அந்நிய மதங்கள் மேலும் மேலும் அட்டகாசம் செய்து வந்திருக்கின்றன. உண்மை வெளிவர ஆரம்பித்தவுடன் இந்து மத எதிரிகளும், விரோதிகளும் அவற்றை வெளியிடும் இந்து இயக்கங்களைக் கண்டபடித் திட்டத் துவங்கி இருக்கிறார்கள்.

  6. தாயுமானவன் அவர்களுக்கு,

    சுவாமி லட்சுமணானதாவின் வாழ்க்கைக் குறிப்பை அதே பக்கத்தில் படியுங்கள் . அவர் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் வனவாசிகளிடையேயும் செய்த சேவைகளைப் பாருங்கள். ஆர்.எஸ்.எஸ். குறித்தும் சுவாமி குறித்துமான உங்கள் எண்ணம் மாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *