அறிவே தெய்வம் என்ற பாரதியார் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது. அவ்வாறே எங்கள் தமிழ் ஐயாவால் கற்பிக்கவும் பட்டது. பத்து கண்ணிகள் உள்ள அந்தப் பாடலில் கீழ்க்கண்டவை மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு பாடநூலில் கொடுக்கப் பட்டிருந்தன.
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் — பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம் உண்-
டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் — எத-
னூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் என்-
றோதி யறியீரோ?
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் — நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு
அவங்கள் புரிவீரோ?
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் — பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் முறை
காட்டவும் வல்லீரோ?
ஆறாம் வகுப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தைப் பரிசாகப் பெற்று அதை சில தடவைகள் புரட்டி பல பாரதியார் பாடல்களை மனனம் செய்து விட்டிருந்த எனக்கு, இந்த முழுப்பாடலும், வேதாந்தப் பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் அது வருவதும் தெரிந்திருந்தது. பாடலின் உட்பொருள் எதுவும் அந்த வயதில் விளங்கவில்லை என்றாலும் பாடப்புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருந்த விளக்கமும் அதையொட்டி தமிழ் ஐயா சொல்லியதும் எல்லாம் சுத்தமாகத் தவறு என்ற அளவில் புரிந்தது. ஆனால் தமிழ் ஐயாவிடம் விவாதிக்கும் துணிவோ முனைப்போ ஏதும் இருக்கவில்லை. சூழல் அப்படி.
பின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள ‘அறிவே தெய்வம்’ என்ற தலைப்பே ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே. அந்தப் பாடலில் உள்ள மற்ற ஆறு கண்ணிகளையும் சேர்த்துப் பார்த்தால் இது முழுமையாக விளங்கும்.
வேடம் பல்கோடியொர் உண்மைக்குள என்று
வேதம் புகன்றிடுமே — ஆங்கோர்
வேடத்தை நீர் உண்மையென்று கொள்வீர் என்றவ்-
வேதம் அறியாதே.
நாமம் பல்கோடியொர் உண்மைக்குள என்று
நான்மறை கூறிடுமே — ஆங்கோர்
நாமத்தை நீர் உண்மையென்று கொள்வீர் என்றந்-
நான்மறை கண்டிலதே.
(நாம ரூபங்கள் என்பவை மெய்ம்மையின் தன்மைகளேயன்றி அவையே இறுதி மெய்ம்மை அல்ல. நாமரூபங்களைக் கடந்த தூய அறிவுநிலையே மெய்ப்பொருள், அதுவே பிரம்மம் என்பதே மேற்கண்ட இரு கண்ணிகளில் கூறப்பட்டது)
சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ? — பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமையழிவீரோ?
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே — உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
(உபசாந்த நிலை – மனம் முழுவதுமாக அடங்கிய அமைதி நிலை).
உள்ளதனைத்திலும் உள்ளொளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே — இங்கு
கொள்ளற்கரிய பிரமம் என்றே மறை
கூவுதல் கேளீரோ?
(அயம் ஆத்மா ப்ரஹ்ம – ‘இந்த ஆத்மாவே பிரம்மம்’ என்ற மஹாவாக்கியக் கருத்து இங்கு கூறப்பட்டது)
‘ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன்
உணர்வு’ எனும் வேதமெலாம் — என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது
உணர்வெனக் கொள்வாயே.
சமீபத்தில் மகாராஜபுரம் சந்தானம் குரலில் இப்பாடல் ஒலிப்பதிவை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதைக் கேட்டவுடன் தோன்றிய நினைவுகள் இவை.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
உபதேசங்கள் ஊருக்குதானா? நாக்கில் கன்னத்தில் வேல் குத்துவது பக்தியின் அடையாளமா ? மூடநம்பிக்கை என்று இழிவு படுத்தா விட்டாலும் தேவையற்ற ஒன்று என்றாவது இத்தகய பழக்க வழக்கங்களை நான் படிப்படியாக நிறுத்த வேண்டாமா ? தமிழ் ஹிந்து முகத்தில் மேற்படி காட்சிகள் இடம் பெற்றுள்ளதுபாரதியின் கட்டுரைக்கு இணக்கமானதா ? பாமர பக்தியில் காலம் காலமாக மக்களை வீழ்த்தக் கூடாது. அதை்தான் ஸ்ரீநாராயணகுரு விரும்பினாா்.காடனை வேடனை மாடனை வணங்குவதை சிறுதெய்வழிபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாரதியும் வள்ளலாரும் விரும்பினார்கள்.
குரான் மகாநாடு நடக்கவிருக்கின்றது.சனாதன ஒழிப்பு மகாநாட்டை ஒரு ஹிந்து நடத்துகின்றாா். தினத்தந்தியில் வெளியான ஒரு பக்க விளம்பரத்தில் நடுநாயகமாக கௌதமா் படம். பின் வலது ஒரத்தில் காயிதே மில்லத் படம். பின்னா் வந்த பல விளம்பரங்களில் ஜவஹருல்லா படம்.கொடுமையிலும் கொடுமை.திருமாவளவனின் தந்தை பெயர் இராமசாமி என்பதை தொல்காப்பியனாா் என்ற மாற்றி தனது பெயரை தொல் திருமாவளவன் என்ற மாற்றிக் கொண்டாா் திரு.தொல்.திருமாவளவன்.இந்த மகாநாடு தீண்டாமைக்கு எதிராக ஒரு புதிய விருவிருப்பை ஏறபடுத்துமானால் வரவேறகததககதே.ஆனால் அதற்கு சநாதன ஒழிப்பு என்றுபெயர் வைத்திருப்பது பண்பாடற்றச் செயல். காயிதே மில்லத் படித்த குரானில்மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றி குர்ஆனின் உள்ள சொல்லாடல்களை சுருக்கமாகத் தருகிறேன் விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்களுடைய குர்ஆன் வசனங்களைப் தேடிப் படித்துக் கொள்ளவும். என் மீது எரிச்சலிலும், புகைச்சலிலுமிருக்கும் முஃமின்களின் மனம் குளிர வைப்பதும் எனது கடமை. அவர்களுக்காகவும் இந்தக் குளு குளு குர்ஆன் வசனங்கள்… …
உலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96
நஷ்டவாளிகள் 2:121
கூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171,
செவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171
குரங்குகள், பன்றிகள் 5:60,
குரங்குகள் 7:166
நாய்கள் 7:176
கேவலமான கால்நடைகள் 8:22
மிகக் கெட்ட மிருகங்கள் 8:55
அசுத்தமானவர்கள் 9:28
மிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44
பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2
அநியாயக்காரர்கள் 62:5
சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4
படைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6
இதற்கு மேலும் முஃமின்களின் சப்பைக்கட்டுகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது! கூடாது என்பதையே இக் குளுகுளு வசனங்கள் கூறுகின்றன.
—————————————————————————–
குரான் மகாநாடு நடத்தும் அன்பர்கள் இந்த மகா வாக்கியங்களுக்கு என்ன நியாயம் சொல்வார்கள். சனாதன ஒழிப்பு மாநாடு இது குறித்து பேசுமா ?
மேற்படி கடிதத்திற்கு ஒரு பதிலுரை கூட பதிவு செய்யப்படவில்லை. இந்துக்கள் 23ம் புலிகேசிகள் மலிந்த சமூகமாக உள்ளாா்கள்.
ஆம் அரேபிய பயம் நமது இரத்தத்தில் கலந்து விட்டது. எலி புனையை எதிர்க்காது.கோழி விருவு புனையை எதிர்க்காது. இந்துக்களுக்கும் மரபியலில் அரேபிய பயம் கலந்து விட்டது உண்மை போலிருக்கிறது.
<>
திரு.அன்புராஜின் மனம் கொதித்து போயிருப்பதை இவ்வரிகளில் உணர முடிகிறது. பதிலுரை இல்லாமல் போவது என்பது பயத்தினால் மட்டுமல்ல; பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
திரு.ஜடாயு மக்களிடம் கருத்துக்களை எடுத்து வைப்பது, பதிலுரையை எதிர்பார்த்து அல்ல; தர்மம் என்று அவர் மனதில் படுவதை எடுத்துரைப்பது ஸ்வய தர்மம் என்று நினைக்கிறார். படிக்கும் ஆயிரம் பேரில், ஒருவருடைய சிந்தனைப் போக்கையாவது, அது மாற்றினால், அதுவே போதும்.
சனாதன எதிர்ப்பு மாநாடு குறித்த தங்களுடைய எழுத்தும் பலருடைய மனதில், உண்மையைப் பதிவு செய்திருக்கலாம். அவர்கள், பதிலுரை தர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு ஏன்?
திருமாவளவன், திமுகவினர் கபட வேடம் குறித்த தங்களுடைய கருத்து ஏற்புடையதே.
இஸ்லாம் மரபணுவிலேயே குற்றம் நிறைந்தது. ”குரான் எனும் புத்தகம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது; விமர்சனங்கள் வன்முறையால் எதிர்கொள்ளப்படும்”, எனும் மனநிலை, அழுகிய மனநோயின் வெளிப்பாடு. ஆபிரஹாமிய மதங்கள் இரண்டுமே பிறரை அடிமைகளாகப் பார்க்கும் மனநோய் பீடித்தவைதான். இதை ஹிந்துக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர வேண்டும்.
ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தினரிடையேயாவது இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும், எனும் வேண்டுகோளை ஒவ்வொரு பதிவிலும் வையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.
<>
“சிறு தெய்வ வழிபாடு” குறித்த தங்கள் புல்டோஸர் நிலைப்பாடு அனைவருக்கும் ஏற்கத் தக்கதல்ல. ”போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே”, என்பது சிறு தெய்வ நிலையையும் சார்ந்ததே. வேறெவரையும் இழித்தும், பழித்தும் பேசாத வழிபாட்டு முறைகள், கண்டனத்துக்குரியவையல்ல. பரிமாணங்கள் பலவற்ரையும், மக்கள் முன் வைப்பது நம் கடமை. தெரிவு செய்வது அவரவர் உரிமை. ”ஒரே புத்தகம், ஒரே தேவன், ஒரே வழிபாட்டு முறை” எனும் ஒற்றை மேலாதிக்கம் சனாதன தர்மத்தின் அம்சமல்ல. அவரவர் அவரவருக்கு உகந்த கதியில், நகர்வதே சனாதன தர்மத்தின் தனிச் சிறப்பு. பாரதி முயற்சிப்பதும் அதையே.
சிறு தெய்வ வழிபாட்டை ”ஒழிக்க வேண்டும்” என்பது ஆபிரஹாமிய மனோநிலையின் மற்றொரு வடிவமாகும் ஆபத்து இருக்கிறது.
”சாய்ஸ் இஸ் யுவர்ஸ்”, என்பதே சனாதன தர்மம். ”கர்மா உறுத்து வந்தூட்டும்” எனும் எச்சரிக்கையுடன், ”சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” எனும் அனுமதி சேரும்போது, அவரவரும், அவரவர் விதியை, கதியை தீர்மானிக்கும் சுதந்திரமும், வழிகாட்டலும் பெறுகிறார்கள்.
இதுதான் சனாதன தர்மத்தின் தனிச்சிறப்பு. ஆபிரஹாமிய மதங்கள், இந்த சுதந்திரத்தை அழிக்க முற்படுவதனால்தான் அவற்றுக்கு எதிர்வினையாற்றும் அவசியம் ஏற்படுகிறது.
பதிலுரை வந்தாலும், வராவிட்டாலும், தர்மம் என தாங்கள் கருதும் தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
திரு. பா. ராஜா அவர்களின் கருத்தினை வரவேற்கிறேன். எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரம் இப்பொழுது எந்த நிலையில் உள்ளது?
அருமையான பதிவு. பாரதியின் வேதாந்த அறிவு சுத்தமானது என்று அறிய முடிந்தது.
//சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ? — // இது மாண்டூக்ய உபநிடத்தின் ‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பதின் பொருள் என்று தோன்றுகிறது.
பாரதியின் பிற காவியங்களிலும் (பாஞ்சாலி சபதம் போன்றவையிலும்) பொதிந்துள்ள வேதாந்தக் கருத்துக்களை ஆராய்வது நல்லது.