தான் உண்மையில் என்ன செய்கிறோம், தனது உண்மையான இலக்கு, கோட்பாடு பற்றியெல்லாம் பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ். பேசுவதே இல்லை. சேவையை ஊருக்குச் சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன என்று ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே. தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் அம்பேத்கரியரின் பார்வை என்ற கோணத்திலும் இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்..
View More நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்Author: B.R. மகாதேவன்
மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீ
என் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு குழுவாக நாங்கள் எல்லையைக் கடக்க முயன்றபோதுதான் இந்தக் காயங்கள் எனக்கு ஏற்பட்டன. ஓர் இஸ்லாமிய கும்பல் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியது…எங்கள் படகுகள் இடது சாரி அரசின் காவலர்களால் தாக்கப்பட்டு ஆற்றின் நடுவில் மூழ்கடிக்கப்பட்டன. அதில் சென்றவர்களும் அப்படியே மூழ்கி இறந்தனர்.. 1970களின் மரிச்சபி படுகொலைகள் இந்தியாவையே உறையவைத்த நிகழ்வு. அதில் பாதிக்கப்பட்டவர்களின் சோகங்களை அவர்கள் வாய்மொழியிலேயே பதிவு செய்துள்ள முக்கியமான ஆவணம் இந்த நூல்..
View More மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீசொல்லுங்கள் மகாத்மாவே
உன் அஹிம்சா மூர்த்தங்களின் அபிஷேகத்துக்கு எம் மக்களின் ரத்தம்தானா கிடைத்தது? உன் அதீத அன்பின் பிரார்த்தனைகளுக்கு எம் மரண ஓலமா மந்திரங்கள்? உன் பெருங் கருணையின் யாகத்துக்கு எம் உடல்களா சமித்துகள்?.. சொல்லுங்கள் மகாத்மாவே நீங்கள் அவதாரமா.. அரிதாரமா?.. காலின் கீழ் போட்டு மிதித்தவனிடம் ஏன் காவு கொடுத்தாய் உன் கிராம ராஜ்ஜியக் கனவுகளை? உன்னை நம்பி உன் பின் திரண்ட ஆவினங்களை எதற்காக ஒரு மாட்டு வியாபாரியிடம் விலை பேசி விற்றாய்?.. கொடு நரகமாக இருந்த சிறைச்சாலைகள் எல்லாம் நீங்கள் போர்க்களம் புகுந்ததுமே பூஞ்சோலைகளாகியது எப்படி? இடுப்பில் விலங்கு பூட்டி இழுக்க வைக்கப்பட்ட கல் செக்குகள் எல்லாம் காணாமல் போனது எப்படி? சிறையில் இருந்தபடியே நீங்கள் சுய சரிதம் எழுதிக் குவிக்க உங்களுக்கு எப்படிக் கிடைத்தன சித்திர எழுதுகோல்கள்..
View More சொல்லுங்கள் மகாத்மாவேசொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே
நாதுராம் கோட்÷ ஒரு மத வெறியன் ஒரு முட்டாள் மாபெரும் குற்றவாளி – மனிதருள் மாணிக்கங்களே நீங்கள் சொல்லுங்கள் – நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்அவனிடத்தில் நீங்கள் இருந்திருந்தால் – உங்கள் தாயும் மனைவியும் மகளும் கதறக் கதற உங்கள் கண் முன்னே கற்பழிக்கப்படுகிறார்கள் – முதியவர் தன் ஊன்றுகோலால் இருவரையும் எட்டித் தள்ளிவிட்டு, சற்று தொலையில் ஹூக்கா குடித்துக்கொண்டுகண்களில் மதம் மின்ன சற்றே களைப்புடன் சாய்ந்திருப்பவன் முன் சென்று நிற்கிறார்…
View More சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களேஒரு காதல் காவியம் [சிறுகதை]
நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்… பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர். திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள். நம்மை அங்கு யாரும் பிரிக்க முடியாது’ என்று சொல்கிறாள். இளவரசனோ தடுமாறுகிறான். என்ன விஷயமென்றால் பாளையங்கோட்டையில் இருந்த அவனது நண்பர்கள் ஜெகத் கஸ்பருக்கு உறவினர்கள். அவர் இதே யோசனையைச் சொல்லி அவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார்… அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும் அங்கிகளைக் கழட்டிப் போட்டு தெருவில் புரள ஆரம்பிக்கின்றன, துப்பாக்கிகள், வெடி குண்டுகள் என வீசப்படுகின்றன… திவ்யா கண்களில் நீர் கோர்க்க, அருகில் நிற்கும் செபாஸ்டினைப் பார்த்துக் கேட்பார்: நாம தமிழர்னு தான சொன்னீங்க. மோதிரம் மாத்தறது நம்ம பழக்கம் இல்லையே. அப்போது சர்ச் சுவரில் விழும் அவர்களுடைய உருவங்களின் தலைக்கு மேலே இரண்டு கொம்புகள் முளைக்கும். இளவரசனும் திவ்யாவும் என்ன அதிசயம் என்று அதைப் பார்ப்பார்கள். செபாஸ்டியனும் பாதிரியும் கூட அதை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்…
View More ஒரு காதல் காவியம் [சிறுகதை]பாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்
மதத்தை மாற்றிக்கொள்ளும் ஒருவர் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரை எதிரியாகவே நடத்த வேண்டுமா? அவர் இந்து மதத்துக்கு இந்து கலாசாரத்துக்கு திரும்பியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடத்தவேண்டுமா?.. நம் நாட்டில் இருந்தே நம் தேசியத்துக்கு தர்மத்துக்கு கலாசாரத்துக்கு எதிராகப் பேசுபவர்களை உருவாக்கும் எதிரியின் சாமர்த்தியத்தில் ஆயிரத்தில் ஒருபங்கையாவது அயல் நாட்டினரில் நம் கலாசாரத்தை மதிக்கும் நபர்களை முன்னிலைப்படுத்துவதில் காட்டியிருக்கிறோமா?…
View More பாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்
கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…
View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்
சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் வரைகூட காளையை அடக்குபவர்கள் அந்தப் போட்டியை நடத்தும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் பங்குபெற்று, நெற்றி நிறைய விபூதி பட்டை இட்டுக்கொள்வார்கள். வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்கள். இப்போதைய போட்டிகளில் பங்குபெறுபவர்கள் விபூதி இட்டுக்கொள்வதில்லை. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொண்டு களம் காண்பதில்லை… காளையை அடக்குவதற்குப் பின்னால் என்ன மனநிலை செயல்படுகிறது..? ஆண் என்கிற கர்வம். ஊரில் எல்லார் முன்னாலும் வீரனாக வலம் வர வேண்டும் என்ற ஆசை. பெண்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற ஆணாதிக்க மனம்….
View More சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2
ரஜினி விஷயத்தில் அவர் இந்திய தேசிய நலனை முன்னெடுப்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்து விரோதிகளின் கைப்பாவையாகிவிட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அதையே காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன் ரஜினியைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் தோன்றுகிறது… மக்கள் இந்து மனநிலையுடனும் இந்திய தேசிய மனநிலையுடனும் வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் இருக்கிறார்கள். மக்களுடைய அந்த உணர்வுக்குக் குரல் கொடுக்க எந்த தமிழக கட்சியும் முன்வருவதில்லை. ரஜினிகாந்த் தனது பிரபல்யத்தைப் பயன்படுத்தி அந்தக் குரலை முன்னெடுக்கவேண்டும். வெற்றி தோல்வி பற்றி சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய விஷயம் அல்ல இது…
View More பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1
ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன… தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை எளியவர்களின் காப்பாளர்.. இவையெல்லாம் கபாலிக்கு முன்… இந்து விரோதம் என்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. பராசக்தி காலம் தொடங்கி நடந்துவரும் அசட்டு, அபாயகரமான விஷயம் தான். ஆனால், இப்போது இந்து விரோத படங்களின் பெருக்கமானது முந்தைய இரண்டு காலகட்டத்தைவிடக் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படவேண்டியது. ஏனென்றால், அது இதுவரை எப்போதும் இருந்திராத இந்திய விரோதம் என்ற விஷத்தையும் நுட்பமாக உள்ளே கொண்டிருக்கிறது…
View More பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1