இனியும் வாழ்வானென் ? என்ற வேகத்தில் தான் கோபுரமேறினார் நம் அருணகிரி வள்ளல். மடுவில் வீழ்ந்தாரை மேலேற்ற கைகொடுப்பது குமரன் தொழில். ஆனபடியாலே நம் ஸ்வாமியை கருணை கண்களால் நோக்கி, அருளும் கரங்களால் தாங்கி, முக்தியெனும் திருவடியால் தீண்டி என்றும் மீளா அடிமை கொண்டான்… முத்தமை” என்பவள் நம் ஸ்வாமியை ஈன்றளித்த மாதரசியின் பெயர் என்றும், அவள் பெயர் கொண்டே நம் ஸ்வாமி பாடினார் என்பதொரு நம்பிக்கை உண்டு. மேலும் இந்தப்பாடலில் மூன்று பேரின் வாசகங்கள் உள்ளதென்றொரு சூக்ஷும கருத்தும் உள்ளது… சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம், ஆணவத்தை எதிர்த்து, குருவருளால் கிடைத்த ஞான வாள் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவும் செய்ய வேண்டிய யுத்தம். அது மிகவும் கோரமானது. க்ரூரமானதும் கூட..சிவா விஷ்ணு ஸ்வரூபமான ஞானஸ்கந்தனின் கைவேல் நம்முள் தினமும் போர் தொடுக்கட்டும்…
View More முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்Author: மதுசூதனன் கலைச்செல்வன்
‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2
மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது? இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற “ஆய்வு” நூல்கள் வெளிவரும் என்று வேறு பயமுறுத்தியுள்ளார். மிகக்கொடுமை. ஆரூர் த்யாகேசப்பெருமான் காப்பாற்றட்டும்…
View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1
சென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று “திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது… இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன. ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது? இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும்? இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம் நம்பிக்கையை அசைத்து விளையாட முனைந்து , வரலாற்று எச்சங்கள் ஒன்றும் தெளிவாக இல்லாத காரணத்தால், கிடைத்த செதில் கற்களை கொண்டு ஒரு பெரிய கற்பனை கோட்டையை கட்டி எழுப்புகிறார்…
View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்
சிதம்பரத்தில் நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது நந்தனார் மடம் . சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர். ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர்… என்ன ஒரு காட்சியது. ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயில் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார்… எப்படி சீர் செய்வது? 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை…
View More சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்