போகப் போகத் தெரியும்-20

இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு. இந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது…
…. இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்…

View More போகப் போகத் தெரியும்-20

போகப் போகத் தெரியும்-19

தமிழ் என்ற அருமருந்தைத் தயாரித்தவர் ஈ.வே.ரா, அதைத் தாளிப்பு செய்தவர் அண்ணாதுரை, பதப்படுத்தியவர் கருணாநிதி, பரிமாறியவர் கனிமொழி என்று எல்.கே.ஜி. ஆயா முதல் எண்பேராயங்கள் வரை எடுத்துரைக்கும் போது ஆள்பலம், பணபலம், அதிகார பலம் அவர்களிடம் இருக்கும் போது, ஏழைப் புலவர்கள் என்ன செய்ய முடியும்?

View More போகப் போகத் தெரியும்-19

போகப் போகத் தெரியும் – 18

”இந்தப் பகட்டான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து காட்சி தரும் மகாராஜாக்களையும் பணக்காரப் பிரபுக்களையும் வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் இந்த மகாராஜாக்களுக்கும் பணக்காரப் பிரபுக்களுக்கும் கூறிக் கொள்வேன். நீங்கள் இந்த தங்க வைர ஆடை ஆபரணங்களையும் மக்கள் நல்வாழ்விற்காக எடுத்துக் கொடுத்து மக்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்தாலொழிய – இந்தியாவுக்கு விமோசனம் ஏற்படுவதற்கு வேறு வழியே கிடையாது….” காந்திஜி பேசிக் கொண்டே போனபோது அன்னி பெசன்ட் குறுக்கிட்டார். மேடையிலிருந்த அரசர்கள் வெளியேறினர்…

View More போகப் போகத் தெரியும் – 18

போகப் போகத் தெரியும்-17

‘சாதி ஒழிப்பு’ என்ற சிந்தனை ஈ.வே.ரா.வுக்கு ஏற்படாத காலத்திலேயே பாரதியார் சமபந்தியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்…
இந்தச் சூழ்நிலையில் மாதம் ரூ. 4333-60 சம்பளம் பெற்றுவந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அமைச்சர்களைத் தமிழர்கள் வெறுத்தார்கள். இவர்களெல்லாம் விவசாயிகளின் கண்ணீரையும் கடனையும் பற்றி அறியாத உயரத்தில் வாழ்ந்தவர்கள்; வளைத்துப் போட்ட வயல்கள் போதாது என்று மாதம் ரூ.4333-60 அரசுச் சம்பளமாக பெற்றுக் கொண்டவர்கள்.

View More போகப் போகத் தெரியும்-17

போகப் போகத் தெரியும்-16

தமிழர் என்ற சொல் இந்து என்ற பொருளில் ஆனந்தரங்கப் பிள்ளை டயரியில் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். இது கால்டுவெல் காலத்திற்கு முற்பட்ட நிலை. இப்போதும் தஞ்சை மாவட்டத்தில் ‘அவர் தமிழர்; முஸ்லீமோடு வியாபாரம் செய்கிறார்’ என்று சொல்கிற பழக்கமிருக்கிறது…

View More போகப் போகத் தெரியும்-16

போகப் போகத் தெரியும்-15

இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எணணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதன் முதற்கட்டப் பணியாகத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். அவருக்கு முன்னர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்க திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

View More போகப் போகத் தெரியும்-15

போகப் போகத் தெரியும்-14

ஹெகல் உருவாக்கிய முரணியக்க முறையைக் கருவியாகக் கொண்டு வரலாற்றை அளந்தார் ஒருவர். அவரை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பொதுவுடமைக் கட்சியை ஏற்படுத்திய காரல் மார்க்ஸ். ஆனால் தோட்டத்துப் பச்சிலையைத் தோழர்கள் பயன்படுத்துவதில்லை. முரணியக்கப் பொருள்முதல் வாதத்திற்கான முதலீடு இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்பதை இங்கிருக்கும் தோழர்கள் இன்னும் உணரவில்லை…

View More போகப் போகத் தெரியும்-14

போகப் போகத் தெரியும்–13

திராவிட இயக்கத்தவரால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை இந்தத் தொடரில் சொல்லி வருகிறேன். அதில் தனுஷ்கோடியின் காயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சமதர்மம் என்றும் சாமானியர் என்றும் இவர்கள் பேசுவார்கள்; அதனால் கிடைத்த அரசியல் ஆதாயத்தை கவனமாக அயல்நாடுகளில் முதலீடு செய்வார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் விழிப்படையக் கூடாதென்று உஷாராக இருப்பார்கள்…

View More போகப் போகத் தெரியும்–13

போகப் போகத் தெரியும்-12

‘ஹரிஜனப் பெண்கள் சொக்காய் போட ஆரம்பித்ததுதான் துணி விலை உயர்ந்ததற்குக் காரணம். ஹரிஜனங்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது…’ என்பதெல்லாம் பெரியாரின் அபிப்பிராயம் என்பது கருணாநிதியின் கருத்து. இதைக் கருணாநிதியிடமே கேட்டு வீரமணி தெரிந்து கொள்ளட்டுமே…

View More போகப் போகத் தெரியும்-12

போகப் போகத் தெரியும்-11

சனாதன இந்து என்பதில் பெருமைப்படுவது, தீண்டாமையை நிராகரிப்பது, பிராமணர்களின் பங்கை அங்கீகரிப்பது, பிராமணரல்லலதார் சார்பில் கூறப்படும் குறைபாடுகளும் சில நியாயமானவை என்று உணர்வது ஆகியவை காந்தியச் சிந்தனையின் அடித்தளமாக இருந்தன…

வைக்கம் போராட்டத்தை காந்திஜி ஆதரித்தார், காங்கிரஸ் ஆதரித்தது, முற்போக்கு எண்ணம் உள்ள வைதீகர்கள் ஆதரித்தனர்…

View More போகப் போகத் தெரியும்-11