திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல்.தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது… திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம். அம்மா, அக்கா, தங்கை, அடுத்தவன் மனைவி,மகள் என்பதெல்லாம் சமூகம் நம் மேல் இட்ட குறியீடு தான் பாலியல் சிந்தனைகளுக்கும் செய்கைகளுக்கும் அது தடையாக இருக்க கூடாது. என்பதாக துவங்கி சாராயம் குடிப்பது எப்போதும் நல்லது. குடித்து விட்டு வந்து பெண்டாட்டி பிள்ளைகளை உதைப்பது நாகரீகம். முட்டாள்கள் தான் படிக்க வேண்டும். யாரையும் மதிக்க வேண்டியதில்லை.ஆபாச வசை சொல் தான் இயல்பானது, நாகரீக மொழியில் மரியாதையாக பேசுவது பெரும் பாவம். குடும்பம் குழந்தை குட்டிகள் என சமூகத்தோடு இணைந்து வாழ்வது தண்டனைக்குரிய செயலாக முன்வைத்தது இந்த எதிர் கலாச்சாரமே பாமரர்களையும் சில அறிவுள்ளவர்களையும் ஈர்த்து….

View More திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கிய இந்துத்துவ சிந்தனையாளர் தனி உரையாடலில் ‘பெரியார் அன்றைக்கு இந்த மண்ணுக்கு ரொம்ப தேவையாக இருந்தாரப்பா… அவரும் நம்ம சமுதாயத்தை நேசித்தவர்தான்.’ என்றார். ஒரு ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்பு வெளியிட்ட தேசபக்தர்கள் மகான்கள் பிறந்த நாட்கள் நினைவு நாட்கள் பட்டியலில் ஈ.வே.ராமசாமி பெயரும் இருந்தது. சூழ்நிலை புரிந்திருக்கும். இத்தகைய சூழலில்தான் ”ஈ.வெ.ராவின் மறுபக்கம்” என்ற இந்த புத்தகம் வெளியானது. இன்றைக்கு ஈ.வே.ராமசாமியை எவராவது இந்துத்துவர் ‘பெரியார்’ என்றால் அது பழக்க தோஷமாக மட்டுமே இருக்கும். இந்த நூலை எழுதியவர் நிச்சயமாக திராவிட இயக்க வரலாற்றில் ஊறித் தோய்ந்து போன ஒரு பெரிய வரலாற்றாராய்ச்சியாளராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. அவர் ஒரு இளைஞர்….இன்றைக்கு நாம் ‘taken for granted’ என எடுத்து கொள்ளும் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட எப்படி போராடி வெல்லப்பட்டன என்பதை இந்த நூல் வெளிக் கொணர்கிறது. நீதிகட்சியின் பிம்பத்தை உடைக்கும் அதே நேரத்தில் ஹிந்து சமுதாயத்தின் வரலாற்றில் இருக்கும் இருண்ட பக்கங்களையும் நம் முன் நிறுத்துகிறார் ம.வெங்கடேசன்….

View More பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

நீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]

அன்னை பராசக்திக்கு நான் உருவாக்கிய பெயர்களில் ஒன்று, “சோற்றால் அடிக்கும் சுந்தரி”… கடவுள் மறுப்புக் கொள்கை உடைய நீதிக் கட்சியின் வெற்றிக்கு சபரிமலை ஐயப்பன் எப்படி உதவினார் என்பது சுவாரஸ்யமான கதை… காகிதத்தில் வார்த்தைகளை வைத்துக்கொண்டு கல்கி செய்துள்ள சாதனையை ஒரு கேமிராவால் மட்டுமே தோற்கடிக்க முடியும்… சமூக வரலாற்றின் ஒரு பகுதிக்குக் கையேடாகவே இது பயன்படக்கூடும்.

View More நீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம். [….] கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

View More முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?

இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.” என்று நிறுத்தியது வேதாளம்.

View More வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

போகப் போகத் தெரியும் – 42

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் இனமக்களை காலம் காலமாகக் கொடுமை செய்த இந்த சட்டம் நீதிக்கட்சியின் ஆட்சியில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. ராஜாஜி பிரதமர் ஆனவுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்தார்… உள்ளே இருந்து வந்த டெலிபிரிண்டர் தாள்களை வீதியில் இருந்தபடியே ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்த்தனர். ஜன்னல் வழியாகப் போடப்பட்ட செய்திகளை உள்ளே இருந்தவர்கள் அச்சுக்கோத்தார்கள். இப்படிப் பல சாகசச் செயல்களின் விளைவாக அன்றைய தினமணி வெளிவந்தது.

View More போகப் போகத் தெரியும் – 42

போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.
-பக்.283/திராவிட இயக்க வரலாறு”

View More போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

போகப் போகத் தெரியும் – 18

”இந்தப் பகட்டான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து காட்சி தரும் மகாராஜாக்களையும் பணக்காரப் பிரபுக்களையும் வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் இந்த மகாராஜாக்களுக்கும் பணக்காரப் பிரபுக்களுக்கும் கூறிக் கொள்வேன். நீங்கள் இந்த தங்க வைர ஆடை ஆபரணங்களையும் மக்கள் நல்வாழ்விற்காக எடுத்துக் கொடுத்து மக்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்தாலொழிய – இந்தியாவுக்கு விமோசனம் ஏற்படுவதற்கு வேறு வழியே கிடையாது….” காந்திஜி பேசிக் கொண்டே போனபோது அன்னி பெசன்ட் குறுக்கிட்டார். மேடையிலிருந்த அரசர்கள் வெளியேறினர்…

View More போகப் போகத் தெரியும் – 18