சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சைவர் என்பது போன்ற பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. 1903ல் வெளிவந்த கேள்வி-பதில் வடிவில் அமைந்த அவரது இந்த நூல், வேதத்தைக் குறித்த அவரது ஆழமான புரிதலுக்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு சூத்திரர்-பெண்கள் வேதம் ஓதுதல் குறித்த இந்தக் கேள்வி.. இந்த நூலை முழுமையாக pdf வடிவில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்…
View More வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்Author: ஆசிரியர் குழு
குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆதலால், இன்று சூரியோதயத்திலே நாங்கள் வருணனும் மித்திரனும் அர்யமானும் ஆகிய உங்களை சூக்தங்களால் வேண்டுகிறோம் – நீங்களே ‘ருதம்’ என்னும் தேரைச் செலுத்துபவர்கள். ஒவ்வொன்றையும் ஆள்பவனும், அசையும் அசையாப் பொருள்களுக்குத் தலைவனும், உலகெங்கும் சுற்றுபவனுமான சூரியனை, நமக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொணர்வதற்காக, சகோதரிகளான ஏழு குதிரைகள் ஏந்துகின்றன…
View More குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்
புழுக்களுக்கு புலியின் வலிமை தெரியாது. புழுக்களின் உலகமே வேறு. பதவிக்காலம் முடிந்த பின்னும் அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில், வெட்கமேயில்லாமல், வசித்து வந்த ஒரு காந்திக்கு, சாவர்க்கர், அந்தமான் சிறைத்தண்டனையின் வேதனை புரியுமா?… செக்கிழுத்து தேங்காய் நார் உரித்து மலக்குழியைவிட கேவலமான அறையில் தரையில் படுத்து தனிமை சிறையில் தங்கி இருக்க முடியுமா? 50 ஆண்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சூழலில் நான்கு வருடங்கள் மிகக் கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஒருவர், என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறர் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என எழுதுகிறார். இந்த தியாகத்தை கிண்டலடிப்பவன் மனிதர்களில் சேர்த்தியா? அப்படி கிண்டலடிப்பவன் பின்னால் செல்பவர்கள் இந்திய ரத்தம் கொண்டவர்களா?….
View More ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல் – புத்தக அறிமுகம்
செல்வத்தின் அறிவியல் என்று புகழப்படும் அர்த்தசாஸ்திரம் குறித்த மிக எளிமையான அற்புதமான அறிமுகத்தை இந்நூலில் வழங்கியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன். சந்தையை எப்படி நிர்வகிக்கவேண்டும்? வர்த்தகம் எப்படி நடத்தப்படவேண்டும்?
வியாபாரிகளுக்கு இடையில் தோன்றும் போட்டிகளை எப்படிச் சமாளிக்கவேண்டும்? – இப்படி அர்த்தசாஸ்திரம் விவாதிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல், ஆட்சி நிர்வாக அம்சமும் இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கின்றன.. இந்திய வர்த்தக வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஓர் அத்தியாவசியத் தொடக்க நூல்…
காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்
காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல் என இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது…
View More காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவி
லாவண்யாவின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. 2006ல் ஓமலூர் சுகன்யா, சென்னையில் 2009ல் ரஞ்சிதா, 2011ல் ரம்யா, 2015ல் உசிலம்பட்டியில் சிவசக்தி ஆகிய மாணவிகள் தாங்கள் படிக்கும் கிறிஸ்தவ பள்ளிகளில் தரப்பட்ட மதமாற்ற அழுத்தம் மற்றும் உளவியல் சித்ரவதைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இவை செய்திகளில் பரவலாக வந்து விவாதிக்கப்பட்டவை. இதுபோக இன்னும் எத்தனையோ? இவற்றை முன்பே “ஏசுவுக்கான இந்து நரபலிகள்” என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்… கிறிஸ்தவ மதமாற்ற வெறி என்பது இன்றைக்கு தமிழகத்தின் தலையாய பிரச்சினையாகி வருகிறது . அரசியல் கட்சி பேதமின்றி தமிழ்நாட்டின் அனைத்து இந்துக்களும் இந்தப் பிரசினையில் மரணமடைந்த இந்துக் குழந்தைக்கு நீதி கேட்டுப் போராட வேண்டும்.
View More லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவிதிருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்
அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது. திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களிலிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது. நூலாசிரியர் ஜனனி ரமேஷ் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது.
View More திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்
நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்…
View More சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்முழு மகாபாரதம் அச்சுநூல் தொகுப்பு
செ.அருட்செல்வப் பேரரசனின் முழு வியாச மகாபாரத மொழிபெயர்ப்பு துல்லியமானதாகவும், அதே சமயம் எளிய, சுவாரஸ்யமான நடையிலும் அமைந்துள்ளது. இது அச்சுப்புத்தகமாகவும் 14 தொகுதிகளில் வெளிவந்திருக்கிறது. நடுத்தர வயதினர், முதியவர்கள் ஆகியோருக்கு பெரிய புத்தகங்களை மின்நூல்களாக வாசிப்பது என்பது அனேகமாக இயலாத காரியம். ஒவ்வொரு மகனும், மகளும் தங்கள் பெற்றோருக்கு அன்புப் பரிசாக வழங்க சாலச் சிறந்த அச்சு நூல் தொகை முழுமஹாபாரதம்…
View More முழு மகாபாரதம் அச்சுநூல் தொகுப்புஅஞ்சலி: கி.ராஜ்நாராயணன்
கிராமிய வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களையும், விவசாயம் சார்ந்த நுண்தகவல்களையும், பாலியல் வேடிக்கைகள், சீண்டல்கள் உட்பட ஆண்-பெண் உறவின் பல பரிமாணங்களையும், அபூர்வமான கர்ணபரம்பரைச் செய்திகளையும் கதைசொல்லும் போக்கில் இயல்பாக எந்த சுவாரஸ்யக் குறைவுமில்லாமல் அள்ளித்தெளித்துச் செல்வது அவரது எழுத்து….
பூர்விக பூமியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட வரலாற்று உண்மைகள் எவ்வளவோ அவரிடம் பகிரப்பட்டிருந்த நிலையிலும் இடது கரத்தின் அழுத்தத்தினால் அவரால் அதை எழுதமுடியாமல் போனது. அவருடைய முன்னோருக்கு இருந்த இஸ்லாமிய அச்சமும் மிரட்டலும் இருந்திருந்த நிலையிலும் இங்கு வேறுவகையான நெருக்கடிகள் அவருக்கு இருந்தன…