[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்

இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது.[..]பெண்கள் வரைமுறையின்றி ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு மாறிக்கொண்டிருப்பதால் ஒரு கணவனும் வீடும் எங்கு கிடைத்தாலும், அவனை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.[..]புர்கா பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும் காட்சி இந்தியாவில் ஒருவர் காணக்கூடிய மிகவும் அருவருப்பான காட்சிகளில் ஒன்றாகும்.[..]ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்கள் இஸ்லாமியப் பெண்களை சர்வசாதாரணமாகப் பீடிக்கின்றன.

View More [பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்

[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்

‘[……] பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. […] ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை. […….] இன்னும் சரியாகச் சொல்லப்போனால் … தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’

View More [பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்

[பாகம் 13] பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்

சமையல்காரரோடோ குதிரைலாயப் பணியாளரின் குழந்தைகளோடோ பழகுவதை என் தகப்பனார் அனுமதித்ததில்லை. எனவே, ஏசுநாதரின் போதனையைக் கற்றுக் கொடுப்பதற்குமுன், பிராமணர்கள் பறையர்களோடும் தோட்டிகளோடும் அதே வகுப்பில் உட்கார வேண்டுமென்று கோருவது சரியென்று நான் நினைக்க முடியாது. அவ்வாறு கோருவது நியாயமற்றதும் கிறித்தவ தன்மையற்றதுமாகும்.

View More [பாகம் 13] பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்

[பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்

கிறித்தவர்கள் வாழ்விலும் சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மறுக்கமுடியாது. பிராமணக் கிறித்தவர்களும் பிராமணரல்லாத கிறித்தவர்களும் உள்ளனர். […] அதேபோல் தெற்கில் பறைய கிறித்தவர்கள், மாதிகக் கிறித்தவர்கள், மால கிறித்தவர்கள் என்று உள்ளனர். இவர்கள் கலப்புமணம் செய்து கொள்ளமாட்டார்கள்; இந்தப் பிரிவினர் ஒன்றாக அமர்ந்து உண்ண மாட்டார்கள்.

View More [பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்

[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.

View More [பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்

[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்!!

ஆனால் எந்தப் புதிய சமயத்தைத் தழுவுவது என்பது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’’ என்றும் தெரிவித்தார். இவ்வாறு அம்பேத்கர் தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சில வதந்திகளைப் பரப்பிவந்தனர்.

View More [பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்!!

[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

[….] [தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.

View More [பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாகப் பெறப்படும்… துர்பாக்கியவசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவிவிட்டது உண்மைதான்… இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே… மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால், விலகப் போகிற மதம் குறித்தும் சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்?… தீண்டாமை, முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்திரமான தடைக்கல்… என்னைப் பொருத்தவரை, நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம்…

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

தீண்டத்தகாதவர்களிடையே நிலவும் இந்தக் கொடுமையான உள்ஜாதியத்திற்கு அதைக் கற்பித்தவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, கற்றுக் கொண்டவர்கள் அல்ல… முதலில் அவர்கள் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். பின்பு… அன்றிருந்த சூழலை ஆராயும்போது கட்டாயத்தின் பெயரிலேயே நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பது தெரிகிறது… இந்துசமூகத்தைச் சீர்திருத்துவது நமது நோக்கமல்ல. நமது நோக்கம் நமது விடுதலை மட்டுமே. சமூகவிடுதலையை மதமாற்றமல்லாமல் வென்று எடுக்க முடியாது.

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம்… நீதிமன்றத்தில் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றோ, காவல் நிலையத்தில் சரியாக நடந்து கொள்ளுவார்கள் என்றோ நீங்கள் நம்புகிறீர்களா?… நீங்கள் தீண்டத்தகாதவர்களாகவும் சரிசமம் அற்றவர்களாகவும் கருதப்படுவது நீங்கள் இந்துவாக இருக்கும்போதுதான்… உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்… இத்தகைய வெட்கங் கெட்ட சூழலில் இருந்து நீங்க வேண்டுமானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டுமானால் வாழ்வை கவுரமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இந்து மதத்தையும், இந்த சமுதாயத்தையும் தொலைத்து தலை முழுகுவதுதான்…

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06