[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

[….] [தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.

View More [பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு

தமிழ்ச் சமயம் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்துவதும், தற்போது தீவிரமாகப் பரப்பப் பட்டு வரும் திரிபுகள் பற்றி எடுத்துரைப்பதும் மிக முக்கியமானது; இதுவே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்… புனித தாமஸ் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன…

View More உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு

பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்

தமிழ்நாட்டில் தன் வீட்டின் முன் பொங்கலிடப் பொங்கல் அன்று தமிழ் இந்துவுக்குத் தடை. காரணம் கிறிஸ்தவர்கள். என்னதான் பொங்கல் கொண்டாடுவதாகக் கிறிஸ்தவ மதமாற்றிகள் மாய்மாலம் செய்தாலும் அந்தப் பழம்பெரும் இந்துப் பண்டிகை மீதுதான் எவ்வளவு வெறுப்பு! எவ்வளவு வன்மம்! எத்தனை எதிர்ப்பு!

View More பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்

ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்

போரை உருவாக்கி இறையாண்மை குறையும் போது திருச்சபையின் தூதர்கள் நற்சேதியுடன் போய் கதிகலங்கிப்போயிருக்கும் மக்களை மதம் மாற்றம் செய்வது ஒரு சர்வதேச தொழில்நுட்பமாக மாறிப்போயுள்ளது… வாத்திகனின் பணபலம், செல்வாக்கு இங்கு எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட்டது என்று தெரிகிறது…இதனுடைய ஒரு நீட்சியாகவேதான் தமிழ்ப்பாதிரிகளின் இச்செயல்களை நான் காண்கிறேன். உண்மையான தமிழ்ப்பிடிப்புள்ள ஒரு தமிழன், தமிழின் வேர்களை சொந்த மண்ணில் தேடுவானே தவிர வேற்று மண்ணில் தேடமாட்டான்.. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்யுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகர்க்கு’ என்று எழுதிய வள்ளுவனை, செய்நன்றி மறந்த தோமையரின் சீடராக்க தமிழ் பற்றுள்ள ஒரு பாதிரியால் எப்படி முடிந்தது?

View More ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்

புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!

இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு, தோமா வந்ததாகக் கூறுகிற கத்தோலிக்க சபையாரும் கிறிஸ்தவப் பெருமக்களும் அதனைத் தங்கள் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே கூறுவார்களெனில் அதில் கேள்வி கேட்க எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால் அதனை வரலாறாக முன்வைத்து அவரைக் கொன்றதாக இந்துக்கள்மீது குற்றம் சாட்டுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் கூறுவதன் வரலாற்றுத்தன்மையை ஆராய்வது ஒவ்வொரு தமிழ்-இந்துவின் கடமையாகிறது…

View More புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!