க.நா.சு.வின் ‘ஒரு நாள்’ தவிர என்றும் எவரதும் பழம் மதிப்புகளையே திரும்பச் சொல்வதாக இருப்பதாகவும், ஜெயகாந்தன் ஒருவர்தான் நிகழ்காலத்தைப் பதிவு செய்வதாகவும் அதிலும் அவர் அதீத உணர்ச்சிகளை எழுப்புவதாகவும், சொல்வது எதையும் உரத்துச் சொல்வதாகவும் எழுதியிருந்தேன்… அவர் சிலாகித்து எழுதியவர்கள், அவர்கள் செல்லப்பாவோடு கொண்டுள்ள உறவைப் பொருத்தோ என்றும் எனக்குத் தோன்றியதுண்டு… அசோகமித்திரன் 15 வருஷம் முன்னாலே என்ன எழுதினானோ அதையே தானேய்யா இப்பவும் எழுதீண்டிருக்கான்;ஆனா முத்துசாமி… அவர் என்னிடம் கொண்டிருந்த கோபம் அவர் வீட்டினுள்ளும் பரவியிருந்தது தெரிந்தது, “அவனோடு என்னத்துக்கு இன்னமும் சுத்தீண்டு”… என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டுமளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்”
View More க.நா.சு.வும் நானும் – 2Author: வெங்கட் சாமிநாதன்
க.நா.சு.வும் நானும் – 1
வணிக ரீதியாக வெற்றி பெற்றவர்களதும், பெரும் பிராபல்யம் பெற்றவர்களதும், அது தரும் சுகங்களை அனுபவிப்பவர்களதும், எழுத்து எல்லாம் இலக்கியமல்ல என்று சொல்லப்படுமானால்… சிறுகதை, நாவல், கவிதை மொழிபெயர்ப்பு என மற்ற வடிவங்களிலும் தொடர்ந்து செயல்பட்ட போதிலும், அவையெல்லாம் மறக்கப்பட்டு விமர்சகர் என்ற லேபிளே அவருக்கு ஒட்டப்பட்டது ஒரு பரிதாபகரமான விளைவு… அமெரிக்க ஏஜெண்ட் எனக் கண்டு பிடித்தனர் ரஷ்ய ஏஜெண்டுகளாக இருந்த முற்போக்குகள்… ஒரு இலக்கியப் படைப்பு தரும் அனுபவம் முழுதையும் எந்த விமர்சனமும் சொல்லித் தீர்த்துவிட முடியாது. என்றெல்லாம் பேசிய முதல் குரல் க.நா.சு-வினதுதான்… க.நா.சு.வை மறைமுகமாகத் தாக்கும் ”உண்மை சுடும்” என்ற ஜெயகாந்தனின் முன்னுரையைப் பார்க்கலாம். “சுடவில்லை, உண்மையல்லாததால்” என்று க.நா.சு. வேறிடத்தில்…
View More க.நா.சு.வும் நானும் – 1ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்
”ஸ்டாலின் உண்மையில் ஒரு ராக்ஷஸன். எவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும், அவரது கூட்டாளிகளின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லை. எந்நேரமும் அவர்கள் கைதுசெய்யப்படலாம், பொய் வழக்கில் மரண தண்டனை வழங்கப் படலாம்” என்று குற்றப் பத்திரிகை வாசித்தார் க்ருஷ்சேவ்…. சிறையிலிருந்து தப்பிய ஒரு பாட்டாளி, தன் பாட்டாளி நண்பனின் வீட்டில் தஞ்சம் புகலாம் என்று ஓடி வருகிறான். ஆனால் போலீஸ் அவனைத் துரத்துகிறது. பாட்டாளி நண்பனின் மனைவி கதவைத் திறக்கிறாள். தானும் பாட்டாளிகள் போராட்டத்துக்கு தன் பங்கைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்த அந்தப் பெண்….
View More ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்உமர் கய்யாமின் ருபாய்யத்
கவிஞர் ஆசையின் மொழிபெயர்ப்பில் 215 ருபாய்யத்தும் கிடைத்ததும் உமர் கய்யாமைப் பற்றி நமது பார்வையே மாறிவிடுகிறது. மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர்… மதத்தின் நீதிமான்களே, நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது திராட்சையின் ரத்தத்தை. உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக ரத்த வெறி பிடித்தவர்கள்?… ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு, என்னைப் பற்றி; நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்… இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?…
View More உமர் கய்யாமின் ருபாய்யத்திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை… வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது.. கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?…
View More திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்நினைவுகளின் சுவட்டில்- கலுங்கா
ஸ்கூல் ஹெட் மாஸ்டரின் மருமகனானாலும் எனக்கு ஒன்றிரண்டு தடவை இந்தத் தண்டனை கிடைத்ததுண்டு. ஆனால் மண்டியிடும் நிலைமை என்றும் எனக்கு நேர்ந்ததில்லை… அந்த ஆதிவாசிகளுக்கு ஆதிகாலம் தொட்டு தம் இனப் பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், தொழும் முறை இவற்றில் எல்லாம் இருந்திருக்கக் கூடிய பிடிப்பு சாதாரணமாகவா இருந்திருக்கும்? அதையெல்லாம் உதறியெறியச் செய்து, என்னமோ அவர்கள் கண்களுக்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் உடைகளையும் சடங்குகளையும் புரியாத மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்து, இடையிடையில் அவர்கள் “ஆமென்” சொல்ல வேண்டும்.. வேறு பங்கேற்பு ஏது? இந்த மாயம் எப்படி நிகழ்கிறது?…
View More நினைவுகளின் சுவட்டில்- கலுங்காபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்
நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு… இச் சின்ன சின்ன பறவைகளை குழந்தைகளாக, அழகு கொழிக்கும் ஜீவ சிற்பங்களாக, கவிதைகளாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்… கொண்டலாத்தி புத்தகத்தின் பின் இத்தனை சமாசாரங்கள் இருந்திருக்கின்றன. நம் கைகளில் இருப்பது புகைப்படம் எடுக்கப்பட்ட கவிதைகளும், ஆசை எழுதிய கவிதைகளும்…. வானத்தை வானத்தைக் கலைத்துப் பறக்கும் கொக்குக் கூட்டம்… அவை கடக்கும் போதெல்லாம்…
View More பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்இரு வேறு நகரங்களின் கதை
புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்….
View More இரு வேறு நகரங்களின் கதைஸ்டாலினும், கைவிட்ட கடவுளும்
இந்த வழக்குகளில் சதிகாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதில் விஞ்ஞானிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜெனரல்கள், சிறந்த சங்கீத கலைஞர்கள்… ஆனால் இவ்வளவையும் கண்மூடித்தனமாக முதலாளித்வ நாடுகள் செய்யும் பொய்பிரசாரம், என்றே சொல்லிவந்தனர்… ஸ்டாலினின் அதிகார வேட்கையும் அதை அவர் சாதித்துக்கொண்ட முனைப்பும், அவர் பெற்ற தொடர்ந்த வெற்றியும் எனக்கு தமிழ் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தையே நினைவுறுத்தும்…
View More ஸ்டாலினும், கைவிட்ட கடவுளும்அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்
அது ஒரு காலம். அது ஒரு நாகரீகம். ஒரு பண்பாடு. மனித உறவுகளை வளர்க்கும் பண்பாடு. இது தபால் காரரிடம் மாத்திரமில்லை. நாவிதர், வண்ணார், கிராமத்தில் தினம் ஒன்றிரண்டு பிடி அரிசிக்கு கறுவேப்பிலை, கொத்தமல்லி கொடுத்துவிட்டுப் போகிறவளும் தான். எல்லோரும் அவரவரது அன்றாட ஜீவனோபாயத்துக்காகச் செய்யும் தொழிலோடு சந்திக்கும் மனிதருடனும் இதமான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கை அது…
View More அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்