வன்முறையே வரலாறாய்… – 18

அல்ஜீப்ரா முதன் முதலில் இந்திய எண்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது. இந்திய கல்வியின் உயரிய நிலையை அறிந்திருந்த பாரசீக அப்பாஸித் கலிஃபாக்கள், தங்களின் நாடுகளிலிருந்து கல்வியாளர்களையும், வியாபாரிகளையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து, அவர்களை இந்தியர்களிடமிருந்து கல்வி கற்று வரும்படி ஊக்குவித்தவர்களாக இருந்தார்கள்… அல்-புரூனி அவருடைய புகழ்பெற்ற படைப்பான “கிதப் ஏ ஹிந்த்” என்ற நூலில் பழம்பெரும் இந்திய கலாச்சாரத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அந்த நூல் 1030-ஆம் வருடம் அராபிய மொழியில் எழுதப் பட்டது… இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் உச்சத்தில் (8 முதல் 11-ஆம் நூற்றாண்டுகள்), இந்தியா உலகத்தின் மிக செல்வ வளமுடைய நாடாக இருந்தது. தங்கமும், வெள்ளியும், விலையுயர்ந்த வைரமும், ரத்தினமும், மதங்களும், கலாச்சாரமும், கலைகளும், இலக்கியமும் பெரு வளர்ச்சியடைந்ததாக இருந்தது….

View More வன்முறையே வரலாறாய்… – 18

உமர் கய்யாமின் ருபாய்யத்

கவிஞர் ஆசையின் மொழிபெயர்ப்பில் 215 ருபாய்யத்தும் கிடைத்ததும் உமர் கய்யாமைப் பற்றி நமது பார்வையே மாறிவிடுகிறது. மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர்… மதத்தின் நீதிமான்களே, நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது திராட்சையின் ரத்தத்தை. உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக ரத்த வெறி பிடித்தவர்கள்?… ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு, என்னைப் பற்றி; நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்… இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?…

View More உமர் கய்யாமின் ருபாய்யத்