சேலத்தில் நேற்று ஆடிட்டரும் பாஜக தலைவருமான திரு.ரமேஷ் அவர்கள் அவரது வீட்டருகிலேயே ‘அடையாளம் தெரியாத’ நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 52. சங்கத்திலும் முதன்மை பொறுப்புகளில் இருந்து இந்து சமுதாயத்துக்காக உழைத்தவர். நம் தேசத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு நடத்திய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். தன் வாழ்க்கையை பாரத அன்னைக்கு சமர்ப்பணம் செய்த அவருக்கு நம் வீர வணக்கங்கள்…. சில வன்முறை மத சித்தாந்தங்களை ஏற்ற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிலுவை போர் வெறியன், ஒரு ஜிகாதி, ஒரு ஸ்டாலின் ஒளிந்து கிடக்கிறான். இந்த மனநோய் சித்தாந்தங்களை எதிர்த்தும் ஹிந்து ஒற்றுமையை ஏற்படுத்தவும் நாம் ஒவ்வொருவரும் ஒரு வெள்ளையப்பனாக ஒரு ரமேஷாக களமிறங்கி போராடுவோம். நாம் சிந்தும் ஒவ்வொரு ரத்த துளியும் ஆயிரக்கணக்கான வீரர்களை உத்வேகத்துடன் உருவாக்கட்டும்.
View More தொடரும் படுகொலைகள், தூங்கும் அரசுCategory: அஞ்சலி
இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை
இந்து முன்னணியின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன், தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஏராளமான ஊழியர் களை உருவாக்கியவர். அவர் வேலூரில் இன்று பட்டப்பகலில் சமுதாய விரோத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது… இந்துக்களின் உரிமைகளுக்காக களமாடி வீரமரணம் அடைந்து பாரத அன்னையின் பாதங்களில் பலிதானியாகி உள்ள இப்பெரும் வீரரின் பிரிவால் வருந்தும் அவர் குடும்பத்தினருடனும் இந்து இயக்கங்களுடனும் தமிழ்ஹிந்து தனது சோகத்தை பகிர்ந்து கொள்கிறது….
View More இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலைஅஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்
எண்ணத்தில் ஏறி எப்போது நினைத்தாலும் அவரது எண்ணற்ற பாடலொன்றால் எண்ணம் முழுதும் நிரப்புகின்ற பெரும் இசையாற்றலுக்குச் சொந்தக்காரர்… சரஸ்வதியின் ஒரு சாயலை நமக்குக் காட்டிய பெருமகன் இவர். தன் திறமைக்கு ஏற்ப புகழும் பொருளும் பெயரும் ஈட்டி தமிழக கோடானு கோடி மனங்களில் இடம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர். வாழ்கிறவர்… மதுரையில் சௌராட்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் மகனாகப் பிறந்த சௌந்தரராஜன், பிரபல வித்துவான் பூச்சி ஶ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றவர்…. ஒரு நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் ஒருவர் சௌந்தரராஜனைப் பற்றி இப்படிச் சொன்னார் – சௌந்தரம் என்றால் அழகு ராஜன் என்றால் அரசன், இவர் அழகாக பாடுபவர்களில் அரசன்…
View More அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்அஞ்சலி – டோண்டு ராகவன்
அவர் மாதிரி ஒருவர் சளைக்காமல் சலித்துக்கொள்ளாமல், அவரைச் சீண்டும் சில்லுண்டிகளின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டும் இருப்பவரை எங்கு பார்க்கமுடியும்?…. அவர் அளவில் ஒரு போராளி தான். எல்லா அராஜக சிந்தனைகள் செயல்களுக்கும் தார்மீகமற்ற சொல்லாடல்களுக்கு அயராது தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்திருக்கிறார். ஒரே குறை. அவர்கள் எல்லோரும் நான் பார்த்த வரை நாகரீகமும் பண்பும் அற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அது ஒரு சோகம் தான். நல்ல மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். தன்னை அநாகரீமாகச் சாடியவர்களுக்கு அவர் நட்புக் கரம் நீட்டியவர். ஆனால் அந்த நட்புக் கரம் பற்றியவர்களோ “ பார்ப்பன “ என்ற துவேஷ அடைமொழி இல்லாது எந்த உறவையும் பேணத் தெரியாதவர்கள். இவர்களுடன் போராடித் தான் அவர் காலம் பெரும்பாலும் கழிந்தது என்பது ஒரு சோகம்…
View More அஞ்சலி – டோண்டு ராகவன்அஞ்சலி: மலர் மன்னன்
இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம்? என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா?” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீக காரணத்துக்கானாலும் சரிதான்….